5083. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا صَالِحُ بْنُ صَالِحٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا الشَّعْبِيُّ، قَالَ حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَيُّمَا رَجُلٍ كَانَتْ عِنْدَهُ وَلِيدَةٌ فَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا، وَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا، ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ، وَأَيُّمَا رَجُلٍ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ وَآمَنَ بِي فَلَهُ أَجْرَانِ، وَأَيُّمَا مَمْلُوكٍ أَدَّى حَقَّ مَوَالِيهِ وَحَقَّ رَبِّهِ فَلَهُ أَجْرَانِ "". قَالَ الشَّعْبِيُّ خُذْهَا بِغَيْرِ شَىْءٍ قَدْ كَانَ الرَّجُلُ يَرْحَلُ فِيمَا دُونَهُ إِلَى الْمَدِينَةِ. وَقَالَ أَبُو بَكْرٍ عَنْ أَبِي حَصِينٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَعْتَقَهَا ثُمَّ أَصْدَقَهَا "".
பாடம்: 13 அடிமைப் பெண்களை அமர்த்திக் கொள்வதும் ஒருவர் தம் அடிமைப் பெண்ணை விடுதலை செய்து மணமுடித்துக்கொள்வதும்
5083. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதரிடம் அடிமை(பணி)ப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்பித்து, அதையும் நன்கு கற்பித்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதையும் அழகுற (நளினமாகக்) கற்பித்து, பிறகு அவளை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலையும் செய்து, திருமணமும் செய்துகொண்டால் அவருக்கு (விடுதலை செய்தது மற்றும் மணந்துகொண்டதற்காக) இரு நற்பலன்கள் கிடைக்கும்.

வேதக்காரர்களில் உள்ள ஒரு மனிதர் தம்முடைய (சமூகத்திற்கு நியமிக்கப் பட்டிருந்த) இறைத்தூதரையும் நம்பிக்கை கொண்டு என்னையும் (இறைத்தூதரென) நம்பிக்கை கொள்வாராயின் அவருக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும்.

மேலும், ஓர் அடிமை தன் உரிமையாள ருக்குச் செய்ய வேண்டிய கடமையையும் தன் இறைவனின் கடமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவாராயின் அவருக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சாலிஹ் பின் சாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

(இந்த நபிமொழியை எனக்கு அறிவித்த) ‘அபீ (ரஹ்) அவர்கள், ‘‘பிரதிபலன் ஏதுமின்றி (உங்களுக்கு நான் அறிவித்த) இவற்றைப் பெற்றுக்கொள் ளுங்கள். இதைவிடச் சிறிய விஷயங்களை அறிந்துகொள்வதற்காகவெல்லாம் சிலர் மதீனாவரை பயணம் சென்றதுண்டு” என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் (அடிமைப் பெண்ணின் எசமான் குறித்து), ‘‘அவளை அவர் விடுதலை செய்து, பின்னர் அவளுக்கு மணக்கொடையும் கொடுத்(து மணமுடித்)தால் (...இரு நற்பலன்கள் உண்டு)” என்று காணப்படுகிறது.19


அத்தியாயம் : 67
5084. حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا سُلَيْمَانُ عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ {قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم} "" لَمْ يَكْذِبْ إِبْرَاهِيمُ إِلاَّ ثَلاَثَ كَذَبَاتٍ بَيْنَمَا إِبْرَاهِيمُ مَرَّ بِجَبَّارٍ وَمَعَهُ سَارَةُ ـ فَذَكَرَ الْحَدِيثَ ـ فَأَعْطَاهَا هَاجَرَ قَالَتْ كَفَّ اللَّهُ يَدَ الْكَافِرِ وَأَخْدَمَنِي آجَرَ "". قَالَ أَبُو هُرَيْرَةَ فَتِلْكَ أُمُّكُمْ يَا بَنِي مَاءِ السَّمَاءِ.
பாடம்: 13 அடிமைப் பெண்களை அமர்த்திக் கொள்வதும் ஒருவர் தம் அடிமைப் பெண்ணை விடுதலை செய்து மணமுடித்துக்கொள்வதும்
5084. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று முறையே உண்மைக்குப் புறம்பாகப் பேசினார்கள். தம்முடன் (துணைவியார்) ‘சாரா’ இருக்க, இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு சர்வாதிகார அரசனைக் கடந்து சென்றார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, இந்த ஹதீஸை முழுமையாக அறிவித்தார்கள். அதில், ‘‘ஹாஜர் அவர்களை, சாரா அவர்களுக்கு (பணியாளாகக்) கொடுத்தான்” என்றும், ‘‘அல்லாஹ் அந்த இறைமறுப்பாள(னான அரச)னின் கரத்தைத் தடுத்து, ஆஜரை எனக்குப் பணியாளராகக் கொடுத்தான்” என சாரா கூறினார்கள் என்றும் காணப் படுகிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறி னார்கள்: வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜர்)தான் உங்கள் அன்னை.20

