7528. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَحَاسُدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهْوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، فَهْوَ يَقُولُ لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ هَذَا، لَفَعَلْتُ كَمَا يَفْعَلُ. وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يُنْفِقُهُ فِي حَقِّهِ فَيَقُولُ لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ عَمِلْتُ فِيهِ مِثْلَ مَا يَعْمَلُ "".
பாடம்: 45 “(இரண்டு பேர் பொறாமை கொள்ளத் தக்கவர்கள்.) அவர் களில் ஒருவர் யாரென்றால், அல்லாஹ் அவருக்கு குர்ஆனின் ஞானத்தை அருளினான். அவர் அல்லும்பகலும் (அதை ஓதி) அதன்படி செயல்படுகிறார். இதைக் காணும் மற்றொருவர், இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்று எனக்கும் வழங்கப்படுமாயின் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே! என்று கூறுகிறார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது குர்ஆனை ஓதி அதன்படி செயல்படுவதென்பது, (மற்றச் செயல்களைப் போன்றே) அந்த மனிதரின் செயல்தான் என அல்லாஹ் விவரிக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததும், உங்கள் மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் அடங்கும். (30:22) புகழோங்கிய இறைவன் கூறுகின் றான்: நன்மை செய்யுங்கள்; நீங்கள் வெற்றியடையலாம். (22:77)
7528. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களில் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும்பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு)வருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், “இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கும் வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!” என்று (ஆதங்கத்துடன்) கூறினார்.

2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர் உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர், “இவருக்கு வழங்கப்பட்ட (செல்வத்)தைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்” என்கிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.167

அத்தியாயம் : 97
7529. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهْوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ "". سَمِعْتُ سُفْيَانَ مِرَارًا لَمْ أَسْمَعْهُ يَذْكُرُ الْخَبَرَ وَهْوَ مِنْ صَحِيحِ حَدِيثِهِ.
பாடம்: 45 “(இரண்டு பேர் பொறாமை கொள்ளத் தக்கவர்கள்.) அவர் களில் ஒருவர் யாரென்றால், அல்லாஹ் அவருக்கு குர்ஆனின் ஞானத்தை அருளினான். அவர் அல்லும்பகலும் (அதை ஓதி) அதன்படி செயல்படுகிறார். இதைக் காணும் மற்றொருவர், இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்று எனக்கும் வழங்கப்படுமாயின் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே! என்று கூறுகிறார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது குர்ஆனை ஓதி அதன்படி செயல்படுவதென்பது, (மற்றச் செயல்களைப் போன்றே) அந்த மனிதரின் செயல்தான் என அல்லாஹ் விவரிக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததும், உங்கள் மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் அடங்கும். (30:22) புகழோங்கிய இறைவன் கூறுகின் றான்: நன்மை செய்யுங்கள்; நீங்கள் வெற்றியடையலாம். (22:77)
7529. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும்பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு)வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும்பகலும் தானம் செய்கிறார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.168

(இதன் அறிவிப்பாளர்) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் பலமுறை (ஹதீஸ்களைக்) கேட்டுள்ளேன். ஆனால், ‘எனக்கு இன்னார் அறிவித்தார்’ (அக்பரனா அல்லது ஹத்தஸனா) என்று அவர் சொன்னதில்லை. (இன்னார் கூறினார் (கால) என்றே சொல்வார்.) அப்படியிருந்தாலும், அது அவரது ஆதாரபூர்வமான அறிவிப்புதான்.

