2978. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ أَخْبَرَهُ أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ وَهُمْ بِإِيلِيَاءَ، ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَلَمَّا فَرَغَ مِنْ قِرَاءَةِ الْكِتَابِ كَثُرَ عِنْدَهُ الصَّخَبُ، فَارْتَفَعَتِ الأَصْوَاتُ، وَأُخْرِجْنَا، فَقُلْتُ لأَصْحَابِي حِينَ أُخْرِجْنَا لَقَدْ أَمِرَ أَمْرُ ابْنِ أَبِي كَبْشَةَ، إِنَّهُ يَخَافُهُ مَلِكُ بَنِي الأَصْفَرِ.
பாடம் : 122 ‘‘ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் (எதிரிகளின் உள்ளங்களில் என்னைப் பற்றிய) அச்சம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் வெற்றியளிக்கப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (ஏக இறையை) மறுத்தவர்களின் உள்ளங்களில் விரைவில் நாம் பீதியைப் போடுவோம். ஏனெனில், எதற்கு அல்லாஹ் எந்தச் சான்றையும் அளிக்கவில் லையோ அதை அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கினார்கள். (3:151) ஜாபிர் (ரலி) அவர்கள் (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள் ளார்கள்.102
2978. அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஈலியா (ஜெரூசலம்) நகரில் இருந்தபோது (கிழக்கு) ரோமானியப் பேரரசர் ஹிரக்ளீயஸ் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தை வரவழைத்தார். கடிதத்தைப் படித்து(க் காட்டி) முடித்தவுடன் அவரிடம் (இருந்த பிரமுகர் களிடையே) கூச்சல் குழப்பம் அதிகமானது; குரல்கள் உயர்ந்தன. நாங்கள் (அரசவை ‘லிருந்து) வெளியேற்றப்பட்டோம்.

அப்போது நான் என் தோழர்களிடம், ‘‘அபூகப்ஷாவின் மகனுடைய (முஹம்மது டைய) விவகாரம் வலிமைபெற்றுவிட்டது. மஞ்சள் நிறத்தாரின் (கிழக்கு ரோமானிய ரின்) அதிபர்(கூட) அவருக்கு அஞ்சுகிறார்” என்று கூறினேன்.104

அத்தியாயம் : 56
2979. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي وَ، حَدَّثَتْنِي أَيْضًا، فَاطِمَةُ عَنْ أَسْمَاءَ ـ رضى الله عنها ـ قَالَتْ صَنَعْتُ سُفْرَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِ أَبِي بَكْرٍ حِينَ أَرَادَ أَنْ يُهَاجِرَ إِلَى الْمَدِينَةِ، قَالَتْ فَلَمْ نَجِدْ لِسُفْرَتِهِ وَلاَ لِسِقَائِهِ مَا نَرْبِطُهُمَا بِهِ، فَقُلْتُ لأَبِي بَكْرٍ وَاللَّهِ مَا أَجِدُ شَيْئًا أَرْبِطُ بِهِ إِلاَّ نِطَاقِي. قَالَ فَشُقِّيهِ بِاثْنَيْنِ، فَارْبِطِيهِ بِوَاحِدٍ السِّقَاءَ وَبِالآخَرِ السُّفْرَةَ. فَفَعَلْتُ، فَلِذَلِكَ سُمِّيَتْ ذَاتَ النِّطَاقَيْنِ.
பாடம் : 123 அறப்போரில் பயண உணவை எடுத்துச் செல்லல் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் (ஹஜ்ஜுக்குத்) தேவைப்படும் உணவுப் பொருட்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தயார் செய்ய வேண்டிய பொருளில் தலைசிறந்தது இறையச்சமாகும். (2:197)
2979. அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து செல்ல விரும்பியபோது, அவர்களின் பயண உணவை நான் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டில் தயாரித்தேன். அவர்களின் பயண உணவையும் (தண்ணீருக்கான) தோல் பையையும் (ஒட்டகத்தில் வைத்துக்) கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இந்த இடுப்புக் கச்சைத் தவிர இதைக் கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என்று கூறினேன்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அதை இரண்டாகக் கிழித்து, ஒன்றால் (தண்ணீருக்கான) தோல் பையையும் மற்றொன்றால் பயண உணவையும் கட்டு” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். இதனால்தான் எனக்கு யிஇரண்டு கச்சுடையாள்’ (தாதுந் நித்தாகைன்) எனும் (அடைமொழி) வந்தது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 56
2980. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا نَتَزَوَّدُ لُحُومَ الأَضَاحِيِّ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى الْمَدِينَةِ.
பாடம் : 123 அறப்போரில் பயண உணவை எடுத்துச் செல்லல் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் (ஹஜ்ஜுக்குத்) தேவைப்படும் உணவுப் பொருட்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தயார் செய்ய வேண்டிய பொருளில் தலைசிறந்தது இறையச்சமாகும். (2:197)
2980. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில், நாங்கள் குர்பானி இறைச்சிகளைப் பயண உணவாக (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு எடுத்துச்செல்வோம்.


