7366. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا حُضِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم ـ قَالَ وَفِي الْبَيْتِ رِجَالٌ فِيهِمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ قَالَ "" هَلُمَّ أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ "". قَالَ عُمَرُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَلَبَهُ الْوَجَعُ وَعِنْدَكُمُ الْقُرْآنُ، فَحَسْبُنَا كِتَابُ اللَّهِ. وَاخْتَلَفَ أَهْلُ الْبَيْتِ وَاخْتَصَمُوا، فَمِنْهُمْ مَنْ يَقُولُ قَرِّبُوا يَكْتُبْ لَكُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ. وَمِنْهُمْ مَنْ يَقُولُ مَا قَالَ عُمَرُ، فَلَمَّا أَكْثَرُوا اللَّغَطَ وَالاِخْتِلاَفَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قُومُوا عَنِّي "". قَالَ عُبَيْدُ اللَّهِ فَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ إِنَّ الرَّزِيَّةَ كُلَّ الرَّزِيَّةِ مَا حَالَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ أَنْ يَكْتُبَ لَهُمْ ذَلِكَ الْكِتَابَ مِنِ اخْتِلاَفِهِمْ وَلَغَطِهِمْ.
பாடம்: 26
கருத்துமாறுபாடு விரும்பத் தக்கதன்று.
7366. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, அவர்களது இல்லத்தில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் “வாருங் கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித்தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நபி (ஸல்) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (எழுதித்தருமாறு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம்தான் குர்ஆன் இருக்கின்றதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும்” என்று சொன்னார்கள்.
வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக்கொண்டார்கள். அவர்களில் சிலர், “(நபியவர்கள் கேட்ட எழுதுபொருளை அவர்களிடம்) கொடுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித்தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள்.
வேறுசிலர் உமர் (ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்தபோது நபி (ஸல்) அவர்கள், “என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), “மக்கள் கருத்து வேறுபாடு கொண்டு கூச்சóட்டுக்கொண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்” என்று கூறுவார்கள்.101
அத்தியாயம் : 96

7367. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فِي أُنَاسٍ مَعَهُ قَالَ أَهْلَلْنَا أَصْحَابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْحَجِّ خَالِصًا لَيْسَ مَعَهُ عُمْرَةٌ ـ قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ ـ فَقَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم صُبْحَ رَابِعَةٍ مَضَتْ مِنْ ذِي الْحِجَّةِ فَلَمَّا قَدِمْنَا أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نَحِلَّ وَقَالَ "" أَحِلُّوا وَأَصِيبُوا مِنَ النِّسَاءِ "". قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ وَلَمْ يَعْزِمْ عَلَيْهِمْ وَلَكِنْ أَحَلَّهُنَّ لَهُمْ فَبَلَغَهُ أَنَّا نَقُولُ لَمَّا لَمْ يَكُنْ بَيْنَنَا وَبَيْنَ عَرَفَةَ إِلاَّ خَمْسٌ أَمَرَنَا أَنْ نَحِلَّ إِلَى نِسَائِنَا فَنَأْتِي عَرَفَةَ تَقْطُرُ مَذَاكِيرُنَا الْمَذْىَ قَالَ وَيَقُولُ جَابِرٌ بِيَدِهِ هَكَذَا وَحَرَّكَهَا فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" قَدْ عَلِمْتُمْ أَنِّي أَتْقَاكُمْ لِلَّهِ وَأَصْدَقُكُمْ وَأَبَرُّكُمْ وَلَوْلاَ هَدْيِي لَحَلَلْتُ كَمَا تَحِلُّونَ فَحِلُّوا فَلَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ "". فَحَلَلْنَا وَسَمِعْنَا وَأَطَعْنَا.
பாடம்: 27
(ஒன்றைச் செய்ய வேண்டாமென) நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பது, (மார்க்கத்தில் அது) ஹராம் என்பதற்கு ஆதாரமாகும்; (வேறு சான்றுகள் மூலம்) அது அனுமதிக்கப்பட்டது என அறியப்பட்டால் தவிர. அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களது கட்டளையும் (அது கட்டாயமல்ல என்பதற்கு சான்று இருந்தால் தவிர, அதை மீறுவது ஹராம் ஆகும்).
இதற்கு எடுத்துக்காட்டு: (‘விடைபெறும்’ ஹஜ்ஜில் நபித்தோழர்கள்) இஹ்ராமிóருந்து விடுபட்டபோது, “நீங்கள் உங்களுடைய துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இது கட்டாய உத்தரவல்ல என்றும், மாறாக (இஹ்ராமின்போது இருந்த) தடையை (அதன்பின்) நீக்கினார்கள் (அவ்வளவுதான்) என்றும் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(மற்றோர் எடுத்துக்காட்டு:) ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டாமென (பெண்களாகிய) எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அது கட்டாயத் தடை அல்ல என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்.102
7367. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த மக்களிடையே கூறியதாவது:
(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய தோழர்களான நாங்கள் உம்ராவைச் சேர்க்காமல் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டினோம். நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (மக்கா) வந்துசேர்ந்தார்கள். நாங்கள் (உம்ரா முடித்து) வந்தவுடன் இஹ்ராமிலிருந்து வெளியேறும்படி எங்களுக்கு உத்தரவிட்ட நபி (ஸல்) அவர்கள், “இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுங்கள்; (உங்கள்) துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.
ஆனால், அதைக் கட்டாயமாகச் செய்தாக வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடவில்லை.
மாறாக, தாம்பத்திய உறவு கொள்ளலாம் என எங்களுக்கு அனுமதியளித்தார்கள். “நாம் அரஃபாவை அடைய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் நம் துணைவியருடன் நாம் தாம்பத்திய உறவு கொள்ளும்படி நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டார்களே! அப்படியானால், நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா அரஃபா செல்ல வேண்டும்?” என்று நாங்கள் பேசிக்கொள்வதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது.
-’நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா?’ என்று சொல்லும்போது ஜாபிர் (ரலி) அவர்கள், ‘இப்படி’ என்று சைகை செய்து கை அசைத்தார்கள்.-
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, “நானே உங்களில் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவனும், உங்களில் அதிகம் வாய்மையானவனும், உங்களில் அதிகமாக நற்செயல் புரிபவனும் ஆவேன் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனது குர்பானி பிராணி (என்னுடன்) இல்லாமலிருந்தால் உங்களைப் போன்றே நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். ஆகவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள். நான் பின்னால் தெரிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால் குர்பானி பிராணியை என்னுடன் கொண்டுவந்திருக்கமாட்டேன்” என்று சொன்னார்கள்.
ஆகவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். நபி (ஸல்) அவர்களின் கட்டளையைச் செவியேற்று கீழ்ப்படிந்தோம்.103
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