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 67
5085. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلاَثًا يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ بِنْتِ حُيَىٍّ فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ فَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلاَ لَحْمٍ، أُمِرَ بِالأَنْطَاعِ فَأَلْقَى فِيهَا مِنَ التَّمْرِ وَالأَقِطِ وَالسَّمْنِ فَكَانَتْ وَلِيمَتَهُ، فَقَالَ الْمُسْلِمُونَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ أَوْ مِمَّا مَلَكَتْ يَمِينُهُ، فَقَالُوا إِنْ حَجَبَهَا فَهْىَ مِنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، وَإِنْ لَمْ يَحْجُبْهَا فَهْىَ مِمَّا مَلَكَتْ يَمِينُهُ، فَلَمَّا ارْتَحَلَ وَطَّى لَهَا خَلْفَهُ وَمَدَّ الْحِجَابَ بَيْنَهَا وَبَيْنَ النَّاسِ.
பாடம்: 13 அடிமைப் பெண்களை அமர்த்திக் கொள்வதும் ஒருவர் தம் அடிமைப் பெண்ணை விடுதலை செய்து மணமுடித்துக்கொள்வதும்
5085. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள ‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில் ‘ஸஃபிய்யா பின்த் ஹுயை’ அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் மணவிருந்துக்கு (வலீமா) முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ இறைச்சியோ இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தோல் விரிப்பைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டு (அவ்வாறே அது விரிக்கப்பட்டபோது) அதில் பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் ஆகியவற்றை இட்டார்கள் (‘ஹைஸ்’ எனும் எளிய உணவு துரிதமாகத் தயாரானது). இதுவே நபி (ஸல்) அவர்களின் மணவிருந்தாக (வலீமா) அமைந்தது.

அப்போது முஸ்லிம்கள், ‘‘ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இறைநம்பிக்கையாளர் களின் அன்னை (நபியவர்களின் துணைவி)யரில் ஒருவரா? அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?” என்று பேசிக்கொண்டனர்.

அப்போது ‘‘ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஹிஜாப்’ -திரையிட்(டுக் கொள்ளும்படி கட்டளை’)ட்டால், அவர் இறைநம்பிக்கை யாளர்களின் அன்னையரில் (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில்) ஒருவர்; அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்” என்று (மக்களில் சிலர்) கூறினர்.

நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கை யமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்தபிறகு) ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கும் மக்களுக்குமிடையே திரையிட்டு இழுத்து (மூடி)விட்டார்கள்.21

அத்தியாயம் : 67
5086. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، وَشُعَيْبِ بْنِ الْحَبْحَابِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْتَقَ صَفِيَّةَ، وَجَعَلَ عِتْقَهَا صَدَاقَهَا.
பாடம்: 14 ஒருவர் தம் அடிமைப்பெண்ணை விடுதலை செய்வதையே மணக்கொடை (மஹ்ர்) ஆக்குவது
5086. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது.

(கைபர் போர்க் கைதியான) ஸஃபிய்யாவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடுதலை செய்தார்கள். மேலும், அவர்களை விடுதலை செய்ததையே மணக்கொடையாக ஆக்கி (தாமே அவர்களை மணந்து)கொண்டார்கள்.22

