7328. وَعَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ، أَرْسَلَ إِلَى عَائِشَةَ ائْذَنِي لِي أَنْ أُدْفَنَ مَعَ صَاحِبَىَّ فَقَالَتْ إِي وَاللَّهِ. قَالَ وَكَانَ الرَّجُلُ إِذَا أَرْسَلَ إِلَيْهَا مِنَ الصَّحَابَةِ قَالَتْ لاَ وَاللَّهِ لاَ أُوثِرُهُمْ بِأَحَدٍ أَبَدًا.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7328. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “என் தோழர்கள் (முஹம்மத் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவருடனும் நான் அடக்கம் செய்யப்பட எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கேட்டு ஆளனுப்பி னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “சரி, அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் உமரை நபியவர்களின் அருகே அடக்க அனுமதிக்கிறேன்)” என்று சொன்னார்கள்.

ஆனால், (மற்றத் தோழர்களில்) எவராவது அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்டு ஆளனுப்பினால், “முடியாது; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களுடன் வேறெவரையும் அடக்கம் செய்ய நான் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறிவிடுவார்கள்.

அத்தியாயம் : 96
7329. حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْعَصْرَ فَيَأْتِي الْعَوَالِيَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ. وَزَادَ اللَّيْثُ عَنْ يُونُسَ، وَبُعْدُ الْعَوَالِي أَرْبَعَةُ أَمْيَالٍ أَوْ ثَلاَثَةٌ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7329. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை தொழுதுவிட்டு மதீனாவின் (புறநகர்ப் பகுதிகளிலுள்ள) மேட்டுக் கிராமங்களுக்குச் செல்வார்கள். அப்போது சூரியன் (மேற்கே) உயர்ந்தே இருக்கும்.

மற்றோர் அறிவிப்பில், “அந்த மேட்டுக் கிராமங்களின் தூரம் (மதீனாவிலிருந்து) நான்கு அல்லது மூன்று மைல்களாகும்” என்று கூறப்பட்டுள்ளது.58

அத்தியாயம் : 96
7330. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ، عَنِ الْجُعَيْدِ، سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ كَانَ الصَّاعُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُدًّا وَثُلُثًا بِمُدِّكُمُ الْيَوْمَ، وَقَدْ زِيدَ فِيهِ. سَمِعَ الْقَاسِمُ بْنُ مَالِكٍ الْجُعَيْدَ
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7330. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘ஸாஉ’ என்பது, இன்றைக்கு (நடைமுறையிலிருக்கும்) உங்களது ‘முத்’தில் ஒரு ‘முத்’தும் மூன்றில் ஒரு பாகமும் (1 1/3) கொண்டதாக இருந்தது. பின்னர் (உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் காலத்தில்தான்) அதன் அளவு அதிகமாக்கப்பட்டது.59

அத்தியாயம் : 96
7331. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ، وَبَارِكْ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ "" يَعْنِي أَهْلَ الْمَدِينَةِ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7331. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! மதீனாவாசிகளுக்கு அவர் களது முகத்தலளவையில் வளத்தை அருள்வாயாக! அவர்களின் ‘ஸாஉ’ மற்றும் ‘முத்’(து) ஆகிய அளவைகளிலும் அவர்களுக்கு வளத்தை அருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.60

அத்தியாயம் : 96
7332. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ الْيَهُودَ، جَاءُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِرَجُلٍ وَامْرَأَةٍ زَنَيَا، فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا قَرِيبًا مِنْ حَيْثُ تُوضَعُ الْجَنَائِزُ عِنْدَ الْمَسْجِدِ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7332. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விபசாரம் புரிந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் (தீர்ப்புக்காக) அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட அவ்வாறே அவ்விருவருக்கும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் சடலங்கள் (—னாஸாக்கள்) வைக்கப்படும் இடத்திற்கு அருகே கல்லெறி தண்டனை நிறைவேற்றப் பட்டது.61

அத்தியாயம் : 96
7333. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَلَعَ لَهُ أُحُدٌ فَقَالَ "" هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا "". تَابَعَهُ سَهْلٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي أُحُدٍ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7333. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு பயணத்திலிருந்து திரும்பி வரும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஹுத் மலை தென்பட்டது. உடனே, “இந்த மலை நம்மை நேசிக்கின்றது; நாமும் இதை நேசிக்கின்றோம். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா நகரைப் புனிதமானதென அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரு மலைகளுக்கு இடையில் இருக்கும் (மதீனா நகர) பூமியைப் புனிதமானதென அறிவிக்கிறேன்” என்று சொன்னார்கள்.62

“இந்த (உஹுத்) மலை நம்மை நேசிக் கின்றது; நாமும் இதை நேசிக்கின்றோம்” என்ற இதே நபிமொழியை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களும் அறிவித்துள் ளார்கள்.

