3886. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" لَمَّا كَذَّبَنِي قُرَيْشٌ قُمْتُ فِي الْحِجْرِ، فَجَلاَ اللَّهُ لِي بَيْتَ الْمَقْدِسِ، فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ "".
பாடம் : 41 “அல்இஸ்ராஉ' பற்றிய நபிமொழியும் அது பற்றிய (17:1) இறைவசன மும்131 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: ஓர் இரவி(ன் ஒரு சிறு பகுதியி)ல் தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (வெகு தொலைவில் அமைந்த) அல் மஸ்ஜிதுல் அக்ஸாவரையில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காட்டுவதற்காக, அழைத்துச்சென்ற (இறை)வன் மிகத் தூயவன். (“அல்அக்ஸா' பள்ளியான) அதன் சுற்றுப்புறங்களை நாம் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினோம். (17:1)
3886. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ்வரை சென்றதாகச் சொன்ன சமயம்) என்னை குறைஷியர் நம்ப மறுத்தபோது நான் கஅபாவின் “ஹிஜ்ர்' என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்த படியே நான் அவர்களுக்கு அதன் அடை யாளங்களை விவரிக்கலானேன்.132

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 63
3887. حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ ـ رضى الله عنهما ـ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم حَدَّثَهُمْ عَنْ لَيْلَةَ أُسْرِيَ بِهِ "" بَيْنَمَا أَنَا فِي الْحَطِيمِ ـ وَرُبَّمَا قَالَ فِي الْحِجْرِ ـ مُضْطَجِعًا، إِذْ أَتَانِي آتٍ فَقَدَّ ـ قَالَ وَسَمِعْتُهُ يَقُولُ فَشَقَّ ـ مَا بَيْنَ هَذِهِ إِلَى هَذِهِ ـ فَقُلْتُ لِلْجَارُودِ وَهْوَ إِلَى جَنْبِي مَا يَعْنِي بِهِ قَالَ مِنْ ثُغْرَةِ نَحْرِهِ إِلَى شِعْرَتِهِ، وَسَمِعْتُهُ يَقُولُ مِنْ قَصِّهِ إِلَى شِعْرَتِهِ ـ فَاسْتَخْرَجَ قَلْبِي، ثُمَّ أُتِيتُ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مَمْلُوءَةٍ إِيمَانًا، فَغُسِلَ قَلْبِي ثُمَّ حُشِيَ، ثُمَّ أُوتِيتُ بِدَابَّةٍ دُونَ الْبَغْلِ وَفَوْقَ الْحِمَارِ أَبْيَضَ "". ـ فَقَالَ لَهُ الْجَارُودُ هُوَ الْبُرَاقُ يَا أَبَا حَمْزَةَ قَالَ أَنَسٌ نَعَمْ، يَضَعُ خَطْوَهُ عِنْدَ أَقْصَى طَرْفِهِ ـ "" فَحُمِلْتُ عَلَيْهِ، فَانْطَلَقَ بِي جِبْرِيلُ حَتَّى أَتَى السَّمَاءَ الدُّنْيَا فَاسْتَفْتَحَ، فَقِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. قِيلَ مَرْحَبًا بِهِ، فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ فَفَتَحَ، فَلَمَّا خَلَصْتُ، فَإِذَا فِيهَا آدَمُ، فَقَالَ هَذَا أَبُوكَ آدَمُ فَسَلِّمْ عَلَيْهِ. فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ السَّلاَمَ ثُمَّ قَالَ مَرْحَبًا بِالاِبْنِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ. ثُمَّ صَعِدَ حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ فَاسْتَفْتَحَ، قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. قِيلَ مَرْحَبًا بِهِ فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ. فَفَتَحَ، فَلَمَّا خَلَصْتُ، إِذَا يَحْيَى وَعِيسَى، وَهُمَا ابْنَا الْخَالَةِ قَالَ هَذَا يَحْيَى وَعِيسَى فَسَلِّمْ عَلَيْهِمَا. فَسَلَّمْتُ فَرَدَّا، ثُمَّ قَالاَ مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ. ثُمَّ صَعِدَ بِي إِلَى السَّمَاءِ الثَّالِثَةِ، فَاسْتَفْتَحَ قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. قِيلَ مَرْحَبًا بِهِ، فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ. فَفُتِحَ، فَلَمَّا خَلَصْتُ إِذَا يُوسُفُ. قَالَ هَذَا يُوسُفُ فَسَلِّمْ عَلَيْهِ. فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ، ثُمَّ قَالَ مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ، ثُمَّ صَعِدَ بِي حَتَّى أَتَى السَّمَاءَ الرَّابِعَةَ، فَاسْتَفْتَحَ، قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ. قِيلَ أَوَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. قِيلَ مَرْحَبًا بِهِ، فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ. فَفُتِحَ، فَلَمَّا خَلَصْتُ إِلَى إِدْرِيسَ قَالَ هَذَا إِدْرِيسُ فَسَلِّمْ عَلَيْهِ. فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ ثُمَّ قَالَ مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ. ثُمَّ صَعِدَ بِي حَتَّى أَتَى السَّمَاءَ الْخَامِسَةَ، فَاسْتَفْتَحَ، قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم. قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. قِيلَ مَرْحَبًا بِهِ، فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ. فَلَمَّا خَلَصْتُ فَإِذَا هَارُونُ قَالَ هَذَا هَارُونُ فَسَلِّمْ عَلَيْهِ. فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ ثُمَّ قَالَ مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ. ثُمَّ صَعِدَ بِي حَتَّى أَتَى السَّمَاءَ السَّادِسَةَ، فَاسْتَفْتَحَ، قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ مَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. قَالَ مَرْحَبًا بِهِ، فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ، فَلَمَّا خَلَصْتُ، فَإِذَا مُوسَى قَالَ هَذَا مُوسَى فَسَلِّمْ عَلَيْهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ ثُمَّ قَالَ مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ. فَلَمَّا تَجَاوَزْتُ بَكَى، قِيلَ لَهُ مَا يُبْكِيكَ قَالَ أَبْكِي لأَنَّ غُلاَمًا بُعِثَ بَعْدِي، يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِهِ أَكْثَرُ مَنْ يَدْخُلُهَا مِنْ أُمَّتِي. ثُمَّ صَعِدَ بِي إِلَى السَّمَاءِ السَّابِعَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ، قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ. قَالَ نَعَمْ. قَالَ مَرْحَبًا بِهِ، فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ فَلَمَّا خَلَصْتُ، فَإِذَا إِبْرَاهِيمُ قَالَ هَذَا أَبُوكَ فَسَلِّمْ عَلَيْهِ. قَالَ فَسَلَّمْتُ عَلَيْهِ، فَرَدَّ السَّلاَمَ قَالَ مَرْحَبًا بِالاِبْنِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ. ثُمَّ رُفِعَتْ لِي سِدْرَةُ الْمُنْتَهَى، فَإِذَا نَبِقُهَا مِثْلُ قِلاَلِ هَجَرَ، وَإِذَا وَرَقُهَا مِثْلُ آذَانِ الْفِيَلَةِ قَالَ هَذِهِ سِدْرَةُ الْمُنْتَهَى، وَإِذَا أَرْبَعَةُ أَنْهَارٍ نَهْرَانِ بَاطِنَانِ، وَنَهْرَانِ ظَاهِرَانِ. فَقُلْتُ مَا هَذَانِ يَا جِبْرِيلُ قَالَ أَمَّا الْبَاطِنَانِ، فَنَهَرَانِ فِي الْجَنَّةِ، وَأَمَّا الظَّاهِرَانِ فَالنِّيلُ وَالْفُرَاتُ. ثُمَّ رُفِعَ لِي الْبَيْتُ الْمَعْمُورُ، ثُمَّ أُتِيتُ بِإِنَاءٍ مِنْ خَمْرٍ، وَإِنَاءٍ مِنْ لَبَنٍ وَإِنَاءٍ مِنْ عَسَلٍ، فَأَخَذْتُ اللَّبَنَ، فَقَالَ هِيَ الْفِطْرَةُ أَنْتَ عَلَيْهَا وَأُمَّتُكَ. ثُمَّ فُرِضَتْ عَلَىَّ الصَّلَوَاتُ خَمْسِينَ صَلاَةً كُلَّ يَوْمٍ. فَرَجَعْتُ فَمَرَرْتُ عَلَى مُوسَى، فَقَالَ بِمَا أُمِرْتَ قَالَ أُمِرْتُ بِخَمْسِينَ صَلاَةً كُلَّ يَوْمٍ. قَالَ إِنَّ أُمَّتَكَ لاَ تَسْتَطِيعُ خَمْسِينَ صَلاَةً كُلَّ يَوْمٍ، وَإِنِّي وَاللَّهِ قَدْ جَرَّبْتُ النَّاسَ قَبْلَكَ، وَعَالَجْتُ بَنِي إِسْرَائِيلَ أَشَدَّ الْمُعَالَجَةِ، فَارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ لأُمَّتِكَ. فَرَجَعْتُ، فَوَضَعَ عَنِّي عَشْرًا، فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ مِثْلَهُ، فَرَجَعْتُ فَوَضَعَ عَنِّي عَشْرًا، فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ مِثْلَهُ، فَرَجَعْتُ فَوَضَعَ عَنِّي عَشْرًا، فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ مِثْلَهُ، فَرَجَعْتُ فَأُمِرْتُ بِعَشْرِ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ، فَرَجَعْتُ فَقَالَ مِثْلَهُ، فَرَجَعْتُ فَأُمِرْتُ بِخَمْسِ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ، فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ بِمَا أُمِرْتَ قُلْتُ أُمِرْتُ بِخَمْسِ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ. قَالَ إِنَّ أُمَّتَكَ لاَ تَسْتَطِيعُ خَمْسَ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ، وَإِنِّي قَدْ جَرَّبْتُ النَّاسَ قَبْلَكَ، وَعَالَجْتُ بَنِي إِسْرَائِيلَ أَشَدَّ الْمُعَالَجَةِ، فَارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ لأُمَّتِكَ. قَالَ سَأَلْتُ رَبِّي حَتَّى اسْتَحْيَيْتُ، وَلَكِنْ أَرْضَى وَأُسَلِّمُ ـ قَالَ ـ فَلَمَّا جَاوَزْتُ نَادَى مُنَادٍ أَمْضَيْتُ فَرِيضَتِي وَخَفَّفْتُ عَنْ عِبَادِي "".
பாடம் : 42 அல்மிஅராஜ் (விண்ணுலகப் பயணம்)133
3887. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இறையில்லம் கஅபா அருகில்) “ஹத்தீமில்' அல்லது “ஹிஜ்ரில்' படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான அனஸ் (ரலி) அவர்கள், “இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறி னார்கள்.

அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் என்னருகில் இருந்த (அனஸ் (ரலி) அவர்களின் நண்பர்) ஜாரூத் (ரஹ்) அவர்களிடம், “அனஸ் (ரலி) அவர்கள், இங்கிருந்து இதுவரையில்... என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஜாரூத் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் “நெஞ்சின் காறையெலும்பிலிருந்து அடிவயிறுவரை' அல்லது “நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறுவரை' என்ற கருத்தில் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.-

பிறகு அ(ந்த வான)வர் (ஜிப்ரீல்) எனது இதயத்தை வெளியில் எடுத்தார். பிறகு, இறைநம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டுவரப் பட்டு, எனது இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறைநம்பிக்கை நிரப்பப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (எனது இதயம், மூடி)வைக்கப்பட்டது. பிறகு கோவேறுக் கழுதையைவிடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்தில் அமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டுவரப்பட்டது.

-(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ் (ரலி) அவர்களிடம் ஜாரூத் (ரஹ்) அவர்கள், “அது புராக் எனும் வாகனம்தானே, அபூஹம்ஸா அவர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “ஆம், (அது புராக்தான்.) அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்” என்று கூறினார்கள்.-

பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வானத் திற்கு அழைத்துச்சென்று அதன் கதவைத் திறக்கும்படி கூறினார். அப்போது, “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்' என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரச்சொல்லி) அவரிடம் ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது.

அவர், “ஆம்' என்றார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. அப்போது (அந்த வானத்தின் காவலர்) கதவைத் திறந்தார். நான் அங்கு சென்றடைந்தபோது அங்கு (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் இருந்தார்கள். (என்னிடம் ஜிப்ரீல்) “இவர்கள் உங்கள் தந்தை ஆதம். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று கூறினார். அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, ஆதம் (அலை) அவர்கள், “(என்) நல்ல மகனும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்று சொன்னார்கள்.

பிறகு (என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல்) இரண்டாம் வானத்தில் ஏறி அதைத் திறக்கும்படி சொன்னார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளிக்க, “உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று வினவப்பட்டது. (அதற்கு) அவர், “முஹம்மத்' என்று பதிலளித்தார், “(அவரை அழைத்து வரும் படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்' என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது.

பிறகு (அந்த வானத்தின் காவலர் கதவைத்) திறந்தார். நான் அங்கு சென்றடைந்த போது, அங்கு யஹ்யா (அலை) அவர்களும், ஈசா (அலை) அவர்களும் இருந்தனர். -அவ்விருவரும் சிற்றன்னையின் மக்களாவர்.-134 இது யஹ்யா அவர்களும், ஈசா அவர்களும் ஆவர். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் (அவர்கள் இருவருக்கும்) சலாம் சொன்னபோது அவர்கள் சலாமிற்குப் பதில் கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும், “நல்ல சகோதரரும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினர்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு மூன்றாம் வானத்திற்கு ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். “யார் அது?” என்று கேட்கப் பட்டது. அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளித் தார். “உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மத்' என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டி ருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்' என்று பதிலளித்தார். “அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது.

பிறகு (அந்த வானத்தின் கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்த போது அங்கு யூசுஃப் (அலை) அவர்கள் இருந்தார்கள். “இவர்கள்தான் (இறைத்தூதர்) யூசுஃப். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்களும் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, “நல்ல சகோதரரும் நல்ல இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள்.

பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் நான்காம் வானத்திற்கு ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்குமாறு சொன்னார். “யார் அது” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மத்' என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று வினவப்பட்ட போது, “ஆம்' என்று அவர் பதிலுரைத்தார். “அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (எனக்கு வாழ்த்துச்) சொல்லப்பட்டு(க் கதவும்) திறக்கப்பட்டது.

அங்கு நான் சென்றடைந்தபோது அங்கு இத்ரீஸ் (அலை) அவர்கள் இருந்தார்கள். “இவர்கள்தான் இத்ரீஸ் (அலை) அவர்கள். இவர்களுக்கு சலாம் கூறுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்களும் எனக்குப் பதில் சலாம் கூறினார்கள். பிறகு, “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்தும்) சொன்னார்கள்.

பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் ஐந்தாம் வானத்திற்கு வந்து சேர்ந்து அதைத் திறக்கும்படி சொன்னார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். “உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று வினவப்பட்டது. அவர், “முஹம்மத்' என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்' என்றார். “அவர் வரவு நல்வரவாகட்டும். அவர் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது.

நான் அங்கு சென்றடைந்தபோது ஹாரூன் (அலை) அவர்கள் அங்கிருந் தார்கள். “இவர்கள்தான் ஹாரூன். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் சொன்னார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு அவர்கள், “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் “ என்று (வாழ்த்துச்) சொன்னார்கள்.

பிறகு என்னுடன் அவர் ஆறாம் வானத்திற்கு ஏறினார். (அதன் கதவைத்) திறக்கும்படி கூறினார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். “உங்களுடன் யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மத்' என்றார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்' என்றார். (அந்த வானத்தின் காவலர்,) “அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொன்னார்.

அங்கு நான் சென்றடைந்தபோது மூசா (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். “இவர்கள்தான் மூசா. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன் னார்கள்.

பிறகு, “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வர வாகட்டும்” என்று (வாழ்த்துச்) சொன்னார் கள். நான் (மூசா (அலை) அவர்களைக்) கடந்து சென்றபோது அவர்கள் அழுதார் கள். “தங்கள் அழுகைக்கு என்ன காரணம்?” என்று அவர்களிடம் கேட்கப் பட்டது. அவர்கள், “என் சமுதாயத்தாரில் சொர்க்கம் புகுபவர்களைவிட அதிகமான வர்கள், எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால்தான் அழுகிறேன்” என்று பதிலளித்தார்கள்.

பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் ஏழாவது வானத்திற்கு ஏறினார். (அதன் கதவைத்) திறக்கும்படி ஜிப்ரீல் கூறினார். “யார் அது?' என்று கேட்கப்பட் டது. அவர், “ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று வினவப்பட்டபோது அவர், “முஹம்மத்' என்று பதில் சொன்னார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்' என்றார். (அந்த வானத்தின் காவலர்,) “அவரது வரவு நல்வரவாகட்டும், அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொன்னார்.

நான் அங்கு சென்றடைந்தபோது, இப்ராஹீம் (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். “இவர்கள்தான் உங்கள் தந்தை. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்குப்) பதில் சலாம் உரைத்தார்கள். அவர்கள், “நல்ல மகனும், நல்ல இறைத்தூதருமான இவரது வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்துச் சொன்னார்கள்.

பிறகு, (வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) “சித்ரத்துல்முன்(த்)தஹா' எனும் இடத்திற்கு நான் கொண்டுசெல்லப்பட்டேன். அதன் (இலந்தைப்) பழங்கள் (யமனில் உள்ள) “ஹஜர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள்போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகள் போலிருந்தன. “இதுதான் சித்ரத்துல் முன்(த்)தஹா” என்று ஜிப்ரீல் (அறிமுகப்படுத்திக்) கூறினார். அங்கு (அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடிவருகின்ற) நான்கு ஆறுகள் இருந்தன. இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன.

“ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை?” என்று நான் கேட்டேன். அவர், “உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத் தில் உள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை)வையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நீல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

பிறகு, “அல்பைத்துல் மஅமூர்' (எனும் “வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறையில்லம்') எனக்கு (அருகே கொண்டுவந்து) காட்டப்பட்து. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் மதுவும், ஒரு பாத்திரத்தில் பாலும் இன்னொரு பாத்திரத்தில் தேனும் கொண்டுவரப்பட்டது. நான் பாலை (தேர்ந்து) எடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்.) அப்போது ஜிப்ரீல், “இதுதான் நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும்” என்று கூறினார்கள்.

