896. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ، أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ، فَهَذَا الْيَوْمُ الَّذِي اخْتَلَفُوا فِيهِ فَهَدَانَا اللَّهُ، فَغَدًا لِلْيَهُودِ وَبَعْدَ غَدٍ لِلنَّصَارَى ". فَسَكَتَ.ثُمَّ قَالَ " حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ أَنْ يَغْتَسِلَ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمًا يَغْسِلُ فِيهِ رَأْسَهُ وَجَسَدَهُ "
பாடம் : 12 ஜுமுஆவுக்கு வராத பெண்கள், சிறுவர்கள் போன்றோர்மீது குளியல் கடமையா? யாருக்கு ஜுமுஆ தொழுகை கடமையோ அவர்மீதே குளியலும் கடமை யாகும் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
896. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாம் (காலத்தால்) பிந்தியவர்கள் ஆவோம். மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்கள் ஆவோம். (எனினும் யூத, கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக் குப் பின்புதான் நமக்கு வேதம் வழங்கப் பெற்றது. இந்த (ஜுமுஆ) நாள் விஷயத் தில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண் டனர்.

ஆகவே, (அந்த நாளை) அல்லாஹ் நமக்கு அறிவித்துத்தந்தான். (வார வழிபாட்டு நாள் விஷயத்தில் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே அவர்கள் உள்ளனர். வெள்ளிக்கிழமை நமது வழி பாட்டு நாள் எனில்) நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய (வழிபாட்டு) தினமாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர் களுக்குரிய (வழிபாட்டு) தினமாகும். இதைக் கூறியபின் சிறிது நேரம் நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.


அத்தியாயம் : 11
897. . ثُمَّ قَالَ " حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ أَنْ يَغْتَسِلَ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمًا يَغْسِلُ فِيهِ رَأْسَهُ وَجَسَدَهُ ".
பாடம் : 12 ஜுமுஆவுக்கு வராத பெண்கள், சிறுவர்கள் போன்றோர்மீது குளியல் கடமையா? யாருக்கு ஜுமுஆ தொழுகை கடமையோ அவர்மீதே குளியலும் கடமை யாகும் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
897. பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஏழு நாட்களுக்கு ஒரு தடவை தம் தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்-முக்கும் கடமையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 11
898. رَوَاهُ أَبَانُ بْنُ صَالِحٍ عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لِلَّهِ تَعَالَى عَلَى كُلِّ مُسْلِمٍ حَقٌّ أَنْ يَغْتَسِلَ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمًا "".
பாடம் : 12 ஜுமுஆவுக்கு வராத பெண்கள், சிறுவர்கள் போன்றோர்மீது குளியல் கடமையா? யாருக்கு ஜுமுஆ தொழுகை கடமையோ அவர்மீதே குளியலும் கடமை யாகும் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
898. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஏழு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது (பருவமடைந்த) ஒவ்வொரு முஸ்-மும் உயர்ந்தோன் அல்லாஹ்வுக்காகச் செய்ய வேண்டிய கடமையாகும்.9

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 11
899. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" ائْذَنُوا لِلنِّسَاءِ بِاللَّيْلِ إِلَى الْمَسَاجِدِ "".
பாடம் : 13
899. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி அளியுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 11
900. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَتِ امْرَأَةٌ لِعُمَرَ تَشْهَدُ صَلاَةَ الصُّبْحِ وَالْعِشَاءِ فِي الْجَمَاعَةِ فِي الْمَسْجِدِ، فَقِيلَ لَهَا لِمَ تَخْرُجِينَ وَقَدْ تَعْلَمِينَ أَنَّ عُمَرَ يَكْرَهُ ذَلِكَ وَيَغَارُ قَالَتْ وَمَا يَمْنَعُهُ أَنْ يَنْهَانِي قَالَ يَمْنَعُهُ قَوْلُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ "".
பாடம் : 13
900. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களின் துணைவி யரில் ஒருவர் (ஆத்திகா பின்த் ஸைத்) சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளைப் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழச் செல்வார். அவரிடம், “(உங்கள் கணவர்) உமர் (ரலி) அவர்கள் இ(வ்வாறு நீங்கள் செல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப் படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந் தும் நீங்கள் ஏன் (பள்ளிவாசலுக்குச்) செல்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “அப்படியானால், (என்னைப் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டாமென்று கூற விடாமல்) அவரை எது தடுக்கிறது?” என்று கேட்க, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வ தைத் தடுக்காதீர்கள் என்று கூறியதே உமர் (ரலி) அவர்களைத் தடுக்கிறது” என்று பதில் வந்தது.

