5123. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ قَالَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّا قَدْ تَحَدَّثْنَا أَنَّكَ نَاكِحٌ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَعَلَى أُمِّ سَلَمَةَ لَوْ لَمْ أَنْكِحْ أُمَّ سَلَمَةَ مَا حَلَّتْ لِي، إِنَّ أَبَاهَا أَخِي مِنَ الرَّضَاعَةِ "".
பாடம்: 34 ஒருவர் தம் மகளையோ சகோதரியையோ மணமுடித்துக் கொள்ளு மாறு நல்லோரிடம் கோருவது
5123. ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அன்னை) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அபூசலமாவின் மகள் ‘துர்ரா’வைத் தாங்கள் மணக்கப்போவதாக செய்தியறிந்தோம். (இது உண்மையா?)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(என் துணைவியார்) உம்முசலமா இருக்கவா (அவர் மகளை நான் மணப்பேன்?)” என்று கேட்டுவிட்டு, ‘‘உம்மு சலமாவை நான் மணமுடித்திருக்காவிட்டாலும் (அவருடைய மகள்) துர்ரா எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவளல்லள். ஏனெனில், அவளுடைய தந்தை (அபூசலமா) என் பால்குடி சகோதரர் ஆவார்” என்று கூறினார்கள்.63

அத்தியாயம் : 67
5124. وَقَالَ لِي طَلْقٌ حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، {فِيمَا عَرَّضْتُمْ} يَقُولُ إِنِّي أُرِيدُ التَّزْوِيجَ، وَلَوَدِدْتُ أَنَّهُ تَيَسَّرَ لِي امْرَأَةٌ صَالِحَةٌ. وَقَالَ الْقَاسِمُ يَقُولُ إِنَّكِ عَلَىَّ كَرِيمَةٌ، وَإِنِّي فِيكِ لَرَاغِبٌ، وَإِنَّ اللَّهَ لَسَائِقٌ إِلَيْكِ خَيْرًا. أَوْ نَحْوَ هَذَا. وَقَالَ عَطَاءٌ يُعَرِّضُ وَلاَ يَبُوحُ يَقُولُ إِنَّ لِي حَاجَةً وَأَبْشِرِي، وَأَنْتِ بِحَمْدِ اللَّهِ نَافِقَةٌ. وَتَقُولُ هِيَ قَدْ أَسْمَعُ مَا تَقُولُ. وَلاَ تَعِدُ شَيْئًا وَلاَ يُوَاعِدُ وَلِيُّهَا بِغَيْرِ عِلْمِهَا، وَإِنْ وَاعَدَتْ رَجُلاً فِي عِدَّتِهَا ثُمَّ نَكَحَهَا بَعْدُ لَمْ يُفَرَّقْ بَيْنَهُمَا. وَقَالَ الْحَسَنُ {لاَ تُوَاعِدُوهُنَّ سِرًّا} الزِّنَا. وَيُذْكَرُ عَنِ ابْنِ عَبَّاسٍ {الْكِتَابُ أَجَلَهُ} تَنْقَضِي الْعِدَّةُ.
பாடம்: 35 ‘‘(‘இத்தா’வில் இருக்கும்) பெண்களி டம் திருமணப் பேச்சை மறைமுக மாக எடுத்துரைப்பதிலோ, அல்லது (அதனை) உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை...” எனும் (2:235ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்னன்த்தும்’ எனும் சொல்லுக்கு, ‘உங்கள் உள்ளங்களில் மறைத்துவைப்பது’ என்று பொருள். (பொதுவாக) நீ பாதுகாத்து மறைத்துவைக்கும் யாவற்றுக்கும் (அரபி மொழி வழக்கில்) ‘மக்னூன்’ எனப்படு கிறது.
5124. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘(‘இத்தா’வில் இருக்கும்) பெண்களிடம் திருமணப் பேச்சை மறைமுகமாக எடுத்துரைப்பதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை” எனும் (2:235ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘ஒருவர், (‘இத்தா’விலிருக்கும் ஒரு பெண்ணிடம்) ‘நான் மணமுடித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்றோ ‘ஒரு நல்ல பெண் எனக்கு விரைவில் கிடைப்பாள் என நம்புகிறேன்’ என்றோ (சாடையாகக்) கூறுவதாகும்.” என்று சொன்னார்கள்.

காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நீ என்னிடம் மதிப்புக் குரியவள்; நான் உன்னை விரும்புகிறேன்; அல்லாஹ் உனக்கு நன்மை புரிவான் என்பன போன்ற வார்த்தைகளைக் கூறுவதாகும்.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இத்தாவில் இருக்கும் பெண்ணிடம் தம் திருமண விருப்பத்தை) ஒருவர் மறைமுகமாகச் சொல்ல வேண்டும்; வெளிப்படையாகச் சொல்லக் கூடாது. (உதாரணமாக) ‘எனக்கு ஒரு தேவை உள்ளது’ என்றோ, அல்லது ‘ஒரு மகிழ்ச்சியான செய்தி உனக்கு (காத்திருக்கிறது)’ என்றோ, ‘அல்லாஹ்வின் அருளால் நீ கடைத்தேறிவிடுவாய்’ என்றோ கூறுவார்.

அதற்கு (பதிலாக) அவள், ‘நீங்கள் சொல்வதை நான் செவியுற்றேன்’ என்று மட்டும் சொல்வாள். அவனுக்கு எந்த வாக்குறுதியையும் அவள் அளிக்கக் கூடாது. (இதைப் போன்றே) அவளுடைய காப்பாளரும் அவளுக்குத் தெரியாமல் (யாருக்கும்) வாக்குக் கொடுக்கக் கூடாது. ‘இத்தா’ காலத்தில் வைத்தே ஒரு பெண் ஒரு மனிதருக்கு (மணமுடிக்க) வாக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு (வாக்குக் கொடுத்தபடி) இருவரும் மணந்துகொண்டால் இருவருக்கு மத்தியில் மணமுறிவு ஏற்படுத்தப்படாது.

