6534. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ كَانَتْ عِنْدَهُ مَظْلَمَةٌ لأَخِيهِ فَلْيَتَحَلَّلْهُ مِنْهَا، فَإِنَّهُ لَيْسَ ثَمَّ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ مِنْ قَبْلِ أَنْ يُؤْخَذَ لأَخِيهِ مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ أَخِيهِ، فَطُرِحَتْ عَلَيْهِ "".
பாடம்: 48 மறுமை நாளில் பழிதீர்க்கப் படுதல்113 மறுமை நாளுக்கு ‘அல்ஹாக்கா’ (‘நிச்சயமானது’) என்றொரு பெயருண்டு. ஏனெனில், அந்நாளில் பிரதிபலன் கிடைப்பதும், உண்மைகள் (வெளிச்சத்திற்கு) வருவதும் நிச்சயமாகும். ‘அல்ஹாக்கா’ மற்றும் ‘அல்ஹக்கா’ (உண்மையானது) ஆகிய இரண்டுக்கும் பொருள் ஒன்றே. (இதன்றி) ‘அல்காரிஆ’ (திடுக்கிடச் செய்யக்கூடியது), ‘அல்ஃகாஷியா’ (சூழ்ந்துகொள்ளக்கூடியது), ‘அஸ்ஸாக்கா’ (பெருஞ்சப்தம்) ஆகிய பெயர்களும் அதற்கு உண்டு. ‘அத்தஃகாபுன்’ (இழப்புக்குள்ளாக்குதல்) எனும் பெயரும் உண்டு. அன்று சொர்க்கவாசிகள், நரகவாசிகளை இழப்புக்குள்ளாக்குவர்.114
6534. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் சகோதரருக்கு அநீதி ஏதேனும் இழைத்திருந்தால் (அவருடன் பேசி விமோசனம் கண்டு) அதிலிருந்து அவர் (இவ்வுலகிலேயே) தம்மை விடுவித்துக்கொள்ளட்டும். ஏனெனில், அங்கு (மறுமையில் ஈட்டுத்தொகை கொடுக்க) பொற்காசோ வெள்ளிக்காசோ இருக்காது. இவர் தம் சகோதரருக்கு (இழைத்த அநீதிக்கு ஈடாக) இவருடைய நன்மைகளிலிருந்து (தேவையானவை) எடு(த்துக் கொடு)க்கப்படும்; இவரிடம் நன்மைகளே இல்லை என்றால், (அநீதிக்குள்ளான) சகோதரனின் பாவங்களிலிருந்து (விகிதாசாரப்படி) எடுத்து இவர்மீது சுமத்தப்(படும். இந்நிலை ஏற்)படுவதற்கு முன்பே (இம்மையில் சமரசம் செய்துகொள்ளட்டும்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116

அத்தியாயம் : 83
6535. حَدَّثَنِي الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، {وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ} قَالَ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَخْلُصُ الْمُؤْمِنُونَ مِنَ النَّارِ، فَيُحْبَسُونَ عَلَى قَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ، فَيُقَصُّ لِبَعْضِهِمْ مِنْ بَعْضٍ، مَظَالِمُ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا، حَتَّى إِذَا هُذِّبُوا وَنُقُّوا أُذِنَ لَهُمْ فِي دُخُولِ الْجَنَّةِ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لأَحَدُهُمْ أَهْدَى بِمَنْزِلِهِ فِي الْجَنَّةِ مِنْهُ بِمَنْزِلِهِ كَانَ فِي الدُّنْيَا "".
பாடம்: 48 மறுமை நாளில் பழிதீர்க்கப் படுதல்113 மறுமை நாளுக்கு ‘அல்ஹாக்கா’ (‘நிச்சயமானது’) என்றொரு பெயருண்டு. ஏனெனில், அந்நாளில் பிரதிபலன் கிடைப்பதும், உண்மைகள் (வெளிச்சத்திற்கு) வருவதும் நிச்சயமாகும். ‘அல்ஹாக்கா’ மற்றும் ‘அல்ஹக்கா’ (உண்மையானது) ஆகிய இரண்டுக்கும் பொருள் ஒன்றே. (இதன்றி) ‘அல்காரிஆ’ (திடுக்கிடச் செய்யக்கூடியது), ‘அல்ஃகாஷியா’ (சூழ்ந்துகொள்ளக்கூடியது), ‘அஸ்ஸாக்கா’ (பெருஞ்சப்தம்) ஆகிய பெயர்களும் அதற்கு உண்டு. ‘அத்தஃகாபுன்’ (இழப்புக்குள்ளாக்குதல்) எனும் பெயரும் உண்டு. அன்று சொர்க்கவாசிகள், நரகவாசிகளை இழப்புக்குள்ளாக்குவர்.114
6535. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தி(ன் பாலத்தி)லிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு உலகில் (வாழ்ந்தபோது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காகச் சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்த்துக்கொள்வார்கள். இறுதியில் அவர்கள் (மாசு) நீங்கித் தூய்மையாகிவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங் கப்படும். முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தமது வசிப்பிடத்தை, உலகத்திலிருந்த அவர் களின் இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.117