பிறகு என்மீது ஒவ்வொரு தினத்திற்கும் ஐம்பது (வேளைத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் திரும்பிவந்தபோது மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், “உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?” என்று கேட்டார்கள். “ஒவ்வொரு நாளும் ஐம்பது (வேளைத்) தொழுகை (கட்டாயக் கடமையாக நிறைவேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது” என்று நான் பதிலளித்தேன். உங்கள் சமுதாயத்தார் ஒரு தினத்திற்கு ஐம்பது வேளைத் தொழுகையைத் தாங்கமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுக்கு முன் மக்களிடம் அனுபவப்பட்டுள்ளேன். இஸ்ரவேலர்களுடன் பழகி நன்கு பக்குவப் பட்டுள்ளேன்.

ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் உங்கள் சமுதாயத்தாருக்காக (தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைத்துக் தரும்படி கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். (இறைவனிடம் குறைத்துத் தரும்படி கேட்டேன்) இறைவன் (ஐம்பதிலிருந்து) பத்தை எனக்குக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். முன்பு போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும் படி) சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். அப்போது (நாற்பதிலிருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன்.

அப்போதும் முன்பு போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) கூறினார்கள். நான் (இறைவனிடம்) திரும்பிச் சென்றேன். எனக்கு (முப்பதி óருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் முன்பு போலவே (குறைத்து கேட்கும்படி) கூறினார்கள்.

நான் திரும்பிச் சென்றேன். எனக்கு (இருபதிலிருந்து பத்து குறைக்கப்பட்டு) தினந்தோறும் பத்து (வேளைத்) தொழுகைகள் (தொழும்படி) உத்தரவிடப்பட்டது. நான் (மூசா (அலை) அவர்களிடம்) திரும்பி வந்தேன். அப்போதும் அவர்கள் முன்பு போலவே சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். ஒவ்வொரு நாளும் ஐந்து (வேளைத்) தொழுகைகள் (நிறைவேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது.

நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது, “உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?”என்று கேட்டார்கள். ஒவ்வொரு நாளைக்கும் ஐந்து (நேரத்) தொழுகைகள் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளன” என்று சொன்னேன். “ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகைகளை உங்கள் சமுதாயத்தார் தாங்கமாட்டார்கள். உங்களுக்கு முன்பே மக்களுடன் பழகி நான் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். நான் இஸ்ர வேலர்களுடன் பழகி நன்கு பக்குவப் பட்டுள்ளேன். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று உங்கள் சமுதாயத்தாருக்காக இன்னும் குறைத்துத் தரும்படி கேளுங்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு நான், “(கடமையான தொழுகை களின் எண்ணிக்கையைக் குறைத்துத் தரும்படி பலமுறை இறைவனிடம்) எனக்கே வெட்கமேற்படும்வரையில் நான் கேட்டுவிட்டேன். ஆகவே, நான் திருப்தி யடைகிறேன்; (இந்த எண்ணிக்கையை) ஒப்புக்கொள்கிறேன்” என்று கூறினேன். பிறகு (அந்த இடத்தை) நான் கடந்தபோது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து), “நான் என் (ஐந்து நேரத் தொழுகை எனும்) விதியை நடைமுறைப்படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளை களிலிருந்து ஐந்து நேரமாகக் குறைத்துக் கடமையை) எளிதாக்கிவிட்டேன்” என்று ஒரு (அசரீரிக்) குரல் ஒலித்தது.135


அத்தியாயம் : 63
3888. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فِي قَوْلِهِ تَعَالَى {وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلاَّ فِتْنَةً لِلنَّاسِ} قَالَ هِيَ رُؤْيَا عَيْنٍ، أُرِيَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ إِلَى بَيْتِ الْمَقْدِسِ. قَالَ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ قَالَ هِيَ شَجَرَةُ الزَّقُّومِ.
பாடம் : 42 அல்மிஅராஜ் (விண்ணுலகப் பயணம்)133
3888. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“(நபியே! இப்போது) நாம் உங்களுக்குக் காட்டிய (அந்த இரவுக்) காட்சியையும், குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரத்தையும் (இந்த) மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்” என்ற (17:60) இறைவசனத்திற்கு விளக்கம் அளித்தபோது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திசுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களுக்குக் காட்டப்பட்ட காட்சிகளைக் குறிக்கும். குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரம் என்பது “ஸக்கூம்' என்னும் (நரகத்திலுள்ள கள்ளிச்) செடியைக் குறிக்கும்” என்று சொன்னார்கள்.136

அத்தியாயம் : 63
3889. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ ـ وَكَانَ قَائِدَ كَعْبٍ حِينَ عَمِيَ ـ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ حِينَ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ. بِطُولِهِ، قَالَ ابْنُ بُكَيْرٍ فِي حَدِيثِهِ وَلَقَدْ شَهِدْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةَ الْعَقَبَةِ حِينَ تَوَاثَقْنَا عَلَى الإِسْلاَمِ، وَمَا أُحِبُّ أَنَّ لِي بِهَا مَشْهَدَ بَدْرٍ وَإِنْ كَانَتْ بَدْرٌ، أَذْكَرَ فِي النَّاسِ مِنْهَا.
பாடம் : 43 மக்காவில் நபி (ஸல்) அவர்களிடம் வந்த அன்சாரிகளின் தூதுக் குழுக்களும் “அல்அகபா' உடன் படிக்கையும்137
3889. அப்துர் ரஹ்மான் பின் அப்தில் லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (முதுமையடைந்து) கண்பார்வையிழந்து விட்டபோது அவர்களைக் கரம் பிடித்து அழைத்துச் செல்பவர்களாயிருந்த (அவர்களின் மகனும் என் தந்தையுமான) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

என் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள், தபூக் போரின்போது, நபி (ஸல்) அவர்களுடன் செல்லாமல் (அசிரத்தை காரணமாக) தாம் பின்தங்கிவிட்ட வேளை குறித்து என்னிடம் பேசியதை நான் செவியுற்றேன்... என்று கூறிவிட்டு முழு ஹதீஸையும் சொன்னார்கள்.138

இப்னு புகைர் (ரஹ்) அவர்கள் உகைல் (ரஹ்) வாயிலாக அறிவிக்கும் அறிவிப்பில், கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுவதாக அறிவிக்கிறார்கள்:

“அல்அகபா' (எனுமிடத்தில் உறுதி மொழி அளித்த நிகழ்ச்சி நடந்த) இரவில் இஸ்லாத்தை ஏற்பதாக (மதீனாவாசிகளான) நாங்கள் பிரமாணம் செய்த வேளையில் நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். இதற்குப் பதிலாகப் பத்ர் போரில் கலந்து (கொள்கின்ற வாய்ப்பைப் பெற்றுக்) கொள்ளுதல் எனக்கு இருந்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; “அல்அகபா' பிரமாணத்தைவிட “பத்ர்' மக்களிடையே பெயர் பெற்றதாக இருந் தாலும் சரியே!


அத்தியாயம் : 63
3890. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ كَانَ عَمْرٌو يَقُولُ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ شَهِدَ بِي خَالاَىَ الْعَقَبَةَ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ ابْنُ عُيَيْنَةَ أَحَدُهُمَا الْبَرَاءُ بْنُ مَعْرُورٍ.
பாடம் : 43 மக்காவில் நபி (ஸல்) அவர்களிடம் வந்த அன்சாரிகளின் தூதுக் குழுக்களும் “அல்அகபா' உடன் படிக்கையும்137
3890. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் இரு மாமன்மார்களும் அல்அகபா உடன்படிக்கையில் கலந்துகொண்டனர். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், “அந்த இருவரில் ஒருவர் பராஉ பின் மஅரூர் (ரலி) அவர்களாவார்”139 என்று சொன்னார் என அபூஅப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்.


அத்தியாயம் : 63
3891. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ أَنَا وَأَبِي، وَخَالِي، مِنْ أَصْحَابِ الْعَقَبَةِ.
பாடம் : 43 மக்காவில் நபி (ஸல்) அவர்களிடம் வந்த அன்சாரிகளின் தூதுக் குழுக்களும் “அல்அகபா' உடன் படிக்கையும்137
3891. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்அகபா உடன்படிக்கையில் கலந்துகொண்டவர்களில் நானும், என் தந்தையும், என் இரு தாய்மாமன்மார்களும் அடங்குவோம்.


அத்தியாயம் : 63
3892. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، قَالَ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ، عَائِذُ اللَّهِ أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ ـ مِنَ الَّذِينَ شَهِدُوا بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ـ وَمِنْ أَصْحَابِهِ لَيْلَةَ الْعَقَبَةِ ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ "" تَعَالَوْا بَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزْنُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ، وَلاَ تَأْتُونَ بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلاَ تَعْصُونِي فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ بِهِ فِي الدُّنْيَا فَهْوَ لَهُ كَفَّارَةٌ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَسَتَرَهُ اللَّهُ فَأَمْرُهُ إِلَى اللَّهِ، إِنْ شَاءَ عَاقَبَهُ، وَإِنْ شَاءَ عَفَا عَنْهُ "". قَالَ فَبَايَعْتُهُ عَلَى ذَلِكَ.
பாடம் : 43 மக்காவில் நபி (ஸல்) அவர்களிடம் வந்த அன்சாரிகளின் தூதுக் குழுக்களும் “அல்அகபா' உடன் படிக்கையும்137
3892. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்து கொண்டவரும், இரவில் நடந்த “அல்அகபா' உடன்பாட்டில் கலந்துகொண்ட நபித் தோழர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அல்அகபா இரவில்) தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வாருங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்க மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், உங்கள் தரப்பிலிருந்து நீங்களே இட்டுக்கட்டும் அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எனக்கு நல்ல விஷயங்களில் மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்.