7368. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ الْمُزَنِيُّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" صَلُّوا قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ ـ قَالَ فِي الثَّالِثَةِ ـ لِمَنْ شَاءَ "". كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً.
பாடம்: 27
(ஒன்றைச் செய்ய வேண்டாமென) நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பது, (மார்க்கத்தில் அது) ஹராம் என்பதற்கு ஆதாரமாகும்; (வேறு சான்றுகள் மூலம்) அது அனுமதிக்கப்பட்டது என அறியப்பட்டால் தவிர. அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களது கட்டளையும் (அது கட்டாயமல்ல என்பதற்கு சான்று இருந்தால் தவிர, அதை மீறுவது ஹராம் ஆகும்).
இதற்கு எடுத்துக்காட்டு: (‘விடைபெறும்’ ஹஜ்ஜில் நபித்தோழர்கள்) இஹ்ராமிóருந்து விடுபட்டபோது, “நீங்கள் உங்களுடைய துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இது கட்டாய உத்தரவல்ல என்றும், மாறாக (இஹ்ராமின்போது இருந்த) தடையை (அதன்பின்) நீக்கினார்கள் (அவ்வளவுதான்) என்றும் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(மற்றோர் எடுத்துக்காட்டு:) ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டாமென (பெண்களாகிய) எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அது கட்டாயத் தடை அல்ல என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்.102
7368. அப்துல்லாஹ் பின் முகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “மஃக்ரிப் தொழுகைக்கு முன்பாக (இரு ரக்அத்கள்) தொழுங்கள்” என்று சொன்னார்கள். மூன்றாம் முறையாகச் சொல்லும்போது, அதை மக்கள், (கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய) நபிவழியாக எடுத்துக்கொள் வார்கள் என்று அஞ்சி, “இது விரும்பு வோருக்குத்தான்” என்று சொன் னார்கள்.104

