1435. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ أَيُّكُمْ يَحْفَظُ حَدِيثَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْفِتْنَةِ قَالَ قُلْتُ أَنَا أَحْفَظُهُ كَمَا قَالَ. قَالَ إِنَّكَ عَلَيْهِ لَجَرِيءٌ فَكَيْفَ قَالَ قُلْتُ فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَوَلَدِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصَّدَقَةُ وَالْمَعْرُوفُ. قَالَ سُلَيْمَانُ قَدْ كَانَ يَقُولُ "" الصَّلاَةُ وَالصَّدَقَةُ، وَالأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْىُ عَنِ الْمُنْكَرِ "". قَالَ لَيْسَ هَذِهِ أُرِيدُ، وَلَكِنِّي أُرِيدُ الَّتِي تَمُوجُ كَمَوْجِ الْبَحْرِ. قَالَ قُلْتُ لَيْسَ عَلَيْكَ بِهَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بَأْسٌ، بَيْنَكَ وَبَيْنَهَا باب مُغْلَقٌ. قَالَ فَيُكْسَرُ الْبَابُ أَوْ يُفْتَحُ. قَالَ قُلْتُ لاَ. بَلْ يُكْسَرُ. قَالَ فَإِنَّهُ إِذَا كُسِرَ لَمْ يُغْلَقْ أَبَدًا. قَالَ قُلْتُ أَجَلْ. فَهِبْنَا أَنْ نَسْأَلَهُ مَنِ الْبَابُ فَقُلْنَا لِمَسْرُوقٍ سَلْهُ. قَالَ فَسَأَلَهُ. فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ. قَالَ قُلْنَا فَعَلِمَ عُمَرُ مَنْ تَعْنِي قَالَ نَعَمْ، كَمَا أَنَّ دُونَ غَدٍ لَيْلَةً، وَذَلِكَ أَنِّي حَدَّثْتُهُ حَدِيثًا لَيْسَ بِالأَغَالِيطِ.
பாடம் : 23 தர்மம் பாவங்களுக்குப் பரிகார மாகும்.
1435. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், “உங்களில் யார் குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வைத்தி ருக்கிறார்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அப்படியே நினைவில் வைத்திருக்கிறேன்” என்றேன். உமர் (ரலி) அவர்கள், “நீர் அதற்குத் துணிந்தவர்தான். அவர்கள் எப்படிச் சொன்னார்கள்?” என்று கேட்டார்கள்.5

“ஒரு மனிதன் தன் குடும்பத்தார் மற்றும் குழந்தைகள் விஷயத்தில் (அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைப்பதன் மூலமும்) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னாவில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, தர்மம், நல்லறம் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என) நான் பதில் கூறினேன்.

உமர் (ரலி) அவர்கள், “நான் இதைப் பற்றிக் கேட்கவில்லை; கடல் அலையைப் போல அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (அல்லாஹ்வின் தூதரால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட) குழப்பத்தை (ஃபித்னா) பற்றியே கேட்கிறேன்” என்றார்கள்.

நான் “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்க ளுக்கும் அவற்றிற்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது” எனக் கூறியதும், “அக்கதவு உடைக்கப்படுமா? திறக்கப்படுமா?”என உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் “உடைக்கப்படும்” என்றேன். “அது உடைக்கப்பட்டால் ஒருபோதும் மூடப்படவேமாட்டாதுதானே?”என உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன்.6

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள், “நல்லறம் என்பதற்குப் பதிலாக அபூவாயில் (ரஹ்) அவர்கள் நல்லதை ஏவி, தீயதைத் தடுத்தல் என்று கூறுவார்கள்” என்றார்கள்.

அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“அந்தக் கதவு எது?” என ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே, மஸ்ரூக் (ரஹ்) அவர்களிடம் கேட்கச் சொன்னோம். அவர்கள் கேட்டதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், “(அந்தக் கதவு) உமர் (ரலி) அவர்கள்)தான்”என்றார்கள்.

