2882. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نَسْقِي، وَنُدَاوِي الْجَرْحَى، وَنَرُدُّ الْقَتْلَى إِلَى الْمَدِينَةِ.
பாடம் : 67
அறப்போரில் காயமுற்றவர்களுக் குப் பெண்கள் மருந்திடுவது
2882. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அறப்போரில் கலந்து கொண்டு) இருந்தோம். (அறப்போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும் மருந்திட்டும்வந்தோம். கொல்லப்பட்டவர் களை (போர்க்களத்திலிருந்து) மதீனாவிற்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந் தோம்.
அத்தியாயம் : 56

2883. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ خَالِدِ بْنِ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ كُنَّا نَغْزُو مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَسْقِي الْقَوْمَ وَنَخْدُمُهُمْ، وَنَرُدُّ الْجَرْحَى وَالْقَتْلَى إِلَى الْمَدِينَةِ.
பாடம் : 68
(அறப்போரில்) காயமடைந்தவர் களையும் கொல்லப்பட்டவர்களை யும் பெண்கள் எடுத்துவருதல்
2883. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அறப்போரில் கலந்துகொள்வோம்; அப்போது (போரில் காயமுற்ற) மக்களுக்கு நீர்புகட்டுவோம்; அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வோம்; கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்களையும் மதீனாவுக்குத் திரும்பக் கொண்டுவருவோம்.

2884. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ رُمِيَ أَبُو عَامِرٍ فِي رُكْبَتِهِ، فَانْتَهَيْتُ إِلَيْهِ قَالَ انْزِعْ هَذَا السَّهْمَ. فَنَزَعْتُهُ، فَنَزَا مِنْهُ الْمَاءُ، فَدَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ، فَقَالَ "" اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ "".
பாடம் : 69
உடலில் இருந்து அம்பைப் பிடுங்கி எடுப்பது
2884. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தையின் சகோதரர்) அபூஆமிர் (ரலி) அவர்களின் முழங்காலில் (அவ்த்தாஸ் போரில்) அம்பு எய்யப்பட்டது. நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் (என்னிடம்), ‘‘இந்த அம்பைப் பிடுங்கிவிடு” என்று கூறினார்கள். நான் அதைப் பிடுங்கி விட்டேன். அதிலிருந்து நீர் கொட்டியது.
பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களுக்கு நடந்ததைத் தெரிவித்தேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! உபைத் அபூ ஆமிருக்கு மன்னிப்பளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.49

2885. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ رَبِيعَةَ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَهِرَ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ قَالَ "" لَيْتَ رَجُلاً مِنْ أَصْحَابِي صَالِحًا يَحْرُسُنِي اللَّيْلَةَ "". إِذْ سَمِعْنَا صَوْتَ سِلاَحٍ فَقَالَ "" مَنْ هَذَا "". فَقَالَ أَنَا سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ، جِئْتُ لأَحْرُسَكَ. وَنَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 70
இறைவழியில் அறப்போர் புரியும் போது காவல் காப்பது
2885. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த புதிதில் இரவில் கண் விழித்திருந்தார் கள். பிறகு ‘‘என் தோழர்களில் எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே” என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘யார் அது?” என்று கேட்டார்கள். வந்தவர், ‘‘நான்தான் சஅத் பின் அபீவக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்” என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.

2886. حَدَّثَنَا يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَالدِّرْهَمِ وَالْقَطِيفَةِ وَالْخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ "". لَمْ يَرْفَعْهُ إِسْرَائِيلُ عَنْ أَبِي حَصِينٍ.
பாடம் : 70
இறைவழியில் அறப்போர் புரியும் போது காவல் காப்பது
2886. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
பொற்காசு, வெள்ளிக் காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, கோடுபோட்ட சதுர கறுப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் அழிந்தான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான்; (செல்வம்) வழங்கப்படா விட்டால் அதிருப்தியடைவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பிந்திய இரு தொடர்களில், இது நபி (ஸல்) அவர்களின் கூற்றாகப் பதிவாக வில்லை.