அத்தியாயம் : 56
2981. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى، قَالَ أَخْبَرَنِي بُشَيْرُ بْنُ يَسَارٍ، أَنَّ سُوَيْدَ بْنَ النُّعْمَانِ ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّهُ، خَرَجَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كَانُوا بِالصَّهْبَاءِ ـ وَهْىَ مِنْ خَيْبَرَ وَهْىَ أَدْنَى خَيْبَرَ ـ فَصَلَّوُا الْعَصْرَ، فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِالأَطْعِمَةِ، فَلَمْ يُؤْتَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلاَّ بِسَوِيقٍ، فَلُكْنَا فَأَكَلْنَا وَشَرِبْنَا، ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَمَضْمَضَ وَمَضْمَضْنَا، وَصَلَّيْنَا.
பாடம் : 123 அறப்போரில் பயண உணவை எடுத்துச் செல்லல் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் (ஹஜ்ஜுக்குத்) தேவைப்படும் உணவுப் பொருட்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தயார் செய்ய வேண்டிய பொருளில் தலைசிறந்தது இறையச்சமாகும். (2:197)
2981. சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் கைபர் போர் நடந்த ஆண்டில் (கைபர் போருக் காகப்) புறப்பட்டேன். மக்கள் ‘அஸ்ஸஹ்பா’ எனுமிடத்தில் லிஇதுவும் கைபர் பகுதிக்கு உட்பட்டதும், அதற்குத் தாழ்வாக உள்ளதுமாகும்லி இருந்தபோது அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உணவுகளைக் கொண்டுவரச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுக்குக் குழைத்த மாவு மட்டுமே கொண்டுவரப்பட்டது. அதை நாங்கள் மென்று உண்டோம்; (தண்ணீரும்) அருந்தினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து, வாய் கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பிறகு தொழுதோம்.105


அத்தியாயம் : 56
2982. حَدَّثَنَا بِشْرُ بْنُ مَرْحُومٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ ـ رضى الله عنه قَالَ خَفَّتْ أَزْوَادُ النَّاسِ وَأَمْلَقُوا، فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَحْرِ إِبِلِهِمْ، فَأَذِنَ لَهُمْ، فَلَقِيَهُمْ عُمَرُ فَأَخْبَرُوهُ فَقَالَ مَا بَقَاؤُكُمْ بَعْدَ إِبِلِكُمْ فَدَخَلَ عُمَرُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا بَقَاؤُهُمْ بَعْدَ إِبِلِهِمْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" نَادِ فِي النَّاسِ يَأْتُونَ بِفَضْلِ أَزْوَادِهِمْ "". فَدَعَا وَبَرَّكَ عَلَيْهِ، ثُمَّ دَعَاهُمْ بِأَوْعِيَتِهِمْ، فَاحْتَثَى النَّاسُ حَتَّى فَرَغُوا، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ "".
பாடம் : 123 அறப்போரில் பயண உணவை எடுத்துச் செல்லல் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் (ஹஜ்ஜுக்குத்) தேவைப்படும் உணவுப் பொருட்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தயார் செய்ய வேண்டிய பொருளில் தலைசிறந்தது இறையச்சமாகும். (2:197)
2982. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவுகள் தீர்ந்துபோய் பஞ்சத்திற் குள்ளானார்கள்; ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம், தங்கள் ஒட்டகங்களை (உண்பதற்காக) அறுக்க அனுமதி கேட்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்க ளுக்கு அனுமதி அளித்தார்கள். (திரும்பும் போது) மக்களை உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். மக்கள் உமர் (ரலி) அவர்களி டம் விவரத்தைத் தெரிவிக்கவே உமர் (ரலி) அவர்கள், ‘‘உங்கள் ஒட்டகங்களை அறுத்துவிட்டபிறகு (நீண்ட தூரம் நடந்தே சென்றால்) நீங்கள் உயிர் பிழைப்பது எப்படி?” என்று கேட்டார்கள்.

