2380. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنهم ـ قَالَ رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُبَاعَ الْعَرَايَا بِخَرْصِهَا تَمْرًا.
பாடம் : 18 தோப்பை விற்றவருக்கு (அதில் தமக்குரிய கனிகளைப் பறிப்பதற்காக) தோப்புக்குள் நடக்கும் உரிமையும் மரங்களுக்கு நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டபின் பேரீச்ச மரங்களை ஒருவர் விற்றால் அவற்றின் விளைச்சல் கனிகள் அவருக்கே (விற்றவருக்கே) உரியன. (பேரீச்சந் தோப்பை) விற்றவருக்கு, போக்குவரத்துப் பாதை(யாக அதைப் பயன்படுத்தும் உரிமை)யும் உண்டு; (தாம் விவசாயம் செய்த மரங்களுக்கு) நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு; விளைச்சலை அறுவடை செய்யும்வரை (அதாவது கனிகளைப் பறித்துக்கொள்ளும்வரை). இவ்வாறே ‘அராயா’ (இரவல் மரங்கள்) வியாபாரம் செய்பவருக்கும் உரிமை யுண்டு.18
2380. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக, ‘அராயா’ (இரவல்) மரத்திலுள்ள கனிகளை (ஐந்து யிவஸ்க்’கு களுக்கும் குறைவான அளவில்) குத்து மதிப்பாக விற்பதற்கு அனுமதியளித் தார்கள்.


அத்தியாயம் : 42
2381. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْمُخَابَرَةِ، وَالْمُحَاقَلَةِ، وَعَنِ الْمُزَابَنَةِ، وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، وَأَنْ لاَ تُبَاعَ إِلاَّ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ، إِلاَّ الْعَرَايَا.
பாடம் : 18 தோப்பை விற்றவருக்கு (அதில் தமக்குரிய கனிகளைப் பறிப்பதற்காக) தோப்புக்குள் நடக்கும் உரிமையும் மரங்களுக்கு நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டபின் பேரீச்ச மரங்களை ஒருவர் விற்றால் அவற்றின் விளைச்சல் கனிகள் அவருக்கே (விற்றவருக்கே) உரியன. (பேரீச்சந் தோப்பை) விற்றவருக்கு, போக்குவரத்துப் பாதை(யாக அதைப் பயன்படுத்தும் உரிமை)யும் உண்டு; (தாம் விவசாயம் செய்த மரங்களுக்கு) நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு; விளைச்சலை அறுவடை செய்யும்வரை (அதாவது கனிகளைப் பறித்துக்கொள்ளும்வரை). இவ்வாறே ‘அராயா’ (இரவல் மரங்கள்) வியாபாரம் செய்பவருக்கும் உரிமை யுண்டு.18
2381. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முகாபராவையும், முஹாகலாவையும், முஸாபனாவையும், பலன் உறுதிப்படாத நிலையிலுள்ள, மரத்திலுள்ள கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள். மேலும், பொன் நாணயத்திற்கும் வெள்ளி நாணயத்திற்கும் (பகரமாக) மட்டுமே (அவற்றை) விற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (மரத்திலுள்ள கனிகளுக்குப் பகரமாக சேமிக்கப்பட்ட, உலர்ந்த கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். எனினும்) ‘அராயா’வில் (இரவல் மரங்கள்) மட்டும் அப்படி விற்பதற்கு அனுமதியளித் தார்கள்.19