மேலும், (அவரிடமே) “நீங்கள் குறிப்பிடுவதை உமர் (ரலி) அவர்கள் அறிவார்களா?” எனக் கேட்டோம். அதற்கு அவர்கள் “ஆம், பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று அதை உமர் (ரலி) அவர்கள் அறிவார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் உமருக்கு அறிவித்தேன்” என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 24
1436. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ أَشْيَاءَ كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ مِنْ صَدَقَةٍ أَوْ عَتَاقَةٍ وَصِلَةِ رَحِمٍ فَهَلْ فِيهَا مِنْ أَجْرٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ مِنْ خَيْرٍ "".
பாடம் : 24 ஒருவர் இணைவைப்பவராக இருந்தபோது தர்மம் செய்து விட்டுப் பின்பு இஸ்லாத்தில் இணைதல்
1436. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில், தர்மம் செய்தல், அடிமைகளை விடுதலை செய்தல், உறவைப் பேணல் போன்ற நல்லறங்களைச் செய்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்) களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்” என்று பதிலளித்தார்கள்.7

அத்தியாயம் : 24
1437. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا تَصَدَّقَتِ الْمَرْأَةُ مِنْ طَعَامِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا، وَلِزَوْجِهَا بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ "".
பாடம் : 25 உரிமையாளரின் கட்டளையின் பேரில், அவரது பொருளைச் சீரழிக்காமல் தர்மம் செய்யும் பணியாளருக்கும் நன்மை கிடைக்கும்.
1437. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால், அதற்கான பலன் அவளுக்கு உண்டு. அதைச் சம்பாதித்தவன் என்ற முறையில் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும். அது போன்றே, காசாளருக்கும் (நன்மை) கிடைக்கும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 24
1438. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْخَازِنُ الْمُسْلِمُ الأَمِينُ الَّذِي يُنْفِذُ ـ وَرُبَّمَا قَالَ يُعْطِي ـ مَا أُمِرَ بِهِ كَامِلاً مُوَفَّرًا طَيِّبٌ بِهِ نَفْسُهُ، فَيَدْفَعُهُ إِلَى الَّذِي أُمِرَ لَهُ بِهِ، أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ "".
பாடம் : 25 உரிமையாளரின் கட்டளையின் பேரில், அவரது பொருளைச் சீரழிக்காமல் தர்மம் செய்யும் பணியாளருக்கும் நன்மை கிடைக்கும்.
1438. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தைச் செயல்படுத்தக்கூடிய -அல்லது அதற்காக வழங்கக்கூடிய- நேர்மையான முஸ்லிம் காசாளர், அதை முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் வழங்கும்போது, தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவர் ஆவார்.8

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24
1439. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مَنْصُورٌ، وَالأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم تَعْنِي إِذَا تَصَدَّقَتِ الْمَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا أَطْعَمَتِ الْمَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ، لَهَا أَجْرُهَا، وَلَهُ مِثْلُهُ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لَهُ بِمَا اكْتَسَبَ، وَلَهَا بِمَا أَنْفَقَتْ "".
பாடம் : 26 கணவனின் இல்லத்திலுள்ள ஒன்றை வீணாக்காமல் ஒரு பெண் தர்மம் செய்தாலோ உணவளித்தாலோ அவளுக்கும் நன்மை கிடைக்கும்.
1439. 1440 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவனின் வீட்டி லுள்ள ஒன்றை தர்மம் செய்தால்...

மற்றோர் அறிவிப்பில் இடம்பெற் றுள்ளதாவது:

ஒரு பெண் தன் கணவனின் வீட்டி லுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அதற்கான நற்பலன் அவளுக் குக் கிடைக்கும். அதைப் போன்ற நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அது போன்றே காசாளருக்கும் கிடைக்கும். அவள் செலவழித்ததற்காகவும் அவன் சம்பாதித்ததற்காகவும் அந்தத் தர்மத்தின் நன்மையைப் பெறுகின்றனர்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் (மொத்தம்) மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 24
1441. حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ فَلَهَا أَجْرُهَا، وَلِلزَّوْجِ بِمَا اكْتَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ "".
பாடம் : 26 கணவனின் இல்லத்திலுள்ள ஒன்றை வீணாக்காமல் ஒரு பெண் தர்மம் செய்தாலோ உணவளித்தாலோ அவளுக்கும் நன்மை கிடைக்கும்.
1441. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு பெண் தன் (கணவனின்) வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால், அதன் நன்மை அவளுக்குக் கிடைக்கும். (அதைச்) சம்பாதித்த காரணத் தால் (தர்மத்தின் நன்மை) அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோலவே காசாளருக்கும் கிடைக்கும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24
1442. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي مُزَرِّدٍ، عَنْ أَبِي الْحُبَابِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلاَّ مَلَكَانِ يَنْزِلاَنِ فَيَقُولُ أَحَدُهُمَا اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا "".
பாடம் : 27 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான் : யார் (தானதர்மம்) கொடுத்து, (தம் இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மை என ஏற்கிறாரோ அவருக்கு நாம் இலகுவான (நன்மையின்) பாதையை எளிதாக்குவோம். ஆனால், யார் கஞ்சத் தனம் செய்து, தேவையற்றவராக தம்மைக் கருதிக்கொண்டு, நல்லவற்றை நம்ப மறுக்கிறாரோ அவருக்குச் சிரமத்திற்குரிய (தீமையின்) பாதையைத்தான் எளிதாக்கு வோம். (92:5-10) “இறைவா! பொருளை (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலன் வழங்குவாயாக!”
1442. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலைப்பொழுதை அடையும்போது, இரு வானவர்கள் (வானிலிருந்து) இறங்குகின்ற னர். அவ்விருவரில் ஒருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலன் வழங்குவாயாக!” என்று கூறுவார். மற்றொருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைத் தருவாயாக!” என்று கூறுவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24
1443. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَثَلُ الْبَخِيلِ وَالْمُتَصَدِّقِ كَمَثَلِ رَجُلَيْنِ، عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ "". وَحَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَثَلُ الْبَخِيلِ وَالْمُنْفِقِ كَمَثَلِ رَجُلَيْنِ، عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ، مِنْ ثُدِيِّهِمَا إِلَى تَرَاقِيهِمَا، فَأَمَّا الْمُنْفِقُ فَلاَ يُنْفِقُ إِلاَّ سَبَغَتْ ـ أَوْ وَفَرَتْ ـ عَلَى جِلْدِهِ حَتَّى تُخْفِيَ بَنَانَهُ وَتَعْفُوَ أَثَرَهُ، وَأَمَّا الْبَخِيلُ فَلاَ يُرِيدُ أَنْ يُنْفِقَ شَيْئًا إِلاَّ لَزِقَتْ كُلُّ حَلْقَةٍ مَكَانَهَا، فَهُوَ يُوَسِّعُهَا وَلاَ تَتَّسِعُ "". تَابَعَهُ الْحَسَنُ بْنُ مُسْلِمٍ عَنْ طَاوُسٍ فِي الْجُبَّتَيْنِ. وَقَالَ حَنْظَلَةُ عَنْ طَاوُسٍ، "" جُنَّتَانِ "". وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرٌ، عَنِ ابْنِ هُرْمُزٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" جُنَّتَانِ "". وَقَالَ حَنْظَلَةُ عَنْ طَاوُسٍ، "" جُنَّتَانِ "". وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرٌ، عَنِ ابْنِ هُرْمُزٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" جُنَّتَانِ "". وَقَالَ حَنْظَلَةُ عَنْ طَاوُسٍ، "" جُنَّتَانِ "". وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرٌ، عَنِ ابْنِ هُرْمُزٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" جُنَّتَانِ "".
பாடம் : 28 தர்மம் செய்பவருக்கும் கஞ்சனுக்கும் உதாரணம்
1443. 1444 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கஞ்சனுக்கும் தர்மம் செய்பவருக்கும் உதாரணமாவது, இரும்பாலான இரு நீளங்கிகளை மார்பிலிருந்து கழுத்தெழும்பு வரை அணிந்துள்ள இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரது நீளங்கி விரிந்து, விரல்நுனிகளை மறைத்து பாதச் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழிக்கும் அளவுக்கு நீளும்.

கஞ்சனோ, ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போதெல்லாம் அவனது நீளங்கி (அவனை அழுத்தி) அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுக்கி)ப் பிடிக்காமல் இருப்பதில்லை. அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (இரு நீளங்கிகள் என்பதற்குப் பதிலாக) ‘இரு கவசங்கள்’ என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 24
1445. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ "". فَقَالُوا يَا نَبِيَّ اللَّهِ فَمَنْ لَمْ يَجِدْ قَالَ "" يَعْمَلُ بِيَدِهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ "". قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ "" يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ "". قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ. قَالَ "" فَلْيَعْمَلْ بِالْمَعْرُوفِ، وَلْيُمْسِكْ عَنِ الشَّرِّ فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ "".
பாடம் : 29 தொழில், வியாபாரம் ஆகிய வற்றின் தர்மம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான் இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்த நல்ல பொருட்களி லிருந்தும் பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தியவற்றிலிருந்தும் (நல்வழி யில்) செலவிடுங்கள். அவற்றில் மட்டமான பொருளைச் செலவு செய்ய எண்ணாதீர் கள். (ஏனெனில், உங்களுக்கு யாரேனும் அதைக் கொடுத்தால் வெறுப்புடன்) கண்ணை மூடிக்கொண்டே தவிர அதை நீங்கள் ஏற்கமாட்டீர்கள். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:267) பாடம் : 30 தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை யாகும். தர்மம் செய்ய இயலா விடில் நல்லறம் எதையேனும் செய்ய வேண்டும்.
1445. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற் கான பொருள்) ஏதும் கிடைக்கா விட்டால்...?” எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்” என்றார்கள்.