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 67
5087. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ جِئْتُ أَهَبُ لَكَ نَفْسِي قَالَ فَنَظَرَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَعَّدَ النَّظَرَ فِيهَا وَصَوَّبَهُ ثُمَّ طَأْطَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَأْسَهُ فَلَمَّا رَأَتِ الْمَرْأَةُ أَنَّهُ لَمْ يَقْضِ فِيهَا شَيْئًا جَلَسَتْ فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَا. فَقَالَ "" وَهَلْ عِنْدَكَ مِنْ شَىْءٍ "". قَالَ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ "" اذْهَبْ إِلَى أَهْلِكَ فَانْظُرْ هَلْ تَجِدُ شَيْئًا "". فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لاَ وَاللَّهِ مَا وَجَدْتُ شَيْئًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" انْظُرْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ "". فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ وَلَكِنْ هَذَا إِزَارِي ـ قَالَ سَهْلٌ مَا لَهُ رِدَاءٌ فَلَهَا نِصْفُهُ ـ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا تَصْنَعُ بِإِزَارِكَ إِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَىْءٌ وَإِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ شَىْءٌ "". فَجَلَسَ الرَّجُلُ حَتَّى إِذَا طَالَ مَجْلِسُهُ قَامَ فَرَآهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُوَلِّيًا فَأَمَرَ بِهِ فَدُعِيَ فَلَمَّا جَاءَ قَالَ "" مَاذَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "". قَالَ مَعِي سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا عَدَّدَهَا. فَقَالَ "" تَقْرَؤُهُنَّ عَنْ ظَهْرِ قَلْبِكَ "". قَالَ نَعَمْ. قَالَ "" اذْهَبْ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "".
பாடம்: 15 ஏழைக்கு மணமுடித்து வைத்தல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (ஆணாயினும் பெண்ணாயினும்) உங்களில் எவருக்கு வாழ்க்கைத் துணை இல்லையோ அவர்களுக்குத் திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே வாழ்க்கைத் துணையில்லாத) உங்கள் அடிமைகளிலுள்ள நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தால், அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு அவர்களைச் சீமானாக்கி வைப்பான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக விசாலமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கு அறிந்தோனும் ஆவான். (24:32)
5087. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள) வந்துள்ளேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கி தம் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள். பிறகு தமது தலையைத் தொங்கவிட்டுக்கொண்டார்கள்.

தமது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்து வையுங்கள்” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) ‘‘(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்று பதில் சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடைய குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!” என்றார்கள்.

அவர் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘இரும்பாலான ஒரு மோதிரமாவது (கிடைக்குமா எனப்)பார்!” என்றார்கள்.

அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணை யாக! (ஒன்றும்) கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம்கூடக் கிடைக்கவில்லை; ஆனால், இதோ இந்த எனது கீழங்கிதான் உள்ளது” என்றார்.

-அறிவிப்பாளர் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல் துண்டுகூட இல்லை; அதனால்தான் தமது கீழங்கியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.-

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமது கீழங்கியை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? அந்த கீழங்கியை நீ உடுத்திக்கொண்டால் அவள் மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக்கொண்டால் உன்மீது அதில் ஏதும் இருக்காது. (உமது கீழங்கியைக் கொடுத்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்?)” என்று கேட்டார்கள்.

பிறகு அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது அவரை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்கள்.

அவ்வாறே அவர் அழைத்துவரப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?” என்று கேட்டார்கள்.

அவர், ‘‘(குர்ஆனில்) இன்ன இன்ன அத்தியாயங்கள் என்னுடன் உள்ளன” என்று எண்ணி எண்ணிச் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘அவற்றை நீ மனப்பாடமாக ஓதுவாயா?” என்று கேட்டார்கள். ‘‘ஆம் (ஓதுவேன்)” என்று அவர் பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!” என்று சொன்னார்கள்.23

அத்தியாயம் : 67
5088. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ أَبَا حُذَيْفَةَ بْنَ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ،، وَكَانَ، مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم تَبَنَّى سَالِمًا، وَأَنْكَحَهُ بِنْتَ أَخِيهِ هِنْدَ بِنْتَ الْوَلِيدِ بْنِ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ وَهْوَ مَوْلًى لاِمْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، كَمَا تَبَنَّى النَّبِيُّ صلى الله عليه وسلم زَيْدًا، وَكَانَ مَنْ تَبَنَّى رَجُلاً فِي الْجَاهِلِيَّةِ دَعَاهُ النَّاسُ إِلَيْهِ وَوَرِثَ مِنْ مِيرَاثِهِ حَتَّى أَنْزَلَ اللَّهُ {ادْعُوهُمْ لآبَائِهِمْ} إِلَى قَوْلِهِ {وَمَوَالِيكُمْ} فَرُدُّوا إِلَى آبَائِهِمْ، فَمَنْ لَمْ يُعْلَمْ لَهُ أَبٌ كَانَ مَوْلًى وَأَخًا فِي الدِّينِ، فَجَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلِ بْنِ عَمْرٍو الْقُرَشِيِّ ثُمَّ الْعَامِرِيِّ ـ وَهْىَ امْرَأَةُ أَبِي حُذَيْفَةَ ـ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا نَرَى سَالِمًا وَلَدًا وَقَدْ أَنْزَلَ اللَّهُ فِيهِ مَا قَدْ عَلِمْتَ فَذَكَرَ الْحَدِيثَ.
பாடம்: 16 (மணமக்களிடையே) மார்க்கப் பொருத்தம் (பார்த்தல்)24 அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், (ஒருதுளி) நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு, (பிறப்பால் வந்த) இரத்த உறவையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவையும் அவன் ஏற்படுத்தினான். உம்முடைய இறைவன் பெரும் ஆற்றல்மிக்கவனாய் இருக்கின்றான். (25:54)
5088. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்கள், (பாரசீகரான மஅகில் என்பாரின் புதல்வர்) சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்கள். மேலும், அவருக்குத் தம் சகோதரர் வலீத் பின் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர்.25

