3866. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ، أَنَّ سَالِمًا، حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ مَا سَمِعْتُ عُمَرَ، لِشَىْءٍ قَطُّ يَقُولُ إِنِّي لأَظُنُّهُ كَذَا. إِلاَّ كَانَ كَمَا يَظُنُّ، بَيْنَمَا عُمَرُ جَالِسٌ إِذْ مَرَّ بِهِ رَجُلٌ جَمِيلٌ فَقَالَ لَقَدْ أَخْطَأَ ظَنِّي، أَوْ إِنَّ هَذَا عَلَى دِينِهِ فِي الْجَاهِلِيَّةِ، أَوْ لَقَدْ كَانَ كَاهِنَهُمْ، عَلَىَّ الرَّجُلَ، فَدُعِيَ لَهُ، فَقَالَ لَهُ ذَلِكَ، فَقَالَ مَا رَأَيْتُ كَالْيَوْمِ اسْتُقْبِلَ بِهِ رَجُلٌ مُسْلِمٌ، قَالَ فَإِنِّي أَعْزِمُ عَلَيْكَ إِلاَّ مَا أَخْبَرْتَنِي. قَالَ كُنْتُ كَاهِنَهُمْ فِي الْجَاهِلِيَّةِ. قَالَ فَمَا أَعْجَبُ مَا جَاءَتْكَ بِهِ جِنِّيَّتُكَ قَالَ بَيْنَمَا أَنَا يَوْمًا فِي السُّوقِ جَاءَتْنِي أَعْرِفُ فِيهَا الْفَزَعَ، فَقَالَتْ أَلَمْ تَرَ الْجِنَّ وَإِبْلاَسَهَا وَيَأْسَهَا مِنْ بَعْدِ إِنْكَاسِهَا وَلُحُوقَهَا بِالْقِلاَصِ وَأَحْلاَسِهَا قَالَ عُمَرُ صَدَقَ، بَيْنَمَا أَنَا عِنْدَ آلِهَتِهِمْ إِذْ جَاءَ رَجُلٌ بِعِجْلٍ فَذَبَحَهُ، فَصَرَخَ بِهِ صَارِخٌ، لَمْ أَسْمَعْ صَارِخًا قَطُّ أَشَدَّ صَوْتًا مِنْهُ يَقُولُ يَا جَلِيحْ، أَمْرٌ نَجِيحْ رَجُلٌ فَصِيحْ يَقُولُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ. فَوَثَبَ الْقَوْمُ قُلْتُ لاَ أَبْرَحُ حَتَّى أَعْلَمَ مَا وَرَاءَ هَذَا ثُمَّ نَادَى يَا جَلِيحْ، أَمْرٌ نَجِيحْ، رَجُلٌ فَصِيحْ، يَقُولُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَقُمْتُ فَمَا نَشِبْنَا أَنْ قِيلَ هَذَا نَبِيٌّ.
பாடம் : 35 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது
3866. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் (ஒரு விஷயத் தைப் பற்றி), “நான் இதைக் குறித்து இப்படிக் கருதுகிறேன்” என்று சொல்ல நான் கேட்பேனாயின், அந்த விஷயம் அவர்கள் கூறியதைப் போலத்தான் இருக்கும்.

ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் (தம் இடத்தில்) அமர்ந்திருந்தபொழுது அழகான ஒரு மனிதர் அவர்களைக் கடந்து சென்றார். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஒன்று நான் (இவர் அஞ்ஞானக் கலாசாரத்தில் இருப்பவர் என்று) நினைத்தது தவறாயிருக்க வேண்டும்; அல்லது (நான் நினைத்தது சரியாக இருக்குமானால்) இந்த மனிதர் தமது (பழைய) அறியாமைக் கால மார்க்கத்திலேயே இருக்க வேண்டும்; அல்லது (அறியாமைக் கால) அம்மக்களுக்குக் குறிசொல்பவராக (சோதிடராக) இருந்திருக்க வேண்டும். அந்த மனிதரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னார்கள்.

அவ்வாறே அவர், உமர் (ரலி) அவர்களிடம் அழைத்துவரப்பட்டார். உமர் (ரலி) அவர்கள், தாம் (முன்பு சந்தேகத்துடன்) கூறியதையே அந்த மனிதரிடமும் கேட்டார்கள். அந்த மனிதர் (தம்மைப் பற்றி உமர் முன்வைத்த சந்தேகத்தால் வெறுப்படைந்தவராய்), “இன்று ஒரு முஸ்லிமான மனிதருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு போன்று நான் (எப்போதும்) பார்த்ததில்லை” என்று சொன்னார்.

