7389. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ حَدَّثَتْهُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ نَادَانِي قَالَ إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ وَمَا رَدُّوا عَلَيْكَ "".
பாடம்: 9 அல்லாஹ் செவியுறுபவனாக வும் பார்ப்பவனாகவும் இருக் கின்றான் (எனும் 4:134ஆவது இறைவசனம்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒலிகள் அனைத்தையும் (துல்லியமாகக்) கேட்கின்ற அளவுக்கு விசாலமான செவியாற்றல் உள்ள அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (நபியவர்களிடம் தன் கணவன் குறித்து முறையிட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் தொடர்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு உயர்ந்தோன் அல்லாஹ், “(நபியே!) தன் துணைவன் குறித்து உம்மிடம் முறையிட்டுக்கொண்டிருந்த அவளது சொல்லை அல்லாஹ் செவியுற்றுவிட்டான்” எனும் (58:1ஆவது) வசனத்தை அருளினான்.21
7389. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்து, “(நபியே!) உங்கள் சமுதாயத்தாரின் சொல்லையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் செவியுற்றான்” என்று சொன்னார்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.24

அத்தியாயம் : 97
7390. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِي، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ، يُحَدِّثُ عَبْدَ اللَّهِ بْنَ الْحَسَنِ يَقُولُ أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ السَّلَمِيُّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُ أَصْحَابَهُ الاِسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا، كَمَا يُعَلِّمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ "" إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ هَذَا الأَمْرَ ـ ثُمَّ تُسَمِّيهِ بِعَيْنِهِ ـ خَيْرًا لِي فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ قَالَ أَوْ فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ فَاقْدُرْهُ لِي، وَيَسِّرْهُ لِي، ثُمَّ بَارِكْ لِي فِيهِ، اللَّهُمَّ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ رَضِّنِي بِهِ "".
பாடம்: 10 “(நபியே!) ‘அவனே ஆற்றல் மிக்க வன்’ என்று சொல்வீராக!” எனும் (6:65ஆவது) இறைவசனம்
7390. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக்கொடுப்பதைப் போன்று கற்றுக்கொடுத்துவந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்.

பின்னர் “இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் நான் கோருகிறேன். உனது ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் -(தாம் தொடங்கப்போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு- எனக்கு ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ அல்லது ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ நன்மை பயக்கும் என நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதை எளிதாக்கித் தருவாயாக! பிறகு அதில் எனக்கு வளம் வழங்கிடுவாயாக!

இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ தீமை பயக்கும் என நீ அறிந்திருந்தால் இந்தக் காரியத்தைவிட்டு என்னைத் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதில் எனக்குத் திருப்தி அளித்திடுவாயாக!” என்று பிரார்த்திக்கட்டும்.25

அத்தியாயம் : 97
7391. حَدَّثَنِي سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ أَكْثَرُ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَحْلِفُ "" لاَ وَمُقَلِّبِ الْقُلُوبِ "".
பாடம்: 11 உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நாம் அவர்களின் உள்ளங்களையும் அவர்களின் பார்வைகளையும் புரட்டுகின்றோம். (6:110)
7391. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்திய வாக்கியம், “இல்லை; உள்ளங்களைப் புரட்டுபவன்மீதாணையாக!” என்ப தாகவே இருந்தது.26

அத்தியாயம் : 97
7392. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلاَّ وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ "". {أَحْصَيْنَاهُ} حَفِظْنَاهُ.
பாடம்: 12 அல்லாஹ்வுக்கு தொண்ணூற் றொன்பது பெயர்கள் உள்ளன. (அவற்றில் ஒன்றான) ‘துல் ஜலால்’ என்பதற்கு ‘மகத்துவ மிக்கவன்’ என்பது பொருள். (மற்றொரு பெயரான) ‘அல்பர்ரு’ (உபகாரி) என்பதற்கு ‘மென்மையானவன்’ (அல்லது ‘அருளாளன்’) என்பது பொருள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
7392. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண் ணூற்று ஒன்பது -நூற்றுக்கு ஒன்று குறைவான- பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்.27

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘அஹ்ஸா’ எனும் சொல்லுக்கு ‘மனனமிடல்’ என்பது பொருள்.