அத்தியாயம் : 97
7530. حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُزَنِيُّ، وَزِيَادُ بْنُ جُبَيْرِ بْنِ حَيَّةَ، عَنْ جُبَيْرِ بْنِ حَيَّةَ، قَالَ الْمُغِيرَةُ أَخْبَرَنَا نَبِيُّنَا، صلى الله عليه وسلم عَنْ رِسَالَةِ، رَبِّنَا "" أَنَّهُ مَنْ قُتِلَ مِنَّا صَارَ إِلَى الْجَنَّةِ "".
பாடம்: 46 “இறைத்தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அரு ளப்பட்டுள்ள (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைப்பீராக! (இந்தப் பணியை) நீர் செய்யாவிட்டால் அவனது தூதை நீர் எடுத்துரைக்க வில்லை என்றாகிவிடும்” எனும் (5:67 ஆவது) இறைவசனம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடமிருந்து தூது வந்தது; அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துச்சொன்னார்கள். நாம் அதை ஏற்றுச் செயல்பட வேண்டும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அந்தத் தூதர்கள் தங்கள் இறைவனின் தூதுச் செய்திகளை சேர்த்துவிட்டார்களா என்று அறிந்துகொள்வதற்காக (அவர்களுக்கு முன்பும் பின்பும் கண்காணிப்பாளரை அல்லாஹ் நியமிக்கின்றான்). (72:28) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நூஹ் கூறினார்:) நான் என் இறைவனின் தூதையே உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். (7:62) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில்) நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிட்ட போது அல்லாஹ் கூறினான்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுடைய செயல்பாடுகளைப் பார்ப்பார்கள். (9:105) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதாவது ஒருவரது நற்செயல் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால், “செயல் படுங்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள்” என்று சொல்லுங்கள். (பிறரை அவசரப்பட்டுப் பாராட்டுவதன் மூலம்) உங்களை எவரும் குறைத்து மதிப்பிட இடமளித்துவிட வேண்டாம். மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (2:2ஆவது வசனத்திலுள்ள) ‘அந்த வேதம்’ (‘தாலிக்கல் கிதாபு’) என்பது இந்த குர்ஆனைக் குறிக்கிறது. “இறையச்சமுடை யோருக்கு நல்வழியாகும்” என்பதற்கு தெளிவுரையாகும்; வழிகாட்டியாகும் என்று பொருள். இது, (60:10ஆவது வசனத்திலுள்ள) “இதுவே அல்லாஹ்வின் தீர்ப்பாகும்” (தாóக்கும் ஹுக்முல்லாஹ்) என்பதைப் போன்றே. இவ்வாறு தொலைவைச் சுட்டும் சொற்களால் அண்மையைச் சுட்டுவது குர்ஆனின் மரபுகளில் ஒன்றாகும். (10:22ஆவது வசனத்தில்) முன்னிலைக்குப் பதிலாகப் படர்க்கை ஆளப்பட்டுள்ளது. “நீங்கள் (கடலில் பயணிக்கும்போது) கப்பல்களில் இருப்பீர்கள். அவை இதமான காற்றால் (பயணிகளான) அவர்களைக் கொண்டுசெல்கின்றன” என்று அந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். (இங்கு ‘உங்களை’ என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் ‘அவர்களை’ என குறிப்பிட்டுள்ளான்.) அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: நபி (ஸல்) அவர்கள், என் தாய் மாமன் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களை அவர்களின் குலத்தாரிடம் அனுப்பி னார்கள். அங்கு சென்று ஹராம் (ரலி) அவர்கள் (தம் மக்களிடம்), “நீங்கள் என்னை நம்புவீர்களா? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியனுப்பிய செய்தியை எடுத்துரைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவர்களிடம் பேசலானார்கள்.
7530. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “நம்மில் எவர் (இறைவழியில்) கொல்லப் படுகின்றாரோ அவர் சொர்க்கத்திற்குச் செல்கின்றார்” எனும் தம் இறைவனின் செய்தியை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.169

இதை ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7531. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم كَتَمَ شَيْئًا وَقَالَ مُحَمَّدٌ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَتَمَ شَيْئًا مِنَ الْوَحْىِ، فَلاَ تُصَدِّقْهُ، إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ {يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ}
பாடம்: 46 “இறைத்தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அரு ளப்பட்டுள்ள (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைப்பீராக! (இந்தப் பணியை) நீர் செய்யாவிட்டால் அவனது தூதை நீர் எடுத்துரைக்க வில்லை என்றாகிவிடும்” எனும் (5:67 ஆவது) இறைவசனம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடமிருந்து தூது வந்தது; அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துச்சொன்னார்கள். நாம் அதை ஏற்றுச் செயல்பட வேண்டும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அந்தத் தூதர்கள் தங்கள் இறைவனின் தூதுச் செய்திகளை சேர்த்துவிட்டார்களா என்று அறிந்துகொள்வதற்காக (அவர்களுக்கு முன்பும் பின்பும் கண்காணிப்பாளரை அல்லாஹ் நியமிக்கின்றான்). (72:28) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நூஹ் கூறினார்:) நான் என் இறைவனின் தூதையே உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். (7:62) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில்) நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிட்ட போது அல்லாஹ் கூறினான்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுடைய செயல்பாடுகளைப் பார்ப்பார்கள். (9:105) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதாவது ஒருவரது நற்செயல் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால், “செயல் படுங்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள்” என்று சொல்லுங்கள். (பிறரை அவசரப்பட்டுப் பாராட்டுவதன் மூலம்) உங்களை எவரும் குறைத்து மதிப்பிட இடமளித்துவிட வேண்டாம். மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (2:2ஆவது வசனத்திலுள்ள) ‘அந்த வேதம்’ (‘தாலிக்கல் கிதாபு’) என்பது இந்த குர்ஆனைக் குறிக்கிறது. “இறையச்சமுடை யோருக்கு நல்வழியாகும்” என்பதற்கு தெளிவுரையாகும்; வழிகாட்டியாகும் என்று பொருள். இது, (60:10ஆவது வசனத்திலுள்ள) “இதுவே அல்லாஹ்வின் தீர்ப்பாகும்” (தாóக்கும் ஹுக்முல்லாஹ்) என்பதைப் போன்றே. இவ்வாறு தொலைவைச் சுட்டும் சொற்களால் அண்மையைச் சுட்டுவது குர்ஆனின் மரபுகளில் ஒன்றாகும். (10:22ஆவது வசனத்தில்) முன்னிலைக்குப் பதிலாகப் படர்க்கை ஆளப்பட்டுள்ளது. “நீங்கள் (கடலில் பயணிக்கும்போது) கப்பல்களில் இருப்பீர்கள். அவை இதமான காற்றால் (பயணிகளான) அவர்களைக் கொண்டுசெல்கின்றன” என்று அந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். (இங்கு ‘உங்களை’ என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் ‘அவர்களை’ என குறிப்பிட்டுள்ளான்.) அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: நபி (ஸல்) அவர்கள், என் தாய் மாமன் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களை அவர்களின் குலத்தாரிடம் அனுப்பி னார்கள். அங்கு சென்று ஹராம் (ரலி) அவர்கள் (தம் மக்களிடம்), “நீங்கள் என்னை நம்புவீர்களா? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியனுப்பிய செய்தியை எடுத்துரைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவர்களிடம் பேசலானார்கள்.
7531. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) வேத அறிவிப்பிலிருந்து எதையும் மறைத்தார்கள் என உங்களிடம் யாரேனும் சொன்னால் அவரை நீங்கள் நம்பாதீர்கள். ஏனெனில், அல்லாஹ், “(எம்) தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக! அவ்வாறு நீர் செய்யாவிட்டால், அவனது தூதை நீர் எடுத்துரைக்கவில்லை என்றாகிவிடும்” எனக் கூறுகின்றான் (5:67).170

இதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7532. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ "" أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا، وَهْوَ خَلَقَكَ "". قَالَ ثُمَّ أَىّ قَالَ "" ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ، أَنْ يَطْعَمَ مَعَكَ "". قَالَ ثُمَّ أَىّ قَالَ "" أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ "". فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَهَا {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلاَ يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ} الآيَةَ.
பாடம்: 46 “இறைத்தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அரு ளப்பட்டுள்ள (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைப்பீராக! (இந்தப் பணியை) நீர் செய்யாவிட்டால் அவனது தூதை நீர் எடுத்துரைக்க வில்லை என்றாகிவிடும்” எனும் (5:67 ஆவது) இறைவசனம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடமிருந்து தூது வந்தது; அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துச்சொன்னார்கள். நாம் அதை ஏற்றுச் செயல்பட வேண்டும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அந்தத் தூதர்கள் தங்கள் இறைவனின் தூதுச் செய்திகளை சேர்த்துவிட்டார்களா என்று அறிந்துகொள்வதற்காக (அவர்களுக்கு முன்பும் பின்பும் கண்காணிப்பாளரை அல்லாஹ் நியமிக்கின்றான்). (72:28) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நூஹ் கூறினார்:) நான் என் இறைவனின் தூதையே உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். (7:62) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில்) நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிட்ட போது அல்லாஹ் கூறினான்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுடைய செயல்பாடுகளைப் பார்ப்பார்கள். (9:105) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதாவது ஒருவரது நற்செயல் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால், “செயல் படுங்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள்” என்று சொல்லுங்கள். (பிறரை அவசரப்பட்டுப் பாராட்டுவதன் மூலம்) உங்களை எவரும் குறைத்து மதிப்பிட இடமளித்துவிட வேண்டாம். மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (2:2ஆவது வசனத்திலுள்ள) ‘அந்த வேதம்’ (‘தாலிக்கல் கிதாபு’) என்பது இந்த குர்ஆனைக் குறிக்கிறது. “இறையச்சமுடை யோருக்கு நல்வழியாகும்” என்பதற்கு தெளிவுரையாகும்; வழிகாட்டியாகும் என்று பொருள். இது, (60:10ஆவது வசனத்திலுள்ள) “இதுவே அல்லாஹ்வின் தீர்ப்பாகும்” (தாóக்கும் ஹுக்முல்லாஹ்) என்பதைப் போன்றே. இவ்வாறு தொலைவைச் சுட்டும் சொற்களால் அண்மையைச் சுட்டுவது குர்ஆனின் மரபுகளில் ஒன்றாகும். (10:22ஆவது வசனத்தில்) முன்னிலைக்குப் பதிலாகப் படர்க்கை ஆளப்பட்டுள்ளது. “நீங்கள் (கடலில் பயணிக்கும்போது) கப்பல்களில் இருப்பீர்கள். அவை இதமான காற்றால் (பயணிகளான) அவர்களைக் கொண்டுசெல்கின்றன” என்று அந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். (இங்கு ‘உங்களை’ என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் ‘அவர்களை’ என குறிப்பிட்டுள்ளான்.) அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: நபி (ஸல்) அவர்கள், என் தாய் மாமன் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களை அவர்களின் குலத்தாரிடம் அனுப்பி னார்கள். அங்கு சென்று ஹராம் (ரலி) அவர்கள் (தம் மக்களிடம்), “நீங்கள் என்னை நம்புவீர்களா? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியனுப்பிய செய்தியை எடுத்துரைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவர்களிடம் பேசலானார்கள்.
7532. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! உயர்ந்தோன் அல்லாஹ் விடம் மிகப் பெரிய பாவம் எது?” என்று ஒருவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பித்து வழிபடுவ தாகும்” என்று பதிலளித்தார்கள். அவர், “பிறகு எது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “பிறகு உன் குழந்தை உன்னுடன் உணவு உண்பதை அஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அவர், “பிறகு எது?” என்று கேட்க, நபியவர்கள் “உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹ், “அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரம் செய்யமாட்டார்கள். யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவார். மறுமை நாளில் அவருக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும்” எனும் வசனத்தை (25:68) அருளினான்.171

