1164. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ‏.‏
பாடம் : 25 கூடுதலான தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவது குறித்து வந்துள் ளவை21 இவ்வாறு (தொழுவது குறித்து) அம்மார் பின் யாசிர் (ரலி), அபூதர் (ரலி), அனஸ் (ரலி), ஜாபிர் பின் ஸைத் (ரஹ்), இக்ரிமா (ரஹ்), இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) ஆகியோரிடமிருந்து தகவல் அறிவிக்கப் பட்டுள்ளது. பகலில் (தொழும் கூடுதல் தொழுகை களில்) நமது (மதீனா) நகர மார்க்க அறிஞர்கள், ஒவ்வோர் இரண்டு ரக்அத் களிலும் சலாம் கொடுப்பதையே நான் கண்டுள்ளேன் என யஹ்யா பின் சயீத் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
1164. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டில்) எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழு வித்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.23


அத்தியாயம் : 19
1165. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ‏.‏
பாடம் : 25 கூடுதலான தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவது குறித்து வந்துள் ளவை21 இவ்வாறு (தொழுவது குறித்து) அம்மார் பின் யாசிர் (ரலி), அபூதர் (ரலி), அனஸ் (ரலி), ஜாபிர் பின் ஸைத் (ரஹ்), இக்ரிமா (ரஹ்), இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) ஆகியோரிடமிருந்து தகவல் அறிவிக்கப் பட்டுள்ளது. பகலில் (தொழும் கூடுதல் தொழுகை களில்) நமது (மதீனா) நகர மார்க்க அறிஞர்கள், ஒவ்வோர் இரண்டு ரக்அத் களிலும் சலாம் கொடுப்பதையே நான் கண்டுள்ளேன் என யஹ்யா பின் சயீத் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
1165. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்களும் லுஹ்ருக்குப்பின் இரண்டு ரக்அத்களும் ஜுமுஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் மஃக்ரிப் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்களும் இஷா தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்களும் தொழுதிருக்கிறேன்.24


அத்தியாயம் : 19
1166. حَدَّثَنَا آدَمُ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَخْطُبُ " إِذَا جَاءَ أَحَدُكُمْ وَالإِمَامُ يَخْطُبُ ـ أَوْ قَدْ خَرَجَ ـ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ ".
பாடம் : 25 கூடுதலான தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவது குறித்து வந்துள் ளவை21 இவ்வாறு (தொழுவது குறித்து) அம்மார் பின் யாசிர் (ரலி), அபூதர் (ரலி), அனஸ் (ரலி), ஜாபிர் பின் ஸைத் (ரஹ்), இக்ரிமா (ரஹ்), இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) ஆகியோரிடமிருந்து தகவல் அறிவிக்கப் பட்டுள்ளது. பகலில் (தொழும் கூடுதல் தொழுகை களில்) நமது (மதீனா) நகர மார்க்க அறிஞர்கள், ஒவ்வோர் இரண்டு ரக்அத் களிலும் சலாம் கொடுப்பதையே நான் கண்டுள்ளேன் என யஹ்யா பின் சயீத் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
1166. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் ‘இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது’ அல்லது ‘அவர் புறப்பட்டு வந்திருக்கும்போது’ (பள்ளி வாசலுக்குள்) வந்தால், இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்” என்று (ஜுமுஆ நாள்) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.25