மக்கள், “அதுவும் முடியவில்லை யாயின்” எனக் கேட்டதற்கு, “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். மக்கள் “அதுவும் இயலவில்லையாயின்” என்றதும், “நல்லறம் ஏதேனும் செய்யட்டும்! (குறைந்த பட்சம்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும்! இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 24
1446. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ بُعِثَ إِلَى نُسَيْبَةَ الأَنْصَارِيَّةِ بِشَاةٍ فَأَرْسَلَتْ إِلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ مِنْهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" عِنْدَكُمْ شَىْءٌ "". فَقُلْتُ لاَ إِلاَّ مَا أَرْسَلَتْ بِهِ نُسَيْبَةُ مِنْ تِلْكَ الشَّاةِ فَقَالَ "" هَاتِ فَقَدْ بَلَغَتْ مَحِلَّهَا "".
பாடம் : 31 கட்டாயத் தர்மத்திலும் (ஸகாத்) விருப்ப தர்மத்திலும் (ஸதகா) வழங்கவேண்டிய அளவும் ஓர் ஆட்டைத் தர்மமாக வழங்குவதும்
1446. ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(உம்மு அத்திய்யா) நுசைபா அல் அன்சாரியா (ரலி) அவர்களுக்கு ஓர் ஆடு (தர்மமாக) அனுப்பிவைக்கப்பட்டது. அவர் அதில் சிறிதளவு (இறைச்சியை) ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அனுப்பிவைத்தார். நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷாவிடம்), “உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் உள்ளதா?” எனக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “நுசைபா அனுப்பிவைத்த இந்த ஆட்டைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதைக் கொண்டுவா! அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது‘“ என்று கூறினார்கள்.9

அத்தியாயம் : 24
1447. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ مِنَ الإِبِلِ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ "". وَهَّابِ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، سَمِعَ أَبَاهُ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِهَذَا.
பாடம் : 32 வெள்ளிக்குரிய ஸகாத்
1447. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவான வற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளியில்) ஐந்து ‘ஊக்கியா’வுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (தானியங்களில்) ஐந்து ‘வஸ்க்’கைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 24
1448. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي ثُمَامَةُ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ كَتَبَ لَهُ الَّتِي أَمَرَ اللَّهُ رَسُولَهُ صلى الله عليه وسلم "" وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ مَخَاضٍ وَلَيْسَتْ عِنْدَهُ وَعِنْدَهُ بِنْتُ لَبُونٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ، وَيُعْطِيهِ الْمُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ، فَإِنْ لَمْ يَكُنْ عِنْدَهُ بِنْتُ مَخَاضٍ عَلَى وَجْهِهَا، وَعِنْدَهُ ابْنُ لَبُونٍ فَإِنَّهُ يُقْبَلُ مِنْهُ وَلَيْسَ مَعَهُ شَىْءٌ "".
பாடம் : 33 ஸகாத்தை (பணமாக அன்றி)ப் பொருட்களாகப் பெறல் தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முஆத் (ரலி) அவர்கள் யமன்வாசி களிடம், “நீங்கள் உங்கள் ஸகாத் பொருட் களான தீட்டாத கோதுமை, தீட்டிய கோதுமை ஆகியவற்றுக்குப் பகரமாகக் கோடுபோட்ட துணிகள், ஆடைகள் ஆகிய பொருள்களைத் தாருங்கள். இது உங்களுக்கு எளிதாகவும் மதீனாவில் வசிக்கும் நபித்தோழர்களுக்கு நன்மை பயப்பதாகவும் இருக்கும்” எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காலித் பின் வலீத் அவர்கள், தம் கவசங்களையும் போர்க் கருவிகளையும் அல்லாஹ்வின் பாதையில் தானம் செய்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் கட்டாயத் தர்ம (மான ஸகா)த்தைப் பிற தர்மங்களிலிருந்து வேறுபடுத்திக் கூறாமல், “(பெண்களே!) உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அப்போது பெண்கள் தங்கள் காதணிகளையும் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் தர்மமாக அளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘தங்கம், வெள்ளியைத்தான் தர்மமாகக் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
1448. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்ட (கால்நடைகளுக்கான ஸகாத்) விதிமுறைகள் குறித்து அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார்கள்.

