2348. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அது -அதாவது ஹஜ் காலத்தில் "தமத்துஉ" செய்வது- (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.
அத்தியாயம் : 15

2349. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தவணை முறைத் திருமணம் (முத்ஆ), ஹஜ் காலத்தில் "தமத்துஉ" செய்வது ஆகிய இரு "முத்ஆ"க்களும் (நபித்தோழர்களாகிய) எங்களைத் தவிர வேறெவருக்கும் பொருந்தாது.

2350. அப்துர் ரஹ்மான் பின் அபிஷ்ஷஅஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) ஆகியோரிடம் சென்று, "நான் இவ்வருடம் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்ய (தமத்துஉ) முடிவு செய்துள்ளேன்" என்றேன்.
அதற்கு இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், "ஆனால், உங்கள் தந்தை (அபுஷ் ஷஅஸா) அவர்கள் இவ்வாறு (தமத்துஉ செய்ய) முடிவு செய்பவராக இருக்கவில்லை" என்றார்கள்.
இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
என் தந்தை யஸீத் பின் ஷரீக் (ரஹ்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) "அர்ரபதா" எனும் இடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்துசென்றார்கள். அப்போது அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம் இதை (தமத்துஉ) பற்றி வினவியபோது அபூதர் (ரலி) அவர்கள், "தமத்துஉ செய்வது, (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது. அது உங்களுக்கு உரியதன்று"என விடையளித்தார்கள்.

2351. ஃகுனைம் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் "தமத்துஉ" முறையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (நபித்தோழர்களாகிய) நாங்கள் அவ்வாறு செய்துள்ளோம். இதோ இவர் (முஆவியா) அன்றைய நாளில் "உருஷில்" அதாவது மக்காவில் இறைமறுப்பாளராக இருந்தார்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இதோ இவர் -அதாவது முஆவியா (ரலி) அவர்கள்" என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஹஜ் காலத்தில் உம்ராச் செய்வது (தமத்துஉ)" என்று இடம்பெற்றுள்ளது.

2352. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், "நான் இன்றைய தினம் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிக்கப்போகிறேன்;அதன் மூலம் உமக்கு அல்லாஹ் இதற்குப் பின்னாலும் பயனளிப்பான். அறிந்துகொள்க: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் சிலரை, (ஹஜ் மாதத்தின்) பத்தாவது நாளில் உம்ராவிற்கு இஹ்ராம் கட்ட அனுமதித்தார்கள். இந்த நடைமுறையை மாற்றக்கூடிய எந்த இறைவசனமும் அருளப் பெறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யாமலேயே இறந்தும்விட்டார்கள். பின்னர் ஒவ்வொரு மனிதரும் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினர்" என்றார்கள்.

2353. மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பின்னர் ஒரு மனிதர் (அதாவது உமர் (ரலி) அவர்கள்) தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
அத்தியாயம் : 15
2354. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், "நான் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிக்கப் போகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக்கூடும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து, (தமத்துஉ) செய்யச் சொன்னார்கள். பின்னர் அவர்கள் இறக்கும்வரை அதற்குத் தடை விதிக்கவில்லை. அதைத் தடை செய்யும் எந்த இறைவசனமும் அருளப்பெறவுமில்லை. நான் (எனக்கு ஏற்பட்ட மூலநோய்க்காகச்) சூடிட்டுக்கொள்ளும்வரை எனக்கு (வானவர்களால்) சலாம் சொல்லப்பட்டுவந்தது. நான் சூடிட்டுக்கொண்டபோது, எனக்கு சலாம் சொல்வது கைவிடப் பட்டது. பின்னர் சூடிட்டுக்கொள்வதை நான் கைவிட்டேன்; (சலாம்) தொடர்ந்தது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.

2355. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் எந்த நோயால் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது என்னிடம் ஆளனுப்பி (என்னை அழைத்தார்கள். நான் சென்றபோது பின்வருமாறு) கூறினார்கள்:
நான் உமக்குச் சில ஹதீஸ்களை அறிவிக்கப்போகிறேன். எனக்குப் பின்னர் அவற்றின் மூலம் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடும். நான் உயிரோடு வாழ்ந்தால் அவற்றை யாருக்கும் அறிவிக்க வேண்டாம். நான் இறந்துவிட்டால் நீர் விரும்பினால் அவற்றை (மக்களிடம்) அறிவியுங்கள்.
எனக்கு (வானவர்களால்) சலாம் சொல்லப்பட்டுவந்தது. அறிக: நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் (ஹஜ் காலத்தில்) சேர்த்துள்ளார்கள். பின்னர் அந்நடைமுறையை மாற்றக்கூடிய எந்த இறைவசனமும் அருளப் பெறவில்லை. நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவுமில்லை. பின்னர் ஒரு மனிதர் அவ்(வாறு தமத்துஉ செய்யும்) விஷயத்தில் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.