‘‘(2:235ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அஸ்ஸிர்ரு’ (இரகசியம்) எனும் சொல்லுக்கு ‘விபசாரம்’ என்பது பொருள்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ஹத்தா யப்லுஃகல் கிதாபு அஜலஹு (குறித்த தவணை முடிகின்றவரை) என்பது ‘இத்தா’ முடிவதைக் குறிக்கும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 67
5125. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" رَأَيْتُكِ فِي الْمَنَامِ يَجِيءُ بِكِ الْمَلَكُ فِي سَرَقَةٍ مِنْ حَرِيرٍ فَقَالَ لِي هَذِهِ امْرَأَتُكَ. فَكَشَفْتُ عَنْ وَجْهِكِ الثَّوْبَ، فَإِذَا أَنْتِ هِيَ فَقُلْتُ إِنْ يَكُ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ "".
பாடம்: 36 திருமணத்திற்குமுன் மணப் பெண்ணைப் பார்ப்பது64
5125. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், ‘‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி” என்று கூறினார்.

உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) ‘‘இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதை அல்லாஹ் நனவாக்கு வான்” என்று சொல்óக்கொண்டேன்.65


அத்தியாயம் : 67
5126. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ امْرَأَةً، جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ جِئْتُ لأَهَبَ لَكَ نَفْسِي. فَنَظَرَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَعَّدَ النَّظَرَ إِلَيْهَا وَصَوَّبَهُ، ثُمَّ طَأْطَأَ رَأْسَهُ، فَلَمَّا رَأَتِ الْمَرْأَةُ أَنَّهُ لَمْ يَقْضِ فِيهَا شَيْئًا جَلَسَتْ، فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ فَقَالَ أَىْ رَسُولَ اللَّهِ إِنْ لَمْ تَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَا. فَقَالَ "" هَلْ عِنْدَكَ مِنْ شَىْءٍ "". قَالَ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" اذْهَبْ إِلَى أَهْلِكَ فَانْظُرْ هَلْ تَجِدُ شَيْئًا "". فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا وَجَدْتُ شَيْئًا. قَالَ "" انْظُرْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ "". فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ، وَلَكِنْ هَذَا إِزَارِي ـ قَالَ سَهْلٌ مَا لَهُ رِدَاءٌ ـ فَلَهَا نِصْفُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا تَصْنَعُ بِإِزَارِكَ إِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَىْءٌ، وَإِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ شَىْءٌ "". فَجَلَسَ الرَّجُلُ حَتَّى طَالَ مَجْلَسُهُ ثُمَّ قَامَ فَرَآهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُوَلِّيًا فَأَمَرَ بِهِ فَدُعِيَ فَلَمَّا جَاءَ قَالَ "" مَاذَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "". قَالَ مَعِي سُورَةَ كَذَا وَسُورَةَ كَذَا وَسُورَةَ كَذَا. عَدَّدَهَا. قَالَ "" أَتَقْرَؤُهُنَّ عَنْ ظَهْرِ قَلْبِكَ "". قَالَ نَعَمْ. قَالَ "" اذْهَبْ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "".
பாடம்: 36 திருமணத்திற்குமுன் மணப் பெண்ணைப் பார்ப்பது64
5126. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ள) வந்துள்ளேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு அதைத் தாழ்த்திக்கொண்டார்கள். பிறகு தமது தலையைத் தொங்கவிட்டுக்கொண் டார்கள்.

தமது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அப் பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துவையுங்கள்!” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), ‘‘(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்று பதில் சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!” என்றார்கள்.

அவர் போய் பார்த்துவிட்டுப் பிறகு திரும்பி வந்து, ‘‘இல்லை. அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஏதும் கிடைக்கவில்லை)” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும்பாலான ஒரு மோதிரமாவது (கிடைக்குமா எனப்) பார்!” என்றார்கள்.

அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒன்றும்) கிடைக்கவில்லை. அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம்கூட கிடைக்கவில்லை; ஆனால், இதோ இந்த எனது கீழங்கி உள்ளது” என்றார்.

-அறிவிப்பாளர் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல்துண்டுகூட இல்லை; அதனால்தான் தமது கீழங்கியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.-

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமது (இந்த ஒரு) கீழங்கியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்? அந்தக் கீழங்கியை நீர் உடுத்திக்கொண் டால், அவள்மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக்கொண்டால் உம்மீது அதில் ஏதும் இருக்காது. (உமது கீழங்கியைக் கொடுத்துவிட்டு என்ன செய்யப்போகிறாய்?)” என்று கேட்டார்கள். அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந் திருந்துவிட்டுப் பிறகு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதைக் கண்ட அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து வருமாறு உத்தரவிட்டார்கள்.

அவ்வாறே அவர் அழைத்துவரப் பட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்மு டன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘(குர்ஆனில்) இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன” என்று அவற்றை அவர் எண்ணி எண்ணிச் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?” என்று கேட்டார்கள். ‘‘ஆம் (ஓதுவேன்)” என்று அவர் பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!” என்று சொன் னார்கள்.66