அத்தியாயம் : 42
2382. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ، عَنْ أَبِي سُفْيَانَ، مَوْلَى أَبِي أَحْمَدَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْعِ الْعَرَايَا بِخَرْصِهَا مِنَ التَّمْرِ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ أَوْ فِي خَمْسَةِ أَوْسُقٍ، شَكَّ دَاوُدُ فِي ذَلِكَ.
பாடம் : 18 தோப்பை விற்றவருக்கு (அதில் தமக்குரிய கனிகளைப் பறிப்பதற்காக) தோப்புக்குள் நடக்கும் உரிமையும் மரங்களுக்கு நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டபின் பேரீச்ச மரங்களை ஒருவர் விற்றால் அவற்றின் விளைச்சல் கனிகள் அவருக்கே (விற்றவருக்கே) உரியன. (பேரீச்சந் தோப்பை) விற்றவருக்கு, போக்குவரத்துப் பாதை(யாக அதைப் பயன்படுத்தும் உரிமை)யும் உண்டு; (தாம் விவசாயம் செய்த மரங்களுக்கு) நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு; விளைச்சலை அறுவடை செய்யும்வரை (அதாவது கனிகளைப் பறித்துக்கொள்ளும்வரை). இவ்வாறே ‘அராயா’ (இரவல் மரங்கள்) வியாபாரம் செய்பவருக்கும் உரிமை யுண்டு.18
2382. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அராயா’ (இரவல்) வகை மரத்திலுள்ள பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக ஐந்து யிவஸ்க்’குகளுக்கும் குறைவாகவோ அல்லது ஐந்து வஸக்குகளுக்கோ விற்பனை செய்துகொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி யளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூத் பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள், யிஐந்து வஸ்க்குகளுக்கும் குறைவாகவா; ஐந்து வஸ்க்குகளுக்கா’ என்று சந்தேகப்படுகிறார்கள்.20


அத்தியாயம் : 42
2383. حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، قَالَ أَخْبَرَنِي الْوَلِيدُ بْنُ كَثِيرٍ، قَالَ أَخْبَرَنِي بُشَيْرُ بْنُ يَسَارٍ، مَوْلَى بَنِي حَارِثَةَ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ، وَسَهْلَ بْنَ أَبِي حَثْمَةَ، حَدَّثَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُزَابَنَةِ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ، إِلاَّ أَصْحَابَ الْعَرَايَا فَإِنَّهُ أَذِنَ لَهُمْ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ ابْنُ إِسْحَاقَ حَدَّثَنِي بُشَيْرٌ مِثْلَهُ.
பாடம் : 18 தோப்பை விற்றவருக்கு (அதில் தமக்குரிய கனிகளைப் பறிப்பதற்காக) தோப்புக்குள் நடக்கும் உரிமையும் மரங்களுக்கு நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டபின் பேரீச்ச மரங்களை ஒருவர் விற்றால் அவற்றின் விளைச்சல் கனிகள் அவருக்கே (விற்றவருக்கே) உரியன. (பேரீச்சந் தோப்பை) விற்றவருக்கு, போக்குவரத்துப் பாதை(யாக அதைப் பயன்படுத்தும் உரிமை)யும் உண்டு; (தாம் விவசாயம் செய்த மரங்களுக்கு) நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு; விளைச்சலை அறுவடை செய்யும்வரை (அதாவது கனிகளைப் பறித்துக்கொள்ளும்வரை). இவ்வாறே ‘அராயா’ (இரவல் மரங்கள்) வியாபாரம் செய்பவருக்கும் உரிமை யுண்டு.18
2383. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள் (மரத் திலுள்ள கனிகளை உலர்ந்த, பறிக்கப்பட்ட கனிகளுக்காக விற்பதைத் தடை செய்தார் கள்); ‘அராயா’காரர்களைத் தவிர. நபி (ஸல்) அவர்கள், ‘அராயா’காரர்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட (முஸாபனா) வியாபாரம் செய்துகொள்ள அனுமதியளித்தார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய) நான் கூறுகிறேன்:

‘‘புஷைர் (ரஹ்) அவர்கள் இதைப் போன்றதை (ஹதீஸை) எனக்கு அறிவித் தார்கள்” என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 42