அத்தியாயம் : 11
901. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ، صَاحِبُ الزِّيَادِيِّ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ ابْنُ عَمِّ، مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ ابْنُ عَبَّاسٍ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَلاَ تَقُلْ حَىَّ عَلَى الصَّلاَةِ. قُلْ صَلُّوا فِي بُيُوتِكُمْ. فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الْجُمُعَةَ عَزْمَةٌ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أُخْرِجَكُمْ، فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحْضِ.
பாடம் : 14 மழையின்போது ஜுமுஆ தொழுகையில் கலந்துகொள்ளாம லிருக்க அனுமதி உண்டு.
901. அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மழை நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், தம் தொழுகை அறிவிப் பாளர் (முஅத்தின்) இடம், “(பாங்கில்) ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல் லாஹ்’ என்று கூறியதும், ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், ‘ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்’ (உங்கள் இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்) என்று கூறுவீராக!” என்று சொன்னார்கள்.

(இவ்வாறு அவர்கள் கூறியதை) மக்கள் ஆட்சேபிப்பதைப் போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “என்னைவிட மிகவும் சிறந்த வ(ரான நபி (ஸல்) அவ)ர்கள் ஜுமுஆ கட்டாயமானதாக இருந்தும்கூட இவ்வாறு தான் செய்தார்கள். களி மண்ணிலும் (வழுக்கும்) சகதியிலும் உங்களை நடக்க விட்டு, உங்களுக்குச் சிரமம் கொடுக்க நான் விரும்பவில்லை (எனவேதான், வீடுகளிலேயே தொழுதுகொள்ளச் சொன்னேன்)” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 11
902. حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ النَّاسُ يَنْتَابُونَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ مَنَازِلِهِمْ وَالْعَوَالِي، فَيَأْتُونَ فِي الْغُبَارِ، يُصِيبُهُمُ الْغُبَارُ وَالْعَرَقُ، فَيَخْرُجُ مِنْهُمُ الْعَرَقُ، فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِنْسَانٌ مِنْهُمْ وَهْوَ عِنْدِي، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ أَنَّكُمْ تَطَهَّرْتُمْ لِيَوْمِكُمْ هَذَا "".
பாடம் : 15 எவ்வளவு தொலைவில் இருந்தால் ஜுமுஆ தொழுகைக்கு வர வேண்டும்? யார்மீது (ஜுமுஆ தொழுகை) கடமையாகும்? உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கை கொண்டோரே!) வெள்ளிக்கிழமை தொழுகைக்காக (நீங்கள்) அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர (பள்ளி வாசல்களுக்கு) விரைந்து செல்லுங்கள். (62:9) “ஜுமுஆ தொழுகை நடைபெறும் ஊரில் நீ இருந்து, வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால், அதில் கட்டாயம் நீ கலந்துகொள்ள வேண்டும். பாங்கு சப்தத்தை நீ கேட்டாலும் சரி, அல்லது அதை நீ கேட்காவிட்டாலும் சரி” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். அனஸ் (ரலி) அவர்கள், சில நாட்களில் தமது மாளிகையில் (தங்கி) இருக்கும்போது (தம்முடன் இருப்பவர்களுக்கு) ஜுமுஆ தொழுவிப்பார்கள். சில நாட்களில் ஜுமுஆ தொழுவிக்கமாட்டார்கள் (பள்ளி வாசலுக்குச் சென்றுவிடுவார்கள். அனஸ் (ரலி) அவர்களது) அந்த மாளிகை (பஸ்ரா நகரி-ருந்து) இரண்டு ஃபர்ஸக் (சுமார் ஆறு மைல்) தொலைவிலிருந்த ‘ஸாவியா’ எனும் இடத்தில் இருந்தது.
902. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் வெள்ளிக்கிழமை அன்று தங்கள் குடியிருப்புகளி-ருந்தும் (மதீனா வைச் சுற்றியுள்ள) மேட்டுப் புறக் கிராமங் களிலிருந்தும் முறைவைத்து (ஜுமுஆ தொழுகைக்கு) வந்துகொண்டிருந்தனர். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள்மீது புழுதியும் வியர்வையும் காணப்படும். அவர்களி(ன் உட-)-ருந்து வியர்வை வழியும்.