அத்தியாயம் : 67
5127. قَالَ يَحْيَى بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ،. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ النِّكَاحَ فِي الْجَاهِلِيَّةِ كَانَ عَلَى أَرْبَعَةِ أَنْحَاءٍ فَنِكَاحٌ مِنْهَا نِكَاحُ النَّاسِ الْيَوْمَ، يَخْطُبُ الرَّجُلُ إِلَى الرَّجُلِ وَلِيَّتَهُ أَوِ ابْنَتَهُ، فَيُصْدِقُهَا ثُمَّ يَنْكِحُهَا، وَنِكَاحٌ آخَرُ كَانَ الرَّجُلُ يَقُولُ لاِمْرَأَتِهِ إِذَا طَهُرَتْ مِنْ طَمْثِهَا أَرْسِلِي إِلَى فُلاَنٍ فَاسْتَبْضِعِي مِنْهُ. وَيَعْتَزِلُهَا زَوْجُهَا، وَلاَ يَمَسُّهَا أَبَدًا، حَتَّى يَتَبَيَّنَ حَمْلُهَا مِنْ ذَلِكَ الرَّجُلِ الَّذِي تَسْتَبْضِعُ مِنْهُ، فَإِذَا تَبَيَّنَ حَمْلُهَا أَصَابَهَا زَوْجُهَا إِذَا أَحَبَّ، وَإِنَّمَا يَفْعَلُ ذَلِكَ رَغْبَةً فِي نَجَابَةِ الْوَلَدِ، فَكَانَ هَذَا النِّكَاحُ نِكَاحَ الاِسْتِبْضَاعِ، وَنِكَاحٌ آخَرُ يَجْتَمِعُ الرَّهْطُ مَا دُونَ الْعَشَرَةِ فَيَدْخُلُونَ عَلَى الْمَرْأَةِ كُلُّهُمْ يُصِيبُهَا. فَإِذَا حَمَلَتْ وَوَضَعَتْ، وَمَرَّ عَلَيْهَا لَيَالِيَ بَعْدَ أَنْ تَضَعَ حَمْلَهَا، أَرْسَلَتْ إِلَيْهِمْ فَلَمْ يَسْتَطِعْ رَجُلٌ مِنْهُمْ أَنْ يَمْتَنِعَ حَتَّى يَجْتَمِعُوا عِنْدَهَا تَقُولُ لَهُمْ قَدْ عَرَفْتُمُ الَّذِي كَانَ مِنْ أَمْرِكُمْ، وَقَدْ وَلَدْتُ فَهُوَ ابْنُكَ يَا فُلاَنُ. تُسَمِّي مَنْ أَحَبَّتْ بِاسْمِهِ، فَيَلْحَقُ بِهِ وَلَدُهَا، لاَ يَسْتَطِيعُ أَنْ يَمْتَنِعَ بِهِ الرَّجُلُ. وَنِكَاحُ الرَّابِعِ يَجْتَمِعُ النَّاسُ الْكَثِيرُ فَيَدْخُلُونَ عَلَى الْمَرْأَةِ لاَ تَمْتَنِعُ مِمَّنْ جَاءَهَا وَهُنَّ الْبَغَايَا كُنَّ يَنْصِبْنَ عَلَى أَبْوَابِهِنَّ رَايَاتٍ تَكُونُ عَلَمًا فَمَنْ أَرَادَهُنَّ دَخَلَ عَلَيْهِنَّ، فَإِذَا حَمَلَتْ إِحْدَاهُنَّ وَوَضَعَتْ حَمْلَهَا جُمِعُوا لَهَا وَدَعَوْا لَهُمُ الْقَافَةَ ثُمَّ أَلْحَقُوا وَلَدَهَا بِالَّذِي يَرَوْنَ فَالْتَاطَ بِهِ، وَدُعِيَ ابْنَهُ لاَ يَمْتَنِعُ مِنْ ذَلِكَ، فَلَمَّا بُعِثَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم بِالْحَقِّ هَدَمَ نِكَاحَ الْجَاهِلِيَّةِ كُلَّهُ، إِلاَّ نِكَاحَ النَّاسِ الْيَوْمَ.
பாடம்: 37 ‘(மணப்பெண்ணின்) காப்பாளர் இல்லாத திருமணம் செல்லாது’ என்று கூறியோரின் கருத்து67 ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் (உங்களுடைய) துணைவியரை மணவிலக்குச் செய்து அவர்கள் தங்களின் (இத்தா) தவணையின் இறுதியை அடைந்து விட்டால், அவர்கள் தங்களுக்குரிய துணைவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் மணந்துகொள்வதை (காப்பாளர்களே!) நீங்கள் தடுக்க வேண்டாம்! (2:232) இதில் கன்னி கழிந்த பெண்களும், அவ்வாறே கன்னிப் பெண்களும் அடங்குவர். அல்லாஹ் கூறுகின்றான்: இணைவைக்கும் ஆண்கள் (ஏக) இறைநம்பிக்கை கொள்ளும்வரை (காப்பாளர்களே!) அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்து வைக்காதீர்கள். (2:221) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள். (24:32)
5127. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:

முதல் வகை:

இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹ்ர்’ (மணக் கொடை) கொடுத்து மணந்துகொள்வார்.

இரண்டாம் வகைத் திருமணம்:

ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த வுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக்கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள்!’ என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்றவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார்.

குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஉ’ (விரும்பிப்பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.

மூன்றாம் வகைத் திருமணம்:

பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகி சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச்சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள்.

அப்போது அவர்களிடம், ‘‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது” என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) ‘‘இவன் உங்கள் மகன், இன்னாரே!” என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதை மறுக்க முடியாது.

நான்காம் வகைத் திருமணம் :

நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள்.

இந்தப் பெண்கள் விலைமாதர்கள் ஆவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே, அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை- பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்துவருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டுவந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது.

சத்திய(மார்க்க)த்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பிவைக்கப்பட்ட போது, இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 67
5128. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، {وَمَا يُتْلَى عَلَيْكُمْ فِي الْكِتَابِ فِي يَتَامَى النِّسَاءِ اللاَّتِي لاَ تُؤْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ}. قَالَتْ هَذَا فِي الْيَتِيمَةِ الَّتِي تَكُونُ عِنْدَ الرَّجُلِ، لَعَلَّهَا أَنْ تَكُونَ شَرِيكَتَهُ فِي مَالِهِ، وَهْوَ أَوْلَى بِهَا، فَيَرْغَبُ أَنْ يَنْكِحَهَا، فَيَعْضُلَهَا لِمَالِهَا، وَلاَ يُنْكِحَهَا غَيْرَهُ، كَرَاهِيَةَ أَنْ يَشْرَكَهُ أَحَدٌ فِي مَالِهَا.
பாடம்: 37 ‘(மணப்பெண்ணின்) காப்பாளர் இல்லாத திருமணம் செல்லாது’ என்று கூறியோரின் கருத்து67 ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் (உங்களுடைய) துணைவியரை மணவிலக்குச் செய்து அவர்கள் தங்களின் (இத்தா) தவணையின் இறுதியை அடைந்து விட்டால், அவர்கள் தங்களுக்குரிய துணைவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் மணந்துகொள்வதை (காப்பாளர்களே!) நீங்கள் தடுக்க வேண்டாம்! (2:232) இதில் கன்னி கழிந்த பெண்களும், அவ்வாறே கன்னிப் பெண்களும் அடங்குவர். அல்லாஹ் கூறுகின்றான்: இணைவைக்கும் ஆண்கள் (ஏக) இறைநம்பிக்கை கொள்ளும்வரை (காப்பாளர்களே!) அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்து வைக்காதீர்கள். (2:221) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள். (24:32)
5128. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அந்த அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை நீங்கள் வழங்காமலேயே, அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்” எனும் (4:127ஆவது) இறைவசனம், ஒரு மனிதரின் பாதுகாப்பில் இருக்கும் அநாதைப் பெண்ணைக் குறிக்கிறது. அவள் அவரது செல்வத்தில் பங்காளியாக இருக்கலாம். அவரே (மற்றவர்களைவிட) அவளுக்கு(க் காப்பாளராக இருக்க)த் தகுந்தவராகவும் இருக்கலாம்.