உமர் (ரலி) அவர்கள், “நீ எனக்கு (அறியாமைக் காலத்தில் நடந்த) செய்தியைச் சொல்லத்தான் வேண்டும் என்று விரும்பு கிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “நான் அறியாமைக் காலத்தில் அம்மக்களின் சோதிடனாக (குறிகாரனாக) இருந்தேன்” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள், “உனது பெண் ஜின் உன்னிடம் கொண்டுவந்த செய்திகளிலேயே மிகவும் வியப்புக்குரியது எது?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “நான் ஒரு நாள் கடைவீதியில் இருந்தபோது, பெண் ஜின் என்னிடம் வந்தது. அதனிடம் பீதியைக் கண்டேன். அப்போது “ஜின்கள் அடைந்துள்ள அச்சத்தை நீங்கள் பார்க்கவில்லையா? அவை (மேலுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாமல்) தோல்வியுற்றுத் திரும்புவதால் அடைந்துள்ள நிராசையை யும் நீங்கள் பார்க்கவில்லையா? அவை இளம் ஒட்டகங்களையும் அவற்றின் (சேண இருக்கையின் கீழே விரிக்கப்படும்) துணியையும் பின்பற்றிச் செல்வதைக் காணவில்லையா?'108 என்று கேட்டது” என்று சொன்னார்.

உமர் (ரலி) அவர்கள், “இவர் உண்மை சொன்னார். நான் (கஅபாவில்) இணைவைப்பாளர்களின் கடவுள் (சிலை)களுக்கு அருகே தூங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் காளைக் கன்று ஒன்றைக் கொண்டுவந்து (பலி கொடுத்து) அதை அறுத்தார். அப்போது அசரீரிக் குரல் ஒன்று வந்தது. அதைவிடக் கடுமையான குரலில் குரல் கொடுப்பவர் எவரையும் நான் செவியுற்றதேயில்லை. அது, “பகிரங்கமாகப் பகைத்துக்கொண்டவரே! வெற்றிகரமான ஒரு விஷயம். பேச்சுத் திறனுள்ள ஒரு மனிதர், “(அல்லாஹ்வே!) உன்னைத் தவிர வேறு இறைவனில்லை' என்று சொல்வார்” என்று குரல் கொடுத்தது. உடனே (இணைவைக்கும்) மக்கள் குதித்தெழுந்தார்கள்.

நான், “இந்த மர்மக் குரலுக்குப் பின்னால் என்ன உள்ளது என்பதை அறிந்துகொள்ளாமல் விடமாட்டேன்” என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) அந்த அசரீரி, “பகிரங்கமாகப் பகைத்துக் கொண்டவரே! வெற்றிகரமான ஒரு விஷயம். பேச்சுத் திறனுள்ள ஒரு மனிதர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை' என்று சொல்வார்” என்று குரல் கொடுத்தது. நான் எழுந்து சென்றுவிட்டேன். சிறிது காலத்திற்குள்ளாகவே, “இதோ ஒரு நபி (வந்துவிட்டார்)” என்று சொல்லப் பட்டது.


அத்தியாயம் : 63
3867. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا قَيْسٌ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ زَيْدٍ، يَقُولُ لِلْقَوْمِ لَوْ رَأَيْتُنِي مُوثِقِي عُمَرُ عَلَى الإِسْلاَمِ أَنَا وَأُخْتُهُ وَمَا أَسْلَمَ، وَلَوْ أَنَّ أُحُدًا انْقَضَّ لِمَا صَنَعْتُمْ، بِعُثْمَانَ لَكَانَ مَحْقُوقًا أَنْ يَنْقَضَّ.
பாடம் : 35 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது
3867. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“உமர் அவர்கள், நானும் அவருடைய சகோதரியும் இஸ்லாத்தை ஏற்றதற்காக என்னைக் கட்டிவைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டிருக்கிறேன். -அப்போது அவர் முஸ்லிமாயிருக்க வில்லை. -உஸ்மான் (ரலி) அவர்கள் விஷயத்தில் (அன்னாரைக் கொலை செய்து) நீங்கள் நடந்துகொண்ட (விதத்)தைக் கண்டு (மனம் தாளாமல்) உஹுத் மலை தனது இடத்தைவிட்டுப் பெயர்ந்து விட்டால் அதுவும் சரியானதே” என்று (கூஃபாவின் மஸ்ஜிதில் கூடியிருந்த) மக்களிடம் சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.109

அத்தியாயம் : 63
3868. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ أَهْلَ، مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُرِيَهُمْ آيَةً، فَأَرَاهُمُ الْقَمَرَ شِقَّتَيْنِ، حَتَّى رَأَوْا حِرَاءً بَيْنَهُمَا.
பாடம் : 36 சந்திரன் பிளவுண்ட நிகழ்ச்சி
3868. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைத்தூதர்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சந்திரனை இரு துண்டுகளாக (பிளந்திருக்க)க் காட்டினார்கள். எந்த அளவுக் கென்றால், மக்காவாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே “ஹிரா' மலையைக் கண்டார்கள்.110


அத்தியாயம் : 63
3869. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ انْشَقَّ الْقَمَرُ وَنَحْنُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِنًى فَقَالَ "" اشْهَدُوا "". وَذَهَبَتْ فِرْقَةٌ نَحْوَ الْجَبَلِ وَقَالَ أَبُو الضُّحَى عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللَّهِ انْشَقَّ بِمَكَّةَ. وَتَابَعَهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ عَنْ أَبِي مَعْمَرٍ عَنْ عَبْدِ اللَّهِ.
பாடம் : 36 சந்திரன் பிளவுண்ட நிகழ்ச்சி
3869. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் (இரு துண்டுகளாகப்) பிளவுபட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (இதைப் பார்த்து நினைவில் இருத்தி) சாட்சியாக இருங்கள்” என்று சொன்னார்கள்.

