847. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، سَمِعَ يَزِيدَ، قَالَ أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ أَخَّرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الصَّلاَةَ ذَاتَ لَيْلَةٍ إِلَى شَطْرِ اللَّيْلِ ثُمَّ خَرَجَ عَلَيْنَا، فَلَمَّا صَلَّى أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ "" إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَرَقَدُوا، وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاَةَ "".
பாடம் : 156 சலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கித் திரும்புவது
847. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷா தொழுகையைப் பாதி இரவுவரை தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார் கள். பிறகு (எங்களுக்கு) தொழுவித்துவிட்டு தமது முகத்தை எங்களை நோக்கி நேராகத் திருப்பி (அமர்ந்து), “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்வரை அத்தொழுகை யிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள்.75

அத்தியாயம் : 10
848. وَقَالَ لَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ يُصَلِّي فِي مَكَانِهِ الَّذِي صَلَّى فِيهِ الْفَرِيضَةَ. وَفَعَلَهُ الْقَاسِمُ. وَيُذْكَرُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ لاَ يَتَطَوَّعُ الإِمَامُ فِي مَكَانِهِ. وَلَمْ يَصِحَّ.
பாடம் : 157 சலாம் கொடுத்தபின் இமாம் தொழுத இடத்திலேயே இருப் பது
848. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் கடமை யான தொழுகையைத் தொழுத இடத்திலேயே (கூடுதலான தொழுகை களைத்) தொழுவார்கள். (அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் பேரர்) காசிம் (ரஹ்) அவர்களும் இவ்வாறே செய்வார்கள்.

“இமாம் (கடமையான தொழுகையைத் தொழுவித்த) தமது இடத்திலேயே கூடுதலான தொழுகைகளைத் தொழக் கூடாது” என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. அது ஆதாரபூர்வமானதன்று.76


அத்தியாயம் : 10
849. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ هِنْدٍ بِنْتِ الْحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَلَّمَ يَمْكُثُ فِي مَكَانِهِ يَسِيرًا. قَالَ ابْنُ شِهَابٍ فَنُرَى ـ وَاللَّهُ أَعْلَمُ ـ لِكَىْ يَنْفُذَ مَنْ يَنْصَرِفُ مِنَ النِّسَاءِ.
பாடம் : 157 சலாம் கொடுத்தபின் இமாம் தொழுத இடத்திலேயே இருப் பது
849. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ கொடுத்ததும் அதே இடத்திலேயே சிறிது நேரம் (அமர்ந்து) இருப்பார்கள்.

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“தொழுகையை முடித்த பெண்கள் (முத-ல்) சென்றுவிடட்டும் என்பதற்காகவே (நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்துகொண்டிருந்தார்கள்) என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கறிந்தவன்.


அத்தியாயம் : 10
850. وَقَالَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، قَالَ أَخْبَرَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، أَنَّ ابْنَ شِهَابٍ، كَتَبَ إِلَيْهِ قَالَ حَدَّثَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ الْفِرَاسِيَّةُ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَتْ مِنْ صَوَاحِبَاتِهَا قَالَتْ كَانَ يُسَلِّمُ فَيَنْصَرِفُ النِّسَاءُ، فَيَدْخُلْنَ بُيُوتَهُنَّ مِنْ قَبْلِ أَنْ يَنْصَرِفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ ابْنُ وَهْبٍ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَتْنِي هِنْدُ الْفِرَاسِيَّةُ. وَقَالَ عُثْمَانُ بْنُ عُمَرَ أَخْبَرَنَا يُونُسُ عَنِ الزُّهْرِيِّ حَدَّثَتْنِي هِنْدُ الْفِرَاسِيَّةُ. وَقَالَ الزُّبَيْدِيُّ أَخْبَرَنِي الزُّهْرِيُّ أَنَّ هِنْدَ بِنْتَ الْحَارِثِ الْقُرَشِيَّةَ أَخْبَرَتْهُ، وَكَانَتْ تَحْتَ مَعْبَدِ بْنِ الْمِقْدَادِ ـ وَهْوَ حَلِيفُ بَنِي زُهْرَةَ ـ وَكَانَتْ تَدْخُلُ عَلَى أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ شُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ حَدَّثَتْنِي هِنْدُ الْقُرَشِيَّةُ. وَقَالَ ابْنُ أَبِي عَتِيقٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ هِنْدٍ الْفِرَاسِيَّةِ. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَهُ عَنِ ابْنِ شِهَابٍ عَنِ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ حَدَّثَتْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 157 சலாம் கொடுத்தபின் இமாம் தொழுத இடத்திலேயே இருப் பது
850. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுப்பார்கள். அவர்கள் (தம் இல்லத்திற்கு) திரும்புவதற்குமுன் பெண்கள் திரும்பிச் சென்று தம் இல்லங் களுக்குள் நுழைந்துவிடுவார்கள். (குறைந்த பட்சம் அவ்வளவு நேரம் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்திலேயே வீற்றிருப்பார்கள்.)

இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் சில அறிவிப்புகளில், இந்த ஹதீஸை உம்மு சலமா (ரலி) அவர்களிட மிருந்து அறிவிப்பவர் ‘ஹின்த் பின்த் அல்ஹாரிஸ் ஃபிராஸிய்யா’ என்றும், வேறுசில அறிவிப்புகளில் ‘ஹின்த் பின்த் அல்ஹாரிஸ் குரஷிய்யா’ என்றும், இன் னோர் அறிவிப்பில் ‘குறைஷிப் பெண்மணி ஒருவர்’ என்றும் வந்துள்ளது.

அத்தியாயம் : 10
851. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ، قَالَ صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ الْعَصْرَ فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا، فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ، فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ فَخَرَجَ عَلَيْهِمْ، فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ فَقَالَ "" ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي، فَأَمَرْتُ بِقِسْمَتِهِ "".
பாடம் : 158 மக்களுக்குத் தொழவைத்து விட்டு, ஏதேனும் தேவை நினைவுக்கு வந்தவுடன் (அமரா மல்) இமாம் மக்களைக் கடந்து செல்வது
851. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) அஸ்ர் தொழுகை தொழுதேன். அவர்கள் ‘சலாம்’ கொடுத்ததும் மக்களைத் தாண்டிக்கொண்டு தம் துணைவியரில் ஒருவரது இல்லம் நோக்கி விரைந்து சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வந்தபோது, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்புற்றிருப்ப தைக் கண்டார்கள்.

எனவே, “எங்களிடம் இருந்த (ஸகாத் நிதியான) தங்கக்கட்டி ஒன்று (தொழுது கொண்டிருக்கும்போது) என் நினைவுக்கு வந்தது. அது (பற்றிய சிந்தனை தொழுகை யில் கவனம் செலுத்த விடாமல்) என்னைத் தடுத்துவிடுவதை நான் வெறுத்தேன். ஆகவே, நான் (சென்று) அதைப் பங்கிட்டு விடுமாறு பணித்(துவிட்டு வந்)தேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 10
852. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنِ الأَسْوَدِ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ لاَ يَجْعَلْ أَحَدُكُمْ لِلشَّيْطَانِ شَيْئًا مِنْ صَلاَتِهِ، يَرَى أَنَّ حَقًّا عَلَيْهِ أَنْ لاَ يَنْصَرِفَ إِلاَّ عَنْ يَمِينِهِ، لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم كَثِيرًا يَنْصَرِفُ عَنْ يَسَارِهِ.
பாடம் : 159 (தொழுது முடித்தபின் இமாம்) வலப் பக்கமோ இடப் பக்கமோ திரும்பி அமர்வதும் திரும்பிச் செல்வதும் அனஸ் (ரலி) அவர்கள் (தொழுது முடித்தபின்) வலப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். இடப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். வலப் பக்கமே திரும்ப வேண்டும் என்று கருதுவோரை அவர்கள் கண்டிப்பார்கள்.
852. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வலப் பக்கம் திரும்புவதே கடமையாகும் என்று எண்ணுவதன் மூலம் உங்களில் யாரும் தமது தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்துவிட வேண்டாம். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன். பல சமயங்களில் அவர்கள் தமது இடப் பக்கமும் திரும்புவார்கள்.