அத்தியாயம் : 97
7393. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا جَاءَ أَحَدُكُمْ فِرَاشَهُ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ ثَوْبِهِ ثَلاَثَ مَرَّاتٍ، وَلْيَقُلْ بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ "". تَابَعَهُ يَحْيَى وَبِشْرُ بْنُ الْمُفَضَّلِ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَزَادَ زُهَيْرٌ وَأَبُو ضَمْرَةَ وَإِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَرَوَاهُ ابْنُ عَجْلاَنَ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 13 அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்
7393. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன்மூலம் பாதுகாப்பாயோ அதன்மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.28


அத்தியாயம் : 97
7394. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ "" اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوتُ "". وَإِذَا أَصْبَحَ قَالَ "" الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ "".
பாடம்: 13 அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்
7394. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, “அல்லாஹும்ம பிஸ்மிக்க அஹ்யா வ அமூத்து” (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நான் உயிர் வாழ்கிறேன்; இறக்கவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள்.

காலையில் (எழும்போது) “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச்செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், -மண்ணறையிலிருந்து வெளியேறி- அவனிடமே செல்ல வேண்டியதுள்ளது) என்று கூறுவார்கள்.29


அத்தியாயம் : 97
7395. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ قَالَ "" بِاسْمِكَ نَمُوتُ وَنَحْيَا، فَإِذَا اسْتَيْقَظَ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ "".
பாடம்: 13 அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்
7395. அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவில் படுக் கைக்குச் செல்லும்போது “பிஸ்மிக்க நமூத்து வ நஹ்யா” (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நாங்கள் இறக்கிறோம்; உயிர் வாழவும் செய்கிறோம்) என்று கூறுவார்கள்.

(உறக்கத்திலிருந்து) விழித்தெழும் போது, “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச்செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் -மண்ணறை யிலிருந்து வெளியேறி- அவனிடமே செல்ல வேண்டியதுள்ளது) என்று கூறுவார்கள்.30


அத்தியாயம் : 97
7396. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ فَقَالَ بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا. فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرُّهُ شَيْطَانٌ أَبَدًا "".
பாடம்: 13 அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்
7396. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும்போது, “பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா” (அல்லாஹ்வின் திருப்பெயரால்... இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கி வைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) என்று பிரார்த்தித்து, அந்த உறவில் அத்தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.31


அத்தியாயம் : 97
7397. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا فُضَيْلٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قُلْتُ أُرْسِلُ كِلاَبِي الْمُعَلَّمَةَ. قَالَ "" إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ الْمُعَلَّمَةَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَأَمْسَكْنَ فَكُلْ، وَإِذَا رَمَيْتَ بِالْمِعْرَاضِ فَخَزَقَ فَكُلْ "".
பாடம்: 13 அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்
7397. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் “பயிற்சியளிக்கப்பட்ட எனது நாயை (வேட்டைக்காக) அனுப்பு கிறேன். (அது வேட்டிடையாடிக் கொண்டுவருகின்றவற்றை நான் உண்ணலாமா?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,”நீங்கள் பயிற்சியளிக்கப்பட்ட உங்களது நாயை (வேட்டைக்காக) அனுப்பிவைக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறியிருந்தால், அது (உங்களுக்காக வேட்டையாடிக்) கவ்விப் பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள். நீங்கள் இறகு இல்லாத அம்பை எய்து, அது (தனது முனையால்) தைத்துக் கொன்றதையும் சாப்பிடுங்கள்” என்று கூறினார்கள்.32


அத்தியாயம் : 97
7398. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، قَالَ سَمِعْتُ هِشَامَ بْنَ عُرْوَةَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هُنَا أَقْوَامًا حَدِيثًا عَهْدُهُمْ بِشِرْكٍ، يَأْتُونَا بِلُحْمَانٍ لاَ نَدْرِي يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا أَمْ لاَ. قَالَ "" اذْكُرُوا أَنْتُمُ اسْمَ اللَّهِ وَكُلُوا "". تَابَعَهُ مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَالدَّرَاوَرْدِيُّ وَأُسَامَةُ بْنُ حَفْصٍ.
பாடம்: 13 அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்
7398. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இங்கு இப்போதுதான் இணைவைப்பிலிருந்து விலகி (இஸ்லாத்தை ஏற்று) வந்த சில சமுதாயத்தார் உள்ளனர். அவர்கள் எங்களிடம் இறைச்சி கொண்டுவருகிறார்கள். அவர்கள் பிராணிகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறுகிறார்களா, இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் அதைச் சாப்பிடலாமா)?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (அதன் மீது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உண்ணுங்கள்” என்று பதில் சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.33


அத்தியாயம் : 97
7399. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ضَحَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ، يُسَمِّي وَيُكَبِّرُ.
பாடம்: 13 அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்
7399. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரண்டு செம்மறி ஆட்டுக்கிடாக்களை அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) சொல்லியும், அல்லாஹ் மிகப் பெரியவன் என்று (தக்பீர்) சொல்லியும் குர்பானி கொடுத்தார்கள்.34


