2958. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، قَالَ قَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ رَجَعْنَا مِنَ الْعَامِ الْمُقْبِلِ فَمَا اجْتَمَعَ مِنَّا اثْنَانِ عَلَى الشَّجَرَةِ الَّتِي بَايَعْنَا تَحْتَهَا، كَانَتْ رَحْمَةً مِنَ اللَّهِ. فَسَأَلْتُ نَافِعًا عَلَى أَىِّ شَىْءٍ بَايَعَهُمْ عَلَى الْمَوْتِ قَالَ لاَ، بَايَعَهُمْ عَلَى الصَّبْرِ.
பாடம் : 110 யிபோரில் பின்வாங்கி ஓடக் கூடாது' என்று உறுதிமொழி வாங்குவது சிலர், யிபோரில் மரணத்தைச் சந்திக்க தயாராயிருப்பதாக உறுதிமொழி வாங்குவது’ என்று அறிவித்துள்ளனர். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (பொதுவாகவே) கூறுகின்றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே உறுதிமொழியளித்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி கொண்டான். (48:18)93
2958. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஹுதைபியா உடன்படிக்கை கையொப்பமான ஆண்டிற்கு) அடுத்த ஆண்டு (ஒப்பந்தப்படி உம்ரா செய்யத்) திரும்பி வந்தோம். யிநாங்கள் (ஹுதைபியா ஆண்டில்) எந்த மரத்திற்குக் கீழே (நபி (ஸல்) அவர்களின் கரத்தில்) உறுதிமொழி எடுத்துக்கொண்டோமோ அந்த மரம் இது தான்’ என்று எங்களில் எந்த இருவரும் ஒருமித்த கருத்துக் கொள்ளவில்லை. அது அல்லாஹ்வின் அருளாக அமைந்தது.

அறிவிப்பாளர் ஜுவைரியா பின் அஸ்மா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து கேட்டு இதை எங்களுக்கு அறிவித்த) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் நாங்கள், ‘‘எதன்மீது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடமிருந்து உறுதிமொழி பெற்றார் கள்? மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்ப தற்காகவா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. ஆனால், (நிலை குலைந்துபோகாமல்) பொறுமையாக இருக்குமாறுதான் அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கினார்கள்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 56
2959. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ زَمَنَ الْحَرَّةِ أَتَاهُ آتٍ فَقَالَ لَهُ إِنَّ ابْنَ حَنْظَلَةَ يُبَايِعُ النَّاسَ عَلَى الْمَوْتِ. فَقَالَ لاَ أُبَايِعُ عَلَى هَذَا أَحَدًا بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 110 யிபோரில் பின்வாங்கி ஓடக் கூடாது' என்று உறுதிமொழி வாங்குவது சிலர், யிபோரில் மரணத்தைச் சந்திக்க தயாராயிருப்பதாக உறுதிமொழி வாங்குவது’ என்று அறிவித்துள்ளனர். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (பொதுவாகவே) கூறுகின்றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே உறுதிமொழியளித்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி கொண்டான். (48:18)93
2959. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அல்ஹர்ரா’ போரின்போது என்னிடம் ஒருவர் வந்து, ‘‘அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) அவர்கள், மக்களிடம் மரணத்தைச் சந்திக்க தயாராயிருக்கும்படி உறுதிமொழி வாங்குகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஹுதைபியாவில் அளித்த உறுதிமொழிக்கு)ப் பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்கமாட்டேன்”என்று கூறினேன்.94


அத்தியாயம் : 56
2960. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَايَعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ثُمَّ عَدَلْتُ إِلَى ظِلِّ الشَّجَرَةِ، فَلَمَّا خَفَّ النَّاسُ قَالَ "" يَا ابْنَ الأَكْوَعِ، أَلاَ تُبَايِعُ "". قَالَ قُلْتُ قَدْ بَايَعْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" وَأَيْضًا "". فَبَايَعْتُهُ الثَّانِيَةَ،. فَقُلْتُ لَهُ يَا أَبَا مُسْلِمٍ، عَلَى أَىِّ شَىْءٍ كُنْتُمْ تُبَايِعُونَ يَوْمَئِذٍ قَالَ عَلَى الْمَوْتِ.
பாடம் : 110 யிபோரில் பின்வாங்கி ஓடக் கூடாது' என்று உறுதிமொழி வாங்குவது சிலர், யிபோரில் மரணத்தைச் சந்திக்க தயாராயிருப்பதாக உறுதிமொழி வாங்குவது’ என்று அறிவித்துள்ளனர். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (பொதுவாகவே) கூறுகின்றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே உறுதிமொழியளித்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி கொண்டான். (48:18)93
2960. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (யிஇறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிவேன்; இறைவழியில் துன்பங்களைச் சகிப்பேன்’ என்று) நபி (ஸல்) அவர்களிடம் (ஹுதைபியாவில்) உறுதிமொழியளித்தேன்; பிறகு மரத்தின் நிழலில் (சற்று) ஒதுங்கினேன். (நபி (ஸல்) அவர்களைச் சுற்றிலுமிருந்த) மக்கள் (கூட்டம்) சற்று குறைந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘அக்வஉ உடைய மகனே! (சலமாவே!) நீர் உறுதிமொழியளிக்க வில்லையா?” என்று கேட்டார்கள். ‘‘நான் ஏற்கெனவே உறுதிமொழியளித்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மீண்டும் (அளிப்பீராக!)” என்று கூறினார்கள். ஆகவே, நான் இரண்டாவது முறையாக உறுதிமொழியளித்தேன்.