7369. حَدَّثَنَا الأُوَيْسِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ، وَابْنُ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةُ بْنُ وَقَّاصٍ، وَعُبَيْدُ اللَّهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ قَالَتْ وَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَأُسَامَةَ بْنَ زَيْدٍ حِينَ اسْتَلْبَثَ الْوَحْىُ يَسْأَلُهُمَا، وَهْوَ يَسْتَشِيرُهُمَا فِي فِرَاقِ أَهْلِهِ، فَأَمَّا أُسَامَةُ فَأَشَارَ بِالَّذِي يَعْلَمُ مِنْ بَرَاءَةِ أَهْلِهِ، وَأَمَّا عَلِيٌّ فَقَالَ لَمْ يُضَيِّقِ اللَّهُ عَلَيْكَ، وَالنِّسَاءُ سِوَاهَا كَثِيرٌ، وَسَلِ الْجَارِيَةَ تَصْدُقْكَ. فَقَالَ "" هَلْ رَأَيْتِ مِنْ شَىْءٍ يَرِيبُكِ "". قَالَتْ مَا رَأَيْتُ أَمْرًا أَكْثَرَ مِنْ أَنَّهَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ تَنَامُ عَنْ عَجِينِ أَهْلِهَا فَتَأْتِي الدَّاجِنُ فَتَأْكُلُهُ. فَقَامَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ "" يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ مَنْ يَعْذِرُنِي مِنْ رَجُلٍ بَلَغَنِي أَذَاهُ فِي أَهْلِي، وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي إِلاَّ خَيْرًا "". فَذَكَرَ بَرَاءَةَ عَائِشَةَ. وَقَالَ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ.
பாடம்: 28
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவர்கள் தம் விவகாரங்களை தமக்கிடையே கலந்தாலோசித்து (முடிவு) செய்வார்கள். (42:38)
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) (முக்கியமான) பிரச்சினைகளில் அவர்களுடன் கலந்தாலோசிப்பீராக. (3:159)
(ஒரு விஷயத்தில்) தெளிவு ஏற்பட்டு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்புதான் கலந்தாலோசனை என்பதெல்லாம். அல்லாஹ் கூறுகின்றான்: ஓர் உறுதி(யான முடிவு)க்கு நீங்கள் வந்துவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்துச் செயல்படு)த்திடுவீராக (3:159).
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதியான ஒரு முடிவுக்கு வந்துவிட்டபின், அது தொடர்பாக அல்லாஹ்வையும் அவன் தூதரையும் முந்திக்கொண்டு கருத்துச் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.105
உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “ஊரிலேயே தங்கியிருந்து (எதிரிகளின் படையை எதிர்)கொள்ளலாமா? அல்லது (பகைவர்களின் படையை எதிர்கொள்ள ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாமா?” என்று ஆலோசனை கேட்க அவர்கள், “(ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாம்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அணிந்துகொண்டு (ஊருக்கு வெளியே செல்ல) உறுதிகொண்டு புறப்பட்டபோது, தோழர்கள் “ஊரிலேயே தங்கிவிடுங்கள்” என்று (மாற்று யோசனை) சொன்னார்கள்.
ஆனால், உறுதிகொண்டுவிட்ட பின்னால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செவிசாய்க்கவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள், “(போருக்குப் புறப்பட தயாராகி) தமது கவச ஆடையை அணிந்துகொண்ட எந்த ஒரு இறைத்தூதருக்கும் அல்லாஹ் தீர்மானிக்கும்வரை அதைக் கீழே வைப்பது முறையாகாது” என்று சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள்மீது அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன அபாண்டம் குறித்து அலீ (ரலி) அவர்களிடமும் உசாமா (ரலி) அவர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை கலந்தார்கள். அதைப் பற்றி குர்ஆன் வசனம் அருளப்படும்வரை அவர்களிடம் கருத்துக் கேட்டார்கள். குர்ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அவதூறு கற்பித்தவர்களுக்குச் சாட்டையடி தண்டனை வழங்கினார்கள். ஆலோசனை வழங்கியவர்களின் வாக்குவாதங்களை நபியவர்கள் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் தமக்கு கட்டளையிட்டதை வைத்தே தீர்ப்பளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வந்த ஆட்சித் தலைவர்கள் அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் எளிதான முடிவு எடுப்பதற்காக நம்பிக்கைக்குரிய அறிஞர்களிடம் ஆலோசனை கலந்துவந்தார்கள். (ஒரு விஷயம் தொடர்பாக) இறைவேதத்திலோ நபி வழியிலோ தெளிவு கிடைத்தபிறகு, அதைத் தாண்டி வேறு எந்த முடிவுக்கும் செல்லமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியே இவ்வாறு செய்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘ஸகாத்’ வழங்க மறுத்தவர்களுடன் போரிட வேண்டும் என்று கருதினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்கின்ற வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது; அவர்கள், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று (மனதார ஏற்றுச்) சொல்லிவிட்டால், தகுந்த காரணம் இருந்தால் தவிர, என்னிடமிருந்து தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் அவர்கள் பாதுகாத்துக்கொள்வார்கள்; அவர்களது (அந்தரங்கம் பற்றிய) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது என்று கூறியிருக்க, நீங்கள் எப்படி அவர்களுடன் போரிடுவீர்கள்?” என்று கேட்டார்கள்.
உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றாகக் கருதிய (தொழுகை மற்றும் ஸகாத்)தை எவர் தனித்தனியாக (பிரித்து வெவ்வேறானவை என)க் கருதுகின்றார்களோ அவர்களுடன் நான் போரிட்டே தீருவேன்” என்று கூறினார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களது கருத்துடன் ஒத்துப்போய்விட்டார்கள்.
இந்த விஷயத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எவருடைய ஆலோசனையையும் கோரவில்லை. ஏனெனில், தொழுகையையும் ஸகாத்தையும் தனித்தனியாகப் பிரித்து மார்க்கத்தையும் அதன் சட்டங்களையும் மாற்ற விரும்புவோர் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. நபி (ஸல்) அவர்கள் “யார் தமது மார்க்கத்தை மாற்றுகிறாரோ அவருடன் போரிடுங்கள்” என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்களுடைய ஆலோசகர் களாக மார்க்க அறிஞர்களே இருந்தனர். அவர்கள் முதியவர்களாயினும் சரி; இளைஞர்களாயினும் சரி. மேலும், உமர் (ரலி) அவர்கள் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வின் வேதத்திற்கு மிகவும் கட்டுப்பட்டவர்களாய் இருந்தார்கள்.
7369. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்மீது அவதூறு கற்பித்தவர்கள் அந்த அபாண்டத்தைச் சொன்னபோது, அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை யும், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை யும் (என்னைப் பற்றி) விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள்.
அப்போது வேதஅறிவிப்பு (தாற்காலிகமாக) நின்றுபோயிருந்தது. தம் குடும்பத் தாரை (என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து அவ்விருவரிடமும் நபியவர்கள் ஆலோசனை கேட்டார்கள். உசாமா அவர்களோ நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதை எடுத்துரைத்தார்கள். அலீ அவர்களோ “அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அல்லாமல் பெண்கள் பலர் உள்ளனர். பணிப்பெண்ணிடம் (பரீராவிடம்) கேளுங்கள். அவர் உங்களிடம் உண்மை சொல்வார்” என்று கூறினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (பரீராவிடம்) “நீ சந்தேகப்படும்படி எதையேனும் கண்டாயா?” என்று கேட்டார்கள்.
அதற்கு பரீரா, “குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு ஆயிஷா உறங்கிவிடுவார். ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (கவனக் குறைவான) இளம் வயது பெண் என்பதற்கு அதிகமாக வேறு (குறை) எதையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்குச் சென்று) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று, “முஸ்லிம் களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டிக்க எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி குறித்து நான் நல்லதையே அறிவேன்” என்று சொன்னார்கள். பிறகு நான் குற்றமற்றவள் என்று (இறைவன் அறிவித்ததை) எடுத்துரைத்தார்கள்.106
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