எனவே, அவளது சொத்தில் வேறு யாரும் தம்முடன் பங்காளியாவதை விரும்பாமல் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ள விரும்பி வேறு யாருக்கும் அவளை மணமுடித்துக் கொடுக்காமல் தம்மிடமே அவளை முடக்கிவைத்துக் கொண்டிருப்பார்.68


அத்தியாயம் : 67
5129. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ ابْنَ عُمَرَ، أَخْبَرَهُ أَنَّ عُمَرَ حِينَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنِ ابْنِ حُذَافَةَ السَّهْمِيِّ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أَهْلِ بَدْرٍ تُوُفِّيَ بِالْمَدِينَةِ ـ فَقَالَ عُمَرُ لَقِيتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَعَرَضْتُ عَلَيْهِ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ. فَقَالَ سَأَنْظُرُ فِي أَمْرِي. فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ لَقِيَنِي فَقَالَ بَدَا لِي أَنْ لاَ أَتَزَوَّجَ يَوْمِي هَذَا. قَالَ عُمَرُ فَلَقِيتُ أَبَا بَكْرٍ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ.
பாடம்: 37 ‘(மணப்பெண்ணின்) காப்பாளர் இல்லாத திருமணம் செல்லாது’ என்று கூறியோரின் கருத்து67 ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் (உங்களுடைய) துணைவியரை மணவிலக்குச் செய்து அவர்கள் தங்களின் (இத்தா) தவணையின் இறுதியை அடைந்து விட்டால், அவர்கள் தங்களுக்குரிய துணைவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் மணந்துகொள்வதை (காப்பாளர்களே!) நீங்கள் தடுக்க வேண்டாம்! (2:232) இதில் கன்னி கழிந்த பெண்களும், அவ்வாறே கன்னிப் பெண்களும் அடங்குவர். அல்லாஹ் கூறுகின்றான்: இணைவைக்கும் ஆண்கள் (ஏக) இறைநம்பிக்கை கொள்ளும்வரை (காப்பாளர்களே!) அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்து வைக்காதீர்கள். (2:221) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள். (24:32)
5129. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது, (அவரை வேறொருவருக்கு மணமுடித்து வைக்க எண்ணினார்கள்.)

-குனைஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவரும், பத்ர் போரில் கலந்துகொண்டவரும் ஆவார்கள். மேலும், அன்னார் மதீனாவில் இறந்தார்கள்.-

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

எனவே, நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து (என் மகள் ஹஃப்ஸா குறித்து) எடுத்துரைத்து, ‘‘நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவைத் தங்களுக்கு மணமுடித்து வைக்கிறேன்” என்று சொன்னேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், ‘‘(தங்கள் மகளை நான் மணமுடித்துக்கொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)” என்று சொன்னார்கள்.

சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்று கூறினார்கள்.

ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) ‘‘நீங்கள் விரும்பினால், (என் மகள்) ஹஃப்ஸாவைத் தங்களுக்கு திருமணம் முடித்து வைக்கிறேன்” என்று கூறினேன்.69


அத்தியாயம் : 67
5130. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي عَمْرٍو، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، {فَلاَ تَعْضُلُوهُنَّ} قَالَ حَدَّثَنِي مَعْقِلُ بْنُ يَسَارٍ، أَنَّهَا نَزَلَتْ فِيهِ قَالَ زَوَّجْتُ أُخْتًا لِي مِنْ رَجُلٍ فَطَلَّقَهَا، حَتَّى إِذَا انْقَضَتْ عِدَّتُهَا جَاءَ يَخْطُبُهَا، فَقُلْتُ لَهُ زَوَّجْتُكَ وَفَرَشْتُكَ وَأَكْرَمْتُكَ، فَطَلَّقْتَهَا، ثُمَّ جِئْتَ تَخْطُبُهَا، لاَ وَاللَّهِ لاَ تَعُودُ إِلَيْكَ أَبَدًا، وَكَانَ رَجُلاً لاَ بَأْسَ بِهِ وَكَانَتِ الْمَرْأَةُ تُرِيدُ أَنَّ تَرْجِعَ إِلَيْهِ فَأَنْزَلَ اللَّهُ هَذِهِ الآيَةَ {فَلاَ تَعْضُلُوهُنَّ} فَقُلْتُ الآنَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ فَزَوَّجَهَا إِيَّاهُ.
பாடம்: 37 ‘(மணப்பெண்ணின்) காப்பாளர் இல்லாத திருமணம் செல்லாது’ என்று கூறியோரின் கருத்து67 ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் (உங்களுடைய) துணைவியரை மணவிலக்குச் செய்து அவர்கள் தங்களின் (இத்தா) தவணையின் இறுதியை அடைந்து விட்டால், அவர்கள் தங்களுக்குரிய துணைவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் மணந்துகொள்வதை (காப்பாளர்களே!) நீங்கள் தடுக்க வேண்டாம்! (2:232) இதில் கன்னி கழிந்த பெண்களும், அவ்வாறே கன்னிப் பெண்களும் அடங்குவர். அல்லாஹ் கூறுகின்றான்: இணைவைக்கும் ஆண்கள் (ஏக) இறைநம்பிக்கை கொள்ளும்வரை (காப்பாளர்களே!) அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்து வைக்காதீர்கள். (2:221) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள். (24:32)
5130. மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அந்த (2:232ஆவது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது: என்னுடைய ஒரு சகோதரியை ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் மணவிலக்குச் செய்துவிட்டார். அவளுடைய ‘இத்தா’ காலத் தவணை முடிந்தபோது, அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம், ‘‘நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச்செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால், அவளை நீங்கள் மணவிலக்குச் செய்துவிட்டு, இப்போது (மீண்டும்) அவளைப் பெண் கேட்டு வந்துள்ளீர்கள். இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் அவள் உங்களிடம் திரும்பமாட்டாள்” என்று சொன்னேன்.

அவர் நல்ல மனிதராகத்தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போது தான் அல்லாஹ், ‘‘...அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்” எனும் இந்த (2:232ஆவது) வசனத்தை அருளினான்.

ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்துவைத்தேன்.70

அத்தியாயம் : 67
5131. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ فِي قَوْلِهِ {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ} إِلَى آخِرِ الآيَةِ، قَالَتْ هِيَ الْيَتِيمَةُ تَكُونُ فِي حَجْرِ الرَّجُلِ، قَدْ شَرِكَتْهُ فِي مَالِهِ، فَيَرْغَبُ عَنْهَا أَنْ يَتَزَوَّجَهَا، وَيَكْرَهُ أَنْ يُزَوِّجَهَا غَيْرَهُ، فَيَدْخُلَ عَلَيْهِ فِي مَالِهِ، فَيَحْبِسُهَا، فَنَهَاهُمُ اللَّهُ عَنْ ذَلِكَ.
பாடம்: 38 காப்பாளரே பெண் கேட்பவராயிருந்தால் (அவரே காப்பாளராகவும் இருந்து மணந்துகொள்வாரா? அல்லது பிறரைக் காப்பாளராக்கி மணந்துகொள்வாரா?)71 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள், தமது பாதுகாப்பில் இருந்த ஒரு பெண்ணைப் பெண் பேசி மணந்துகொள்ள விரும்பினார்கள். ஆகவே, (உஸ்மான் பின் அபில் ஆஸ் என்ற தூரத்து உறவினர்) ஒருவருக்கு அன்னார் உத்தரவிட, அவர் (காப்பாளராக இருந்து) முஃகீராவுக்கு (அப்பெண்ணை) மணமுடித்துவைத்தார். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (இடம் ‘நீங்கள் விரும்பிய ஒருவருக்கு என்னை மணமுடித்து வையுங்கள்’ என்று கோரிய) உம்மு ஹகீம் பின்த் காரிழ் என்ற பெண்மணியிடம் ‘‘(மணமகனைத் தேர்ந்தெடுக்கும்) உன்னுடைய அதிகாரத்தை என்னிடம் ஒப்படைத்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அப்பெண், ‘‘ஆம் (ஒப்படைக்கிறேன்)”. என்று சொன்னார். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘‘நானே உன்னை மணந்துகொள்கிறேன்” என்றார்கள். அத்தாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், ‘‘(காப்பாளரே தமது பொறுப்பிலுள்ள பெண்ணை மணந்துகொள்ள விரும்பினால்) ‘நான் உன்னை மணந்துகொண்டேன்’ என்று அவர் கூறும்போது சாட்சி வைத்துக்கொள்ளட்டும்! அல்லது அவள் குடும்பத்தில் ஒருவரை (மணமுடித்துத் தர) அவர் உத்தரவிடட்டும்!” என்று சொன்னார்கள். சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள) வந்துள்ளேன்” என்று கூறினார். அப்போது ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பெண் தங்களுக்குத் தேவையில்லை யாயின் எனக்கு இவளை மணமுடித்துத் தாருங்கள்” என்று கேட்டார்.72
5131. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே!) பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்குமாறு உம்மிடம் அவர்கள் கோருகின்றார்கள். நீர் கூறுவீராக: அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் (இவ்வாறு) தீர்ப்பளிக்கின்றான்...” எனும் (4:127ஆவது) இறைவசனம், ஓர் அநாதைப் பெண்ணைக் குறிக்கிறது. அவள் ஒரு மனிதரின் பாதுகாப்பில், அவரது சொத்தில் பங்காளியாக இருந்துவருவாள்.

இந்நிலையில், அவளைத் (தாமே மணந்துகொள்ள விரும்பினாலும், அவளுடன் அவர் முறையாக இல்லறம் நடத்தமாட்டார். அல்லது) தாமும் மணந்துகொள்வதை விரும்பமாட்டார். பிறருக்கு அவளை மணமுடித்துக் கொடுத்து தமது சொத்தில் அவர் தலையிடுவதையும் விரும்பமாட்டார். (இவ்வாறு) தம்மிடம் அவளை முடக்கி வைத்துக்கொள்வார். ஆனால், அல்லாஹ் இதற்குத் தடை விதித்தான்.73


