3298. قَالَ عَبْدُ اللَّهِ فَبَيْنَا أَنَا أُطَارِدُ، حَيَّةً لأَقْتُلَهَا فَنَادَانِي أَبُو لُبَابَةَ لاَ تَقْتُلْهَا. فَقُلْتُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَمَرَ بِقَتْلِ الْحَيَّاتِ. قَالَ إِنَّهُ نَهَى بَعْدَ ذَلِكَ عَنْ ذَوَاتِ الْبُيُوتِ، وَهْىَ الْعَوَامِرُ.
பாடம் : 13 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) ஒருமுறை நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உம்மிடம் திருப்பிவிட்டோம். அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக. (நீர் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த) அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்தபோது தங்களுக்குள் ‘‘மௌனமாய் இருங்கள்” என்று அவை பேசிக்கொண்டன. பின்னர் அது ஓதி முடிக்கப்பட்டபோது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எக்சரிக்கை செய்யக்கூடியவர்களாய் திரும்பிச் சென்று, ‘‘எங்கள் சமூகத்தாரே! நாங்கள் மூசாவுக்குப் பிறகு அருளப்பட்டுள்ள ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது தனக்கு முன்பு வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. சத்தியத்திற்கும் நேரிய மார்க்கத்திற்கும் அது வழிகாட்டுகின்றது. எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான்; வதைக்கும் வேதனை’லிருந்து உங்களைப் பாதுகாப்பான். யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் சொல்லை ஏற்றுக்கொள்ள வில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வைத்) தோற்கடிக்க எந்த வலிமையும் பெற்றிருக்கவில்லை. அல்லாஹ்விடமிருந்து அவரைப் பாதுகாக்கும் எந்த ஆதரவாளரும் அவருக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் உள்ளனர். (46: 29லி32) அதைவிட்டுத் தப்பும் இடத்தை (மஸ்ரிஃப்) அவர்கள் பெறமாட்டார்கள். (18:53) திருப்பிவிட்டோம் (ஸர்ரஃப்னா) (46:29). அதாவது முகத்தைத் திருப்பிவிட்டோம். பாடம் : 14 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அதில் (பூமியில்) பல்வேறு உயிரினங் களைப் பரவச் செய்தான். (31:10) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர் (மூசா) தமது கைத்தடியை(க் கீழே) போட்டார். உடனே அது நிஜமான பாம்பாக (ஸுஅபான்) மாறியது. (7:107) ‘ஸுஅபான்’ என்பது ஆண் பாம்பைக் குறிக்கும். பாம்புகள் பல வகை உண்டு.1. ஜான். வெள்ளைப் பாம்பு 2. அஃபாயீ. பெண் பாம்பு 3. அசாவிது. கரும்பாம்பு. எந்த உயிரினமானாலும் அதன் நெற்றி ரோமத்தை அவனே பற்றியிருக்கின்றான். (11:56). அதாவது அவனது ஆட்சியதிகாரத்தில் உள்ளன. தங்களுக்கு மேலே சிறகுகளை விரித்தும் மடக்கியும் பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (விழாமல்) தடுத்துவைத்திருப்பவன் கருணைமிக்க இறைவனைத் தவிர வேறெவருமில்லை. (67:19) யிசிறகுகளை விரித்து’ என்பதைக் குறிக்க ‘ஸாஃப்பாத்’ எனும் சொல்லும் யிமடக்கி’ என்பதைக் குறிக்க யியக்பிள்” எனும் சொல்லும் ஆளப்பட்டுள்ளன. அதாவது சிறகடித்துப் பறக்கின்றன.
3298. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒருமுறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டி ருந்தபோது அபூலுபாபா (ரலி) அவர்கள் என்னைக் கூப்பிட்டு, ‘‘அதைக் கொல்லாதீர் கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்தரவிட்டுள் ளார்கள்” என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள், ‘‘(ஆம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை (வீட்டில் வசிக்கும்) ஜின்களாகும்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 59