2887. وَزَادَنَا عَمْرٌو قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَعَبْدُ الدِّرْهَمِ وَعَبْدُ الْخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ سَخِطَ، تَعِسَ وَانْتَكَسَ، وَإِذَا شِيكَ فَلاَ انْتَقَشَ، طُوبَى لِعَبْدٍ آخِذٍ بِعِنَانِ فَرَسِهِ فِي سَبِيلِ اللَّهِ، أَشْعَثَ رَأْسُهُ مُغْبَرَّةٍ قَدَمَاهُ، إِنْ كَانَ فِي الْحِرَاسَةِ كَانَ فِي الْحِرَاسَةِ، وَإِنْ كَانَ فِي السَّاقَةِ كَانَ فِي السَّاقَةِ، إِنِ اسْتَأْذَنَ لَمْ يُؤْذَنْ لَهُ، وَإِنْ شَفَعَ لَمْ يُشَفَّعْ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لَمْ يَرْفَعْهُ إِسْرَائِيلُ وَمُحَمَّدُ بْنُ جُحَادَةَ عَنْ أَبِي حَصِينٍ وَقَالَ تَعْسًا. كَأَنَّهُ يَقُولُ فَأَتْعَسَهُمُ اللَّهُ. طُوبَى فُعْلَى مِنْ كُلِّ شَىْءٍ طَيِّبٍ، وَهْىَ يَاءٌ حُوِّلَتْ إِلَى الْوَاوِ وَهْىَ مِنْ يَطِيبُ.
பாடம் : 70
இறைவழியில் அறப்போர் புரியும் போது காவல் காப்பது
2887. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பொற்காசின் அடிமையும், வெள்ளிக் காசின் அடிமையும், கோடுபோட்ட சதுர கறுப்புத் துணியின் அடிமையும் அழிந் தான். அவனுக்கு (செல்வம்) கொடுக்கப் பட்டால் திருப்தியடைவான்; (செல்வம்) வழங்கப்படாவிட்டால் கோபமடைவான். அவன் இழப்புக்குரியவனாகட்டும்! அவன் அழியட்டும். அவனுக்கு முள் தைத்துவிட்டால் அதை எடுக்க ஆளில்லாமல் தவிக்கட்டும்!
இறைவழியில் (போர் புரிந்திட) தமது குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, பரட்டைத் தலையுடன் இரு கால்களும் புழுதியடைந்தவராகச் செல்கின்ற அடியாருக்கு வாழ்த்துகள்!
(அவர் எத்தகையவர் என்றால்) அவர் (படையின் முன்னணிக்) காவல் அணியில் நியமிக்கப்பட்டிருப்பாராயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பார்; பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பாராயின் அதிலும் (எந்த முணுமுணுப்புமின்றி திருப்தியுடன்) இருப்பார். அவர் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவருக்கு அனுமதி தரப்படாது; அவர் பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவுக்கு சாமானியராக, எளியவராகக் கருதப்படுவார்.)
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகி றேன்:
(‘அழியட்டும்!› என்பதைக் குறிக்க) மூலத்தில் யிதஇஸ’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இதற்கு, ‘அவனை அல்லாஹ் அழிக்கட்டும்!› என்பது பொருளாகும். (யிவாழ்த்து’ என்பதைக் குறிக்க) யிதூபா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது யிதய்யிப்’ (நல்லது, தூயது) என்பதன் யிஃபுஅலா’ வாய்ப்பாட்டில் அமைந்ததாகும். யிதுய்பா’ என்பதே யிதூபா’ என யிவாவு’ உள்ளதாக மருவியுள்ளது.

