1455. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي ثُمَامَةُ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ كَتَبَ لَهُ {الصَّدَقَةَ} الَّتِي أَمَرَ اللَّهُ رَسُولَهُ صلى الله عليه وسلم "" وَلاَ يُخْرَجُ فِي الصَّدَقَةِ هَرِمَةٌ، وَلاَ ذَاتُ عَوَارٍ، وَلاَ تَيْسٌ، إِلاَّ مَا شَاءَ الْمُصَدِّقُ "".
பாடம் : 39 வயதான கால்நடை, குறைகள் உள்ள கால்நடை -ஸகாத் கொடுப்பவர் விரும்பினால் தவிர- ஆண் கால்நடை ஆகிய வற்றை ஸகாத்தாகப் பெற லாகாது.
1455. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்ட (ஸகாத்) விதிமுறைகள் தொடர்பாக அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு எழுதியிருந்தார்கள்:

ஸகாத்தில் வயதான கால்நடை, குறைகள் உள்ள கால்நடை -ஸகாத் கொடுப்பவர் விரும்பினால் தவிர- ஆண் கால்நடை ஆகியவற்றைப் பெறலாகாது.15

அத்தியாயம் : 24
1456. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا. قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ فَمَا هُوَ إِلاَّ أَنْ رَأَيْتُ أَنَّ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ بِالْقِتَالِ، فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ.
பாடம் : 40 ஆட்டுக் குட்டியை ஸகாத்தாக வசூலித்தல்
1456. 1457 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியவதாவது:

(நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் சிலர் ஸகாத் வழங்க மறுத்தபோது) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணை யாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடத்தில் வழங்கிவந்த (ஸகாத்களில்) ஓர் ஆட்டுக் குட்டியை என்னிடம் தர மறுத்தாலும் அதற்காக அவர்களுடன் நான் போர் புரிவேன்” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “(ஸகாத் கொடுக்க மறுத்தவர்கள்மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்)படி அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்ப தைத் தவிர வேறெதுவும் நான் கருத வில்லை. அதுதான் சரியானது என்பதை நான் அறிந்துகொண்டேன்” என்று கூறி னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 24
1458. حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا بَعَثَ مُعَاذًا ـ رضى الله عنه ـ عَلَى الْيَمَنِ قَالَ "" إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ أَهْلِ كِتَابٍ، فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ عِبَادَةُ اللَّهِ، فَإِذَا عَرَفُوا اللَّهَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ، فَإِذَا فَعَلُوا، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ فَرَضَ عَلَيْهُمْ زَكَاةً {تُؤْخَذُ} مِنْ أَمْوَالِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ، فَإِذَا أَطَاعُوا بِهَا فَخُذْ مِنْهُمْ، وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ "".
பாடம் : 41 மக்களின் செல்வங்களில் உயர் தரமானவற்றை ஸகாத்தாகப் பெறக் கூடாது.
1458. இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தபோது அவரிடம், “நீர் வேதம் கொடுக்கப்பட்ட மக்களிடம் செல்கிறீர். எனவே, நீர் அவர்களுக்கு விடுக்கும் முதல் அழைப்பு (ஏக) இறைவழிபாடாக இருக்கட்டும்! அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) அறிந்துகொண்டால், ஒவ்வொரு நாளும் இரவிலும் பகலிலுமாக ஐந்து வேளைத் தொழுகைகளை அவர்கள்மீது அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்குத் தெரிவிப்பீராக!

தொழுகையை அவர்கள் நிறைவேற்றி னால், அவர்கள்மீது அல்லாஹ் ஸகாத் தைக் கடமையாக்கியுள்ளான்; அது அவர் க(ளில் செல்வர்க)ளின் செல்வங்களிலி ருந்து வாங்கப்பட்டு அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர்களுக்குத் தெரிவிப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிட மிருந்து ஸகாத் பெறுவீராக! (ஸகாத் வசூலிக்கும்போது) மக்களின் செல்வங் களில் உயர்தரமானவற்றைத் தவிர்ப் பீராக!” என்று கூறி அனுப்பினார்கள்.