அத்தியாயம் : 10
853. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ "" مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ ـ يَعْنِي الثُّومَ ـ فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا "".
பாடம் : 160 பச்சை வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டு உள்ளி (போன்ற வாடையுள்ளவற் றைச்) சாப்பிடுவது தொடர்பாக வந்துள்ளவை “பசி காரணமாகவோ வேறு காரணங் களுக்காகவோ வெள்ளைப் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளி வாசலை நெருங்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
853. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தச் செடியி-ருந்து -அதாவது வெள்ளைப் பூண்டைச்- சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலை நெருங்க வேண்டாம்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 10
854. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ ـ يُرِيدُ الثُّومَ ـ فَلاَ يَغْشَانَا فِي مَسَاجِدِنَا "". قُلْتُ مَا يَعْنِي بِهِ قَالَ مَا أُرَاهُ يَعْنِي إِلاَّ نِيئَهُ. وَقَالَ مَخْلَدُ بْنُ يَزِيدَ عَنِ ابْنِ جُرَيْجٍ إِلاَّ نَتْنَهُ.
பாடம் : 160 பச்சை வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டு உள்ளி (போன்ற வாடையுள்ளவற் றைச்) சாப்பிடுவது தொடர்பாக வந்துள்ளவை “பசி காரணமாகவோ வேறு காரணங் களுக்காகவோ வெள்ளைப் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளி வாசலை நெருங்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
854. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு “இந்தச் செடியிலிருந்து சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலுக்குள் வர வேண்டாம்” என்று கூறினார்கள் என்றார்கள்.

அவர்களிடம் நான்,“எந்த வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு நபியவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பச்சை வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “நெடிவீசும் பூண்டைக் கருத்தில் கொண்டே கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 10
855. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، زَعَمَ عَطَاءٌ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، زَعَمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلْنَا ـ أَوْ قَالَ ـ فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا، وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ "". وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِقِدْرٍ فِيهِ خَضِرَاتٌ مِنْ بُقُولٍ، فَوَجَدَ لَهَا رِيحًا فَسَأَلَ فَأُخْبِرَ بِمَا فِيهَا مِنَ الْبُقُولِ فَقَالَ "" قَرِّبُوهَا "" إِلَى بَعْضِ أَصْحَابِهِ كَانَ مَعَهُ، فَلَمَّا رَآهُ كَرِهَ أَكْلَهَا قَالَ "" كُلْ فَإِنِّي أُنَاجِي مَنْ لاَ تُنَاجِي "". وَقَالَ أَحْمَدُ بْنُ صَالِحٍ عَنِ ابْنِ وَهْبٍ أُتِيَ بِبَدْرٍ. قَالَ ابْنُ وَهْبٍ يَعْنِي طَبَقًا فِيهِ خُضَرَاتٌ. وَلَمْ يَذْكُرِ اللَّيْثُ وَأَبُو صَفْوَانَ عَنْ يُونُسَ قِصَّةَ الْقِدْرِ، فَلاَ أَدْرِي هُوَ مِنْ قَوْلِ الزُّهْرِيِّ أَوْ فِي الْحَدِيثِ.
பாடம் : 160 பச்சை வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டு உள்ளி (போன்ற வாடையுள்ளவற் றைச்) சாப்பிடுவது தொடர்பாக வந்துள்ளவை “பசி காரணமாகவோ வேறு காரணங் களுக்காகவோ வெள்ளைப் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளி வாசலை நெருங்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
855. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் ‘நம்மிடமிருந்து’ அல்லது ‘நமது பள்ளி வாசலிலிருந்து விலகியிருக்கட்டும்’; அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்) தமது இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. (நன்கு வேகாத காரணத்தால்) அவற்றில் (துர்)வாடை வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, அவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரம் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதைத் தம்முடனிருந்த ஒரு தோழருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள்.