பிறகு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்கள் ஒட்டகங்களை அறுத்துவிட்டபிறகு அவர்கள் (நடந்தே பயணம் சென்றால்) உயிர் பிழைப்பது எப்படி?” என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘தங்கள் பயண உணவுகளில் எஞ்சியிருப்பவற்றைக் கொண்டுவரும்படி மக்களிடையே அறிவிப்புச் செய்வீராக!” என்று கூறிவிட்டு, (அவையெல்லாம் கொண்டுவரப்பட்டவுடன்) அவற்றில் வளம் வேண்டிப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு மக்களைத் தம் பாத்திரங்களைக் கொண்டுவரும்படி அழைத்தார்கள். மக்கள் திருப்தியடையும்வரை (தம் கைகளால்) அள்ளிக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் அளிக்கின்றேன்” என்று சொன்னார்கள்.106

அத்தியாயம் : 56
2983. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجْنَا وَنَحْنُ ثَلاَثُمِائَةٍ نَحْمِلُ زَادَنَا عَلَى رِقَابِنَا، فَفَنِيَ زَادُنَا، حَتَّى كَانَ الرَّجُلُ مِنَّا يَأْكُلُ فِي كُلِّ يَوْمٍ تَمْرَةً. قَالَ رَجُلٌ يَا أَبَا عَبْدِ اللَّهِ، وَأَيْنَ كَانَتِ التَّمْرَةُ تَقَعُ مِنَ الرَّجُلِ قَالَ لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَقَدْنَاهَا، حَتَّى أَتَيْنَا الْبَحْرَ فَإِذَا حُوتٌ قَدْ قَذَفَهُ الْبَحْرُ، فَأَكَلْنَا مِنْهَا ثَمَانِيَةَ عَشَرَ يَوْمًا مَا أَحْبَبْنَا.
பாடம் : 124 பயண உணவைத் தோள்கள்மீது எடுத்துச் செல்லல்
2983. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் முந்நூறு பேர் எங்கள் பயண உணவை எங்கள் பிடரிகளில் சுமந்து கொண்டு (அறப்போருக்காகப்) புறப்பட் டோம். எங்கள் பயண உணவு குறைய லாயிற்று. எந்த அளவுக்கென்றால் நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பேரீச்சம் பழம் மட்டுமே உண்ண வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டோம்.

லிஇதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறி வித்துக்கொண்டிருந்தபோது ஒரு மனிதர், ‘‘அபூஅப்தில்லாஹ்வே! (ஒருநாள் முழுவ தற்கும்) ஒரு பேரீச்சம் பழம் ஒருவருக்கு எப்படிப் போதுமாகும்?” என்று கேட்டார்லி நாங்கள் அதையும் இழந்தபோதுதான் அதன் மதிப்பை உணர்ந்தோம்” என்றார் கள்லி இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது (திமிங்கல வகை) மீன் ஒன்றைக் கடல் கரைஒதுங்கச் செய்திருந்தது. நாங்கள் அதிலிருந்து பதினெட்டு நாட்கள் விரும்பியவாறு உண்டோம்.107

