2400. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَخِي وَهْبِ بْنِ مُنَبِّهٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ "".
பாடம் : 12 வசதியுள்ளவர் கடனை (உடனடியாக) அடைக்காமல் (தவணை சொல்லி) இழுத்தடிப்பது அநியாயமாகும்.
2400. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வசதியுள்ளவர் (தமது கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாய மாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6

அத்தியாயம் : 43
2401. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ يَتَقَاضَاهُ فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ. فَقَالَ "" دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً "".
பாடம் : 13 கடன் கொடுத்தவருக்குப் பேச உரிமையுண்டு. ‘‘வசதியுள்ளவர் (கடனைத் தீர்க்காமல்) இழுத்தடித்துக்கொண்டே சென்றால் அதற் காக அவருக்குத் தண்டனை அளிப்பதும் அவரது மானத்தை வாங்குவதும் செல்லும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. (பலர் முன்னிலையில்,) ‘‘ ’நீ எனக்குத் தரவேண்டிய கடனை அடைக்காமல் இழுத்தடிக்கிறாய்’ என்று கூறுவதே கடனாளியின் மானத்தை வாங்குவதாகும்; அவனைச் சிறையில் தள்ளுவதே அவனுக்குத் தரும் தண்டனையாகும்” என்று சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2401. அபூஹுரைரா  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர், தாம் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு வந்தார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் சற்றுக் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். (இதைப் புரிந்துகொண்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். கடன் கொடுத்தவருக்கு(க் கடுமையாக)ப் பேச உரிமையுண்டு” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 43
2402. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ أَدْرَكَ مَالَهُ بِعَيْنِهِ عِنْدَ رَجُلٍ أَوْ إِنْسَانٍ قَدْ أَفْلَسَ، فَهْوَ أَحَقُّ بِهِ مِنْ غَيْرِهِ "".
பாடம் : 14 ஒரு பொருளை விற்றவர், அல்லது கடனாகக் கொடுத்தவர், அல்லது கையடையாகக் கொடுத்தவர், (அதை வாங்கியபின்) திவாலாகிப் போனவரிடம் அப்பொருளைக் கண்டால், அதைப் பெறுவதற்கு அவரே (மற்ற கடன்காரர்களைவிட) அதிக உரிமை பெற்றவராவார்.7 ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் திவாலாகி அது (நீதிமன்றத்தில்) நிரூபணமாகியும்விட்டால், அவர் தம் அடிமையை விடுதலை செய்வதோ, அவர் எதையும் விற்பதோ வாங்குவதோ செல்லாது. ‘‘ஒருவர் திவாலாவதற்கு முன்பே அவரிடமிருந்து தமக்குரிய பொருளை யார் திருப்பி வாங்கிக்கொண்டாரோ, அவருக்கே அப்பொருள் சொந்தமாகும். திவாலாகிப் போனவரிடம் தமது பொருளை அப்படியே ஒருவர் காண்பாராயின், அதை எடுத்துக்கொள்ள (மற்ற கடன்காரர்களை விட) அவரே அதிக உரிமையுடையவர்” என்று உஸ்மான் (ரலி) அவர்கள் தீர்ப்பளித் தார்கள். இதை சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2402. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தமது பொருளை அப்படியே (கொடுத்த போது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக்கொள்ள மற்ற கடன் காரர்களைவிட அவருக்கே அதிக உரிமை இருக்கிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 43
2403. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَعْتَقَ رَجُلٌ غُلاَمًا لَهُ عَنْ دُبُرٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ يَشْتَرِيهِ مِنِّي "". فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ، فَأَخَذَ ثَمَنَهُ، فَدَفَعَهُ إِلَيْهِ.
பாடம் : 15 கடன் கொடுத்தவரிடம், நாளை, மறுநாள் என்று (கொடுக்கும் எண்ணத்துடன்) தவணை சொல்வது, இழுத்தடிப்பது ஆகாது என்ற கருத்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கடன்காரர்கள், தங்களிடம் என் தந்தை வாங்கிய கடன் தொடர்பான தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக (என்னிடம் கெடுபிடியாக நடந்து) கடுமை காட்டினார் கள். நபி (ஸல்) அவர்கள் என் தோட்டத்தின் பேரீச்சங் கனிகளை (தங்கள் கடனுக்குப் பகரமாக)ப் பெற்றுக்கொள்ளச் சம்மதிக்கும்படி அவர்களிடம் (எனக்காகக்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே, அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், என் தோட்டத்தை (அவர்களே கனிகளைப் பறித்துக்கொள்ளும்படி) கொடுக்கவுமில்லை; தாமே கனிகளைப் பறித்து அவர்களுக்குத் தரவுமில்லை. மாறாக, ‘‘நாளை உங்களிடம் வருகிறேன்” என்று கூறிவிட்டு மறுநாள் காலை எங்களிடம் வந்தார்கள். அப்போது என் தோட்டத்துக் கனிகளில் வளம் ஏற்பட யிதுஆ’ செய்தார்கள். ஆகவே, (பிறகு) நான் அவற்றைப் பறித்துக் கடன்காரர்களுக்குத் தரவேண்டிய கடனைத் தீர்த்தேன்.8 பாடம் : 16 திவாலாகிவிட்டவரின் பொருளை விற்றுக் கடன்காரர்களுக்குப் பங்கிடுவதும், ஓர் ஏழையின் பொருளை விற்று (அந்த ஏழை) தனக்காகச் செலவு செய்துகொள்வ தற்காக அவரிடமே அதைக் கொடுப்பதும்
2403. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், தாம் இறந்தபிறகு தம்முடைய ஓர் அடிமை விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று கூறியிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), ‘‘இவரை யார் என்னிடத்திலிருந்து வாங்கிக்கொள்வது?” என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அவ்வடிமையை வாங்கிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமைக்கான விலையை வாங்கி அந்த அடிமையின் உரிமையாளரிடமே கொடுத்துவிட்டார் கள்.9