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அவர்கள், “(இவ்வுலகில் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தை அவர்களின் இதயங்களிலிருந்து அகற்றிவிடுவோம்” எனும் (7:43ஆவது) வசனத்தை ஓதிவிட்டு, (அதற்கு விளக்கமாக) இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.

அத்தியாயம் : 83
6536. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ عُثْمَانَ بْنِ الأَسْوَدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ نُوقِشَ الْحِسَابَ عُذِّبَ "". قَالَتْ قُلْتُ أَلَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى {فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا}. قَالَ "" ذَلِكِ الْعَرْضُ "". حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُثْمَانَ بْنِ الأَسْوَدِ، سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم مِثْلَهُ. وَتَابَعَهُ ابْنُ جُرَيْجٍ وَمُحَمَّدُ بْنُ سُلَيْمٍ وَأَيُّوبُ وَصَالِحُ بْنُ رُسْتُمٍ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 49 துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் வேதனையில் அகப்படுவார்.
6536. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “எவர் (மறுமை நாளில்) துருவித்துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்” என்று கூறினார்கள். நான் “உயர்ந்தோன் அல்லாஹ் (தன் வேதத்தில்) ‘வலக் கரத்தில் தமது வினைப்பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ (84:8) என்றல்லவா கூறுகின்றான்?” எனக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் “இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர் களின் நன்மை, தீமை பட்டியலை அவர்களுக்கு முன்னால்) சமர்ப்பிக்கப் படுதலாகும்” என்று கூறினார்கள்.118

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 83
6537. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ أَبِي صَغِيرَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَتْنِي عَائِشَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ هَلَكَ "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلَيْسَ قَدْ قَالَ اللَّهُ تَعَالَى {فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ * فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّمَا ذَلِكِ الْعَرْضُ، وَلَيْسَ أَحَدٌ يُنَاقَشُ الْحِسَابَ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ عُذِّبَ "".
பாடம்: 49 துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் வேதனையில் அகப்படுவார்.
6537. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்” என்று கூறி னார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! ‘எவரது வினைப்பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப் படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ என்றல்லவா உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்?” (84:8) என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை, தீமைகளின் பட்டியலை அவர்களுக்குமுன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமóருப்பதில்லை” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 83
6538. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ "" يُجَاءُ بِالْكَافِرِ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ لَهُ أَرَأَيْتَ لَوْ كَانَ لَكَ مِلْءُ الأَرْضِ ذَهَبًا أَكُنْتَ تَفْتَدِي بِهِ فَيَقُولُ نَعَمْ. فَيُقَالُ لَهُ قَدْ كُنْتَ سُئِلْتَ مَا هُوَ أَيْسَرُ مِنْ ذَلِكَ "".
பாடம்: 49 துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் வேதனையில் அகப்படுவார்.
6538. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மறுமை நாளில் இறைமறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டுவரப்பட்டு “உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாயல்லவா?” என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ‘ஆம்’ என்று பதிலளிப்பான். அப்போது “இதைவிட தெளிவான ஒன்றே (அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)” என்று கூறப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவந்தார்கள்.119

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 83
6539. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنِي الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي خَيْثَمَةُ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَسَيُكَلِّمُهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ، لَيْسَ بَيْنَ اللَّهِ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، ثُمَّ يَنْظُرُ فَلاَ يَرَى شَيْئًا قُدَّامَهُ، ثُمَّ يَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَتَسْتَقْبِلُهُ النَّارُ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَتَّقِيَ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ "".
பாடம்: 49 துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் வேதனையில் அகப்படுவார்.
6539. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காணமாட்டார். பிறகு தம(துமுகத்து)க்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்புதான் வரவேற்கும். ஆகவே, முடிந்தால் பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.120