உங்களில் எவர் (இந்த உறுதிமொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்சொன்ன குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்தி லேயே (இஸ்லாமியச் சட்டப்படி) தண்டிக் கப்பட்டுவிட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். இவற்றில் எதையேனும் ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்து விட்டால் (அவரது மறுமை நிலை குறித்த) அவரது விவகாரம் அல்லாஹ்விடம் உண்டு. (மறுமையில்) அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்று சொன்னார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அவற்றுக்காக உறுதிமொழி கொடுத்தோம்.140


அத்தியாயம் : 63
3893. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنِ الصُّنَابِحِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ إِنِّي مِنَ النُّقَبَاءِ الَّذِينَ بَايَعُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ بَايَعْنَاهُ عَلَى أَنْ لاَ نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا، وَلاَ نَسْرِقَ، وَلاَ نَزْنِيَ، وَلاَ نَقْتُلَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ، وَلاَ نَنْتَهِبَ، وَلاَ نَعْصِيَ بِالْجَنَّةِ إِنْ فَعَلْنَا ذَلِكَ، فَإِنْ غَشِينَا مِنْ ذَلِكَ شَيْئًا كَانَ قَضَاءُ ذَلِكَ إِلَى اللَّهِ.
பாடம் : 43 மக்காவில் நபி (ஸல்) அவர்களிடம் வந்த அன்சாரிகளின் தூதுக் குழுக்களும் “அல்அகபா' உடன் படிக்கையும்137
3893. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன்.

நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம் என்றும், திருடமாட்டோம் என்றும், விபசாரம் புரியமாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்குச்) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக்கொள்ளமாட்டோம்; (இறைவ னிடமே ஒப்படைத்துவிடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்துவிட்டால் அதன் தீர்ப்பு அல்லாஹ் விடமே உண்டு என்றும் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்தோம்.

அத்தியாயம் : 63
3894. حَدَّثَنِي فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تَزَوَّجَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا بِنْتُ سِتِّ سِنِينَ، فَقَدِمْنَا الْمَدِينَةَ فَنَزَلْنَا فِي بَنِي الْحَارِثِ بْنِ خَزْرَجٍ، فَوُعِكْتُ فَتَمَرَّقَ شَعَرِي فَوَفَى جُمَيْمَةً، فَأَتَتْنِي أُمِّي أُمُّ رُومَانَ وَإِنِّي لَفِي أُرْجُوحَةٍ وَمَعِي صَوَاحِبُ لِي، فَصَرَخَتْ بِي فَأَتَيْتُهَا لاَ أَدْرِي مَا تُرِيدُ بِي فَأَخَذَتْ بِيَدِي حَتَّى أَوْقَفَتْنِي عَلَى باب الدَّارِ، وَإِنِّي لأَنْهَجُ، حَتَّى سَكَنَ بَعْضُ نَفَسِي، ثُمَّ أَخَذَتْ شَيْئًا مِنْ مَاءٍ فَمَسَحَتْ بِهِ وَجْهِي وَرَأْسِي ثُمَّ أَدْخَلَتْنِي الدَّارَ فَإِذَا نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فِي الْبَيْتِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ، وَعَلَى خَيْرِ طَائِرٍ. فَأَسْلَمَتْنِي إِلَيْهِنَّ فَأَصْلَحْنَ مِنْ شَأْنِي، فَلَمْ يَرُعْنِي إِلاَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ضُحًى، فَأَسْلَمَتْنِي إِلَيْهِ، وَأَنَا يَوْمَئِذٍ بِنْتُ تِسْعِ سِنِينَ.
பாடம் : 44 நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டதும் ஆயிஷா (ரலி) மதீனாவுக்கு வருகை தந்ததும் நபியவர் கள் ஆயிஷாவுடன் தாம்பத்தியத்தைத் தொடங்கியதும்141
3894. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்குக் காய்ச்சல் கண்டுவிடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சப்தமிட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக் கத் தொடங்கவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டுசென்றார்கள்.

அங்கு வீட்டில் சில அன்சாரி பெண்கள் இருந்தார்கள். அவர்கள், “நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண் டாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களி டம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (தாம்பத்தியத்தைத் துவங்கு வதற்காகத் தயார்படுத்தி)விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.


அத்தியாயம் : 63
3895. حَدَّثَنَا مُعَلًّى، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا "" أُرِيتُكِ فِي الْمَنَامِ مَرَّتَيْنِ، أَرَى أَنَّكِ فِي سَرَقَةٍ مِنْ حَرِيرٍ وَيَقُولُ هَذِهِ امْرَأَتُكَ فَاكْشِفْ عَنْهَا فَإِذَا هِيَ أَنْتِ فَأَقُولُ إِنْ يَكُ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ "".
பாடம் : 44 நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டதும் ஆயிஷா (ரலி) மதீனாவுக்கு வருகை தந்ததும் நபியவர் கள் ஆயிஷாவுடன் தாம்பத்தியத்தைத் தொடங்கியதும்141
3895. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நான் உன்னைக் கனவில் இருமுறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண் டேன். எவரோ, “இது உங்கள் மனைவிதான்; (முக்காட்டை) நீக்கிப் பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், “இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப் பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்திவைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.


அத்தியாயம் : 63
3896. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ تُوُفِّيَتْ خَدِيجَةُ قَبْلَ مَخْرَجِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى الْمَدِينَةِ بِثَلاَثِ سِنِينَ، فَلَبِثَ سَنَتَيْنِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ، وَنَكَحَ عَائِشَةَ وَهْىَ بِنْتُ سِتِّ سِنِينَ، ثُمَّ بَنَى بِهَا وَهْىَ بِنْتُ تِسْعِ سِنِينَ.
பாடம் : 44 நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டதும் ஆயிஷா (ரலி) மதீனாவுக்கு வருகை தந்ததும் நபியவர் கள் ஆயிஷாவுடன் தாம்பத்தியத்தைத் தொடங்கியதும்141
3896. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) செல்வதற்கு மூன்றாண் டுகளுக்கு முன்பு கதீஜா (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள். (அதன்பின்) நபி (ஸல்) அவர்கள் “இரண்டு ஆண்டுகள்' அல்லது “கிட்டத்தட்ட இரண்டாண்டுகள்' (மக்காவில்) தங்கியிருந்தார்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் ஆறு வயதுடையவர்களாயிருக்கும் போது அவர்களை மணந்துகொண்டார்கள்.

பிறகு ஆயிஷா (ரலி) அவர்கள் ஒன்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.

அத்தியாயம் : 63
3897. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، يَقُولُ عُدْنَا خَبَّابًا فَقَالَ هَاجَرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نُرِيدُ وَجْهَ اللَّهِ، فَوَقَعَ أَجْرُنَا عَلَى اللَّهِ، فَمِنَّا مَنْ مَضَى، لَمْ يَأْخُذْ مِنْ أَجْرِهِ شَيْئًا، مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ قُتِلَ يَوْمَ أُحُدٍ، وَتَرَكَ نَمِرَةً، فَكُنَّا إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ بَدَتْ رِجْلاَهُ، وَإِذَا غَطَّيْنَا رِجْلَيْهِ بَدَا رَأْسُهُ، فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نُغَطِّيَ رَأْسَهُ، وَنَجْعَلَ عَلَى رِجْلَيْهِ شَيْئًا مِنْ إِذْخِرٍ. وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهْوَ يَهْدِبُهَا.
பாடம் : 45 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் (மக்காவைத் துறந்து)மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது142 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைமார்க்கத்தைப் பாதுகாக்க மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செல்ல வேண்டியிருந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப் பேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.143 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு பூமிக்கு நான் ஹிஜ்ரத் செல்வதாகக் கனவில் கண்டேன். அது யமாமா அல்லது ஹஜராக இருக்கும் என்று கருதினேன். ஆனால், (இறைக்கட்டளை வந்த) பிறகுதான் அது “யஸ்ரிப்' எனப்படும் மதீனா நகரம் என்று தெரியவந்தது. இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.144
3897. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாகப் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனையளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் ஹிஜ்ரத் செய்ததற்கான (இவ்வுலகப்) பிரதிபலனில் சிறிதையும் பெற்றுக்கொள்ளாமல் சென்றுவிட்டவர்களும் உண்டு.