அத்தியாயம் : 97
7400. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ جُنْدَبٍ، أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ صَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ "" مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى، وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ "".
பாடம்: 13 அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்
7400. ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் நஹ்ரு டைய (துல்ஹிஜ்ஜா பத்தாம்) நாளன்று இருந்தேன். அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், “தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டவர் அதற்குப் பகரமாக மற்றொரு பிராணியை அறுக்கட்டும். (தொழுது முடிக்கும்வரை) அறுக்காமலிருப்பவர் (தொழுகைக்குப்பின்) அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்” என்று சொன்னார்கள்.35


அத்தியாயம் : 97
7401. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَحْلِفُوا بِآبَائِكُمْ، وَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ "".
பாடம்: 13 அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்
7401. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உங்கள் தந்தையர் பெயர் சொல்லி சத்தியம் செய்ய வேண்டாம்; சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் பெயர் கூறியே சத்தியம் செய்யட்டும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.36

அத்தியாயம் : 97
7402. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ بْنِ أَسِيدِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيُّ ـ حَلِيفٌ لِبَنِي زُهْرَةَ وَكَانَ مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ ـ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَةً مِنْهُمْ خُبَيْبٌ الأَنْصَارِيُّ، فَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عِيَاضٍ أَنَّ ابْنَةَ الْحَارِثِ أَخْبَرَتْهُ أَنَّهُمْ حِينَ اجْتَمَعُوا اسْتَعَارَ مِنْهَا مُوسَى يَسْتَحِدُّ بِهَا، فَلَمَّا خَرَجُوا مِنَ الْحَرَمِ لِيَقْتُلُوهُ قَالَ خُبَيْبٌ الأَنْصَارِيُّ وَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا ** عَلَى أَيِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ ** يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ فَقَتَلَهُ ابْنُ الْحَارِثِ فَأَخْبَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصْحَابَهُ خَبَرَهُمْ يَوْمَ أُصِيبُوا.
பாடம்: 14 அல்லாஹ்வின் தனித்துவம், அவனுடைய பண்புகள் மற்றும் பெயர்கள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை37 குபைப் (ரலி) அவர்கள், “என்னுடைய இந்த உயிர்த் தியாகம் அல்லாஹ்வின் தனித்துவத்திற்காகத்தான்” என்று கூறி, உயர்ந்தோன் அல்லாஹ்வின் பெயரால் தனித்துவத்தைக் குறிப்பிட்டார்கள்.38
7402. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்துப்பே(ர் கொண்ட உளவுப் படையின)ரை (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார் கள். அவர்களில் அன்சாரியான குபைப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். (உளவுப் படையினரின் வருகையை அறிந்த ஹுதைல் எனும் கூட்டத்தார் பின் தொடர்ந்து வந்து சிலரைக் கொன்றுவிட்டு, சிலரை சிறைபிடித்தார்கள். குபைப் மக்காவில் பனுல் ஹாரிஸ் எனும் கூட்டத்தாரிடம் விற்கப்பட்டார்.) அவர்கள் குபைப் (ரலி) அவர்களைக் கொலை செய்வதற்காக ஒன்றுதிரண்டபோது குபைப் (ரலி) அவர்கள் தமது மறைவிடத்து முடிகளை மழித்துக்கொள்வதற்காக ஹாரிஸின் மகளிடம் சவரக்கத்தி ஒன்றை இரவல் வாங்கினார்கள்.

அவர்கள் அவரைக் கொல்வதற்காக (மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே சென்றபோது குபைப் (ரலி) அவர்கள்,

நான்முஸ்லிமாகக் கொல்லப்படுகையில்எதைப் பற்றியும்பொருட்படுத்தப்போவதில்லைஎந்த இடத்தில்நான் இறந்தாலும்இறைவனுக்காககொல்லப்படுகிறேன்(என்பதில் மகிழ்ச்சியே)

நான் கொல்லப்படுவதுஇறையின்தனித்துவத்திற்காக எனும்போதுஅவன் நாடினால்துண்டிக்கப்பட்டஎன் உறுப்புகளின்இணைப்புகள்மீதுகூடவளம் வழங்குவான்

என்று பாடினார்கள்.