அத்தியாயம் : 19
1167. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سَيْفُ بْنُ سُلَيْمَانَ الْمَكِّيُّ، سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ أُتِيَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ فِي مَنْزِلِهِ فَقِيلَ لَهُ هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ دَخَلَ الْكَعْبَةَ قَالَ فَأَقْبَلْتُ فَأَجِدُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ خَرَجَ، وَأَجِدُ بِلاَلاً عِنْدَ الْبَابِ قَائِمًا فَقُلْتُ يَا بِلاَلُ، صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْكَعْبَةِ قَالَ نَعَمْ. قُلْتُ فَأَيْنَ قَالَ بَيْنَ هَاتَيْنِ الأُسْطُوَانَتَيْنِ. ثُمَّ خَرَجَ فَصَلَّى رَكْعَتَيْنِ فِي وَجْهِ الْكَعْبَةِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَوْصَانِي النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَكْعَتَىِ الضُّحَى. وَقَالَ عِتْبَانُ غَدَا عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ بَعْدَ مَا امْتَدَّ النَّهَارُ وَصَفَفْنَا وَرَاءَهُ فَرَكَعَ رَكْعَتَيْنِ.
பாடம் : 25 கூடுதலான தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவது குறித்து வந்துள் ளவை21 இவ்வாறு (தொழுவது குறித்து) அம்மார் பின் யாசிர் (ரலி), அபூதர் (ரலி), அனஸ் (ரலி), ஜாபிர் பின் ஸைத் (ரஹ்), இக்ரிமா (ரஹ்), இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) ஆகியோரிடமிருந்து தகவல் அறிவிக்கப் பட்டுள்ளது. பகலில் (தொழும் கூடுதல் தொழுகை களில்) நமது (மதீனா) நகர மார்க்க அறிஞர்கள், ஒவ்வோர் இரண்டு ரக்அத் களிலும் சலாம் கொடுப்பதையே நான் கண்டுள்ளேன் என யஹ்யா பின் சயீத் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
1167. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது இல்லத்தில் இருந்த போது அவர்களிடம், “இதோ! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவுக்குள் நுழைந்துவிட்டர்கள்” என்று சொல்லப்பட்டது. (பிறகு நடந்ததை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குள்ளிருந்து) வெளியே வந்து கொண்டிருந்தபோது, நான் அங்கு சென்று அவர்களைக் கண்டேன்; பிலால் (ரலி) அவர்கள் (கஅபாவின்) தலைவாயில் அருகில் நிற்பதையும் கண்டேன். நான் பிலால் அவர்களிடம், “பிலாலே! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற் குள் தொழுதார்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். ‘எந்த இடத்தில்?’ என்று கேட்டேன். “இந்த இரு தூண்களுக்கு மத்தியில் (தொழுதார் கள்). பிறகு வெளியே வந்து கஅபாவை முன்னோக்கியபடி தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள்.26

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

‘ளுஹா’ நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னை வலியுறுத்தினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.27

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நண் பகலில் என்னிடம் வந்தார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்து நின்றோம். அவர்கள் (எங்களுக்கு) இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்” என இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.28

அத்தியாயம் : 19
1168. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ أَبُو النَّضْرِ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ‏.‏ قُلْتُ لِسُفْيَانَ فَإِنَّ بَعْضَهُمْ يَرْوِيهِ رَكْعَتَىِ الْفَجْرِ‏.‏ قَالَ سُفْيَانُ هُوَ ذَاكَ‏.‏
பாடம் : 26 ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களுக்குப் பிறகு பேசிக்கொண்டிருப்பது
1168. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லையேல், (தொழுகைக்கு அழைக்கப்படும்வரை) சாய்ந்து படுத்திருப்பார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “சிலர் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத் (தொழுத பிறகுதான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வார்கள்) என இந்த ஹதீஸில் அறிவிக்கின்றனரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; அப்படித்தான்’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 19
1169. حَدَّثَنَا بَيَانُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى شَىْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَىِ الْفَجْرِ‏.‏
பாடம் : 27 ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் கவனம் செலுத்துவதும் அவ்விரு ரக்அத்களும் ‘கூடுதல் தொழுகை தான்’ எனும் கூற்றும்
1169. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் அளவுக்கு வேறு எந்தக் கூடுதலான தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்ததில்லை.

அத்தியாயம் : 19
1170. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِاللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ يُصَلِّي إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصُّبْحِ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ‏.‏
பாடம் : 28 ஃபஜ்ர் (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் ஓதும் முறை
1170. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார் கள். பிறகு (ஃபஜ்ரின்) பாங்கைக் கேட்டதும் சுருக்கமாக (ஓதி) இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.