2356. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறிந்துகொள்க: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்தார்கள். அ(தைத் தடை செய்யும் விதத்)தில் குர்ஆன் வசனம் ஏதும் அருளப் பெறவில்லை. (பின்னர்) ஒரு மனிதர் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.

2357. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "தமத்துஉ" செய்துள்ளோம். அ(தைத் தடை செய்யும் விதத்)தில் குர்ஆன் வசனம் ஏதும் அருளப்பெறவில்லை. (பின்னர்) ஒரு மனிதர் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.

2358. மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நபி (ஸல்) அவர்கள் "தமத்துஉ" செய்தார்கள்; அவர்களுடன் நாங்களும் "தமத்துஉ" செய்தோம்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
அதில் "நபி (ஸல்) அவர்கள் "தமத்துஉ" செய்தார்கள்; அவர்களுடன் நாங்களும் "தமத்துஉ" செய்தோம்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2359. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தமத்துஉ" முறை ஹஜ் பற்றிய வசனம் (2:196) இறைவேதத்தில் அருளப்பெற்றது. அவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். "தமத்துஉ" முறை ஹஜ் பற்றிய அந்த வசனத்தைக் காலாவதியாக்கக்கூடிய வேறெந்த வசனமும் பின்னர் அருளப்பெறவு மில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் இறக்கும்வரை அதற்குத் தடை விதிக்கவுமில்லை. பின்னர் ஒரு மனிதர் (மட்டும்) தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.

2360. மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால், அதில் "அவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. "நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம்" என்றே இடம்பெற்றுள்ளது.

பாடம் : 24 ஹஜ்ஜுடன் உம்ராவையும் செய்து பயனடைந்தவர் (முத்தமத்திஉ), அதற்காகப் பலிப்பிராணியை அறுப்பது கடமையாகும்; பலிப்பிராணி இல்லாதவர் ஹஜ் நாட்களில் மூன்று நோன்புகளும் வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்பது அவசியமாகும்.
2361. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது உம்ராவுடன் ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்கள்.அவர்கள் பலிப்பிராணியை (ஹஜ்ஜில்) அறுத்துப் பலியிட்டார்கள். (மதீனாவாசிகள் "இஹ்ராம்" கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவில் இருந்தே தம்முடன் பலிப்பிராணியை நபியவர்கள் கொண்டுவந்தார்கள். முதலில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறி, பின்னர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள். மக்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்குமாக "இஹ்ராம்" கட்டியிருந்தனர். மக்களில் சிலர் பலிப்பிராணியை அறுத்துப் பலியிடுபவர்களாக இருந்தனர். (அதற்காக) அவர்கள் பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவந்திருந்தனர். வேறுசிலரோ அறுத்துப் பலியிடுபவர்களாக இருக்கவில்லை. (ஏனெனில், அவர்கள் தம்முடன் பலிப்பிராணியை கொண்டு வந்திருக்கவில்லை.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும், மக்களிடம் "உங்களில் பலிப் பிராணியைக் கொண்டுவந்தவர்கள்,தமது ஹஜ்ஜை நிறைவு செய்யாதவரை இஹ்ராமிலிருந்து விடுபடக்கூடாது. பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இறை யில்லம் கஅபாவையும், ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் சுற்றி வந்துவிட்டு, தமது தலைமுடியை குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளட்டும். பின்னர் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி அறுத்துப் பலியிடட்டும். பலிப்பிராணி கிடைக்காதவர்கள், ஹஜ்ஜின் நாட்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை முடித்து) தமது வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்றுக்கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும் (கஅபாவை ஏழு முறை) சுற்றிவந்து விட்டு, முதல் வேலையாக (கஅபாவின்) மூலையை (ஒட்டிப் பதிக்கப்பெற்றுள்ள ஹஜருல் அஸ்வதை)த் தொட்டு முத்தமிட்டார்கள். ஏழில் மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கி) வேகமாக நடந்தும், நான்கு சுற்றுகள் மெதுவாக நடந்தும் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள். இறையில்லத்தைச் சுற்றி முடித்ததும் மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் சலாம் கொடுத்துவிட்டு நேராக ஸஃபாவுக்குச் சென்று, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஏழு தடவைச் சுற்றி (சயீ) வந்தார்கள்.
பிறகு ஹஜ்ஜை முடிக்கும்வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடாமலிருந்தார்கள். துல்ஹஜ் பத்தாவது நாள் (யவ்முந் நஹ்ர்) அன்று தமது பலிப்பிராணியை அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள்.
மக்களில் பலிப்பிராணியைக் கொண்டுவந்து அறுத்துப் பலியிட்டவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்தனர்.