அத்தியாயம் : 97
7533. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَنْ سَلَفَ مِنَ الأُمَمِ كَمَا بَيْنَ صَلاَةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ، أُوتِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ فَعَمِلُوا بِهَا حَتَّى انْتَصَفَ النَّهَارُ، ثُمَّ عَجَزُوا فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ فَعَمِلُوا بِهِ حَتَّى صُلِّيَتِ الْعَصْرُ، ثُمَّ عَجَزُوا فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيتُمُ الْقُرْآنَ فَعَمِلْتُمْ بِهِ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ، فَأُعْطِيتُمْ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَقَالَ أَهْلُ الْكِتَابِ هَؤُلاَءِ أَقَلُّ مِنَّا عَمَلاً وَأَكْثَرُ أَجْرًا. قَالَ اللَّهُ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا قَالُوا لاَ. قَالَ فَهْوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ "".
பாடம்: 47 “(நபியே!) கூறுக: (யூதர்களே!) தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை ஓதிக்காட்டுங்கள்” எனும் (3:59ஆவது) இறைவசனம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அதன்படி அவர்கள் செயல்பட்டார்கள். ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அதன்படி செயல்பட்டார்கள். உங்களுக்கு குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் அதன்படி செயல்பட்டீர்கள்.172 “அதை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகிறார்கள்” எனும் (2:121ஆவது) வசனத்திற்கு அபூரஸீன் (ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கையில், “அதைப் பின்பற்றி முறையாக அதன்படி செயல்படுவார்கள்” என்று கூறியுள்ளார்கள். ‘யுத்லா’ எனும் சொல்லுக்கு ‘ஓதப்படுதல்’ என்பது பொருள். ‘ஹசனுத் திலாவத்’ என்றால், குர்ஆனை அழகிய முறையில் ஓதுதல் என்பது பொருள். குர்ஆன்மீது (உண்மையான) நம்பிக்கை கொண்டவர்தான் அதன் சுவையையும் பயனையும் அடைவார். அதை உறுதியோடு நம்பியவர்தான் உரிய முறையில் அதைச் சுமப்பார். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தவ்ராத் வேதத்தைச் செயல்படுத்தும் (பொறுப்புச்) சுமை வழங்கப்பட்டு அதைச் சுமக்கத் தவறியவர்கள் ஏடுகளைச் சுமக்கும் கழுதை போன்றவர்கள். அல்லாஹ்வின் வசனங்களை நம்ப மறுத்துவிட்டவர்களின் நிலை மிகவும் கெட்டது. அக்கிரமக்கார மக்களை அல்லாஹ் நல்வழியில் செலுத்துவதில்லை (62:5). நபி (ஸல்) அவர்கள் கீழ்ப்படிதல் (இஸ்லாம்), நம்பிக்கை (ஈமான்), தொழுகை ஆகிய அனைத்தையும் ‘செயல்’ (அமல்) என்றே குறிப்பிட்டார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றபின் அதிகமான நன்மையை எதிர்பார்த்துச் செய்த நல்லறம் எது?” என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “அதிக நன்மையை எதிர்பார்த்து நான் செய்த நற்செயல் எதுவெனில், நான் அங்கத் தூய்மை (உளூ) செய்து தூய்மையாகிக் கொள்ளும்போதெல்லாம் (இரண்டு ரக்அத்கள்) தொழுதுகொள்வேன்” என்று பதில் சொன்னார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களிடம், “நற்செயல் களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்மீதும் நம்பிக்கை கொள்வதும், பின்னர் அறப்போர் புரிவதும், பின்னர் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஹஜ்ஜும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.173
7533. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும். ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (காலை முதல்) நண்பகல்வரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப்பெற்றது. பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (நண்பகல் முதல்) அஸ்ர் தொழுகைவரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப் பெற்றது.