7370. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي زَكَرِيَّاءَ الْغَسَّانِيُّ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَطَبَ النَّاسَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ "" مَا تُشِيرُونَ عَلَىَّ فِي قَوْمٍ يَسُبُّونَ أَهْلِي مَا عَلِمْتُ عَلَيْهِمْ مِنْ سُوءٍ قَطُّ "". وَعَنْ عُرْوَةَ قَالَ لَمَّا أُخْبِرَتْ عَائِشَةُ بِالأَمْرِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَتَأْذَنُ لِي أَنْ أَنْطَلِقَ إِلَى أَهْلِي. فَأَذِنَ لَهَا وَأَرْسَلَ مَعَهَا الْغُلاَمَ. وَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ سُبْحَانَكَ مَا يَكُونُ لَنَا أَنْ نَتَكَلَّمَ بِهَذَا، سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ.
பாடம்: 28
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவர்கள் தம் விவகாரங்களை தமக்கிடையே கலந்தாலோசித்து (முடிவு) செய்வார்கள். (42:38)
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) (முக்கியமான) பிரச்சினைகளில் அவர்களுடன் கலந்தாலோசிப்பீராக. (3:159)
(ஒரு விஷயத்தில்) தெளிவு ஏற்பட்டு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்புதான் கலந்தாலோசனை என்பதெல்லாம். அல்லாஹ் கூறுகின்றான்: ஓர் உறுதி(யான முடிவு)க்கு நீங்கள் வந்துவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்துச் செயல்படு)த்திடுவீராக (3:159).
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதியான ஒரு முடிவுக்கு வந்துவிட்டபின், அது தொடர்பாக அல்லாஹ்வையும் அவன் தூதரையும் முந்திக்கொண்டு கருத்துச் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.105
உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “ஊரிலேயே தங்கியிருந்து (எதிரிகளின் படையை எதிர்)கொள்ளலாமா? அல்லது (பகைவர்களின் படையை எதிர்கொள்ள ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாமா?” என்று ஆலோசனை கேட்க அவர்கள், “(ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாம்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அணிந்துகொண்டு (ஊருக்கு வெளியே செல்ல) உறுதிகொண்டு புறப்பட்டபோது, தோழர்கள் “ஊரிலேயே தங்கிவிடுங்கள்” என்று (மாற்று யோசனை) சொன்னார்கள்.
ஆனால், உறுதிகொண்டுவிட்ட பின்னால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செவிசாய்க்கவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள், “(போருக்குப் புறப்பட தயாராகி) தமது கவச ஆடையை அணிந்துகொண்ட எந்த ஒரு இறைத்தூதருக்கும் அல்லாஹ் தீர்மானிக்கும்வரை அதைக் கீழே வைப்பது முறையாகாது” என்று சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள்மீது அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன அபாண்டம் குறித்து அலீ (ரலி) அவர்களிடமும் உசாமா (ரலி) அவர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை கலந்தார்கள். அதைப் பற்றி குர்ஆன் வசனம் அருளப்படும்வரை அவர்களிடம் கருத்துக் கேட்டார்கள். குர்ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அவதூறு கற்பித்தவர்களுக்குச் சாட்டையடி தண்டனை வழங்கினார்கள். ஆலோசனை வழங்கியவர்களின் வாக்குவாதங்களை நபியவர்கள் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் தமக்கு கட்டளையிட்டதை வைத்தே தீர்ப்பளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வந்த ஆட்சித் தலைவர்கள் அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் எளிதான முடிவு எடுப்பதற்காக நம்பிக்கைக்குரிய அறிஞர்களிடம் ஆலோசனை கலந்துவந்தார்கள். (ஒரு விஷயம் தொடர்பாக) இறைவேதத்திலோ நபி வழியிலோ தெளிவு கிடைத்தபிறகு, அதைத் தாண்டி வேறு எந்த முடிவுக்கும் செல்லமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியே இவ்வாறு செய்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘ஸகாத்’ வழங்க மறுத்தவர்களுடன் போரிட வேண்டும் என்று கருதினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்கின்ற வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது; அவர்கள், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று (மனதார ஏற்றுச்) சொல்லிவிட்டால், தகுந்த காரணம் இருந்தால் தவிர, என்னிடமிருந்து தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் அவர்கள் பாதுகாத்துக்கொள்வார்கள்; அவர்களது (அந்தரங்கம் பற்றிய) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது என்று கூறியிருக்க, நீங்கள் எப்படி அவர்களுடன் போரிடுவீர்கள்?” என்று கேட்டார்கள்.
உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றாகக் கருதிய (தொழுகை மற்றும் ஸகாத்)தை எவர் தனித்தனியாக (பிரித்து வெவ்வேறானவை என)க் கருதுகின்றார்களோ அவர்களுடன் நான் போரிட்டே தீருவேன்” என்று கூறினார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களது கருத்துடன் ஒத்துப்போய்விட்டார்கள்.
இந்த விஷயத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எவருடைய ஆலோசனையையும் கோரவில்லை. ஏனெனில், தொழுகையையும் ஸகாத்தையும் தனித்தனியாகப் பிரித்து மார்க்கத்தையும் அதன் சட்டங்களையும் மாற்ற விரும்புவோர் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. நபி (ஸல்) அவர்கள் “யார் தமது மார்க்கத்தை மாற்றுகிறாரோ அவருடன் போரிடுங்கள்” என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்களுடைய ஆலோசகர் களாக மார்க்க அறிஞர்களே இருந்தனர். அவர்கள் முதியவர்களாயினும் சரி; இளைஞர்களாயினும் சரி. மேலும், உமர் (ரலி) அவர்கள் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வின் வேதத்திற்கு மிகவும் கட்டுப்பட்டவர்களாய் இருந்தார்கள்.
7370. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழந்துவிட்டு, “என் வீட்டாரை இகழ்ந்து பேசுகின்ற சிலரைப் பற்றி நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை சொல்கிறீர்கள்? ஒருபோதும் என் வீட்டாரிடம் நான் தீமை எதையும் அறிந்ததில்லை” என்று சொன்னார்கள்.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டபோது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தாய் வீட்டிற்குச் செல்ல எனக்கு அனுமதியளிக் கிறீர்களா?” என்று கேட்டார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவுக்கு அனுமதியளித்து அவர்களுடன் பணியாளையும் அனுப்பிவைத்தார்கள்.
அன்சாரிகளில் ஒருவர், “இறைவன் தூயவன். இப்படி (அவதூறு) பேசுவது நமக்குத் தகாது. இறைவன் தூயவன். இது மாபெரும் அபாண்டம்” என்று சொன்னார்.