3299. وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ، فَرَآنِي أَبُو لُبَابَةَ أَوْ زَيْدُ بْنُ الْخَطَّابِ. وَتَابَعَهُ يُونُسُ وَابْنُ عُيَيْنَةَ وَإِسْحَاقُ الْكَلْبِيُّ وَالزُّبَيْدِيُّ. وَقَالَ صَالِحٌ وَابْنُ أَبِي حَفْصَةَ وَابْنُ مُجَمِّعٍ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَآنِي أَبُو لُبَابَةَ وَزَيْدُ بْنُ الْخَطَّابِ.
பாடம் : 13 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) ஒருமுறை நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உம்மிடம் திருப்பிவிட்டோம். அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக. (நீர் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த) அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்தபோது தங்களுக்குள் ‘‘மௌனமாய் இருங்கள்” என்று அவை பேசிக்கொண்டன. பின்னர் அது ஓதி முடிக்கப்பட்டபோது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எக்சரிக்கை செய்யக்கூடியவர்களாய் திரும்பிச் சென்று, ‘‘எங்கள் சமூகத்தாரே! நாங்கள் மூசாவுக்குப் பிறகு அருளப்பட்டுள்ள ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது தனக்கு முன்பு வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. சத்தியத்திற்கும் நேரிய மார்க்கத்திற்கும் அது வழிகாட்டுகின்றது. எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான்; வதைக்கும் வேதனை’லிருந்து உங்களைப் பாதுகாப்பான். யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் சொல்லை ஏற்றுக்கொள்ள வில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வைத்) தோற்கடிக்க எந்த வலிமையும் பெற்றிருக்கவில்லை. அல்லாஹ்விடமிருந்து அவரைப் பாதுகாக்கும் எந்த ஆதரவாளரும் அவருக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் உள்ளனர். (46: 29லி32) அதைவிட்டுத் தப்பும் இடத்தை (மஸ்ரிஃப்) அவர்கள் பெறமாட்டார்கள். (18:53) திருப்பிவிட்டோம் (ஸர்ரஃப்னா) (46:29). அதாவது முகத்தைத் திருப்பிவிட்டோம். பாடம் : 14 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அதில் (பூமியில்) பல்வேறு உயிரினங் களைப் பரவச் செய்தான். (31:10) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர் (மூசா) தமது கைத்தடியை(க் கீழே) போட்டார். உடனே அது நிஜமான பாம்பாக (ஸுஅபான்) மாறியது. (7:107) ‘ஸுஅபான்’ என்பது ஆண் பாம்பைக் குறிக்கும். பாம்புகள் பல வகை உண்டு.1. ஜான். வெள்ளைப் பாம்பு 2. அஃபாயீ. பெண் பாம்பு 3. அசாவிது. கரும்பாம்பு. எந்த உயிரினமானாலும் அதன் நெற்றி ரோமத்தை அவனே பற்றியிருக்கின்றான். (11:56). அதாவது அவனது ஆட்சியதிகாரத்தில் உள்ளன. தங்களுக்கு மேலே சிறகுகளை விரித்தும் மடக்கியும் பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (விழாமல்) தடுத்துவைத்திருப்பவன் கருணைமிக்க இறைவனைத் தவிர வேறெவருமில்லை. (67:19) யிசிறகுகளை விரித்து’ என்பதைக் குறிக்க ‘ஸாஃப்பாத்’ எனும் சொல்லும் யிமடக்கி’ என்பதைக் குறிக்க யியக்பிள்” எனும் சொல்லும் ஆளப்பட்டுள்ளன. அதாவது சிறகடித்துப் பறக்கின்றன.
3299. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