பிறகு உங்களுக்கு குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் (அஸ்ர் முதல்) சூரியன் மறையும்வரை அதன்படி செயல்பட்டீர்கள். உங்களுக்கு(க் கூலியாக) இரண்டிரண்டு “கீராத்’கள் வழங்கப்பட்டன. அப்போது வேதக்காரர்கள், “இவர்கள் வேலை செய்ததோ நம்மைவிடக் குறைந்த நேரம்; கூலியோ அதிகம்” என்று கூறினர். அதற்கு அல்லாஹ், “நான் உங்களுக்குரிய உரிமை (கூலி)யில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?” என்று கேட்க, அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ், “அது (முஸ்லிம்களுக்கு அதிகக் கூலி கொடுத்தது) என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்” என்று சொன்னான்.174

அத்தியாயம் : 97
7534. حَدَّثَنِي سُلَيْمَانُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْوَلِيدِ،. وَحَدَّثَنِي عَبَّادُ بْنُ يَعْقُوبَ الأَسَدِيُّ، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ "" الصَّلاَةُ لِوَقْتِهَا، وَبِرُّ الْوَالِدَيْنِ، ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம்: 48 நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ‘செயல்’ (அமல்) எனக் குறிப்பிட்டதும், “அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே கிடையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும்
7534. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நற்செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதும், பெற்றோருக்கு நன்மை புரிவதும், பின்னர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.175

இதை அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7535. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم مَالٌ فَأَعْطَى قَوْمًا وَمَنَعَ آخَرِينَ فَبَلَغَهُ أَنَّهُمْ عَتَبُوا فَقَالَ "" إِنِّي أُعْطِي الرَّجُلَ وَأَدَعُ الرَّجُلَ، وَالَّذِي أَدَعُ أَحَبُّ إِلَىَّ مِنَ الَّذِي أُعْطِي، أُعْطِي أَقْوَامًا لِمَا فِي قُلُوبِهِمْ مِنَ الْجَزَعِ وَالْهَلَعِ، وَأَكِلُ أَقْوَامًا إِلَى مَا جَعَلَ اللَّهُ فِي قُلُوبِهِمْ مِنَ الْغِنَى وَالْخَيْرِ مِنْهُمْ عَمْرُو بْنُ تَغْلِبَ "". فَقَالَ عَمْرٌو مَا أُحِبُّ أَنَّ لِي بِكَلِمَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُمْرَ النَّعَمِ.
பாடம்: 49 “நிச்சயமாக, மனிதன் பதற்றமிக்க வனாகவே படைக்கப்பட்டிருக் கிறான். அவனுக்குத் துன்பம் நேரும்போது பொறுமை இழந்து விடுகிறான்; நன்மை ஏற்படும் போது (அது பிறருக்குக் கிடைக் காதவாறு) தடுத்துவிடுகிறான்” எனும் (70:19-21) வசனங்கள் இந்த வசனத்தின் (70:19) மூலத்தில் இடம்பெறும் ‘ஹலூஉ’ எனும் சொல்லுக்கு ‘பதற்றமிக்கவன்’ என்பது பொருள்.
7535. அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு செல்வம் வந்தது. அதை அவர்கள் சிலருக்குக் கொடுத்தார்கள். வேறுசிலருக்குக் கொடுக்கவில்லை. (பங்கு கிடைக்காத) அந்த மற்ற வர்கள் தம்மைக் குறைகூறுவதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது.

அப்போது அவர்கள், “நான் ஒருவருக் குக் கொடுக்கின்றேன். மற்றொருவரை விட்டுவிடுகின்றேன். நான் எவருக்குக் கொடுக்கின்றேனோ அவரைவிட நான் எவரை விட்டுவிடுகின்றானோ அவர்தான் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார். பதற்றமுள்ள மனம் படைத்தோருக்கு நான் கொடுக்கின்றேன். இன்னும் சிலருக்கு, அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மையையும் தன்னிறைவான (போதுமென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல் விட்டுவிடுகின்றேன். அத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர்தான் அம்ர் பின் தஃக்லிப்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பற்றி இவ்வாறு (புகழ்ந்து) கூறியதற்குப் பதிலாக (விலையுயர்ந்த செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் எனக்குக் கிடைப்பதாக இருந்தாலும் நான் அவற்றை விரும்பியிருக்கமாட்டேன்.176

அத்தியாயம் : 97
7536. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا أَبُو زَيْدٍ، سَعِيدُ بْنُ الرَّبِيعِ الْهَرَوِيُّ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْوِيهِ عَنْ رَبِّهِ، قَالَ "" إِذَا تَقَرَّبَ الْعَبْدُ إِلَىَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا، وَإِذَا أَتَانِي مَشْيًا أَتَيْتُهُ هَرْوَلَةً "".
பாடம்: 50 நபி (ஸல்) அவர்கள் தம் இறை வனைப் பற்றிக் குறிப்பிட்டதும் அறிவித்ததும் (ஹதீஸ் குத்ஸீ)
7536. நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவிக்கிறார்கள்:

(என்) அடியான் என்னை ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனை ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்கிறேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 97
7537. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ ـ رُبَّمَا ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم ـ قَالَ "" إِذَا تَقَرَّبَ الْعَبْدُ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا أَوْ بُوعًا "". وَقَالَ مُعْتَمِرٌ سَمِعْتُ أَبِي، سَمِعْتُ أَنَسًا، {عَنْ أَبِي هُرَيْرَةَ،} عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْوِيهِ عَنْ رَبِّهِ، عَزَّ وَجَلَّ.
பாடம்: 50 நபி (ஸல்) அவர்கள் தம் இறை வனைப் பற்றிக் குறிப்பிட்டதும் அறிவித்ததும் (ஹதீஸ் குத்ஸீ)
7537. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அடியான் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு நெருங்குகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.177