ஓரிறைக் கோட்பாடு
7371. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ.
பாடம் : 1
ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7371. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பி வைத்தார்கள்.2
அத்தியாயம் : 97

7372. وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ، أَنَّهُ سَمِعَ أَبَا مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ لَمَّا بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُعَاذًا نَحْوَ الْيَمَنِ قَالَ لَهُ "" إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى فَإِذَا عَرَفُوا ذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ، فَإِذَا صَلُّوا فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ زَكَاةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ غَنِيِّهِمْ فَتُرَدُّ عَلَى فَقِيرِهِمْ، فَإِذَا أَقَرُّوا بِذَلِكَ فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ "".
பாடம் : 1
ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7372. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், “நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஓரிறைக்) கொள் கையை ஏற்கும்படி அழைப்புக்கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐவேளைத் தொழுகைகளை அவர்கள்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களி டம் தெரிவியுங்கள்.
அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால், அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகின்ற ஸகாத்தை அவர்களுடைய செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிட மிருந்து (ஸகாத்தை) வசூலித்துக்கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்துவிடுங்கள்” என்று சொன்னார்கள்.3

7373. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي حَصِينٍ، وَالأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، سَمِعَا الأَسْوَدَ بْنَ هِلاَلٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا مُعَاذُ أَتَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى الْعِبَادِ "". قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا، أَتَدْرِي مَا حَقُّهُمْ عَلَيْهِ "". قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" أَنْ لاَ يُعَذِّبَهُمْ "".
பாடம் : 1
ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7373. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “முஆதே! அடியார்கள்மீது அல்லாஹ்வுக் குள்ள உரிமை என்ன என்று உங்களுக் குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் அவனையே வழிபடுவதும் அவனுக்கு எதையும் இணைகற்பிக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பதுதான்” என்று பதிலளித்தார்கள்.4
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

7374. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلاً، سَمِعَ رَجُلاً، يَقْرَأُ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَ لَهُ ذَلِكَ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ "". زَادَ إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَخْبَرَنِي أَخِي، قَتَادَةُ بْنُ النُّعْمَانِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 1
ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7374. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ (‘நபியே! கூறுக: அல்லாஹ் ஒருவனே’) எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத்திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை ஒருவர் செவிமடுத்தார். விடிந்ததும் அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அம்மனிதர் (பேசிய விதம்) அந்த அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப ஓதியதை)க் குறைத்து மதிப்பிட்டதைப் போன்றிருந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானது” என்று சொன்னார்கள்.5
இதே ஹதீஸ் கத்தாதா பின் நுஅமான் (ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.6

7375. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرٌو، عَنِ ابْنِ أَبِي هِلاَلٍ، أَنَّ أَبَا الرِّجَالِ، مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ عَنْ أُمِّهِ، عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَتْ فِي حَجْرِ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ رَجُلاً عَلَى سَرِيَّةٍ، وَكَانَ يَقْرَأُ لأَصْحَابِهِ فِي صَلاَتِهِ فَيَخْتِمُ بِ ـ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" سَلُوهُ لأَىِّ شَىْءٍ يَصْنَعُ ذَلِكَ "". فَسَأَلُوهُ فَقَالَ لأَنَّهَا صِفَةُ الرَّحْمَنِ، وَأَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَ بِهَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَخْبِرُوهُ أَنَّ اللَّهَ يُحِبُّهُ "".
பாடம் : 1
ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7375. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தமது தொழுகை யில் தம் தோழர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுவித்து)வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும் போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பிவந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்” என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர்.
அவர், “ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஓரிறைப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகின்றேன்” என்று சொன்னார். (இதைக் கேள்விப்பட்ட) நபி (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள்.