...அப்போது (நான் பாம்பைக் கொல்ல அதை விரட்டிச் சென்றபோது) என்னை அபூலுபாபா (ரலி) அவர்களும் ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் பார்த்தார்கள்.102

இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 59
3300. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الرَّجُلِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ "".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3300. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (முஸ்லிமான) மனிதரின் செல்வங் களிலேயே ஆடுதான் சிறந்த செல்வமாக இருக்கும் நிலை தோன்றக்கூடும். அவர் குழப்பங்களிலிருந்து தமது மார்க்க (விசுவாச)த்தைக் காக்க அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு மலைகளின் உச்சிக்கும் மழை பொழியும் (கணவாய், பள்ளத்தாக்கு போன்ற) இடங்களுக்கும் சென்று விடுவார்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.103

அத்தியாயம் : 59
3301. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" رَأْسُ الْكُفْرِ نَحْوَ الْمَشْرِقِ، وَالْفَخْرُ وَالْخُيَلاَءُ فِي أَهْلِ الْخَيْلِ وَالإِبِلِ، وَالْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ، وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ "".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3301. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் (அக்னி ஆராதனை யாளர்களான மஜூசிகள் வசிக்கும் பாரசீகத்தில்) உள்ளது. குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் (நாடோடிப்) பாலைவனவாசிகளான ஒட்டக மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி)களிடமும் தற்பெருமையும் அகம்பாவமும் காணப்படுகின்றன. ஆடுகளின் உரிமை யாளர்களிடம் அமைதி(யும் பணிவும்) காணப்படுகின்றது.104

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 59
3302. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسٌ، عَنْ عُقْبَةَ بْنِ عَمْرٍو أَبِي مَسْعُودٍ، قَالَ أَشَارَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ نَحْوَ الْيَمَنِ فَقَالَ "" الإِيمَانُ يَمَانٍ هَا هُنَا، أَلاَ إِنَّ الْقَسْوَةَ وَغِلَظَ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ عِنْدَ أُصُولِ أَذْنَابِ الإِبِلِ، حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ فِي رَبِيعَةَ وَمُضَرَ "".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3302. உக்பா பின் அம்ர் அபீ மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி, ‘‘இறைநம்பிக்கை, இதோ இங்கேயிருக்கும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.105

அறிந்துகொள்ளுங்கள். கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங் களின் வால்களைப் பிடித்தபடி அவற்றை அதட்டிக்கொண்டே (நாடோடிகளாகச்) சென்றுகொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (குழப்பங்கள் தலை தூக்கும்.) (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்” என்று சொன்னார்கள்106

அத்தியாயம் : 59
3303. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيَكَةِ فَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ، فَإِنَّهَا رَأَتْ مَلَكًا، وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الْحِمَارِ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ، فَإِنَّهُ رَأَى شَيْطَانًا "".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3303. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சப்தத் தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கிறன. (அதனால்தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சப்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (அதனால் தான் கத்துகிறது.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 59
3304. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا رَوْحٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ ـ أَوْ أَمْسَيْتُمْ ـ فَكُفُّوا صِبْيَانَكُمْ، فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ، فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَحُلُّوهُمْ، وَأَغْلِقُوا الأَبْوَابَ، وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ بَابًا مُغْلَقًا "". قَالَ وَأَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ نَحْوَ مَا أَخْبَرَنِي عَطَاءٌ وَلَمْ يَذْكُرْ "" وَاذْكُرُوا اسْمَ اللَّهِ "".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3304. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் லிஅல்லது நீங்கள் அந்திப் பொழுதை அடைந்தால்லி உங்கள் குழந்தை களை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் மூடிவிடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்கமாட்டான்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்’ எனும் வாக்கியம் இடம்பெறவில்லை.107

அத்தியாயம் : 59
3305. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" فُقِدَتْ أُمَّةٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ لاَ يُدْرَى مَا فَعَلَتْ، وَإِنِّي لاَ أُرَاهَا إِلاَّ الْفَارَ إِذَا وُضِعَ لَهَا أَلْبَانُ الإِبِلِ لَمْ تَشْرَبْ، وَإِذَا وُضِعَ لَهَا أَلْبَانُ الشَّاءِ شَرِبَتْ "". فَحَدَّثْتُ كَعْبًا فَقَالَ أَنْتَ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُهُ قُلْتُ نَعَمْ. قَالَ لِي مِرَارًا. فَقُلْتُ أَفَأَقْرَأُ التَّوْرَاةَ
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3305. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘இஸ்ரவேலர்களில் ஒரு குழுவினர் (மர்மமான முறையில்) காணாமல் போய் விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடித்துவிடுகின்றனவே!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.108

இதை நான் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?” என்று வினவினார்கள். நான், ‘‘ஆம் (கேட்டேன்)” என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதேபோலக் கேட்டார்கள். ‘‘நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)” என்று நான் கேட்டேன்.