அத்தியாயம் : 67
5132. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، حَدَّثَنَا سَهْلُ بْنُ سَعْدٍ، كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم جُلُوسًا فَجَاءَتْهُ امْرَأَةٌ تَعْرِضُ نَفْسَهَا عَلَيْهِ فَخَفَّضَ فِيهَا النَّظَرَ وَرَفَعَهُ فَلَمْ يُرِدْهَا، فَقَالَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ زَوِّجْنِيهَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" أَعِنْدَكَ مِنْ شَىْءٍ "". قَالَ مَا عِنْدِي مِنْ شَىْءٍ. قَالَ "" وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ "". قَالَ وَلاَ خَاتَمًا مِنَ حَدِيدٍ وَلَكِنْ أَشُقُّ بُرْدَتِي هَذِهِ فَأُعْطِيهَا النِّصْفَ، وَآخُذُ النِّصْفَ. قَالَ "" لاَ، هَلْ مَعَكَ مِنَ الْقُرْآنِ شَىْءٌ "". قَالَ نَعَمْ. قَالَ "" اذْهَبْ فَقَدْ زَوَّجْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "".
பாடம்: 38 காப்பாளரே பெண் கேட்பவராயிருந்தால் (அவரே காப்பாளராகவும் இருந்து மணந்துகொள்வாரா? அல்லது பிறரைக் காப்பாளராக்கி மணந்துகொள்வாரா?)71 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள், தமது பாதுகாப்பில் இருந்த ஒரு பெண்ணைப் பெண் பேசி மணந்துகொள்ள விரும்பினார்கள். ஆகவே, (உஸ்மான் பின் அபில் ஆஸ் என்ற தூரத்து உறவினர்) ஒருவருக்கு அன்னார் உத்தரவிட, அவர் (காப்பாளராக இருந்து) முஃகீராவுக்கு (அப்பெண்ணை) மணமுடித்துவைத்தார். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (இடம் ‘நீங்கள் விரும்பிய ஒருவருக்கு என்னை மணமுடித்து வையுங்கள்’ என்று கோரிய) உம்மு ஹகீம் பின்த் காரிழ் என்ற பெண்மணியிடம் ‘‘(மணமகனைத் தேர்ந்தெடுக்கும்) உன்னுடைய அதிகாரத்தை என்னிடம் ஒப்படைத்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அப்பெண், ‘‘ஆம் (ஒப்படைக்கிறேன்)”. என்று சொன்னார். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘‘நானே உன்னை மணந்துகொள்கிறேன்” என்றார்கள். அத்தாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், ‘‘(காப்பாளரே தமது பொறுப்பிலுள்ள பெண்ணை மணந்துகொள்ள விரும்பினால்) ‘நான் உன்னை மணந்துகொண்டேன்’ என்று அவர் கூறும்போது சாட்சி வைத்துக்கொள்ளட்டும்! அல்லது அவள் குடும்பத்தில் ஒருவரை (மணமுடித்துத் தர) அவர் உத்தரவிடட்டும்!” என்று சொன்னார்கள். சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள) வந்துள்ளேன்” என்று கூறினார். அப்போது ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பெண் தங்களுக்குத் தேவையில்லை யாயின் எனக்கு இவளை மணமுடித்துத் தாருங்கள்” என்று கேட்டார்.72
5132. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண்மணி அவர்களிடம் வந்து தம்மை மணந்துகொள்ளுமாறு கோரினார். அவளைவிட்டுத் தமது பார்வையைத் தாழ்த்திக்கொண்ட நபி (ஸல்) அவர்கள், பிறகு பார்வையை உயர்த்தினார்கள். ஆனால், அந்தப் பெண்ணை நபி (ஸல்) அவர்கள் (மணந்துகொள்ள) விரும்ப வில்லை.

அப்போது, நபியவர்களின் தோழர் களில் ஒருவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பெண்ணை எனக்கு மண முடித்து வையுங்கள்!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மஹ்ராகச் செலுத்த) உன்னிடம் (பொருள்) ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘என்னிடம் ஏதும் இல்லை” என்று பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும்பால் ஆன மோதிரம்கூட இல்லையா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘(இரும்பு) மோதிரம் கூட இல்லை. ஆயினும், (நான் கீழாடை யாக உடுத்திக்கொள்ளும்) என்னுடைய இந்தப் போர்வையை இரண்டாகக் கிழித்து அவளுக்குப் பாதியைக் கொடுத்துவிட்டு மீதிப் பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை! குர்ஆனில் ஏதேனும் (உமக்கு மனனம்) உண்டா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘ஆம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அப்படியானால்) நீர் செல்லலாம்! உம்மிடம் (மனப்பாடமாக) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துவைத்தேன்” என்றார்கள்.74

அத்தியாயம் : 67
5133. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَهَا وَهْىَ بِنْتُ سِتِّ سِنِينَ، وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهْىَ بِنْتُ تِسْعٍ، وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا.
பாடம்: 39 ஒருவர் தம் சிறு பிள்ளைகளுக்கு மணமுடித்துவைப்பது (செல்லும்). ஏனெனில், அல்லாஹ் (65:4ஆவது வசனத்தில்), ‘‘பருவம் அடையாத பெண்ணின் காத்திருப்புக் காலம் (இத்தா) மூன்று மாதம்” என்று கூறுகின்றான்.75
5133. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர் களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவி யாக) வாழ்ந்தேன்.76

அத்தியாயம் : 67
5134. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَهَا وَهْىَ بِنْتُ سِتِّ سِنِينَ، وَبَنَى بِهَا وَهْىَ بِنْتُ تِسْعِ سِنِينَ. قَالَ هِشَامٌ وَأُنْبِئْتُ أَنَّهَا كَانَتْ عِنْدَهُ تِسْعَ سِنِينَ.
பாடம்: 40 தந்தை தம் மகளைத் தலைவருக்கு மணமுடித்து வைப்பது உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் (என் மகள்) ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். நான் (அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தேன்.77
5134. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது, என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது, என்னுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒன்பது வருடங்கள் வாழ்ந்தார்கள் என்று எனக்குச் செய்தி எட்டியது.

அத்தியாயம் : 67
5135. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي وَهَبْتُ مِنْ نَفْسِي. فَقَامَتْ طَوِيلاً فَقَالَ رَجُلٌ زَوِّجْنِيهَا، إِنْ لَمْ تَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ. قَالَ "" هَلْ عِنْدَكَ مِنْ شَىْءٍ تُصْدِقُهَا "". قَالَ مَا عِنْدِي إِلاَّ إِزَارِي. فَقَالَ "" إِنْ أَعْطَيْتَهَا إِيَّاهُ جَلَسْتَ لاَ إِزَارَ لَكَ، فَالْتَمِسْ شَيْئًا "". فَقَالَ مَا أَجِدُ شَيْئًا. فَقَالَ "" الْتَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدِ "". فَلَمْ يَجِدْ. فَقَالَ "" أَمَعَكَ مِنَ الْقُرْآنِ شَىْءٌ "". قَالَ نَعَمْ سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا لِسُوَرٍ سَمَّاهَا. فَقَالَ "" زَوَّجْنَاكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "".
பாடம் : 41 (காப்பாளர் இல்லாதோருக்கு) ஆட்சியாளரே காப்பாளராவார். ஏனெனில், உம்முடன் (மனப் பாடமாக) உள்ள குர்ஆன் அத்தி யாயங்களுக்காக இவளை உமக்கு நான் மணமுடித்துக்கொடுத்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
5135. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்” என்று கூறிவிட்டு, நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘தங்களுக்கு இவள் அவசியமில்லையானால், இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘இவளுக்கு மஹ்ராகக் கொடுக்க உன்னிடம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘எனது கீழங்கியைத் தவிர என்னிடம் வேறொன்றுமில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவளுக்கு நீர் இதைக் கொடுத்துவிட்டால், கீழங்கியில்லாமல் நீர் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். ஆகவே, (இவளுக்கு மஹ்ர் செலுத்த) ஏதேனும் தேடுக!” என்றார்கள்.