அறிவிப்பாளர் யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இதை எனக்கு அறிவித்த சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம்) நான், ‘‘அபூமுஸ்லிமே! அன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி (ஸல்) அவர்களிடம்) உறுதிமொழியளித்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மரணத்தைச் சந்திக்கவும் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 56
2961. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَتِ الأَنْصَارُ يَوْمَ الْخَنْدَقِ تَقُولُ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدَا عَلَى الْجِهَادِ مَا حَيِينَا أَبَدَا فَأَجَابَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَهْ فَأَكْرِمِ الأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ
பாடம் : 110 யிபோரில் பின்வாங்கி ஓடக் கூடாது' என்று உறுதிமொழி வாங்குவது சிலர், யிபோரில் மரணத்தைச் சந்திக்க தயாராயிருப்பதாக உறுதிமொழி வாங்குவது’ என்று அறிவித்துள்ளனர். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (பொதுவாகவே) கூறுகின்றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே உறுதிமொழியளித்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி கொண்டான். (48:18)93
2961. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது (மதீனாவாசிகளான) அன்சாரிகள்,

‘‘நாங்கள்”முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்.வாழும்வரைஎப்போதும்அறப்போர் புரிவோம்”

என்று பாடியவண்ணம் (அகழ் தோண் டிக்கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள்,

‘‘இறைவா!மறுமை வாழ்வேவாழ்வாகும்;ஆகவே,அன்சாரிகளையும்முஹாஜிர்களையும்கண்ணியப்படுத்துவாயாக!”

என்று (பாடலிலேயே) பதிலளித் தார்கள்.


அத்தியாயம் : 56
2962. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ مُحَمَّدَ بْنَ فُضَيْلٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ مُجَاشِعٍ ـ رضى الله عنه ـ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَا وَأَخِي فَقُلْتُ بَايِعْنَا عَلَى الْهِجْرَةِ. فَقَالَ " مَضَتِ الْهِجْرَةُ لأَهْلِهَا ". فَقُلْتُ عَلاَمَ تُبَايِعُنَا قَالَ " عَلَى الإِسْلاَمِ وَالْجِهَادِ ".
பாடம் : 110 யிபோரில் பின்வாங்கி ஓடக் கூடாது' என்று உறுதிமொழி வாங்குவது சிலர், யிபோரில் மரணத்தைச் சந்திக்க தயாராயிருப்பதாக உறுதிமொழி வாங்குவது’ என்று அறிவித்துள்ளனர். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (பொதுவாகவே) கூறுகின்றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே உறுதிமொழியளித்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி கொண்டான். (48:18)93
2962. முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் என் சகோதரரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘புலம்பெயர்ந்து செல்ல (ஹிஜ்ரத்) எங்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஹிஜ்ரத் (அதற்குரிய வேளையில்) அதற்குரியவர்களுக்கு (கடமையாகி) நடந்து முடிந்துவிட்டது” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘(இனி) வேறெதற்காகத் தாங்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்குவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாம், அறப்போர் ஆகியவற்றுக்காக (உறுதிமொழி வாங்குவேன்)” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 56
2964. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه ـ لَقَدْ أَتَانِي الْيَوْمَ رَجُلٌ فَسَأَلَنِي عَنْ أَمْرٍ مَا دَرَيْتُ مَا أَرُدُّ عَلَيْهِ، فَقَالَ أَرَأَيْتَ رَجُلاً مُؤْدِيًا نَشِيطًا، يَخْرُجُ مَعَ أُمَرَائِنَا فِي الْمَغَازِي، فَيَعْزِمُ عَلَيْنَا فِي أَشْيَاءَ لاَ نُحْصِيهَا. فَقُلْتُ لَهُ وَاللَّهِ مَا أَدْرِي مَا أَقُولُ لَكَ إِلاَّ أَنَّا كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَعَسَى أَنْ لاَ يَعْزِمَ عَلَيْنَا فِي أَمْرٍ إِلاَّ مَرَّةً حَتَّى نَفْعَلَهُ، وَإِنَّ أَحَدَكُمْ لَنْ يَزَالَ بِخَيْرٍ مَا اتَّقَى اللَّهَ، وَإِذَا شَكَّ فِي نَفْسِهِ شَىْءٌ سَأَلَ رَجُلاً فَشَفَاهُ مِنْهُ، وَأَوْشَكَ أَنْ لاَ تَجِدُوهُ، وَالَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ مَا أَذْكُرُ مَا غَبَرَ مِنَ الدُّنْيَا إِلاَّ كَالثَّغْبِ شُرِبَ صَفْوُهُ وَبَقِيَ كَدَرُهُ.
பாடம் : 111 மக்களால் செய்ய முடிந்ததையே தலைவர் வலியுறுத்தல்
2964. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இன்று என்னிடம் ஒரு மனிதர் வந்து, ஒரு விஷயம் குறித்து கேட்டார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்பது எனக்குத் தெரியவில்லை. அவர், ‘‘ஆயுத பாணியான, செயல் வேகமுள்ள ஒருவர் தம் தலைவர்களுடன் அறப்போருக்குச் செல்கிறார். அப்போது தலைவர், அவரால் செய்ய முடியாத சில விஷயங்களைச் செய்யும்படி வற்புறுத்துகிறார் எனில் அவர் என்ன செய்வது?” என்று கேட்டார்.

நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு என்ன (பதில்) சொல்வதென்பது எனக்குத் தெரியவில்லை. ஆயினும், நாங்கள் (இத்தகைய அறப்போர்களில்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கி றோம். அப்போதெல்லாம் அவர்கள் ஒரு விஷயத்தை ஒருமுறைதான் உத்தரவிடு வார்கள். நாங்கள் அதைச் செய்து விடுவோம். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடக்கும்வரை நன்மையில் இருப்பீர்கள். உங்கள் உள்ளத்தில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் (விஷயமறிந்த) யாரிடமாவது கேளுங்கள். அவர், உங்கள் (நெருடலை நீக்கி) சந்தேகத்தை நிவர்த்தி செய்யக் கூடும்.

(இனிவரும் காலங்களில்) அத்தகைய (தகுதி வாய்ந்த ஒரு)வரை நீங்கள் அடைய முடியாமலும் போகக்கூடும். யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! இந்த உலகத்தில் போனது போக எஞ்சியிருப்பவற்றை, தூய நீர் குடிக்கப்பட்டு கசடுகள் மட்டும் எஞ்சி (தேங்கி நின்று)விட்ட ஒரு குட்டையாகவே நான் கருதுகின்றேன்” என்று கூறினேன்.

அத்தியாயம் : 56
2965. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ وَكَانَ كَاتِبًا لَهُ قَالَ كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ فَقَرَأْتُهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا انْتَظَرَ حَتَّى مَالَتِ الشَّمْسُ.
பாடம் : 112 நபி (ஸல்) அவர்கள் முற்பகலில் போரிடவில்லையென்றால், சூரியன் உச்சியிலிருந்து சாயும்வரை போரைத் தள்ளிப்போட்டுவிடுவார் கள்.
2965. உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் அடிமையாகவும் அவர்களுடைய எழுத்தராகவும்இருந்த சாலிம் அபுந்நள்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள். அதில் எழுதியிருந்ததை நான் படித்தேன். (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எதிரிகளைப் போர்க்களத்தில்) சந்தித்த நாட்களில் ஒன்றில் சூரியன் உச்சி சாயும்வரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.