அத்தியாயம் : 43
2404. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ ذَكَرَ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ، سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يُسْلِفَهُ، فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى. فَذَكَرَ الْحَدِيثَ.
பாடம் : 17 குறிப்பிட்ட தவணைக்குக் கடன் கொடுப்பதும், குறிப்பிட்ட தவணையில் விலையைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி பொருளை விற்பதும் ‘‘ஒரு குறிப்பிட்ட தவணையில் திருப்பிச் செலுத்தும்படி கூறி கடன் கொடுப்பதில் தவறில்லை; கடனாளி கடன் கொடுத்தவருக்கு, அவர் கொடுத்த திர்ஹங்களைவிட உயர்தரமானதை முன்நிபந்தனை விதிக்காமல் கொடுத்தாலும் சரியே” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘கடன் வாங்கியவர், தனக்குக் குறிப் பிடப்பட்ட தவணைக்குள் கடனைச் செலுத்தலாம்” என்று அதா (ரஹ்) அவர்களும் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள்.
2404. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றிக் கூறினார்கள். அவர், தம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் கடன் கேட்டார். அந்த மனிதரும் ஒரு குறிப்பிட்ட தவணையில் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்னும் நிபந்தனையுடன் அவருக்குக் கடன் கொடுத்தார்... என்று முழு ஹதீஸையும் கூறினார்கள்.10

அத்தியாயம் : 43
2405. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ عَامِرٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ أُصِيبَ عَبْدُ اللَّهِ وَتَرَكَ عِيَالاً وَدَيْنًا، فَطَلَبْتُ إِلَى أَصْحَابِ الدَّيْنِ أَنْ يَضَعُوا بَعْضًا مِنْ دَيْنِهِ فَأَبَوْا، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَاسْتَشْفَعْتُ بِهِ عَلَيْهِمْ فَأَبَوْا، فَقَالَ " صَنِّفْ تَمْرَكَ كُلَّ شَىْءٍ مِنْهُ عَلَى حِدَتِهِ، عِذْقَ ابْنِ زَيْدٍ عَلَى حِدَةٍ، وَاللِّينَ عَلَى حِدَةٍ، وَالْعَجْوَةَ عَلَى حِدَةٍ، ثُمَّ أَحْضِرْهُمْ حَتَّى آتِيَكَ ". فَفَعَلْتُ، ثُمَّ جَاءَ صلى الله عليه وسلم فَقَعَدَ عَلَيْهِ، وَكَالَ لِكُلِّ رَجُلٍ حَتَّى اسْتَوْفَى، وَبَقِيَ التَّمْرُ كَمَا هُوَ كَأَنَّهُ لَمْ يُمَسَّ.
பாடம் : 18 கடனைச் சிறிது தள்ளுபடி செய்யு மாறு பரிந்துரைத்தல்
2405. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (உஹுத் போரில் ஷஹீதாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (மரணிக்கும்போது) பல குழந்தை குட்டிகளையும் கடனையும் விட்டுச்சென்றார்கள். ஆகவே, (அந்தக் கடனுக்கு நான் பொறுப்பாளியான காரணத்தால்) என் தந்தையின் கடனிலிருந்து சிறிதளவு தள்ளுபடி செய்து (குறைத்து)விடும்படி கடன்காரர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன். அவர்கள் (சிறிதளவும் தள்ளுபடி செய்ய) மறுத்து விட்டார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கடன்காரர்களிடம் எனக்காகப் பரிந்துரை செய்யும்படி கேட்டேன். (நபியவர்கள் அவ்வாறே பரிந்துரை செய்தும்) அவர்கள் (சிறிதளவும் தள்ளுபடி செய்ய) மறுத்துவிட்டனர்.