அத்தியாயம் : 24
1459. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ مِنَ التَّمْرِ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ مِنَ الْوَرِقِ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ مِنَ الإِبِلِ صَدَقَةٌ "".
பாடம் : 42 ஐந்து ஒட்டங்களுக்குக் குறை வானவற்றில் ஸகாத் இல்லை.
1459. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து ‘வஸ்க்’குகளைவிடக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தில் ஸகாத் இல்லை; ஐந்து ‘ஊக்கியா’க்களைவிடக் குறைவாக உள்ள வெள்ளியில் ஸகாத் இல்லை; ஐந்து ஒட்டகங்களைவிடக் குறைவானவற்றிலும் ஸகாத் இல்லை.”

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24
1460. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ـ أَوْ وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ، أَوْ كَمَا حَلَفَ ـ مَا مِنْ رَجُلٍ تَكُونُ لَهُ إِبِلٌ أَوْ بَقَرٌ أَوْ غَنَمٌ لاَ يُؤَدِّي حَقَّهَا إِلاَّ أُتِيَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ أَعْظَمَ مَا تَكُونُ وَأَسْمَنَهُ، تَطَؤُهُ بِأَخْفَافِهَا، وَتَنْطَحُهُ بِقُرُونِهَا، كُلَّمَا جَازَتْ أُخْرَاهَا رُدَّتْ عَلَيْهِ أُولاَهَا، حَتَّى يُقْضَى بَيْنَ النَّاسِ "". رَوَاهُ بُكَيْرٌ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 43 மாட்டின் ஸகாத் “நிச்சயமாக (மாட்டுக்கு ஸகாத் வழங்காத) ஒரு மனிதன், கத்திக்கொண்டி ருக்கும் ஒரு பசு மாட்டுடன் (மறுமை நாளில்) அல்லாஹ்விடம் வருவான் என்பதை நான் அறிவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். ‘கத்துதல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘குவார்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. மாட்டின் கத்தலைப் போன்றே, மனிதர் களின் கத்தலுக்கும் இச்சொல் பயன் படுத்தப்படும்.
1460. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்க(ள் கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது அவர்க)ளி டம் நான் போய்ச்சேர்ந்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எனது உயிர் எவன் கையி லுள்ளதோ’ அல்லது ‘எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ’ அவன் மீதாணையாக -அல்லது அவர்கள் சத்தியம் செய்தபடி- ஒருவருக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றுக்கான (ஸகாத் எனும்) கடமையை அவர் நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரியவையாகவும் கொழுத்தவையாகவும் கொண்டுவரப்படாமல் இருக்காது. அவை அவரை (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும்.

அவற்றில் கடைசிப் பிராணி அவரைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவர்மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்வரை நீடிக்கும்.’

இதே ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 24
1461. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ الأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالاً مِنْ نَخْلٍ، وَكَانَ أَحَبَّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءَ وَكَانَتْ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ قَالَ أَنَسٌ فَلَمَّا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ. إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَىَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ. قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بَخْ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ "". فَقَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ. فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ. تَابَعَهُ رَوْحٌ. وَقَالَ يَحْيَى بْنُ يَحْيَى وَإِسْمَاعِيلُ عَنْ مَالِكٍ رَايِحٌ.
பாடம் : 44 நெருங்கிய உறவினருக்கு ஸகாத் வழங்கல் “(நெருங்கிய உறவினருக்குத் தர்மம் செய்பவருக்கு) உறவைப் பேணல், தர்மம் செய்தல் ஆகிய இரு (நன்மைகளுக்கான) நற்பலன் கிடைக்கும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1461. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா அன்சாரிகளிலேயே அபூ தல்ஹா (ரலி) அவர்கள் அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவருடைய செல்வங்களில் ‘பைருஹா’ என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ பள்ளிவாசலு)க்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரைக் குடிப்பது வழக்கம்.

இந்நிலையில், “நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ், ‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்’ என்று கூறுகின்றான்.

என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது, ‘பைருஹா’ எனும் தோட்டமேயாகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மம் ஆகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன். எனவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நல்லது! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம் தானே! நீர் கூறியதை நான் செவியுற்றேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு (தானமாக) வழங்கு வதையே நான் (உசிதமாகக்) கருதுகின் றேன்” எனக் கூறினார்கள்.

அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்” எனக் கூறிவிட்டு, அத்தோட் டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையின் சகோதரர் பிள்ளை களுக்கும் பங்கிட்டுவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், (இலாபம் தரும் -‘ராபிஹ்’ என்பதற்குப் பதிலாக) ‘நன்மை கிடைத்துவிட்ட’ (ராயிஹ்) என இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 24
1462. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدٌ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي أَضْحًى أَوْ فِطْرٍ إِلَى الْمُصَلَّى ثُمَّ انْصَرَفَ فَوَعَظَ النَّاسَ وَأَمَرَهُمْ بِالصَّدَقَةِ فَقَالَ "" أَيُّهَا النَّاسُ تَصَدَّقُوا "". فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ "" يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ، فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ "". فَقُلْنَ وَبِمَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ يَا مَعْشَرَ النِّسَاءِ "". ثُمَّ انْصَرَفَ فَلَمَّا صَارَ إِلَى مَنْزِلِهِ جَاءَتْ زَيْنَبُ امْرَأَةُ ابْنِ مَسْعُودٍ تَسْتَأْذِنُ عَلَيْهِ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ زَيْنَبُ فَقَالَ "" أَىُّ الزَّيَانِبِ "". فَقِيلَ امْرَأَةُ ابْنِ مَسْعُودٍ. قَالَ "" نَعَمِ ائْذَنُوا لَهَا "". فَأُذِنَ لَهَا قَالَتْ يَا نَبِيَّ اللَّهِ إِنَّكَ أَمَرْتَ الْيَوْمَ بِالصَّدَقَةِ، وَكَانَ عِنْدِي حُلِيٌّ لِي، فَأَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهِ، فَزَعَمَ ابْنُ مَسْعُودٍ أَنَّهُ وَوَلَدَهُ أَحَقُّ مَنْ تَصَدَّقْتُ بِهِ عَلَيْهِمْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" صَدَقَ ابْنُ مَسْعُودٍ، زَوْجُكِ وَوَلَدُكِ أَحَقُّ مَنْ تَصَدَّقْتِ بِهِ عَلَيْهِمْ "".
பாடம் : 44 நெருங்கிய உறவினருக்கு ஸகாத் வழங்கல் “(நெருங்கிய உறவினருக்குத் தர்மம் செய்பவருக்கு) உறவைப் பேணல், தர்மம் செய்தல் ஆகிய இரு (நன்மைகளுக்கான) நற்பலன் கிடைக்கும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1462. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளிலோ நோன்புப் பெருநாளிலோ தொழும் திடலுக்கு (முஸல்லா) சென்று தொழுதுவிட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். “மக்களே! தர்மம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார்கள்.

பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்” என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?” எனப் பெண்கள் கேட்டதும், “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; பெண் குலமே! உறுதிவாய்ந்த அறிவுடைய ஆண்மகனின் அறிவைக்கூட மழுங்கடிப்பவர்களாக, அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ள உங்களைப் போன்று வேறு யாரையும் நான் பார்த்ததில்லை” என்றார்கள்.

பிறகு திரும்பி தமது இல்லத்திற்கு வந்தார்கள். அங்கு இப்னு மஸ்ஊதின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினார். “அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார்” என்று கூறப்பட்டது. “எந்த ஸைனப்?” என நபி (ஸல்) அவர்கள் வினவ, “இப்னு மஸ்ஊதின் மனைவி ஸைனப்” என்று கூறப்பட்டது. “அவருக்கு அனுமதி வழங்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப் பட்டது.

அவர் (வந்ததும்), “அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் (எனக்குச் சொந்தமான) ஒரு நகை இருக்கிறது. அதைத் தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்ஊத், தாமும் தம் குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்ய?)” என்று கேட்டார்.