2888. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَحِبْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَكَانَ يَخْدُمُنِي. وَهْوَ أَكْبَرُ مِنْ أَنَسٍ قَالَ جَرِيرٌ إِنِّي رَأَيْتُ الأَنْصَارَ يَصْنَعُونَ شَيْئًا لاَ أَجِدُ أَحَدًا مِنْهُمْ إِلاَّ أَكْرَمْتُهُ.
பாடம் : 71
அறப்போரில் பணிவிடை செய்வ தன் சிறப்பு
2888. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அவர்கள் என்னைவிட வயதில் பெரியவராக இருந்தும் எனக்குப் பணிவிடை செய்துவந்தார்கள். (யிவேண்டாம்’ என நான் மறுத்தபோது) ‘‘அன்சாரிகள் ஓர் உயர்ந்த காரியத்தைச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்; ஆகவே, அவர்களில் யாரை நான் கண்டாலும் (அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) அவர்களை கண்ணியப்படுத்தாமல் இருப்பதில்லை” என்று ஜரீர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.50

2889. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ بْنِ حَنْطَبٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى خَيْبَرَ أَخْدُمُهُ، فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَاجِعًا، وَبَدَا لَهُ أُحُدٌ قَالَ "" هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ "". ثُمَّ أَشَارَ بِيَدِهِ إِلَى الْمَدِينَةِ قَالَ اللَّهُمَّ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا كَتَحْرِيمِ إِبْرَاهِيمَ مَكَّةَ "" اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا وَمُدِّنَا "".
பாடம் : 71
அறப்போரில் பணிவிடை செய்வ தன் சிறப்பு
2889. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போரின்போது நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டே சென்றேன். நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களுக்கு உஹுத் மலை தென்பட்டதும், ‘‘இது எத்தகைய மலை யென்றால், இது நம்மை நேசிக்கின்றது; நாம் இதை நேசிக்கின்றோம்” என்று கூறினார்கள்.
பின்னர், மதீனாவை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்து, ‘‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்ததைப் போன்று, நான் (இந்த) இரு (கருங்கல்) மலைகளுக் கிடையேயுள்ள நிலப் பகுதியை (மதீனாவை) புனிதமானதாக அறிவிக்கி றேன். இறைவா! எங்கள் (அளவைகளான) ஸாவுகளிலும், யிமுத்’துகளிலும் எங்களுக்கு வளம் வழங்குவாயாக!” என்று பிரார்த்தித் தார்கள்.51

2890. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَكْثَرُنَا ظِلاًّ الَّذِي يَسْتَظِلُّ بِكِسَائِهِ، وَأَمَّا الَّذِينَ صَامُوا فَلَمْ يَعْمَلُوا شَيْئًا، وَأَمَّا الَّذِينَ أَفْطَرُوا فَبَعَثُوا الرِّكَابَ وَامْتَهَنُوا وَعَالَجُوا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالأَجْرِ "".
பாடம் : 71
அறப்போரில் பணிவிடை செய்வ தன் சிறப்பு
2890. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தமது ஆடையால் தமக்குத்தாமே நிழலிட் டுக்கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது; ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர் கள் எந்த வேலையும் செய்யவில்லை.
நோன்பு நோற்காமல் விட்டுவிட்டவர் கள்தான் வாகன (ஒட்டக)ங்களை எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள்; நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறி னார்கள்.52