அத்தியாயம் : 56
2966. ثُمَّ قَامَ فِي النَّاسِ قَالَ " أَيُّهَا النَّاسُ، لاَ تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ، وَسَلُوا اللَّهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا، وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ، ثُمَّ قَالَ اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ، اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ ".
பாடம் : 112 நபி (ஸல்) அவர்கள் முற்பகலில் போரிடவில்லையென்றால், சூரியன் உச்சியிலிருந்து சாயும்வரை போரைத் தள்ளிப்போட்டுவிடுவார் கள்.
2966. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தலானார்கள்: மக்களே! (போர்க்களம் சென்று) எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரிலிருந்து) பாதுகாப் புக் கோருங்கள். (அதையும் மீறி) எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க நேரிட்டால் நிலைகுலைந்துவிடாமல் (போரின் துன்பங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாயிருங்கள். வாட்களின் நிழலில்தான் சொர்க்கம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, ‘‘இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! கூட்டுப் படைகளைத் தோற்கடிப்பவனே! இ(ப்பகை)வர்களை தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அத்தியாயம் : 56
2967. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْمُغِيرَةِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَتَلاَحَقَ بِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا عَلَى نَاضِحٍ لَنَا قَدْ أَعْيَا فَلاَ يَكَادُ يَسِيرُ فَقَالَ لِي "" مَا لِبَعِيرِكَ "". قَالَ قُلْتُ عَيِيَ. قَالَ فَتَخَلَّفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَزَجَرَهُ وَدَعَا لَهُ، فَمَا زَالَ بَيْنَ يَدَىِ الإِبِلِ قُدَّامَهَا يَسِيرُ. فَقَالَ لِي "" كَيْفَ تَرَى بَعِيرَكَ "". قَالَ قُلْتُ بِخَيْرٍ قَدْ أَصَابَتْهُ بَرَكَتُكَ. قَالَ "" أَفَتَبِيعُنِيهِ "". قَالَ فَاسْتَحْيَيْتُ، وَلَمْ يَكُنْ لَنَا نَاضِحٌ غَيْرَهُ، قَالَ فَقُلْتُ نَعَمْ. قَالَ "" فَبِعْنِيهِ "". فَبِعْتُهُ إِيَّاهُ عَلَى أَنَّ لِي فَقَارَ ظَهْرِهِ حَتَّى أَبْلُغَ الْمَدِينَةَ. قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي عَرُوسٌ، فَاسْتَأْذَنْتُهُ فَأَذِنَ لِي، فَتَقَدَّمْتُ النَّاسَ إِلَى الْمَدِينَةِ حَتَّى أَتَيْتُ الْمَدِينَةَ، فَلَقِيَنِي خَالِي فَسَأَلَنِي عَنِ الْبَعِيرِ، فَأَخْبَرْتُهُ بِمَا صَنَعْتُ فِيهِ فَلاَمَنِي، قَالَ وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِي حِينَ اسْتَأْذَنْتُهُ "" هَلْ تَزَوَّجْتَ بِكْرًا أَمْ ثَيِّبًا "". فَقُلْتُ تَزَوَّجْتُ ثَيِّبًا. فَقَالَ "" هَلاَّ تَزَوَّجْتَ بِكْرًا تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ تُوُفِّيَ وَالِدِي ـ أَوِ اسْتُشْهِدَ ـ وَلِي أَخَوَاتٌ صِغَارٌ، فَكَرِهْتُ أَنْ أَتَزَوَّجَ مِثْلَهُنَّ، فَلاَ تُؤَدِّبُهُنَّ، وَلاَ تَقُومُ عَلَيْهِنَّ، فَتَزَوَّجْتُ ثَيِّبًا لِتَقُومَ عَلَيْهِنَّ وَتُؤَدِّبَهُنَّ. قَالَ فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ غَدَوْتُ عَلَيْهِ بِالْبَعِيرِ، فَأَعْطَانِي ثَمَنَهُ، وَرَدَّهُ عَلَىَّ. قَالَ الْمُغِيرَةُ هَذَا فِي قَضَائِنَا حَسَنٌ لاَ نَرَى بِهِ بَأْسًا.
பாடம் : 113 ஒருவர் (போரிலிருந்து விலக்குப் பெற) தலைவரிடம் அனுமதி கேட்பது ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வையும் அவன் தூதரையும் (மனப்பூர்வமாக) நம்பி, ஒரு பொதுப் பணிக்காக இறைத்தூதருடன் இருக்கும் போது அவரிடம் அனுமதி பெறாமல் (அவரைப் பிரிந்து) செல்லாமலிருப்பவர் களே உண்மையான இறைநம்பிக்கையாளர் கள் ஆவர். (நபியே!) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள்தான், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மையாக ஏற்றுக்கொண்டவர்கள். எனவே, அவர்கள் தமது தேவை எதற் காவது உம்மிடம் அனுமதி கேட்டால் அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதியளிப்பீராக! மேலும், அவர்களுக் காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோருவீராக! நிச்சயமாக, அல்லாஹ் மிகவும் மன்னிக்கக்கூடியவனாகவும் கிருபை நிறைந்தவனாகவும் இருக்கின்றான். (24:62)
2967. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குச் சென்றேன். களைப்படைந்து நடக்க முடியாமல் போய்க்கொண்டிருந்த நீர் சுமக்கும் ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து சென்றுகொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை வந்தடைந்தார்கள். அப்போது என்னிடம், ‘‘உமது ஒட்டகத்திற்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், ‘‘அது களைப்படைந்துவிட்டது” என்று பதிலளித்தேன். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சற்றுப் பின்தங்கி அதை அதட்டி அதற்காக துஆ செய்தார்கள். உடனே அது தனக்குமுன் சென்றுகொண்டிருந்த ஒட்டகங்களை முந்திக்கொண்டு செல்லத் தொடங்கியது.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உமது ஒட்டகத்தை இப்போது எப்படிக் காண்கிறீர்?” என்று கேட்டார்கள். நான், ‘‘நல்ல நிலையில் காண்கிறேன். அது தங்களின் வளத்தை (பரக்கத்தை)ப் பெற்றுக்கொண்டுவிட்டது” என்று சொன்னேன். உடனே அவர்கள், ‘‘நீர் அதை எனக்கு விற்றுவிடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான் (பதில் சொல்ல) வெட்கப்பட்டேன். (ஏனெனில்,) எங்களிடம் அதைத் தவிர நீர் சுமக்கும் ஒட்டகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆயினும் நான், ‘‘சரி (விற்றுவிடுகிறேன்)” என்று பதிலளித் தேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியாயின் அதை எனக்கு விற்றுவிடுவீராக!” என்று கூற, நான் அதன் மீது பயணம் செய்து மதீனாவைச் சென்றடைய என்னை அனு மதிக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு அந்த ஒட்டகத்தை விற்றுவிட்டேன்.