(அதன்) இரு துண்டுகளில் ஒன்று (ஹிரா) மலையின் திசையில் சென்றது.111

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், மஸ்ரூக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “மக்காவில் (சந்திரன்) பிளந்தது” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.


அத்தியாயம் : 63
3870. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، قَالَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ الْقَمَرَ، انْشَقَّ عَلَى زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 36 சந்திரன் பிளவுண்ட நிகழ்ச்சி
3870. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் சந்திரன் (இரு துண்டு களாகப்) பிளவுபட்டது.112


அத்தியாயம் : 63
3871. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ انْشَقَّ الْقَمَرُ.
பாடம் : 36 சந்திரன் பிளவுண்ட நிகழ்ச்சி
3871. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்கள் காலத்தில்) சந்தி ரன் (இரு துண்டுகளாகப்) பிளவுபட்டது.

அத்தியாயம் : 63
3872. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ، أَخْبَرَهُ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ قَالاَ لَهُ مَا يَمْنَعُكَ أَنْ تُكَلِّمَ خَالَكَ عُثْمَانَ فِي أَخِيهِ الْوَلِيدِ بْنِ عُقْبَةَ وَكَانَ أَكْثَرَ النَّاسُ فِيمَا فَعَلَ بِهِ. قَالَ عُبَيْدُ اللَّهِ فَانْتَصَبْتُ لِعُثْمَانَ حِينَ خَرَجَ إِلَى الصَّلاَةِ فَقُلْتُ لَهُ إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً وَهْىَ نَصِيحَةٌ. فَقَالَ أَيُّهَا الْمَرْءُ، أَعُوذُ بِاللَّهِ مِنْكَ، فَانْصَرَفْتُ، فَلَمَّا قَضَيْتُ الصَّلاَةَ جَلَسْتُ إِلَى الْمِسْوَرِ وَإِلَى ابْنِ عَبْدِ يَغُوثَ، فَحَدَّثْتُهُمَا بِالَّذِي قُلْتُ لِعُثْمَانَ وَقَالَ لِي. فَقَالاَ قَدْ قَضَيْتَ الَّذِي كَانَ عَلَيْكَ. فَبَيْنَمَا أَنَا جَالِسٌ مَعَهُمَا، إِذْ جَاءَنِي رَسُولُ عُثْمَانَ، فَقَالاَ لِي قَدِ ابْتَلاَكَ اللَّهُ. فَانْطَلَقْتُ حَتَّى دَخَلْتُ عَلَيْهِ، فَقَالَ مَا نَصِيحَتُكَ الَّتِي ذَكَرْتَ آنِفًا قَالَ فَتَشَهَّدْتُ ثُمَّ قُلْتُ إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ، وَكُنْتَ مِمَّنِ اسْتَجَابَ لِلَّهِ وَرَسُولِهِ صلى الله عليه وسلم وَآمَنْتَ بِهِ، وَهَاجَرْتَ الْهِجْرَتَيْنِ الأُولَيَيْنِ، وَصَحِبْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَرَأَيْتَ هَدْيَهُ، وَقَدْ أَكْثَرَ النَّاسُ فِي شَأْنِ الْوَلِيدِ بْنِ عُقْبَةَ، فَحَقٌّ عَلَيْكَ أَنْ تُقِيمَ عَلَيْهِ الْحَدَّ. فَقَالَ لِي يَا ابْنَ أَخِي أَدْرَكْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ قُلْتُ لاَ، وَلَكِنْ قَدْ خَلَصَ إِلَىَّ مِنْ عِلْمِهِ مَا خَلَصَ إِلَى الْعَذْرَاءِ فِي سِتْرِهَا. قَالَ فَتَشَهَّدَ عُثْمَانُ فَقَالَ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ، وَكُنْتُ مِمَّنِ اسْتَجَابَ لِلَّهِ وَرَسُولِهِ صلى الله عليه وسلم وَآمَنْتُ بِمَا بُعِثَ بِهِ مُحَمَّدٌ صلى الله عليه وسلم. وَهَاجَرْتُ الْهِجْرَتَيْنِ الأُولَيَيْنِ كَمَا قُلْتَ، وَصَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَبَايَعْتُهُ، وَاللَّهِ مَا عَصَيْتُهُ وَلاَ غَشَشْتُهُ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ اسْتَخْلَفَ اللَّهُ أَبَا بَكْرٍ فَوَاللَّهِ مَا عَصَيْتُهُ وَلاَ غَشَشْتُهُ، ثُمَّ اسْتُخْلِفَ عُمَرُ، فَوَاللَّهِ مَا عَصَيْتُهُ وَلاَ غَشَشْتُهُ، ثُمَّ اسْتُخْلِفْتُ، أَفَلَيْسَ لِي عَلَيْكُمْ مِثْلُ الَّذِي كَانَ لَهُمْ عَلَىَّ قَالَ بَلَى. قَالَ فَمَا هَذِهِ الأَحَادِيثُ الَّتِي تَبْلُغُنِي عَنْكُمْ فَأَمَّا مَا ذَكَرْتَ مِنْ شَأْنِ الْوَلِيدِ بْنِ عُقْبَةَ، فَسَنَأْخُذُ فِيهِ إِنْ شَاءَ اللَّهُ بِالْحَقِّ قَالَ فَجَلَدَ الْوَلِيدَ أَرْبَعِينَ جَلْدَةً، وَأَمَرَ عَلِيًّا أَنْ يَجْلِدَهُ، وَكَانَ هُوَ يَجْلِدُهُ. وَقَالَ يُونُسُ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ عَنِ الزُّهْرِيِّ أَفَلَيْسَ لِي عَلَيْكُمْ مِنَ الْحَقِّ مِثْلُ الَّذِي كَانَ لَهُمْ. قَالَ أَبُو عَبْد اللَّهِ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ مَا ابْتُلِيتُمْ بِهِ مِنْ شِدَّةٍ وَفِي مَوْضِعٍ الْبَلَاءُ الِابْتِلَاءُ وَالتَّمْحِيصُ مَنْ بَلَوْتُهُ وَمَحَّصْتُهُ أَيْ اسْتَخْرَجْتُ مَا عِنْدَهُ يَبْلُو يَخْتَبِرُ مُبْتَلِيكُمْ مُخْتَبِرُكُمْ وَأَمَّا قَوْلُهُ بَلَاءٌ عَظِيمٌ النِّعَمُ وَهِيَ مِنْ أَبْلَيْتُهُ وَتِلْكَ مِنْ ابْتَلَيْتُهُ
பாடம் : 37 அபிசீனிய ஹிஜ்ரத்113 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் தாயகம் (மக்காவைத்) துறந்து (ஹிஜ்ரத்) செல்கின்ற நாடு (கருங்கற்கள் நிறைந்த) இரு மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் கொண்டதாக எனக்கு (கனவில்) காட்டப் பட்டது.114 (முஸ்லிம்களில்) சிலர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தனர். அப்போது அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள் மதீனாவுக்குத் திரும்பினர். இது குறித்து அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்களும் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.115
3872. உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம், “நீங்கள் உங்களுடைய (குலவழி) மாமா உஸ்மான் (ரலி) அவர்களி டம், அவர்களுடைய தாய்வழிச் சகோதரர் வலீத் பின் உக்பா பற்றிப் பேசாமலிருப்பது ஏன்? மக்கள் வலீதின் செயல்பாடுகள் குறித்து அதிகமாகக் குறை கூறுகிறார்களே!” என்று கேட்டார்கள்.

ஆகவே, நான் உஸ்மான் (ரலி) அவர்கள் தொழுகைக்காகப் புறப்பட்ட நேரத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தேன். அவர்களிடம், “எனக்கு உங்களிடம் சற்று(ப் பேச வேண்டிய) தேவை உள்ளது. அது (உங்க ளுக்கு நான் கூற விரும்பும்) அறிவுரை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “மனிதரே! உம்மிடமிருந்து நான் அல்லாஹ் விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னார்கள்.

உடனே, நான் திரும்பி (அவ்விரு வரிடமும்) வந்தேன். நான் தொழுது முடித்தபோது மிஸ்வர் (ரலி) அவர்களுக்கும் இப்னு அப்தி யகூஸ் (ரஹ்) அவர்களுக்கும் அருகில் (சென்று) அமர்ந்து, உஸ்மான் (ரலி) அவர்களிடம் நான் (வலீத் பின் உக்பா விஷயமாகக்) கூறியதையும் அதற்கு அவர்கள் என்னிடம் சொன்ன பதிலையும் தெரிவித்தேன்.