எனவே, நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் பேரீச்சங் கனிகளின் ஒவ்வொரு வகை யையும் தனித்தனியாகப் பிரித்து வையுங்கள். யிஇத்க் இப்னு ஸைத்’ என்னும் உயர் ரகப் பேரீச்சம் பழத்தைத் தனியாக வும் யிலீன்’ என்னும் தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழத்தைத் தனியாகவும் ‘அஜ்வா’ என்னும் சிறப்பு ரகப் பேரீச்சம் பழத்தைத் தனியாக வும் எடுத்துவையுங்கள். பின்னர் கடன் காரர்களை வரவழையுங்கள். பிறகு நான் உங்களிடம் வருகிறேன்” என்று சொன்னார் கள். நான் அவர்கள் கூறியபடியே செய்தேன்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்து பேரீச்சங் குவியல்களின் அருகே அமர்ந்து கொண்டு (கடன்காரர்) ஒவ்வொருவருக்கும் அளந்து கொடுக்கலானார்கள். இறுதியில், நிறைவாக (அனைவருக்கும்) கொடுத்து முடித்தார்கள். பேரீச்சம் பழக்குவியல் யாருடைய கரமும் படாததைப் போல முன்பிருந்ததைப் போன்றே (சற்றும் குறையாமல்) அப்படியே இருந்தது.


அத்தியாயம் : 43
2406. وَغَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى نَاضِحٍ لَنَا، فَأَزْحَفَ الْجَمَلُ فَتَخَلَّفَ عَلَىَّ فَوَكَزَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ خَلْفِهِ، قَالَ " بِعْنِيهِ وَلَكَ ظَهْرُهُ إِلَى الْمَدِينَةِ ". فَلَمَّا دَنَوْنَا اسْتَأْذَنْتُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ. قَالَ صلى الله عليه وسلم " فَمَا تَزَوَّجْتَ بِكْرًا أَمْ ثَيِّبًا ". قُلْتُ ثَيِّبًا، أُصِيبَ عَبْدُ اللَّهِ وَتَرَكَ جَوَارِيَ صِغَارًا، فَتَزَوَّجْتُ ثَيِّبًا تُعَلِّمُهُنَّ وَتُؤَدِّبُهُنَّ، ثُمَّ قَالَ " ائْتِ أَهْلَكَ ". فَقَدِمْتُ فَأَخْبَرْتُ خَالِي بِبَيْعِ الْجَمَلِ فَلاَمَنِي، فَأَخْبَرْتُهُ بِإِعْيَاءِ الْجَمَلِ، وَبِالَّذِي كَانَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَوَكْزِهِ إِيَّاهُ، فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم غَدَوْتُ إِلَيْهِ بِالْجَمَلِ، فَأَعْطَانِي ثَمَنَ الْجَمَلِ وَالْجَمَلَ وَسَهْمِي مَعَ الْقَوْمِ.
பாடம் : 18 கடனைச் சிறிது தள்ளுபடி செய்யு மாறு பரிந்துரைத்தல்
2406. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் இறைக்கும்) எங்கள் ஒட்டகம் ஒன்றின் மீது பயணம் செய்து நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் நான் கலந்துகொண்டேன். (திரும்பி வருகையில்) திடீரென ஒட்டகம் களைப்படைந்து என்னுடன் பின்தங்கி விட்டது. நபி (ஸல்) அவர்கள் அதன் பின்பகுதியில் அடித்து, ‘‘இதை எனக்கு நீ விற்றுவிடு. மதீனா சென்று சேரும்வரை இதன்மீது பயணம் செய்து நீ வரலாம்” என்று கூறினார்கள். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! சமீபத்தில்தான் எனக்குத் திருமணம் நடந்தது” என்று கூறி, நான் என் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘யாரை மணம் முடித்தாய்? கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான், ‘‘கன்னி கழிந்த பெண்ணையே மணமுடித்தேன். (ஏனெனில்,) என் தந்தை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (உஹுத் போரில் ஷஹீதாகக்) கொல்லப்பட்டுவிட்டார்கள்; (என் சகோதரிகளான) சிறு பெண் குழந்தை களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பதற் காகவும் ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்து அனுபவமுள்ள ஒரு பெண் ணையே நான் மணமுடித்துக்கொண்டேன்” என்று கூறினேன்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் வீட்டாரிடம் போ!” என்று கூறினார்கள். நான் வீட்டிற்குச் சென்று என் தாய்மாமனி டம் ஒட்டகத்தை விற்றுவிட்டதைக் கூறினேன். அதற்கு அவர்கள் என்னைக் குறை கூறினார்கள். எனவே, நான் ஒட்டகம் களைத்துவிட்டதையும், நபி (ஸல்) அவர்கள் அதை (பின்பக்கத்தில்) அடித்ததையும் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தபோது நான் காலை நேரத்தில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒட்டகத்தின் விலையையும் எனக்குக் கொடுத்து, ஒட்டகத்தையும் (எனக்கே) கொடுத்துவிட்டார்கள். மேலும், மக்களுக்குப் போர்ச் செல்வங்களை வழங்கும் போது அதில் எனது பங்கையும் (எனக்குக்) கொடுத்தார்கள்.