இதே ஹதீஸ் அனஸ் (ரலி) அவர் களிடமிருந்து “நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்புமிக்க தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 97
7538. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْوِيهِ عَنْ رَبِّكُمْ، قَالَ "" لِكُلِّ عَمَلٍ كَفَّارَةٌ، وَالصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخَلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ "".
பாடம்: 50 நபி (ஸல்) அவர்கள் தம் இறை வனைப் பற்றிக் குறிப்பிட்டதும் அறிவித்ததும் (ஹதீஸ் குத்ஸீ)
7538. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உங்கள் இறைவனி டமிருந்து அறிவித்தார்கள்: இறைவன் கூறுகின்றான்: ஒவ்வொரு (தீய) செயலுக்கும் ஒரு பரிகாரம் உண்டு. நோன்பு எனக்காகவே நிறைவேற்றப்படுவதாகும். நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்.178

அத்தியாயம் : 97
7539. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ،. وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ قَالَ "" لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ إِنَّهُ خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى "". وَنَسَبَهُ إِلَى أَبِيهِ.
பாடம்: 50 நபி (ஸல்) அவர்கள் தம் இறை வனைப் பற்றிக் குறிப்பிட்டதும் அறிவித்ததும் (ஹதீஸ் குத்ஸீ)
7539. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனிட மிருந்து அறிவித்துள்ள ஒன்றுதான் இதுவும்: எந்த அடியாரும், தான் (இறைத்தூதர்) யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடவும் சிறந்தவர் என்று சொல்வது அவருக்குத் தகாது. இவ்வாறு (யூனுஸ் பின் மத்தா - மத்தாவின் புதல்வர் யூனுஸ் என) அவர்களை அவர்களுடைய தந்தையுடன் இணைத்துக் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.179

அத்தியாயம் : 97
7540. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ، أَخْبَرَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْفَتْحِ عَلَى نَاقَةٍ لَهُ يَقْرَأُ سُورَةَ الْفَتْحِ، أَوْ مِنْ سُورَةِ الْفَتْحِ ـ قَالَ ـ فَرَجَّعَ فِيهَا ـ قَالَ ـ ثُمَّ قَرَأَ مُعَاوِيَةُ يَحْكِي قِرَاءَةَ ابْنِ مُغَفَّلٍ وَقَالَ "" لَوْلاَ أَنْ يَجْتَمِعَ النَّاسُ عَلَيْكُمْ لَرَجَّعْتُ كَمَا رَجَّعَ ابْنُ مُغَفَّلٍ "". يَحْكِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ لِمُعَاوِيَةَ كَيْفَ كَانَ تَرْجِيعُهُ قَالَ آ آ آ ثَلاَثَ مَرَّاتٍ.
பாடம்: 50 நபி (ஸல்) அவர்கள் தம் இறை வனைப் பற்றிக் குறிப்பிட்டதும் அறிவித்ததும் (ஹதீஸ் குத்ஸீ)
7540. ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள், மக்கா வெற்றி தினத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகம் ஒன்றின்மீது இருந்தபடி, ‘அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியாயத்தை’ அல்லது ‘அல்ஃபத்ஹ் அத்தியாயத்தில் ஒரு பகுதியை’ ஓதிக்கொண்டிருக்கக் கண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் (இழுத்து) ஓதிக்கொண்டிருந்தார்கள் என்று எனக்கு அப்துல்லாஹ் பின் முகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” எனக் கூறிவிட்டு, இப்னு முகஃப்பல் (ரலி) அவர்கள் ஓதியதைப் போன்று அப்படியே ஓதிக்காட்டினார்கள்.

பிறகு, “உங்களைச் சுற்றி மக்கள் கூடிவிடுவார்கள் எனும் அச்சம் எனக்கில்லா விட்டால் நபி (ஸல்) அவர்கள் ஓதிய விதத்தை இப்னு முகஃப்பல் (ரலி) அவர்கள் ஓசை நயத்துடன் (இழுத்து) ஓதிக்காட்டியதைப் போன்றே நானும் ஓதிக்காட்டியிருப்பேன்” என்று சொன்னார்கள்.

நான், முஆவியா (ரஹ்) அவர்களிடம், “அவர்கள் ஓசை நயத்துடன் ஓதிய முறை எப்படி?” என்று கேட்க, (‘ஆ’ எனும் இடத்தில்) ‘ஆ...ஆ...ஆ...’ என்று மும்முறை (இழுத்து) அவர்கள் ஓதினார்கள்” என்று சொன்னார்கள்.180