2385. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْمُغِيرَةِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كَيْفَ تَرَى بَعِيرَكَ أَتَبِيعُنِيهِ "". قُلْتُ نَعَمْ. فَبِعْتُهُ إِيَّاهُ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ غَدَوْتُ إِلَيْهِ بِالْبَعِيرِ، فَأَعْطَانِي ثَمَنَهُ.
பாடம் : 1 ஒரு பொருளுக்குரிய விலை தம்மிடம் இல்லாமல், அல்லது (அப்போதைக்கு) கைவசம் இல்லா மல் ஒருவர் அதைக் கடனாக வாங்குவது
2385. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்துகொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உன் ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறாய்? அதை நீ விற்பாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘ஆம் (விற்றுவிடுகிறேன்)” என்று சொன்னேன். அவ்வாறே நபி (ஸல்) அவர்களுக்கே அதை விற்றுவிட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தவுடன் மறுநாள் நான் அவர்களிடம் ஒட்டகத்துடன் சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்து விட்டார்கள்.2


அத்தியாயம் : 43
2386. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ تَذَاكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ فِي السَّلَمِ فَقَالَ حَدَّثَنِي الأَسْوَدُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ.
பாடம் : 1 ஒரு பொருளுக்குரிய விலை தம்மிடம் இல்லாமல், அல்லது (அப்போதைக்கு) கைவசம் இல்லா மல் ஒருவர் அதைக் கடனாக வாங்குவது
2386. சுலைமான் பின் மஹ்ரான் அல் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் முன்பண வணிகம் (சலம்) செய்யும்போது அடைமானம் வைப்பது குறித்துப் பேசினோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணை(யில் பணம் தருவ தாகக்) கூறி உணவு தானியத்தை விலைக்கு வாங்கினார்கள். அவரிடம் (அதற்காக) இரும்புக் கவசம் ஒன்றை அடைமானம் வைத்தார்கள்.

அத்தியாயம் : 43
2387. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ "".
பாடம் : 2 திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைக்) கடன் வாங்கியவர் நிலையும், திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணத்துடன் கடன் வாங்கியவர் நிலையும்
2387. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறாரோ அவர் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்துவிடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்துவிடுவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 43
2388. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا أَبْصَرَ ـ يَعْنِي أُحُدًا ـ قَالَ "" مَا أُحِبُّ أَنَّهُ يُحَوَّلُ لِي ذَهَبًا يَمْكُثُ عِنْدِي مِنْهُ دِينَارٌ فَوْقَ ثَلاَثٍ، إِلاَّ دِينَارًا أُرْصِدُهُ لِدَيْنٍ "". ثُمَّ قَالَ "" إِنَّ الأَكْثَرِينَ هُمُ الأَقَلُّونَ، إِلاَّ مَنْ قَالَ بِالْمَالِ هَكَذَا وَهَكَذَا "". وَأَشَارَ أَبُو شِهَابٍ بَيْنَ يَدَيْهِ وَعَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ ـ وَقَلِيلٌ مَا هُمْ ـ وَقَالَ مَكَانَكَ. وَتَقَدَّمَ غَيْرَ بَعِيدٍ، فَسَمِعْتُ صَوْتًا، فَأَرَدْتُ أَنْ آتِيَهُ، ثُمَّ ذَكَرْتُ قَوْلَهُ مَكَانَكَ حَتَّى آتِيَكَ، فَلَمَّا جَاءَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، الَّذِي سَمِعْتُ أَوْ قَالَ الصَّوْتُ الَّذِي سَمِعْتُ قَالَ "" وَهَلْ سَمِعْتَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" أَتَانِي جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَقَالَ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ "". قُلْتُ وَإِنْ فَعَلَ كَذَا وَكَذَا قَالَ "" نَعَمْ "".
பாடம் : 3 கடனைத் திருப்பிச் செலுத்துதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (முஸ்லிம்களே!) அடைக்கலப் பொருட் களை அவற்றுக்கு உரியவரிடம் நீங்கள் ஒப்படைத்துவிடுங்கள்; மேலும், நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால், நீதி யுடன் தீர்ப்பு வழங்குங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடு கின்றான். நிச்சயமாக, அல்லாஹ் உங்களுக்குக் கூறும் இந்த அறிவுரை மிகவும் நல்லதாகும். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்றுநோக்குபவனாகவும் இருக்கின்றான். (4:58)
2388. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்தபோது, ‘‘இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்குமேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு, ‘‘(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தான் (மறுமையில் நற் பலன்) குறைந்தவர்கள்; ‘(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர.

(இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஷிஹாப் (ரஹ்) அவர்கள், யிஇப்படியெல்லாம்’ என்பதற்கு விளக்கமாக முன்பக்கமாகவும், வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் சைகை செய்தார்கள்.

ஆனால், ‘‘அப்படிப்பட்டவர்கள் (எண்ணிக்கையில்) குறைவானவர்களே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘‘நீ இங்கேயே இரு” என்று சொல்லி, சிறிது தூரம் முன்னால் சென்றிருப்பார்கள். அதற்குள் (நபி (ஸல்) அவர்களுடன் யாரோ உரையாடுவதைப் போன்று) ஏதோ ஒரு குரலைக் கேட்டேன். ஆனால், நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் திரும்பி வரும்வரை நீ இங்கேயே இரு” என்று கூறியது என் நினைவுக்கு வந்தது.

நபி (ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்ட குரல் என்ன?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(நீங்கள் அந்தக் குரலைச்) செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ‘‘உம்முடைய சமுதாயத்தாரில் எவர் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் (வாழ்ந்து) மரணம் அடைந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்” என்று கூறினார்கள். நான், ‘‘இப்படி இப்படியெல்லாம் செய்தவருமா (விபச்சாரக் குற்றமும் திருட்டுக் குற்றமும் புரிந்தவருமா) சொர்க்கம் புகுவார்?” என்று கேட்டேன்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘ஆம், (அவரும்தான் சொர்க்கம் புகுவார்)” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 43
2389. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ كَانَ لِي مِثْلُ أُحُدٍ ذَهَبًا، مَا يَسُرُّنِي أَنْ لاَ يَمُرَّ عَلَىَّ ثَلاَثٌ وَعِنْدِي مِنْهُ شَىْءٌ، إِلاَّ شَىْءٌ أُرْصِدُهُ لِدَيْنٍ "". رَوَاهُ صَالِحٌ وَعُقَيْلٌ عَنِ الزُّهْرِيِّ.
பாடம் : 3 கடனைத் திருப்பிச் செலுத்துதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (முஸ்லிம்களே!) அடைக்கலப் பொருட் களை அவற்றுக்கு உரியவரிடம் நீங்கள் ஒப்படைத்துவிடுங்கள்; மேலும், நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால், நீதி யுடன் தீர்ப்பு வழங்குங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடு கின்றான். நிச்சயமாக, அல்லாஹ் உங்களுக்குக் கூறும் இந்த அறிவுரை மிகவும் நல்லதாகும். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்றுநோக்குபவனாகவும் இருக்கின்றான். (4:58)
2389. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என்மீது மூன்று நாட்கள் கழிவதுகூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 43
2390. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، بِبَيْتِنَا يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، تَقَاضَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَأَغْلَظَ لَهُ، فَهَمَّ أَصْحَابُهُ، فَقَالَ "" دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً. وَاشْتَرُوا لَهُ بَعِيرًا، فَأَعْطُوهُ إِيَّاهُ "". وَقَالُوا لاَ نَجِدُ إِلاَّ أَفْضَلَ مِنْ سِنِّهِ. قَالَ "" اشْتَرُوهُ فَأَعْطُوهُ إِيَّاهُ، فَإِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً "".
பாடம் : 4 ஒட்டகத்தைக் கடன் வாங்குதல்
2390. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவர்களுக்குத் தாம் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி,) ‘‘(அவரைத் தண்டிக்க வேண்டாம்;) விட்டுவிடுங்கள். ஏனெனில், கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு) பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள், ‘‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களுக்குக் கிடைக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 43
2391. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَاتَ رَجُلٌ، فَقِيلَ لَهُ قَالَ كُنْتُ أُبَايِعُ النَّاسَ، فَأَتَجَوَّزُ عَنِ الْمُوسِرِ، وَأُخَفِّفُ عَنِ الْمُعْسِرِ، فَغُفِرَ لَهُ "". قَالَ أَبُو مَسْعُودٍ سَمِعْتُهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 5 கடனைத் திருப்பிக் கேட்கும்போது நயமாக நடந்துகொள்வது
2391. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஒரு மனிதர் மரணித்துவிட்டார். அவரிடம் (அடக்கத் தலத்தில் வைத்து), ‘‘நீ (உலகில்) என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து)வந்தாய்?” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து)வந்தேன்” என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது.

இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸை நபி (ஸல்) அவர்களி டம் தாம் கேட்டதாக அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 43
2392. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَقَاضَاهُ بَعِيرًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَعْطُوهُ "". فَقَالُوا مَا نَجِدُ إِلاَّ سِنًّا أَفْضَلَ مِنْ سِنِّهِ. فَقَالَ الرَّجُلُ أَوْفَيْتَنِي أَوْفَاكَ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَعْطُوهُ فَإِنَّ مِنْ خِيَارِ النَّاسِ أَحْسَنَهُمْ قَضَاءً "".
பாடம் : 6 (கடனாக வாங்கிய ஒட்டகத்தைவிட) வயதில் பெரிய ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தலாமா?
2392. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கடனாகப் பெற்றிருந்த ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்க வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘‘அவருக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அதற்குத் தோழர்கள், ‘‘அவருக்கு நீங்கள் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளது” என்று கூறினர். இதைக் கேட்ட அம்மனிதர், ‘‘(என் உரிமையை) நிறைவாக எனக்கு நீங்கள் அளித்தீர்கள் என்றால், அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிப்பான்” என்று கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவருக்கு (வயது அதிகமான) அந்த ஒட்டகத்தையே கொடுத்துவிடுங்கள். ஏனெனில், எவர் (தாம் வாங்கிய கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்து கிறாரோ, அவரே மக்களில் சிறந்தவர் ஆவார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 43
2393. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سِنٌّ مِنَ الإِبِلِ فَجَاءَهُ يَتَقَاضَاهُ فَقَالَ صلى الله عليه وسلم "" أَعْطُوهُ "". فَطَلَبُوا سِنَّهُ، فَلَمْ يَجِدُوا لَهُ إِلاَّ سِنًّا فَوْقَهَا. فَقَالَ "" أَعْطُوهُ "". فَقَالَ أَوْفَيْتَنِي، وَفَّى اللَّهُ بِكَ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً "".
பாடம் : 7 (கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்துதல்
2393. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தாம் கடனாக வாங்கிய) ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒரு மனிதருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (ஒருமுறை) அம்மனிதர் தமது ஒட்டகத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவருக்குக் கொடுங்கள்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். தோழர்கள் அந்த மனிதருக்குச் சேர வேண்டிய சிறு வயதுடைய ஒட்டகத்தைத் தேடினார்கள். ஆனால், அதிக வயதுடைய ஒட்டகம்தான் அவர்களுக்குக் கிடைத்தது. நபி (ஸல்) அவர்கள், ‘‘(அதையே) அவருக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

அந்த மனிதர், ‘‘நீங்கள் எனக்கு நிறைவாக அளித்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிப்பானாக!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் சிறந்தவர், தாம் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 43
2394. حَدَّثَنَا خَلاَّدٌ، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ فِي الْمَسْجِدِ ـ قَالَ مِسْعَرٌ أُرَاهُ قَالَ ضُحًى ـ فَقَالَ "" صَلِّ رَكْعَتَيْنِ "". وَكَانَ لِي عَلَيْهِ دَيْنٌ فَقَضَانِي وَزَادَنِي.
பாடம் : 7 (கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்துதல்
2394. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். லிஞீமுற்பகல் நேரத்தில் சென்றேன்’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக நினைக்கிறேன் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்லி நபி (ஸல்) அவர்கள், ‘‘இரண்டு ரக்அத்கள் தொழுவீ ராக!” என்று கூறினார்கள். என்னிடம் வாங்கிய ஒரு கடனை அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (நான் தொழுது முடித்தபின்) எனக்குத் தர வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தியதுடன் எனக்கு அதிகமாகவும் கொடுத்தார்கள்.