அத்தியாயம் : 83
6540. قَالَ الأَعْمَشُ حَدَّثَنِي عَمْرٌو، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اتَّقُوا النَّارَ "". ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ، ثُمَّ قَالَ "" اتَّقُوا النَّارَ "". ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ ثَلاَثًا، حَتَّى ظَنَنَّا أَنَّهُ يَنْظُرُ إِلَيْهَا، ثُمَّ قَالَ "" اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَمَنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ "".
பாடம்: 49 துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் வேதனையில் அகப்படுவார்.
6540. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் “நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு (நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) முகத்தைத் திருப்பிக்கொண் டார்கள். பிறகு (மீண்டும்) “நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்களோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு மூன்றுமுறை (இவ்வாறு) செய்தார்கள்.

பிறகு “பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் நரகத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.121

அத்தியாயம் : 83
6541. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا حُصَيْنٌ،. وَحَدَّثَنِي أَسِيدُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، قَالَ كُنْتُ عِنْدَ سَعِيدِ بْنِ جُبَيْرٍ فَقَالَ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" عُرِضَتْ عَلَىَّ الأُمَمُ، فَأَخَذَ النَّبِيُّ يَمُرُّ مَعَهُ الأُمَّةُ، وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ النَّفَرُ، وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْعَشَرَةُ، وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْخَمْسَةُ، وَالنَّبِيُّ يَمُرُّ وَحْدَهُ، فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ كَثِيرٌ قُلْتُ يَا جِبْرِيلُ هَؤُلاَءِ أُمَّتِي قَالَ لاَ وَلَكِنِ انْظُرْ إِلَى الأُفُقِ. فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ كَثِيرٌ. قَالَ هَؤُلاَءِ أُمَّتُكَ، وَهَؤُلاَءِ سَبْعُونَ أَلْفًا قُدَّامَهُمْ، لاَ حِسَابَ عَلَيْهِمْ وَلاَ عَذَابَ. قُلْتُ وَلِمَ قَالَ كَانُوا لاَ يَكْتَوُونَ، وَلاَ يَسْتَرْقُونَ، وَلاَ يَتَطَيَّرُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ "". فَقَامَ إِلَيْهِ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ "" اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ "". ثُمَّ قَامَ إِلَيْهِ رَجُلٌ آخَرُ قَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ "" سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ "".
பாடம்: 50 விசாரணையில்லாமல் எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.122
6541. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின் போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத்தூதருடன் (கணிசமான எண்ணிக்கையிலிருந்த) ஒரு கூட்டம் கடந்துசென்றது. மற்றோர் இறைத்தூதருடன் சிலபேர் கடந்துசென்றனர். மற்றோர் இறைத்தூதருடன் பத்துப் பேரும், இன்னோர் இறைத்தூதருடன் ஐந்து பேரும் கடந்துசென்றனர். பிறிதோர் இறைத்தூதர் தனியாகச் சென்றார். அப்போது ஒரு மிகப் பெரிய கூட்டத்தைக் கண்டேன். நான் “(வானவர்) ஜிப்ரீலே! இவர்கள் என் சமுதாயத்தாரா?” என்று கேட்டேன். ஜிப்ரீல், “இல்லை. மாறாக, அடிவானத்தைப் பாருங்கள்” என்றார். உடனே நான் பார்த்தேன்.

அங்கே மிகப் பெரும் மக்கள் திரள் இருக்கக் கண்டேன். ஜிப்ரீல், “இவர்கள்தான் உங்கள் சமுதாயத்தார். இவர்களின் முன்னணியில் இருக்கும் இந்த எழுபதாயிரம் பேருக்கு விசாரணையுமில்லை. வேதனையுமில்லை” என்று கூறினார். நான் ‘ஏன்?’ என்று கேட்டேன்.

அதற்கு ஜிப்ரீல், “இவர்கள் (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ளாதவர்களாகவும், ஓதிப்பார்க்காதவர்களாகவும், பறவை சகுனம் பார்க்காதவர்களாகவும், தங்கள் இறைவன்மீதே முழு நம்பிக்கை வைத்தவர்களாகவும் இருந்தார்கள்” என்று கூறினார்.