அத்தோழரும் அதை உண்ண விரும்பாததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் உரையாடாத (வான)வர்களுடன் நான் உரையாடுகிறேன் (அதனால்தான் நான் அதைச் சாப்பிடவில்லை)” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அஹ்மத் பின் ஸா-ஹ் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடரில் “வட்ட வடிவப் பாத்திரம் (பத்ர்) ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது” என்று அப்துல்லாஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் அறிவித்ததாகவும் ‘பத்ர்’ என்பது ‘காய்கறிகள் உள்ள தட்டையே’ குறிக்கும் என்று அதற்கு அவர் விளக்கம் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

லைஸ், அபூஸஃப்வான் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், பாத்திரம் சம்பந்தமான குறிப்பு இடம்பெறவில்லை. ஆகவே, அது அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் உரையா, அல்லது நபிமொழியின் மூலத்திலேயே உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை.


அத்தியாயம் : 10
856. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ سَأَلَ رَجُلٌ أَنَسًا مَا سَمِعْتَ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم فِي الثُّومِ فَقَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلاَ يَقْرَبْنَا، أَوْ لاَ يُصَلِّيَنَّ مَعَنَا "".
பாடம் : 160 பச்சை வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டு உள்ளி (போன்ற வாடையுள்ளவற் றைச்) சாப்பிடுவது தொடர்பாக வந்துள்ளவை “பசி காரணமாகவோ வேறு காரணங் களுக்காகவோ வெள்ளைப் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளி வாசலை நெருங்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
856. அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அனஸ் (ரலி) அவர்களிடம், “வெள்ளைப் பூண்டு குறித்து நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “இந்தச் செடியி-ருந்து (விளையும் பூண்டைச்) சாப்பிட்டவர் ‘நம்மை நெருங்க வேண்டாம்’ அல்லது ‘நம்முடன் தொழ வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.77

அத்தியாயம் : 10
857. حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ سُلَيْمَانَ الشَّيْبَانِيَّ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، قَالَ أَخْبَرَنِي مَنْ، مَرَّ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى قَبْرٍ مَنْبُوذٍ، فَأَمَّهُمْ وَصَفُّوا عَلَيْهِ. فَقُلْتُ يَا أَبَا عَمْرٍو مَنْ حَدَّثَكَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ.
பாடம் : 161 சிறுவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பரு வத்தில் கடமையாகும் என்ப தும், கூட்டுத் தொழுகை (ஜமா அத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸா தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்துகொள்வதும், அவர்கள் தொழுகை வரிசையில் (மற்றவர்களுடன்) நிற்பதும்
857. சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள் (மையவாடியில்) தனியாக இருந்த ஒரு மண்ணறை (கப்று) அருகே சென்று மக்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். மக்கள் அந்த மண்ணறை அருகில் அணிவகுத்து நின்றார்கள்” என்று நபி (ஸல்) அவர்களுடன் அப்போது சென்றிருந்த ஒருவர் என்னிடம் கூறினார் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நான் “அபூஅம்ரே! உங்களுக்கு இதைக் கூறிய அவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்’ என்று பதிலளித்தார்கள்.78


அத்தியாயம் : 10
858. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ "".
பாடம் : 161 சிறுவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பரு வத்தில் கடமையாகும் என்ப தும், கூட்டுத் தொழுகை (ஜமா அத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸா தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்துகொள்வதும், அவர்கள் தொழுகை வரிசையில் (மற்றவர்களுடன்) நிற்பதும்
858. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) தினத் தில் குளிப்பது, பருவமடைந்த ஒவ்வொரு வர் மீதும் கடமையாகும்.79