“இப்னு மஸ்ஊத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும் உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 24
1463. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيْسَ عَلَى الْمُسْلِمِ فِي فَرَسِهِ وَغُلاَمِهِ صَدَقَةٌ "".
பாடம் : 45 குதிரைக்காக முஸ்லிம் ஸகாத் கொடுக்க வேண்டியது இல்லை.16
1463. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் தம் குதிரை களுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24
1464. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ خُثَيْمِ بْنِ عِرَاكٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا خُثَيْمُ بْنُ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ عَلَى الْمُسْلِمِ صَدَقَةٌ فِي عَبْدِهِ وَلاَ فِي فَرَسِهِ "".
பாடம் : 46 தன் அடிமைக்காக முஸ்லிம் ஸகாத் கொடுக்க வேண்டிய தில்லை.
1464. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம், தம் அடிமை களுக்காகவும் குதிரைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 24
1465. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ هِلاَلِ بْنِ أَبِي مَيْمُونَةَ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ يَسَارٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَلَسَ ذَاتَ يَوْمٍ عَلَى الْمِنْبَرِ وَجَلَسْنَا حَوْلَهُ فَقَالَ "" إِنِّي مِمَّا أَخَافُ عَلَيْكُمْ مِنْ بَعْدِي مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَزِينَتِهَا "". فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَوَيَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ فَسَكَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقِيلَ لَهُ مَا شَأْنُكَ تُكَلِّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَلاَ يُكَلِّمُكَ فَرَأَيْنَا أَنَّهُ يُنْزَلُ عَلَيْهِ. قَالَ ـ فَمَسَحَ عَنْهُ الرُّحَضَاءَ فَقَالَ "" أَيْنَ السَّائِلُ "" وَكَأَنَّهُ حَمِدَهُ. فَقَالَ "" إِنَّهُ لاَ يَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ، وَإِنَّ مِمَّا يُنْبِتُ الرَّبِيعُ يَقْتُلُ أَوْ يُلِمُّ إِلاَّ آكِلَةَ الْخَضْرَاءِ، أَكَلَتْ حَتَّى إِذَا امْتَدَّتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلَتْ عَيْنَ الشَّمْسِ، فَثَلَطَتْ وَبَالَتْ وَرَتَعَتْ، وَإِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَنِعْمَ صَاحِبُ الْمُسْلِمِ مَا أَعْطَى مِنْهُ الْمِسْكِينَ وَالْيَتِيمَ وَابْنَ السَّبِيلِ ـ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ـ وَإِنَّهُ مَنْ يَأْخُذُهُ بِغَيْرِ حَقِّهِ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَيَكُونُ شَهِيدًا عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 47 அநாதைகளுக்கு ஸகாத் வழங்கல்
1465. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந் தோம். அப்போது அவர்கள், “எனக்குப் பின் உங்களுக்கிடையே உலக வளங் களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்துவிடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள்.

ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது அந்த மனிதரிடம், “உமது நிலைமை என்ன? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால், நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாம லிருக்கிறார்களே!” எனக் கேட்கப்பட்டது.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்து விட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவதைப் போன்று கேட்டார்கள்.

பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காதுதான்; வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை, வயிறு புடைக்கத் தின்னவைத்துக்) கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன; பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை; ஏனெனில்) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக்கொண்டு அசைபோடுகின்றது) சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது.

(இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக்கொண்டிருக்கும்வரை, அது அவருக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக்கொள்கி றாரோ - அவர் உண்டும் வயிறு நிரம்பாத வனைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 24
1466. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ زَيْنَبَ، امْرَأَةِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ فَذَكَرْتُهُ لإِبْرَاهِيمَ فَحَدَّثَنِي إِبْرَاهِيمُ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ بِمِثْلِهِ سَوَاءً، قَالَتْ كُنْتُ فِي الْمَسْجِدِ فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ "". وَكَانَتْ زَيْنَبُ تُنْفِقُ عَلَى عَبْدِ اللَّهِ وَأَيْتَامٍ فِي حَجْرِهَا، قَالَ فَقَالَتْ لِعَبْدِ اللَّهِ سَلْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَيْكَ وَعَلَى أَيْتَامِي فِي حَجْرِي مِنَ الصَّدَقَةِ فَقَالَ سَلِي أَنْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم. فَوَجَدْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ عَلَى الْبَابِ، حَاجَتُهَا مِثْلُ حَاجَتِي، فَمَرَّ عَلَيْنَا بِلاَلٌ فَقُلْنَا سَلِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَى زَوْجِي وَأَيْتَامٍ لِي فِي حَجْرِي وَقُلْنَا لاَ تُخْبِرْ بِنَا. فَدَخَلَ فَسَأَلَهُ فَقَالَ "" مَنْ هُمَا "". قَالَ زَيْنَبُ قَالَ "" أَىُّ الزَّيَانِبِ "". قَالَ امْرَأَةُ عَبْدِ اللَّهِ. قَالَ "" نَعَمْ لَهَا أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ "".
பாடம் : 48 (ஒரு பெண்) கணவனுக்கும் தன் வளர்ப்பில் உள்ள அநாதை களுக்கும் ஸகாத் வழங்குவது இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1466. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி (ஸல்) அவாகளைப் பார்த்தேன். அவர்கள், “பெண்களே! உங்களின் ஆபரணங்களிலி ருந்தேனும் தர்மம் செய்யுங்கள்” எனக் கூறினார்கள்.

நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் வளர்ப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே, என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது தர்மமாகுமா என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீயே கேள்” எனக் கூறிவிட்டார்.

எனவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்சாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) அவர்கள் வந்தார். அவரிடம் நாங்கள், என் கணவருக்கும் எனது வளர்ப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம்.

உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரும் யார்?” எனக் கேட்டதற்கு அவர் ‘ஸைனப்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் “எந்த ஸைனப்?” எனக் கேட்டதும் பிலால் (ரலி) அவர்கள், ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆம்! அவருக்கு இரு நன்மை கள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது” எனக் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 24
1467. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، {عَنْ أُمِّ سَلَمَةَ،} قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلِيَ أَجْرٌ أَنْ أُنْفِقَ عَلَى بَنِي أَبِي سَلَمَةَ إِنَّمَا هُمْ بَنِيَّ. فَقَالَ "" أَنْفِقِي عَلَيْهِمْ، فَلَكِ أَجْرُ مَا أَنْفَقْتِ عَلَيْهِمْ "".
பாடம் : 48 (ஒரு பெண்) கணவனுக்கும் தன் வளர்ப்பில் உள்ள அநாதை களுக்கும் ஸகாத் வழங்குவது இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1467. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (என் முதல் கணவரான) அபூசலமாவின் குழந்தைகளுக்குச் செலவழிப்பதற்காக எனக்கு நன்மையுண்டா? அவர்களும் என் குழந்தைகளே!” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ அவர்களுக்காகச் செலவு செய்! அவர்களுக்காக நீ செலவு செய்ததற்கான நன்மை உனக்கு உண்டு” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 24
1468. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالصَّدَقَةِ فَقِيلَ مَنَعَ ابْنُ جَمِيلٍ وَخَالِدُ بْنُ الْوَلِيدِ وَعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا يَنْقِمُ ابْنُ جَمِيلٍ إِلاَّ أَنَّهُ كَانَ فَقِيرًا فَأَغْنَاهُ اللَّهُ وَرَسُولُهُ، وَأَمَّا خَالِدٌ فَإِنَّكُمْ تَظْلِمُونَ خَالِدًا، قَدِ احْتَبَسَ أَدْرَاعَهُ وَأَعْتُدَهُ فِي سَبِيلِ اللَّهِ، وَأَمَّا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ فَعَمُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَهْىَ عَلَيْهِ صَدَقَةٌ وَمِثْلُهَا مَعَهَا "". تَابَعَهُ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ أَبِيهِ. وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَنْ أَبِي الزِّنَادِ هِيَ عَلَيْهِ وَمِثْلُهَا مَعَهَا. وَقَالَ ابْنُ جُرَيْجٍ حُدِّثْتُ عَنِ الأَعْرَجِ بِمِثْلِهِ.
பாடம் : 49 “அடிமைகளு(டைய விடுதலை)க்கும் கடனாளிகளுக்கும் இறைவழியில் (போரிட்டுக்கொண்டு) இருப்போருக்கும் (கட்டாய தர்மங்கள்) உரியவையாகும்” (9:60) என்ற இறைவசனம் அடிமைகளை விடுதலை செய்வதற் கும் (வசதியற்றோர்) ஹஜ் செய்வதற்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது ஸகாத் பொருளிலிருந்து செலவழித்தாகக் கூறப்படுகிறது. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், “(அடிமையாயிருக்கும்) தந்தையை விடுதலை செய்ய தனது ஸகாத் பொருளை மகன் வழங்கலாம். அறப்போர் வீரர்களுக் கும் ஹஜ் செய்யாதவருக்கு (ஹஜ் செய்வ தற்காகவு)ம் வழங்கலாம்” என்று கூறிவிட்டு, ‘(கட்டாய) தர்மங்கள் வறியவர்களுக்கும்...’ (9:60) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி னார்கள். மேலும், “இவர்களில் யாருக்கு நீ கொடுத்தாலும் அது செல்லும்” என்றும் கூறினார்கள். காலித் வின் அல்வலீத் அவர்கள் தம் போர்க் கவசங்களை அல்லாஹ்வின் பாதையில் (அறக்கொடையாக) வழங்க முடிவு செய்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நாங்கள் ஹஜ்ஜுக்குச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள் எங்களை தர்ம ஒட்டகங்களின் மீது பயணம் செய்ய வைத்தார்கள்” என அபூலாஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1468. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிக்குமாறு (உமர் (ரலி) அவர்களுக்குக்) கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் பின் அல்வலீத், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் (ஸகாத் தர) மறுத்து விட்டதாகக் கூறப்பட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து, அல்லாஹ்வும் அவன் தூதரும் அவரைச் செல்வராக்கிய பிறகே அவர் (ஸகாத் தர) மறுத்துள்ளார். காலிதைப் பொறுத்த வரை, நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநீதி இழைக்கின்றீர்கள். அவரோ தம் கவசங்களையும் போர்க் கருவிகளையும் அல்லாஹ்வின் பாதையில் (அறக்கொடையாக) வழங்க முடிவு செய்திருந்தார். அல்லாஹ்வின் தூதரு டைய பெரிய தந்தையான அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் அவர்கள் செலுத்த வேண்டிய தர்மம், அவர் (சார்பாக நாம்) செலுத்த வேண்டியதாகும்; அதைப் போன்ற இன்னொரு மடங்கும்தான்” எனக் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அது அவர்மீது உள்ளது; அதைப் போன்ற இன்னொரு மடங்கும்” என இடம்பெற்றுள்ளது. மற்றோர் அறிவிப்பில், ‘அதைப் போன்றதுடன்’ என இடம்பெற்றுள்ளது.17

