984. حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى يَوْمَ النَّحْرِ، ثُمَّ خَطَبَ فَأَمَرَ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ أَنْ يُعِيدَ ذَبْحَهُ فَقَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، جِيرَانٌ لِي ـ إِمَّا قَالَ بِهِمْ خَصَاصَةٌ، وَإِمَّا قَالَ بِهِمْ فَقْرٌ ـ وَإِنِّي ذَبَحْتُ قَبْلَ الصَّلاَةِ وَعِنْدِي عَنَاقٌ لِي أَحَبُّ إِلَىَّ مِنْ شَاتَىْ لَحْمٍ. فَرَخَّصَ لَهُ فِيهَا.
பாடம் : 23
பெருநாள் உரைக்கு நடுவே இமாமும் மக்களும் பேசிக் கொள்வதும் இமாம் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது இமாமிடம் ஒன்றைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டால் (அதற்கு அவர் பதிலளிப்பதும்)
984. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுகை நடத்திவிட்டுப் பிறகு (குத்பா) உரை நிகழ்த்தினார்கள். அப்போது (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தவர் மறுபடியும் குர்பானி கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள்.
அப்போது அன்சாரிகளில் (அபூபுர்தா எனும்) ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே, என் அண்டை வீட்டார் ‘பசியில் இருந்தனர்’ அல்லது ‘வறுமையில் இருந்த னர்’. (ஆகவே,) நான் தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாடு ஒன்று உள்ளது. அது (கொழுத்த) இரண்டு இறைச்சி ஆடுகளை விட எனக்கு விருப்பமானது (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார்.
இந்த விஷயத்தில் அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித் தார்கள்.
அத்தியாயம் : 13

985. حَدَّثَنَا مُسْلِمٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَسْوَدِ، عَنْ جُنْدَبٍ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ ثُمَّ خَطَبَ، ثُمَّ ذَبَحَ فَقَالَ "" مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيَذْبَحْ أُخْرَى مَكَانَهَا، وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ "".
பாடம் : 23
பெருநாள் உரைக்கு நடுவே இமாமும் மக்களும் பேசிக் கொள்வதும் இமாம் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது இமாமிடம் ஒன்றைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டால் (அதற்கு அவர் பதிலளிப்பதும்)
985. ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘ஈதுல் அள்ஹா’ பெருநாளன்று தொழுகை நடத்திவிட்டுப் பிறகு உரையாற்றினார்கள். அதற்குப்பின் ‘குர்பானி’ பிராணியை அறுத்தார்கள்.
“(பெருநாள்) தொழுகைக்கு முன்பே யார் (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டாரோ அவர் அதற்குப் பதிலாக வேறொன்றை அறு(த்து குர்பானி கொடு)க்கட்டும். யார் அறுக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்” என்று கூறினார்கள்.

986. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا أَبُو تُمَيْلَةَ، يَحْيَى بْنُ وَاضِحٍ عَنْ فُلَيْحِ بْنِ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيقَ. تَابَعَهُ يُونُسُ بْنُ مُحَمَّدٍ عَنْ فُلَيْحٍ. وَحَدِيثُ جَابِرٍ أَصَحُّ.
பாடம் : 24
பெருநாள் தொழுகை தொழச் சென்றவர் தொழுதுவிட்டுத் திரும்பும்போது வேறு பாதையில் வருவது
986. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெருநாள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் (ஒரு பாதையில் தொழும் திடலுக்குச் சென்றுவிட்டு) வேறு பாதையில் திரும்பி வருவார்கள்.8
அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்தும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. ஆனால், ஜாபிர் (ரலி) அவர்களின் (மேற்கண்ட அறிவிப்பே) மிகவும் ஆதார பூர்வமானதாகும்.

987. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُدَفِّفَانِ وَتَضْرِبَانِ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مُتَغَشٍّ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَكَشَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ وَجْهِهِ فَقَالَ " دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ ". وَتِلْكَ الأَيَّامُ أَيَّامُ مِنًى.
பாடம் : 25
பெருநாள் தொழுகை தவறி விட்டால், இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.9
(பெருநாள் தொழுகைக்குச் செல்லாத) பெண்களும், வீடுகளில் இருப்போரும், கிராமங்களில் இருப்போரும் இவ்வாறே செயல்பட வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், “இது இஸ்லாமியர்களான நமது பெருநாளாகும்” என்று கூறியுள்ளார்கள்.
(பெருநாள் தொழுகை தவறிவிட்டபோது) அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் தம்முடைய அடிமை இப்னு அபீஉத்பாவுக்கு ஆணையிட்டு, (இராக்கில் பஸ்ராவுக்கு அருகில் உள்ள) ‘ஸாவியா’ எனும் இடத்தில் தம் மனைவி மக்களைத் திரட்டி, நகரவாசிகள் தொழுவதைப் போன்று (இரண்டு ரக்அத்கள்) தொழு(வித்)தார்கள்; அவர்கள் தக்பீர் சொல்வதைப் போன்றே தக்பீர் சொன்னார்கள்.
“கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பெருநாள் தினத்தில் ஒன்றுகூடி இமாம் செய்வதைப் போன்றே இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்” என இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
“ஒருவருக்குப் பெருநாள் தொழுகை தவறிவிட்டால், அவர் (தனியாக) இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
987. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘மினா’வின் நாட்களில் என் அருகில் (அன்சாரிச்) சிறுமியர் இருவர் (சலங்கை யில்லா) கஞ்சிராக்களை அடித்து (புஆஸ் போர் பரணிகளைப் பாடி)க்கொண்டி ருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்தி(ப் படுத்து)க்கொண்டி ருந்தார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து அவ்விருவரையும் அதட்டினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் தமது முகத்திலிருந்து ஆடையை விலக்கி, “அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! (அவர்கள் பாடட்டும்.) ஏனெனில், இவை பண்டிகை நாட்களாகும்” என்று கூறினார்கள். அந்த நாட்கள் (துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) ‘மினா’வின் நாட்களாக அமைந்திருந்தன.10

988. وَقَالَتْ عَائِشَةُ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتُرُنِي، وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ، فَزَجَرَهُمْ عُمَرُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " دَعْهُمْ، أَمْنًا بَنِي أَرْفِدَةَ ". يَعْنِي مِنَ الأَمْنِ.
பாடம் : 25
பெருநாள் தொழுகை தவறி விட்டால், இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.9
(பெருநாள் தொழுகைக்குச் செல்லாத) பெண்களும், வீடுகளில் இருப்போரும், கிராமங்களில் இருப்போரும் இவ்வாறே செயல்பட வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், “இது இஸ்லாமியர்களான நமது பெருநாளாகும்” என்று கூறியுள்ளார்கள்.
(பெருநாள் தொழுகை தவறிவிட்டபோது) அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் தம்முடைய அடிமை இப்னு அபீஉத்பாவுக்கு ஆணையிட்டு, (இராக்கில் பஸ்ராவுக்கு அருகில் உள்ள) ‘ஸாவியா’ எனும் இடத்தில் தம் மனைவி மக்களைத் திரட்டி, நகரவாசிகள் தொழுவதைப் போன்று (இரண்டு ரக்அத்கள்) தொழு(வித்)தார்கள்; அவர்கள் தக்பீர் சொல்வதைப் போன்றே தக்பீர் சொன்னார்கள்.
“கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பெருநாள் தினத்தில் ஒன்றுகூடி இமாம் செய்வதைப் போன்றே இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்” என இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
“ஒருவருக்குப் பெருநாள் தொழுகை தவறிவிட்டால், அவர் (தனியாக) இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
988. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னை மறைத்தபடி நிற்க, நான் பள்ளிவாச-ல் (வீர விளையாட்டுக்கள்) விளையாடிக்கொண்டிருந்த அபிசீனியர்களைப் பார்த்துக்கொண்டி ருந்தேன். அப்போது அவர்களை உமர் (ரலி) அவர்கள் அதட்டினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள், “(உமரே!) அவர்களை விட்டுவிடுங்கள்” என்று கூறிவிட்டு, “அச்சமின்றி விளையாடுங்கள், அர்ஃபிதாவின் மக்களே!” என்று (அபிசீனி யர்களை நோக்கிக்) கூறினார்கள்.

989. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمَ الْفِطْرِ، فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا وَمَعَهُ بِلاَلٌ.
பாடம் : 26
பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் (வேறு தொழு கைகள்) தொழலாமா?
பெருநாள் தொழுகைக்குமுன் (வேறு தொழுகைகள்) தொழுவதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விரும்பிய தில்லை என்று சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
989. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் (பெருநாள் தொழுகை) தொழுதார்கள். அதற்கு முன்பும் எதையும் தொழவில்லை; அதற்குப் பின்பும் எதையும் தொழவில்லை. அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

வித்ருத் தொழுகை
990. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً، تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى "".
பாடம் : 1
வித்ர் தொழுகை தொடர்பாக வந்துள்ளவை
990. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்கள் ஆகும். ஆனால், உங்களில் ஒருவர் சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி அஞ்சினால், அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அது (முன்னர்) அவர் தொழுதவற்றை ஒற்றையாக ஆக்கிவிடும்” என்று பதிலளித்தார்கள்.2
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 14

991. وَعَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يُسَلِّمُ بَيْنَ الرَّكْعَةِ وَالرَّكْعَتَيْنِ فِي الْوِتْرِ، حَتَّى يَأْمُرَ بِبَعْضِ حَاجَتِهِ.
பாடம் : 1
வித்ர் தொழுகை தொடர்பாக வந்துள்ளவை
991. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், வித்ர் தொழும்போது (மூன்று ரக்அத்களில் கடைசி) ஒரு ரக்அத்திற்கும் (முந்தைய) இரு ரக்அத்களுக்கும் இடையே ‘சலாம்’ கொடுப்பார்கள். (அந்த இடைவெளியில்) தம்முடைய சில தேவைகள் பற்றி (தம் ஊழியருக்கு)க் கட்டளையிடுவார்கள்.

992. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّهُ، بَاتَ عِنْدَ مَيْمُونَةَ، وَهْىَ خَالَتُهُ، فَاضْطَجَعْتُ فِي عَرْضِ وِسَادَةٍ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ حَتَّى انْتَصَفَ اللَّيْلُ أَوْ قَرِيبًا مِنْهُ، فَاسْتَيْقَظَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ، ثُمَّ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ قَامَ يُصَلِّي فَصَنَعْتُ مِثْلَهُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي يَفْتِلُهَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ، خَرَجَ فَصَلَّى الصُّبْحَ.
பாடம் : 1
வித்ர் தொழுகை தொடர்பாக வந்துள்ளவை
992. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா
(ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். நான் ஓர் தலையணை யின் அகலவாட்டில் தலைசாய்த்து உறங்கி னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் அத்தலையணையின் நீளவாட்டில் தலைசாய்த்து உறங்கினர். நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்கு நெருக்கமான நேரம்வரை உறங்கினார்கள். அவர்கள் விழித்தெழுந்து (அமர்ந்து) தம் முகத்தி-ருந்த தூக்க(க் கலக்க)த்தை (தமது கரத்தால்) துடைக்கலானார்கள்.
பிறகு ‘ஆலு இம்ரான்’ அத்தியாயத்தின் (கடைசிப்) பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கட்டித் தொங்கவிடப்பட்டி ருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதி-ருந்து தண்ணீர் சரித்து) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். தமது உளூவைச் செம்மையாகச் செய்துகொண்டபின் அவர்கள் (இரவுத் தொழுகை) தொழுவதற்காக நின்றார்கள்.
அவர்கள் செய்ததைப் போன்று நானும் (அங்கத்தூய்மை) செய்துவிட்டு அவர்களுக்கு (இட)ப் பக்கத்தில் போய் நின்றேன். உடனே அவர்கள் தமது வலக் கரத்தை என் தலைமீது வைத்து எனது காதை திருகிப்பிடித்(து என்னைத் தமது வலப் பாகத்தில் நிறுத்திவைத்)தார்கள். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ர் தொழுதார்கள்.
பிறகு தொழுகை அறிவிப்பாளர் (‘பிலால்’ பாங்கு சொல்-விட்டு) தம்மிடம் வரும்வரை ஒருக்களித்துப் படுத்திருந் தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹு டைய சுன்னத்) தொழுதார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று சுப்ஹு தொழுகையை (இமாமாக நின்று) தொழுதார்கள்.

993. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا أَرَدْتَ أَنْ تَنْصَرِفَ فَارْكَعْ رَكْعَةً تُوتِرُ لَكَ مَا صَلَّيْتَ "". قَالَ الْقَاسِمُ وَرَأَيْنَا أُنَاسًا مُنْذُ أَدْرَكْنَا يُوتِرُونَ بِثَلاَثٍ، وَإِنَّ كُلاًّ لَوَاسِعٌ أَرْجُو أَنْ لاَ يَكُونَ بِشَىْءٍ مِنْهُ بَأْسٌ.
பாடம் : 1
வித்ர் தொழுகை தொடர்பாக வந்துள்ளவை
993. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! (இரவுத் தொழுகையை) நீர் முடித்துக்கொள்ள விரும்பினால், ஒரு ரக்அத் தொழுது (முடித்துக்)கொள்வீராக! அது, முன்னர் நீர் தொழுததை உமக்கு ஒற்றையாக ஆக்கிவிடும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நமக்கு விவரம் தெரிந்த நாள் முதல் மக்கள் மூன்று ரக்அத்களை வித்ராகத் தொழுவதையே நாம் காண்கிறோம். (மூன்று ரக்அத், ஒரு ரக்அத் ஆகியவற்றில்) ஒவ்வொன்றுக்குமே அனுமதி உண்டு. இதில் எதைச் செய்தாலும் தவறாகாது என்றே நான் கருதுகிறேன்.

994. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، كَانَتْ تِلْكَ صَلاَتَهُ ـ تَعْنِي بِاللَّيْلِ ـ فَيَسْجُدُ السَّجْدَةَ مِنْ ذَلِكَ قَدْرَ مَا يَقْرَأُ أَحَدُكُمْ خَمْسِينَ آيَةً قَبْلَ أَنْ يَرْفَعَ رَأْسَهُ، وَيَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ، ثُمَّ يَضْطَجِعُ عَلَى شِقِّهِ الأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلصَّلاَةِ.
பாடம் : 1
வித்ர் தொழுகை தொடர்பாக வந்துள்ளவை
994. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதினொன்று ரக்அத்கள் தொழு பவர்களாக இருந்தார்கள். அதுவே அவர் களது தொழுகையாக -அதாவது இரவுத் தொழுகையாக- இருந்தது. அத்தொழு கையில் ஒரு சஜ்தாவை முடித்ததும் தமது தலையை உயர்த்துவதற்குமுன், உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு நேரம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வார்கள்.
ஃபஜ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு தொழுகை அறிவிப்பாளர் (ஃபஜ்ர்) தொழுகைக்கு (அழைக்க) தம்மிடம் வரும்வரையில் வலப் பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.

995. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ، قَالَ قُلْتُ لاِبْنِ عُمَرَ أَرَأَيْتَ الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْغَدَاةِ أُطِيلُ فِيهِمَا الْقِرَاءَةَ فَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، وَيُوتِرُ بِرَكْعَةٍ وَيُصَلِّي الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْغَدَاةِ وَكَأَنَّ الأَذَانَ بِأُذُنَيْهِ. قَالَ حَمَّادٌ أَىْ سُرْعَةً.
பாடம் : 2
வித்ர் தொழுகையின் நேரம்3
“உறங்குவதற்குமுன் வித்ர் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத் தினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
995. அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னுள்ள இரண்டு ரக்அத் (சுன்னத் தொழுகை)களில் நான் நீண்ட அத்தியாயங் களை ஓதலாமா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத் தொழுது (முன்னர் தொழுதவற்றை) ஒற்றையாக ஆக்குவார்கள்.
வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னால் இகாமத் சொல்லும் சப்தம் தமது காதில் விழுவதைப் போன்று (விரைவாக) இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழு வார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாவது (சுப்ஹுடைய சுன்னத்தில் நீண்ட அத்தியாயங்களை ஓதிக்கொண்டிராமல்) விரைவாக (சுருக்க மாக)த் தொழுவார்கள்.

996. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُلَّ اللَّيْلِ أَوْتَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ.
பாடம் : 2
வித்ர் தொழுகையின் நேரம்3
“உறங்குவதற்குமுன் வித்ர் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத் தினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
996. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரவின் எல்லாப் பகுதியிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகை தொழுதிருக்கிறார்கள். (பல சமயம்) அவர்களின் வித்ர் தொழுகை சஹர் நேரத்தில் முடியும்.

997. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي، وَأَنَا رَاقِدَةٌ مُعْتَرِضَةً عَلَى فِرَاشِهِ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأَوْتَرْتُ.
பாடம் : 3
நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரை வித்ர் தொழுகைக்காக உறக்கத்தி-ருந்து எழுப்பியது
997. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக்கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பார்கள். அவர்கள் வித்ர் தொழுகை தொழ எண்ணும்போது என்னைத் துயிலெழுப்புவார்கள். உடனே நானும் (எழுந்து) வித்ர் தொழுவேன்.4

998. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا "".
பாடம் : 4
ஒருவர் தமது நாளின் இறுதித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளட்டும்
998. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் உங்களது இறுதித் தொழுகை யாக வித்ரை ஆக்கிக்கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 14
998. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் உங்களது இறுதித் தொழுகை யாக வித்ரை ஆக்கிக்கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 14
999. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، أَنَّهُ قَالَ كُنْتُ أَسِيرُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِطَرِيقِ مَكَّةَ فَقَالَ سَعِيدٌ فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ نَزَلْتُ فَأَوْتَرْتُ، ثُمَّ لَحِقْتُهُ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَيْنَ كُنْتَ فَقُلْتُ خَشِيتُ الصُّبْحَ، فَنَزَلْتُ فَأَوْتَرْتُ. فَقَالَ عَبْدُ اللَّهِ أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أُسْوَةٌ حَسَنَةٌ فَقُلْتُ بَلَى وَاللَّهِ. قَالَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيرِ.
பாடம் : 5
ஊர்திப் பிராணியின் மீது அமர்ந்தவாறு வித்ர் தொழுகை தொழுவது
999. சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மக்கா செல்லும் சாலையில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களு டன் சென்றுகொண்டிருந்தேன். சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) பற்றி அஞ்சிய நான், (எனது ஊர்தியி-ருந்து) இறங்கி வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு அவர் களுடன் (போய்) சேர்ந்துகொண்டேன்.
அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “(இவ்வளவு நேரம்) எங்கே சென்றிருந்தீர்?” என்று கேட்டார்கள். நான், “சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) பற்றி அஞ்சினேன். எனவே, (ஊர்தியி-ருந்து) இறங்கி வித்ர் தொழுதேன்” என்று கூறினேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக (இருக்கிறது)” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்தும் வித்ர் தொழுதிருக்கிறார்கள்” என்று கூறி னார்கள்.5

1000. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ، حَيْثُ تَوَجَّهَتْ بِهِ، يُومِئُ إِيمَاءً، صَلاَةَ اللَّيْلِ إِلاَّ الْفَرَائِضَ، وَيُوتِرُ عَلَى رَاحِلَتِهِ.
பாடம் : 6
பயணத்தில் வித்ர் தொழுவது
1000. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது வாகனத்தின் மீது அமர்ந்தவாறு வாகனம் செல்லும் திசையில் சைகை செய்து இரவுத் தொழுகையைத் தொழுவார்கள்; ஆனால், கடமையான தொழுகைகளைத் தவிர! மேலும், தமது வாகனத்தின் மீது அமர்ந்தே வித்ர் தொழுவார்கள்.6

1001. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ سُئِلَ أَنَسٌ أَقَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الصُّبْحِ قَالَ نَعَمْ. فَقِيلَ لَهُ أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ قَالَ بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا.
பாடம் : 7
(தொழுகையில்) ருகூஉவுக்கு முன்பும் பின்பும் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவது7
1001. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் ‘குனூத்’ ஓதினார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். “ருகூஉ வுக்கு முன்பா குனூத் ஓதினார்கள்?” என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “ருகூஉவுக்குப் பின்பு சிறிது காலம் (அதாவது ஒரு மாத காலம் அவர்கள் குனூத் ஓதினார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

1002. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ الْقُنُوتِ،. فَقَالَ قَدْ كَانَ الْقُنُوتُ. قُلْتُ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ قَالَ قَبْلَهُ. قَالَ فَإِنَّ فُلاَنًا أَخْبَرَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ بَعْدَ الرُّكُوعِ. فَقَالَ كَذَبَ، إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الرُّكُوعِ شَهْرًا ـ أُرَاهُ ـ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلاً إِلَى قَوْمٍ مِنَ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ، وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَهْدٌ فَقَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ.
பாடம் : 7
(தொழுகையில்) ருகூஉவுக்கு முன்பும் பின்பும் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவது7
1002. ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்ததா என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “(ஆம்) குனூத் இருந்தது” என்று பதிலளித்தார்கள். நான், “ருகூஉவிற்கு முன்பா? அல்லது பின்பா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ருகூஉ விற்கு முன்புதான்” என்று பதிலளித் தார்கள். உடனே நான், “தாங்கள் ருகூஉவிற்குப் பின்னர்தான் என்று சொன்னதாக இன்னார் என்னிடம் தெரிவித்தாரே?” என்று கேட்டேன்.
அதற்கு, “அவர் தவறாகக் கூறியிருக்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம்தான் ருகூஉவிற்குப் பிறகு குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் (குர்ரா) என்று அழைக்கப்பட்டுவந்த சுமார் எழுபது பேரை இணைவைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்திருந்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறிருக்க, அந்த எழுபது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் கொன்றுவிட்டனர்.) எனவேதான், அவர்களுக்கெதிராகப் பிரார்த்திக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குனூத்’ (இடர் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

1003. أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ.
பாடம் : 7
(தொழுகையில்) ருகூஉவுக்கு முன்பும் பின்பும் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவது7
1003. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒரு மாத காலம் ‘குனூத்’ (எனும் இடர் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். (அதில் இணைவைப்பாளர்களான) ரிஅல், தக்வான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.