நபி (ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டதுபோல் (சாலிமை அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண் டார்கள்.)

மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும், அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது.

ஆகவே, ‘‘நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களுடைய (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள்” எனும் (33:5ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளும்வரையில் (இந்த வழக்கம் நீடித்தது).

பின்னர், வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களுடைய சொந்தத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதரராகவும் ஆனார்.

பிறகு, அபூஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்களுடைய துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சாலிமை (எங்களுடைய) பிள்ளையாகவே கருதிக் கொண்டிருந்தோம். (வளர்ப்பு மகனான) அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (33:5ஆவது) வசனத்தை அருளிவிட்டான்” என்று தொடங்கும் ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல் யமான் பின் ஹகம் (ரஹ்) அவர்கள் முழுமையாகக்) கூறினார்கள்.26


அத்தியாயம் : 67
5089. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ فَقَالَ لَهَا "" لَعَلَّكِ أَرَدْتِ الْحَجَّ "". قَالَتْ وَاللَّهِ لاَ أَجِدُنِي إِلاَّ وَجِعَةً. فَقَالَ لَهَا "" حُجِّي وَاشْتَرِطِي، قُولِي اللَّهُمَّ مَحِلِّي حَيْثُ حَبَسْتَنِي "". وَكَانَتْ تَحْتَ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ.
பாடம்: 16 (மணமக்களிடையே) மார்க்கப் பொருத்தம் (பார்த்தல்)24 அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், (ஒருதுளி) நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு, (பிறப்பால் வந்த) இரத்த உறவையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவையும் அவன் ஏற்படுத்தினான். உம்முடைய இறைவன் பெரும் ஆற்றல்மிக்கவனாய் இருக்கின்றான். (25:54)
5089. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘நீ ஹஜ் செய்ய விரும்பு கிறாய் போலும்!” என்றார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்” என்று சொன்னார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘‘நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக ‘இஹ்ராம்’ கட்டி, இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று சொல்லிவிடு எனக் கூறினார்கள்.

ளுபாஆ (ரலி) அவர்கள் மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஆவார்.27


அத்தியாயம் : 67
5090. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" تُنْكَحُ الْمَرْأَةُ لأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ "".
பாடம்: 16 (மணமக்களிடையே) மார்க்கப் பொருத்தம் (பார்த்தல்)24 அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், (ஒருதுளி) நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு, (பிறப்பால் வந்த) இரத்த உறவையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவையும் அவன் ஏற்படுத்தினான். உம்முடைய இறைவன் பெரும் ஆற்றல்மிக்கவனாய் இருக்கின்றான். (25:54)
5090. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளது செல்வத்திற்காக.

2. அவளது குடும்பப் பாரம்பரியத் திற்காக.

3. அவளது அழகிற்காக.