அப்போது அவர்கள் இருவரும், “உங்கள் மீதிருந்த கடமையை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள். அவ்விருவருடனும் நான் அமர்ந்திருந்தபோது உஸ்மான் (ரலி) அவர்களுடைய தூதுவர் (என்னைத் தேடி) வர, அவ்விருவரும், “அல்லாஹ் உங்களைச் சோதனைக்குள்ளாக்கிவிட்டான்” என்று கூறினர். உடனே நான் (தூதுவருடன் புறப்பட்டு) உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றேன். உஸ்மான் (ரலி) அவர்கள், “நீங்கள் சற்றுமுன் கூறி(ட விரும்பி)ய உங்கள் அறிவுரை என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறி (இறைவனைப் புகழ்ந்து விட்டு), “அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களை (சத்திய மார்க்கத்துடன்) அனுப்பி அவர்களுக்கு இறை வேதத்தை யும் அருளினான். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் அழைப்புக்குப் பதிலளித்து அவர்கள்மீது நம்பிக்கை கொண்டவர்களில் நீங்களும் ஒருவராயிருந்தீர்கள். மேலும், முதல் இரண்டு ஹிஜ்ரத்துகளை மேற்கொண்டீர் கள்.116 நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டு அவர்களின் வழிமுறையைப் பார்த்திருக்கிறீர்கள். மக்களோ வலீத் பின் உக்பாவைப் பற்றி நிறைய குறைபேசுகிறார்கள். எனவே, அவரை (இஸ்லாமியச் சட்டப்படி) தண்டிப்பது உங்கள்மீது கடமையாகிவிட்டது” என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்க நான், “இல்லை. ஆனால், திரைக்கப்பால் இருக்கும் கன்னிப் பெண்களிடம்(கூட) அல்லாஹ்வின் தூதருடைய கல்வி சென்றடைந்துகொண்டிருக்கும்(போது, அந்த) அளவு கல்வி என்னிடமும் வந்து சேர்ந்துள்ளது (குறித்து வியப்பில்லை)” என்று பதில் சொன்னேன்.

உடனே உஸ்மான் (ரலி) அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி, “அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி அவர்களுக்கு வேதத்தையும் அருளினான். அப்போது, அல்லாஹ்வின் அழைப்புக்கும் அல்லாஹ்வின் தூதருடைய அழைப்புக் கும் பதிலளித்தவர்களில் நானும் ஒருவ னாயிருந்தேன். மேலும், அவர்கள் எந்த வேதத்தைக் கொடுத்தனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக்கொண்டேன். நான் முதல் இரண்டு ஹிஜ்ரத்துகளையும் மேற்கொண்டேன். -நீங்கள் சொன்னதைப் போல்- நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டேன்; அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன்.

ஆகவே, அல்லாஹ்வின் மீதாணை யாக! அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும்வரை நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவு மில்லை. பிறகு அல்லாஹ் அபூபக்ர் (ரலி) அவர்களை கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கினான். அல்லாஹ்வின் மீதாணை யாக! நான் அவர்களுக்கு மாறு செய்யவு மில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை.

பிறகு நான் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டேன். ஆகவே, என் விஷயத்தில் அவர்களுக்கிருந்தது போன்ற அதே உரிமை உங்கள் விஷயத்தில் எனக்கில்லையா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (உங்களுக்கும் அதே போன்ற உரிமை இருக்கின்றது)” என்றேன். அவர்கள், “அப்படியென்றால் உங்களைக் குறித்து எனக்கு எட்டுகின்ற (என்னைக் குறைகூறும்) இந்தப் பேச்சுகளெல்லாம் என்ன? நீங்கள் வலீத் பின் உக்பா தொடர்பாகச் சொன்னவற்றில் இறைவன் நாடினால் விரைவில் நான் சரியான நடவடிக்கையை எடுப்பேன்” என்று சொன்னார்கள்.

பிறகு வலீத் பின் உக்பாவுக்கு (எதி ராகச் சாட்சிகள் கிடைத்ததால் அவருக்கு) நாற்பது சாட்டையடிகள் தண்டனையாக அறிவித்து, அவருக்குச் சாட்டையடிகள் கொடுக்கும்படி அலீ (ரலி) அவர்களுக்கு உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள்தான் வலீதுக்குச் சாட்டையடி வழங்கினார்கள்.117

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டில் “அவர்களுக்கு இருந்ததைப் போன்ற உரிமை உங்கள்மீது எனக்கில் லையா? என இடம்பெற்றுள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இங்கு “அல்லாஹ் உங்களைச் சோதனைக்குள்ளாக்கி விட்டான்' என்பதைக் குறிக்க மூலத்தில் “பலாஉ' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு “சோதனை' எனும் பொருள் இருப்பதைப் போன்றே, “அருட்கொடை' எனும் பொருளும் உண்டு.


