938. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஓர் அலுவல் நிமித்தம் அனுப்பினார்கள். பிறகு அவர்கள் (தமது வாகனத்தில் கூடுதலான தொழுகை) தொழுதவாறு சென்று கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். உடனே அவர்கள் (பதிலுக்கு) என்னை நோக்கி சைகை செய்தார்கள் (பதில் சலாம் சொல்லவில்லை). அவர்கள் தொழுது முடித்ததும் என்னை அழைத்து, "சற்று முன்னர் எனக்கு நீங்கள் சலாம் சொன்னீர்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்தேன் (அதனால்தான் பதில் சலாம் சொல்லவில்லை)" என்று கூறினார்கள். அப்போது அவர்களுடைய முகம் கிழக்குத் திசையை முன்னோக்கி இருந்தது (கிப்லாவை முன்னோக்கியிருக்கவில்லை).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5

939. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனுல் முஸ்தலிக் குலத்தாரை நோக்கிப் பயணம் செய்தபோது என்னை (ஓர் அலுவல் நிமித்தம் ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். நான் (அலுவலை முடித்துவிட்டு) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமது ஒட்டகத்தில் அமர்ந்தவாறு குர்ஆன் ஓதித் தமது தலையால் சைகை செய்து தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். உடனே அவர்கள் தமது கரத்தால் இவ்வாறு சைகை செய்தார்கள் -இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹைர் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது தமது கரத்தால் (இவ்வாறு என) சைகை செய்து காட்டினார்கள்- பிறகு மீண்டும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். அப்போதும் அவர்கள் இவ்வாறு சைகை செய்தார்கள் -அறிவிப்பாளர் ஸுஹைர் (ரஹ்) அவர்கள் மீண்டும் (இவ்வாறு என) பூமியை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்து காட்டினார்கள்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், "நான் உங்களை அனுப்பிவைத்த காரியம் என்ன ஆயிற்று?" என்று கேட்டுவிட்டு, "நான் தொழுதுகொண்டிருந்ததால்தான் (நீங்கள் பேசியபோது) உங்களிடம் நான் பேசவில்லை" என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் ஸுஹைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அபுஸ்ஸுஹைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும்போது இறையில்லம் கஅபாவை முன்னோக்கி அமர்ந்திருந்தார்கள். அப்போது பனுல் முஸ்தலிக் குலத்தாரின் வசிப்பிடத்தை நோக்கி சைகை செய்து காட்டினார்கள்;அப்போது கஅபா அல்லாத வேறொரு திசையை நோக்கியே தமது கரத்தால் சைகை செய்தார்கள்.

940. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (பனுல் முஸ்தலிக் பயணத்தின்போது) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் என்னை ஓர் அலுவல் விஷயமாக அனுப்பினார்கள். நான் (அந்த அலுவலை முடித்துத்) திரும்பி வந்தபோது அவர்கள் தமது வாகன(ஒட்டக)த்தில் இறையில்லம் கஅபா அல்லாத வேறொரு திசையை நோக்கி அமர்ந்தவாறு (கூடுதலான தொழுகையைத்) தொழுதுகொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். ஆனால் அவர்கள் எனக்கு பதில் சலாம் சொல்லவில்லை. அவர்கள் தொழுது முடித்ததும் "நான் தொழுதுகொண்டிருந்ததால்தான் உங்களுக்கு பதில் சலாம் கூறவில்லை" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸின் கருத்திலமைந்த ஒரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 9 தொழுகைக்கு இடையில் ஷைத்தானைச் சபிக்கலாம்; அவனிடமிருந்து காக்குமாறு (இறைவனை) வேண்டலாம். தொழுகையில் குறைந்த அளவிலான புறச்செயல்களைச் செய்யலாம்.
941. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பின்வருமாறு) கூறினார்கள்:
நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று எனது தொழுகையைக் கெடுக்க சதி செய்தது. அல்லாஹ் அதன் மீது எனக்குச் சக்தியை வழங்கினான். அதன் குரல்வளையை நான் பிடித்துவிட்டேன். காலையில் "எல்லாரும்" அல்லது "நீங்கள் அனைவரும்"வந்து அதைக் காணும்வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நான் நினைத்தேன். பிறகு என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள், "இறைவா! என்னை மன்னித்துவிடுவாயாக! மேலும்,எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு நீ வழங்குவாயாக" (38:35) என்று வேண்டியது என் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். பின்னர்) அல்லாஹ் அந்த ஜின்னை இழிந்த நிலையில் விரட்டியடித்துவிட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நான் அதன் குரல்வளையைப் பிடித்துவிட்டேன்"எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நான் அதை பலமாகப் பிடித்துத் தள்ளிவிட்டேன்" என்று இடம்பெற்றுள்ளது.

942. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தொழும்போது "நான் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்றும், "அல்லாஹ்வின் சாபத்தால் உன்னை நான் சபிக்கிறேன்"என்றும் மூன்று முறை கூறியதை நாங்கள் செவியுற்றோம். மேலும், அவர்கள் தமது கரத்தை விரித்து எதையோ பிடிப்பதைப் போன்று சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் தொழும்போது ஒன்றைக் கூறினீர்கள். இதற்கு முன் தாங்கள் அவ்வாறு கூறியதை நாங்கள் கேட்டதில்லையே? மேலும், நீங்கள் உங்கள் கரத்தை விரித்ததையும் நாங்கள் கண்டோமே (ஏன்)?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் எதிரி இப்லீஸ் ஒரு தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு அதை என் முகத்தில் வைக்க (என்னிடம்) வந்தான். உடனே நான் "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று மூன்று முறையும் "அல்லாஹ்வின் முழு சாபத்தால் உன்னை நான் சபிக்கிறேன்” என மூன்று முறையும் கூறினேன். ஆனால், அவன் பின்வாங்கிச் செல்லவில்லை. பிறகு நான் அவனைப் பிடிக்க விரும்பினேன். அல்லாஹ்வின் மீதாணையாக! எம் சகோதரர் சுலைமான் (அலை) அவர்களின் வேண்டுதல் மட்டும் இல்லையாயின், காலையில் மதீனா நகரச் சிறுவர்கள் அவனுடன் விளையாடும் வகையில் (இந்தப் பள்ளிவாசலில்) அவன் கட்டிவைக்கப் பட்டிருப்பான்" என்று சொன்னார்கள்.

பாடம் : 10 குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழலாம்.
943. அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் -தம் புதல்வி ஸைனபுக்கும் அபுல்ஆஸ் பின் அர்ரபீஉ அவர்களுக்கும் பிறந்த- (தம் பேத்தி) உமாமாவை (தமது தோளில்) சுமந்துகொண்டு தொழுவார்கள். அவர்கள் (நிலையில்) நிற்கும்போது உமாமாவைச் சுமப்பார்கள்; சஜ்தாவுக்குச் செல்லும்போது உமாமாவை இறக்கிவிடுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் மாலிக் (ரஹ்) அவர்களிடம், "இந்த ஹதீஸை அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அம்ர் பின் சுலைம் அஸ்ஸுரைக் (ரஹ்) அவர்களும், அம்ர் அவர்களிடமிருந்து ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் உங்களுக்கு அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்.

944. அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், -தம் புதல்வி ஸைனபுக்கும் அபுல்ஆஸ் பின் அர்ரபீஉக்கும் பிறந்த- (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபைத் தமது தோளில் சுமந்துகொண்டு மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்ததை நான் பார்த்தேன். அவர்கள் ருகூஉக்குச் செல்லும் போது உமாமாவை இறக்கிவிட்டார்கள். சஜ்தாவிலிருந்து எழும்போது மீண்டும் உமாமாவைத் தமது தோளில் அமர்த்திக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
நபி (ஸல்) அவர்கள், -தம் புதல்வி ஸைனபுக்கும் அபுல்ஆஸ் பின் அர்ரபீஉக்கும் பிறந்த- (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபைத் தமது தோளில் சுமந்துகொண்டு மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்ததை நான் பார்த்தேன். அவர்கள் ருகூஉக்குச் செல்லும் போது உமாமாவை இறக்கிவிட்டார்கள். சஜ்தாவிலிருந்து எழும்போது மீண்டும் உமாமாவைத் தமது தோளில் அமர்த்திக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
945. அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபைத் தமது கழுத்தின் மீது சுமந்தவாறு மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்கள் சஜ்தாவிற்குச் செல்லும் போது உமாமாவை இறக்கிவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. ஆனால், "அத்தொழுகையை அவர்கள் மக்களுக்குத் தொழுவித்தார்கள்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.