அத்தியாயம் : 97
7541. وَقَالَ ابْنُ عَبَّاسٍ أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ، أَنَّ هِرَقْلَ، دَعَا تَرْجُمَانَهُ، ثُمَّ دَعَا بِكِتَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَرَأَهُ "" بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ، وَ{يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ }"" الآيَةَ.
பாடம்: 51 தவ்ராத் உள்ளிட்ட இறைவேதங் களுக்கு அரபு மொழியிலும் பிற மொழிகளிலும் (மொழிபெயர்த்து) விளக்கமளிப்பது அனுமதிக்கப் பட்டதாகும். ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுக: நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாய் இருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை ஓதிக்காட்டுங்கள். (3:93)
7541. அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கிழக்கு ரோமானியப் பேரரசர்) ஹிரக்ளீயஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்துவரச் சொன்னார். பின்னர் நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவரச்சொல்லி அதைப் படி(க்குமாறு ஆணைபிறப்பி)த்தார். (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:)

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால்... இது அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதருமான முஹம் மதிடமிருந்து (மன்னர்) ஹிரக்ளீயஸுக்கு எழுதப்பட்ட கடிதம்: வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள்.181

அத்தியாயம் : 97
7542. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ أَهْلُ الْكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالْعِبْرَانِيَّةِ، وَيُفَسِّرُونَهَا بِالْعَرَبِيَّةِ لأَهْلِ الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ، وَلاَ تُكَذِّبُوهُمْ وَ{قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ} الآيَةَ "".
பாடம்: 51 தவ்ராத் உள்ளிட்ட இறைவேதங் களுக்கு அரபு மொழியிலும் பிற மொழிகளிலும் (மொழிபெயர்த்து) விளக்கமளிப்பது அனுமதிக்கப் பட்டதாகும். ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுக: நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாய் இருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை ஓதிக்காட்டுங்கள். (3:93)
7542. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரூ (எபிரேயு) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர் களுக்கு விளக்கியும்வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம்.

(மாறாக, முஸ்லிம்களே!) கூறுங்கள்: அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப் பட்டதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் யஅகூபின் சந்ததியினருக்கும் அருளப் பட்டதையும் மற்றும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவருக்கும், அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகின்றோம். (2:136)182

அத்தியாயம் : 97
7543. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ وَامْرَأَةٍ مِنَ الْيَهُودِ قَدْ زَنَيَا فَقَالَ لِلْيَهُودِ "" مَا تَصْنَعُونَ بِهِمَا "". قَالُوا نُسَخِّمُ وُجُوهَهُمَا وَنُخْزِيهِمَا. قَالَ "" {فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ} "". فَجَاءُوا فَقَالُوا لِرَجُلٍ مِمَّنْ يَرْضَوْنَ يَا أَعْوَرُ اقْرَأْ. فَقَرَأَ حَتَّى انْتَهَى عَلَى مَوْضِعٍ مِنْهَا فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ. قَالَ "" ارْفَعْ يَدَكَ "". فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهِ آيَةُ الرَّجْمِ تَلُوحُ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ عَلَيْهِمَا الرَّجْمَ. وَلَكِنَّا نُكَاتِمُهُ بَيْنَنَا. فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا، فَرَأَيْتُهُ يُجَانِئُ عَلَيْهَا الْحِجَارَةَ.
பாடம்: 51 தவ்ராத் உள்ளிட்ட இறைவேதங் களுக்கு அரபு மொழியிலும் பிற மொழிகளிலும் (மொழிபெயர்த்து) விளக்கமளிப்பது அனுமதிக்கப் பட்டதாகும். ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுக: நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாய் இருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை ஓதிக்காட்டுங்கள். (3:93)
7543. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விபசாரம் செய்துவிட்ட ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். நபி ஸல்) அவர்கள் யூதர்களிடம், “நீங்கள் விபசாரிகளை என்ன செய்வீர்கள்?” என்று கேட்க, அவர்கள் “இருவரின் முகங்களிலும் கரும்புள்ளியிட்டு இருவரையும் கேவலப்படுத்திவிடுவோம்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து ஓதிக்காட்டுங்கள்” என்றார்கள்.

அவ்வாறே அவர்கள் அதைக் கொண்டுவந்து தாங்கள் விரும்பிய ஓர் (ஒற்றைக் கண்) மனிதரிடம், “ஒற்றைக் கண்ணரே! ஓதுவீராக!” என்று கூறினார்கள். அவர் ஓதிக்கொண்டே சென்றார். அதில் ஓரிடத்தை அடைந்ததும் அந்த இடத்தில் தனது கையை வைத்து (மறைத்து)க் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், “கையை எடுங்கள்” என்று கூற, அவர் தமது கையை எடுத்தார்.