அவர்களில் ஒருவர்தான் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள். அவர் உஹுத் போரின்போது கொல்லப்பட்டார். கோடிட்ட வண்ணத் துணி ஒன்றை அவர் விட்டுச்சென்றிருந்தார். நாங்கள் (அவருக்கு கஃபனிடுவதற்காக) அவரது (சடலத்தின்) தலையை அதனால் மூடியபோது அவரு டைய கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின. அவருடைய கால்களை மூடினால் அவருடைய தலை தெரிய லாயிற்று.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஸ்அப் (ரலி) அவர்களின் தலையை மூடிவிடும்படியும் அவர்களு டைய இரு கால்களிலும் இத்கிர் புல்லைச் சிறிது போட்டு (மறைத்து)விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க்கொண்டிருப்ப வர்களும் எங்களில் உள்ளனர்.145


அத்தியாயம் : 63
3898. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، قَالَ سَمِعْتُ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" الأَعْمَالُ بِالنِّيَّةِ، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ صلى الله عليه وسلم "".
பாடம் : 45 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் (மக்காவைத் துறந்து)மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது142 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைமார்க்கத்தைப் பாதுகாக்க மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செல்ல வேண்டியிருந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப் பேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.143 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு பூமிக்கு நான் ஹிஜ்ரத் செல்வதாகக் கனவில் கண்டேன். அது யமாமா அல்லது ஹஜராக இருக்கும் என்று கருதினேன். ஆனால், (இறைக்கட்டளை வந்த) பிறகுதான் அது “யஸ்ரிப்' எனப்படும் மதீனா நகரம் என்று தெரியவந்தது. இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.144
3898. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒருவரது ஹிஜ்ரத் அவர் அடையவிருக்கும் உலக (ஆதாய)த்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால், அல்லது அவர் மணக்கவிருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால், அவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும். ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தியுறச் செய்வதைக்) குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கியதாகவே அமைந்திருக்கும்.

இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.146


அத்தியாயம் : 63
3899. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو عَمْرٍو الأَوْزَاعِيُّ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ مُجَاهِدِ بْنِ جَبْرٍ الْمَكِّيِّ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَقُولُ لاَ هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ.
பாடம் : 45 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் (மக்காவைத் துறந்து)மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது142 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைமார்க்கத்தைப் பாதுகாக்க மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செல்ல வேண்டியிருந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப் பேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.143 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு பூமிக்கு நான் ஹிஜ்ரத் செல்வதாகக் கனவில் கண்டேன். அது யமாமா அல்லது ஹஜராக இருக்கும் என்று கருதினேன். ஆனால், (இறைக்கட்டளை வந்த) பிறகுதான் அது “யஸ்ரிப்' எனப்படும் மதீனா நகரம் என்று தெரியவந்தது. இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.144
3899. முஜாஹித் பின் ஜப்ர் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “(மக்கா) வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் கிடையாது” என்று சொல்லி வந்தார்கள்.147


அத்தியாயம் : 63
3900. وَحَدَّثَنِي الأَوْزَاعِيُّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ زُرْتُ عَائِشَةَ مَعَ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ اللَّيْثِيِّ فَسَأَلْنَاهَا عَنِ الْهِجْرَةِ، فَقَالَتْ لاَ هِجْرَةَ الْيَوْمَ، كَانَ الْمُؤْمِنُونَ يَفِرُّ أَحَدُهُمْ بِدِينِهِ إِلَى اللَّهِ تَعَالَى وَإِلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مَخَافَةَ أَنْ يُفْتَنَ عَلَيْهِ، فَأَمَّا الْيَوْمَ فَقَدْ أَظْهَرَ اللَّهُ الإِسْلاَمَ، وَالْيَوْمَ يَعْبُدُ رَبَّهُ حَيْثُ شَاءَ، وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ.
பாடம் : 45 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் (மக்காவைத் துறந்து)மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது142 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைமார்க்கத்தைப் பாதுகாக்க மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செல்ல வேண்டியிருந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப் பேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.143 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு பூமிக்கு நான் ஹிஜ்ரத் செல்வதாகக் கனவில் கண்டேன். அது யமாமா அல்லது ஹஜராக இருக்கும் என்று கருதினேன். ஆனால், (இறைக்கட்டளை வந்த) பிறகுதான் அது “யஸ்ரிப்' எனப்படும் மதீனா நகரம் என்று தெரியவந்தது. இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.144
3900. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உபைத் பின் உமைர் அல்லைஸீ (ரஹ்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் “ஸபீர்' எனும் மலைக்கருகில் தங்கியிருந்தார்கள்.)148 அவர்களிடம் ஹிஜ்ரத்தைப் பற்றிக் கேட்டோம்.

அதற்கு அவர்கள், “இன்று (மக்கா வெற்றி கொள்ளப்பட்டுவிட்ட பிறகு) ஹிஜ்ரத் கிடையாது. இறைநம்பிக்கை யாளர்கள் (தம் மார்க்கத்தைப் பின்பற்ற முடியாதவாறு) தாம் சோதிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சி தமது மார்க்கத்துடன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தியுறச் செய்வதைக்) குறிக்கோளாகக் கொண்டு (தம் தாய் நாட்டைத் துறந்து ஒரு காலத்தில்) ஓடிவந்தார்கள். ஆனால், இன்றோ அல்லாஹ் இஸ்லாத்தை ஓங்கச் செய்துவிட்டான். இன்று இறைநம்பிக்கையாளர், தாம் விரும்பிய இடத்தில் தம் இறைவனை வழிபடலாம். ஆயினும் (“ஹிஜ்ரத்'தான் இனி இல்லையே தவிர) ஜிஹாத் (எனும் அறப்போர்) புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் (இன்றும்) உண்டு” என்று பதிலளித்தார்கள்.149


அத்தியாயம் : 63
3901. حَدَّثَنِي زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، قَالَ هِشَامٌ فَأَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ سَعْدًا، قَالَ اللَّهُمَّ إِنَّكَ تَعْلَمُ أَنَّهُ لَيْسَ أَحَدٌ أَحَبَّ إِلَىَّ أَنْ أُجَاهِدَهُمْ فِيكَ مِنْ قَوْمٍ كَذَّبُوا رَسُولَكَ صلى الله عليه وسلم وَأَخْرَجُوهُ، اللَّهُمَّ فَإِنِّي أَظُنُّ أَنَّكَ قَدْ وَضَعْتَ الْحَرْبَ بَيْنَنَا وَبَيْنَهُمْ. وَقَالَ أَبَانُ بْنُ يَزِيدَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيهِ أَخْبَرَتْنِي عَائِشَةُ مِنْ قَوْمٍ كَذَّبُوا نَبِيَّكَ وَأَخْرَجُوهُ مِنْ قُرَيْشٍ.
பாடம் : 45 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் (மக்காவைத் துறந்து)மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது142 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைமார்க்கத்தைப் பாதுகாக்க மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செல்ல வேண்டியிருந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப் பேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.143 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு பூமிக்கு நான் ஹிஜ்ரத் செல்வதாகக் கனவில் கண்டேன். அது யமாமா அல்லது ஹஜராக இருக்கும் என்று கருதினேன். ஆனால், (இறைக்கட்டளை வந்த) பிறகுதான் அது “யஸ்ரிப்' எனப்படும் மதீனா நகரம் என்று தெரியவந்தது. இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.144
3901. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள், “இறைவா! உன் பாதையில் யாரை எதிர்த்துப் போர் புரிய நான் மிகவும் விரும்புகின்றேனோ அவர்கள் உன் தூதரை நம்ப மறுத்து அவர்களை (மக்கா விலிருந்து) வெளியேற்றிய சமுதாயத்தார் தான் என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் அவர்களுக்குமிடையிலான போரை நீ முடித்து வைத்துவிட்டாய் என நான் எண்ணுகிறேன்” என்று (தம் மரணத் தறுவாயில்) கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவே வரும் மற்றோர் அறிவிப்பில், “உன் னுடைய நபியை நம்ப மறுத்து அவர்களை வெளியேற்றிய குறைஷிச் சமுதாயத்தார் தான்” என்று (சிறிய வித்தியாசத்துடன்) சஅத் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.


அத்தியாயம் : 63
3902. حَدَّثَنَا مَطَرُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بُعِثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَرْبَعِينَ سَنَةً، فَمَكُثَ بِمَكَّةَ ثَلاَثَ عَشْرَةَ سَنَةً يُوحَى إِلَيْهِ، ثُمَّ أُمِرَ بِالْهِجْرَةِ فَهَاجَرَ عَشْرَ سِنِينَ، وَمَاتَ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ.
பாடம் : 45 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் (மக்காவைத் துறந்து)மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது142 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைமார்க்கத்தைப் பாதுகாக்க மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செல்ல வேண்டியிருந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப் பேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.143 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு பூமிக்கு நான் ஹிஜ்ரத் செல்வதாகக் கனவில் கண்டேன். அது யமாமா அல்லது ஹஜராக இருக்கும் என்று கருதினேன். ஆனால், (இறைக்கட்டளை வந்த) பிறகுதான் அது “யஸ்ரிப்' எனப்படும் மதீனா நகரம் என்று தெரியவந்தது. இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.144
3902. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நாற்பதாம் வயதில் நபியாக நியமிக்கப் பட்டார்கள். தமக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பட்டுவந்த நிலையில் மக்காவில் பதிமூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட, ஹிஜ்ரத் செய்து (மதீனாவில்) பத்தாண்டுகள் வாழ்ந்துவந் தார்கள். தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.150


அத்தியாயம் : 63
3903. حَدَّثَنِي مَطَرُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَكَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَكَّةَ ثَلاَثَ عَشْرَةَ، وَتُوُفِّيَ وَهْوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ.
பாடம் : 45 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் (மக்காவைத் துறந்து)மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது142 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைமார்க்கத்தைப் பாதுகாக்க மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செல்ல வேண்டியிருந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப் பேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.143 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு பூமிக்கு நான் ஹிஜ்ரத் செல்வதாகக் கனவில் கண்டேன். அது யமாமா அல்லது ஹஜராக இருக்கும் என்று கருதினேன். ஆனால், (இறைக்கட்டளை வந்த) பிறகுதான் அது “யஸ்ரிப்' எனப்படும் மதீனா நகரம் என்று தெரியவந்தது. இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.144
3903. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபியாக்கப்பட்டபின்) மக்காவில் பதிமூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.