பாடம் : 11 தொழுகையில் ஓரிரு அடிகள் எடுத்து வை(த்து நட)க்கலாம்.
946. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து (நபி (ஸல்) அவர்களின்) மிம்பர் (சொற்பொழிவு மேடை) எந்த மரத்தால் செய்யப்பட்டது
என்பது தொடர்பாகச் சர்ச்சை செய்தனர். அப்போது சஹ்ல் (ரலி) அவர்கள், "அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த மரத்தால் செய்யப்பட்டது, அதைச் செய்தவர் யார் என்பதை நான் நன்கறிவேன். அதன் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் நாளில் அமர்ந்ததையே நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்கள். நான், "அபூஅப்பாஸ் (சஹ்ல் பின் சஅத்) அவர்களே! அது பற்றி எங்களுக்கு (விவரமாக)ச் சொல்லுங்கள்" என்று கூறினேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் ஆளனுப்பி (அவரை வரவழைத்து), "தச்சு வேலை தெரிந்த உன் அடிமையைப் பார்த்து, எனக்காக மரச்சட்டங்களை (இணைத்து மிம்பர் ஒன்றை)ச் செய்யச் சொல்வாயாக! நான் அதன் மீது அமர்ந்து மக்களுக்கு உரையாற்ற வேண்டும்" என்று கூறினார்கள். -அன்று அப்பெண்ணின் பெயரையும் சஹ்ல் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.- அப்போதுதான் மூன்று படிகள் கொண்ட இந்த மிம்பரை அந்த அடிமை செய்தார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அது (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) இந்த இடத்தில் வைக்கப்பட்டது. அது "அல்ஃகாபா” வனத்திலிருந்த ஒரு வகை சவுக்கு மரத்தால் செய்யப்பட்டது.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மேடைமீது (தொழுவதற்காக) நின்று, தக்பீர் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்து மக்கள் தக்பீர் கூறினர். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்ததும் திரும்பாமல் அப்படியே பின்வாக்கில் இறங்கி அந்த மேடையின் கீழ்ப் பகுதி(க்கருகில் தரை)யில் சஜ்தாச் செய்தார்கள். பிறகு முன்போன்றே மீண்டும் (அந்த மேடையில் ஏறியும் இறங்கியும்) இறுதிவரை தொழுதார்கள். பின்னர் மக்களை முன்னோக்கி, "மக்களே! நீங்கள் என்னைப் பின்பற்றவும், எனது தொழுகையை நீங்கள் கற்றுக்கொள்ளவுமே இவ்வாறு நான் செய்தேன்" என்று கூறினார்கள்.

947. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (சிலர்) சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் வந்து "நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எந்த மரத்தால் செய்யப்பட்டது?" என்று கேட்டனர்.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 12 தொழுகையில் இடுப்பில் கை வைப்பது வெறுக்கத் தக்கதாகும்.
948. அபூஹுரைரரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தமது இடுப்பில் கை வைத்தவாறு தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 13 தொழும்போது (சஜ்தாச் செய்வதற்காகத் தரையில் உள்ள) சிறு கற்களை அப்புறப்படுத்துவதும் மண்ணைச் சமப்படுத்துவதும் வெறுக்கத் தக்கதாகும்.
949. முஐகீப் பின் அபீஃபாத்திமா அத்தவ்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், சஜ்தாச் செய்யுமிடத்தில் கிடக்கும் சிறு கற்களை அப்புறப்படுத்துவது பற்றிக் கூறுகையில், "அவ்வாறு செய்துதான் ஆக வேண்டும் என்றிருந்தால் ஒரு தடவை மட்டும் செய்துகொள்க" என்றார்கள்.