அத்தியாயம் : 19
1171. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمَّتِهِ، عَمْرَةَ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا يَحْيَى ـ هُوَ ابْنُ سَعِيدٍ ـ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُخَفِّفُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ حَتَّى إِنِّي لأَقُولُ هَلْ قَرَأَ بِأُمِّ الْكِتَابِ
பாடம் : 28 ஃபஜ்ர் (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் ஓதும் முறை
1171. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழு கைக்குமுன் சுருக்கமாக (ஓதி) இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள். எந்த அளவுக்கென்றால், அதில் அவர்கள் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை ஓதி னார்களா என்றுகூட நான் நினைப்பேன்.29

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 19
1172. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَجْدَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ، فَأَمَّا الْمَغْرِبُ وَالْعِشَاءُ فَفِي بَيْتِهِ. قَالَ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ بَعْدَ الْعِشَاءِ فِي أَهْلِهِ. تَابَعَهُ كَثِيرُ بْنُ فَرْقَدٍ وَأَيُّوبُ عَنْ نَافِعٍ.
பாடம் : 29 கடமையான தொழுகைக்குப் பின் கூடுதலான தொழுகை களைத் தொழுதல்
1172. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்களும் லுஹ்ர் தொழுகைக்குக்குப்பின் இரண்டு ரக்அத்களும், மஃக்ரிப் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்களும் இஷா தொழுகைக் குப்பின் இரண்டு ரக்அத்களும் ஜுமுஆ வுக்குப்பின் இரண்டு ரக்அத்களும் தொழுதிருக்கிறேன்.

மஃக்ரிப், இஷா ஆகியவற்றின் சுன்னத் தொழுகைகளை நபியவர்கள் தமது இல்லத்தில் தொழுதுவந்தார்கள்.30

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இஷாவுக்குப் பின் தமது இல்லத்தில் தொழுவார்கள்” என இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 19
1173. وَحَدَّثَتْنِي أُخْتِي، حَفْصَةُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي سَجْدَتَيْنِ خَفِيفَتَيْنِ بَعْدَ مَا يَطْلُعُ الْفَجْرُ، وَكَانَتْ سَاعَةً لاَ أَدْخُلُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهَا. تَابَعَهُ كَثِيرُ بْنُ فَرْقَدٍ وَأَيُّوبُ عَنْ نَافِعٍ. وَقَالَ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ بَعْدَ الْعِشَاءِ فِي أَهْلِهِ.
பாடம் : 29 கடமையான தொழுகைக்குப் பின் கூடுதலான தொழுகை களைத் தொழுதல்
1173. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் நேரம் வந்ததும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள் என என் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அந்த நேரம், நான் நபி (ஸல்) அவர்களிடம் செல்லாத நேரமாக இருந்தது.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 19
1174. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ أَبَا الشَّعْثَاءِ، جَابِرًا قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا. قُلْتُ يَا أَبَا الشَّعْثَاءِ أَظُنُّهُ أَخَّرَ الظُّهْرَ وَعَجَّلَ الْعَصْرَ وَعَجَّلَ الْعِشَاءَ وَأَخَّرَ الْمَغْرِبَ. قَالَ وَأَنَا أَظُنُّهُ.
பாடம் : 30 கடமையான தொழுகைக்குப் பின் கூடுதலான தொழுகை களைத் தொழாமல் இருப்பது
1174. அபுஷ்ஷஅஸா ஜஅஃபர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் எட்டு ரக்அத்கள் (கொண்ட லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளை இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் தொழுதிருக்கிறேன். ஏழு ரக்அத்கள் கொண்ட (மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் தொழுதிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அபுஷ்ஷஅஸா (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழு கையைத் தாமதப்படுத்தி அஸ்ரின் ஆரம்ப நேரத்திலும், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி இஷாவின் ஆரம்ப நேரத்திலும் தொழுதிருப்பார்கள் என நான் எண்ணுகிறேன்” என்றேன். அதற்கு அபுஷ்ஷஅஸா (ரஹ்) அவர்கள் “நானும் அவ்வாறே எண்ணுகிறேன்” என்றார்கள்.31