‘‘அவர் (தேடிவிட்டு வந்து) ‘‘ஒன்றும் கிடைக்கவில்லை” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும் பாலான ஒரு மோதிரத்தையாவது தேடுக” என்று சொன்னார்கள். அப்போதும் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம்” எனச் சில அத்தியாயங்களின் பெயரைக் குறிப்பிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத்தந்தேன்” என்று கூறினார்கள்.78

அத்தியாயம் : 67
5136. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ وَلاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا قَالَ "" أَنْ تَسْكُتَ "".
பாடம்: 42 தந்தையோ, மற்ற காப்பாளரோ கன்னிப் பெண்ணுக்கோ, கன்னி கழிந்த பெண்ணுக்கோ அவர்களின் விருப்பமில்லாமல் மணமுடித்து வைக்கக் கூடாது.
5136. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிகழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.

மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று சொன்னார்கள்.79


அத்தியாயம் : 67
5137. حَدَّثَنَا عَمْرُو بْنُ الرَّبِيعِ بْنِ طَارِقٍ، قَالَ أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَبِي عَمْرٍو، مَوْلَى عَائِشَةَ عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْبِكْرَ تَسْتَحِي. قَالَ "" رِضَاهَا صَمْتُهَا "".
பாடம்: 42 தந்தையோ, மற்ற காப்பாளரோ கன்னிப் பெண்ணுக்கோ, கன்னி கழிந்த பெண்ணுக்கோ அவர்களின் விருப்பமில்லாமல் மணமுடித்து வைக்கக் கூடாது.
5137. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! கன்னிப் பெண் வெட்கப்படுவாளே?” என்று கேட்டேன்.

அதற்கு, ‘‘அவளது மௌனமே சம்மதம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 67
5138. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، وَمُجَمِّعٍ، ابْنَىْ يَزِيدَ بْنِ جَارِيَةَ عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الأَنْصَارِيَّةِ، أَنَّ أَبَاهَا، زَوَّجَهَا وَهْىَ ثَيِّبٌ، فَكَرِهَتْ ذَلِكَ فَأَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَرَدَّ نِكَاحَهُ.
பாடம்: 43 ஒருவர் தம்முடைய மகளுக்கு அவளது விருப்பமின்றி மண முடித்து வைத்தால், அத்திருமணம் செல்லாது.
5138. கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்ப மிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 67
5139. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَزِيدُ، أَخْبَرَنَا يَحْيَى، أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، حَدَّثَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ وَمُجَمِّعَ بْنَ يَزِيدَ حَدَّثَاهُ أَنَّ رَجُلاً يُدْعَى خِذَامًا أَنْكَحَ ابْنَةً لَهُ. نَحْوَهُ.
பாடம்: 43 ஒருவர் தம்முடைய மகளுக்கு அவளது விருப்பமின்றி மண முடித்து வைத்தால், அத்திருமணம் செல்லாது.
5139. காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்களும், முஜம்மிஉ பின் யஸீத் (ரஹ்) அவர்களும், ‘‘கிதாம் என்றழைக்கப்படும் ஒருவர் தம்முடைய புதல்வி ஒருவரை மணமுடித்து வைத்தார்” என்று ஆரம்பித்து மேற்கண்ட ஹதீஸைப் போலவே அறிவித்தனர்.