950. முஐகீப் பின் அபீஃபாத்திமா அத்தவ்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், தொழுகையில் (சஜ்தாச் செய்யுமிடத்தில் கிடக்கும்) சிறு கற்களை அப்புறப்படுத்துவது பற்றி மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், "ஒரு தடவை மட்டும் (செய்துகொள்ளுங்கள்)" என்று பதிலளித்தார்கள்.
-இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

951. முஐகீப் பின் அபீஃபாத்திமா அத்தவ்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையில்) சஜ்தாச் செய்யும் இடத்திலிருந்த மண்ணைச் சமப்படுத்திய ஒரு மனிதர் தொடர்பாக, "நீர் இவ்வாறு செய்துதான் ஆக வேண்டுமென்றால் ஒரு தடவை மட்டும் செய்துகொள்வீராக!"என்று சொன்னார்கள்.

பாடம் : 14 தொழும்போதோ மற்ற நேரங்களிலோ பள்ளிவாசலுக்குள் எச்சில் துப்பலாகாது.
952. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலின்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் (உமிழப்பட்டிருந்த) எச்சிலைக் கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி(சுத்தப்படுத்தி)ய
பின் மக்களை நோக்கி, "உங்களில் ஒருவர் தொழும்போது தமது முகத்துக்கெதிரே (கிப்லாத் திசையில்) எச்சில் துப்பவேண்டாம். ஏனெனில், அவர் தொழும்போது அல்லாஹ் அவருடைய முகத்துக்கெதிரே இருக்கிறான்" என்று கூறினார்கள்.

953. மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. ஆனால், ளஹ்ஹாக் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. ("பள்ளிவாசலின்" என்ற குறிப்பு இல்லை).

954. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே ஒரு சிறு கல்(லை எடுத்து அதன்) மூலம் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு "ஒரு மனிதர் (தொழும்போது உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால்) தமது வலப் பக்கத்தில் அல்லது முன் பக்கத்தில் உமிழ வேண்டாம்" என்று தடை விதித்தார்கள். "மாறாக, தமது இடப் பக்கத்தில் அல்லது தம் பாதங்களுக்கு அடியில் அவர் உமிழ்ந்துகொள்ளட்டும்"என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோரிடமிருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றிலும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ,(காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள்" எனும் வாசகமே இடம் பெற்றுள்ளது.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலுள்ள சுவரில் "எச்சிலை” அல்லது "மூக்குச் சளியை" அல்லது "காறல் சளியைக்” கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி(சுத்தப் படுத்தி)னார்கள்.

955. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாவில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே அவர்கள் மக்களை முன்னோக்கி, "உங்களில் ஒருவருக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவர் தம் இறைவனை முன்னோக்கி நின்று கொண்டு அவனுக்கு முன்னேயே காறி உமிழுகின்றார். உங்களில் ஒருவர் தமது முகத்திற்கெதிரே உமிழப்படுவதை விரும்புவாரா? உங்களில் ஒருவருக்கு உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர் தமது இடப் பக்கத்தில் பாதத்திற்கடியில் உமிழ்ந்து கொள்ளட்டும். அது முடியாவிட்டால் அவர் இவ்வாறு செய்துகொள்ளட்டும்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான காசிம் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும் போது, தமது ஆடையி(ன் ஓர் ஓரத்தி)ல் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஹுஷைம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆடையின் (ஓர் ஓரத்தில் உமிழ்ந்து) அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது” என்று (அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

956. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது அவர் தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்னாலோ (அதாவது கிப்லாத் திசையிலோ) வலப் பக்கமோ உமிழ வேண்டாம். (வேண்டுமானால்) அவர் தமது இடப் பக்கத்தில் பாதத்திற்கடியில் உமிழ்ந்து கொள்ளட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
உங்களில் ஒருவர் தொழும்போது அவர் தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்னாலோ (அதாவது கிப்லாத் திசையிலோ) வலப் பக்கமோ உமிழ வேண்டாம். (வேண்டுமானால்) அவர் தமது இடப் பக்கத்தில் பாதத்திற்கடியில் உமிழ்ந்து கொள்ளட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
957. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அ(வ்வாறு உமிழ்ந்த)தை மண்ணுக்குள் புதைப்பதே அதற்குரிய பரிகாரமாகும்.