அத்தியாயம் : 19
1175. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ تَوْبَةَ، عَنْ مُوَرِّقٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَتُصَلِّي الضُّحَى قَالَ لاَ. قُلْتُ فَعُمَرُ. قَالَ لاَ. قُلْتُ فَأَبُو بَكْرٍ. قَالَ لاَ. قُلْتُ فَالنَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ لاَ إِخَالُهُ.
பாடம் : 31 பயணத்தின்போது ‘ளுஹா’ தொழுகை தொழுவது
1175. முவர்ரிக் பின் முஷம்ரிஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் ‘ளுஹா’ (முற்பகல்) தொழுகை தொழுவது உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். “சரி, உமர் (ரலி) அவர்கள் தொழுவார் களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். “சரி, அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவார்களா?” என்று கேட்டேன். அதற்கும் ‘இல்லை’ என்றார்கள்.

“சரி, நபி (ஸல்) அவர்கள் (தொழுவார் களா)?” என்று கேட்டேன். “அவர்கள் தொழுததாக நான் எண்ணவில்லை” என்றார்கள்.


அத்தியாயம் : 19
1176. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، يَقُولُ مَا حَدَّثَنَا أَحَدٌ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي الضُّحَى غَيْرَ أُمِّ هَانِئٍ فَإِنَّهَا قَالَتْ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ بَيْتَهَا يَوْمَ فَتْحِ مَكَّةَ فَاغْتَسَلَ وَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ فَلَمْ أَرَ صَلاَةً قَطُّ أَخَفَّ مِنْهَا، غَيْرَ أَنَّهُ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ.
பாடம் : 31 பயணத்தின்போது ‘ளுஹா’ தொழுகை தொழுவது
1176. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுத தாக உம்முஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் எமக்கு அறிவிக்க வில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தமது இல்லத்திற்கு வந்து குளித்துவிட்டு, எட்டு ரக்அத்கள் தொழுததாக உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மேலும், “நபி (ஸல்) அவர்கள் அதைவிடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகைகளையும் தொழுததை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஆயினும், அவர்கள் ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்தார்கள்” என்றும் உம்முஹானீ (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.32

அத்தியாயம் : 19
1177. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَبَّحَ سُبْحَةَ الضُّحَى، وَإِنِّي لأُسَبِّحُهَا.
பாடம் : 32 ‘ளுஹா’ தொழுகை தொழாமல் இருப்பதும், தொழாமல் இருக்க அனுமதி உண்டு எனும் கூற் றும்
1177. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுததை நான் பார்த்ததில்லை. ஆனால், நான் அதைத் தொழுது வருகிறேன்.33

அத்தியாயம் : 19
1178. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبَّاسٌ الْجُرَيْرِيُّ ـ هُوَ ابْنُ فَرُّوخَ ـ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَصَلاَةِ الضُّحَى، وَنَوْمٍ عَلَى وِتْرٍ.
பாடம் : 33 உள்ளூரில் இருக்கும்போது ‘ளுஹா’ தொழுவது நபி (ஸல்) அவர்களைப் பற்றி (அவர்கள் ‘ளுஹா’ தொழுததாக) இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள் ளார்கள்.
1178. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, (இரண்டு ரக்அத்கள்) ‘ளுஹா’ தொழுகை தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் (நபி (ஸல்) அவர்கள்) எனக்கு அறிவுறுத்தினார் கள். அவற்றை நான் இறக்கும்வரை கை விடமாட்டேன்.