அப்போது அங்கே கல்லெறி தண்டனை (ரஜ்ம்) தொடர்பான வசனம் ‘பளிச்’சென்று தெரிந்தது. அந்த மனிதர் “முஹம்மதே! இந்த இருவரையும் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். ஆயினும், நாங்கள் அதை எங்களுக்கிடையே பரஸ்பரம் மறைத்துக்கொண்டிருந்தோம்” என்று சொன்னார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் கல்லால் அடித்துக் கொல்லும்படி கட்டளையிட, அவ்வாறே அவ்விருவரும் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். (தண்டனை நிறைவேற்றப்பட்டபோது) அந்த ஆண் அப்பெண்ணின் மீது (கவிழ்ந்து அவள் மீது) கல் விழாமல் பாதுகாக்க முயல்வதை நான் கண்டேன்.183

அத்தியாயம் : 97
7544. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَا أَذِنَ اللَّهُ لِشَىْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ حَسَنِ الصَّوْتِ بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ "".
பாடம்: 52 “குர்ஆன் அறிஞர், கண்ணியத்திற்குரியோரும் நல்லோருமான(வான)வர்களுடன் இருப்பார்; உங்களது (இனிய) குரலால் குர்ஆனுக்கு அழகு சேருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7544. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், தன் தூதர் ஒருவர் இனிய குரலில் குர்ஆனை உரக்க ஓதும்போது அதைச் செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று, வேறு எதையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை.

இதை அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்.184

அத்தியாயம் : 97
7545. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةُ بْنُ وَقَّاصٍ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا ـ وَكُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الْحَدِيثِ ـ قَالَتْ فَاضْطَجَعْتُ عَلَى فِرَاشِي، وَأَنَا حِينَئِذٍ أَعْلَمُ أَنِّي بَرِيئَةٌ وَأَنَّ اللَّهَ يُبَرِّئُنِي، وَلَكِنْ وَاللَّهِ مَا كُنْتُ أَظُنُّ أَنَّ اللَّهَ يُنْزِلُ فِي شَأْنِي وَحْيًا يُتْلَى، وَلَشَأْنِي فِي نَفْسِي كَانَ أَحْقَرَ مِنْ أَنْ يَتَكَلَّمَ اللَّهُ فِيَّ بِأَمْرٍ يُتْلَى، وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ} الْعَشْرَ الآيَاتِ كُلَّهَا.
பாடம்: 52 “குர்ஆன் அறிஞர், கண்ணியத்திற்குரியோரும் நல்லோருமான(வான)வர்களுடன் இருப்பார்; உங்களது (இனிய) குரலால் குர்ஆனுக்கு அழகு சேருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7545. இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கிளப்பியவர்கள் அவர்கள்மீது அவதூறு பேசிய நிகழ்ச்சி தொடர்பாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (உடல்நலம் குன்றி) படுக்கை யில் கிடந்தேன். நான் குற்றமற்றவள் என்பதையும் அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என்று அறிவிப்பான் என்பதையும் அப்போதே நான் அறிவேன்.

ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என் விஷயத்தில் (என்னைக் களங்கமற்றவள் என்று எடுத்துரைக்க காலங்காலமாக) ஓதப்படுகின்ற வேதஅறிவிப்பு ஒன்றை அருள்வான் என்று நான் எண்ணிப்பார்க்கவில்லை. ஓதப்படுகின்ற வசனம் ஒன்றில் என் தொடர்பாக அல்லாஹ் பேசுகின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது.

ஆனால், வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், “அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் (24ஆவது அத்தியாயத்தின்) பத்து வசனங்களை அருளினான்.185

அத்தியாயம் : 97
7546. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، أُرَاهُ عَنِ الْبَرَاءِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْعِشَاءِ {وَالتِّينِ وَالزَّيْتُونِ} فَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا أَوْ قِرَاءَةً مِنْهُ.
பாடம்: 52 “குர்ஆன் அறிஞர், கண்ணியத்திற்குரியோரும் நல்லோருமான(வான)வர்களுடன் இருப்பார்; உங்களது (இனிய) குரலால் குர்ஆனுக்கு அழகு சேருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7546. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழு கையில் ‘வத்தீனீ வஸ்ஸைத்தூனி...’ எனும் (95ஆவது) அத்தியாயத்தை ஓதுவதை நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்களை விடவும் ‘அழகிய குரலுடையவரை’ அல்லது ‘அழகாக ஓதுபவரை’ நான் கண்டதில்லை.186

அத்தியாயம் : 97
7547. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُتَوَارِيًا بِمَكَّةَ، وَكَانَ يَرْفَعُ صَوْتَهُ، فَإِذَا سَمِعَ الْمُشْرِكُونَ سَبُّوا الْقُرْآنَ وَمَنْ جَاءَ بِهِ، فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا}
பாடம்: 52 “குர்ஆன் அறிஞர், கண்ணியத்திற்குரியோரும் நல்லோருமான(வான)வர்களுடன் இருப்பார்; உங்களது (இனிய) குரலால் குர்ஆனுக்கு அழகு சேருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7547. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். (தொழுகையில்) தமது குரலை உயர்த்தி (குர்ஆனை ஓதி)வந்தார்கள். இணைவைப்பாளர்கள் கேட்கும்போது குர்ஆனையும், அதை (மக்கள்முன்) கொண்டுவந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள்.

இதனால், அல்லாஹ் தன் தூதருக்கு “நீர் உமது தொழுகையில் குரலை உயர்த்தவும் வேண்டாம்; (ஒரேயடியாய்) தாழ்த்தவும் வேண்டாம்” (17:110) எனக் கட்டளையிட்டான்.187

அத்தியாயம் : 97