அதில், “ஒரு வயது பூர்த்தியான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாக வழங்க வேண்டிய ஒருவரிடம் அது இல்லாமல் இரண்டு வயது பூர்த்தியான ஒட்டகம் இருக்கலாம். அப்போது அவரிடமிருந்து அதைப் பெற்றுக்கொண்டு, இருபது திர்ஹங்கள் அல்லது இரு ஆடுகளை அவருக்கு ஸகாத் வசூலகர் கொடுத்துவிட வேண்டும்.

அவ்வாறே அவரிடம் ஒரு வயது பூர்த்தியான பெண் ஒட்டகம் முறைப்படி இல்லாமல் இரண்டு வயது பூர்த்தியான ஆண் ஒட்டகம் இருந்தால், அது (ஸகாத் தாக) ஏற்கப்படும். ஸகாத் வசூலிப்பவர் அவருக்கு எதையும் கொடுக்க வேண்டிய தில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.


அத்தியாயம் : 24
1449. حَدَّثَنَا مُؤَمَّلٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ، فَرَأَى أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ، فَأَتَاهُنَّ وَمَعَهُ بِلاَلٌ نَاشِرَ ثَوْبِهِ فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ، فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي، وَأَشَارَ أَيُّوبُ إِلَى أُذُنِهِ وَإِلَى حَلْقِهِ.
பாடம் : 33 ஸகாத்தை (பணமாக அன்றி)ப் பொருட்களாகப் பெறல் தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முஆத் (ரலி) அவர்கள் யமன்வாசி களிடம், “நீங்கள் உங்கள் ஸகாத் பொருட் களான தீட்டாத கோதுமை, தீட்டிய கோதுமை ஆகியவற்றுக்குப் பகரமாகக் கோடுபோட்ட துணிகள், ஆடைகள் ஆகிய பொருள்களைத் தாருங்கள். இது உங்களுக்கு எளிதாகவும் மதீனாவில் வசிக்கும் நபித்தோழர்களுக்கு நன்மை பயப்பதாகவும் இருக்கும்” எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காலித் பின் வலீத் அவர்கள், தம் கவசங்களையும் போர்க் கருவிகளையும் அல்லாஹ்வின் பாதையில் தானம் செய்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் கட்டாயத் தர்ம (மான ஸகா)த்தைப் பிற தர்மங்களிலிருந்து வேறுபடுத்திக் கூறாமல், “(பெண்களே!) உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அப்போது பெண்கள் தங்கள் காதணிகளையும் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் தர்மமாக அளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘தங்கம், வெள்ளியைத்தான் தர்மமாகக் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
1449. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உறுதிகூறுகிறேன்: அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெரு நாளன்று) ‘குத்பா’ உரைக்கு முன்னால் தொழுதார்கள். பிறகு தமது உரை பெண்களின் செவிகளைச் சென்றடையவில்லை என அவர்கள் கருதியதால் பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்து விட்டு, தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.

அப்போது பிலால் (ரலி) அவர்கள், தமது ஆடையை ஏந்தியவராக நின்றிருந் தார்கள். அப்போது பெண்கள் அதில் (தம்முடைய அணிகலன்களைப்) போடலானார்கள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் பின் அபீதமீமா (ரஹ்) அவர்கள் இதை அறிவித்தபோது, தமது காதையும் கழுத்தையும் சுட்டிக் காட்டினார்கள்.11