அத்தியாயம் : 56
2984. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الأَسْوَدِ، حَدَّثَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، يَرْجِعُ أَصْحَابُكَ بِأَجْرِ حَجٍّ وَعُمْرَةٍ، وَلَمْ أَزِدْ عَلَى الْحَجِّ. فَقَالَ لَهَا "" اذْهَبِي وَلْيَرْدِفْكِ عَبْدُ الرَّحْمَنِ "". فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ أَنْ يُعْمِرَهَا مِنَ التَّنْعِيمِ، فَانْتَظَرَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِأَعْلَى مَكَّةَ حَتَّى جَاءَتْ.
பாடம் : 125 (வாகனத்தில்) சகோதரருக்குப் பின்னால் ஒரு பெண் அமர்ந்து செல்வது
2984. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்யச் சென்றபோது) நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! தங்கள் தோழர்கள் எல்லாரும் ஹஜ் மற்றும் உம்ராவின் நற்பலனைப் பெற்றுத் திரும்புகிறார்கள். ஆனால், நானோ ஹஜ்ஜைவிட அதிகமாக (உம்ரா எதையும்) செய்யவில்லையே!” என்று (ஏக்கத்துடன்) கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீ (உம்ரா செய்யப்) போ! உன்னை (உன் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (வாகனத்தில் தமக்குப்) பின்னால் உட்கார வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறிவிட்டு, அப்துர் ரஹ்மான் அவர்களை யிதன்யீம்’ எனுமிடத்திலிருந்து என்னை உம்ராவுக்கு அழைத்துச் செல்லும்படி கட்டளை யிட்டார்கள்.

நான் (உம்ராவை நிறைவேற்றிவிட்டுத் திரும்பி) வரும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை எதிர் பார்த்து மக்காவின் மேற்பகுதியில் காத்தி ருந்தார்கள்.108


அத்தியாயம் : 56
2985. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ـ رضى الله عنهما ـ قَالَ أَمَرَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أُرْدِفَ عَائِشَةَ وَأُعْمِرَهَا مِنَ التَّنْعِيمِ.
பாடம் : 125 (வாகனத்தில்) சகோதரருக்குப் பின்னால் ஒரு பெண் அமர்ந்து செல்வது
2985. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களை வாகனத்தில் எனக்குப் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு, யிதன்யீம்’ என்னுமிடத்திலிருந்து அவர்களை உம்ரா செய்ய அழைத்துச் செல்லும்படி நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட் டார்கள்.

அத்தியாயம் : 56
2986. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ رَدِيفَ أَبِي طَلْحَةَ، وَإِنَّهُمْ لَيَصْرُخُونَ بِهِمَا جَمِيعًا الْحَجِّ وَالْعُمْرَةِ.
பாடம் : 126 அறப்போரிலும் ஹஜ்ஜிலும் ஒருவர் பின் ஒருவர் (வாகனத்தில்) அமர்ந்து செல்லல்
2986. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் (வாகனத்தில் அவர்களுக்குப்) பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது மக்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டுக்குமே உரக்க யிதல்பியா’ கூறிக்கொண்டிருந் தார்கள்.

அத்தியாயம் : 56
2987. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَكِبَ عَلَى حِمَارٍ، عَلَى إِكَافٍ عَلَيْهِ قَطِيفَةٌ، وَأَرْدَفَ أُسَامَةَ وَرَاءَهُ.
பாடம் : 127 கழுதைமீது ஒருவர் மற்றவரைத் தமக்குப் பின்னால் அமரச்செய் வது
2987. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுதையின் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். அதில் சேணம் விரித்து குஞ்சம்வைத்த முரட்டுத் துணிமேல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். தமக்குப் பின்னே என்னைக் கழுதையின் மீது அமர்த்திக்கொண்டார்கள்.