நான் அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணமானவன்” என்று சொல்லி (ஊருக்கு விரைவாகச் செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நான் மற்ற மக்களைவிட முன்னதாகச் சென்று மதீனாவை அடைந்துவிட்டேன். அப்போது என்னை என் தாய்மாமன் (ஜத்து பின் கைஸ்) சந்தித்து ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். நான் அதை விற்றுவிட்டதை அவருக்குத் தெரிவித்தேன். அதற்காக அவர் என்னைக் குறை கூறினார்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டபோது அவர்கள் என்னிடம், ‘‘நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? கன்னி கழிந்த பெண்ணை மணமுடித்துக்கொண்டாயா?” என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான், ‘‘கன்னி கழிந்த ஒரு பெண்ணைத்தான் மணமுடித்துக்கொண்டேன்” என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!” என்று கூறினார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயதில் சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில்தான் என் தந்தை (உஹுத் போரில்) மரணித்துவிட்டார்கள் லிஅல்லது கொல்லப்பட்டுவிட்டார்கள்.லி ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும் அவர்களைப் பராமரிக்கவும் இயலாத அவர்களைப் போன்றே (அனுப வமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்துகொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காக வும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற் காகவும் (வாழ்ந்த அனுபவமுள்ள) கன்னி கழிந்த ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்” என்று பதிலளித்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது, காலை யில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். எனக்கு அதன் விலையைக் கொடுத்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தை யும் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட் டார்கள்.

‘‘(யிமதீனாவரை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்பது போன்ற) இத்தகைய நிபந்தனையுடன் விற்பது நமது சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது; இதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான (அறிஞர்) முஃகீரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 56
2968. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ، فَرَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ، فَقَالَ "" مَا رَأَيْنَا مِنْ شَىْءٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا "".
பாடம் : 114 திருமணமான புதிதில் அறப்போருக்குச் செல்வது இது குறித்து ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள் ளார்கள்.95 பாடம் : 115 தாம்பத்தியம் ஆரம்பித்தபின் அறப்போர் செல்ல விரும்புவது இது குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.96 பாடம் : 116 பீதி ஏற்படும்போது தலைவர் விரைவது
2968. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனா நகரில் பீதி நிலவியது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களின் குதிரை ஒன்றில் ஏறி (விவரமறிந்து வரப்) புறப் பட்டார்கள். அப்போது அவர்கள், ‘‘(பீதி ஏற்படுத்தும்) எதையும் நாம் காணவில்லை. தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இந்தக் குதிரையைக் கண்டோம்” என்று கூறினார்கள்.97

அத்தியாயம் : 56
2969. حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ فَزِعَ النَّاسُ فَرَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ بَطِيئًا، ثُمَّ خَرَجَ يَرْكُضُ وَحْدَهُ، فَرَكِبَ النَّاسُ يَرْكُضُونَ خَلْفَهُ، فَقَالَ "" لَمْ تُرَاعُوا، إِنَّهُ لَبَحْرٌ "". فَمَا سُبِقَ بَعْدَ ذَلِكَ الْيَوْمِ.
பாடம் : 117 பீதி ஏற்படும்போது (ஊர்திப் பிராணியில்) விரைவதும் (அதைக் காலால் உதைத்து) பாய்ந்தோடச் செய்வதும்
2969. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை, எதிரிகள் படையெடுத்து வருவதாக மதீனா நகர) மக்கள் பீதிக்குள்ளானார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான மெதுவாக நடக்கக்கூடிய குதிரை ஒன்றில் ஏறிக்கொண்டு, (அதை) உதைத்துப் பாய்ந்தோடச் செய்தபடி தனியாகப் புறப்பட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களும் (வாகனங்களில்) ஏறிப் பாய்ந்து சென்றார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பீதியடையாதீர்கள். (பீதியடையும்படி யாரும் படையெடுத்து வரவில்லை.) இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக்கூடியதாக உள்ளது” என்று கூறினார்கள். அந்த நாளுக்குப் பிறகு, அந்தக் குதிரையை யாராலும் முந்த முடிய வில்லை.