2891. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّ سُلاَمَى عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ، يُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ يُحَامِلُهُ عَلَيْهَا أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ، وَكُلُّ خَطْوَةٍ يَمْشِيهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَدَلُّ الطَّرِيقِ صَدَقَةٌ "".
பாடம் : 72
பயணத்தில் அடுத்தவரின் பொருள் களைச் சுமப்பவரின் சிறப்பு
2891. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவரை, அவரது வாகனத்தில் ஏற்றி வைத்து உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றிவைப்பதுகூட தர்மமாகும். நல்ல சொல்லும், தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மம்தான். (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.53
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
2891. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவரை, அவரது வாகனத்தில் ஏற்றி வைத்து உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றிவைப்பதுகூட தர்மமாகும். நல்ல சொல்லும், தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மம்தான். (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.53
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
2892. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ أَبَا النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَمَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَالرَّوْحَةُ يَرُوحُهَا الْعَبْدُ فِي سَبِيلِ اللَّهِ أَوِ الْغَدْوَةُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا "".
பாடம் : 73
இறைவழியில் ஒருநாள் எல்லை யைக் காவல் காப்பதன் சிறப்பு
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கடைப்பிடியுங்கள்; பொறுமையில் (எதிரிகளையும்) விஞ்சி விடுங்கள்; (எதிரியிடம்) விழிப்போடு இருங்கள்; அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றியாளர்களாகத் திகழலாம். (3:200)
2892. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவழியில் ஒருநாள் (நாட்டின்) எல்லையைக் காவல் புரிவது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றைவிடவும் சிறந்ததாகும். உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில், ஒரு சாட்டை வைக்கு மளவுக்கு இடம் கிடைப்பது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றைவிடவும் சிறந்ததாகும். ஓர் அடியார் இறைவழியில் (அறப்போரில்) செல்கின்ற மாலை நேரம், அல்லது காலை நேரமானது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றைவிடவும் சிறந்ததாகும்.
இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2893. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ عَمْرٍو، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لأَبِي طَلْحَةَ "" الْتَمِسْ غُلاَمًا مِنْ غِلْمَانِكُمْ يَخْدُمُنِي حَتَّى أَخْرُجَ إِلَى خَيْبَرَ "". فَخَرَجَ بِي أَبُو طَلْحَةَ مُرْدِفِي، وَأَنَا غُلاَمٌ رَاهَقْتُ الْحُلُمَ، فَكُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا نَزَلَ، فَكُنْتُ أَسْمَعُهُ كَثِيرًا يَقُولُ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ "". ثُمَّ قَدِمْنَا خَيْبَرَ، فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الْحِصْنَ ذُكِرَ لَهُ جَمَالُ صَفِيَّةَ بِنْتِ حُيَىِّ بْنِ أَخْطَبَ، وَقَدْ قُتِلَ زَوْجُهَا وَكَانَتْ عَرُوسًا، فَاصْطَفَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِنَفْسِهِ، فَخَرَجَ بِهَا حَتَّى بَلَغْنَا سَدَّ الصَّهْبَاءِ حَلَّتْ، فَبَنَى بِهَا، ثُمَّ صَنَعَ حَيْسًا فِي نِطَعٍ صَغِيرٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" آذِنْ مَنْ حَوْلَكَ "". فَكَانَتْ تِلْكَ وَلِيمَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى صَفِيَّةَ. ثُمَّ خَرَجْنَا إِلَى الْمَدِينَةِ قَالَ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُحَوِّي لَهَا وَرَاءَهُ بِعَبَاءَةٍ، ثُمَّ يَجْلِسُ عِنْدَ بَعِيرِهِ فَيَضَعُ رُكْبَتَهُ، فَتَضَعُ صَفِيَّةُ رِجْلَهَا عَلَى رُكْبَتِهِ حَتَّى تَرْكَبَ، فَسِرْنَا حَتَّى إِذَا أَشْرَفْنَا عَلَى الْمَدِينَةِ نَظَرَ إِلَى أُحُدٍ فَقَالَ "" هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ "". ثُمَّ نَظَرَ إِلَى الْمَدِينَةِ فَقَالَ "" اللَّهُمَّ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا بِمِثْلِ مَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ، اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مُدِّهِمْ وَصَاعِهِمْ "".
பாடம் : 74
பணிவிடைக்காகச் சிறுவனை அழைத்துக்கொண்டு அறப்போருக்குச் செல்வது
2893. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், ‘‘உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவரை எனக்குப் பணிவிடை புரிவதற்காகத் தேடுங்கள்; நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்” என்று சொன்னார்கள். ஆகவே, அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னை (தமது வாகனத்தின்) பின்னால் அமர வைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது நான் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்த சிறுவனாக இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் தங்கி னால் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்துவந்தேன்.
அப்போது அவர்கள், ‘‘இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந் தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத் தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறை’லிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று பிரார்த்திப்பதை அதிகமாகச் செவியுற்றுவந்தேன். பிறகு நாங்கள் கைபருக்குச் சென்றுசேர்ந்தோம்.
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் (கமூஸ்) கோட்டையின் வெற்றியை அளித்தபோது, ஸஃபிய்யா பின்த் ஹுயை பின் அக்தப் அவர்களின் அழகு பற்றி அவர்களுக்குக் கூறப்பட்டது. அப்போது (நடந்த போரில்) ஸஃபிய்யாவின் கணவர் கொல்லப்பட்டிருந்தார். அவர் புதுமணப் பெண்ணாகவும் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவைத் தமக்காக (விரும்பித்) தேர்ந்தெடுத்து (மணந்து)கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.
நாங்கள், யிசத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தை அடைந்தவுடன் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார்கள். அப்போது அவருடன் நபி (ஸல்) அவர்கள் தாம்பத்தியத்தை மேற்கொண்டார்கள். பிறகு சிறிய பாத்திரம் ஒன்றில் (பேரீச்சம் பழம், நெய், பாலாடை ஆகியவற்றைக் கலந்து) யிஹைஸ்’ என்ற உணவைத் தயாரித்தார்கள்.
பிறகு ‘‘உன்னைச் சுற்றியிருப்பவர் களுக்கு (மணவிருந்துக்கு வரும்படி) அறிவிப்புச்செய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.அது ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் அளித்த மணவிருந்தாக அமைந்தது. பின்னர் நாங்கள் மதீனாவுக்குப் புறப் பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுக்காகத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) போர்வையால் திரை அமைத்ததை நான் பார்த்தேன். பிறகு தமது ஒட்டகத்தின் அருகே அமர்ந்து தமது முழங்காலை வைத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முழங்கால்மீது தமது காலை வைத்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் (ஒட்டகத்தில்) ஏறினார்கள்.
நாங்கள் மதீனாவை நெருங்கியபோது நபி (ஸல்) அவர்கள் உஹுத் மலையைப் பார்த்து, ‘‘இது நம்மை நேசிக்கின்ற மலை; நாமும் இதை நேசிக்கின்றோம்” என்று கூறினார்கள். பிறகு மதீனாவை நோக்கி, ‘‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்ததைப் போன்று இந்த இரு மலைகளுக்கிடை யிலுள்ள நிலப் பகுதியை (மதீனாவை)ப் புனிதமானதாக நான் அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் யிமுத்’, அவர்களுடைய ‘ஸாஉ’ ஆகியவற்றில் வளம் வழங்குவாயாக!” என்று துஆ செய்தார்கள்.