2362. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தோழர்களும் உம்ராவுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியதைப் பற்றிய மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
அத்தியாயம் : 15
பாடம் : 25 ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவர் (முஃப்ரித்) இஹ்ராமிலிருந்து விடுபடுகின்ற நேரததில்தான் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து "இஹ்ராம்"கட்டியவரும் (காரின்) இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.
2363. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்களின் நிலை என்ன? நீங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமலிருக்கும்போதே, அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்துவிட்டேன். மேலும், எனது பலிப் பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்டுவிட்டேன். ஆகவே, நான் (ஹஜ்ஜை முடித்து அந்தப் பிராணியை) பலியிடாதவரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமிலிருக்கிறீர்களே?" என்று நான் கேட்டேன் என ஹதீஸ் ஆரம்பமாகிறது.

2364. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "மக்களின் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமலிருக்கும் போதே, அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்களே?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் எனது பலிப்பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்டுவிட்டேன். மேலும், நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்துவிட்டேன். ஆகவே, நான் ஹஜ் செய்து முடிக்காத வரை இஹ்ராமிலிருந்து விடு படமாட்டேன்" என்று விடையளித்தார்கள்.

2365. மேற்கண்ட ஹதீஸ் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மேற்கண்ட ஹதீஸில் (2363) உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
அதில், மேற்கண்ட ஹதீஸில் (2363) உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2366. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ் ஆண்டில், (தவாஃபும் சயீயும் செய்துவிட்டு) உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுமாறு தம் துணைவியருக்கு உத்தரவிட்டார்கள். அப்போது நான், "நீங்கள் ஏன் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன். மேலும், எனது பலிப்பிராணிக்கு அடையாள மாலை தொங்க விட்டுவிட்டேன். ஆகவே, நான் (ஹஜ்ஜை முடித்து) எனது பலிப்பிராணியை அறுத்துப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்" என்று விடையளித்தார்கள்.

பாடம் : 26 (ஹஜ், உம்ராவை நிறைவேற்ற முடியாமல் எதிரிகளால்) தடுக்கப்பட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளலாம்; ஒரே இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (கிரான்) செய்யலாம் என்பதன் விளக்கம்.
2367. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மக்காவில் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் முற்றுகை யிட்டிருந்த) குழப்பமான காலகட்டத்தில் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்கள், "நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், (ஹுதைபியா சம்பவத்தின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்ததைப் போன்று செய்வோம்" என்று கூறி விட்டு, உம்ராவிற்காக ("இஹ்ராம்" கட்டி) தல்பியாச் சொல்லிப் புறப்பட்டார்கள். "பைதாஉ" எனும் இடம் வந்ததும் தம் தோழர்களை நோக்கி, "(தடுக்கப்படும்போது இஹ்ராமிலிருந்து விடுபடலாம் என்பதில் ஹஜ், உம்ரா ஆகிய) அவையிரண்டும் ஒன்றுதான். நான் உம்ராவுடன் ஹஜ் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்" என்று கூறினார்கள்.
பிறகு இறையில்லம் கஅபாவிற்கு வந்து, அதை ஏழுமுறை சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; ஸஃபா மற்றும் மர்வா இடையேயும் ஏழு முறை சுற்றி (சயீ) வந்தார்கள். அதைவிடக் கூடுதலாக்கவில்லை. அதுவே (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும்) போதுமானதாகும் என்று கருதினார்கள்; பலிப்பிராணியை அறுத்துப் பலியிடவும் செய்தார்கள்.