அத்தியாயம் : 56
2970. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ، سَأَلَ زَيْدَ بْنَ أَسْلَمَ، فَقَالَ زَيْدٌ سَمِعْتُ أَبِي يَقُولُ، قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَرَأَيْتُهُ يُبَاعُ، فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم آشْتَرِيهِ فَقَالَ "" لاَ تَشْتَرِهِ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ "".
பாடம் : 118 பீதி ஏற்படும்போது (தலைவர் மட்டும்) தனியாகப் புறப்படுவது98 பாடம் : 119 (ஒருவர் தம் சார்பாக) இறைவழியில் போரிடுவதற்காக(ப் பிறருக்கு)ப் பயணப் படிகளையும் சுமை தூக்கும் பிராணிகளையும் வழங்குவது முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘நான் அறப்போருக்குச் செல்ல விரும்பு கிறேன்” என்று கூறினேன். அவர்கள், ‘‘நான் என் செல்வத்திலிருந்து ஒரு பகுதியைக் கொடுத்து உமக்கு உதவ விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ் எனக்கு நிறையக் கொடுத்திருக்கின்றான் (அதுவே, எனக்குப் போதும்)” என்று கூறினேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘உமது செல்வம் உமக்குரியது. நான் இந்த இனத்தில் என் செல்வத்(தில் ஒரு பாகத்)தைச் செலவிட வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘மக்கள் சிலர் இந்த (பொது) நிதியிலிருந்து அறப்போர் புரிவதற்காக (உதவித் தொகையை) எடுத்துக்கொண்டு பிறகு அறப்போர் புரிவதில்லை. இவ்வாறு செய்பவர் பெற்ற நிதியை, அவரது செல்வத்திலிருந்து நாம் எடுத்துக்கொள்ள நமக்கு (முழு) உரிமை யுண்டு” என்று கூறினார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்களும் முஜாஹித் (ரஹ்) அவர்களும், ‘‘உன்னிடம் இறை வழியில் (போருக்குப்) புறப்பட உதவும் செல்வம் ஏதும் கொடுக்கப்பட்டால் அதை நீ விரும்பியபடி (போருக்குப்) பயன்படுத் திக்கொள். அதை உன் வீட்டாரிடமும் நீ கொடுக்கலாம்” என்று (தீர்ப்பு) கூறினர்.
2970. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒருவரை இறைவழியில் அறப் போர் புரிய ஒரு குதிரையின் மீது ஏற்றி அனுப்பிவைத்தேன். பிறகு அக்குதிரை (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் அதை விலைக்கு வாங்கலாமா?” என்று கேட் டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை வாங்காதீர்கள். உங்கள் தர்மத் தைத் திரும்பப்பெறாதீர்கள்” என்று கூறி னார்கள்.99

இதை அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 56
2971. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَوَجَدَهُ يُبَاعُ، فَأَرَادَ أَنْ يَبْتَاعَهُ، فَسَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ تَبْتَعْهُ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ "".
பாடம் : 118 பீதி ஏற்படும்போது (தலைவர் மட்டும்) தனியாகப் புறப்படுவது98 பாடம் : 119 (ஒருவர் தம் சார்பாக) இறைவழியில் போரிடுவதற்காக(ப் பிறருக்கு)ப் பயணப் படிகளையும் சுமை தூக்கும் பிராணிகளையும் வழங்குவது முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘நான் அறப்போருக்குச் செல்ல விரும்பு கிறேன்” என்று கூறினேன். அவர்கள், ‘‘நான் என் செல்வத்திலிருந்து ஒரு பகுதியைக் கொடுத்து உமக்கு உதவ விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ் எனக்கு நிறையக் கொடுத்திருக்கின்றான் (அதுவே, எனக்குப் போதும்)” என்று கூறினேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘உமது செல்வம் உமக்குரியது. நான் இந்த இனத்தில் என் செல்வத்(தில் ஒரு பாகத்)தைச் செலவிட வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘மக்கள் சிலர் இந்த (பொது) நிதியிலிருந்து அறப்போர் புரிவதற்காக (உதவித் தொகையை) எடுத்துக்கொண்டு பிறகு அறப்போர் புரிவதில்லை. இவ்வாறு செய்பவர் பெற்ற நிதியை, அவரது செல்வத்திலிருந்து நாம் எடுத்துக்கொள்ள நமக்கு (முழு) உரிமை யுண்டு” என்று கூறினார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்களும் முஜாஹித் (ரஹ்) அவர்களும், ‘‘உன்னிடம் இறை வழியில் (போருக்குப்) புறப்பட உதவும் செல்வம் ஏதும் கொடுக்கப்பட்டால் அதை நீ விரும்பியபடி (போருக்குப்) பயன்படுத் திக்கொள். அதை உன் வீட்டாரிடமும் நீ கொடுக்கலாம்” என்று (தீர்ப்பு) கூறினர்.
2971. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒருவரை இறைவழியில் (போர் புரிய) ஒரு குதிரையின் மீது ஏற்றி அனுப்பிவைத்தார்கள். பிறகு அந்தக் குதிரை சந்தையில் விற்கப்படுவதைக் கண்டு அதை விலைக்கு வாங்க விரும்பி (அது பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதை வாங்காதீர் கள். உங்கள் தர்மத்தைத் திரும்பப் பெறாதீர்கள்” என்று கூறிவிட்டார்கள்.