அத்தியாயம் : 43
2395. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، وَعَلَيْهِ دَيْنٌ فَاشْتَدَّ الْغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا تَمْرَ حَائِطِي وَيُحَلِّلُوا أَبِي فَأَبَوْا، فَلَمْ يُعْطِهِمِ النَّبِيُّ صلى الله عليه وسلم حَائِطِي، وَقَالَ "" سَنَغْدُو عَلَيْكَ "". فَغَدَا عَلَيْنَا حِينَ أَصْبَحَ، فَطَافَ فِي النَّخْلِ، وَدَعَا فِي ثَمَرِهَا بِالْبَرَكَةِ، فَجَدَدْتُهَا فَقَضَيْتُهُمْ، وَبَقِيَ لَنَا مِنْ تَمْرِهَا.
பாடம் : 8 (கடன் கொடுத்தவர் சம்மதித்தால்) கடனாளி கடனைக் குறைத்துச் செலுத்துவதோ அல்லது கடன் கொடுத்தவர் முழுவதுமாகக் கடனை விட்டுவிடுவதோ செல்லும்.
2395. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை உஹுத் போரின்போது, தம்மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டுவிட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம்பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக்கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்துவிடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம்பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை.

மாறாக, ‘‘நாம் உன்னிடம் காலையில் வருவோம்” என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் வளம் வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன் களையெல்லாம் திருப்பிச்செலுத்தினேன். (முழுக் கடனையும் அடைத்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதி யிருந்தன.

அத்தியாயம் : 43
2396. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسٌ، عَنْ هِشَامٍ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ تُوُفِّيَ، وَتَرَكَ عَلَيْهِ ثَلاَثِينَ وَسْقًا لِرَجُلٍ مِنَ الْيَهُودِ، فَاسْتَنْظَرَهُ جَابِرٌ، فَأَبَى أَنْ يُنْظِرَهُ، فَكَلَّمَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيَشْفَعَ لَهُ إِلَيْهِ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَلَّمَ الْيَهُودِيَّ لِيَأْخُذَ ثَمَرَ نَخْلِهِ بِالَّذِي لَهُ فَأَبَى، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّخْلَ، فَمَشَى فِيهَا ثُمَّ قَالَ لِجَابِرٍ "" جُدَّ لَهُ فَأَوْفِ لَهُ الَّذِي لَهُ "". فَجَدَّهُ بَعْدَ مَا رَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَوْفَاهُ ثَلاَثِينَ وَسْقًا، وَفَضَلَتْ لَهُ سَبْعَةَ عَشَرَ وَسْقًا، فَجَاءَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيُخْبِرَهُ بِالَّذِي كَانَ، فَوَجَدَهُ يُصَلِّي الْعَصْرَ، فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُ بِالْفَضْلِ، فَقَالَ "" أَخْبِرْ ذَلِكَ ابْنَ الْخَطَّابِ "". فَذَهَبَ جَابِرٌ إِلَى عُمَرَ، فَأَخْبَرَهُ. فَقَالَ لَهُ عُمَرُ لَقَدْ عَلِمْتُ حِينَ مَشَى فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُبَارَكَنَّ فِيهَا.
பாடம் : 9 கடனை அடைக்கும்போது (கடனா கப் பெற்ற) பேரீச்சம்பழத்திற்கோ வேறொரு தானியத்திற்கோ அதே அளவு சரியாக அளந்து கொடுத்தாலும், (கடன் கொடுத்தவர் சம்மதிக்கும்பட்சத்தில்) குத்து மதிப்பாகக் கணக்கிட்டுக் கொடுத் தாலும் (செல்லும்.)
2396. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (உஹுத் போரில் வீர) மரணம் அடைந்தார்கள்; ஒரு யூதருக்கு அவர் (திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாக) முப்பது வஸ்க்கு (கனி)களை என் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றார்கள்.3 அதைத் திருப்பிச் செலுத்த எனக்கு அவகாசம் அளிக்கும்படி நான் அந்த யூதரிடம் கேட்டேன். அவர் எனக்கு அவகாசம் தர மறுத்துவிட்டார். எனக்காக (கால அவகாசம் கேட்டு) அந்த யூதரிடம் பரிந்துரை செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த யூதரிடம் வந்து அவருக்குச் சேரவேண்டிய கடனுக்குப் பகரமாக என் பேரீச்சந் தோப்பின் கனிகளை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள். அதையும் அந்த யூதர் மறுத்துவிட்டார்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் புகுந்து அதன் மரங்களுக்கிடையே நடந்தார்கள். பிறகு என்னிடம், ‘‘அவருக்குப் பறித்துக் கொடு. அவருக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடு” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபிறகு, நான் பேரீச்சங் கனிகளைப் பறித்து அந்த யூதருக்கு முப்பது வஸ்க்குளையும் (நிறைவாகக்) கொடுத்துவிட்டேன். அதற்குப் பிறகும் எனக்குப் பதினேழு வஸ்க்குகள் (அளவுக் குப் பேரீச்சங் கனிகள்) மீதியிருந்தன.