4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 67
5091. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا تَقُولُونَ فِي هَذَا "". قَالُوا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ يُسْتَمَعَ. قَالَ ثُمَّ سَكَتَ فَمَرَّ رَجُلٌ مِنَ فُقَرَاءِ الْمُسْلِمِينَ فَقَالَ "" مَا تَقُولُونَ فِي هَذَا "". قَالُوا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لاَ يُسْتَمَعَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا "".
பாடம்: 16 (மணமக்களிடையே) மார்க்கப் பொருத்தம் (பார்த்தல்)24 அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், (ஒருதுளி) நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு, (பிறப்பால் வந்த) இரத்த உறவையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவையும் அவன் ஏற்படுத்தினான். உம்முடைய இறைவன் பெரும் ஆற்றல்மிக்கவனாய் இருக்கின்றான். (25:54)
5091. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘‘இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார் கள். தோழர்கள், ‘‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்” என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?”என்று கேட்டார்கள். தோழர்கள், ‘‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும்விட) இந்த ஏழையே மேலானவர்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 67
5092. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ {وَإِنْ خِفْتُمْ أَنْ لاَ تُقْسِطُوا فِي الْيَتَامَى} قَالَتْ يَا ابْنَ أُخْتِي هَذِهِ الْيَتِيمَةُ تَكُونُ فِي حَجْرِ وَلِيِّهَا فَيَرْغَبُ فِي جَمَالِهَا وَمَالِهَا، وَيُرِيدُ أَنْ يَنْتَقِصَ صَدَاقَهَا، فَنُهُوا عَنْ نِكَاحِهِنَّ إِلاَّ أَنْ يُقْسِطُوا فِي إِكْمَالِ الصَّدَاقِ، وَأُمِرُوا بِنِكَاحِ مَنْ سِوَاهُنَّ، قَالَتْ وَاسْتَفْتَى النَّاسُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ} إِلَى {وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ} فَأَنْزَلَ اللَّهُ لَهُمْ أَنَّ الْيَتِيمَةَ إِذَا كَانَتْ ذَاتَ جَمَالٍ وَمَالٍ رَغِبُوا فِي نِكَاحِهَا وَنَسَبِهَا فِي إِكْمَالِ الصَّدَاقِ، وَإِذَا كَانَتْ مَرْغُوبَةً عَنْهَا فِي قِلَّةِ الْمَالِ وَالْجَمَالِ تَرَكُوهَا وَأَخَذُوا غَيْرَهَا مِنَ النِّسَاءِ، قَالَتْ فَكَمَا يَتْرُكُونَهَا حِينَ يَرْغَبُونَ عَنْهَا فَلَيْسَ لَهُمْ أَنْ يَنْكِحُوهَا إِذَا رَغِبُوا فِيهَا إِلاَّ أَنْ يُقْسِطُوا لَهَا وَيُعْطُوهَا حَقَّهَا الأَوْفَى فِي الصَّدَاقِ.
பாடம்: 17 பொருளாதாரத்தில் பொருத்தம் பார்ப் பதும், ஏழைக்குப் பணக்காரியை மணமுடித்துவைப்பதும்
5092. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால்...” எனும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண் தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்ந்துவருகின்ற அநாதைப் பெண் ஆவாள்.

அப்பால் அவளது அழகையும் செல்வத்தையும் கண்டு ஆசைப்பட்டு (காப்பாளரான) அவர் (அவளை மணமுடித்துக்கொள்ள) விரும்புகிறார். (ஆனால்) அவளுக்குரிய (தகுதியான) மணக்கொடையை (மஹ்ரை)க் குறைத்துவிட விரும்புகிறார். இத்தகைய பெண்களுக்கு உரிய மஹ்ரை நிறைவாகச் செலுத்தும் விஷயத்தில் நீதி தவறாது நடந்துகொண்டால் தவிர, அவர்களை மணந்துகொள்ளக் கூடாது என்று (காப்பாளர்களுக்கு இவ்வசனத்தின் மூலம்) தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்தப் பெண்கள் அல்லாத (மனதுக்குப் பிடித்த) இதரப் பெண்களை மணமுடித்துக்கொள்ளும்படியும் கட்டளையிடப்பட்டது.

இதற்குப் பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் அப்போது, ‘‘பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி (நபியே!) உங்களிடம் கோருகின்றனர்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான். அதாவது ‘‘ஓர் அநாதைப் பெண் அழகும் செல்வமும் உள்ளவளாக இருந்தால் நிறைவான மஹ்ரை (மணக்கொடையை) அளித்து அவளை மணந்துகொள்ளவும் அவளுடன் உறவுமுறையை ஏற்படுத்திக்கொள்ளவும் காப்பாளர்கள் விரும்புகின்றனர்.

(அதே சமயம்) அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருப்பதால் விரும்பத் தகாதவளாக இருப்பின், அவளை விட்டுவிட்டு வேறு பெண்களைப் பிடித்துக்கொள்கின்றனர்’ என்று அல்லாஹ் அவர்களுக்கு அருளினான்.

