1144. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، قَالَ حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ فَقِيلَ مَا زَالَ نَائِمًا حَتَّى أَصْبَحَ مَا قَامَ إِلَى الصَّلاَةِ. فَقَالَ "" بَالَ الشَّيْطَانُ فِي أُذُنِهِ "".
பாடம் : 13 ஒருவர் தொழாமல் உறங்குகிறார் எனில், அவரது காதில் ஷைத் தான் சிறுநீர் கழித்துவிட்டான் என்று பொருள்.
1144. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம். ஒரு மனிதர் பொழுது விடியும்வரை தொழுகைக்கு எழாமல் உறங்கிக்கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று கூறினார்கள்.14

அத்தியாயம் : 19
1145. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَأَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ "".
பாடம் : 14 இரவின் இறுதிப் பகுதியில் பிரார்த்திப்பதும் தொழுவதும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் இரவில் குறைவாகவே உறங்குவார்கள் (யஹ்ஜஊன்). இரவின் இறுதி நேரங்களில் (சஹர்) பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள். (51:17,18)
1145. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலோரு பகுதி இருக்கும்போது கீழ் வானிற்கு இறங்கிவந்து, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னி டம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 19
1146. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ،. وَحَدَّثَنِي سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَيْفَ صَلاَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم بِاللَّيْلِ قَالَتْ كَانَ يَنَامُ أَوَّلَهُ وَيَقُومُ آخِرَهُ، فَيُصَلِّي ثُمَّ يَرْجِعُ إِلَى فِرَاشِهِ، فَإِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ وَثَبَ، فَإِنْ كَانَ بِهِ حَاجَةٌ اغْتَسَلَ، وَإِلاَّ تَوَضَّأَ وَخَرَجَ.
பாடம் : 15 இரவின் ஆரம்பப் பகுதியில் உறங்கிவிட்டு இறுதிப் பகுதியில் விழித்திருத்தல் (இரவின் ஆரம்ப நேரத்தில் தொழ முயன்ற) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள், ‘உறங்குங்கள்!’ என்றார்கள். இரவின் கடைசி நேரம் ஆனதும் ‘இப்போது எழுங்கள்!’ என்று கூறினார்கள். இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், “சல்மான் சொன்னது உண்மையே” என்று குறிப்பிட்டார்கள்.15
1146. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரவின் ஆரம்பப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் உறங்கு வார்கள். இரவின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழுவார்கள். பிறகு தமது படுக்கைக்குத் திரும்புவார்கள். தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொன்னதும் விரைவாக எழுந்து குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால், அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்பட்டுவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 19
1147. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَزِيدُ فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا، قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ. فَقَالَ "" يَا عَائِشَةُ، إِنَّ عَيْنَىَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي "".
பாடம் : 16 ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை
1147. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொன்று ரக்அத்களை விட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார் கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்குமுன் உறங்குவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் கண்கள்தான் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.


அத்தியாயம் : 19
1148. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي شَىْءٍ مِنْ صَلاَةِ اللَّيْلِ جَالِسًا، حَتَّى إِذَا كَبِرَ قَرَأَ جَالِسًا، فَإِذَا بَقِيَ عَلَيْهِ مِنَ السُّورَةِ ثَلاَثُونَ أَوْ أَرْبَعُونَ آيَةً قَامَ فَقَرَأَهُنَّ ثُمَّ رَكَعَ.
பாடம் : 16 ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை
1148. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (முதுமை அடை யும்வரை) இரவுத் தொழுகை எதிலும் அமர்ந்து (குர்ஆன்) ஓதியதை நான் பார்த்ததில்லை. அவர்கள் முதுமை யடைந்தபின் அமர்ந்துகொண்டு ஓதினார் கள். ஓர் அத்தியாயத்தில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது, எழுந்து நின்று அவற்றை ஓதிவிட்டுப் பிறகு ருகூஉ செய்வார்கள்.

அத்தியாயம் : 19
1149. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِبِلاَلٍ عِنْدَ صَلاَةِ الْفَجْرِ "" يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَىَّ فِي الْجَنَّةِ "". قَالَ مَا عَمِلْتُ عَمَلاً أَرْجَى عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ طُهُورًا فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلاَّ صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ دَفَّ نَعْلَيْكَ يَعْنِي تَحْرِيكَ.
பாடம் : 17 இரவிலும் பகலிலும் அங்கத் தூய்மை (உளூ) உடன் இருப்ப தன் சிறப்பும் அங்கத் தூய்மை செய்தபின் தொழுவதன் மேன்மையும்
1149. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அதிகாலைத் தொழுகை யின்போது நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்தபின் நீங்கள் ஈடுபாட்டுடன் செய்த ஒரு நற்செயல் குறித்து எனக்குச் சொல்வீராக! ஏனெனில், சொர்க்கத்தில் எனக்கு முன்பாக, (நீங்கள் நடந்து செல்லும்) காலணி ஓசையை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.

அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் அங்கத் தூய்மை (உளூ) செய்தாலும் அந்த அங்கத் தூய்மை மூலம் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டி ருப்பதை நான் தொழாமல் இருந்ததில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ததாக நான் கருது கிறேன்” என்று கூறினார்கள்.16

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘தஃப்ப நஅலைக்க’ எனும் சொற்றொடருக்கு ‘உங்கள் காலணி ஓசை’ என்பது பொருள்.

அத்தியாயம் : 19
1150. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَإِذَا حَبْلٌ مَمْدُودٌ بَيْنَ السَّارِيَتَيْنِ فَقَالَ "" مَا هَذَا الْحَبْلُ "". قَالُوا هَذَا حَبْلٌ لِزَيْنَبَ فَإِذَا فَتَرَتْ تَعَلَّقَتْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ، حُلُّوهُ، لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ "".
பாடம் : 18 வழிபாடுகளில் (சக்திக்கு மீறி) சிரமங்களை உருவாக்கிக் கொள்ளலாகாது.17
1150. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குள்) நுழைந்தபோது, இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. “இந்தக் கயிறு என்ன (ஏன்)?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “இது ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும்போது) சோர்வடைந் தால் இந்தக் கயிற்றைப் பற்றிக்கொள்வார்” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம். இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமாக இருக்கும் போது (கூடுதலான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 19
1151. قَالَ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنِ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَتْ عِنْدِي امْرَأَةٌ مِنْ بَنِي أَسَدٍ فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَنْ هَذِهِ "". قُلْتُ فُلاَنَةُ لاَ تَنَامُ بِاللَّيْلِ. فَذُكِرَ مِنْ صَلاَتِهَا فَقَالَ "" مَهْ عَلَيْكُمْ مَا تُطِيقُونَ مِنَ الأَعْمَالِ، فَإِنَّ اللَّهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا "".
பாடம் : 18 வழிபாடுகளில் (சக்திக்கு மீறி) சிரமங்களை உருவாக்கிக் கொள்ளலாகாது.17
1151. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ‘பனூ அசத்’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்து, “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான் “இவர் இன்னார்” என்று கூறிவிட்டு, “இரவெல்லாம் உறங்கமாட்டார் (தொழுதுகொண்டே இருப்பார்) என்று அவரது தொழுகை குறித்து கூறப்படுகிறது என்றேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் “போதும் நிறுத்து!” என்று கூறிவிட்டு, “(வழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் இயன்றதையே (நிலையாகச்) செய்துவாருங்கள். நிச்சயமாக நீங்கள் சடைவடையாத வரை அல்லாஹ்வும் சடைவடையமாட்டான்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 19
1152. حَدَّثَنَا عَبَّاسُ بْنُ الْحُسَيْنِ، حَدَّثَنَا مُبَشِّرٌ، عَنِ الأَوْزَاعِيِّ،. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا عَبْدَ اللَّهِ، لاَ تَكُنْ مِثْلَ فُلاَنٍ، كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ "". وَقَالَ هِشَامٌ حَدَّثَنَا ابْنُ أَبِي الْعِشْرِينَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ بْنِ ثَوْبَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، مِثْلَهُ. وَتَابَعَهُ عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ عَنِ الأَوْزَاعِيِّ،.
பாடம் : 19 இரவுத் தொழுகை தொழுது வருபவர் அதைக் கைவிடக் கூடாது.
1152. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ்! இரவில் (அதிகமாக) நின்று வழிபாடு செய்துவிட்டு, இறுதியில் இரவுத் தொழுகையையே கைவிட வேண்டிய நிலைக்கு ஆளான இன்ன மனிதரைப் போன்று நீரும் ஆகிவிட வேண்டாம்” என்று கூறி னார்கள்.18