7376. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، وَأَبِي، ظَبْيَانَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ "".
பாடம்: 2
“(நபியே!) கூறுவீராக: அவனை அல்லாஹ் என்று நீங்கள் அழை யுங்கள்; அல்லது அர்ரஹ்மான் (பேரருளாளன்) என்று அழையுங் கள். எப்படி நீங்கள் அழைத்தாலும் அழகிய திருப்பெயர்கள் அவனுக்கே உரியனவாகும்” எனும் (17:110ஆவது) இறைவசனம்
7376. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்கள்மீது கருணைகாட்டாத வனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 97
7376. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்கள்மீது கருணைகாட்டாத வனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 97
7377. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ رَسُولُ إِحْدَى بَنَاتِهِ يَدْعُوهُ إِلَى ابْنِهَا فِي الْمَوْتِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ارْجِعْ فَأَخْبِرْهَا أَنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَىْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَمُرْهَا فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ "". فَأَعَادَتِ الرَّسُولَ أَنَّهَا أَقْسَمَتْ لَتَأْتِيَنَّهَا، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَامَ مَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ وَمُعَاذُ بْنُ جَبَلٍ، فَدُفِعَ الصَّبِيُّ إِلَيْهِ وَنَفْسُهُ تَقَعْقَعُ كَأَنَّهَا فِي شَنٍّ فَفَاضَتْ عَيْنَاهُ فَقَالَ لَهُ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ "".
பாடம்: 2
“(நபியே!) கூறுவீராக: அவனை அல்லாஹ் என்று நீங்கள் அழை யுங்கள்; அல்லது அர்ரஹ்மான் (பேரருளாளன்) என்று அழையுங் கள். எப்படி நீங்கள் அழைத்தாலும் அழகிய திருப்பெயர்கள் அவனுக்கே உரியனவாகும்” எனும் (17:110ஆவது) இறைவசனம்
7377. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களுடைய புதல்வியரில் ஒருவருடைய (ஸைனப் (ரலி) அவர்களுடைய) தூதுவர் அங்கு வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீ ஸைனபிடம் சென்று, “அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே! அவன் கொடுத்ததும் அவனுக்குரியதுதான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. ஆகவே, (அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக இருக்கச்சொல்” என்று சொல்லி அனுப்பினார்கள்.
ஆனால், அவர்களுடைய புதல்வியார், (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கண்டிப்பாக வரவேண்டுமெனச் சொல்லி தம் தூதுவரை மீண்டும் அனுப்பிவைத்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சஅத் பின் உபாதா (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோரும் எழுந்தனர். (அங்கு சென்றவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் அக்குழந்தை தரப்பட்டது. அப்போது தோல் பைக்குள் உள்ள காற்றைப் போன்று அது (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது.
அதைக் கண்ட நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைச் சொரிந்தன. அப்போது சஅத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்ன இது? (அழுகிறீர்களே!)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங் களில் (இயல்பாகவே) வைத்துள்ள இரக்க உணர்வாகும்; அல்லாஹ் தன் அடியார் களில் இரக்கமுடையவர்களுக்கே இரக்கம் காட்டுவான்” என்று சொன்னார்கள்.8

7378. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا أَحَدٌ أَصْبَرُ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، يَدَّعُونَ لَهُ الْوَلَدَ، ثُمَّ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ "".
பாடம்: 3
“அல்லாஹ்தான் உணவளிப்பவன்; வலிமையுள்ளவன்; உறுதியான வன்” எனும் (51:58ஆவது) இறைவசனம்.
7378. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9

7379. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَفَاتِيحُ الْغَيْبِ خَمْسٌ لاَ يَعْلَمُهَا إِلاَّ اللَّهُ، لاَ يَعْلَمُ مَا تَغِيضُ الأَرْحَامُ إِلاَّ اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَا فِي غَدٍ إِلاَّ اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَتَى يَأْتِي الْمَطَرُ أَحَدٌ إِلاَّ اللَّهُ، وَلاَ تَدْرِي نَفْسٌ بِأَىِّ أَرْضٍ تَمُوتُ إِلاَّ اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَتَى تَقُومُ السَّاعَةُ إِلاَّ اللَّهُ "".
பாடம்: 4
“அல்லாஹ் மறைவானவற்றை அறிபவன்; (தான் அறிந்துள்ள) மறைவான விஷயங்களைத் தான் பொருந்திக்கெண்ட தூதரைத் தவிர வேறு யாருக்கும் அவன் வெளிப்படுத்தமாட்டான்” எனும் (72:26ஆவது) இறைவசனம்
நிச்சயமாக மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது (31:34).
இ(ந்த வேதத்)தை தனது ஞானத்துட னேயே அல்லாஹ் அருளினான். (4:166)
அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (35:11)
மறுமை நாள் பற்றிய அறிவு அவனிடமே விடப்பட்டுள்ளது. (41:47)
யஹ்யா பின் ஸியாத் அல்ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றான) ‘அழ்ழாஹிர்’ (வெளிப்படையானவன்) என்பதற்கு ‘தனது அறிவால் ஒவ்வொரு பொருளையும் வெளிப்படையாக அறிபவன்’ என்று பொருள். (மற்றொரு பெயரான) ‘அல்பாத்தின்’ (அந்தரங்கமானவன்) என்பதற்கு ‘தனது அறிவால் ஒவ்வொரு பொருளையும் அகமியமாக அறிபவன்’ என்று பொருள்.
7379. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருப்பைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள்.
எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது; அல்லாஹ்தான் அதை அறிவான். மறுமை நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10