பின்னர், ஹாரிஸின் மகன், குபைப் (ரலி) அவர்களைக் கொன்றுவிட்டான். குபைப் (ரலி) அவர்கள் மற்றும் அவர்களுடைய தோழர்களின் செய்தியை அவர்கள் கொல்லப்பட்ட அன்றே நபி (ஸல்) அவர்கள் (இறைஅறிவிப்பின் வாயிலாக அறிந்து) தம் தோழர்களுக்குத் தெரிவித்தார்கள்.39

அத்தியாயம் : 97
7403. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ مِنَ اللَّهِ، مِنْ أَجْلِ ذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ، وَمَا أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ الْمَدْحُ مِنَ اللَّهِ "".
பாடம்: 15 “அல்லாஹ் தன்னைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றான்” எனும் (3:28ஆவது) இறைவசனம் மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவா!) என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய்; (ஆனால்,) உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியேன் (என்று ஈசா கூறினார்). (5:116)
7403. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைவிட அதிக ரோஷம் உள்ளவர் வேறெவரும் இல்லை. ஆகவேதான், அவன் ஆபாசங்களுக்குத் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40


அத்தியாயம் : 97
7404. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَمَّا خَلَقَ اللَّهُ الْخَلْقَ كَتَبَ فِي كِتَابِهِ ـ هُوَ يَكْتُبُ عَلَى نَفْسِهِ، وَهْوَ وَضْعٌ عِنْدَهُ عَلَى الْعَرْشِ ـ إِنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبِي "".
பாடம்: 15 “அல்லாஹ் தன்னைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றான்” எனும் (3:28ஆவது) இறைவசனம் மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவா!) என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய்; (ஆனால்,) உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியேன் (என்று ஈசா கூறினார்). (5:116)
7404. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்த போது (தனது) அரியணையின் மீது வைக்கப்பட்டிருந்த தனது பதிவேட்டில், “என் கருணை என் கோபத்தை வென்று விட்டது” என்று (கருணையைத்) தனக்குத் தானே விதியாக்கிக்கொள்ளும் வகையில் எழுதினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.41


அத்தியாயம் : 97
7405. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَقُولُ اللَّهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلأٍ ذَكَرْتُهُ فِي مَلأٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ إِلَىَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَىَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً "".
பாடம்: 15 “அல்லாஹ் தன்னைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றான்” எனும் (3:28ஆவது) இறைவசனம் மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவா!) என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய்; (ஆனால்,) உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியேன் (என்று ஈசா கூறினார்). (5:116)
7405. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவுகூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவுகூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவுகூருவேன்.

அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்.42

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 97
7406. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {قُلْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ} قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَعُوذُ بِوَجْهِكَ "". فَقَالَ {أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ} فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَعُوذُ بِوَجْهِكَ "". قَالَ {أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا} فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هَذَا أَيْسَرُ "".
பாடம்: 16 “அவனது (திரு)முகத்தைத் தவிர அனைத்துமே அழியக் கூடியவைதான்” எனும் (28:88 ஆவது) இறைவசனம்
7406. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ, உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை வேறுசிலர் அனுபவிக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, “உங்களுக்கு மேலிருந்து” என்பதைக் கேட்டவுடன் “(இறைவா!) உன் (திரு)முகத்தால் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லது உங்கள் கால்களுக்குக் கீழிலிருந்து” என்பதைக் கேட்டவுடனும் “(இறைவா!) உன் (திரு)முகத்தால் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்றார்கள்.

“உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து...” என்பதைக் கேட்டவுடன் “இது (முந்தைய வேதனைகளைவிட) மிக எளிதானது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.43

அத்தியாயம் : 97
7407. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ ذُكِرَ الدَّجَّالُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" إِنَّ اللَّهَ لاَ يَخْفَى عَلَيْكُمْ، إِنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ ـ وَأَشَارَ بِيَدِهِ إِلَى عَيْنِهِ ـ وَإِنَّ الْمَسِيحَ الدَّجَّالَ أَعْوَرُ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ "".
பாடம்: 17 “(மூசா!) நீர் என் கண்முன்னே வளர்க்கப்படுவதற்காக உம்மீது அன்பைப் பொழிந்தேன்” எனும் (20:39ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்தில் உள்ள ‘துஸ்நஅ’ எனும் சொல்லுக்கு) ‘உணவூட்டி வளர்க்கப்படுவதற்காக’ என்பது பொருளாகும். “அது (நூஹ் உடைய மரக்கலம்), நம் கண்முன்னே (மிதந்து) சென்று கொண்டிருந்தது” எனும் (54:14ஆவது) இறைவசனம்44
7407. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜால் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வை நீங்கள் அறியாதவர்கள் அல்லர். நிச்சயமாக, அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்” என்று கூறிவிட்டு, தமது கரத்தால் தமது கண்ணைச் சுட்டிக்காட்டினார்கள். மேலும், “மஸீஹுத் தஜ்ஜால் வலக் கண் குருடானவன் ஆவான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக் கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்றும் கூறினார்கள்.45


அத்தியாயம் : 97