(இந்த நிலையில்)- என் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தபோது- அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்றைய நாளுக்காக நீங்கள் தூய்மையுடன் இருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 11
903. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّهُ سَأَلَ عَمْرَةَ عَنِ الْغُسْلِ، يَوْمَ الْجُمُعَةِ فَقَالَتْ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ كَانَ النَّاسُ مَهَنَةَ أَنْفُسِهِمْ، وَكَانُوا إِذَا رَاحُوا إِلَى الْجُمُعَةِ رَاحُوا فِي هَيْئَتِهِمْ فَقِيلَ لَهُمْ لَوِ اغْتَسَلْتُمْ.
பாடம் : 16 ஜுமுஆ தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததும் (ஆரம்பிக்கிறது). இவ்வாறுதான் உமர் பின் அல்கத்தாப் (ரலி), அலீ (ரலி), நுஅமான் பின் பஷீர் (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.
903. யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் வெள்ளிக்கிழமை குளியல் பற்றிக் கேட்டேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாகத் தெரிவித்தார்கள்:

(நபி (ஸல்) காலத்து) மக்கள் உழைப் பாளிகளாக இருந்தனர். அவர்கள் (வேலைகளில் ஈடுபட்டுவிட்டு) உச்சி சாயும் நேரம் ஜுமுஆ தொழுகைக்காக வரும்போது, அதே கோலத்தில் வந்துவிடு வார்கள். இதனால்தான் அவர்களிடம் “நீங்கள் குளித்திருக்கலாமே!” என்று கூறப்பட்டது.


அத்தியாயம் : 11
904. حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ.
பாடம் : 16 ஜுமுஆ தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததும் (ஆரம்பிக்கிறது). இவ்வாறுதான் உமர் பின் அல்கத்தாப் (ரலி), அலீ (ரலி), நுஅமான் பின் பஷீர் (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.
904. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சி சாயும் நேரத்தில் ஜுமுஆ தொழுகை தொழுவிப்பார்கள்.


அத்தியாயம் : 11
905. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ كُنَّا نُبَكِّرُ بِالْجُمُعَةِ، وَنَقِيلُ بَعْدَ الْجُمُعَةِ.
பாடம் : 16 ஜுமுஆ தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததும் (ஆரம்பிக்கிறது). இவ்வாறுதான் உமர் பின் அல்கத்தாப் (ரலி), அலீ (ரலி), நுஅமான் பின் பஷீர் (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.
905. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஜுமுஆ தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுது விடுவோம். ஜுமுஆ தொழுகைக்குப் பிறகுதான் மதிய ஓய்வு மேற்கொள்வோம்.

அத்தியாயம் : 11
906. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، قَالَ حَدَّثَنَا أَبُو خَلْدَةَ ـ هُوَ خَالِدُ بْنُ دِينَارٍ ـ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا اشْتَدَّ الْبَرْدُ بَكَّرَ بِالصَّلاَةِ، وَإِذَا اشْتَدَّ الْحَرُّ أَبْرَدَ بِالصَّلاَةِ، يَعْنِي الْجُمُعَةَ. قَالَ يُونُسُ بْنُ بُكَيْرٍ أَخْبَرَنَا أَبُو خَلْدَةَ فَقَالَ بِالصَّلاَةِ، وَلَمْ يَذْكُرِ الْجُمُعَةَ. وَقَالَ بِشْرُ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا أَبُو خَلْدَةَ قَالَ صَلَّى بِنَا أَمِيرٌ الْجُمُعَةَ ثُمَّ قَالَ لأَنَسٍ ـ رضى الله عنه ـ كَيْفَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الظُّهْرَ
பாடம் 17 வெள்ளிக்கிழமை வெப்பம் கடுமையாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்?)
906. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும்போது தொழுகையை -அதாவது ஜுமுஆ தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும்போது தொழு கையை -அதாவது ஜுமுஆ தொழு கையை- வெப்பம் தணிந்தபின் தொழு வார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் யூனுஸ் பின் புகைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (ஜுமுஆ தொழுகை என்ற குறிப்பு இல்லாமல் பொது வாக) ‘தொழுகை’ என்றே இடம்பெற் றுள்ளது.