அத்தியாயம் : 43
2407. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنِّي أُخْدَعُ فِي الْبُيُوعِ. فَقَالَ "" إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ "". فَكَانَ الرَّجُلُ يَقُولُهُ.
பாடம் : 19 செல்வத்தை வீணாக்குவது தடை செய்யப்பட்டதாகும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் சீர்கேட்டை விரும்புவதில்லை. (2:205) சீர்கெடுப்பவர்களின் செயலை அல்லாஹ் சீராக்குவதில்லை. (10:81) (மத்யன் நகரவாசிகள்) ‘‘ஷுஐபே! எங்கள் மூதாதையர் வழிபட்டுவந்தவற்றை நாங்கள் விட்டுவிடவேண்டும் என்றா, அல்லது எங்களுடைய செல்வத்தை எங்கள் விருப்பப்படி பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்றா உம்முடைய தொழுகை உமக்குக் கற்றுத் தருகிறது?” என்று (ஏளனமாகக்) கூறி னார்கள். (11:87) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள செல்வங்களை விவரமறியாதவர்(களாய் உள்ள அநாதை)களிடம் ஒப்படைக்காதீர்கள். (4:5) விவரமறியாதவரின் பொருளாதார நடவடிக்கைக்குத் தடை விதிக்கப்படும். மேலும், மோசடியும் தடை செய்யப் படும்.
2407. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் வியாபாரத்தில் (அடிக்கடி) ஏமாற்றப் பட்டுவிடுகிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ வியாபாரம் செய்யும்போது (ஒரு பொருளை வாங்கும்போது, அல்லது விற்கும்போது) யிமோசடி கூடாது’ என்று சொல்லிவிடு” என்றார்கள். அதற்குப் பிறகு, அந்த மனிதர் அவ்வாறே கூறிக்கொண்டி ருந்தார்.


அத்தியாயம் : 43
2408. حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ وَرَّادٍ، مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الأُمَّهَاتِ، وَوَأْدَ الْبَنَاتِ، وَمَنَعَ وَهَاتِ، وَكَرِهَ لَكُمْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةَ الْمَالِ "".
பாடம் : 19 செல்வத்தை வீணாக்குவது தடை செய்யப்பட்டதாகும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் சீர்கேட்டை விரும்புவதில்லை. (2:205) சீர்கெடுப்பவர்களின் செயலை அல்லாஹ் சீராக்குவதில்லை. (10:81) (மத்யன் நகரவாசிகள்) ‘‘ஷுஐபே! எங்கள் மூதாதையர் வழிபட்டுவந்தவற்றை நாங்கள் விட்டுவிடவேண்டும் என்றா, அல்லது எங்களுடைய செல்வத்தை எங்கள் விருப்பப்படி பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்றா உம்முடைய தொழுகை உமக்குக் கற்றுத் தருகிறது?” என்று (ஏளனமாகக்) கூறி னார்கள். (11:87) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள செல்வங்களை விவரமறியாதவர்(களாய் உள்ள அநாதை)களிடம் ஒப்படைக்காதீர்கள். (4:5) விவரமறியாதவரின் பொருளாதார நடவடிக்கைக்குத் தடை விதிக்கப்படும். மேலும், மோசடியும் தடை செய்யப் படும்.
2408. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

(பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும், (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும், பிறரது செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக்கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். தேவையற்ற வீண் பேச்சுகள் பேசுவதையும் அதிகமாகக் கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வெறுத் துள்ளான்.

இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 43
2409. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالإِمَامُ رَاعٍ، وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ فِي أَهْلِهِ رَاعٍ، وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَهْىَ مَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ، وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "". قَالَ فَسَمِعْتُ هَؤُلاَءِ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَحْسِبُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" وَالرَّجُلُ فِي مَالِ أَبِيهِ رَاعٍ، وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "".
பாடம் : 20 அடிமை (அல்லது பணியாள்) தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். உரிமை யாளரின் அனுமதியின்றி அவன் அதைக் கையாளக் கூடாது.
2409. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப் பாளரே. தமது பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தம் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தனது பொறுப்புக்கு உட்பட்ட வர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் உரிமையாளனின் உடைமை களுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தனது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.

‘‘இவையனைத்தையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்டேன்” என்று கூறிவிட்டு இப்னு உமர் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளன் ஆவான். அது குறித்தும் அவன் விசாரிக்கப்படுவான். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் (ஏதேனும் ஒரு விஷயத்திற்குப்) பொறுப்பாளர்களே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்” என்றும் கூறியதாக நான் நினைக்கிறேன்.

அத்தியாயம் : 43

2410. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ عَبْدُ الْمَلِكِ بْنُ مَيْسَرَةَ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ النَّزَّالَ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ، يَقُولُ سَمِعْتُ رَجُلاً، قَرَأَ آيَةً سَمِعْتُ مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم خِلاَفَهَا، فَأَخَذْتُ بِيَدِهِ، فَأَتَيْتُ بِهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" كِلاَكُمَا مُحْسِنٌ "". قَالَ شُعْبَةُ أَظُنُّهُ قَالَ "" لاَ تَخْتَلِفُوا فَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمُ اخْتَلَفُوا فَهَلَكُوا "".
பாடம் : 1 ஆள்கொணர்வும் முஸ்லிம்கள்லி யூதர்கள் இடையிலான வழக்கும்
2410. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதை நான் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.2

‘‘நபி (ஸல்) அவர்கள், யிவேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்துவிட்டனர்’ என்று கூறியதாக எண்ணுகிறேன்” என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 44
2411. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَعَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ اسْتَبَّ رَجُلاَنِ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ وَرَجُلٌ مِنَ الْيَهُودِ، قَالَ الْمُسْلِمُ وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا عَلَى الْعَالَمِينَ، فَقَالَ الْيَهُودِيُّ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْعَالَمِينَ. فَرَفَعَ الْمُسْلِمُ يَدَهُ عِنْدَ ذَلِكَ فَلَطَمَ وَجْهَ الْيَهُودِيِّ، فَذَهَبَ الْيَهُودِيُّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ بِمَا كَانَ مِنْ أَمْرِهِ وَأَمْرِ الْمُسْلِمِ، فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُسْلِمَ فَسَأَلَهُ عَنْ ذَلِكَ، فَأَخْبَرَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ، فَأَصْعَقُ مَعَهُمْ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا مُوسَى بَاطِشٌ جَانِبَ الْعَرْشِ، فَلاَ أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي، أَوْ كَانَ مِمَّنِ اسْتَثْنَى اللَّهُ "".
பாடம் : 1 ஆள்கொணர்வும் முஸ்லிம்கள்லி யூதர்கள் இடையிலான வழக்கும்
2411. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். அந்த முஸ்லிம், ‘‘உலகத்தார் அனைவரை விடவும் (சிறந்தவராக) முஹம்மத் (ஸல்) அவர்களைத் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!” என்று கூறினார். அந்த யூதர், ‘‘உலகத்தார் அனைவரைவிடவும் (சிறந்தவ ராக) மூசாவைத் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார்.

அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தமுஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் விசாரித்தார்கள். அவர் விவரத்தைக் கூறினார்.

(நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்துகொண்டபின்) நபி (ஸல்) அவர்கள், ‘‘மூசாவைவிட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகிவிடுவேன். நான்தான் முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூசா (அலை) அவர்கள் (அல்லாஹ்வுடைய) அரியணையின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்துவிட்டிருப்பாரா; அல்லது அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) அல்லாஹ் விதிவிலக்கு அளித்திருப்பானா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 44
2412. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ جَاءَ يَهُودِيٌّ، فَقَالَ يَا أَبَا الْقَاسِمِ ضَرَبَ وَجْهِي رَجُلٌ مِنْ أَصْحَابِكَ. فَقَالَ "" مَنْ "". قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ. قَالَ "" ادْعُوهُ "". فَقَالَ "" أَضَرَبْتَهُ "". قَالَ سَمِعْتُهُ بِالسُّوقِ يَحْلِفُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ. قُلْتُ أَىْ خَبِيثُ، عَلَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَأَخَذَتْنِي غَضْبَةٌ ضَرَبْتُ وَجْهَهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تُخَيِّرُوا بَيْنَ الأَنْبِيَاءِ، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ تَنْشَقُّ عَنْهُ الأَرْضُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ الْعَرْشِ، فَلاَ أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ، أَمْ حُوسِبَ بِصَعْقَةِ الأُولَى "".
பாடம் : 1 ஆள்கொணர்வும் முஸ்லிம்கள்லி யூதர்கள் இடையிலான வழக்கும்
2412. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, ‘‘அபுல்காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அந்தத் தோழர்) யார்?” என்று கேட்டார் கள். அதற்கு அவர், ‘‘அன்சாரிகளில் ஒருவர்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரைக் கூப்பிடுங்கள்” என்றார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், ‘‘இவரை நீர் அடித்தீரா?” என்று கேட்டார்கள்.

அந்த அன்சாரி, ‘‘இவர் கடைவீதியில், யிமனிதர்கள் அனைவரையும்விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!› என்று ஆணையிட்டுக் கூறிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். உடனே நான், யிதீயவனே! முஹம்மத் (ஸல்) அவர்களைவிடவா (மூசா மேன்மை வாய்ந்தவர்)?› என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டுவிட, இவரது முகத்தில் அறைந்துவிட்டேன்” என்று கூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரைவிட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகிவிடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிவருபவர் களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூசாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பவராகக் காண்பேன். யிமூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா; அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 44
2413. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ يَهُودِيًّا، رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ، قِيلَ مَنْ فَعَلَ هَذَا بِكِ أَفُلاَنٌ، أَفُلاَنٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ فَأَوْمَتْ بِرَأْسِهَا، فَأُخِذَ الْيَهُودِيُّ فَاعْتَرَفَ، فَأَمَرَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرُضَّ رَأْسُهُ بَيْنَ حَجَرَيْنِ.
பாடம் : 1 ஆள்கொணர்வும் முஸ்லிம்கள்லி யூதர்கள் இடையிலான வழக்கும்
2413. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், ‘‘உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?” என்று கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி (‘‘ஆம், அவன்தான்” என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். நபி (ஸல்) அவர்கள் அவனது தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனது தலை நசுக்கப்பட்டது.

அத்தியாயம் : 44
2414. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَجُلٌ يُخْدَعُ فِي الْبَيْعِ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ "". فَكَانَ يَقُولُهُ.
பாடம் : 2 பேதை மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவரின் பொருளாதார நடவடிக் கைகளை3 ரத்து செய்வது செல்லும்; ஆட்சித் தலைவர் அவரது பொருளாதார நடவடிக்கைகளைத் தடை செய்து4 (இன்னும்) ஆணை பிறப்பிக்காமலிருந்தாலும் சரியே! ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது: நபி (ஸல்) அவர்கள் (ஏழை) ஒருவர் தர்மம் செய்தபோது அந்தத் தர்மத்தை ரத்து செய்தார்கள். பிறகுதான், அந்த (ஏழை) மனிதர் தர்மம் செய்வதைத் தடை செய்து ஆணை பிறப்பித்தார்கள். ‘‘ஒரு மனிதர் கடனாளியாக இருந்து, அவரிடம் ஓர் அடிமையைத் தவிர வேறு செல்வம் ஏதும் இல்லாமலிருந்து அந்த அடிமையை அவர் விடுதலை செய்தால் அது செல்லாது” என்று இமாம் மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள். பாடம் : 3 ஒருவர் மூளை வளர்ச்சி குன்றிய ஒருவருக்காக அவரது பொருளை விற்று, அதன் விலையை அவரி டமே கொடுத்து, இதைச் சரியான முறையில் பயன்படுத்தி நன்கு பராமரித்து வைத்துக்கொள்ளும்படி கூற, பிறகு அவர் சீரழித்தால் அவர்மீது பொருளாதாரத் தடை விதிக்கலாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் பொருளை வீணாக்குவதைத் தடை செய்துள் ளார்கள். மேலும், வியாபாரத்தின்போது அடிக்கடி ஏமாற்றப்பட்டுவந்த ஒரு மனிதரிடம், ‘‘நீ வியாபாரம் செய்யும்போது (எதையும் வாங்கும்போது அல்லது விற்கும்போது) யிமோசடி கூடாது’ என்று சொல்லிவிடு” என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட் டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (கடனாளி ஒருவர் ஆர்வத்தின் பேரில் தன் அடிமையை விடுதலை செய்ய முனைந்த போது, அந்த அடிமையை விற்று, விலையை அவரிடமே கொடுத்தார்களே தவிர,) அவரது (அந்தச்) செல்வத்தைக் கைப்பற்றி (முடக்கி)விடவில்லை.
2414. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் வியாபாரத்தில் ஏமாற்றப் பட்டுவந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம், ‘‘நீ வியாபாரம் செய்தால் (எதையும் விற்றால் அல்லது வாங்கினால்) யிஏமாற்றுதல் கூடாது’ எனச் சொல்லிவிடு” என்று சொன்னார்கள். அதன்படி அந்த மனிதர் (வியாபாரம் செய்யும்போதெல்லாம்) அவ்வாறே கூறிவந்தார்.