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 10
859. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ لَيْلَةً، فَنَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا كَانَ فِي بَعْضِ اللَّيْلِ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ مِنْ شَنٍّ مُعَلَّقٍ وُضُوءًا خَفِيفًا ـ يُخَفِّفُهُ عَمْرٌو وَيُقَلِّلُهُ جِدًّا ـ ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ فَتَوَضَّأْتُ نَحْوًا مِمَّا تَوَضَّأَ، ثُمَّ جِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَحَوَّلَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، ثُمَّ صَلَّى مَا شَاءَ اللَّهُ، ثُمَّ اضْطَجَعَ فَنَامَ حَتَّى نَفَخَ، فَأَتَاهُ الْمُنَادِي يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَامَ مَعَهُ إِلَى الصَّلاَةِ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. قُلْنَا لِعَمْرٍو إِنَّ نَاسًا يَقُولُونَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَنَامُ عَيْنُهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ. قَالَ عَمْرٌو سَمِعْتُ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَقُولُ إِنَّ رُؤْيَا الأَنْبِيَاءِ وَحْىٌ ثُمَّ قَرَأَ {إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ}.
பாடம் : 161 சிறுவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பரு வத்தில் கடமையாகும் என்ப தும், கூட்டுத் தொழுகை (ஜமா அத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸா தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்துகொள்வதும், அவர்கள் தொழுகை வரிசையில் (மற்றவர்களுடன்) நிற்பதும்
859. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயார் மைமூனா

(ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டு, இரவின் ஒரு பகுதி ஆனதும் எழுந்து (சென்று), தொங்கவிடப்பட்டிருந்த தோல் பையி-ருந்து (தண்ணீர் எடுத்து) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்.

-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், “(உறுப்புகளை அதிகம் தேய்க்காமல் தலா ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறை மட்டுமே கழுவிய) நபி (ஸல்) அவர்களின் அந்த உளூ எளிமையாகவும் அதே சமயத் தில் மிகக் குறைந்த பட்ச அளவிலும் அமைந்திருந்தது” என்று சுட்டிக்காட்டினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் நின்று தொழுதார்கள். அப்போது நானும் எழுந்து அவர்களைப் போன்றே (சுருக்கமாக) உளூ செய்துவிட்டு வந்து, அவர்களின் இடப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே (தொழுதுகொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தமக்கு வலப் பக்த்தில் நிறுத்திக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ் நாடியதைத் தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து (ஃபஜ்ர்) தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது அவர்கள் எழுந்து அவருடன் தொழுகைக்குப் போய் தொழுவித்தார்கள். ஆனால், அவர்கள் (உறங்கியதற்காகப் புதிதாக) உளூ செய்யவில்லை.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் கண்கள் (மட்டுமே) உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது’ என்று மக்கள் கூறுகின்ற னரே! (அது உண்மையா?)” என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள், “இறைத்தூதர்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (வஹீ) ஆகும் என்று உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

பிறகு, “(மகனே!) உன்னை நான் அறுத்து (குர்பானி செய்து)விடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்” (37:102) எனும் இறை வசனத்தை (தமது கருத்துக்குச் சான்றாக) ஓதிக் காட்டினார்கள்80