பிஷ்ர் பின் ஸாபித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “எங்களுக்கு (ஆட்சித்) தலைர் ஜுமுஆ தொழுவித்தார். (வழக்கம் போல நீண்ட சொற்பொழிவும் நெடு நேரத் தொழுகையும் நடந்தது.) பிறகு அவர் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு லுஹ்ர் தொழுகை தொழுவார்கள்?’ என்று கேட்டார். (அப்போதுதான் மேற்கண்டவாறு அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்)” என்று அபூகல்தா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 11
907. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنَا عَبَايَةُ بْنُ رِفَاعَةَ، قَالَ أَدْرَكَنِي أَبُو عَبْسٍ وَأَنَا أَذْهَبُ، إِلَى الْجُمُعَةِ فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللَّهِ حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ "".
பாடம் : 18 ஜுமுஆ தொழுகைக்கு நடந்துசெல்வது புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவுகூர விரைந்துசெல்லுங்கள். (62:9) (இதில் ‘விரைந்து செல்லல்’ என்பதைக் குறிக்கும் ‘சஃயு’ எனும் சொல்லுக்கு ஓடிச் செல்லல் என்பது பொருளன்று.) இங்கு ‘சஃயு’ என்பது, தொழுகைக்குத் தயாராகிப் புறப்படுவதைக் குறிக்கும் என்று சிலர் விளக்கமளித்துள்ளனர். ‘மறுமைக்காக உழைத்தல்’ எனும் பொருளில் இச்சொல் வேறொரு வசனத்தில் (17:19) பயன்படுத்தப் பட்டிருப்பது இதற்குச் சான்றாகும். (இதனால்தான், ஜுமுஆ தொழுகை யின் அழைப்பைக் கேட்டபின் தொழு கைக்குத் தயாராகாமல்) அந்த நேரத்தில் வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்ட தாகும் (ஹராம்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “(அந்த நேரத்தில்) எல்லாத் தொழில்களும் தடை செய்யப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னால், ஜுமுஆவில் கலந்து கொள்வது (அதைச் செவியுற்ற) அந்தப் பயணியின் மீது அவசியமாகும்.
907. அபாயா பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜுமுஆ தொழுகைக்காகச் சென்றுகொண்டிருந்தபோது அபூஅப்ஸ் (அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர்-ர-) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் எவரது பாதங்களில் புழுதி படிகின்றதோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 11
908. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ الزُّهْرِيُّ عَنْ سَعِيدٍ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَأْتُوهَا تَسْعَوْنَ، وَأْتُوهَا تَمْشُونَ عَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا "".
பாடம் : 18 ஜுமுஆ தொழுகைக்கு நடந்துசெல்வது புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவுகூர விரைந்துசெல்லுங்கள். (62:9) (இதில் ‘விரைந்து செல்லல்’ என்பதைக் குறிக்கும் ‘சஃயு’ எனும் சொல்லுக்கு ஓடிச் செல்லல் என்பது பொருளன்று.) இங்கு ‘சஃயு’ என்பது, தொழுகைக்குத் தயாராகிப் புறப்படுவதைக் குறிக்கும் என்று சிலர் விளக்கமளித்துள்ளனர். ‘மறுமைக்காக உழைத்தல்’ எனும் பொருளில் இச்சொல் வேறொரு வசனத்தில் (17:19) பயன்படுத்தப் பட்டிருப்பது இதற்குச் சான்றாகும். (இதனால்தான், ஜுமுஆ தொழுகை யின் அழைப்பைக் கேட்டபின் தொழு கைக்குத் தயாராகாமல்) அந்த நேரத்தில் வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்ட தாகும் (ஹராம்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “(அந்த நேரத்தில்) எல்லாத் தொழில்களும் தடை செய்யப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னால், ஜுமுஆவில் கலந்து கொள்வது (அதைச் செவியுற்ற) அந்தப் பயணியின் மீது அவசியமாகும்.
908. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டு விட்டால் ஓடிவராதீர்கள்; நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப்போனதை (பிறகு எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 11
909. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنِي أَبُو قُتَيْبَةَ، قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ـ لاَ أَعْلَمُهُ إِلاَّ عَنْ أَبِيهِ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي، وَعَلَيْكُمُ السَّكِينَةُ "".
பாடம் : 18 ஜுமுஆ தொழுகைக்கு நடந்துசெல்வது புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவுகூர விரைந்துசெல்லுங்கள். (62:9) (இதில் ‘விரைந்து செல்லல்’ என்பதைக் குறிக்கும் ‘சஃயு’ எனும் சொல்லுக்கு ஓடிச் செல்லல் என்பது பொருளன்று.) இங்கு ‘சஃயு’ என்பது, தொழுகைக்குத் தயாராகிப் புறப்படுவதைக் குறிக்கும் என்று சிலர் விளக்கமளித்துள்ளனர். ‘மறுமைக்காக உழைத்தல்’ எனும் பொருளில் இச்சொல் வேறொரு வசனத்தில் (17:19) பயன்படுத்தப் பட்டிருப்பது இதற்குச் சான்றாகும். (இதனால்தான், ஜுமுஆ தொழுகை யின் அழைப்பைக் கேட்டபின் தொழு கைக்குத் தயாராகாமல்) அந்த நேரத்தில் வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்ட தாகும் (ஹராம்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “(அந்த நேரத்தில்) எல்லாத் தொழில்களும் தடை செய்யப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னால், ஜுமுஆவில் கலந்து கொள்வது (அதைச் செவியுற்ற) அந்தப் பயணியின் மீது அவசியமாகும்.
909. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டு விட்டால் அவசரப்படாதீர்கள்.) என்னை நீங்கள் காணாதவரை எழாதீர்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.

இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 11
910. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ وَدِيعَةَ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ، وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ، ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ، فَصَلَّى مَا كُتِبَ لَهُ، ثُمَّ إِذَا خَرَجَ الإِمَامُ أَنْصَتَ، غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى "".
பாடம் : 19 வெள்ளிக்கிழமை அன்று (பள்ளிவாசலுக்குள் சேர்ந்து அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்கக் கூடாது.
910. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் வெள்ளிக்கிழமை குளித்துவிட்டு, தம்மால் இயன்ற வரை தூய்மைப் படுத்திக்கொண்டு, பிறகு எண்ணெய்யோ நறுமணமோ பூசிக்கொள்கிறார். பிறகு அவர் (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்து, (சேர்ந்து அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பின்னர் இமாம் வந்ததும் (அவர் ஆற்றும் உரையைச் செவியுற) மௌனம் காக்கிறார் எனில், அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையில் ஏற்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன.

இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 11
911. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يَقُولُ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ. قُلْتُ لِنَافِعٍ الْجُمُعَةَ قَالَ الْجُمُعَةَ وَغَيْرَهَا.
பாடம் : 20 வெள்ளிக்கிழமை (பள்ளிவாச லுக்கு வரும்) ஒருவர் தம் சகோதரரை எழுப்பிவிட்டு, அந்த இடத்தில் தாம் அமரக் கூடாது.
911. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தம் சகோதரரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து எழுப்பி விட்டு, அந்த இடத்தில் தாம் அமர்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், “ஜுமுஆவின்போதா (இப்படிச் செய்யக் கூடாது)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஜுமுஆவிலும், ஜுமுஆ அல்லாத மற்ற நேரங்களிலும் (அப்படித்)தான்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 11
912. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كَانَ النِّدَاءُ يَوْمَ الْجُمُعَةِ أَوَّلُهُ إِذَا جَلَسَ الإِمَامُ عَلَى الْمِنْبَرِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ ـ رضى الله عنهما ـ فَلَمَّا كَانَ عُثْمَانُ ـ رضى الله عنه ـ وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ.
பாடம் : 21 வெள்ளிக்கிழமை தொழுகை அறிவிப்பு
912. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் வெள்ளிக்கிழமை அன்று இமாம் சொற்பொழிவு மேடைமீது அமர்ந்ததும் முதலாவது பாங்கு சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்தபோது, ‘அஸ்ஸவ்ரா’ எனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.10