உடனே நபி (ஸல்) அவர்களை நோக்கி உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து (வந்து), “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வே! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்களை நோக்கி இன்னொரு மனிதர் எழுந்து (வந்து), “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தி யுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்” என்று சொன்னார்கள்.123

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 83
6542. حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" يَدْخُلُ مِنْ أُمَّتِي زُمْرَةٌ هُمْ سَبْعُونَ أَلْفًا، تُضِيءُ وُجُوهُهُمْ إِضَاءَةَ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ "". وَقَالَ أَبُو هُرَيْرَةَ فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ الأَسَدِيُّ يَرْفَعُ نَمِرَةً عَلَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ "" اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ "". ثُمَّ قَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَقَالَ "" سَبَقَكَ عُكَّاشَةُ "".
பாடம்: 50 விசாரணையில்லாமல் எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.122
6542. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம், பௌர்ணமி இரவில் முழுநிலவு பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்தபடி (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள்” என்று கூறினார்கள். உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல்அசதீ (ரலி) அவர்கள் தம்மீதிருந்த கோடுபோட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 83
6543. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيَدْخُلَنَّ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا أَوْ سَبْعُمِائَةِ أَلْفٍ ـ شَكَّ فِي أَحَدِهِمَا ـ مُتَمَاسِكِينَ، آخِذٌ بَعْضُهُمْ بِبَعْضٍ، حَتَّى يَدْخُلَ أَوَّلُهُمْ وَآخِرُهُمُ الْجَنَّةَ، وَوُجُوهُهُمْ عَلَى ضَوْءِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ "".
பாடம்: 50 விசாரணையில்லாமல் எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.122
6543. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ‘எழுபதாயிரம் பேர்’ அல்லது ‘ஏழு லட்சம் பேர்’ ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரேசீராக (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் முதலாமவரும் இறுதியானவரும் (ஒரே நேரத்தில்) சொர்க்கத்தில் நுழையும் அளவுக்கு (ஓரணியில்) செல்வார்கள். மேலும், அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவில் முழுநிலவு பிரகாசிப்பதைப் போன்று பிரகாசிக்கும்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.124

அத்தியாயம் : 83
6544. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ، ثُمَّ يَقُومُ مُؤَذِّنٌ بَيْنَهُمْ يَا أَهْلَ النَّارِ لاَ مَوْتَ، وَيَا أَهْلَ الْجَنَّةِ لاَ مَوْتَ، خُلُودٌ "".
பாடம்: 50 விசாரணையில்லாமல் எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.122
6544. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பிறகு ஓர் அறிவிப்பாளர் அவர்களிடையே எழுந்து, “நரகவாசிகளே! இனி மரணம் இல்லை. சொர்க்கவாசிகளே! மரணம் இல்லை; இது நிரந்தரம்” என்று அறிவிப்பார்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 83
6545. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يُقَالُ لأَهْلِ الْجَنَّةِ خُلُودٌ لاَ مَوْتَ. وَلأَهْلِ النَّارِ يَا أَهْلَ النَّارِ خُلُودٌ لاَ مَوْتَ "".
பாடம்: 50 விசாரணையில்லாமல் எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.122
6545. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசிகளிடம், “(இது) நிரந்த ரம்; (இனி) மரணம் இல்லை” என்றும், நரகவாசிகளிடம் “(இது) நிரந்தரம்; (இனி) மரணம் இல்லை” என்றும் சொல்லப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 83
6546. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، حَدَّثَنَا عَوْفٌ، عَنْ أَبِي رَجَاءٍ، عَنْ عِمْرَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6546. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப்பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்.

இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்.126

அத்தியாயம் : 83
6547. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أُسَامَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قُمْتُ عَلَى باب الْجَنَّةِ فَكَانَ عَامَّةُ مَنْ دَخَلَهَا الْمَسَاكِينَ، وَأَصْحَابُ الْجَدِّ مَحْبُوسُونَ، غَيْرَ أَنَّ أَصْحَابَ النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ، وَقُمْتُ عَلَى باب النَّارِ فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا النِّسَاءُ "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6547. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

நான் சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தார்கள். தனவந்தர்கள் (விசாரணைக்காக சொர்க்கத்தில் நுழைந்து விடாமல்) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்; ஆனால், நரகவாசிகளை நரகத்திற்குக் கொண்டுசெல்லுமாறு ஆணையிடப்பட்டி ருந்தது. நான் நரகத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தார்கள்.

இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 83
6548. حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ حَدَّثَهُ عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا صَارَ أَهْلُ الْجَنَّةِ إِلَى الْجَنَّةِ، وَأَهْلُ النَّارِ إِلَى النَّارِ، جِيءَ بِالْمَوْتِ حَتَّى يُجْعَلَ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ، ثُمَّ يُذْبَحُ، ثُمَّ يُنَادِي مُنَادٍ يَا أَهْلَ الْجَنَّةِ لاَ مَوْتَ، يَا أَهْلَ النَّارِ لاَ مَوْتَ، فَيَزْدَادُ أَهْلُ الْجَنَّةِ فَرَحًا إِلَى فَرَحِهِمْ. وَيَزْدَادُ أَهْلُ النَّارِ حُزْنًا إِلَى حُزْنِهِمْ "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6548. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்தபிறகு ‘மரணம்’ (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டுவரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர், “சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது; நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது” என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்குமேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்குமேல் கவலை அதிகமாகும்.127

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 83
6549. حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ يَقُولُ لأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ. يَقُولُونَ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ. فَيَقُولُ هَلْ رَضِيتُمْ فَيَقُولُونَ وَمَا لَنَا لاَ نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ. فَيَقُولُ أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ. قَالُوا يَا رَبِّ وَأَىُّ شَىْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, ‘சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பான். அதற்கு அவர்கள் “எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்” என்று பதிலளிப்பார் கள். அப்போது அல்லாஹ் “திருப்தி அடைந்தீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள் “உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?” என்று கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ் “அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன்” என்பான். அவர்கள் “அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் “உங்கள்மீது என் அன்பை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன்” என்று கூறுவான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.128

அத்தியாயம் : 83
6550. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ أُصِيبَ حَارِثَةُ يَوْمَ بَدْرٍ وَهْوَ غُلاَمٌ، فَجَاءَتْ أُمُّهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ قَدْ عَرَفْتَ مَنْزِلَةَ حَارِثَةَ مِنِّي، فَإِنْ يَكُ فِي الْجَنَّةِ أَصْبِرْ وَأَحْتَسِبْ، وَإِنْ تَكُنِ الأُخْرَى تَرَى مَا أَصْنَعُ. فَقَالَ "" وَيْحَكِ ـ أَوَهَبِلْتِ ـ أَوَجَنَّةٌ وَاحِدَةٌ هِيَ جِنَانٌ كَثِيرَةٌ، وَإِنَّهُ لَفِي جَنَّةِ الْفِرْدَوْسِ "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6550. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இளைஞராயிருந்த ஹாரிஸா பின் சுராக்கா அல்அன்சாரி (ரலி) அவர்கள் பத்ர் போரில் கொல்லப்பட்டார்கள். அப்பால் அவர்களின் தாயார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (என் மகன்) ஹாரிஸாவுக்கு என்னிடமுள்ள இடத்தைத் தாங்கள் அறிந்துள்ளீர்கள். (இப்போது) ஹாரிஸா சொர்க்கத்தில் இருந்தால் நான் நன்மையை நாடி பொறுமை காப்பேன். இதுவன்றி நிலைமை வேறாக இருப்பின், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அடப்பாவமே! இழப்பால் துடிக்கிறாயோ! அதுவென்ன, சொர்க்கம் ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கங்க(ளின் படித்தரங்க)ள் நிறைய உள்ளன. (உன் மகன்) ஹாரிஸா (உயர்ந்த சொர்க்கமான) ‘ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்’ எனும் சொர்க்கத்தில் இருக்கிறார்” என்று கூறினார்கள்.129

அத்தியாயம் : 81
6551. حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا الْفُضَيْلُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ""مَا بَيْنَ مَنْكِبَىِ الْكَافِرِ مَسِيرَةُ ثَلاَثَةِ أَيَّامٍ لِلرَّاكِبِ الْمُسْرِعِ"".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6551. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகத்தில்) இறைமறுப்பாளரின் இரு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாட்கள் கடக்கும் தூரமாகும்.130

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6552. وَقَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ، لاَ يَقْطَعُهَا "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்துசெல்ல முடியாது.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6553. قَالَ أَبُو حَازِمٍ فَحَدَّثْتُ بِهِ النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ، فَقَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ الْجَوَادَ الْمُضَمَّرَ السَّرِيعَ مِائَةَ عَامٍ، مَا يَقْطَعُهَا "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6553. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது.131

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81