‘‘அவர்கள் அப்பெண்ணை விரும்பாத நேரம் (மணந்துகொள்ளாமல்) விட்டு விடுவதுபோல், அவளை விரும்பும் நேரம் மஹ்ர் விஷயத்தில் அவளது உரிமையை நிறைவாக வழங்கி, அவளிடம் நீதியுடன் நடந்துகொண்டாலே ஒழிய அவளை மணந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லை” என்று இவ் வசனத்தின் மூலம் இறைவன் தெரிவித் தான்.28

அத்தியாயம் : 67
5093. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ، وَسَالِمٍ، ابْنَىْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الشُّؤْمُ فِي الْمَرْأَةِ وَالدَّارِ وَالْفَرَسِ "".
பாடம்: 18 பெண்ணின் அபசகுனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடைய துணைவியரிலும் பிள்ளைகளிலும் (உங்களை இறைவழியிலிருந்து திருப்பிவிடும்) பகைவர்கள் உங்களுக்கு உள்ளனர். (64:14)
5093. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில்தான் (இருக்க முடியும்).

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.29

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 67
5094. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْعَسْقَلاَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ ذَكَرُوا الشُّؤْمَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنْ كَانَ الشُّؤْمُ فِي شَىْءٍ فَفِي الدَّارِ وَالْمَرْأَةِ وَالْفَرَسِ "".
பாடம்: 18 பெண்ணின் அபசகுனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடைய துணைவியரிலும் பிள்ளைகளிலும் (உங்களை இறைவழியிலிருந்து திருப்பிவிடும்) பகைவர்கள் உங்களுக்கு உள்ளனர். (64:14)
5094. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் மக்கள் அபசகுனம் குறித்துப் பேசினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அப சகுனம் எதிலேனும் இருக்குமானால், வீட்டிலும் பெண்ணிலும் குதிரையிலும்தான் இருக்கும்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 67
5095. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنْ كَانَ فِي شَىْءٍ فَفِي الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالْمَسْكَنِ "".
பாடம்: 18 பெண்ணின் அபசகுனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடைய துணைவியரிலும் பிள்ளைகளிலும் (உங்களை இறைவழியிலிருந்து திருப்பிவிடும்) பகைவர்கள் உங்களுக்கு உள்ளனர். (64:14)
5095. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அபசகுனம் எனும்) அது எதிலாவது இருக்குமானால் குதிரையிலும் பெண்ணி லும் குடியிருப்பிலும்தான்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 67
5096. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ "".
பாடம்: 18 பெண்ணின் அபசகுனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடைய துணைவியரிலும் பிள்ளைகளிலும் (உங்களை இறைவழியிலிருந்து திருப்பிவிடும்) பகைவர்கள் உங்களுக்கு உள்ளனர். (64:14)
5096. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பெண்களைத் திருப்திப்படுத்துவ தற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களைவிட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச்செல்லவில்லை.

இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 67
5097. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ فِي بَرِيرَةَ ثَلاَثُ سُنَنٍ عَتَقَتْ فَخُيِّرَتْ، وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". وَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَبُرْمَةٌ عَلَى النَّارِ، فَقُرِّبَ إِلَيْهِ خُبْزٌ وَأُدْمٌ مِنْ أُدْمِ الْبَيْتِ فَقَالَ "" لَمْ أَرَ الْبُرْمَةَ "". فَقِيلَ لَحْمٌ تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ، وَأَنْتَ لاَ تَأْكُلُ الصَّدَقَةَ قَالَ "" هُوَ عَلَيْهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ "".
பாடம்: 19 ஓர் அடிமை, சுதந்திரமான பெண்ணை மணந்துகொள்வது
5097. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமையாயிருந்து விடுதலைபெற்ற) பரீராவினால் மூன்று வழிமுறைகள் (நமக்கு) கிட்டின:

1. அவர் விடுதலை அடைந்தபோது (தம் அடிமைக் கணவருடனான உறவைத் தொடரவும் முறித்துக்கொள்ளவும்) அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.30

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘விடுதலை செய்தவருக்கே அடிமையின் வாரிசுரிமை கிட்டும்” என்றார்கள்.

3. நெருப்பின் மேல் பாத்திரம் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் ரொட்டியும் வீட்டிóருந்த குழம்பும் வைக்கப்பட்டது. உடனே அவர்கள், ‘‘நான் (நெருப்பின்மேல்) பாத்திரத்தைக் கண்டேனே (அது என்னவாயிற்று?)” என்று கேட்டார்கள்.