பின்னர் நான் நடந்ததைத் தெரிவிப்ப தற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் அஸ்ர் தொழுகை தொழுதுகொண்டிருப்ப தைக் கண்டேன். அவர்கள் (சலாம் கொடுத்துத்) திரும்பியதும் பேரீச்சங் கனிகள் மீதியிருப்பதை அவர்களிடம் நான் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்தச் செய்தியை கத்தாபின் புதல்வரிடம் (உமரிடம்) தெரிவி” என்று கூறினார்கள்.

எனவே, நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்ததும் உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பேரீச்சமரங்களுக் கிடையே நடந்து சென்றபோதே, அவற்றில் யிபரக்கத்’ (அருள் வளம்) வழங்கப்படும் என்று நான் அறிந்துகொண்டேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 43
2397. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ وَيَقُولُ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ "". فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللَّهِ مِنَ الْمَغْرَمِ قَالَ "" إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ "".
பாடம் : 10 கடனிலிருந்து பாதுகாப்புக் கோரல்
2397. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆ செய்யும்போது, ‘‘இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந் தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புக் கோருவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 43
2398. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ، وَمَنْ تَرَكَ كَلاًّ فَإِلَيْنَا "".
பாடம் : 11 கடனை அடைக்காமல் விட்டுச் சென்றவருக்கு இறுதித் தொழுகை தொழுதல்
2398. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஒருவர் (இறக்கும்போது) ஒரு செல் வத்தை விட்டுச்சென்றால், அது அவரு டைய வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) தம் மனைவி மக்களை விட்டுச்சென்றால், அவர்களைப் பராமரிப்பது நமது பொறுப்பாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 43
2399.
பாடம் : 11 கடனை அடைக்காமல் விட்டுச் சென்றவருக்கு இறுதித் தொழுகை தொழுதல்
2399. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர் எவராயினும் அவருக்கு இந்த உலகிலும் மறுவுலகிலும் நானே மிக நெருக்கமான (உரிமையுடைய) வன் ஆவேன். நீங்கள் விரும்பினால், யிதிண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களைவிட நபிதான் நெருக்கமான (உரிமையுடைய)வர் ஆவார்’ (33:6) எனும் இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

ஓர் இறைநம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி) மரணித்து ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால் அவருடைய தந்தைவழி உறவினர்கள் லி அவர்கள் எவ்வகையினராயினும் சரிலி அதற்கு வாரிசுகளாகட்டும். எவர் (இறக்கும்போது) ஒரு கடனை (அடைக்காமல்) விட்டுச் செல்கிறாரோ அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கிறாரோ அவர் என்னிடத்தில் வரட்டும்.  நானே அவர்களுக்குக் காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன்.5

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் :