அத்தியாயம் : 63
3904. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عُبَيْدٍ ـ يَعْنِي ابْنَ حُنَيْنٍ ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ "" إِنَّ عَبْدًا خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا مَا شَاءَ، وَبَيْنَ مَا عِنْدَهُ، فَاخْتَارَ مَا عِنْدَهُ "". فَبَكَى أَبُو بَكْرٍ وَقَالَ فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا. فَعَجِبْنَا لَهُ، وَقَالَ النَّاسُ انْظُرُوا إِلَى هَذَا الشَّيْخِ، يُخْبِرُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ عَبْدٍ خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ وَهْوَ يَقُولُ فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا. فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ الْمُخَيَّرَ، وَكَانَ أَبُو بَكْرٍ هُوَ أَعْلَمَنَا بِهِ. وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ مِنْ أَمَنِّ النَّاسِ عَلَىَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبَا بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلاً مِنْ أُمَّتِي لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ، إِلاَّ خُلَّةَ الإِسْلاَمِ، لاَ يَبْقَيَنَّ فِي الْمَسْجِدِ خَوْخَةٌ إِلاَّ خَوْخَةُ أَبِي بَكْرٍ "".
பாடம் : 45 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் (மக்காவைத் துறந்து)மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது142 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைமார்க்கத்தைப் பாதுகாக்க மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செல்ல வேண்டியிருந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப் பேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.143 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு பூமிக்கு நான் ஹிஜ்ரத் செல்வதாகக் கனவில் கண்டேன். அது யமாமா அல்லது ஹஜராக இருக்கும் என்று கருதினேன். ஆனால், (இறைக்கட்டளை வந்த) பிறகுதான் அது “யஸ்ரிப்' எனப்படும் மதீனா நகரம் என்று தெரியவந்தது. இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.144
3904. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது) சொற்பொழிவு மேடை மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார் கள். அதில்,) “அல்லாஹ், தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவ(து எதுவாயினும் அ)தைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெருவாழ்வு)தனை எடுத்துக் கொள்ளும்படியும் (இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள) வாய்ப்பளித்தான். அப்போது அந்த அடியார் அல்லாஹ் விடமிருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று சொன்னார்கள்.

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். மேலும் (நபியவர்களை நோக்கி), “தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்” என்று சொன்னார்கள். நாங்கள் அபூபக் ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம். மக்கள், “இந்த முதியவரைப் பாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவதைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமிருப் பதை எடுத்துக்கொள்ளும்படியும் இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கிய (மகிழ்ச்சியான விஷயத்)தைத் தெரிவித்துக்கொண்டிருக்க இவர், “தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்' என்று (அழுதபடி) கூறுகிறாரே” என்று சொன்னார்கள் -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார்- அபூபக்ர் (ரலி) அவர்கள்தான் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம் தோழமையாலும் தம் செல்வத்தாலும் எனக்குப் பேருபகாரம் புரிந்தவர் அபூபக்ர் அவர்கள்தான். என் சமுதாயத்தாரிóருந்து எவரையேனும் என் உற்ற நண்பராக நான் ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக் ரையே ஆக்கிக்கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாத்தின் (காரணத்தால் உள்ள) நட்பே (சிறந்ததாகும்;) போதுமான தாகும். (எனது இந்தப்) பள்ளிவாசலில் உள்ள வாசல்களில் அபூபக்ரின் வாசல் தவிர மற்றவை கண்டிப்பாக நீடிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.151