அத்தியாயம் : 67
5140. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَ لَهَا يَا أُمَّتَاهْ {وَإِنْ خِفْتُمْ أَنْ لاَ تُقْسِطُوا فِي الْيَتَامَى} إِلَى {مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ} قَالَتْ عَائِشَةُ يَا ابْنَ أُخْتِي هَذِهِ الْيَتِيمَةُ تَكُونُ فِي حَجْرِ وَلِيِّهَا، فَيَرْغَبُ فِي جَمَالِهَا وَمَالِهَا، وَيُرِيدُ أَنْ يَنْتَقِصَ مِنْ صَدَاقِهَا، فَنُهُوا عَنْ نِكَاحِهِنَّ. إِلاَّ أَنْ يُقْسِطُوا لَهُنَّ فِي إِكْمَالِ الصَّدَاقِ وَأُمِرُوا بِنِكَاحِ مَنْ سِوَاهُنَّ مِنَ النِّسَاءِ، قَالَتْ عَائِشَةُ اسْتَفْتَى النَّاسُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ ذَلِكَ فَأَنْزَلَ اللَّهُ {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ} إِلَى {وَتَرْغَبُونَ} فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمْ فِي هَذِهِ الآيَةِ أَنَّ الْيَتِيمَةَ إِذَا كَانَتْ ذَاتَ مَالٍ وَجَمَالٍ، رَغِبُوا فِي نِكَاحِهَا وَنَسَبِهَا وَالصَّدَاقِ، وَإِذَا كَانَتْ مَرْغُوبًا عَنْهَا فِي قِلَّةِ الْمَالِ وَالْجَمَالِ، تَرَكُوهَا وَأَخَذُوا غَيْرَهَا مِنَ النِّسَاءِ ـ قَالَتْ ـ فَكَمَا يَتْرُكُونَهَا حِينَ يَرْغَبُونَ عَنْهَا، فَلَيْسَ لَهُمْ أَنْ يَنْكِحُوهَا إِذَا رَغِبُوا فِيهَا، إِلاَّ أَنْ يُقْسِطُوا لَهَا وَيُعْطُوهَا حَقَّهَا الأَوْفَى مِنَ الصَّدَاقِ.
பாடம்: 44 அநாதைப் பெண்ணுக்கு மண முடித்து வைப்பது (செல்லும்). ஏனெனில், அல்லாஹ், ‘‘நீங்கள் அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதிசெலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மண முடித்துக்கொள்ளுங்கள்” (4:3) என்று கூறுகின்றான். மேலும், ஒருவர் காப்பாளரிடம், ‘‘(உமது பொறுப்பிலுள்ள) இன்ன பெண்ணை எனக்கு மணமுடித்துவை” என்று கூறினார். அப்போது காப்பாளர் சிறிது நேரம் பொறுத்திருந்தார். அல்லது ‘‘(மஹ்ர் செலுத்த) உன்னிடம் என்ன உள்ளது?” என்று கேட்டார். பெண் கேட்டவர் என்னிடம் இன்ன இன்னது உள்ளது என்று கூறினார். அல்லது அவர்கள் இருவருமே (சிறிது நேரம்) அமைதியாக இருந்தனர். பிறகு காப்பாளர், ‘‘அவளை உனக்கு மணமுடித்துத்தந்தேன்” என்று கூறினால், இத்திருமணம் செல்லும். இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து சஹ்ல் (ரலி) அவர்களின் அறிவிப்பு வந்துள்ளது.80
5140. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘என் அருமைத் தாயார் அவர்களே! (என விளித்து,) ‘அநாதை(ப் பெண்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக்கொள் ளுங்கள்.’ என்று தொடங்கும் (4:3ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனம் குறிப்பிடும்) அநாதைப் பெண் ஒரு காப்பாளரின் பொறுப்பில் இருந்துவருவாள். அவரோ, இவளது அழகிலும் செல்வத்திலும் ஆசை(ப்பட்டு இவளைத் திருமணம் செய்ய விருப்பம்)கொள்வார். ஆனால், அவளுக்குரிய மஹ்ரைக் குறைத்திட நினைப்பார். அப்போதுதான் ‘நிறைவான மஹ்ரைத் தந்து அவர்களுடன் நீதியாக நடந்துகொள்ளாமல், அவர்களை நீங்கள் மணக்கக் கூடாது’ என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. (அநாதையல்லாத) மற்றப் பெண்களை மணந்துகொள்ளுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதற்குப் பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தீர்ப்புக் கேட்டனர். அப்போது அல்லாஹ் ‘‘(நபியே!) பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி உம்மிடம் அவர்கள் கோருகின்றனர்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான்.

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறியிருப்பதன் கருத்தாவது:

ஓர் அநாதைப் பெண்ணிடம் செல்வமும் அழகுமிருந்தால் அவளை மணந்துகொள்ளவும் அவளுடன் உறவு முறையை ஏற்படுத்திக்கொள்ளவும் ‘மஹ்ர்’ (மணக்கொடை) கொடுக்கவும் மக்கள் முன்வந்தனர். அதே சமயம், அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாய் இருந்தால் அவளை விட்டுவிட்டு வேறு பெண்களை மணந்துகொண்டனர்.

அவளை விரும்பாதபோது (மணந்து கொள்ளாமல்) விட்டுவிடுவதைப் போன்று அவளை அவர்கள் விரும்பும்போது மஹ்ர் விஷயத்தில் அவளது உரிமையை நிறைவாக வழங்கி, அவளிடம் நீதியுடன் நடந்துகொண்டால் ஒழிய அவளை மணந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லை.81

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 67
5141. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلٍ، أَنَّ امْرَأَةً، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ "" مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ "". فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا. قَالَ "" مَا عِنْدَكَ "". قَالَ مَا عِنْدِي شَىْءٌ. قَالَ "" أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ "". قَالَ مَا عِنْدِي شَىْءٌ. قَالَ "" فَمَا عِنْدَكَ مِنَ الْقُرْآنِ "". قَالَ عِنْدِي كَذَا وَكَذَا. قَالَ "" فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "".
பாடம்: 45 பெண்கேட்பவர் காப்பாளரிடம், ‘‘இன்ன பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்!” என்று கேட்க, அதற்கு அவர், ‘இன்னின்னவற்றுக்குப் பகரமாக உனக்கு அவளை நான் மணமுடித்து வைத்தேன்’ என்று கூறினால் திருமணம் செல்லும். மணமகனிடம் காப்பாளர் ‘இதில் உமக்கு விருப்பமுண்டா’ என்றோ, அல்லது ‘சம்மதமா’ என்றோ கேட்காவிட்டாலும் சரியே!
5141. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்துகொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை’ எனக் கூறினார்கள். அப்போது ஒருமனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?” என்று கேட்டார்கள்.

அவர், ‘‘என்னிடம் எதுவுமில்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!” என்று சொன்னார்கள். அவர், ‘‘என்னிடம் ஏதுமில்லை” என்று பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங் களுக்காக இவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன்” என்று சொன் னார்கள்.82

அத்தியாயம் : 67
5142. حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يُحَدِّثُ أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَلاَ يَخْطُبَ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، حَتَّى يَتْرُكَ الْخَاطِبُ قَبْلَهُ، أَوْ يَأْذَنَ لَهُ الْخَاطِبُ.
பாடம்: 46 தம் சகோதர (இஸ்லாமிய)ன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மற்றவர் பெண்கேட்கலாகாது. ஒன்று, அவர் மணந்து கொள்வார்; அல்லது கைவிட்டுவிடுவார். (அதுவரை இவர் பொறுத்திருக்க வேண்டும்).
5142. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ஒருவர் தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண்பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு (தமக்காக அவளைப்) பெண் பேசலாகாது. தமக்குமுன் பெண்கேட்டவர் அதைக் கைவிடும்வரை; அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும்வரை (இவர் பொறுத்திருக்க வேண்டும்) என்றும் சொன்னார்கள்.


அத்தியாயம் : 67