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 19
1153. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْعَبَّاسِ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ "" قُلْتُ إِنِّي أَفْعَلُ ذَلِكَ. قَالَ "" فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ هَجَمَتْ عَيْنُكَ وَنَفِهَتْ نَفْسُكَ، وَإِنَّ لِنَفْسِكَ حَقٌّ، وَلأَهْلِكَ حَقٌّ، فَصُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ "".
பாடம் : 20
1153. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீர் இரவெல்லாம் நின்று வழிபடுவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் கேள்விப்பட்டேனே (உண்மையா)?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அப்படித்தான் செய்கிறேன்” என்றேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இவ்வாறு செய்தால், உம்முடைய கண்கள் சொருகிவிடும்; உமது உடல் நலிந்துவிடும். நீர் உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன; உம்மு டைய குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன. எனவே, நீர் (ஒரு நாள்) நோன்பு நோற்பீ ராக! (ஒரு நாள்) நோன்பை விட்டுவிடு வீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக!” என்று கூறினார்கள்.19

அத்தியாயம் : 19
1154. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا الْوَلِيدُ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، قَالَ حَدَّثَنِي جُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ، حَدَّثَنِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ فَقَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ. الْحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ. ثُمَّ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي. أَوْ دَعَا اسْتُجِيبَ، فَإِنْ تَوَضَّأَ وَصَلَّى قُبِلَتْ صَلاَتُهُ "".
பாடம் : 21 இரவில் உறக்கம் கலைந்தவர் தொழுவதன் சிறப்பு
1154. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இரவில் உறக்கம் கலைந்ததோடு வாய்விட்டு, “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி, வ சுப்ஹானல்லாஹி, வ லா இலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்”

(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் யாரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகுவதோ நன்மை செய்யும் ஆற்றல் பெறுவதோ கிடையாது) என்று கூறிவிட்டு,

‘அல்லாஹும்மஃக்பிர்லீ’ (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ, அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை ஏற்கப்படும். அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும்.

இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 19
1155. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي الْهَيْثَمُ بْنُ أَبِي سِنَانٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ وَهُوَ يَقْصُصُ فِي قَصَصِهِ وَهُوَ يَذْكُرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ أَخًا لَكُمْ لاَ يَقُولُ الرَّفَثَ. يَعْنِي بِذَلِكَ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ وَفِينَا رَسُولُ اللَّهِ يَتْلُو كِتَابَهُ إِذَا انْشَقَّ مَعْرُوفٌ مِنَ الْفَجْرِ سَاطِعُ أَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمَى فَقُلُوبُنَا بِهِ مُوقِنَاتٌ أَنَّ مَا قَالَ وَاقِعُ يَبِيتُ يُجَافِي جَنْبَهُ عَنْ فِرَاشِهِ إِذَا اسْتَثْقَلَتْ بِالْمُشْرِكِينَ الْمَضَاجِعُ تَابَعَهُ عُقَيْلٌ. وَقَالَ الزُّبَيْدِيُّ أَخْبَرَنِي الزُّهْرِيُّ عَنْ سَعِيدٍ وَالأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه.
பாடம் : 21 இரவில் உறக்கம் கலைந்தவர் தொழுவதன் சிறப்பு
1155. ஹைஸம் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் உரை யாற்றிக்கொண்டிருந்தபோது, தமது பேச்சி னிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு, “உங்களுடைய சகோதரர் எதையும் தவறாகச் சொல்பவர் அல்லர்” என்று குறிப்பிட்டுவிட்டு, (நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர் இயற்றிய) பின்வரும் பாடல் வரிகளை எடுத்துரைத் தார்கள்:

எங்களிடையே

இறைவேதத்தை ஓதுகிறார்

இறைத்தூதர்

வைகறை புலரும்போது!

எங்களுக்கு

நல்வழி காட்டினார்

நாங்கள் இருந்ததோ இருட்டில்!

அவர்

சொன்னதெல்லாம் நடக்கும்

இப்போது எம்

இதயங்களுக்கு உறுதி!

இரவில் அவர் விலா

படுக்கைக்கு

அந்நியம்

இணைவைப்பாளர்களோ

மஞ்சங்களில் தஞ்சம்!