அத்தியாயம் : 59
3306. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِلْوَزَغِ الْفُوَيْسِقُ. وَلَمْ أَسْمَعْهُ أَمَرَ بِقَتْلِهِ. وَزَعَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِهِ.
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3306. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘பல்லி தீங்கிழைக் கக்கூடியது (அல்ஃபுவைசிக்)” என்று சொன்னார்கள். ஆனால், அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை. நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டதாக சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கருதிக்கொண்டிருக் கிறார்கள்.109

அத்தியாயம் : 59
3307. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ أُمَّ شَرِيكٍ، أَخْبَرَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَهَا بِقَتْلِ الأَوْزَاغِ.
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3307. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பல்லிகளைக் கொல்லுமாறு தமக்கு உத்தரவிட்டதாக உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

அத்தியாயம் : 59
3308. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ، فَإِنَّهُ يَلْتَمِسُ الْبَصَرَ، وَيُصِيبُ الْحَبَلَ "". تَابَعَهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ أَبَا أُسَامَةَ
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3308. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முதுகில் இரண்டு வெள்ளைக் கோடு கள் உள்ள (துத்துஃப்யத்தைன் என்னும்) பாம்பைக் கொல்லுங்கள். ஏனெனில், அது (கண்) பார்வையைப் பறித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்.110

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 59
3309. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ،، قَالَتْ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَتْلِ الأَبْتَرِ وَقَالَ "" إِنَّهُ يُصِيبُ الْبَصَرَ، وَيُذْهِبُ الْحَبَلَ "".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3309. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குட்டைவால் பாம்பைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். மேலும், ‘‘அது கண் பார்வையைப் பறித்துவிடும்; கருவைச் சிதைத்துவிடும்” என்று கூறினார்கள்.111

அத்தியாயம் : 59
3310. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ أَبِي يُونُسَ الْقُشَيْرِيِّ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقْتُلُ الْحَيَّاتِ ثُمَّ نَهَى قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم هَدَمَ حَائِطًا لَهُ، فَوَجَدَ فِيهِ سِلْخَ حَيَّةٍ فَقَالَ " انْظُرُوا أَيْنَ هُوَ ". فَنَظَرُوا فَقَالَ " اقْتُلُوهُ ". فَكُنْتُ أَقْتُلُهَا لِذَلِكَ.
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3310. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பாம்புகளைக் கொன்றுவந்தார்கள். பிறகு (அவற்றைக் கொல்வதைத்) தடை செய்தார்கள். (அதற்கு விளக்கம் கூறும் வகையில்) அவர்கள் சொன்னார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது (வீட்டுச்) சுவர் ஒன்றை இடித்தார்கள். பாம்புச் சட்டையொன்றை அதில் கண்டார்கள். அப்போது ‘‘அந்தப் பாம்பு எங்கேயிருக் கிறது என்று பாருங்கள்” என்று உத்தர விட்டார்கள். மக்கள் (தேடிப்பார்த்து அதைக்) கண்டுபிடித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைக் கொன்றுவிடுங்கள்” என்று சொன்னார்கள். அதனால்தான் நான் அவற்றைக் கொன்றுவந்தேன்.

அத்தியாயம் : 59
3311. فَلَقِيتُ أَبَا لُبَابَةَ فَأَخْبَرَنِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَقْتُلُوا الْجِنَّانَ، إِلاَّ كُلَّ أَبْتَرَ ذِي طُفْيَتَيْنِ، فَإِنَّهُ يُسْقِطُ الْوَلَدَ، وَيُذْهِبُ الْبَصَرَ، فَاقْتُلُوهُ ".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3311. (தொடர்ந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)

(இந்த நிலையில்) அபூலுபாபா (ரலி) அவர்களை நான் சந்தித்தேன். அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள், (வீட்டிலுள்ள மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்லாதீர்கள்;112 குட்டைவால் உள்ள, முதுகில் இரண்டு வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட பாம்புகளைத் தவிர. ஏனெனில், அவை (கருவிலுள்ள) குழந்தை யைச் சிதைத்துவிடும்; பார்வையைப் பறித்துவிடும். ஆகவே, அவற்றைக் கொன்று விடுங்கள்” எனக் கூறியதாக எனக்கு அறிவித்தார்கள்.113

அத்தியாயம் : 59
3312. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقْتُلُ الْحَيَّاتِ
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3312. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் பாம்பு களைக் கொன்றுவந்தார்கள்.

