141. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا. فَقُضِيَ بَيْنَهُمَا وَلَدٌ، لَمْ يَضُرَّهُ "".
பாடம் : 8
(அங்கத் தூய்மை உள்பட) எல்லா நிலைகளிலும், (ஏன்) தாம்பத் திய உறவின்போதுகூட அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறல்
141. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் மனைவியிடம் (தாம்பத்திய உறவுகொள்ளும் எண்ணத் தில்) செல்லும்போது, “அல்லாஹ்வின் திருப்யெரால் (பிஸ்மில்லாஹ்); இறைவா! ஷைத்தானை எங்களைவிட்டு விலக்கி வைப்பாயாக! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத் தானை விலக்கிவைப்பாயாக!” என்று பிரார்த்தித்து(விட்டு உறவு கொண்டு), அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந் தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்ப தில்லை.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4

142. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ "". تَابَعَهُ ابْنُ عَرْعَرَةَ عَنْ شُعْبَةَ. وَقَالَ غُنْدَرٌ عَنْ شُعْبَةَ إِذَا أَتَى الْخَلاَءَ. وَقَالَ مُوسَى عَنْ حَمَّادٍ إِذَا دَخَلَ. وَقَالَ سَعِيدُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ إِذَا أَرَادَ أَنْ يَدْخُلَ.
பாடம் : 9
கழிப்பிடம் செல்லும்போது சொல்ல வேண்டியது
142. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற் குள் நுழையும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸி” (இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘கழிப்பிடத்திற்கு வந்தால்’ என்றும், ஹம்மாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘(கழிப்பிடத்திற்குள்) நுழைந்தால்’ என்றும், அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘(கழிப்பிடத்திற்குள்) நுழைய நினைத்தால்’ என்றும் இடம்பெற்றுள்ளது.

143. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ الْخَلاَءَ، فَوَضَعْتُ لَهُ وَضُوءًا قَالَ "" مَنْ وَضَعَ هَذَا "". فَأُخْبِرَ فَقَالَ "" اللَّهُمَّ فَقِّهْهُ فِي الدِّينِ "".
பாடம் : 10
கழிப்பிடம் அருகில் தண்ணீர் வைத்தல்
143. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கி யிருந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தார்கள். அப் போது அவர்களுக்காக நான் (அங்கத் தூய்மை செய்ய) தண்ணீர் வைத்தேன். அவர்கள் (திரும்பிவந்ததும்), “இதை வைத்தவர் யார்?” என்று கேட்டார்கள். (என்னைப் பற்றித்) தெரிவிக்கப்பட்டது.
அப்போது “இறைவா! இவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பாயாக!” என்று (எனக்காக) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

144. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلاَ يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلاَ يُوَلِّهَا ظَهْرَهُ، شَرِّقُوا أَوْ غَرِّبُوا "".
பாடம் : 11
மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா) திசையை முன்னோக்கக் கூடாது; சுவர் உள்ளிட்ட கட்டடம் இருந்தால் தவிர.
144. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்க வேண்டாம்; (அதன் திசையில்) தமது முதுகைக் காட்டி அமரவும் வேண்டாம். (மாறாக) கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக்கொள்ளுங்கள்.9
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

145. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ إِنَّ نَاسًا يَقُولُونَ إِذَا قَعَدْتَ عَلَى حَاجَتِكَ، فَلاَ تَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلاَ بَيْتَ الْمَقْدِسِ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَقَدِ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلاً بَيْتَ الْمَقْدِسِ لِحَاجَتِهِ. وَقَالَ لَعَلَّكَ مِنَ الَّذِينَ يُصَلُّونَ عَلَى أَوْرَاكِهِمْ، فَقُلْتُ لاَ أَدْرِي وَاللَّهِ.
قَالَ مَالِكٌ يَعْنِي الَّذِي يُصَلِّي وَلاَ يَرْتَفِعُ عَنِ الأَرْضِ، يَسْجُدُ وَهُوَ لاَصِقٌ بِالأَرْضِ.
பாடம் : 12
இரண்டு செங்கற்களின் மீது அமர்ந்து மலம் கழித்தல்
145. வாசிஉ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இயற்றைக் கடனை நிறைவேற்ற நீ அமரும்போது, கிப்லாவையோ, பைத்துல் மக்திஸையோ முன்னோக்கக் கூடாது என்று மக்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனால், நான் ஒரு நாள் எங்கள் (ஹஃப்ஸா) வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்களின் மீது பைத்துல் மக்திஸின் திசையை முன்னோக்கியபடி இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருப்பதை (தற் செயலாக)க் கண்டேன்” என்று கூறு வார்கள்.10
பிறகு என்னிடம், “புட்டங்களில் தொழுபவர்களில் நீங்களும் ஒருவரோ!” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் அவ்வாறு தொழுதேனா என்று) எனக்குத் தெரியாது” என்றேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
தரையுடன் (புட்டத்தை) சேர்த்துக் கொண்டவராகவும் புட்டத்தைத் தரை யிலிருந்து உயர்த்தாமலும் சஜ்தா செய்(து தொழு)பவரைத்தான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இவ்வாறு) குறிப்பிட்டார்கள்.

146. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ، صلى الله عليه وسلم كُنَّ يَخْرُجْنَ بِاللَّيْلِ إِذَا تَبَرَّزْنَ إِلَى الْمَنَاصِعِ ـ وَهُوَ صَعِيدٌ أَفْيَحُ ـ فَكَانَ عُمَرُ يَقُولُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم احْجُبْ نِسَاءَكَ. فَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُ، فَخَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةً مِنَ اللَّيَالِي عِشَاءً، وَكَانَتِ امْرَأَةً طَوِيلَةً، فَنَادَاهَا عُمَرُ أَلاَ قَدْ عَرَفْنَاكِ يَا سَوْدَةُ. حِرْصًا عَلَى أَنْ يَنْزِلَ الْحِجَابُ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ.
பாடம் : 13
பெண்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற திறந்த வெளிக்குச் செல்லல்
146. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியர் இயற்கைக் கடனை நிறைவேற்ற இரவு நேரத்தில் (ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்த) ‘மனாஸிஉ’களுக்கு (வீட்டை விட்டு) வெளியே செல்லும் வழக்க முடையவர்களாய் இருந்தார்கள். -மனாஸிஉ என்பது (மதீனாவின் புறநகரிலிருந்த) விசாலமான திறந்த வெளிகளாகும்.- இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “உங்கள் துணைவியரை (வெளியே செல்லும்போது) பர்தா இட்டு மறைத்துக்கொள்ளச் சொல்லுங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான சவ்தா (ரலி) அவர்கள் ஓர் இரவு இஷா நேரத்தில் (இயற்கைக் கடனை நிறைவேற்ற) வெளியே சென்றார்கள். -அவர்கள் உயரமான பெண்மணியாக இருந்தார்கள்.- அவர்களைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், “சவ்தா! உங்களைக் கண்டுகொண்டோம்” என்று பர்தா (பற்றிய வசனம்) அருளப்படாதா என்ற பேராவலில் சவ்தா (ரலி) அவர்களை அழைத்துக் கூறினார்கள். அப்போது அல்லாஹ், பர்தா தொடர்பான வசனத்தை அருளினான்.

147. حَدَّثَنَا زَكَرِيَّاءُ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قَدْ أُذِنَ أَنْ تَخْرُجْنَ فِي حَاجَتِكُنَّ "". قَالَ هِشَامٌ يَعْنِي الْبَرَازَ.
பாடம் : 13
பெண்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற திறந்த வெளிக்குச் செல்லல்
147. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “(என் துணைவி யரே!) நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்ல உங்களுக்கு அனுமதி யளிக்கப்பட்டு உள்ளது” என்று சொன் னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் ‘வெளியே செல்லல்’ என்பதற்கு ‘இயற்கைக் கடனை நிறைவேற்ற திறந்த வெளிகளுக்குச் செல்லல்’ என்பதே நபி (ஸல்) அவர்களின் கருத்தாகும் என்று கூறினார்கள்.

148. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ ارْتَقَيْتُ فَوْقَ ظَهْرِ بَيْتِ حَفْصَةَ لِبَعْضِ حَاجَتِي، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْضِي حَاجَتَهُ مُسْتَدْبِرَ الْقِبْلَةِ مُسْتَقْبِلَ الشَّأْمِ.
பாடம் : 14
வீடுகளில் கழிப்பறைகள் அமைத்துக்கொள்ளல்
148. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் தேவையொன்றுக்காக (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டுக் கூரைமீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும் (பைத்துல் மக்திஸ் இருக்கும்) ஷாம் (சிரியா) திசையை முன்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் (தமது வீட்டிலிருந்த கழிவறையில்) இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொண்டிருப்பதை நான் (தற்செயலாகக்) கண்டேன்.

149. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، أَنَّ عَمَّهُ، وَاسِعَ بْنَ حَبَّانَ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَخْبَرَهُ قَالَ لَقَدْ ظَهَرْتُ ذَاتَ يَوْمٍ عَلَى ظَهْرِ بَيْتِنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدًا عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ الْمَقْدِسِ.
பாடம் : 14
வீடுகளில் கழிப்பறைகள் அமைத்துக்கொள்ளல்
149. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் (ஒரு தேவை நிமித்தம்) எங்கள் வீட்டுக் கூரைமீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்கள் மீதமர்ந்தவர்களாக பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையை முன்னோக்கியபடி (இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொண்டு) இருப்பதைக் கண்டேன்.11

150. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مُعَاذٍ ـ وَاسْمُهُ عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ ـ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ لِحَاجَتِهِ أَجِيءُ أَنَا وَغُلاَمٌ مَعَنَا إِدَاوَةٌ مِنْ مَاءٍ. يَعْنِي يَسْتَنْجِي بِهِ.
பாடம் : 15
இயற்கைக் கடனை நிறைவேற்றி விட்டு, தண்ணீரால் துப்புரவு செய்தல்12
150. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற (வீட்டை விட்டுப்) புறப்பட்டால், நானும் இன்னொரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் எடுத்துக்கொண்டு செல்வோம்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுல்வலீத் ஹிஷாம் பின் அப்தில் மலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
“அந்தத் தண்ணீரால் நபி (ஸல்) அவர்கள் துப்புரவு செய்துகொள்வதற்காக (எடுத்துச் சென்றோம்)” என்ற கருத்தில்தான் அனஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

151. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مُعَاذٍ ـ هُوَ عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ ـ قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ لِحَاجَتِهِ تَبِعْتُهُ أَنَا وَغُلاَمٌ مِنَّا مَعَنَا إِدَاوَةٌ مِنْ مَاءٍ.
பாடம் : 16
ஒருவர் துப்புரவு செய்வதற்காக மற்றவர் தண்ணீர் எடுத்துச் செல்லல்
“ஏன் (உங்கள் கூஃபா நகரில்) நபி (ஸல்) அவர்களின் காலணிகள், அவர்கள் சுத்தம் செய்வதற்கான தண்ணீர், மற்றும் தலையணையைச் சுமந்து (சேவகம் புரிந்து)கொண்டிருந்தவர் (இப்னு மஸ்ஊத் - ரலி) உங்களிடையே இல்லையா?” என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் (அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்களிடம்) கேட்டார்கள்.
151. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற வெளியே சென்றால், நானும் எங்க(ள் அன்சாரிக)ளில் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றுடன் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம். (அந்தத் தண்ணீரால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துப்புரவு செய்துகொள்வார்கள்.)13

152. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُ الْخَلاَءَ، فَأَحْمِلُ أَنَا وَغُلاَمٌ إِدَاوَةً مِنْ مَاءٍ، وَعَنَزَةً، يَسْتَنْجِي بِالْمَاءِ. تَابَعَهُ النَّضْرُ وَشَاذَانُ عَنْ شُعْبَةَ. الْعَنَزَةُ عَصًا عَلَيْهِ زُجٌّ.
பாடம் : 17
(கழிப்பிடம் செல்லும்போது) துப்புரவு செய்யத் தண்ணீருடன் (தடுப்புக்கான) கைத்தடியையும் எடுத்துச் செல்லல்
152. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (புறநகர்ப் பகுதி யிலுள்ள) கழிப்பிடத்திற்குச் செல்லும் போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும் (மறைப் புக்கான) ஒரு கைத்தடியையும் (அனஸா) எடுத்துச் செல்வோம். (தமது தேவையை முடித்துவிட்டு) தண்ணீரால் அவர்கள் துப்புரவு செய்துகொள்வார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்கள், ‘அனஸா’ என்பது ‘மேற்புறத்தில் பூண் இடப்பட் டுள்ள கைத்தடியாகும்’ என்று குறிப்பிடு கிறார்கள்.

153. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ ـ هُوَ الدَّسْتَوَائِيُّ ـ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ، وَإِذَا أَتَى الْخَلاَءَ فَلاَ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِهِ "".
பாடம் : 18
(மலஜலம் கழித்தபின்) வலக் கரத்தால் துப்புரவு செய்வது கூடாது.
153. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (எதையும்) பருகும் போது, பாத்திரத்திற்குள் மூச்சுவிட வேண்டாம்; கழிப்பிடம் சென்றால் பிறவி உறுப்பை வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

154. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا بَالَ أَحَدُكُمْ فَلاَ يَأْخُذَنَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَسْتَنْجِي بِيَمِينِهِ، وَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ "".
பாடம் : 19
சிறுநீர் கழிக்கும்போது வலக் கரத்தால் பிறவி உறுப்பைப் பிடிக்கக் கூடாது.
154. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, பிறவி உறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத் தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
154. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, பிறவி உறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத் தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
155. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَكِّيُّ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ عَمْرٍو الْمَكِّيُّ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ اتَّبَعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَخَرَجَ لِحَاجَتِهِ، فَكَانَ لاَ يَلْتَفِتُ فَدَنَوْتُ مِنْهُ فَقَالَ "" ابْغِنِي أَحْجَارًا أَسْتَنْفِضْ بِهَا ـ أَوْ نَحْوَهُ ـ وَلاَ تَأْتِنِي بِعَظْمٍ وَلاَ رَوْثٍ "". فَأَتَيْتُهُ بِأَحْجَارٍ بِطَرَفِ ثِيَابِي فَوَضَعْتُهَا إِلَى جَنْبِهِ وَأَعْرَضْتُ عَنْهُ، فَلَمَّا قَضَى أَتْبَعَهُ بِهِنَّ.
பாடம் : 20
(மலஜலம் கழித்தபின்) கற் களால் (துடைத்து) சுத்தம் செய்தல்
155. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது, அவர்களைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்கள் அருகில் நான் சென்றபோது, “நான் (இயற்கைக் கடனை முடித்தபின்) சுத்தம் செய்வதற்காக எனக்குச் சில கற்களை(த் தேடி எடுத்து)வாரீர். எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்துவிடாதீர்” என்று சொன்னார்கள்.
நான் (கற்களைப் பொறுக்கியெடுத்து) எனது ஆடையின் ஓரத்தில் போட்டுக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்கள் பக்கத்தில் வைத்துவிட்டு, அங்கிருந்து திரும்பிவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை முடித்துவிட்டு) அக்கற்களால் சுத்தம் செய்துகொண்டார்கள்.

156. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ لَيْسَ أَبُو عُبَيْدَةَ ذَكَرَهُ وَلَكِنْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ، يَقُولُ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم الْغَائِطَ، فَأَمَرَنِي أَنْ آتِيَهُ بِثَلاَثَةِ أَحْجَارٍ، فَوَجَدْتُ حَجَرَيْنِ، وَالْتَمَسْتُ الثَّالِثَ فَلَمْ أَجِدْهُ، فَأَخَذْتُ رَوْثَةً، فَأَتَيْتُهُ بِهَا، فَأَخَذَ الْحَجَرَيْنِ وَأَلْقَى الرَّوْثَةَ وَقَالَ "" هَذَا رِكْسٌ "". وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي إِسْحَاقَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ.
பாடம் : 21
கெட்டிச் சாணத்தால் துப்புரவு செய்யக் கூடாது.
156. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றபோது, தமக்காக மூன்று கற்களைக் கொண்டுவருமாறு என்னைப் பணித்தார் கள். (நான் தேடிப் பார்த்தபோது) இரண்டு கற்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றேன். மூன்றாவது கல்லைத் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை. கெட்டிச் சாணத்தை எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தேன்.
நபியவர்கள் கற்களைப் பெற்றுக் கொண்டு, சாணத்தை எறிந்துவிட்டு, “இது அசுத்தமானது” எனக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

157. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ تَوَضَّأَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَّةً مَرَّةً.
பாடம் : 22
அங்கத் தூய்மையின்போது (ஒவ்வோர் உறுப்பையும்) ஒரு முறை கழுவுதல்
157. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒவ்வோர் உறுப்பையும்) தலா ஒரு முறை கழுவி அங்கத் தூய்மை செய்தார்கள்.14

158. حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ.
பாடம் : 23
அங்கத் தூய்மையின்போது (ஒவ்வோர் உறுப்பையும்) இரு முறை கழுவுதல்
158. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒவ்வோர் உறுப்பையும்) தலா இரண்டு முறை கழுவி அங்கத் தூய்மை செய்தார்கள்.

159. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عَطَاءَ بْنَ يَزِيدَ، أَخْبَرَهُ أَنَّ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِإِنَاءٍ، فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلاَثَ مِرَارٍ فَغَسَلَهُمَا، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الإِنَاءِ فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلاَثَ مِرَارٍ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلاَثَ مِرَارٍ إِلَى الْكَعْبَيْنِ، ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 24
அங்கத் தூய்மையின்போது (ஒவ்வோர் உறுப்பையும்) மும் முறை கழுவுதல்
159. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி (அங்கத் தூய்மை செய்தார்கள். ஆரம்பமாக) தம் இரு முன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்திற்குள் நுழைத்து, (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்புளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தி னார்கள்.
பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். (பிறகு) தம் இரு கைகளையும் முழங்கைவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பின்னர் தம் இரு கால்களையும் கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள்.
பின்னர் “யார் எனது (இந்த) அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் உள்ளத்தில் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவருடைய முன்பாவங்கள் மன்னிக்கப் படும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

160. وَعَنْ إِبْرَاهِيمَ، قَالَ قَالَ صَالِحُ بْنُ كَيْسَانَ قَالَ ابْنُ شِهَابٍ وَلَكِنْ عُرْوَةُ يُحَدِّثُ عَنْ حُمْرَانَ،، فَلَمَّا تَوَضَّأَ عُثْمَانُ قَالَ أَلاَ أُحَدِّثُكُمْ حَدِيثًا لَوْلاَ آيَةٌ مَا حَدَّثْتُكُمُوهُ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَتَوَضَّأُ رَجُلٌ فَيُحْسِنُ وُضُوءَهُ، وَيُصَلِّي الصَّلاَةَ إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلاَةِ حَتَّى يُصَلِّيَهَا "". قَالَ عُرْوَةُ الآيَةُ {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ}.
பாடம் : 24
அங்கத் தூய்மையின்போது (ஒவ்வோர் உறுப்பையும்) மும் முறை கழுவுதல்
160. ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள், அங்கத் தூய்மை செய்தபோது (எங்களைப் பார்த்து), “நான் ஒரு நபிமொழியை உங்களுக்குச் சொல்லட்டுமா? (குர்ஆனின்) ஒரு வசனம் மட்டும் இல்லையானால், அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டு, “ஒரு மனிதர் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, (கடமையான ஒரு) தொழுகையை நிறைவேற்றுவாராயின், அவர் (அடுத்த வேளைத் தொழுகையை) தொழுது முடிக்கும்வரை அவருக்கும் அந்த (இரண்டாம் வேளைத்) தொழுகைக்கும் இடையில் ஏற்பட்ட (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன் என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“நாம் அருளிய சான்றுகளையும் நல்வழியையும் வேதத்தில் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்திய பிறகும் அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர்” (2:159) எனும் வசனமே (உஸ்மான் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட) அந்த வசனமாகும்.