அத்தியாயம் : 56
2988. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ يُونُسُ أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَقْبَلَ يَوْمَ الْفَتْحِ مِنْ أَعْلَى مَكَّةَ عَلَى رَاحِلَتِهِ، مُرْدِفًا أُسَامَةَ بْنَ زَيْدٍ وَمَعَهُ بِلاَلٌ وَمَعَهُ عُثْمَانُ بْنُ طَلْحَةَ مِنَ الْحَجَبَةِ، حَتَّى أَنَاخَ فِي الْمَسْجِدِ، فَأَمَرَهُ أَنْ يَأْتِيَ بِمِفْتَاحِ الْبَيْتِ، فَفَتَحَ وَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ أُسَامَةُ وَبِلاَلٌ وَعُثْمَانُ، فَمَكَثَ فِيهَا نَهَارًا طَوِيلاً ثُمَّ خَرَجَ، فَاسْتَبَقَ النَّاسُ، وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَوَّلَ مَنْ دَخَلَ، فَوَجَدَ بِلاَلاً وَرَاءَ الْبَابِ قَائِمًا، فَسَأَلَهُ أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَشَارَ لَهُ إِلَى الْمَكَانِ الَّذِي صَلَّى فِيهِ، قَالَ عَبْدُ اللَّهِ فَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى مِنْ سَجْدَةٍ
பாடம் : 127 கழுதைமீது ஒருவர் மற்றவரைத் தமக்குப் பின்னால் அமரச்செய் வது
2988. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, தம் வாகனத்தின் மீது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அமரவைத்துக்கொண்டு மக்காவின் மேற்பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் கஅபாவின் பொறுப்பாளர்களில் ஒருவரான உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களும் இருந்தனர்.

இறுதியில், நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தை) பள்ளிவாசலில் மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டுவரும்படி உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டு வரப்பட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவைத் திறந்து கொண்டு உசாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே பகலில் நீண்ட நேரம் தங்கியிருந்தார்கள்.

பிறகு வெளியே வந்தார்கள். மக்கள் (கஅபாவினுள் நுழைய) ஒருவரோ டொருவர் போட்டியிட்டனர். நான்தான் (அதனுள்) முதலில் நுழைந்தவன். அப்போது பிலால் (ரலி) அவர்களை வாசலின் பின்னே நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?” என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சுட்டிக்காட்டினார்கள். நான் அவர்களிடம், ‘‘எத்தனை ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்?” என்று கேட்க மறந்துவிட்டேன்.109

அத்தியாயம் : 56
2989. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ، يَعْدِلُ بَيْنَ الاِثْنَيْنِ صَدَقَةٌ، وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ، فَيَحْمِلُ عَلَيْهَا، أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَكُلُّ خَطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَيُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ "".
பாடம் : 128 (ஒருவர் ஏறி அமர உதவியாக) வாகனத்தைப் பிடித்துக்கொள்வது உள்ளிட்ட செயல்கள்
2989. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புகளுக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக் கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும், அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். இன்சொல்லும் ஒரு தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமாகும்.110

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2990. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُسَافَرَ بِالْقُرْآنِ إِلَى أَرْضِ الْعَدُوِّ.
பாடம் : 129 எதிரியின் நாட்டிற்கு குர்ஆன் பிரதிகளுடன் பயணம் செய்வது விரும்பத் தக்கதன்று. இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இப்னு உமர் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பும் வந்துள்ளது. நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் குர்ஆனை அறிந்திருக்கும் நிலையில் எதிரியின் நாட்டுக்குப் பயணம் செய்துள்ளனர்.
2990. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனு(டைய பிரதியு)டன் எதிரியின் நாட்டுக்குப் பயணம் செய்வதைத் தடை செய்தார்கள்.111