அதற்கு, ‘‘அது பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி. தர்மப் பொருளைத் தாங்கள் உண்ணமாட்டீர்களே?” என்று சொல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அது பரீராவிற்குத்தான் தர்மம். நமக்கு அது அன்பளிப்பு!” எனறு சொன்னார்கள்.31

அத்தியாயம் : 67
5098. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، {وَإِنْ خِفْتُمْ أَنْ لاَ، تُقْسِطُوا فِي الْيَتَامَى}. قَالَتِ الْيَتِيمَةُ تَكُونُ عِنْدَ الرَّجُلِ وَهْوَ وَلِيُّهَا، فَيَتَزَوَّجُهَا عَلَى مَالِهَا، وَيُسِيءُ صُحْبَتَهَا، وَلاَ يَعْدِلُ فِي مَالِهَا، فَلْيَتَزَوَّجْ مَا طَابَ لَهُ مِنَ النِّسَاءِ سِوَاهَا مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ.
பாடம்: 20 ஒருவர் நான்கு பெண்களைவிட அதிகமானவர்களை மணமுடிக்கக் கூடாது.32 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக்கொள்ளுங்கள். (4:3) அதாவது ‘‘இரண்டிரண்டாக, அல்லது மும்மூன்றாக, அல்லது நான்கு நான்காக” என அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இதைப் போன்றுதான் ‘‘இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகளை உடைய வானவர்களை” எனும் (35:1ஆவது) வசனமும். அதாவது இரண்டிரண்டு, அல்லது மும்மூன்று, அல்லது நான்கு நான்கு இறக்கைகள்.
5098. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

ஓர் அநாதைப் பெண் ஒரு மனிதரிடம் (அவரது பொறுப்பில்) இருப்பாள். அவரே அவளுடைய காப்பாளர் ஆவார். அவளை அவர் அவளது செல்வத்திற்காக மணந்து கொண்டு அவளுடன் மோசமான முறையில் உறவாடுவார்; அவளது செல்வம் தொடர்பான விஷயத்தில் நீதிசெலுத்தமாட்டார். இத்தகைய பெண்ணைக் குறித்தே இந்த (4:3ஆவது) வசனம் பேசுகிறது.

அந்தக் காப்பாளர், (இவளை விட்டு விட்டு) இவளல்லாத அவரது மனதுக்குப் பிடித்த வேறு பெண்களை இரண்டிரண்டாக, அல்லது மும்மூன்றாக, அல்லது நான்கு நான்காக மணமுடித்துக்கொள்ளட்டும் (என்று இவ்வசனத்தில் இறைவன் கூறுகின்றான்)33

அத்தியாயம் : 67
5099. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا، وَأَنَّهَا سَمِعَتْ صَوْتَ رَجُلٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ، قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أُرَاهُ فُلاَنًا "". لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ. قَالَتْ عَائِشَةُ لَوْ كَانَ فُلاَنٌ حَيًّا، لِعَمِّهَا مِنَ الرَّضَاعَةِ دَخَلَ عَلَىَّ فَقَالَ "" نَعَمِ الرَّضَاعَةُ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الْوِلاَدَةُ "".
பாடம்: 21 உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்களையும் (நீங்கள் மணப் பது விலக்கப்பட்டுள்ளது) (எனும் 4:23ஆவது இறைவசனம்) இரத்த உறவால் மணமுடிக்கக் கூடாதவர்களைப் பால்குடி உறவாலும் மணமுடிக்கக் கூடாது.
5099. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒரு மனிதர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைக் கேட்டேன். அப்போது நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ உங்கள் (துணைவியார் ஹஃப்ஸாவின்) வீட்டுக்குள் செல்ல ஒருவர் அனுமதி கேட்கிறார்” என்று சொன்னேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் இன்னார் என நான் கருதுகிறேன்.” என்று ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துச் சொன்னார்கள். நான் ‘‘இன்னார் உயிருடன் இருந்தால் அவர் என்னைத் திரையின்றி சந்தித்திருக்க முடியும்தானே!” என்று என்னுடைய பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆம்! (முடியும்.) பிறப்பு (இரத்த உறவு) எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு களாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால்குடியும் நெருங்கியவையாக ஆக்கிவிடும்” என்று சொன்னார்கள்.34