அத்தியாயம் : 63
3905. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ قَطُّ إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً، فَلَمَّا ابْتُلِيَ الْمُسْلِمُونُ خَرَجَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا نَحْوَ أَرْضِ الْحَبَشَةِ، حَتَّى بَلَغَ بَرْكَ الْغِمَادِ لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ وَهْوَ سَيِّدُ الْقَارَةِ. فَقَالَ أَيْنَ تُرِيدُ يَا أَبَا بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ أَخْرَجَنِي قَوْمِي، فَأُرِيدُ أَنْ أَسِيحَ فِي الأَرْضِ وَأَعْبُدَ رَبِّي. قَالَ ابْنُ الدَّغِنَةِ فَإِنَّ مِثْلَكَ يَا أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ وَلاَ يُخْرَجُ، إِنَّكَ تَكْسِبُ الْمَعْدُومَ، وَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ، فَأَنَا لَكَ جَارٌ، ارْجِعْ وَاعْبُدْ رَبَّكَ بِبَلَدِكَ. فَرَجَعَ وَارْتَحَلَ مَعَهُ ابْنُ الدَّغِنَةِ، فَطَافَ ابْنُ الدَّغِنَةِ عَشِيَّةً فِي أَشْرَافِ قُرَيْشٍ، فَقَالَ لَهُمْ إِنَّ أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ مِثْلُهُ وَلاَ يُخْرَجُ، أَتُخْرِجُونَ رَجُلاً يَكْسِبُ الْمَعْدُومَ، وَيَصِلُ الرَّحِمَ، وَيَحْمِلُ الْكَلَّ، وَيَقْرِي الضَّيْفَ، وَيُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ فَلَمْ تُكَذِّبْ قُرَيْشٌ بِجِوَارِ ابْنِ الدَّغِنَةِ، وَقَالُوا لاِبْنِ الدَّغِنَةِ مُرْ أَبَا بَكْرٍ فَلْيَعْبُدْ رَبَّهُ فِي دَارِهِ، فَلْيُصَلِّ فِيهَا وَلْيَقْرَأْ مَا شَاءَ، وَلاَ يُؤْذِينَا بِذَلِكَ، وَلاَ يَسْتَعْلِنْ بِهِ، فَإِنَّا نَخْشَى أَنْ يَفْتِنَ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا. فَقَالَ ذَلِكَ ابْنُ الدَّغِنَةِ لأَبِي بَكْرٍ، فَلَبِثَ أَبُو بَكْرٍ بِذَلِكَ يَعْبُدُ رَبَّهُ فِي دَارِهِ، وَلاَ يَسْتَعْلِنُ بِصَلاَتِهِ، وَلاَ يَقْرَأُ فِي غَيْرِ دَارِهِ، ثُمَّ بَدَا لأَبِي بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ وَكَانَ يُصَلِّي فِيهِ وَيَقْرَأُ الْقُرْآنَ، فَيَنْقَذِفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ، وَهُمْ يَعْجَبُونَ مِنْهُ، وَيَنْظُرُونَ إِلَيْهِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً، لاَ يَمْلِكُ عَيْنَيْهِ إِذَا قَرَأَ الْقُرْآنَ، وَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ، فَأَرْسَلُوا إِلَى ابْنِ الدَّغِنَةِ، فَقَدِمَ عَلَيْهِمْ. فَقَالُوا إِنَّا كُنَّا أَجَرْنَا أَبَا بَكْرٍ بِجِوَارِكَ، عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ، فَقَدْ جَاوَزَ ذَلِكَ، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، فَأَعْلَنَ بِالصَّلاَةِ وَالْقِرَاءَةِ فِيهِ، وَإِنَّا قَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا فَانْهَهُ، فَإِنْ أَحَبَّ أَنْ يَقْتَصِرَ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ فَعَلَ، وَإِنْ أَبَى إِلاَّ أَنْ يُعْلِنَ بِذَلِكَ فَسَلْهُ أَنْ يَرُدَّ إِلَيْكَ ذِمَّتَكَ، فَإِنَّا قَدْ كَرِهْنَا أَنْ نُخْفِرَكَ، وَلَسْنَا مُقِرِّينَ لأَبِي بَكْرٍ الاِسْتِعْلاَنَ. قَالَتْ عَائِشَةُ فَأَتَى ابْنُ الدَّغِنَةِ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ قَدْ عَلِمْتَ الَّذِي عَاقَدْتُ لَكَ عَلَيْهِ، فَإِمَّا أَنْ تَقْتَصِرَ عَلَى ذَلِكَ، وَإِمَّا أَنْ تَرْجِعَ إِلَىَّ ذِمَّتِي، فَإِنِّي لاَ أُحِبُّ أَنْ تَسْمَعَ الْعَرَبُ أَنِّي أُخْفِرْتُ فِي رَجُلٍ عَقَدْتُ لَهُ. فَقَالَ أَبُو بَكْرٍ فَإِنِّي أَرُدُّ إِلَيْكَ جِوَارَكَ وَأَرْضَى بِجِوَارِ اللَّهِ عَزَّ وَجَلَّ. وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ بِمَكَّةَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلْمُسْلِمِينَ "" إِنِّي أُرِيتُ دَارَ هِجْرَتِكُمْ ذَاتَ نَخْلٍ بَيْنَ لاَبَتَيْنِ "". وَهُمَا الْحَرَّتَانِ، فَهَاجَرَ مَنْ هَاجَرَ قِبَلَ الْمَدِينَةِ، وَرَجَعَ عَامَّةُ مَنْ كَانَ هَاجَرَ بِأَرْضِ الْحَبَشَةِ إِلَى الْمَدِينَةِ، وَتَجَهَّزَ أَبُو بَكْرٍ قِبَلَ الْمَدِينَةِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" عَلَى رِسْلِكَ، فَإِنِّي أَرْجُو أَنْ يُؤْذَنَ لِي "". فَقَالَ أَبُو بَكْرٍ وَهَلْ تَرْجُو ذَلِكَ بِأَبِي أَنْتَ قَالَ "" نَعَمْ "". فَحَبَسَ أَبُو بَكْرٍ نَفْسَهُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِيَصْحَبَهُ، وَعَلَفَ رَاحِلَتَيْنِ كَانَتَا عِنْدَهُ وَرَقَ السَّمُرِ وَهْوَ الْخَبَطُ أَرْبَعَةَ أَشْهُرٍ. قَالَ ابْنُ شِهَابٍ قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ فَبَيْنَمَا نَحْنُ يَوْمًا جُلُوسٌ فِي بَيْتِ أَبِي بَكْرٍ فِي نَحْرِ الظَّهِيرَةِ قَالَ قَائِلٌ لأَبِي بَكْرٍ هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُتَقَنِّعًا ـ فِي سَاعَةٍ لَمْ يَكُنْ يَأْتِينَا فِيهَا ـ فَقَالَ أَبُو بَكْرٍ فِدَاءٌ لَهُ أَبِي وَأُمِّي، وَاللَّهِ مَا جَاءَ بِهِ فِي هَذِهِ السَّاعَةِ إِلاَّ أَمْرٌ. قَالَتْ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَ، فَأُذِنَ لَهُ فَدَخَلَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي بَكْرٍ "" أَخْرِجْ مَنْ عِنْدَكَ "". فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّمَا هُمْ أَهْلُكَ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَإِنِّي قَدْ أُذِنَ لِي فِي الْخُرُوجِ "". فَقَالَ أَبُو بَكْرٍ الصَّحَابَةُ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" نَعَمْ "". قَالَ أَبُو بَكْرٍ فَخُذْ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ إِحْدَى رَاحِلَتَىَّ هَاتَيْنِ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بِالثَّمَنِ "". قَالَتْ عَائِشَةُ فَجَهَّزْنَاهُمَا أَحَثَّ الْجَهَازِ، وَصَنَعْنَا لَهُمَا سُفْرَةً فِي جِرَابٍ، فَقَطَعَتْ أَسْمَاءُ بِنْتُ أَبِي بَكْرٍ قِطْعَةً مَنْ نِطَاقِهَا فَرَبَطَتْ بِهِ عَلَى فَمِ الْجِرَابِ، فَبِذَلِكَ سُمِّيَتْ ذَاتَ النِّطَاقِ ـ قَالَتْ ـ ثُمَّ لَحِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ بِغَارٍ فِي جَبَلِ ثَوْرٍ فَكَمَنَا فِيهِ ثَلاَثَ لَيَالٍ، يَبِيتُ عِنْدَهُمَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ وَهْوَ غُلاَمٌ شَابٌّ ثَقِفٌ لَقِنٌ، فَيُدْلِجُ مِنْ عِنْدِهِمَا بِسَحَرٍ، فَيُصْبِحُ مَعَ قُرَيْشٍ بِمَكَّةَ كَبَائِتٍ، فَلاَ يَسْمَعُ أَمْرًا يُكْتَادَانِ بِهِ إِلاَّ وَعَاهُ، حَتَّى يَأْتِيَهُمَا بِخَبَرِ ذَلِكَ حِينَ يَخْتَلِطُ الظَّلاَمُ، وَيَرْعَى عَلَيْهِمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ مَوْلَى أَبِي بَكْرٍ مِنْحَةً مِنْ غَنَمٍ، فَيُرِيحُهَا عَلَيْهِمَا حِينَ يَذْهَبُ سَاعَةٌ مِنَ الْعِشَاءِ، فَيَبِيتَانِ فِي رِسْلٍ وَهْوَ لَبَنُ مِنْحَتِهِمَا وَرَضِيفِهِمَا، حَتَّى يَنْعِقَ بِهَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ بِغَلَسٍ، يَفْعَلُ ذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ تِلْكَ اللَّيَالِي الثَّلاَثِ، وَاسْتَأْجَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ رَجُلاً مِنْ بَنِي الدِّيلِ، وَهْوَ مِنْ بَنِي عَبْدِ بْنِ عَدِيٍّ هَادِيًا خِرِّيتًا ـ وَالْخِرِّيتُ الْمَاهِرُ بِالْهِدَايَةِ ـ قَدْ غَمَسَ حِلْفًا فِي آلِ الْعَاصِ بْنِ وَائِلٍ السَّهْمِيِّ، وَهْوَ عَلَى دِينِ كُفَّارِ قُرَيْشٍ فَأَمِنَاهُ، فَدَفَعَا إِلَيْهِ رَاحِلَتَيْهِمَا، وَوَاعَدَاهُ غَارَ ثَوْرٍ بَعْدَ ثَلاَثِ لَيَالٍ بِرَاحِلَتَيْهِمَا صُبْحَ ثَلاَثٍ، وَانْطَلَقَ مَعَهُمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ وَالدَّلِيلُ فَأَخَذَ بِهِمْ طَرِيقَ السَّوَاحِلِ.
பாடம் : 45 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் (மக்காவைத் துறந்து)மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது142 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைமார்க்கத்தைப் பாதுகாக்க மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செல்ல வேண்டியிருந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப் பேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.143 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு பூமிக்கு நான் ஹிஜ்ரத் செல்வதாகக் கனவில் கண்டேன். அது யமாமா அல்லது ஹஜராக இருக்கும் என்று கருதினேன். ஆனால், (இறைக்கட்டளை வந்த) பிறகுதான் அது “யஸ்ரிப்' எனப்படும் மதீனா நகரம் என்று தெரியவந்தது. இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.144
3905. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

என் பெற்றோர் (அபூபக்ரும் உம்மு ரூமானும்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை. (மக்கா நகரில் வாழ்ந்த) முஸ்லிம்கள் இணை வைப்பவர் களால் பல்வேறு துன்பங்கள்) சோதனை களுக்கு உள்ளாக்கப்பட்டபோது, அபூபக்ர் அவர்கள் அபிசீனிய நாட்டை நோக்கி, நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள்.

அவர்கள் (யமன் செல்லும் வழியில்) “பர்குல் கிமாத்'152 எனும் இடத்தை அடைந்தபோது இப்னுத் தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். -அவர் “அல்காரா' எனும் (பிரபல) குலத்தின் தலைவராவார்- அவர் “அபூபக்ரே எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார்.

“என் சமுதாயத்தார் என்னை (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்குத் தள்ளிவிட்டனர். ஆகவே, நான் பூமியில் பரவலாகப் பயணம் செய்து (நிம்மதியாக) என் இறைவனை வழிபடப்போகிறேன்” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது இப்னுத் தஃகினா, “அபூபக்ரே! தங்களைப் போன்றவர்கள் (தாமாகவும்) வெளியேறக் கூடாது, (பிறரால்) வெளியேற்றப்படவும் கூடாது. (ஏனெனில்) நீங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். இரத்த பந்த உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள். விருந்தினர் களை உபசரிக்கிறீர்கள். சத்திய சோதனை களில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள் என்று (அவர்களின் அறச் சேவைகளைப் புகழ்ந்து) கூறிவிட்டு, “தங்களுக்கு நான் அடைக்கலம் தரு கிறேன். நீங்கள் (மக்காவிற்கே) திரும்பிச் சென்று உங்களது (அந்த) ஊரிலேயே உங்கள் இறைவனை வழிபடுங்கள்” என்று கூறினார்.

அபூபக்ர் (அபிசீனிய பயணத்தை ரத்துச் செய்துவிட்டு மக்காவிற்குத்) திரும்பினார்கள். அவர்களுடன் இப்னுத் தஃகினாவும் பயணமா(கித் திரும்பி)னார். மாலையில் இப்னுத் தஃகினா குறைஷிக் குல பிரமுகர்களைப் போய்ச் சந்தித்து அவர்களிடம், “(நாட்டு மக்களுக்காகப் பாடுபடும்) அபூபக்ரைப் போன்றவர்கள் (நாட்டிலிருந்து தாமாக) வெளியேறுவதோ, (பிறரால்) வெளியேற்றப்படுவதோ கூடாது. ஏழைகளுக்கு உழைக்கும், உறவுகளைப் பேணி வாழும், (சிரமப்படுவர்களின்) பாரஞ் சுமந்துவரும், விருந்தினர்களை உபசரித்துவரும், சத்திய சோதனைகளில் (ஆட்படுத்தப்பட்டோருக்கு) உதவிவரும் ஒரு (ஒப்பற்ற) மனிதரையா (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்கு உள்ளாக்குகிறீர்கள்?” என்று கேட்டார்.

(அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தாம் அடைக்கலம் தரப்போவதாகக் கோரிய) இப்னுத் தஃகினாவின் அடைக்கலத்தை குறைஷியர் மறுக்கவில்லை. அவர்கள் இப்னுத் தஃகினாவை நோக்கி, “அபூபக்ர், தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வழிபடவோ, தொழவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ இவற்றைப் பகிரங்கமாகச் செய்யவோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி, மக்கள் (புதிய மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்ப மடைந்துவிடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என அவரிடம் கூறி விடுங்கள்” என்று சொன்னார்கள்.