அத்தியாயம் : 19
1179. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ الأَنْصَارِيَّ، قَالَ قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ ـ وَكَانَ ضَخْمًا ـ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنِّي لاَ أَسْتَطِيعُ الصَّلاَةَ مَعَكَ. فَصَنَعَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم طَعَامًا، فَدَعَاهُ إِلَى بَيْتِهِ، وَنَضَحَ لَهُ طَرَفَ حَصِيرٍ بِمَاءٍ فَصَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ. وَقَالَ فُلاَنُ بْنُ فُلاَنِ بْنِ جَارُودٍ لأَنَسٍ ـ رضى الله عنه ـ أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الضُّحَى فَقَالَ مَا رَأَيْتُهُ صَلَّى غَيْرَ ذَلِكَ الْيَوْمِ.
பாடம் : 33 உள்ளூரில் இருக்கும்போது ‘ளுஹா’ தொழுவது நபி (ஸல்) அவர்களைப் பற்றி (அவர்கள் ‘ளுஹா’ தொழுததாக) இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள் ளார்கள்.
1179. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உடல் பருமனாக இருந்த ஓர் அன்சாரித் தோழர் (இத்பான் பின் மாலிக்) நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “என்னால் (பள்ளிவாசலுக்கு வந்து) உங்களுடன் நின்று தொழ முடிவதில்லை” என்று கூறினார். எனவே, அவர் நபியவர்களுக் காக உணவு சமைத்துத் தமது இல்லத்திற்கு வருமாறு அழைத்தார்.

(அவரது இல்லத்திற்கு நபி (ஸல்) அவர்கள் சென்றபோது) அவர்கள் தொழுவதற்காக அவர் (பாயொன்றை விரித்து, பதப்படுத்துவதற்காக அந்தப்) பாயின் ஓரத்தில் தண்ணீர் தெளித்தார். நபி (ஸல்) அவர்கள் அதன்மீது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அப்துல் ஹமீத் பின் முன்திர் பின் அல்ஜாரூத் (ரஹ்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுகை தொழுவார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “அன்றைய தினம் தவிர வேறு எப்போதும் அவர்கள் தொழ நான் பார்த்ததில்லை” என விடையளித்தார்கள்.

இதை அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34

அத்தியாயம் : 19
1180. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ حَفِظْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَشْرَ رَكَعَاتٍ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فِي بَيْتِهِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ فِي بَيْتِهِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ، وَكَانَتْ سَاعَةً لاَ يُدْخَلُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهَا.
பாடம் : 34 லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுவது
1180. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுத பத்து ரக்அத் (சுன்னத்) தொழுகைகளை நான் நினைவில் வைத்துள்ளேன். (அவை:) லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள். லுஹ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள். மஃக்ரிப் தொழுகைக் குப்பின் தமது வீட்டில் இரண்டு ரக்அத் கள். இஷா தொழுகைக்குப்பின் தமது வீட்டில் தொழுத இரண்டு ரக்அத்கள். சுப்ஹு தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள்.

சுப்ஹுக்குமுன் உள்ள அந்த நேரம் நபி (ஸல்) அவர்களிடம் (அந்நியர்) யாரும் செல்ல முடியாத நேரமாகும்.35


அத்தியாயம் : 19
1181. حَدَّثَتْنِي حَفْصَةُ، أَنَّهُ كَانَ إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ وَطَلَعَ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ.
பாடம் : 34 லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுவது
1181. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகை அறிவிப்பாளர் பாங்கு சொல்லி, ஃபஜ்ருடைய நேரம் வந்து விட்டால், நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள் என என் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.


அத்தியாயம் : 19
1182. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَدَعُ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ. تَابَعَهُ ابْنُ أَبِي عَدِيٍّ وَعَمْرٌو عَنْ شُعْبَةَ.
பாடம் : 34 லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுவது
1182. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்குமுன் நான்கு ரக்அத்களும் சுப்ஹு தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்களும் தொழாமல் இருந்ததில்லை.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 19
1183. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ الْمُزَنِيُّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" صَلُّوا قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ "". ـ قَالَ فِي الثَّالِثَةِ ـ لِمَنْ شَاءَ كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً.
பாடம் : 35 மஃக்ரிப் தொழுகைக்குமுன் தொழுவது
1183. அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “மஃக்ரிப் தொழு கைக்குமுன் (இரு ரக்அத்கள் சுன்னத்) தொழுங்கள்” என (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும்போது, அதை (எங்கே) மக்கள் (அவசியம் பின்பற்ற வேண்டிய) ஒரு ‘சுன்னத்’தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, “இது விரும்பியவர்களுக்கு மட்டும்தான்” என்றார்கள்.


அத்தியாயம் : 19