அத்தியாயம் : 63
3873. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ أُمَّ، حَبِيبَةَ وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ، فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِيكَ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 37 அபிசீனிய ஹிஜ்ரத்113 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் தாயகம் (மக்காவைத்) துறந்து (ஹிஜ்ரத்) செல்கின்ற நாடு (கருங்கற்கள் நிறைந்த) இரு மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் கொண்டதாக எனக்கு (கனவில்) காட்டப் பட்டது.114 (முஸ்லிம்களில்) சிலர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தனர். அப்போது அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள் மதீனாவுக்குத் திரும்பினர். இது குறித்து அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்களும் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.115
3873. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

உம்மு ஹபீபா (ரலி) அவர்களும் உம்மு சலமா (ரலி) அவர்களும் அபிசீனியாவில் தாம் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறித்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள்.118 மேலும், அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களி டையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவரது அடக்கத் தலத்தின் மீது வணக்கத் தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங் களை வரைவார்கள். அவர்கள்தான், மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களி லேயே மிக மோசமானவர்கள்” என்று சொன்னார்கள்.119


அத்தியாயம் : 63
3874. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدٍ السَّعِيدِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدٍ، قَالَتْ قَدِمْتُ مِنْ أَرْضِ الْحَبَشَةِ وَأَنَا جُوَيْرِيَةٌ، فَكَسَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَمِيصَةً لَهَا أَعْلاَمٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ الأَعْلاَمَ بِيَدِهِ وَيَقُولُ "" سَنَاهْ، سَنَاهْ "". قَالَ الْحُمَيْدِيُّ يَعْنِي حَسَنٌ حَسَنٌ.
பாடம் : 37 அபிசீனிய ஹிஜ்ரத்113 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் தாயகம் (மக்காவைத்) துறந்து (ஹிஜ்ரத்) செல்கின்ற நாடு (கருங்கற்கள் நிறைந்த) இரு மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் கொண்டதாக எனக்கு (கனவில்) காட்டப் பட்டது.114 (முஸ்லிம்களில்) சிலர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தனர். அப்போது அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள் மதீனாவுக்குத் திரும்பினர். இது குறித்து அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்களும் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.115
3874. உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் சிறுமியாக இருந்தபோது (என் தந்தையுடன்) அபிசீனியா நாட்டிலிருந்து (நபியவர்களிடம்) வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பட்டுத் துணி ஒன்றை உடுத்தக் கொடுத்தார்கள். அதில் அடையாளக் குறிகள் சில இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அந்த அடையாளங் களைத் தடவியபடி, “அழகாயிருக்கிறதே! அழகாயிருக்கிறதே!” (என்பதைக் குறிக்க அபிசீனிய மொழியில் “சனா, சனா') என்று கூறலானார்கள்.120


அத்தியாயம் : 63
3875. حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ يُصَلِّي فَيَرُدُّ عَلَيْنَا، فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ النَّجَاشِيِّ سَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْنَا، فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا نُسَلِّمُ عَلَيْكَ فَتَرُدُّ عَلَيْنَا قَالَ "" إِنَّ فِي الصَّلاَةِ شُغْلاً "". فَقُلْتُ لإِبْرَاهِيمَ كَيْفَ تَصْنَعُ أَنْتَ قَالَ أَرُدُّ فِي نَفْسِي.
பாடம் : 37 அபிசீனிய ஹிஜ்ரத்113 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் தாயகம் (மக்காவைத்) துறந்து (ஹிஜ்ரத்) செல்கின்ற நாடு (கருங்கற்கள் நிறைந்த) இரு மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் கொண்டதாக எனக்கு (கனவில்) காட்டப் பட்டது.114 (முஸ்லிம்களில்) சிலர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தனர். அப்போது அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள் மதீனாவுக்குத் திரும்பினர். இது குறித்து அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்களும் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.115
3875. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது நாங்கள் அவர்களுக்கு சலாம் சொல்லுவோம். உடனே அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் சொல்வார்கள். நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ யிடமிருந்து திரும்பி வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு (அவர்கள் தொழுகை யிலிருக்கும்போது) சலாம் சொன்னோம்.

அப்போது அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் சொல்லவில்லை. நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் தொழும் போது) நாங்கள் உங்களுக்கு சலாம் சொல்ல, நீங்களும் அதற்குப் பதில் சலாம் சொல்லிவந்தீர்களே” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “நிச்சயமாக! தொழுகை யில் கவனம் தேவைப்படுகிறது” என்று பதிலளித்தார்கள்.121

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் (தமக்கு முந்திய அறிவிப் பாளரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம், “(நீங்கள் தொழும்போது யாராவது சலாம் சொல்லிவிட்டால்) நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்ராஹீம் (ரஹ்) அவர்கள், “என் மனதுக்குள் நான் பதில் சலாம் சொல்லிவிடுகிறேன்” என்று சொன்னார்.