அத்தியாயம் : 44
2415. حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَعْتَقَ عَبْدًا لَهُ، لَيْسَ لَهُ مَالٌ غَيْرُهُ، فَرَدَّهُ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَابْتَاعَهُ مِنْهُ نُعَيْمُ بْنُ النَّحَّامِ.
பாடம் : 2 பேதை மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவரின் பொருளாதார நடவடிக் கைகளை3 ரத்து செய்வது செல்லும்; ஆட்சித் தலைவர் அவரது பொருளாதார நடவடிக்கைகளைத் தடை செய்து4 (இன்னும்) ஆணை பிறப்பிக்காமலிருந்தாலும் சரியே! ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது: நபி (ஸல்) அவர்கள் (ஏழை) ஒருவர் தர்மம் செய்தபோது அந்தத் தர்மத்தை ரத்து செய்தார்கள். பிறகுதான், அந்த (ஏழை) மனிதர் தர்மம் செய்வதைத் தடை செய்து ஆணை பிறப்பித்தார்கள். ‘‘ஒரு மனிதர் கடனாளியாக இருந்து, அவரிடம் ஓர் அடிமையைத் தவிர வேறு செல்வம் ஏதும் இல்லாமலிருந்து அந்த அடிமையை அவர் விடுதலை செய்தால் அது செல்லாது” என்று இமாம் மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள். பாடம் : 3 ஒருவர் மூளை வளர்ச்சி குன்றிய ஒருவருக்காக அவரது பொருளை விற்று, அதன் விலையை அவரி டமே கொடுத்து, இதைச் சரியான முறையில் பயன்படுத்தி நன்கு பராமரித்து வைத்துக்கொள்ளும்படி கூற, பிறகு அவர் சீரழித்தால் அவர்மீது பொருளாதாரத் தடை விதிக்கலாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் பொருளை வீணாக்குவதைத் தடை செய்துள் ளார்கள். மேலும், வியாபாரத்தின்போது அடிக்கடி ஏமாற்றப்பட்டுவந்த ஒரு மனிதரிடம், ‘‘நீ வியாபாரம் செய்யும்போது (எதையும் வாங்கும்போது அல்லது விற்கும்போது) யிமோசடி கூடாது’ என்று சொல்லிவிடு” என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட் டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (கடனாளி ஒருவர் ஆர்வத்தின் பேரில் தன் அடிமையை விடுதலை செய்ய முனைந்த போது, அந்த அடிமையை விற்று, விலையை அவரிடமே கொடுத்தார்களே தவிர,) அவரது (அந்தச்) செல்வத்தைக் கைப்பற்றி (முடக்கி)விடவில்லை.
2415. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஓர் அடிமையை விடுதலை செய்தார். அவரிடம் அந்த அடிமை யைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள், அந்த அடிமையை அம்மனிதர் விடுதலை செய்ததை ரத்துச் செய்தார்கள். (அவருக்காக அவ்வடிமையை ஏலம் விட்டபோது) நபி (ஸல்) அவர்களிடமிருந்து அந்த அடிமையை நுஐம் பின் அந்நஹ்ஹாம் (ரலி) அவர்கள் வாங்கினார்கள். (பிறகு நபி (ஸல்) அவர்கள் அதன் விலையை அடிமையின் உரிமையாளரிடமே கொடுத்துவிட்டார்கள்.)

