7562. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، سَمِعْتُ مُحَمَّدَ بْنَ سِيرِينَ، يُحَدِّثُ عَنْ مَعْبَدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَخْرُجُ نَاسٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ وَيَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، ثُمَّ لاَ يَعُودُونَ فِيهِ حَتَّى يَعُودَ السَّهْمُ إِلَى فُوقِهِ "". قِيلَ مَا سِيمَاهُمْ. قَالَ "" سِيمَاهُمُ التَّحْلِيقُ "". أَوْ قَالَ "" التَّسْبِيدُ "".
பாடம்: 57 பாவிகள் மற்றும் நயவஞ்சகர்கள் குர்ஆன் ஓதுவதும், அவர்களது ஓதலின் ஒலி குரல்வளையைத் தாண்டிச் செல்லாது என்பதும்
7562. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “கிழக்குத் திசையிலிருந்து (இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால், அது அவர்களின் நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டை யாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறிவிடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்கு (தானாக)த் திரும்பாதவரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவேமாட்டார்கள்” என்று சொன்னார்கள்.

“அவர்களின் அடையாளம் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மொட்டை போடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)துதான் (அவர்களின் அடையாளம்)” என்று பதில் சொன்னார்கள்.

அத்தியாயம் : 97