அத்தியாயம் : 63
3876. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ بَلَغَنَا مَخْرَجُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ بِالْيَمَنِ فَرَكِبْنَا سَفِينَةً فَأَلْقَتْنَا سَفِينَتُنَا إِلَى النَّجَاشِيِّ بِالْحَبَشَةِ، فَوَافَقْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ، فَأَقَمْنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا، فَوَافَقْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ افْتَتَحَ خَيْبَرَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَكُمْ أَنْتُمْ يَا أَهْلَ السَّفِينَةِ هِجْرَتَانِ "".
பாடம் : 37 அபிசீனிய ஹிஜ்ரத்113 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் தாயகம் (மக்காவைத்) துறந்து (ஹிஜ்ரத்) செல்கின்ற நாடு (கருங்கற்கள் நிறைந்த) இரு மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் கொண்டதாக எனக்கு (கனவில்) காட்டப் பட்டது.114 (முஸ்லிம்களில்) சிலர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தனர். அப்போது அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள் மதீனாவுக்குத் திரும்பினர். இது குறித்து அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்களும் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.115
3876. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து மக்காவிலிருந்து) வெளியேறிய செய்தி எங்களுக்கு எட்டியது. உடனே நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணம் புறப்பட்டோம். எங்கள் கப்பல் (திசைமாறி) எங்களை அபிசீனியாவில் மன்னர் நஜாஷீ அவர்களிடம் கொண்டு(போய் இறக்கிவிட்டுச்) சென்றுவிட்டது. நாங்கள் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை(த் தற்செயலாக அங்கே) சந்தித்தோம். நாங்கள் அங்கிருந்து வரும்வரை ஜஅஃபர் (ரலி) அவர்களுடனேயே தங்கினோம். கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டிருந்த வேளையில் சென்று அவர்களை அடைந்தோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (எங்களை நோக்கி), “கப்பல்காரர்களே! உங்களுக்குத்தான் இரண்டு ஹிஜ்ரத்கள்” என்று சொன்னார்கள்.122

அத்தியாயம் : 63
3877. حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ مَاتَ النَّجَاشِيُّ "" مَاتَ الْيَوْمَ رَجُلٌ صَالِحٌ، فَقُومُوا فَصَلُّوا عَلَى أَخِيكُمْ أَصْحَمَةَ "".
பாடம் : 38 (அபிசீனிய மன்னர்) நஜாஷீயின் மரணம்123
3877. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(மன்னர்) நஜாஷீ இறந்தபோது நபி (ஸல்) அவர்கள், “இன்று (ஒரு) நல்ல மனிதர் இறந்துவிட்டார். ஆகவே, எழுந்து நின்று உங்கள் சகோதரர் “அஸ்ஹமா'வுக்காக (ஃகாயிப் ஜனாஸா தொழுகை) தொழுங் கள்” என்று சொன்னார்கள்.124


அத்தியாயம் : 63
3878. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ عَطَاءً، حَدَّثَهُمْ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ ـ رضى الله عنهما ـ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى عَلَى النَّجَاشِيِّ فَصَفَّنَا وَرَاءَهُ فَكُنْتُ فِي الصَّفِّ الثَّانِي أَوِ الثَّالِثِ.
பாடம் : 38 (அபிசீனிய மன்னர்) நஜாஷீயின் மரணம்123
3878. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ (இறந்துவிட்டபோது) அவருக்காக (ஃகாயிப் ஜனாஸா) தொழுகை தொழுதார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னே வரிசையாக நின்றுகொண்டோம். நான் இரண்டாவது வரிசையில், அல்லது மூன்றாவது வரிசையில் இருந்தேன்.125


அத்தியாயம் : 63
3879. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ سَلِيمِ بْنِ حَيَّانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى عَلَى أَصْحَمَةَ النَّجَاشِيِّ، فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا. تَابَعَهُ عَبْدُ الصَّمَدِ.
பாடம் : 38 (அபிசீனிய மன்னர்) நஜாஷீயின் மரணம்123
3879. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “அஸ்ஹமா' அந் நஜாஷீக்காக (ஃகாயிப்) ஜனாஸா தொழுகை தொழுதார்கள். அப்போது அவர்மீதான தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறினார்கள்.126