2894. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ حَدَّثَتْنِي أُمُّ حَرَامٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمًا فِي بَيْتِهَا، فَاسْتَيْقَظَ وَهْوَ يَضْحَكُ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، مَا يُضْحِكُكَ قَالَ "" عَجِبْتُ مِنْ قَوْمٍ مِنْ أُمَّتِي يَرْكَبُونَ الْبَحْرَ، كَالْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَقَالَ "" أَنْتِ مَعَهُمْ "". ثُمَّ نَامَ، فَاسْتَيْقَظَ وَهْوَ يَضْحَكُ فَقَالَ مِثْلَ ذَلِكَ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا. قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَيَقُولُ "" أَنْتِ مِنَ الأَوَّلِينَ "" فَتَزَوَّجَ بِهَا عُبَادَةُ بْنُ الصَّامِتِ، فَخَرَجَ بِهَا إِلَى الْغَزْوِ، فَلَمَّا رَجَعَتْ قُرِّبَتْ دَابَّةٌ لِتَرْكَبَهَا، فَوَقَعَتْ فَانْدَقَّتْ عُنُقُهَا.
பாடம் : 75
(அறப்போருக்காக) கடல் பயணம் செய்தல்
2894. உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எனது இல்லத்தில் மதிய ஓய்வு எடுத்தார்கள்; பிறகு (உறக்கத்திலிருந்து) சிரித்தபடியே விழித்துக்கொண்டார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். ‘‘என் சமுதாயத்தாரில் ஒரு கூட்டத்தார் அரசர்கள் கட்டில்களில் அமர்ந்திருப்பதைப் போல் கடல் பயணம் செய்வதை (கனவில்) கண்டு நான் வியந்தேன். (அதனால்தான் சிரிக்கிறேன்)” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் நீங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அவர்களில் ஒருவர்தான்” என்று கூறினார்கள். மீண்டும் உறங்கி, சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். முன்பு கூறியதைப் போன்றே இரண்டு அல்லது மூன்றுமுறை கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்” என்று கூற, நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் (அறப்போருக்காகப் பயணம் செய்யும்) முதல் (படைக்) குழுவினரில் ஒருவராவீர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு உம்மு ஹராம் (ரலி) அவர்களை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் மணந்துகொண்டார்கள். பின்னர் அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு (கடல் பயணம் செய்து) அறப்போருக்குச் சென்றார்கள். திரும்பி வரும் போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் ஏறி அமர்வதற்காக வாகனம் (கோவேறு கழுதை) ஒன்று அருகில் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள் (அதிலிருந்து தவறிக்) கீழே விழுந்து அவர்களின் கழுத்து முறிந்துவிட்டது. (அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.)