அத்தியாயம் : 56
2991. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَبَّحَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ وَقَدْ خَرَجُوا بِالْمَسَاحِي عَلَى أَعْنَاقِهِمْ، فَلَمَّا رَأَوْهُ قَالُوا هَذَا مُحَمَّدٌ وَالْخَمِيسُ، مُحَمَّدٌ وَالْخَمِيسُ. فَلَجَئُوا إِلَى الْحِصْنِ، فَرَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَيْهِ وَقَالَ "" اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "". وَأَصَبْنَا حُمُرًا فَطَبَخْنَاهَا، فَنَادَى مُنَادِي النَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ، فَأُكْفِئَتِ الْقُدُورُ بِمَا فِيهَا. تَابَعَهُ عَلِيٌّ عَنْ سُفْيَانَ رَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَيْهِ.
பாடம் : 130 போரின்போது ‘அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று சொல்வது
2991. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபருக்குக் காலை நேரத்தில் வந்துசேர்ந்தார்கள். அப்போது அங்குள்ள மக்கள், தங்கள் கழுத்துகளில் மண்வெட்டிகளை மாட்டிக் கொண்டு (வயல்வெளிகளுக்குப்) புறப்பட்டுவிட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘‘முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையினரும் (வந்துள்ளனர்). முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையினரும் (வந்துள்ளனர்)” என்று கூறினர். உடனே கோட்டைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தி, ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்). கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் (போர்க்) களத்தில் இறங்கிவிட்டோமென்றால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களுக்கு அது கெட்ட காலையாகவே அமையும்” என்று கூறினார்கள்.

எங்களுக்கு (நாட்டு)க் கழுதைகள் சில கிடைக்கவே அவற்றை நாங்கள் (அறுத்து) சமைத்தோம். நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (நாட்டுக்) கழுதை களின் இறைச்சிகளை உண்ணத் தடை விதிக்கிறார்கள்” என்று (உரக்கக்) கூவி அறிவித்தார். உடனே பாத்திரங்கள் அவற்றிலிருந்த இறைச்சிகளுடனேயே கவிழ்க்கப்பட்டுவிட்டன.112

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56
2992. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَكُنَّا إِذَا أَشْرَفْنَا عَلَى وَادٍ هَلَّلْنَا وَكَبَّرْنَا ارْتَفَعَتْ أَصْوَاتُنَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا أَيُّهَا النَّاسُ، ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ، فَإِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا، إِنَّهُ مَعَكُمْ، إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ، تَبَارَكَ اسْمُهُ وَتَعَالَى جَدُّهُ "".
பாடம் : 131 (பயணங்களில) யிதக்பீர்' கூறும்போது குரலை உயர்த்துவது விரும்பத் தக்கதன்று.
2992. அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (கைபர் பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந் தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறும் போது, யிலா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்றும் ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் கூறிவந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள் ளுங்கள். (மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியுறுபவன்; அருகிலிருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் வளமானது. அவனது புகழ் உயர்ந்தது” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2993. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا، وَإِذَا نَزَلْنَا سَبَّحْنَا.
பாடம் : 132 (பயணங்களில்) பள்ளத்தாக்கில் இறங்கும்போது யிசுப்ஹானல்லாஹ்' என்று கூறுவது
2993. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (பயணத்தில் மேட்டில்) ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று தக்பீர் கூறிவந்தோம்; (பள்ளத்தாக்குகளில்) இறங்கும்போது யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று தஸ்பீஹ் கூறிவந்தோம்.

அத்தியாயம் : 56
2994. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا، وَإِذَا تَصَوَّبْنَا سَبَّحْنَا.
பாடம் : 133 (பயணங்களில்) மேட்டில் ஏறும் போது ‘அல்லாஹு அக்பர்' என்று கூறுவது
2994. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (பயணத்தில் மேட்டில்) ஏறும் போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (தக்பீர்) கூறுவோம். பள்ளத்தில் இறங்கும்போது யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று யிதஸ்பீஹ்’ கூறுவோம்.


அத்தியாயம் : 56
2995. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَفَلَ مِنَ الْحَجِّ أَوِ الْعُمْرَةِ ـ وَلاَ أَعْلَمُهُ إِلاَّ قَالَ الْغَزْوِ ـ يَقُولُ كُلَّمَا أَوْفَى عَلَى ثَنِيَّةٍ أَوْ فَدْفَدٍ كَبَّرَ ثَلاَثًا ثُمَّ قَالَ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ "". قَالَ صَالِحٌ فَقُلْتُ لَهُ أَلَمْ يَقُلْ عَبْدُ اللَّهِ إِنْ شَاءَ اللَّهُ قَالَ لاَ.
பாடம் : 133 (பயணங்களில்) மேட்டில் ஏறும் போது ‘அல்லாஹு அக்பர்' என்று கூறுவது
2995. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலிருந்தோ உம்ராவிலிருந்தோ லிஅல்லது அறப்போரிலிருந்தோலி திரும்பும்போது, ஒரு குன்றில் அல்லது ஒரு மேட்டில் ஏறும்போதெல்லாம் மூன்றுமுறை, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறுவார்கள். பிறகு பின்வருமாறு கூறுவார்கள்:

லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க், வ லஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, சாஜிதூன லி ரப்பினா, ஹாமிதூன, ஸதகல்லாஹு வ அதஹு; வ நஸர அப்தஹு; வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்த வன். அவனுக்கு இணையானவர் எவரு மில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியன. அவன் அனைத்தின்மீதும் ஆற்றல் பெற்றவன். பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், (அவனை) வழிபட்டவர்களாகவும், எங்கள் இறைவனுக் குச் சிரம்பணிந்தவர்களாகவும், அவனைப் புகழ்ந்தவர்களாகவும் நாங்கள் திரும்பு கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டான்; தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான்; கூட்டுப்படை களைத் தன்னந்தனியாக நின்று தோற்கடித்துவிட்டான்)

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(ஆயிபூன என்பதற்குப்பின்) இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் திரும்புகிறோம்) என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறவில்லையா?” என்று கேட்டேன். அவர்கள் யிஇல்லை’ என்றார்கள்.

அத்தியாயம் : 56
2996. حَدَّثَنَا مَطَرُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا الْعَوَّامُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ أَبُو إِسْمَاعِيلَ السَّكْسَكِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ، وَاصْطَحَبَ، هُوَ وَيَزِيدُ بْنُ أَبِي كَبْشَةَ فِي سَفَرٍ، فَكَانَ يَزِيدُ يَصُومُ فِي السَّفَرِ فَقَالَ لَهُ أَبُو بُرْدَةَ سَمِعْتُ أَبَا مُوسَى مِرَارًا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ، كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا "".
பாடம் : 134 ஒருவர் உள்ளூரில் இருக்கும்போது செய்துவரும் நற்செயல்களுக்கான நன்மை போன்றது பயணத்தில் இருக்கும்போதும் அவருக்கு எழுதப்படும்.
2996. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் ஆரோக்கியமானவராயும் ஊரிலிருக்கும்போதும் செய்துவரும் நற்செயல்களுக்குக் கிடைப்பதைப் போன்ற (அதே) நன்மை அவர் நோயுற்றுவிடும் போதும் அல்லது பிரயாணத்தில் இருக்கும் போதும் அவருக்கு எழுதப்படும்.

இதை அறிவித்த அபூபுர்தா (ரஹ்) அவர்கள், ‘‘இதைப் பலதடவை (என் தந்தை) அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் சொல்ல நான் செவியுற்றிருக்கிறேன்” என்று தம்முடன் பயணத்தில் நோன்பு நோற்றுக்கொண்டுவந்த யஸீத் பின் அபீகப்ஷா (ரஹ்) அவர்களிடம் கூறி னார்கள்.

அத்தியாயம் : 56
2997. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَدَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم النَّاسَ يَوْمَ الْخَنْدَقِ، فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَهُمْ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَهُمْ فَانْتَدَبَ الزُّبَيْرُ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَحَوَارِيَّ الزُّبَيْرُ "". قَالَ سُفْيَانُ الْحَوَارِيُّ النَّاصِرُ.
பாடம் : 135 (இரவில்) தனியாகப் பயணம் செய்வது
2997. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின் போது (யிஇரவில் தனியாகச் சென்று எதிரிகளை உளவு பார்ப்பதற்கு முன் வருபவர் யார்?› என்று மக்களை) அழைத்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (அப்போதும்) ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்யேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; என் (பிரத்யேக) உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள்.113

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘மூலத்தில் இடம்பெற்றுள்ள யிஹவாரீ’ என்பது உதவியாளரைக் குறிக்கும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 56