அத்தியாயம் : 11
913. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّ الَّذِي، زَادَ التَّأْذِينَ الثَّالِثَ يَوْمَ الْجُمُعَةِ عُثْمَانُ بْنُ عَفَّانَ ـ رضى الله عنه ـ حِينَ كَثُرَ أَهْلُ الْمَدِينَةِ، وَلَمْ يَكُنْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مُؤَذِّنٌ غَيْرَ وَاحِدٍ، وَكَانَ التَّأْذِينُ يَوْمَ الْجُمُعَةِ حِينَ يَجْلِسُ الإِمَامُ، يَعْنِي عَلَى الْمِنْبَرِ.
பாடம் 22 வெள்ளிக்கிழமை அன்று ஒரே யொரு தொழுகை அறிவிப் பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்வது
913. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை அன்று மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத் தியவர் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களே ஆவார்கள்.- மதீனாவாசி களின் எண்ணிக்கை அதிகமானபோது (இவ்வாறு செய்தார்கள்.)- (ஜுமுஆ நாளில் பாங்கு சொல்ல) நபி (ஸல்) அவர்களிடம் ஒரேயொரு தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) மட்டுமே இருந்தார்.

(ஆரம்பக் காலத்தில்) இமாம் அமரும்போதுதான்- அதாவது சொற்பொழிவு மேடையின் மீது அமரும்போதுதான்- ஜுமுஆ நாளில் பாங்கு சொல்லப்பட்டு வந்தது.11

அத்தியாயம் : 11
914. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ،، وَهُوَ جَالِسٌ عَلَى الْمِنْبَرِ، أَذَّنَ الْمُؤَذِّنُ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ. قَالَ مُعَاوِيَةُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ. قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَقَالَ مُعَاوِيَةُ وَأَنَا. فَقَالَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَقَالَ مُعَاوِيَةُ وَأَنَا. فَلَمَّا أَنْ قَضَى التَّأْذِينَ قَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى هَذَا الْمَجْلِسِ حِينَ أَذَّنَ الْمُؤَذِّنُ يَقُولُ مَا سَمِعْتُمْ مِنِّي مِنْ مَقَالَتِي.
பாடம் : 23 பாங்கைக் கேட்கும்போது சொற்பொழிவு மேடையில் அமர்ந்துள்ள இமாமும் பதில் கூற வேண்டும்.
914. அபூஉமாமா (அஸ்அத்) பின் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்திருந்தபோது, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்புச் செய்தார்.

அவர் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறியதும், முஆவியா (ரலி) அவர்களும் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று (பதில்) சொன்னார்கள்.

தொழுகை அறிவிப்பாளர் ‘அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிகூறுகிறேன்) எனக் கூறியதும், ‘நானும் அவ்வாறே கூறுகிறேன்’ (வ அன) என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அவர் பாங்கு சொல்- முடித்ததும் “மக்களே! தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னபோது இதே இடத்தில் அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்னதைப் போன்றே (பாங்கிற்குப் பதில்) சொல்லிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன்” என்றார்கள்.

அத்தியாயம் : 11
915. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ، أَخْبَرَهُ أَنَّ التَّأْذِينَ الثَّانِيَ يَوْمَ الْجُمُعَةِ أَمَرَ بِهِ عُثْمَانُ حِينَ كَثُرَ أَهْلُ الْمَسْجِدِ، وَكَانَ التَّأْذِينُ يَوْمَ الْجُمُعَةِ حِينَ يَجْلِسُ الإِمَامُ.
பாடம் : 24 (வெள்ளிக்கிழமை) பாங்கு சொல்லும்போது இமாம் சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்திருப்பது
915. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை அன்று மற்றொரு தொழுகை அறிவிப்புச் செய்யும்படி உஸ்மான் (ரலி) அவர்களே கட்டளையிட் டார்கள்.- பள்ளிவாச-ல் மக்கள் அதிகரித்தபோதே (இவ்வாறு செய்தார்கள்). -(அதற்கு முன்னர்) இமாம் (சொற்பொழிவு மேடைமீது) அமரும்போது சொல்லும் பாங்கு மட்டுமே (நடைமுறையில்) இருந்தது.

அத்தியாயம் : 11