7380. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم رَأَى رَبَّهُ فَقَدْ كَذَبَ وَهْوَ يَقُولُ {لاَ تُدْرِكُهُ الأَبْصَارُ} وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ يَعْلَمُ الْغَيْبَ فَقَدْ كَذَبَ، وَهْوَ يَقُولُ لاَ يَعْلَمُ الْغَيْبَ إِلاَّ اللَّهُ.
பாடம்: 4
“அல்லாஹ் மறைவானவற்றை அறிபவன்; (தான் அறிந்துள்ள) மறைவான விஷயங்களைத் தான் பொருந்திக்கெண்ட தூதரைத் தவிர வேறு யாருக்கும் அவன் வெளிப்படுத்தமாட்டான்” எனும் (72:26ஆவது) இறைவசனம்
நிச்சயமாக மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது (31:34).
இ(ந்த வேதத்)தை தனது ஞானத்துட னேயே அல்லாஹ் அருளினான். (4:166)
அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (35:11)
மறுமை நாள் பற்றிய அறிவு அவனிடமே விடப்பட்டுள்ளது. (41:47)
யஹ்யா பின் ஸியாத் அல்ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றான) ‘அழ்ழாஹிர்’ (வெளிப்படையானவன்) என்பதற்கு ‘தனது அறிவால் ஒவ்வொரு பொருளையும் வெளிப்படையாக அறிபவன்’ என்று பொருள். (மற்றொரு பெயரான) ‘அல்பாத்தின்’ (அந்தரங்கமானவன்) என்பதற்கு ‘தனது அறிவால் ஒவ்வொரு பொருளையும் அகமியமாக அறிபவன்’ என்று பொருள்.
7380. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், “முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் அறிவிக்கிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது’ என்று தெரிவிக்கின்றான் (6:103). மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என யார் உங்களிடம் அறிவிக்கிறாரோ அவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்’ எனக் கூறுகின்றான் (27:65)” என்று சொன்னார்கள்.11

7381. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُغِيرَةُ، حَدَّثَنَا شَقِيقُ بْنُ سَلَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ كُنَّا نُصَلِّي خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَقُولُ السَّلاَمُ عَلَى اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ وَلَكِنْ قُولُوا التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ "".
பாடம்: 5
“அமைதியளிப்பவன்(அஸ் ஸலாம்); அபயம் தருபவன் (அல் முஃமின்)” எனும் (59:23ஆவது) இறைவசனம்
7381. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது, ‘அஸ்ஸலாமு அலல்லாஹ்’ (அல்லாஹ்வின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (அத்தஹிய்யாத் அமர்வில்) சொல்லிவந்தோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே சாந்தி அளிப்பவன் (அஸ்ஸலாம்). (ஆகவே, இப்படிச் சொல்லாதீர்கள்.) மாறாக, “(சொல், செயல், பொருள் சார்ந்த) எல்லாக் காணிக்கைகளும் வழிபாடுகளும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. உடல் மற்றும் பொருள் சார்ந்த வழிபாடுகளும் அவனுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய வளமும் ஏற்படட்டும். எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் (அனைவர்)மீதும் சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி கூறுகின்றேன்” எனக் கூறுங்கள் என்று சொன்னார்கள்.12

7382. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَقْبِضُ اللَّهُ الأَرْضَ يَوْمَ الْقِيَامَةِ، وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ الأَرْضِ "". وَقَالَ شُعَيْبٌ وَالزُّبَيْدِيُّ وَابْنُ مُسَافِرٍ وَإِسْحَاقُ بْنُ يَحْيَى عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ.
பாடம்: 6
‘(அவனே) மனிதர்களின் அரசன் (மலிக்கிந் நாஸ்)’ எனும் (114:2ஆவது) இறைவசனம்
இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.13
7382. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக்கொள் வான்; வானத்தைத் தனது வலக் கரத்தில் சுருட்டிக்கொள்வான்; பிறகு “நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?” என்று கேட்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.14

7383. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ "" أَعُوذُ بِعِزَّتِكَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، الَّذِي لاَ يَمُوتُ وَالْجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ "".
பாடம்: 7
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவன் கண்ணியமிக்கவன்; ஞானமிக்கவன். (29:42)
கண்ணியத்தின் அதிபதியான உங்கள் இறைவன் அவர்கள் கூறும் (தரக் குறைவான) பண்புகளைவிட்டு மிகவும் தூயவன் (37:180).
கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கை யாளர்களுக்குமே உரியது (63:8).
அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் அவனுடைய பண்புகளின் பெயரால் சத்தியம் செய்வது (செல்லும்).
நபி (ஸல்) அவர்கள், “(மறுமை நாளில்) நரகம், போதும்! போதும்! உன் கண்ணியத் தின் மீதாணையாக! என்று சொல்லும்” எனக் கூறினார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமையில் நரகத்திóருந்து இறைநம்பிக்கை உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு) சொர்க்கத் திற்கும் நரகத்திற்கும் இடையே ஒருவர் மட்டும் (நரகத்தை முன்னோக்கியவராக) எஞ்சியிருப்பார். அவர்தான் நரகவாசிகளி லேயே இறுதியாக சொர்க்கம் செல்பவ ராவார்.
அவர், “என் இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டு வேறு பக்கம் திருப்பி விடுவாயாக! உன் கண்ணியத்தின் மீதாணையாக! நான் உன்னிடம் வேறெதையும் கேட்கமாட்டேன்” என்று சொல்வார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
வல்லமையும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “உனக்கு இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் கிடைக்கும்” என்று கூறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.17
(இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள், “(இறைவா!) உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! உனது அருள்வளத்தைவிட்டு நான் தேவையற்றவன் அல்லன்” என்று சொன்னார்கள்.18
7383. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்துவந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப் புக் கோருகிறேன். மரணமே இல்லாத உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்.