2896. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ طَلْحَةَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، قَالَ رَأَى سَعْدٌ ـ رضى الله عنه ـ أَنَّ لَهُ فَضْلاً عَلَى مَنْ دُونَهُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هَلْ تُنْصَرُونَ وَتُرْزَقُونَ إِلاَّ بِضُعَفَائِكُمْ "".
பாடம் : 76
போரில் பலவீனர்கள், நல்லவர்கள் ஆகியோரின் காரணத்தால் உதவி கிடைப்பது
அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(கிழக்கு ரோமானியப் பேரரசர்) கைஸர் (சீசர்) ‘‘நான் உங்களிடம், ‘அந்த நபியை மக்களில் உயர் வகுப்பினர் (வசதி வாய்ப்பும் அதிகாரமும் பெற்றுள்ள மேல்தட்டு மக்கள்) பின்பற்றுகிறார்களா? பலவீனர்களான (ஒடுக்கப்பட்ட) மக்கள் பின்பற்றுகிறார்களா?› என்று கேட்டேன். அதற்கு, யிபலவீனர்களான (ஒடுக்கப்பட்ட) மக்கள்தான் (அவரைப் பின்பற்றுகிறார்கள்)› என்று பதிலளித்தீர். (எப்போதும்) அவர்கள்தான் இறைத் தூதர்களைப் பின்பற்றக்கூடியவர்கள்” என்று என்னிடம் கூறினார்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2896. முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், (தம்முடைய வீரச் செயல்களின் காரணத்தால்) தமக்குப் பிறரைவிட ஒரு சிறப்பு இருக்க வேண்டும் எனக் கருதினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) காரணத்தால்தான் உங்களுக்கு (இறைவனின்) உதவி வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள்.