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 19
1156. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما قَالَ رَأَيْتُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَأَنَّ بِيَدِي قِطْعَةَ إِسْتَبْرَقٍ، فَكَأَنِّي لاَ أُرِيدُ مَكَانًا مِنَ الْجَنَّةِ إِلاَّ طَارَتْ إِلَيْهِ، وَرَأَيْتُ كَأَنَّ اثْنَيْنِ أَتَيَانِي أَرَادَا أَنْ يَذْهَبَا بِي إِلَى النَّارِ فَتَلَقَّاهُمَا مَلَكٌ فَقَالَ لَمْ تُرَعْ خَلِّيَا عَنْهُ. فَقَصَّتْ حَفْصَةُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم إِحْدَى رُؤْيَاىَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ". فَكَانَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه ـ يُصَلِّي مِنَ اللَّيْلِ. وَكَانُوا لاَ يَزَالُونَ يَقُصُّونَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الرُّؤْيَا أَنَّهَا فِي اللَّيْلَةِ السَّابِعَةِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَتْ فِي الْعَشْرِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيْهَا فَلْيَتَحَرَّهَا مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ ".
பாடம் : 21 இரவில் உறக்கம் கலைந்தவர் தொழுவதன் சிறப்பு
1156. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு கனவு கண்டேன். அதில். பட்டுக் கம்பளத் துண்டு ஒன்று என் கையில் இருப்பதைப் போன்றும், நான் சொர்க்கத் தில் எந்த இடத்திற்குச் செல்ல விரும் பினாலும் அது என்னை அந்த இடத்திற் குக் கொண்டுசெல்வதைப் போன்றும் கண்டேன்.

மேலும், நான் (வானவர்கள்) இரு வரைக் கண்டேன். அவர்கள் இருவரும் என்னிடம் வந்து என்னை நரகத்திற்குக் கொண்டுசெல்ல முற்பட்டனர். அப்போது அவர்கள் இருவரையும் மற்றொரு வானவர் சந்தித்து ‘இவரை விட்டுவிடுங்கள்’ என்று கூறிவிட்டு என்னிடம், ‘அஞ்சாதீர்!’ என்று கூறினார்.

இந்தக் கனவை (நான் என் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன்.) உடனே ஹஃப்ஸா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது, “அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு சிறந்த மனிதர்தான். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்)” என்று கூறினார்கள்.

(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:)

(நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் ஒரு பகுதியில் தொழுதுவந்தார்கள்.

மக்கள் சிலர், நபி (ஸல்) அவர்களிடம் கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவானது (ரமளான் மாதத்தின்) கடைசிப் பத்து நாட்களில் இருபத்து ஏழாம் இரவு என்று கனவில் காட்டப்பட்டதாக விவரித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களைப் போன்றே நானும் கனவு கண்டேன். அது (கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாள்தான் என்பதில் உங்கள் கனவை எனது கனவும்) ஒத்திருக்கின்றது. ஆகவே, அந்த (கண்ணியமிக்க) இரவைத் தேடுபவர் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் தேடட்டும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 19
1159. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ ـ هُوَ ابْنُ أَبِي أَيُّوبَ ـ قَالَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الْعِشَاءَ ثُمَّ صَلَّى ثَمَانَ رَكَعَاتٍ وَرَكْعَتَيْنِ جَالِسًا وَرَكْعَتَيْنِ بَيْنَ النِّدَاءَيْنِ، وَلَمْ يَكُنْ يَدَعُهُمَا أَبَدًا‏.‏
பாடம் : 22 ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்தைத் தொடர்ந்து தொழுதுவருவது
1159. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகை தொழுதுவிட்டுப் பின்னர் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும், உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (ஃபஜ்ருடைய) பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களையும் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை.20

அத்தியாயம் : 19
1160. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى رَكْعَتَىِ الْفَجْرِ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ‏.‏
பாடம் : 23 ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத் தொழுதபின் வலப் புறம் சாய்ந்து படுத்திருப்பது
1160. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத் தொழுததும் வலப் புறம் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.

அத்தியாயம் : 19
1161. حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى ‏{‏سُنَّةَ الْفَجْرِ‏}‏ فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ حَتَّى يُؤْذَنَ بِالصَّلاَةِ‏.‏
பாடம் : 24 ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்திற்குப் பிறகு படுக்காமல் பேசிக்கொண்டி ருத்தல்
1161. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுததும் நான் விழித்திருந் தால் என்னுடன் பேசிக்கொண்டிருப் பார்கள். இல்லாவிடில் (ஃபஜ்ர்) தொழு கைக்கு அழைக்கப்படும்வரை படுத்து ஓய்வெடுப்பார்கள்.