7384. حَدَّثَنَا ابْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا حَرَمِيٌّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يُلْقَى فِي النَّارِ "". وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ. وَعَنْ مُعْتَمِرٍ سَمِعْتُ أَبِي عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَزَالُ يُلْقَى فِيهَا وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ. حَتَّى يَضَعَ فِيهَا رَبُّ الْعَالَمِينَ قَدَمَهُ فَيَنْزَوِي بَعْضُهَا إِلَى بَعْضٍ، ثُمَّ تَقُولُ قَدْ قَدْ بِعِزَّتِكَ وَكَرَمِكَ. وَلاَ تَزَالُ الْجَنَّةُ تَفْضُلُ حَتَّى يُنْشِئَ اللَّهُ لَهَا خَلْقًا فَيُسْكِنَهُمْ فَضْلَ الْجَنَّةِ "".
பாடம்: 7
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவன் கண்ணியமிக்கவன்; ஞானமிக்கவன். (29:42)
கண்ணியத்தின் அதிபதியான உங்கள் இறைவன் அவர்கள் கூறும் (தரக் குறைவான) பண்புகளைவிட்டு மிகவும் தூயவன் (37:180).
கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கை யாளர்களுக்குமே உரியது (63:8).
அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் அவனுடைய பண்புகளின் பெயரால் சத்தியம் செய்வது (செல்லும்).
நபி (ஸல்) அவர்கள், “(மறுமை நாளில்) நரகம், போதும்! போதும்! உன் கண்ணியத் தின் மீதாணையாக! என்று சொல்லும்” எனக் கூறினார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமையில் நரகத்திóருந்து இறைநம்பிக்கை உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு) சொர்க்கத் திற்கும் நரகத்திற்கும் இடையே ஒருவர் மட்டும் (நரகத்தை முன்னோக்கியவராக) எஞ்சியிருப்பார். அவர்தான் நரகவாசிகளி லேயே இறுதியாக சொர்க்கம் செல்பவ ராவார்.
அவர், “என் இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டு வேறு பக்கம் திருப்பி விடுவாயாக! உன் கண்ணியத்தின் மீதாணையாக! நான் உன்னிடம் வேறெதையும் கேட்கமாட்டேன்” என்று சொல்வார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
வல்லமையும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “உனக்கு இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் கிடைக்கும்” என்று கூறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.17
(இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள், “(இறைவா!) உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! உனது அருள்வளத்தைவிட்டு நான் தேவையற்றவன் அல்லன்” என்று சொன்னார்கள்.18
7384. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அப்போது நரகம், “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும்; இறுதியில் அகிலங்களின் அதிபதி(யான அல்லாஹ்), நரகத்தில் தனது பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக்கொள்ளும். பிறகு, “போதும்; போதும். உன் கண்ணியத்தின் மீதும், உன் கொடையின் மீதும் சத்தியமாக!” என்று கூறும்.
சொர்க்கத்தில் இடம் மீதி இருந்து கொண்டேயிருக்கும். இறுதியில், சொர்க்கத்திற்கென அல்லாஹ் புதியவர் களைப் படைத்து, சொர்க்கத்தில் மீதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்து வான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.19

7385. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْعُو مِنَ اللَّيْلِ "" اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ، لَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ، قَوْلُكَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ، أَنْتَ إِلَهِي لاَ إِلَهَ لِي غَيْرُكَ "". حَدَّثَنَا ثَابِتُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ بِهَذَا وَقَالَ أَنْتَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ.
பாடம்: 8
“அவனே வானங்களையும் பூமி யையும் நியாய(மான காரண)த் தோடு படைத்தான்” எனும் (6:73 ஆவது) இறைவசனம்
7385. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் (தொழுவதற்காக எழும்போது பின் வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங் கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர் களின் இறைவன் ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீ வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவாய். உன் சொல் உண்மை; உன் வாக்குறுதி உண்மை; (மறுமையில்) உன் தரிசனம் உண்மை; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை; மறுமை நாள் உண்மையானது.
இறைவா! உனக்கே நான் அடிபணிந் தேன்; உன்மீதே நம்பிக்கை கொண்டேன்; உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன்; உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன்; உன்னிடமே நீதி கேட்பேன். ஆகவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர எனக்கு வேறெவரும் இறைவன் இல்லை.
-ஸாபித் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் இதை நமக்கு அறிவித்துவிட்டு, “நீ உண்மை; உன் சொல் உண்மை” என்று சொன்னார்கள்.20