2897. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنهم ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَأْتِي زَمَانٌ يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ فِيكُمْ مَنْ صَحِبَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَيُقَالُ نَعَمْ. فَيُفْتَحُ عَلَيْهِ، ثُمَّ يَأْتِي زَمَانٌ فَيُقَالُ فِيكُمْ مَنْ صَحِبَ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيُقَالُ نَعَمْ. فَيُفْتَحُ، ثُمَّ يَأْتِي زَمَانٌ فَيُقَالُ فِيكُمْ مَنْ صَحِبَ صَاحِبَ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيُقَالُ نَعَمْ. فَيُفْتَحُ "".
பாடம் : 76
போரில் பலவீனர்கள், நல்லவர்கள் ஆகியோரின் காரணத்தால் உதவி கிடைப்பது
அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(கிழக்கு ரோமானியப் பேரரசர்) கைஸர் (சீசர்) ‘‘நான் உங்களிடம், ‘அந்த நபியை மக்களில் உயர் வகுப்பினர் (வசதி வாய்ப்பும் அதிகாரமும் பெற்றுள்ள மேல்தட்டு மக்கள்) பின்பற்றுகிறார்களா? பலவீனர்களான (ஒடுக்கப்பட்ட) மக்கள் பின்பற்றுகிறார்களா?› என்று கேட்டேன். அதற்கு, யிபலவீனர்களான (ஒடுக்கப்பட்ட) மக்கள்தான் (அவரைப் பின்பற்றுகிறார்கள்)› என்று பதிலளித்தீர். (எப்போதும்) அவர்கள்தான் இறைத் தூதர்களைப் பின்பற்றக்கூடியவர்கள்” என்று என்னிடம் கூறினார்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2897. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் அறப்போர் புரியச் செல்வர். அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்கள் எவரும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு, ‘‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கு வெற்றியளிக் கப்படும்.
பிறகு இன்னொரு காலம் வரும். (அப்போதும் அறப்போர் புரிய ஒரு குழுவினர் செல்வார்கள்.) அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு, ‘‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே (அவர்களுக்கு) வெற்றியளிக்கப்படும்.
பிறகு மற்றொரு காலம் வரும். (அப்போதும் ஒரு குழுவினர் அறப்போருக் காகச் செல்வார்கள்.) அப்போது, ‘‘நபித் தோழர்களின் தோழருடன் தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக் கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு, ‘‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப் படும். உடனே அவர்களுக்கும் வெற்றி யளிக்கப்படும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2898. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم الْتَقَى هُوَ وَالْمُشْرِكُونَ فَاقْتَتَلُوا، فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى عَسْكَرِهِ، وَمَالَ الآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ، وَفِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ لاَ يَدَعُ لَهُمْ شَاذَّةً وَلاَ فَاذَّةً إِلاَّ اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ، فَقَالَ مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلاَنٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ "". فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ أَنَا صَاحِبُهُ. قَالَ فَخَرَجَ مَعَهُ كُلَّمَا وَقَفَ وَقَفَ مَعَهُ، وَإِذَا أَسْرَعَ أَسْرَعَ مَعَهُ قَالَ فَجُرِحَ الرَّجُلُ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ الْمَوْتَ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ بِالأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَى سَيْفِهِ، فَقَتَلَ نَفْسَهُ، فَخَرَجَ الرَّجُلُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ. قَالَ "" وَمَا ذَاكَ "". قَالَ الرَّجُلُ الَّذِي ذَكَرْتَ آنِفًا أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، فَأَعْظَمَ النَّاسُ ذَلِكَ. فَقُلْتُ أَنَا لَكُمْ بِهِ. فَخَرَجْتُ فِي طَلَبِهِ، ثُمَّ جُرِحَ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ الْمَوْتَ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ فِي الأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ، فَقَتَلَ نَفْسَهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ ذَلِكَ "" إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَهْوَ مِنْ أَهْلِ النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَهْوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ "".
பாடம் : 77
யாரைப் பற்றியும் ‘‘இன்னார் உயிர்த் தியாகி (ஷஹீத்)” என்று (அறுதியிட்டுச்) சொல்லலாகாது.
‘‘தன் பாதையில் அறப்போர் புரிபவர் யார் என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன். தன் பாதையில் காயமடைபவர் யார் என்பதையும் அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54
2898. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்போரும் (கைபரில்) சந்தித்துப் போரிட்டுக்கொண்ட னர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் படையினரிடமும் எதிரிகள் தம் படை ‘னரிடமும் திரும்பிச் சென்றுவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே ஒருவர் இருந்தார். அவர், (எதிரிகளில்) போரில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப்போய் தனியே சென்றவர் என எவரையும் நபித்தோழர் களுக்கு விட்டுவைக்காமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தமது வாளால் வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார்.
(அவரது வீரத்தைக் கண்ட) நபித் தோழர்கள், ‘‘இந்த மனிதர் போரிட்டதைப் போன்று இன்று நம்மில் வேறு யாரும் தேவையான அளவுக்குப் போரிடவில்லை” என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரோ நரகவாசியாவார்” என்று கூறினார்கள். அப்போது கூட்டத்தி லிருந்த ஒரு மனிதர், ‘‘நான் அவருடன் இருக்கப்போகிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)” என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார்.
அவர் நின்றபோதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அந்த வீரர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி, தமது வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தம் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தமது உடலை சாய்த்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நான் உறுதி கூறுகிறேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர், ‘‘சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி ‘அவர் நரகவாசி’ என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), ‘‘உங்களுக்காக (அவருடைய நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன்.
அவர் கடுமையாக காயப்படுத்தப் பட்டார். உடனே அவர் அவசரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடி முனையை பூமியில் நட்டு, அதன் கூர் முனையைத் தம் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன்மீது தன்னை சாய்த்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசி களின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசி யாக இருப்பார். மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் நரகவாசிகளின் செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்” என்று சொன்னார்கள்.