அத்தியாயம் : 10
860. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ، مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَتْهُ، فَأَكَلَ مِنْهُ فَقَالَ "" قُومُوا فَلأُصَلِّيَ بِكُمْ "". فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْيَتِيمُ مَعِي، وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ.
பாடம் : 161 சிறுவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பரு வத்தில் கடமையாகும் என்ப தும், கூட்டுத் தொழுகை (ஜமா அத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸா தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்துகொள்வதும், அவர்கள் தொழுகை வரிசையில் (மற்றவர்களுடன்) நிற்பதும்
860. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் (தாய் வழிப்)பாட்டி முளைக்கா (ரலி) அவர்கள் உணவு சமைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (விருந்துண்ண) அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதளவை உண்டுவிட்டுப் பின்னர், “எழுங்கள்! உங்களுக்காக நான் (கூடுதல் தொழுகை யைத்) தொழுவிக்கிறேன்” என்று கூறி னார்கள். (தொழுவதற்காக) நான் எங்களுக் குரிய பாயொன்றை (எடுக்க அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்டதால் கறுப்பாகி யிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயில் தொழுகைக்காக) நின்றார்கள். நானும் என்னுடன் ஓர் அநாதைச் சிறுவரும் (முதல் வரிசையில்) நிற்க அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்றுகொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (இமாமாக நின்று கூடுதலான) இரண்டு ரக்அத்கள் தெழுவித்தார்கள்.


அத்தியாயம் : 10
861. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الاِحْتِلاَمَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ، فَنَزَلْتُ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ وَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَىَّ أَحَدٌ.
பாடம் : 161 சிறுவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பரு வத்தில் கடமையாகும் என்ப தும், கூட்டுத் தொழுகை (ஜமா அத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸா தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்துகொள்வதும், அவர்கள் தொழுகை வரிசையில் (மற்றவர்களுடன்) நிற்பதும்
861. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) ‘மினா’வில் சுவர் அல்லாத (கைத்தடி போன்ற) ஒன்றை நோக்கி (திறந்த வெளியில்) மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன் -அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தேன்- (தொழுதுகொண்டிருந்தவர்களின்) ஓர் அணியில் ஒரு பகுதியை நான் கடந்து சென்று (கழுதையி-ருந்து) இறங்கி, அதை மேய விட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே புகுந்து (நின்று) கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்து சென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை.


அத்தியாயம் : 10
862. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ أَعْتَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم. وَقَالَ عَيَّاشٌ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى حَدَّثَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَعْتَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْعِشَاءِ حَتَّى نَادَاهُ عُمَرُ قَدْ نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ. فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" إِنَّهُ لَيْسَ أَحَدٌ مِنْ أَهْلِ الأَرْضِ يُصَلِّي هَذِهِ الصَّلاَةَ غَيْرُكُمْ "". وَلَمْ يَكُنْ أَحَدٌ يَوْمَئِذٍ يُصَلِّي غَيْرَ أَهْلِ الْمَدِينَةِ.
பாடம் : 161 சிறுவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பரு வத்தில் கடமையாகும் என்ப தும், கூட்டுத் தொழுகை (ஜமா அத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸா தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்துகொள்வதும், அவர்கள் தொழுகை வரிசையில் (மற்றவர்களுடன்) நிற்பதும்
862. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவுவரை) இஷா தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அவர்களை உமர் (ரலி) அவர்கள் அழைத்து, “(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கி விட்டனர்” என்று கூறியதும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையி-ருந்து) வெளியே வந்து, “பூமியில் இருப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை” என்று கூறினார்கள்.

அன்றைய நாளில் மதீனாவாசிகளைத் தவிர வேறு யாரும் தொழுபவர்களாக இருக்கவில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 10
863. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَابِسٍ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَهُ رَجُلٌ شَهِدْتَ الْخُرُوجَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ، وَلَوْلاَ مَكَانِي مِنْهُ مَا شَهِدْتُهُ ـ يَعْنِي مِنْ صِغَرِهِ ـ أَتَى الْعَلَمَ الَّذِي عِنْدَ دَارِ كَثِيرِ بْنِ الصَّلْتِ، ثُمَّ خَطَبَ ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ فَجَعَلَتِ الْمَرْأَةُ تُهْوِي بِيَدِهَا إِلَى حَلْقِهَا تُلْقِي فِي ثَوْبِ بِلاَلٍ، ثُمَّ أَتَى هُوَ وَبِلاَلٌ الْبَيْتَ.
பாடம் : 161 சிறுவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பரு வத்தில் கடமையாகும் என்ப தும், கூட்டுத் தொழுகை (ஜமா அத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸா தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்துகொள்வதும், அவர்கள் தொழுகை வரிசையில் (மற்றவர்களுடன்) நிற்பதும்
863. அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாட்களில் பெண்கள் பகுதிக்குப்) புறப்பட்டுச் சென்றபோது அவர்களுடன் நீங்களும் இருந்தீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