அத்தியாயம் : 59
3313. . فَحَدَّثَهُ أَبُو لُبَابَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ جِنَّانِ الْبُيُوتِ، فَأَمْسَكَ عَنْهَا.
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3313. (தொடர்ந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

அப்போது அபூலுபாபா (ரலி) அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய, வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்வதைத் தடை செய்தார்கள்” என்று தெரிவித்தார்கள். ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் அவற்றைக் கொல்வதை நிறுத்திவிட்டார்கள்.

அத்தியாயம் : 59
3314. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عَنْهَا ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِي الْحَرَمِ الْفَأْرَةُ، وَالْعَقْرَبُ، وَالْحُدَيَّا، وَالْغُرَابُ، وَالْكَلْبُ الْعَقُورُ "".
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3314. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங் கள் புனித (ஹரம்) எல்லையிலும் கொல்லப்படும். அவையாவன: எலி, தேள், பருந்து, (நீர்க்) காகம், வெறி நாய்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.114

அத்தியாயம் : 59
3315. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" خَمْسٌ مِنَ الدَّوَابِّ مَنْ قَتَلَهُنَّ وَهْوَ مُحْرِمٌ فَلاَ جُنَاحَ عَلَيْهِ الْعَقْرَبُ، وَالْفَأْرَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ، وَالْغُرَابُ، وَالْحِدَأَةُ "".
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3315. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து வகை உயிரினங்கள் உள்ளன. அவற்றை (ஹஜ் அல்லது உம்ராவுக்காக) யிஇஹ்ராம்’ கட்டிய ஒருவர் கொன்றுவிட் டாலும் அவர்மீது குற்றமேதும் இல்லை. தேள், எலி, வெறிநாய், (நீர்க்) காகம், பருந்து ஆகியவைதான் அவை.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.115

அத்தியாயம் : 59
3316. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ كَثِيرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ رَفَعَهُ قَالَ "" خَمِّرُوا الآنِيَةَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ، وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ الْعِشَاءِ، فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً، وَأَطْفِئُوا الْمَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ، فَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا اجْتَرَّتِ الْفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ الْبَيْتِ "". قَالَ ابْنُ جُرَيْجٍ وَحَبِيبٌ عَنْ عَطَاءٍ فَإِنَّ لِلشَّيَاطِينِ.
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3316. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

பாத்திரங்களை மூடிவையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்துவையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். மாலையில் உங்கள் குழந்தை களை (வெளியே செல்ல விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவிச் செல்வதும் (பொருள்களையும் குழந்தைகளையும்) பறிப்பதும் நடக்கும்.

தூங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கி ழைக்கக்கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச்சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக் கூடும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்து. அவற்றில் சிலவற்றில் (யிஜின்கள்’ என்பதற்குப் பதிலாக) யிஷைத்தான்கள்’ என இடம்பெற் றுள்ளது.

அத்தியாயம் : 59
3317. حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَارٍ فَنَزَلَتْ {وَالْمُرْسَلاَتِ عُرْفًا} فَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ، إِذْ خَرَجَتْ حَيَّةٌ مِنْ جُحْرِهَا فَابْتَدَرْنَاهَا لِنَقْتُلَهَا، فَسَبَقَتْنَا فَدَخَلَتْ جُحْرَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وُقِيَتْ شَرَّكُمْ، كَمَا وُقِيتُمْ شَرَّهَا "". وَعَنْ إِسْرَائِيلَ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَهُ قَالَ وَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ رَطْبَةً. وَتَابَعَهُ أَبُو عَوَانَةَ عَنْ مُغِيرَةَ. وَقَالَ حَفْصٌ وَأَبُو مُعَاوِيَةَ وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَبْدِ اللَّهِ.
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3317. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவில்) ஒரு குகையில் (தங்கி) இருந்தோம். அப்போது, யிவல்முர்சலாத்தி உர்ஃபன்’ (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படு கின்றவைமீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று, தன் புற்றிலிருந்து வெளிப்பட்டது. நாங்கள் அதைக் கொல்ல விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு தன் புற்றுக்குள் நுழைந்துவிட்டது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கி லிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப் பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.117

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஒன்றில், ‘‘அதை நாங்கள் அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தோம்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 59