அத்தியாயம் : 44
2416. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهْوَ فِيهَا فَاجِرٌ لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "". قَالَ فَقَالَ الأَشْعَثُ فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي، فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلَكَ بَيِّنَةٌ "". قُلْتُ لاَ. قَالَ فَقَالَ لِلْيَهُودِيِّ "" احْلِفْ "". قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ، وَيَذْهَبَ بِمَالِي، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى آخِرِ الآيَةِ.
பாடம் : 4 வாதியும் பிரதிவாதியும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதேனும் (குறை) பேசுதல்
2416. ‘‘ஒருவன் ஒரு முஸ்லிமு டைய செல்வத்தை அபகரித்துக்கொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய் வானாயின், மறுமையில் தன்மீது கோபம் கொண்ட நிலையில்தான் அல்லாஹ்வை அவன் சந்திப்பான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கும்போது கேட் டுக்கொண்டிருந்த அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறலானார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இது நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்துவந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்துவிடவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை” என்றேன். நபி (ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, ‘‘(அப்படியென்றால் யிநிலம் என்னுடையதுதான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று) சத்தியம் செய்” என்று கூறினார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறென்றால் அந்த யூதர் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்றுவிடுவாரே!” என்று கூறினேன். (அப்போதுதான் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்கள்.) உடனே, ‘‘எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அவர்களுடன் அல்லாஹ் பேசவும்மாட் டான்; அவர்களைப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’ (3:77) எனும் குர்ஆன் வசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் அருளினான்.


அத்தியாயம் : 44
2418. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ كَعْبٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا، حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ فَنَادَى "" يَا كَعْبُ "". قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا "". فَأَوْمَأَ إِلَيْهِ، أَىِ الشَّطْرَ. قَالَ لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" قُمْ فَاقْضِهِ "".
பாடம் : 4 வாதியும் பிரதிவாதியும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதேனும் (குறை) பேசுதல்
2418. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்களிடம் பள்ளிவாசலில் வைத்து, நான் கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். எங்கள் (இருவரி டையே இது தொடர்பாக வாக்குவாதம் தொடங்கி) இருவரின் குரலும் உயர்ந்து விட்டது. வீட்டில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் குரலைச் செவியுற்றுவிட்டார்கள். பிறகு தமது அறையின் திரையை நீக்கி எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டு வந்து, யிகஅபே!› என்று அழைத்தார்கள். நான், ‘‘இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை (இந்த அளவை) உன் கடனிலிருந்து குறைத்துக் கொள்” என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக்கொள்ளும்படி (விரலால்) சைகை காட்டினார்கள். ‘‘அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்களை நோக்கி,) ‘‘எழுந்து சென்று (மீதிக்) கடனை அடைப்பீராக!” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 44
2419. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، أَنَّهُ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ، يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَقْرَأَنِيهَا، وَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ، ثُمَّ أَمْهَلْتُهُ حَتَّى انْصَرَفَ، ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ فَجِئْتُ بِهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا، فَقَالَ لِي "" أَرْسِلْهُ "". ثُمَّ قَالَ لَهُ "" اقْرَأْ "". فَقَرَأَ. قَالَ "" هَكَذَا أُنْزِلَتْ "". ثُمَّ قَالَ لِي "" اقْرَأْ "". فَقَرَأْتُ فَقَالَ "" هَكَذَا أُنْزِلَتْ. إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مِنْهُ مَا تَيَسَّرَ "".
பாடம் : 4 வாதியும் பிரதிவாதியும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதேனும் (குறை) பேசுதல்
2419. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் (குர்ஆனின்) அத்தியாயம் ‘அல்ஃபுர்காû” நான் ஓதுகின்ற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக்காட்டி யிருந்தார்கள். நான், உடனேயே ஹிஷாம் (ரலி) அவர்களைக் கண்டிக்க முற் பட்டேன்.

பிறகு (சற்று யோசித்து) அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களுக்கு அவகாசம் அளித்(துக் காத்திருந்)தேன். (அவர்கள் தொழுது முடித்த) பிறகு, அவர்களின் போர்வை (போன்றஅங்கி)யை அவர்களுடைய கழுத்தில் போட்டு இழுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் எனக்கு ஓதிக்கொடுத்ததற்கு மாற்றமாக இவர் ஓதுவதை நான் கேட்டேன்” என்று கூறி னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விடுவீராக!” என்று கூறினார்கள்.

பிறகு ஹிஷாம் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘நீங்கள் ஓதுங்கள்” என்று கூறினார்கள். அவர் ஓத, அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) இறங்கிற்று” என்று கூறினார்கள். பிறகு என்னை நோக்கி, ‘‘நீங்கள் ஓதுங்கள்” என்று கூறினார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) இறங்கிற்று. நிச்சயமாக, குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளின்படி அருளப்பட்டிருக்கிறது. ஆகவே, உங்களுக்கு எளிதானதை அதிலிருந்து ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 44