2899. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ سَمِعْتُ سَلَمَةَ بْنَ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى نَفَرٍ مِنْ أَسْلَمَ يَنْتَضِلُونَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ، فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا ارْمُوا وَأَنَا مَعَ بَنِي فُلاَنٍ "". قَالَ فَأَمْسَكَ أَحَدُ الْفَرِيقَيْنِ بِأَيْدِيهِمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا لَكُمْ لاَ تَرْمُونَ "". قَالُوا كَيْفَ نَرْمِي وَأَنْتَ مَعَهُمْ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ارْمُوا فَأَنَا مَعَكُمْ كُلِّكُمْ "".
பாடம் : 78
அம்பெய்தலைக் கற்குமாறு வந்துள்ள தூண்டல்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
(இறைநம்பிக்கையாளர்களே!) உங்களால் இயன்ற அளவுக்குப் பலத்தையும் குதிரைப் படையையும் அவர்களுக்காக ஆயத்தமாக வைத்திருங்கள். அதன்மூலம், அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்களின் பகைவர்களையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். (8:60)
2899. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம் பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது அவர்களை, நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று கூறினார்கள்.
அப்போது இரு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்திக்கொண் டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால், நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன். நீங்கள் அம்பெய்யுங்கள்” என்று கூறினார்கள்.

2900. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْغَسِيلِ، عَنْ حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ حِينَ صَفَفْنَا لِقُرَيْشٍ وَصَفُّوا لَنَا "" إِذَا أَكْثَبُوكُمْ فَعَلَيْكُمْ بِالنَّبْلِ "".
பாடம் : 78
அம்பெய்தலைக் கற்குமாறு வந்துள்ள தூண்டல்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
(இறைநம்பிக்கையாளர்களே!) உங்களால் இயன்ற அளவுக்குப் பலத்தையும் குதிரைப் படையையும் அவர்களுக்காக ஆயத்தமாக வைத்திருங்கள். அதன்மூலம், அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்களின் பகைவர்களையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். (8:60)
2900. அபூஉசைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரின்போது நாங்கள் குறைஷியருக்கெதிராகவும் குறைஷியர் எங்களுக் கெதிராகவும் (போர் வியூகம் அமைத்து) அணிவகுத்து நின்றபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘(குறைஷியர்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

2901. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا الْحَبَشَةُ يَلْعَبُونَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِحِرَابِهِمْ دَخَلَ عُمَرُ، فَأَهْوَى إِلَى الْحَصَى فَحَصَبَهُمْ بِهَا. فَقَالَ "" دَعْهُمْ يَا عُمَرُ "". وَزَادَ عَلِيٌّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ فِي الْمَسْجِدِ.
பாடம் : 79
ஈட்டி போன்றவற்றால் (வீர விளையாட்டுகள்) விளையாடுவது
2901. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அபிசீனியர்கள் (எத்தி யோப்பியர்கள்) நபி (ஸல்) அவர்கள் அருகில் தங்கள் ஈட்டிகளை எறிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, (இதைப் பார்த்துக் கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து, அவர்கள்மீது எறிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமரே! அவர்களை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது. இரண்டாவது தொடர்களில், யிஇந்த விளையாட்டு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.