864. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَعْتَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْعَتَمَةِ حَتَّى نَادَاهُ عُمَرُ نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ. فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا يَنْتَظِرُهَا أَحَدٌ غَيْرُكُمْ مِنْ أَهْلِ الأَرْضِ "". وَلاَ يُصَلَّى يَوْمَئِذٍ إِلاَّ بِالْمَدِينَةِ، وَكَانُوا يُصَلُّونَ الْعَتَمَةَ فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلَى ثُلُثِ اللَّيْلِ الأَوَّلِ.
பாடம் : 162 இரவிலும் இருட்டிலும் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வது
864. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பாதி இரவுவரை) இஷா தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் நபியவர்களை அழைத்து, “பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் (தமது அறையி-ருந்து) வெளியே வந்து, “பூமியில் இருப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை” என்று கூறினார்கள்.

அன்றைய நாளில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்பட வில்லை. இஷா தொழுகையை செம்மேகம் மறைந்ததி-ருந்து இரவின் முதலாவது மூன்றில் ஒரு பகுதி கழிவதுவரை மக்கள் தொழுதுவந்தனர்.


அத்தியாயம் : 10
865. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ حَنْظَلَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ بِاللَّيْلِ إِلَى الْمَسْجِدِ فَأْذَنُوا لَهُنَّ "". تَابَعَهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 162 இரவிலும் இருட்டிலும் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வது
865. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் துணைவியர் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால், அவர்களுக்கு அனுமதி வழங் குங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 10
866. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ، أَنَّ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا أَنَّ النِّسَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُنَّ إِذَا سَلَّمْنَ مِنَ الْمَكْتُوبَةِ قُمْنَ، وَثَبَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ صَلَّى مِنَ الرِّجَالِ مَا شَاءَ اللَّهُ، فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ الرِّجَالُ.
பாடம் : 163 (தொழுகை முடிந்தபின்) அறிஞ ரான இமாம் எழுவதை எதிர் பார்த்து மக்கள் அமர்ந்திருப்பது
866. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் பெண்கள், கடமையான தொழுகையில் ‘சலாம்’ கொடுத்ததும் எழுந்து (சென்று)விடுவார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவர் களுடன்) தொழுகையில் கலந்துகொண்ட ஆண்களும் அல்லாஹ் நாடிய அளவுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள்.

(பெண்கள் சென்றபின்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்ததும் ஆண்களும் எழுவார்கள்


அத்தியாயம் : 10
867. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُصَلِّي الصُّبْحَ، فَيَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، مَا يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ.
பாடம் : 163 (தொழுகை முடிந்தபின்) அறிஞ ரான இமாம் எழுவதை எதிர் பார்த்து மக்கள் அமர்ந்திருப்பது
867. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையைத் தொழுவிப்பார்கள். (தொழுகை முடிந்ததும்) பெண்கள் தங்கள் ஆடைகளால் (உடல் முழுவதையும்) போர்த்திக்கொண்டு திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் (யார் யாரென) அறியப்படமாட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 10
868. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِسْكِينٍ، قَالَ حَدَّثَنَا بِشْرٌ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنِّي لأَقُومُ إِلَى الصَّلاَةِ وَأَنَا أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ "".
பாடம் : 163 (தொழுகை முடிந்தபின்) அறிஞ ரான இமாம் எழுவதை எதிர் பார்த்து மக்கள் அமர்ந்திருப்பது
868. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்பேன். (பின்னால் தொழுதுகொண்டி ருக்கும்) அந்தக் குழந்தையின் தாய்க்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையைச் சுருக்கமாக முடித்துவிடுகிறேன்.

இதை அபூகத்தாதா அல்அன்சாரி

(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 10
869. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَوْ أَدْرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ. قُلْتُ لِعَمْرَةَ أَوَ مُنِعْنَ قَالَتْ نَعَمْ.
பாடம் : 163 (தொழுகை முடிந்தபின்) அறிஞ ரான இமாம் எழுவதை எதிர் பார்த்து மக்கள் அமர்ந்திருப்பது
869. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், “பெண்கள் (இன்று) உருவாக்கியுள்ள (அலங்கார உத்திகள் போன்ற)வற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிருந்தால் பனூ இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டதைப் போன்று இந்தப் பெண்களையும் (பள்ளிவாசலுக்கு வரக்கூடாது எனத்) தடுத்திருப்பார்கள்” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அம்ரா (ரஹ்) அவர்களிடம், “பனூ இஸ்ராயீல் பெண்கள் (பள்ளிவாசலுக்கு வரக் கூடாதென) தடுக்கப்பட்டிருந்தனரா?” என்று கேட்டேன். அதற்கு அம்ரா அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.81