“ஆம் (இருந்தேன்). (உறவின் காரணத்தால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் அவர்களுடன் இருந்திருக்க முடியாது. (பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு) நபி (ஸல்) அவர்கள் கஸீர் பின் அஸ்ஸல்த் (ரலி) அவர்களின் வீட்டருகே உள்ள அடையாள(க் கம்ப)ம் அருகில் வந்து (மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள்.

பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள். மேலும், (ஏழை எளியோருக்காக) தர்மம் செய்யுமாறும் அவர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். உடனே அப்பெண்கள் தங்களின் ஆபரணங்களை நோக்கி தங்களின் கைகளைக் கொண்டுசென்று (அவற்றைக் கழற்றி) பிலால் (ரலி) அவர்கள் (ஏந்தியிருந்த) ஆடையில் போடலானார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் இல்லம் சென்றனர்.

அத்தியாயம் : 10
864. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَعْتَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْعَتَمَةِ حَتَّى نَادَاهُ عُمَرُ نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ. فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا يَنْتَظِرُهَا أَحَدٌ غَيْرُكُمْ مِنْ أَهْلِ الأَرْضِ "". وَلاَ يُصَلَّى يَوْمَئِذٍ إِلاَّ بِالْمَدِينَةِ، وَكَانُوا يُصَلُّونَ الْعَتَمَةَ فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلَى ثُلُثِ اللَّيْلِ الأَوَّلِ.
பாடம் : 162 இரவிலும் இருட்டிலும் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வது
864. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பாதி இரவுவரை) இஷா தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் நபியவர்களை அழைத்து, “பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் (தமது அறையி-ருந்து) வெளியே வந்து, “பூமியில் இருப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை” என்று கூறினார்கள்.

அன்றைய நாளில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்பட வில்லை. இஷா தொழுகையை செம்மேகம் மறைந்ததி-ருந்து இரவின் முதலாவது மூன்றில் ஒரு பகுதி கழிவதுவரை மக்கள் தொழுதுவந்தனர்.


அத்தியாயம் : 10
865. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ حَنْظَلَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ بِاللَّيْلِ إِلَى الْمَسْجِدِ فَأْذَنُوا لَهُنَّ "". تَابَعَهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 162 இரவிலும் இருட்டிலும் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வது
865. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் துணைவியர் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால், அவர்களுக்கு அனுமதி வழங் குங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 10
866. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ، أَنَّ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا أَنَّ النِّسَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُنَّ إِذَا سَلَّمْنَ مِنَ الْمَكْتُوبَةِ قُمْنَ، وَثَبَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ صَلَّى مِنَ الرِّجَالِ مَا شَاءَ اللَّهُ، فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ الرِّجَالُ.
பாடம் : 163 (தொழுகை முடிந்தபின்) அறிஞ ரான இமாம் எழுவதை எதிர் பார்த்து மக்கள் அமர்ந்திருப்பது
866. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் பெண்கள், கடமையான தொழுகையில் ‘சலாம்’ கொடுத்ததும் எழுந்து (சென்று)விடுவார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவர் களுடன்) தொழுகையில் கலந்துகொண்ட ஆண்களும் அல்லாஹ் நாடிய அளவுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள்.

(பெண்கள் சென்றபின்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்ததும் ஆண்களும் எழுவார்கள்


அத்தியாயம் : 10