அத்தியாயம் : 24
1450. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي ثُمَامَةُ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ كَتَبَ لَهُ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَلاَ يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ، وَلاَ يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ، خَشْيَةَ الصَّدَقَةِ "".
பாடம் : 34 (ஸகாத்தில்) பிரிந்ததைச் சேர்ப் பதோ சேர்ந்ததைப் பிரிப்பதோ கூடாது.12 இவ்வாறே நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.
1450. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் (ஆணையின் பேரில் அவனுடைய) தூதர் (ஸல்) அவர்கள் கடமையாக்கிய ஸகாத் குறித்து எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுதியபோது, “ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, பிரிந்த வற்றை ஒன்றுசேர்ப்பதும் ஒன்றுசேர்ந்த வற்றைப் பிரிப்பதும் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அத்தியாயம் : 24
1451. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي ثُمَامَةُ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ كَتَبَ لَهُ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَمَا كَانَ مِنْ خَلِيطَيْنِ فَإِنَّهُمَا يَتَرَاجَعَانِ بَيْنَهُمَا بِالسَّوِيَّةِ "".
பாடம் : 35 கூட்டாக உள்ள இருவரில் ஒருவர் மற்றவரின் ஸகாத்தையும் தாமே செலுத்திவிட்டால், அவருக்காகச் செலுத்திய பங்கைச் சரியாக(க் கணக்கிட்டு)ப் பெற்றுக்கொள்வார்.13 இரு பங்குதாரர்கள் அவரவர் பங்கு களைப் பிரித்தறிந்திருந்தால், அவ்விரு வரின் பொருட்கள் சேர்த்துக் கணக்கிடப் படமாட்டாது என தாவூஸ், அதாஉ (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர். ஆடுகள் வளர்க்கக்கூடிய பங்காளி களில் ஒருவருக்கு நாற்பது ஆடுகளும் மற்றொருவருக்கு நாற்பது ஆடுகளும் நிறைவாக இருந்தால்தான் ஸகாத் கடமையாகும் என சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1451. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையாக்கிய கட்டாயக் கொடை தொடர்பாக எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுதியபோது, “இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் (கூட்டாளி கள் இருவரில்) ஒருவர் (தம் பொருட்களின் ஸகாத்துடன்) மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தாமே செலுத்திவிடுவாராயின், அவர் தம் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அத்தியாயம் : 24
1452. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْهِجْرَةِ فَقَالَ "" وَيْحَكَ، إِنَّ شَأْنَهَا شَدِيدٌ، فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ تُؤَدِّي صَدَقَتَهَا "". قَالَ نَعَمْ. قَالَ "" فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا "".
பாடம் : 36 ஒட்டகத்தின் ஸகாத் இதுபற்றி அபூபக்ர் (ரலி), அபூதர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர்.
1452. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) தொடர்பாகக் கேட்டார். அதற்கு அவர்கள், “உமக்குக் கேடுதான்” (எனச் செல்லமாகக் கூறிவிட்டு) “நிச்சயமாக அதன் நிலை மிகவும் கடினமானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? அவற்றுக்கு ஸகாத் கொடுத்துவருகிறீரா?” எனக் கேட்டார்கள்.

அவர், ‘ஆம்’ என்றதும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் கடல் கடந்து (பல ஊர்களுக்கப்பால்) சென்றுகூட நன்மை செய்வீராக! நிச்சயமாக அல்லாஹ் உம்முடைய (நற்)செயல்(களின் நன்மை) களிலிருந்து எதையும் குறைத்துவிட மாட்டான் “ எனக் கூறினார்கள்.14

அத்தியாயம் : 24
1453. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي ثُمَامَةُ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ كَتَبَ لَهُ فَرِيضَةَ الصَّدَقَةِ الَّتِي أَمَرَ اللَّهُ رَسُولَهُ صلى الله عليه وسلم "" مَنْ بَلَغَتْ عِنْدَهُ مِنَ الإِبِلِ صَدَقَةُ الْجَذَعَةِ، وَلَيْسَتْ عِنْدَهُ جَذَعَةٌ وَعِنْدَهُ حِقَّةٌ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْحِقَّةُ وَيَجْعَلُ مَعَهَا شَاتَيْنِ إِنِ اسْتَيْسَرَتَا لَهُ أَوْ عِشْرِينَ دِرْهَمًا، وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الْحِقَّةِ وَلَيْسَتْ عِنْدَهُ الْحِقَّةُ وَعِنْدَهُ الْجَذَعَةُ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْجَذَعَةُ، وَيُعْطِيهِ الْمُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ، وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الْحِقَّةِ وَلَيْسَتْ عِنْدَهُ إِلاَّ بِنْتُ لَبُونٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ بِنْتُ لَبُونٍ، وَيُعْطِي شَاتَيْنِ أَوْ عِشْرِينَ دِرْهَمًا، وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ لَبُونٍ وَعِنْدَهُ حِقَّةٌ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْحِقَّةُ وَيُعْطِيهِ الْمُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ، وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ لَبُونٍ وَلَيْسَتْ عِنْدَهُ وَعِنْدَهُ بِنْتُ مَخَاضٍ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ بِنْتُ مَخَاضٍ وَيُعْطِي مَعَهَا عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ "".
பாடம் : 37 ஒரு வயது பூர்த்தியான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லையென்றால்...?
1453. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் தன் தூதருக்குக் கடமை யாக்கிய ஸகாத் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார்கள்.

அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந் தார்கள்: நான்கு வயது பூர்த்தியான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டிய ஒருவரிடம் அது இல்லாமல் மூன்று வயது பூர்த்தியான பெண் ஒட்டகம் இருந்தால், அது அவரிடமிருந்து ஏற்கப் படும். அத்துடன் அவருக்கு முடிந்தால் அவரிடமிருந்து இரு ஆடுகளை வசூலிக்க வேண்டும். அல்லது இருபது திர்ஹங்களை வசூலிக்க வேண்டும்.

மூன்று வயது பூர்த்தியான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் நான்கு வயது பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு இருபது திர்ஹங்களை, அல்லது இரண்டு ஆடுகளை வசூலிப்பவர் கொடுக்க வேண்டும்.

மூன்று வயதுடைய பெண் ஒட்ட கத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டிய வரிடம் அது இல்லாமல் இரண்டு வயது பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்: அத்துடன் இரண்டு ஆடுகளையோ இருபது திர்ஹங் களையோ (ஸகாத் அளிப்பவர்) கொடுக்க வேண்டும்.

இரண்டு வயதான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் மூன்று வயது பூர்த்தியான பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு, வசூலிப்பவர் இருபது திர்ஹங்களையோ இரண்டு ஆடுகளையோ கொடுக்க வேண்டும்.

இரண்டு வயது பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் ஒரு வயது நிறைந்த பெண் ஒட்டகம் இருந்தால், அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் இருபது திர்ஹங்களையோ இரண்டு ஆடு களையோ (ஸகாத் கொடுப்பவர்) வழங்க வேண்டும்.

அத்தியாயம் : 24
1454. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُثَنَّى الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ كَتَبَ لَهُ هَذَا الْكِتَابَ لَمَّا وَجَّهَهُ إِلَى الْبَحْرَيْنِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ "" هَذِهِ فَرِيضَةُ الصَّدَقَةِ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمُسْلِمِينَ، وَالَّتِي أَمَرَ اللَّهُ بِهَا رَسُولَهُ، فَمَنْ سُئِلَهَا مِنَ الْمُسْلِمِينَ عَلَى وَجْهِهَا فَلْيُعْطِهَا، وَمَنْ سُئِلَ فَوْقَهَا فَلاَ يُعْطِ فِي أَرْبَعٍ وَعِشْرِينَ مِنَ الإِبِلِ فَمَا دُونَهَا مِنَ الْغَنَمِ مِنْ كُلِّ خَمْسٍ شَاةٌ، إِذَا بَلَغَتْ خَمْسًا وَعِشْرِينَ إِلَى خَمْسٍ وَثَلاَثِينَ فَفِيهَا بِنْتُ مَخَاضٍ أُنْثَى، فَإِذَا بَلَغَتْ سِتًّا وَثَلاَثِينَ إِلَى خَمْسٍ وَأَرْبَعِينَ فَفِيهَا بِنْتُ لَبُونٍ أُنْثَى، فَإِذَا بَلَغَتْ سِتًّا وَأَرْبَعِينَ إِلَى سِتِّينَ فَفِيهَا حِقَّةٌ طَرُوقَةُ الْجَمَلِ، فَإِذَا بَلَغَتْ وَاحِدَةً وَسِتِّينَ إِلَى خَمْسٍ وَسَبْعِينَ فَفِيهَا جَذَعَةٌ، فَإِذَا بَلَغَتْ ـ يَعْنِي ـ سِتًّا وَسَبْعِينَ إِلَى تِسْعِينَ فَفِيهَا بِنْتَا لَبُونٍ، فَإِذَا بَلَغَتْ إِحْدَى وَتِسْعِينَ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ فَفِيهَا حِقَّتَانِ طَرُوقَتَا الْجَمَلِ، فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ فَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ، وَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ، وَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ إِلاَّ أَرْبَعٌ مِنَ الإِبِلِ فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ، إِلاَّ أَنْ يَشَاءَ رَبُّهَا، فَإِذَا بَلَغَتْ خَمْسًا مِنَ الإِبِلِ فَفِيهَا شَاةٌ، وَفِي صَدَقَةِ الْغَنَمِ فِي سَائِمَتِهَا إِذَا كَانَتْ أَرْبَعِينَ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ شَاةٌ، فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ إِلَى مِائَتَيْنِ شَاتَانِ، فَإِذَا زَادَتْ عَلَى مِائَتَيْنِ إِلَى ثَلاَثِمِائَةٍ فَفِيهَا ثَلاَثٌ، فَإِذَا زَادَتْ عَلَى ثَلاَثِمِائَةٍ فَفِي كُلِّ مِائَةٍ شَاةٌ، فَإِذَا كَانَتْ سَائِمَةُ الرَّجُلِ نَاقِصَةً مِنْ أَرْبَعِينَ شَاةً وَاحِدَةً فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ، إِلاَّ أَنْ يَشَاءَ رَبُّهَا، وَفِي الرِّقَةِ رُبْعُ الْعُشْرِ، فَإِنْ لَمْ تَكُنْ إِلاَّ تِسْعِينَ وَمِائَةً فَلَيْسَ فِيهَا شَىْءٌ، إِلاَّ أَنْ يَشَاءَ رَبُّهَا "".
பாடம் : 38 ஆடுகளின் ஸகாத்
1454. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பஹ்ரைனுக்கு (ஆளுநராக) அனுப்பப்பட்டதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந் தார்கள்:

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளை யிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள்மீது கடமையாக்கிய கட்டாயக் கொடை (ஸகாத்) தொடர்பான தாகும். இந்த ஸகாத் முஸ்லிம்களில் யாரிடம் முறைப்படி கோரப்படுகிறதோ அவர் அதை வழங்கட்டும்! கணக்குக்கு மேல் கோரப்பட்டால் கொடுக்க வேண்டாம்.

இருபத்து நான்கு ஒட்டகங்கள் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், ஒவ்வோர் ஐந்து ஒட்டகத்திற்கும் ஓர் ஆடு ஸகாத் கொடுக்க வேண்டும். இருபத்தைந்து ஒட்டகம் முதல் முப்பத்தைந்துவரை ஒரு வயது பெண் ஒட்டகம் ஸகாத்தாக வழங்க வேண்டும். முப்பத்தாறு முதல் நாற்பத்தைந்துவரை, இரண்டு வயது பெண் ஒட்டகம், நாற்பத்தாறு முதல் அறுபதுவரை மூன்று வயதுள்ள, பருவமடைந்த பெண் ஒட்டகம், அறுபத்து ஒன்றிலிருந்து எழுபத்தைந்து வரை நான்கு வயது பெண் ஒட்டகம், எழுபத்தாறிலிருந்து தொண்ணூறுவரை இரண்டு வயதுள்ள இரண்டு பெண் ஒட்டகங்கள், தொண்ணூற்று ஒன்றிலிருந்து நூற்றிருபதுவரை மூன்று வயதுள்ள, பருவமடைந்த இரு பெண் ஒட்டகங்கள் ஸகாத் ஆகும்.

நூற்றிருபதுக்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு நாற்பது ஒட்டகங்களுக்கும் இரண்டு வயது பெண் ஒட்டகம் ஒன்றும், ஒவ்வொரு ஐம்பதுக்கு மூன்று வயது பெண் ஒட்டகம் ஒன்றும் ஸகாத் ஆகும்.

யாரிடம் நான்கு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளனவோ அவற்றுக்கு ஸகாத் இல்லை - உரிமையாளர் நாடினால் தவிர! அவை ஐந்து ஒட்டகங்களாகிவிட்டால் அதற்குரிய ஸகாத் ஓர் ஆடு ஆகும்.

(காடுகளில்) மேயும் ஆடுகள் நாற்பதி லிருந்து நூற்றிருபதுவரை இருந்தால், அதற்கு ஸகாத் ஓர் ஆடு ஆகும். நூற்றி ருபதுக்குமேல் இரு நூறுவரை இருந்தால் இரு ஆடுகளும், இரு நூறுக்குமேல் முன்னூறுவரை மூன்று ஆடுகளும் முன்னூறுக்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடும் ஸகாத் ஆகும்.

(காடுகளில்) மேயக்கூடிய ஆடுகளில் நாற்பதில் ஒன்று குறைந்துவிட்டாலும், உரிமையாளர் நாடினால்தவிர அதில் ஸகாத் இல்லை.

வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு (இரண்டரை சதவீதம்) ஸகாத் கொடுக்க வேண்டும். அதில் நூற்றுத் தொண்ணூறு திர்ஹம் மட்டும் இருந்தால் உரிமையாளர் நாடினால் தவிர ஸகாத் இல்லை. (இரு நூறு திர்ஹங்களில்தான் ஸகாத் கடமையாகும்.)

அத்தியாயம் : 24