அத்தியாயம் : 10
870. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ بِنْتِ الْحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَلَّمَ قَامَ النِّسَاءُ حِينَ يَقْضِي تَسْلِيمَهُ، وَيَمْكُثُ هُوَ فِي مَقَامِهِ يَسِيرًا قَبْلَ أَنْ يَقُومَ. قَالَ نَرَى ـ وَاللَّهُ أَعْلَمُ ـ أَنَّ ذَلِكَ كَانَ لِكَىْ يَنْصَرِفَ النِّسَاءُ قَبْلَ أَنْ يُدْرِكَهُنَّ أَحَدٌ مِنَ الرِّجَالِ.
பாடம் : 164 ஆண்கள் (வரிசைக்குப்) பின் னால் பெண்கள் தொழுவது
870. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சலாம் கொடுத்து முடித்த தும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார் கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்குமுன் சற்று நேரம் (தாம் தொழுத) அதே இடத்தி லேயே வீற்றிருப்பார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்குமுன், பெண்கள் திரும்பிச் செல்லட்டும் என்பதற்காகத்தான்” என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கு அறிந்தவன்.


அத்தியாயம் : 10
871. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِ أُمِّ سُلَيْمٍ، فَقُمْتُ وَيَتِيمٌ خَلْفَهُ، وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا.
பாடம் : 164 ஆண்கள் (வரிசைக்குப்) பின் னால் பெண்கள் தொழுவது
871. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் (கூடுதல் தொழுகை) தொழு(வித்)தார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள்.

அத்தியாயம் : 10
872. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الصُّبْحَ بِغَلَسٍ فَيَنْصَرِفْنَ نِسَاءُ الْمُؤْمِنِينَ، لاَ يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ، أَوْ لاَ يَعْرِفُ بَعْضُهُنَّ بَعْضًا.
பாடம் : 165 சுப்ஹு தொழுகை முடிந்ததும் விரைவாகப் பெண்கள் (பள்ளி வாசலி-ருந்து) திரும்பிவிடுவதும் குறைந்த நேரமே அவர்கள் பள்ளிவாசலில் தங்குவதும்
872. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருட்டு இருக்கும்போதே சுப்ஹு தொழு கையைத் தொழுவிப்பார்கள். இறைநம்பிக் கையுள்ள பெண்கள் (தொழுகையை முடித்து இல்லம்) திரும்புவார்கள். இருட் டின் காரணமாக ‘அவர்கள் (யார் யாரென) அறியப்படமாட்டார்கள்’ அல்லது ‘அவர் களில் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ள மாட்டார்கள்’.

இதை, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

அத்தியாயம் : 10
873. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. "" إِذَا اسْتَأْذَنَتِ امْرَأَةُ أَحَدِكُمْ فَلاَ يَمْنَعْهَا "".
பாடம் : 166 பள்ளிவாசலுக்குச் செல்ல பெண் தன் கணவரிடம் அனு மதி கோருவது
873. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக் குச் செல்ல) அனுமதி கேட்டால், அவர் களைத் தடுக்காதீர்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
874. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِ أُمِّ سُلَيْمٍ، فَقُمْتُ وَيَتِيمٌ خَلْفَهُ، وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا.
பாடம் : 167 ஆண்களுக்குப்பின் பெண்களும் தொழுவது
874. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் (கூடுதல் தொழுகை) தொழுதார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டோம். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள்.


அத்தியாயம் : 10
875. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدَ بِنْتِ الْحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَلَّمَ قَامَ النِّسَاءُ حِينَ يَقْضِي تَسْلِيمَهُ، وَهُوَ يَمْكُثُ فِي مَقَامِهِ يَسِيرًا قَبْلَ أَنْ يَقُومَ. قَالَتْ نُرَى ـ وَاللَّهُ أَعْلَمُ ـ أَنَّ ذَلِكَ كَانَ لِكَىْ يَنْصَرِفَ النِّسَاءُ قَبْلَ أَنْ يُدْرِكَهُنَّ الرِّجَالُ.
பாடம் : 167 ஆண்களுக்குப்பின் பெண்களும் தொழுவது
875. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள், எழுவதற்குமுன் சற்று நேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றி ருப்பார்கள்.

“அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந் த)து, ஆண்கள் பெண்களை நெருங்கு வதற்குமுன் பெண்கள் திரும்பிச் சென்றுவிடட்டும் என்பதற்காகத்தான்” என்றே கருதப்படுகிறது. அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

அத்தியாயம் : 10

876. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الأَعْرَجَ، مَوْلَى رَبِيعَةَ بْنِ الْحَارِثِ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، ثُمَّ هَذَا يَوْمُهُمُ الَّذِي فُرِضَ عَلَيْهِمْ فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللَّهُ، فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ، الْيَهُودُ غَدًا وَالنَّصَارَى بَعْدَ غَدٍ "".
பாடம் : 1 ஜுமுஆ தொழுகை கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும். ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வெள்ளிக்கிழமை அன்று தொழு கைக்கு அழைக்கப்பட்டால், வணிகத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவு கூர (பள்ளிவாசலுக்கு) விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு நன்மையாகும். (62:9)
876. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாம்தான் (காலத்தால்) பிந்தியவர்களாக வும் மறுமை நாளில் (தகுதியால்) முந்திய வர்களாகவும் இருப்போம். எனினும், (யூத, கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் அருளப்பெற்றார்கள். மேலும், இந்த (வெள்ளி)க்கிழமைதான் அவர்களுக்கும் (வார வழிபாட்டு) நாளாக கடமையாக் கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இ(ந்த நாளை வார வழிபாட்டு நாளாக ஏற்றுக்கொள்வ)தில் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு இந்த நாளை அறிவித்தான்.

இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (எவ்வாறெனில், வெள்ளிக்கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) நாளை (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும்; மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.2

இதை அபூ.ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 11
877. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ "".
பாடம் : 2 வெள்ளிக்கிழமை குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள், பெண்கள் ஆகியோர் ஜுமுஆ தொழுகையில் கலந்துகொள்வது கடமையா என்பதும்
877. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஜுமுஆவுக்கு வரும்போது குளித்துக்கொள்ளட்டும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 11
878. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ أَخْبَرَنَا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، بَيْنَمَا هُوَ قَائِمٌ فِي الْخُطْبَةِ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ الأَوَّلِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَادَاهُ عُمَرُ أَيَّةُ سَاعَةٍ هَذِهِ قَالَ إِنِّي شُغِلْتُ فَلَمْ أَنْقَلِبْ إِلَى أَهْلِي حَتَّى سَمِعْتُ التَّأْذِينَ، فَلَمْ أَزِدْ أَنْ تَوَضَّأْتُ. فَقَالَ وَالْوُضُوءُ أَيْضًا وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ بِالْغُسْلِ.
பாடம் : 2 வெள்ளிக்கிழமை குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள், பெண்கள் ஆகியோர் ஜுமுஆ தொழுகையில் கலந்துகொள்வது கடமையா என்பதும்
878. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப்

(ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை (சொற் பொழிவு மேடை- மிம்பர்மீது) நின்று உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, (இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர் களில் ஒரு நபித்தோழர் உள்ளே வந்தார். அவரை உமர் (ரலி) அவர்கள் அழைத்து, “இது எந்த நேரம் (தெரியுமா? ஏன் இவ்வளவு தாமதம்)?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நான் அலுவ-ல் மூழ்கிவிட்டேன். தொழுகை அறிவிப்பைக் கேட்ட பிறகுதான் நான் என் வீட்டிற்கே திரும்பினேன். ஆகவே, அங்கத் தூய்மை (உளூ) மட்டும் செய்துவிட்டு நான் (விரைந்து) வருகிறேன்” என்று கூறினார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “(தாமத மாக வந்ததுடன்) உளூ மட்டும்தானா? (குளிக்கவில்லையா?) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆவுக்காக) குளிக்குமாறு கட்டளையிட்டுவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்களே?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 11
879. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ "".
பாடம் : 2 வெள்ளிக்கிழமை குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள், பெண்கள் ஆகியோர் ஜுமுஆ தொழுகையில் கலந்துகொள்வது கடமையா என்பதும்
879. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.3