அத்தியாயம் : 56
2972. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو صَالِحٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي مَا تَخَلَّفْتُ عَنْ سَرِيَّةٍ، وَلَكِنْ لاَ أَجِدُ حَمُولَةً، وَلاَ أَجِدُ مَا أَحْمِلُهُمْ عَلَيْهِ، وَيَشُقُّ عَلَىَّ أَنْ يَتَخَلَّفُوا عَنِّي، وَلَوَدِدْتُ أَنِّي قَاتَلْتُ فِي سَبِيلِ اللَّهِ فَقُتِلْتُ، ثُمَّ أُحْيِيتُ ثُمَّ قُتِلْتُ، ثُمَّ أُحْيِيتُ "".
பாடம் : 118 பீதி ஏற்படும்போது (தலைவர் மட்டும்) தனியாகப் புறப்படுவது98 பாடம் : 119 (ஒருவர் தம் சார்பாக) இறைவழியில் போரிடுவதற்காக(ப் பிறருக்கு)ப் பயணப் படிகளையும் சுமை தூக்கும் பிராணிகளையும் வழங்குவது முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘நான் அறப்போருக்குச் செல்ல விரும்பு கிறேன்” என்று கூறினேன். அவர்கள், ‘‘நான் என் செல்வத்திலிருந்து ஒரு பகுதியைக் கொடுத்து உமக்கு உதவ விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ் எனக்கு நிறையக் கொடுத்திருக்கின்றான் (அதுவே, எனக்குப் போதும்)” என்று கூறினேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘உமது செல்வம் உமக்குரியது. நான் இந்த இனத்தில் என் செல்வத்(தில் ஒரு பாகத்)தைச் செலவிட வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘மக்கள் சிலர் இந்த (பொது) நிதியிலிருந்து அறப்போர் புரிவதற்காக (உதவித் தொகையை) எடுத்துக்கொண்டு பிறகு அறப்போர் புரிவதில்லை. இவ்வாறு செய்பவர் பெற்ற நிதியை, அவரது செல்வத்திலிருந்து நாம் எடுத்துக்கொள்ள நமக்கு (முழு) உரிமை யுண்டு” என்று கூறினார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்களும் முஜாஹித் (ரஹ்) அவர்களும், ‘‘உன்னிடம் இறை வழியில் (போருக்குப்) புறப்பட உதவும் செல்வம் ஏதும் கொடுக்கப்பட்டால் அதை நீ விரும்பியபடி (போருக்குப்) பயன்படுத் திக்கொள். அதை உன் வீட்டாரிடமும் நீ கொடுக்கலாம்” என்று (தீர்ப்பு) கூறினர்.
2972. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்னும் அச்சம் மட்டும் எனக்கில்லாவிட்டால், நான் எந்தச் சிறு படைக் குழுவிலிருந்தும் (அதில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கியிருக்க மாட்டேன்.

ஆயினும், சுமக்கும் வாகனம் என்னிடம் இல்லை. அதாவது என் தோழர்களை ஏற்றிச்செல்ல (போதிய) வாகன வசதி என்னிடம் இல்லை. (அதே நேரத்தில் நான் போருக்குச் செல்ல) அவர்கள் என்னுடன் (போருக்கு) வர முடியாமல் பின்தங்க வேண்டியிருப்பது எனக்கு மன வேதனையளிக்கிறது. மேலும், நான் இறைவழியில் போரிட்டு அதனால் கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட்டு மீண்டும் (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட (இவ்வாறே மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்ய) வேண்டும் என்று விரும்புகிறேன்.100

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2973. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَزْوَةَ تَبُوكَ، فَحَمَلْتُ عَلَى بَكْرٍ، فَهْوَ أَوْثَقُ أَعْمَالِي فِي نَفْسِي، فَاسْتَأْجَرْتُ أَجِيرًا، فَقَاتَلَ رَجُلاً، فَعَضَّ أَحَدُهُمَا الآخَرَ فَانْتَزَعَ يَدَهُ مِنْ فِيهِ، وَنَزَعَ ثَنِيَّتَهُ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَهْدَرَهَا فَقَالَ "" أَيَدْفَعُ يَدَهُ إِلَيْكَ فَتَقْضَمُهَا كَمَا يَقْضَمُ الْفَحْلُ "".
பாடம் : 120 (அறப்போரில் உதவி புரிய அமர்த்தப்படும்) கூலியாள் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களும் இப்னு சீரீன் (ரஹ்) அவர்களும், ‘‘(அறப்போரில் உதவும்) கூலியாளுக்குப் போரில் கிடைக்கும் செல்வத்திலிருந்து பங்கு தரப்படும்” என்று கூறுகிறார்கள். அத்திய்யா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் ஒரு குதிரையை அதற்கு (போரில் கிடைக்கும் செல்வத்திலிருந்து) தரப்படும் பங்கில் பாதியைத் தந்துவிடுவதாகக் கூறி (வாடகைக்கு) எடுத்தார்கள். அந்தக் குதிரைக்கு நானூறு பொற்காசுகள் பங்கு கிடைத்தன. இரு நூறு பொற்காசுகளைத் தாம் எடுத்துக்கொண்டு குதிரையின் உரிமையாளருக்கு இருநூறு பொற்காசு களைக் கொடுத்தார்கள்.
2973. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டேன். நான் இளவயது ஒட்டகம் ஒன்றில் (ஒருவரை அறப்போருக்கு) ஏற்றி அனுப்பினேன். அதை என் நற்செயல்களி லேயே வலுவானதாக என் மனத்தில் நான் கருதுகின்றேன். அப்போது (அறப்போரில் உதவி புரிய) பணியாள் ஒருவரை அமர்த்தினேன். அந்தப் பணியாள் ஒரு மனிதரோடு போரிட்டார். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரைக் கடித்துவிட்டார். கடிபட்டவர் தமது கையை, கடித்தவரின் வாயிலிருந்து உருவிக் கொண்டார். அப்போது கடித்தவரின் முன்பல்லை அவர் பிடுங்கிவிட்டார்.