அத்தியாயம் : 24
1469. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ نَاسًا مِنَ الأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْطَاهُمْ، ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ، حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ فَقَالَ "" مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ، وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ، وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ "".
பாடம் : 50 யாசிக்காமல் (தன்மானத்தோடு) இருத்தல்
1469. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உணவும் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள்; நபி (ஸல்) அவர்கள் அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது தீர்ந்துபோயிற்று.

அப்போது “என்னிடம் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் ஒருபோதும் சேமித்துவைக்கப் போவதில்லை. ஆயினும், யார் சுய மரியாதையோடு நடத்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச்செய்வான்; யார் பிறரிடம் தேவை யற்றவராக இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவுடையவராக ஆக்கு கிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறாரோ அவரை அல்லாஹ் பொறுமையாளராக ஆக்குவான்; மேலும், பொறுமையைவிடச் சிறந்த, விசாலமான தோர் அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படவில்லை” என்றார்கள்.


அத்தியாயம் : 24
1470. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ فَيَحْتَطِبَ عَلَى ظَهْرِهِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْتِيَ رَجُلاً، فَيَسْأَلَهُ، أَعْطَاهُ أَوْ مَنَعَهُ "".
பாடம் : 50 யாசிக்காமல் (தன்மானத்தோடு) இருத்தல்
1470. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீதாணையாக! உங்களில் ஒருவர் தமது கயிற்றை எடுத்துக்கொண்டு (போய்) விறகு வெட்டி, அதைத் தமது முதுகில் சும(ந்து விற்றுப் பிழை)ப்பதானது, ஒருவரிடம் சென்று யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவர் யாசிப்பவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 24
1471. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ فَيَأْتِيَ بِحُزْمَةِ الْحَطَبِ عَلَى ظَهْرِهِ فَيَبِيعَهَا فَيَكُفَّ اللَّهُ بِهَا وَجْهَهُ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ أَعْطَوْهُ أَوْ مَنَعُوهُ "".
பாடம் : 50 யாசிக்காமல் (தன்மானத்தோடு) இருத்தல்
1471. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்(றுப் பிழைப்)பதானது, மக்களிடம் யாசகம் கேட்பதைவிடச் சிறந்ததாகும். இதன் மூலம், அவருக்கு இழிவு ஏற்படாமல் அல்லாஹ் தடுத்து விடுவான். மக்கள் அவருக்குக் கொடுக்க வும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.

இதை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 24
1472. وَحَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ "" يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى "". قَالَ حَكِيمٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا، فَكَانَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ يَدْعُو حَكِيمًا إِلَى الْعَطَاءِ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ، ثُمَّ إِنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا. فَقَالَ عُمَرُ إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ عَلَى حَكِيمٍ، أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الْفَىْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ. فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى تُوُفِّيَ.
பாடம் : 50 யாசிக்காமல் (தன்மானத்தோடு) இருத்தல்
1472. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன்; வழங்கி னார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கி விட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையான தும் ஆகும். யார் இதைப் பேராசையின்றி எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் (பரகத்) வழங்கப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படாது. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவர் ஆவார். மேல் கை, கீழ் கையைவிடச் சிறந்தது” என்று கூறி னார்கள்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப்பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்டு (அவரது செல்வத்தை)க் குறைக்கமாட்டேன்” எனக் கூறினேன்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) நன்கொடை பெற்றுக்கொள்ளுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஹகீமுக்குக் கொடுப்பதற்காக அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்துவிட்டார். அப்போது உமர் (ரலி) அவர்கள், “முஸ்லிம் சமுதாயமே! இந்தப் பொது நிதியிலிருந்து (ஃபைஉ) தமது உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கி றேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!” எனக் கூறினார்கள்.

ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப்பின் வேறு யாரிடமும் தாம் இறக்கும்வரை எதையும் கேட்கவே யில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 24
1473. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ عُمَرَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعْطِينِي الْعَطَاءَ فَأَقُولُ أَعْطِهِ مَنْ هُوَ أَفْقَرُ إِلَيْهِ مِنِّي فَقَالَ "" خُذْهُ، إِذَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ شَىْءٌ، وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ، فَخُذْهُ، وَمَا لاَ فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ "".
பாடம் : 51 யாசிக்காமலும் பேராசை கொள் ளாமலும் ஒன்றை இறைவன் (பிறர் மூலம்) கொடுத்தால்...? அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களின் செல்வத்தில் யாசிப் போர்க்கும் வசதியற்றோருக்கும் பங்கு உண்டு. (51:19)
1473. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான், “இதை என்னைவிட அதிகத் தேவையுடையவருக்குக் கொடுங்களேன்” என்பேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதை வாங்கிக்கொள்ளுங்கள்; நீங்கள் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு உங்களுக்கு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏதும் கிடைக்கவில்லை என்றால், நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 24
1474. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، قَالَ سَمِعْتُ حَمْزَةَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتَّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ ". وَقَالَ إِنَّ الشَّمْسَ تَدْنُو يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يَبْلُغَ الْعَرَقُ نِصْفَ الأُذُنِ، فَبَيْنَا هُمْ كَذَلِكَ اسْتَغَاثُوا بِآدَمَ، ثُمَّ بِمُوسَى، ثُمَّ بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم ". وَزَادَ عَبْدُ اللَّهِ حَدَّثَنِي اللَّيْثُ حَدَّثَنِي ابْنُ أَبِي جَعْفَرٍ " فَيَشْفَعُ لِيُقْضَى بَيْنَ الْخَلْقِ، فَيَمْشِي حَتَّى يَأْخُذَ بِحَلْقَةِ الْبَابِ، فَيَوْمَئِذٍ يَبْعَثُهُ اللَّهُ مَقَامًا مَحْمُودًا، يَحْمَدُهُ أَهْلُ الْجَمْعِ كُلُّهُمْ ". وَقَالَ مُعَلًّى حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ النُّعْمَانِ بْنِ رَاشِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ، أَخِي الزُّهْرِيِّ عَنْ حَمْزَةَ، سَمِعَ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْمَسْأَلَةِ.
பாடம் : 52 அதிகம் பொருள் சேர்ப்ப தற்காக மக்களிடம் யாசிப்பது
1474. 1475 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களிடம் யாசிப்பதையே வழக்க மாகக் கொண்டுள்ள மனிதன், தனது முகத்தில் சதைத் துண்டு ஏதும் இல்லாத வனாகவே மறுமை நாளன்று வருவான்.

மேலும் கூறினார்கள்: வியர்வை வழிந்து மனிதனின் பாதிக் காதை அடை யும் அளவுக்கு மறுமை நாளன்று சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும். இந்நிலையில் மக்கள் ஆதம் (அலை) அவர்களிடமும் பிறகு மூசா (அலை) அவர்களிடமும் பிறகு முஹம்மத் (ஸல்) அவர்களிடமும் வந்து உதவி தேடு வார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவ்வாறு படைப்பினங்களுக்கிடையே தீர்ப்பு கூறப்பட்டு முடிந்ததும், நடந்து சென்று (சொர்க்க)வாசலின் கதவைப் பிடிப்பார்கள். அந்நாளில் அல்லாஹ், நபி (ஸல்) அவர்களைப் புகழுக்குரிய இடத் திற்கு (மகாமு மஹ்மூத்) அனுப்புவான். அப்போது அங்கு குழுமியிருக்கும் அனைவரும் நபி (ஸல்) அவர்களைப் பாராட்டுவார்கள்” என்று கூடுதலாகக் காணப்படுகின்றது.

அத்தியாயம் : 24