அ(வர்கள் கூறிய)தை இப்னுத் தஃகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். அதன்படி அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது இல்லத்திற்குள் தம்முடைய இறைவனை வழிபட்டும், தமது தொழுகை யைப் பகிரங்கப்படுத்தாமலும் தமது வீட்டுக்கு வெளியில் (திருக்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்துவந்தார்கள்.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுதுகொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது, இணைவைப்பாளர்களின் மனைவி, மக்கள் அபூபக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு (அவர்களைச் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்காக) அவர்கள்மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும்போது தம் கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள்.

(அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தம்முடைய இளகிய இதயம் படைத்த மனைவி, மக்களை மதம்மாறச் செய்துவிடுமோ என்ற அச்சம்) இணைவைப்பாளர்களான குறைஷியரைப் பீதிக்குள்ளாக்கியது.153

அதனால் அவர்கள் இப்னுத் தஃகினாவிடம் ஆளனுப்பினர். அவரும் குறைஷியரிடம் வந்தார்.

அப்போது அவர்கள், “அபூபக்ர் தமது இல்லத்திற்குள்ளேயே தம் இறைவனை வழிபட்டுக்கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறிவிட்டுத் தமது வீட்டுமுற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாகத் தொழுதுகொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி, மக்கள் குழப்பத்திற்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே அபூபக்ரைத் தடுத்துவையுங்கள். அவர், அவருடைய இறைவனைத் தமது இல்லத்தில் வழிபடுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்துப் பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால், அவரிடம் உமது (அடைக்கலப்) பொறுப் பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களது உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்கள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூபக்ர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிப்போராகவும் இல்லை” என்று கூறினர்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னுத் தஃகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “நான் எ(ந்)த (நிபந்தனையி)ன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அல்லது எனது (அடைக்கலப்) பொறுப்பை என்னிடம் திரும்பத் தந்துவிட வேண்டும். ஏனென்றால், நான் உடன்படிக்கை செய்துகொண்ட ஒரு மனிதரின் விஷயத்தில் ஏமாற்றப்பட்டேன் என்று அரபியர் கேள்விப்படுவதை நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “உமது அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்துவிடுகிறேன். வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து நான் திருப்திப்படுகிறேன்” என்று கூறினார்கள். அன்றைக்கு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்துகொண்டி ருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து, “இரு கருங்கல் மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் நிறைந்த (மதீனா) பகுதியை நீங்கள் ஹிஜ்ரத் செல்கின்ற நாடாக நான் (கனவில்) காட்டப்பட்டேன்” என்று கூறினார்கள்.

எனவே, மதீனா நோக்கி ஹிஜ்ரத் சென்றவர்கள் சென்றார்கள். (ஏற்கெனவே) அபிசீனிய நாட்டிற்கு ஹிஜ்ரத் சென்றிருந்த வர்கள் பலர் (முஸ்லிம்கள் மதீனாவில் குடியேறுவதைக் கேள்விப்பட்டு) மதீனா வுக்குத் திரும்பினார்கள். (மக்காவிலிருந்து) அபூபக்ர் அவர்களும் மதீனா நோக்கி (ஹிஜ்ரத் புறப்பட) ஆயத்தமானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சற்று பொறுங்கள். எனக்கு (ஹிஜ்ரத்திற்கு) அனுமதி வழங்கப்படுவதை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) கூறினார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “என் தந்தை தங்களுக்கு அர்ப்பணம்; அனுமதியை(த்தான்) எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு, “ஆம் (எதிர்பார்க்கிறேன்)” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ஆகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஹிஜ்ரத்) செல்வதற்காகத் தன்(பயணத்தி)னை நிறுத்தினார்கள். மேலும் அபூபக்ர் அவர்கள் (இந்தப் பயணத்திற் காகவே) தம்மிடம் இருந்த இரு ஊர்தி ஒட்டகங்களுக்கு நான்கு மாதம் கருவேலந் தழையைத் தீனிபோட்டு (வளர்த்து)வந்தார்கள்.154

ஆயிஷா (ரலி) அவர்கள் (தொடர்ந்து) கூறுகிறார்கள்:

நாங்கள் ஒருநாள் அபூபக்ர் (ரலி) அவர்களின் இல்லத்தில் உச்சிப் பொழுதில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது தலையை மூடிய வண்ணம் -நம்மிடம் வருகை தராத ஒரு நேரத்தில் (வழக்கத்திற்கு மாற்றமாக)- இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “என் தந்தையும் என் தாயும் (நபி) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதோ (முக்கிய) விஷயம் தான் அவர்களை இந்த நேரத்தில் (இங்கு) வரச்செய்திருக்கிறது” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (இல்லத்திற்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட வுடன் அவர்கள் உள்ளே நுழைந்து, அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “உங்களிடம் இருப்பவர்களை வெளியேபோகச் சொல்லுங்கள். (உங்களிடம் ஒரு ரகசியம் பேச வேண்டும்)” என்று கூறினார்கள்.

அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் (இல்லத்திற்குள் இருக்கும்) இவர்கள் உங்களுடைய (துணைவியின்) குடும்பத்தார்தான். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்ல எனக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது” என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “தங்களுடன் நானும் வர விரும்புகிறேன்! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். “சரி! (நீங்களும் வாருங்கள்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த என் இரு ஊர்தி ஒட்டகங்களில் ஒன்றைத் தாங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “விலைக்குத்தான் (இதை நான் எடுத்துக்கொள்வேன்)” என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அவர்கள் இருவருக்காகவும் தேவையான பயண ஏற்பாடுகளை வெகு விரைவாக நாங்கள் செய்து முடித்தோம். ஒரு தோல்பையில் பயண உணவை நாங்கள் தயார் செய்துவைத்தோம். அப்போது அபூபக்ரின் மகள் (என் சகோதரி) அஸ்மா தனது இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டை(க் கிழித்து) அதை அந்தப் பையின் வாய்மீது வைத்துக் கட்டினார்கள். இதனால்தான் அவர்களுக்கு “கச்சுடையாள்' என்று பெயர் வந்தது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (பயணம் புறப்பட்டு) “ஸவ்ர்' மலையில் உள்ள ஒரு குகைக்கு வந்து சேர்ந்து அதில் மூன்று நாட்கள் ஒளிந்திருந்தார்கள்.

(அந்த மூன்று நாட்களில்) அவர்கள் இருவருடன் அப்துல்லாஹ் பின் அபீபக்ரும் இரவில் வந்து தங்கியிருப்பார் -அவர் சமயோசித அறிவு படைத்த, புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார்- பின்னிரவு (சஹர்) நேரத்தில் அவர்கள் இருவரைவிட்டுப் புறப்பட்டு மக்கா குறைஷியருடன் இரவில் தங்கியிருந்தவர் போல அவர்களுடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவரைப் பற்றி (குறைஷியரால் செய்யப்படும்) சூழ்ச்சிகளைக் கேட்டு, அவற்றை நினைவில் இருத்திக்கொண்டு இருள் கவிழும் நேரத்தில் அவர்கள் இருவரிடமும் அந்தச் செய்திகளைக் கொண்டுவந்துவிடுவார்.

அவர்கள் இருவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை ஆமிர் பின் ஃபுஹைரா (அபூபக்ர் அவர்களின்) மந்தையிலிருந்து ஒரு பால் தரும் ஆட்டை மேய்த்து வருவார். இரவில் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிடமும் ஓட்டிவருவார். அந்தப்பாலிலேயே இருவரும் இரவைக் கழித்துவிடுவார்கள்-அது புத்தம் புதிய, அடர்த்தி அகற்றப்பட்ட பாலாகும் -அந்த ஆட்டை ஆமிர் பின் ஃபுஹைரா இரவின் இருட்டு இருக்கும்போதே விரட்டிச் சென்றுவிடுவார். இதை (அவர்கள் இருவரும் அந்தக் குகையில் தங்கியிருந்த) மூன்று இரவுகளில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்துவந்தார்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் பனூ அப்த் பின் அதீ குலத்தில் “பனூ அத்தீல்' எனும் கிளையைச் சேர்ந்த கை தேர்ந்த ஒருவரை155 பயண வழிகாட்டி யாக இருக்கக் கூலிக்கு அமர்த்தினர். அவர் ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ எனும் குலத்தாருடன் நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தார். (ஆனாலும்) அவர் குறைஷி இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அவரை நம்பி, தங்களது இரு ஊர்தி ஒட்டகங்களை ஒப்படைத்து மூன்று இரவுகளுக்குப் பின் “ஸவ்ர்' குகைக்கு வந்துவிடுமாறு வாக்குறுதி வாங்கியிருந்தனர். மூன்றாம் (நாள்) அதிகாலையில் அந்த இரு ஊர்திகளுடன் (அவர் ஸவ்ர் குகைக்கு வந்து சேர்ந்தார்.) அவர்கள் இருவருடன் ஆமிர் பின் ஃபுஹைராவும் பயண வழிகாட்டியும் சென்றனர். பயண வழிகாட்டி அவர்களைக் கடற்கரைப் பாதையில் அழைத்துச் சென்றார்.156


அத்தியாயம் : 63