அத்தியாயம் : 67
5100. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَلاَ تَزَوَّجُ ابْنَةَ حَمْزَةَ قَالَ "" إِنَّهَا ابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ "". وَقَالَ بِشْرُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ سَمِعْتُ قَتَادَةَ سَمِعْتُ جَابِرَ بْنَ زَيْدٍ مِثْلَهُ.
பாடம்: 21 உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்களையும் (நீங்கள் மணப் பது விலக்கப்பட்டுள்ளது) (எனும் 4:23ஆவது இறைவசனம்) இரத்த உறவால் மணமுடிக்கக் கூடாதவர்களைப் பால்குடி உறவாலும் மணமுடிக்கக் கூடாது.
5100. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ‘‘தாங்கள் ஹம்ஸா (ரலி) அவர்களுடைய புதல்வியை மணமுடித்துக்கொள்ளக் கூடாதா?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்.) அவர்கள், ‘‘அவள் பால்குடி உறவு முறையால் எனக்குச் சகோதரர் மகள் ஆவாள்” என்று கூறினார்கள்.35

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 67
5101. حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ أَخْبَرَتْهَا أَنَّهَا، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ فَقَالَ "" أَوَتُحِبِّينَ ذَلِكَ "". فَقُلْتُ نَعَمْ، لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ ذَلِكَ لاَ يَحِلُّ لِي "". قُلْتُ فَإِنَّا نُحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ بِنْتَ أَبِي سَلَمَةَ. قَالَ "" بِنْتَ أُمِّ سَلَمَةَ "". قُلْتُ نَعَمْ. فَقَالَ "" لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي إِنَّهَا لاَبْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ فَلاَ تَعْرِضْنَ عَلَىَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ "". قَالَ عُرْوَةُ وَثُوَيْبَةُ مَوْلاَةٌ لأَبِي لَهَبٍ كَانَ أَبُو لَهَبٍ أَعْتَقَهَا فَأَرْضَعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ أُرِيَهُ بَعْضُ أَهْلِهِ بِشَرِّ حِيبَةٍ قَالَ لَهُ مَاذَا لَقِيتَ قَالَ أَبُو لَهَبٍ لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ.
பாடம்: 21 உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்களையும் (நீங்கள் மணப் பது விலக்கப்பட்டுள்ளது) (எனும் 4:23ஆவது இறைவசனம்) இரத்த உறவால் மணமுடிக்கக் கூடாதவர்களைப் பால்குடி உறவாலும் மணமுடிக்கக் கூடாது.
5101. உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் கணவர்) நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரியான அபூசுஃப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘இதை நீயே விரும்புகிறாயா?” என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், ‘‘ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றேன்.

அதற்கு அவர்கள், ‘‘எனக்கு அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று” என்றார்கள். நான் ‘‘தாங்கள் அபூசலமாவின் புதல்வியை மணக்க விரும்புவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டதே!” என்று கேட்டேன். ‘‘(அதாவது என் துணைவியார்) உம்முசலமாவிற்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?” என நபியவர்கள் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் (உம்முசலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் புதல்வி ஆவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூசலமாவுக்கும் ஸுவைபா பாலூட்டி னார்.

ஆகவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணமுடித்துக்கொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.36

அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், ‘‘(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?” என்று அவர் கேட்டார்.

‘‘உங்களைவிட்டுப் பிரிந்தபின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது” என்று கூறினார்.

அத்தியாயம் : 67
5102. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا رَجُلٌ، فَكَأَنَّهُ تَغَيَّرَ وَجْهُهُ، كَأَنَّهُ كَرِهَ ذَلِكَ فَقَالَتْ إِنَّهُ أَخِي. فَقَالَ "" انْظُرْنَ مَا إِخْوَانُكُنَّ، فَإِنَّمَا الرَّضَاعَةُ مِنَ الْمَجَاعَةِ "".
பாடம்: 22 ‘பால்குடி என்பது இரண்டு வயதுக்குப்பின் கிடையாது’ என்போரின் கருத்து (அல்லாஹ் கூறுகின்றான்:) (தம் குழந்தைகளுக்குப்) பால்குடியை முழுமையாக்க விரும்புகிற (கண)வர்களுக்காகத் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு நிறைவான இரண்டாண்டுகள் அமுதூட்டுவார்கள். (2:233) பால்குடியில் சிறிதளவும் அதிகளவும் நெருங்கிய உறவை (மஹ்ரம்) ஏற்படுத்தும்.
5102. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறிவிட்டதுபோல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், ‘‘இவர் என் (பால்குடி) சகோதரர்” என்றேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியால் (பிள்ளைப் பால் அருந்தியிருந்தால்)தான்” என்று சொன்னார்கள்.37

அத்தியாயம் : 67