அத்தியாயம் : 19
1162. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا الاِسْتِخَارَةَ فِي الأُمُورِ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ ‏ "‏ إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ ـ قَالَ ـ وَيُسَمِّي حَاجَتَهُ ‏"‏‏.‏
பாடம் : 25 கூடுதலான தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவது குறித்து வந்துள் ளவை21 இவ்வாறு (தொழுவது குறித்து) அம்மார் பின் யாசிர் (ரலி), அபூதர் (ரலி), அனஸ் (ரலி), ஜாபிர் பின் ஸைத் (ரஹ்), இக்ரிமா (ரஹ்), இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) ஆகியோரிடமிருந்து தகவல் அறிவிக்கப் பட்டுள்ளது. பகலில் (தொழும் கூடுதல் தொழுகை களில்) நமது (மதீனா) நகர மார்க்க அறிஞர்கள், ஒவ்வோர் இரண்டு ரக்அத் களிலும் சலாம் கொடுப்பதையே நான் கண்டுள்ளேன் என யஹ்யா பின் சயீத் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
1162. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு குர்ஆன் அத்தியாயங் களைக் கற்றுக்கொடுப்பதைப் போன்று, எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுப்பதற்கான முறையையும் கற்றுக்கொடுப்பவர்களாய் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு காரியத்தை(ச் செய்ய) நாடினால், கடமையான தொழுகை அல்லாத (கூடுதலான தொழுகையாக) இரண்டு ரக்அத்களைத் தொழட்டும். பின்னர் (பின்வருமாறு) பிரார்த்திக்கட்டும்:

அல்லாஹும்ம! இன்னீ அஸ்தகீரு(க்)க பி இல்மி(க்)க. வ அஸ்தக்திரு(க்)க பி குத்ரத்தி(க்)க. வ அஸ்அலு(க்)க மின் ஃபள்லி(க்)கல் அழீம். ஃப இன்ன(க்)க தக்திரு, வலா அக்திரு, வ தஅலமு வலா அஉலமு. வ அன்(த்)த அல்லாமல் ஃகுயூப்.

அல்லாஹும்ம! இன் குன்(த்)த தஅலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ ‘ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆக்கிப(த்)தி அம்ரீ’ / ‘ஃபீ ஆஜிலி அம்ரீ வ ஆஜிலிஹி / ஃபக்துர்ஹு லீ, வ யஸ்ஸிர்ஹு லீ, ஸும்ம பாரிக் லீ ஃபீஹீ. வ இன் குன்(த்)த தஅலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ ‘ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆக்கிப(த்)தி அம்ரீ’ / ‘ஃபீ ஆஜிலி அம்ரீ வ ஆஜிலிஹி / ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ. வஸ்ரிஃப்னீ அன்ஹு. வக்துர்ஹு லியல்கைர ஹைஸு கான, ஸும்ம அர்ளினீ.

(பொருள்: இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் நான் வேண்டுகிறேன். உனது ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உனது மகத்தான தயவை உன்னிடம் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவான வற்றை நன்கறிந்தவன்.

இறைவா! (நான் செய்யப்போகும்) இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ / அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ / நன்மையானதாக இருக்கும் என நீ அறிந்தால், அதைச் செய்வதற்கு எனக்கு ஆற்றல் வழங்குவாயாக! அதை எனக்கு எளிதாக்குவாயாக! பிறகு அதில் எனக்கு வளத்தை வழங்குவாயாக!

(நான் செய்யப்போகும்) இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ -அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’- கேடாக அமையும் என நீ அறிந்தால், இக்காரியத்தை என்னை விட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய செயல் திறனை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதைத் திருப்தி கொண்டவனாக என்னை ஆக்குவாயாக!)

பிறகு அவர் தமது தேவை இன்னதெனக் குறிப்பிடட்டும்.


அத்தியாயம் : 19
1163. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، سَمِعَ أَبَا قَتَادَةَ بْنَ رِبْعِيٍّ الأَنْصَارِيّ َ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلاَ يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ ‏"‏‏.‏
பாடம் : 25 கூடுதலான தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவது குறித்து வந்துள் ளவை21 இவ்வாறு (தொழுவது குறித்து) அம்மார் பின் யாசிர் (ரலி), அபூதர் (ரலி), அனஸ் (ரலி), ஜாபிர் பின் ஸைத் (ரஹ்), இக்ரிமா (ரஹ்), இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) ஆகியோரிடமிருந்து தகவல் அறிவிக்கப் பட்டுள்ளது. பகலில் (தொழும் கூடுதல் தொழுகை களில்) நமது (மதீனா) நகர மார்க்க அறிஞர்கள், ஒவ்வோர் இரண்டு ரக்அத் களிலும் சலாம் கொடுப்பதையே நான் கண்டுள்ளேன் என யஹ்யா பின் சயீத் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
1163. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் (பள்ளிவாசல் காணிக்கையாக) இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்.

இதை அபூகத்தாதா பின் ரிப்ஈ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22


அத்தியாயம் : 19