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 63
3880. حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَابْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَخْبَرَهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَعَى لَهُمُ النَّجَاشِيَّ صَاحِبَ الْحَبَشَةِ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، وَقَالَ "" اسْتَغْفِرُوا لأَخِيكُمْ "".
பாடம் : 38 (அபிசீனிய மன்னர்) நஜாஷீயின் மரணம்123
3880. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபிசீனியாவின் அதிபர் நஜாஷீ அவர்கள் இறந்துவிட்ட செய்தியை அவர் இறந்த நாளன்றே எங்களுக்கு அறிவித்தார்கள். மேலும், “உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 63
3881. وَعَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَفَّ بِهِمْ فِي الْمُصَلَّى، فَصَلَّى عَلَيْهِ وَكَبَّرَ أَرْبَعًا.
பாடம் : 38 (அபிசீனிய மன்னர்) நஜாஷீயின் மரணம்123
3881. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை (ஜனாஸா தொழுகை) தொழு மிடத்தில் வரிசையாக நிற்கவைத்துநஜாஷீக்காக ஜனாஸா தொழுகை தொழு (வித்)தார்கள்; (அதில்) நான்கு தக்பீர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 63
3882. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَرَادَ حُنَيْنًا "" مَنْزِلُنَا غَدًا إِنْ شَاءَ اللَّهُ بِخَيْفِ بَنِي كِنَانَةَ، حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ "".
பாடம் : 39 நபி (ஸல்) அவர்களுக்கு(ம் அவர் களுடைய கிளையினருக்கும்) எதிராக, இணைவைத்தோர் எடுத்த சூளுரை127
3882. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போருக்குச் செல்ல விரும்பிய போது, “நாளை நாம் (போருக்காக) முகாமிடப்போகும் இடம் - இறைவன் நாடினால் - “பனூ கினானா' குலத்தாரின் (முஹஸ்ஸப்) பள்ளத்தாக்காகும். அது அவர்கள், “நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்” என்று சூளுரைத்த இடமாகும் என்று கூறினார்கள்.128

அத்தியாயம் : 63
3883. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ ـ رضى الله عنه ـ قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَا أَغْنَيْتَ عَنْ عَمِّكَ فَإِنَّهُ كَانَ يَحُوطُكَ وَيَغْضَبُ لَكَ. قَالَ "" هُوَ فِي ضَحْضَاحٍ مِنْ نَارٍ، وَلَوْلاَ أَنَا لَكَانَ فِي الدَّرَكِ الأَسْفَلِ مِنَ النَّارِ "".
பாடம் : 40 அபூதாலிப் அவர்கள் குறித்த சம்பவம்129
3883. அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம், “உங்கள் தந்தையின் சகோதரருக்கு (அபூதாலிபுக்கு, அவர் செய்த உதவிகளுக் குக் கைமாறாக) நீங்கள் என்ன பயனை அளித்தீர்கள்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக, அவர் உங்களை (எதிரி களின் தாக்குதலிலிருந்து) பாதுகாப்ப வராகவும், உங்களுக்காக (உங்கள் எதிரிகளிடம்) கோபப்படுபவராகவும் இருந்தாரே!” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பில்தான் இருக்கிறார். நான் மட்டும் இல்லையென்றால் அவர் நரகத்தின் அடித்தட்டில் இருந்திருப்பார்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 63
3884. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا طَالِبٍ، لَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعِنْدَهُ أَبُو جَهْلٍ فَقَالَ "" أَىْ عَمِّ، قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ "". فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ، تَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَلَمْ يَزَالاَ يُكَلِّمَانِهِ حَتَّى قَالَ آخِرَ شَىْءٍ كَلَّمَهُمْ بِهِ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْهُ "". فَنَزَلَتْ {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ} وَنَزَلَتْ {إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ}
பாடம் : 40 அபூதாலிப் அவர்கள் குறித்த சம்பவம்129
3884. முசய்யப் பின் ஹஸ்ன் பின் அபீவஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்துவிட்டபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், “என் தந்தையின் சகோதரரே! “லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை)வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்” என்று சொன்னார்கள்.

அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும், “அபூதாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், “(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)” என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; (அவ்விதம் பாவமன்னிப்புக் கோரக் கூடாது என்று) எனக்குத் தடை விதிக்கப்படும்வரை” என்று சொன்னார்கள்.

அப்போதுதான், “இணைவைப்பாளர் கள் நரகவாசிகள்தான் என்பது தெளிவாகி விட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன் னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர் களாயிருந்தாலும்கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை யில்லை” எனும் (9:113) குர்ஆன் வசனமும், “(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்க ளால் நல்வழியில் செலுத்திவிட முடியாது” எனும் (28:56) குர்ஆன் வசனமும் அருளப் பெற்றன.130


அத்தியாயம் : 63
3885. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَذُكِرَ عِنْدَهُ عَمُّهُ فَقَالَ "" لَعَلَّهُ تَنْفَعُهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ، فَيُجْعَلُ فِي ضَحْضَاحٍ مِنَ النَّارِ، يَبْلُغُ كَعْبَيْهِ، يَغْلِي مِنْهُ دِمَاغُهُ "". حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ وَالدَّرَاوَرْدِيُّ عَنْ يَزِيدَ بِهَذَا، وَقَالَ تَغْلِي مِنْهُ أُمُّ دِمَاغِهِ.
பாடம் : 40 அபூதாலிப் அவர்கள் குறித்த சம்பவம்129
3885. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டபோது அவர்கள், “அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக்கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள்வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவருடைய மூளை (தகித்துக்) கொதிக்கும்” என்று சொல்ல நான் கேட்டேன்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “அவரது மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதித்துக்கொண்டிருக்கும்” என்று காணப்படுகிறது.

அத்தியாயம் : 63