பல் பிடுங்கப்பட்டவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். (பல்லைப் பிடுங்கியவர் மீது வழக்குத் தொடுத்தார்.) அதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அப்போது, ‘‘நீ கடா ஒட்டகம் மெல்வதைப் போன்று மென்றுகொண்டிருக்க, அவர் தமது கையை உனக்குக் கொடுத்துக் கொண்டிருப்பாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அத்தியாயம் : 56
2974. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ أَخْبَرَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي ثَعْلَبَةُ بْنُ أَبِي مَالِكٍ الْقُرَظِيُّ، أَنَّ قَيْسَ بْنَ سَعْدٍ الأَنْصَارِيّ َ ـ رضى الله عنه ـ وَكَانَ صَاحِبَ لِوَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرَادَ الْحَجَّ فَرَجَّلَ.
பாடம் : 121 நபி (ஸல்) அவர்களின் கொடி தொடர்பாகக் கூறப்பட்டுள் ளவை101
2974. ஸஅலபா பின் அபீமாலிக் அல் குரழீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் கொடியை எடுத்துச் செல்பவரா யிருந்த கைஸ் பின் சஅத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பிய போது தலைவாரிக் கொண்டார்கள்.


அத்தியாயம் : 56
2975. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي خَيْبَرَ، وَكَانَ بِهِ رَمَدٌ، فَقَالَ أَنَا أَتَخَلَّفُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَخَرَجَ عَلِيٌّ فَلَحِقَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم، فَلَمَّا كَانَ مَسَاءُ اللَّيْلَةِ الَّتِي فَتَحَهَا فِي صَبَاحِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لأُعْطِيَنَّ الرَّايَةَ ـ أَوْ قَالَ لَيَأْخُذَنَّ ـ غَدًا رَجُلٌ يُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ ـ أَوْ قَالَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ـ يَفْتَحُ اللَّهُ عَلَيْهِ "". فَإِذَا نَحْنُ بِعَلِيٍّ، وَمَا نَرْجُوهُ، فَقَالُوا هَذَا عَلِيٌّ، فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَفَتَحَ اللَّهُ عَلَيْهِ.
பாடம் : 121 நபி (ஸல்) அவர்களின் கொடி தொடர்பாகக் கூறப்பட்டுள் ளவை101
2975. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேú”’ என்று (வருத்தத் துடன்) கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்துகொண் டார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அதற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாளை (முஸ்லிம்களின்) கொடியை யிஒரு மனிதரிடம் தரப் போகிறேன்லி அல்லது யிஒரு மனிதர் (முஸ்லிம்களின்) கொடியைப் பிடித்திருப்பார்’. ‘அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றனர்’ அல்லது ‘அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்றார்’. அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள்.

நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருந்தார்கள். உடனே மக்கள், ‘‘இதோ, அலீ அவர்கள்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.


அத்தியாயம் : 56
2976. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَمِعْتُ الْعَبَّاسَ، يَقُولُ لِلزُّبَيْرِ رضى الله عنهما هَا هُنَا أَمَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تَرْكُزَ الرَّايَةَ.
பாடம் : 121 நபி (ஸல்) அவர்களின் கொடி தொடர்பாகக் கூறப்பட்டுள் ளவை101
2976. நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் (ஹஜூன் எனுமிடத்தைச் சுட்டிக்காட்டி), ‘‘நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) உங்களை இங்குதான் கொடியை நடச்சொன்னார்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2977. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، فَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ، فَوُضِعَتْ فِي يَدِي "". قَالَ أَبُو هُرَيْرَةَ وَقَدْ ذَهَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنْتُمْ تَنْتَثِلُونَهَا.
பாடம் : 122 ‘‘ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் (எதிரிகளின் உள்ளங்களில் என்னைப் பற்றிய) அச்சம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் வெற்றியளிக்கப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (ஏக இறையை) மறுத்தவர்களின் உள்ளங்களில் விரைவில் நாம் பீதியைப் போடுவோம். ஏனெனில், எதற்கு அல்லாஹ் எந்தச் சான்றையும் அளிக்கவில் லையோ அதை அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கினார்கள். (3:151) ஜாபிர் (ரலி) அவர்கள் (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள் ளார்கள்.102
2977. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் கொண்ட) சொற்களுடன் அனுப்பப் பட்டுள்ளேன்.103 (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப் பட்டுள்ளது. (ஒருமுறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங் களுடைய சாவிகள் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தோண்டி) வெளியே எடுத்து (அனுபவித்து)க் கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன் னார்கள்.


அத்தியாயம் : 56