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 11
880. حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ سُلَيْمٍ الأَنْصَارِيُّ، قَالَ أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ قَالَ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَأَنْ يَسْتَنَّ وَأَنْ يَمَسَّ طِيبًا إِنْ وَجَدَ "". قَالَ عَمْرٌو أَمَّا الْغُسْلُ فَأَشْهَدُ أَنَّهُ وَاجِبٌ، وَأَمَّا الاِسْتِنَانُ وَالطِّيبُ فَاللَّهُ أَعْلَمُ أَوَاجِبٌ هُوَ أَمْ لاَ، وَلَكِنْ هَكَذَا فِي الْحَدِيثِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هُوَ أَخُو مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ وَلَمْ يُسَمَّ أَبُو بَكْرٍ هَذَا. رَوَاهُ عَنْهُ بُكَيْرُ بْنُ الأَشَجِّ وَسَعِيدُ بْنُ أَبِي هِلاَلٍ وَعِدَّةٌ. وَكَانَ مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ يُكْنَى بِأَبِي بَكْرٍ وَأَبِي عَبْدِ اللَّهِ.
பாடம் : 3 ஜுமுஆவுக்காக நறுமணம் பூசுவது
880. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அறுதியிட்டுச் சொல்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வெள்ளிக்கிழமை குளிப்பது பருவ மடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமை யாகும்; மேலும் பல் துலக்குவதும், கிடைத்தால் நறுமணம் பூசுவதும் கடமை யாகும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

இதன் அறிவிப்பாளரான அம்ர் பின் சுலைம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அறுதியிட்டுச் சொல்கிறேன். (ஜுமுஆ நாளில்) குளிப்பதோ கடமை (வாஜிப்) என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். ஆனால், பல் துலக்குவதோ நறுமணம் பூசுவதோ கடமையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். ஆனால், ஹதீஸில் இவ்வாறுதான் உள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) அபூபக்ர் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள், முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்களுடைய சகோதரர் ஆவார். அபூபக்ர் பின் அல்முன்கதிர் அவர்களிடமிருந்து புகைர் பின் அஷஜ், சயீத் பின் அபீஹிலால் (ரஹ்) உள்ளிட்ட பலர் (இந்த ஹதீஸை) அறிவித் துள்ளனர். முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்களுக்கும் அபூபக்ர், அபூ அப்தில்லாஹ் ஆகிய குறிப்புப் பெயர்கள் உள்ளன.

அத்தியாயம் : 11
881. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ "".
பாடம் : 4 ஜுமுஆவின் சிறப்பு
881. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளிக்கிழமை அன்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு (நேரத் தோடு) செல்பவர், ஓர் ஒட்டகத்தை ‘குர்பானி’ கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். இரண்டாவது நேரத்தில் செல்ப வர், ஒரு மாட்டை ‘குர்பானி’ கொடுத்த வரைப் போன்றவர் ஆவார். மூன்றாவது நேரத்தில் செல்பவர், கொம்புள்ள ஆட்டை ‘குர்பானி’ கொடுத்தவரைப் போன்றவர் ஆவார்.

நான்காவது நேரத்தில் செல்பவர், ஒரு கோழியைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். ஐந்தாவது நேரத்தில் செல்பவர், முட்டையைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிவாசலுக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகிறார்கள்.4

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 11
882. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ بَيْنَمَا هُوَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ فَقَالَ عُمَرُ لِمَ تَحْتَبِسُونَ عَنِ الصَّلاَةِ فَقَالَ الرَّجُلُ مَا هُوَ إِلاَّ سَمِعْتُ النِّدَاءَ تَوَضَّأْتُ. فَقَالَ أَلَمْ تَسْمَعُوا النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا رَاحَ أَحَدُكُمْ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ "".
பாடம் : 5
882. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமை உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு மனிதர் உள்ளே வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஏன் தொழுகைக்குத் தாமதமாக வருகிறீர்கள்?” என்று கேட்டார் கள். அதற்கு அந்த மனிதர், “தொழுகை அறிவிப்பைக் கேட்டவுடன் அங்கத் தூய்மை செய்(துவிட்டு உடனே வந்)தேன்” என்றார்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ‘உங்களில் ஒருவர் ஜுமுஆவுக்குச் செல்லும்போது குளித்துக் கொள்ளட்டும்’ என்று கூறியதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 11
883. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنِ ابْنِ وَدِيعَةَ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ، وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ، فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ، ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ، ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإِمَامُ، إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى "".
பாடம் : 6 ஜுமுஆவுக்காக (தலையில்) எண்ணெய் தேய்த்துக்கொள் வது
883. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் குளிக்கிறார்; தம்மால் இயன்றவரை தூய்மைப்படுத்திக்கொள்கிறார்; தம்மிட முள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது தமது வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக்கொள்கிறார்; பிறகு (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்து (சேர்ந்து உட்கார்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் தமக்கு எழுதப்பட்டுள்ளதைத் தொழுகிறார்; பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியுறுகிறார் எனில், அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையில் ஏற்படும் பாவங்கள் அவருக்கு மன்னிக் கப்படாமல் இருப்பதில்லை.

இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 11