அத்தியாயம் : 96
7334. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، أَنَّهُ كَانَ بَيْنَ جِدَارِ الْمَسْجِدِ مِمَّا يَلِي الْقِبْلَةَ وَبَيْنَ الْمِنْبَرِ مَمَرُّ الشَّاةِ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7334. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் கிப்லா திசையிலுள்ள சுவருக்கும் சொற்பொழிவு மேடை (மிம்பரு)க்கும் இடையே ஆடு ஒன்று புகுந்து செல்லும் அளவிற்கு இடைவெளி இருந்தது.63

அத்தியாயம் : 96
7335. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي "".
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7335. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் வீட்டிற்கும் என் சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடையே சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்கா உள்ளது. என் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எனது (கவ்ஸர்) தடாகத்தின் மீதுள்ளது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.64

அத்தியாயம் : 96
7336. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ سَابَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ الْخَيْلِ، فَأُرْسِلَتِ الَّتِي ضُمِّرَتْ مِنْهَا وَأَمَدُهَا إِلَى الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ، وَالَّتِي لَمْ تُضَمَّرْ أَمَدُهَا ثَنِيَّةُ الْوَدَاعِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ، وَأَنَّ عَبْدَ اللَّهِ كَانَ فِيمَنْ سَابَقَ. حَدَّثَنَا قُتَيْبَةُ عَنْ لَيْثٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7336. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அப்போது அவற்றில் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகள் (பந்தயத்தில்) அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு ‘ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘ஸனிய்யத்துல் வதாஉ’ மலைக்குன்றுவரையாக இருந்தது.மெலியவைக்கப்படாத குதிரைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு ‘ஸனிய்யத்துல் வதா’ மலைக் குன்றிலிருந்து ‘பனூ ஸுரைக்’ குலத்தாரின் பள்ளிவாசல்வரையாக இருந்தது. மேலும், நானும் (குதிரைகளுடன்) போட்டியில் கலந்துகொண்டவர்களில் ஒருவனாயிருந்தேன்.65

அத்தியாயம் : 96
7337. حَدَّثَنَا قُتَيْبَةُ عَنْ لَيْثٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ ح. وَحَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عِيسَى، وَابْنُ، إِدْرِيسَ وَابْنُ أَبِي غَنِيَّةَ عَنْ أَبِي حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ عُمَرَ، عَلَى مِنْبَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7337. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.66

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 96
7338. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، خَطَبَنَا عَلَى مِنْبَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7338. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது (நின்று) உரையாற்றிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன்.

அத்தியாயம் : 96
7339. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، أَنَّ هِشَامَ بْنَ عُرْوَةَ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ يُوضَعُ لِي وَلِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَذَا الْمِرْكَنُ فَنَشْرَعُ فِيهِ جَمِيعًا.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7339. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (ஒரு பாத்திரத்தைக் காட்டி), “இந்தப் பாத்திரம் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் குளிப்பதற்காக வைக்கப்பட்டுவந்தது. நாங்கள் இருவரும் ஒருசேர இதில் குளிக்கத் தொடங்குவோம்” என்று கூறினார்கள்.67

அத்தியாயம் : 96
7340. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ أَنَسٍ، قَالَ حَالَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ الأَنْصَارِ وَقُرَيْشٍ فِي دَارِي الَّتِي بِالْمَدِينَةِ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7340. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக் கும் குறைஷியருக்கும் இடையே மதீனா வில் இருக்கும் என் வீட்டில் வைத்து நட்புறவு முறையை ஏற்படுத்தினார்கள்.68

அத்தியாயம் : 96
7341. وَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7341. மேலும், நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் (நிராயுதபாணிகளான நபித்தோழர்களை வஞ்சகம் செய்து கொலை செய்த) பனூ சுலைம் குலத்தாரின் சில குடும்பங்களுக்கெதிராகப் பிரார்த்தித் தார்கள்.69

அத்தியாயம் : 96
7342. حَدَّثَنِي أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ فَلَقِيَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ فَقَالَ لِي انْطَلِقْ إِلَى الْمَنْزِلِ فَأَسْقِيَكَ فِي قَدَحٍ شَرِبَ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَتُصَلِّي فِي مَسْجِدٍ صَلَّى فِيهِ النَّبِيُّ صلى الله عليه وسلم. فَانْطَلَقْتُ مَعَهُ، فَسَقَانِي سَوِيقًا، وَأَطْعَمَنِي تَمْرًا، وَصَلَّيْتُ فِي مَسْجِدِهِ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7342. அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனா சென்றிருந்தேன். அங்கு அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் என்னிடம், “வீட்டிற்குப் போகலாம் (வாருங்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்திய ஒரு பாத்திரத்தில் உங்களுக்கு நான் அருந்தக் கொடுப்பேன்; மேலும், நபி (ஸல்) அவர்கள் தொழுத பள்ளிவாசலில் நீங்கள் தொழலாம்” என்று சொன்னார்கள்.

ஆகவே, நான் அவர்களுடன் சென்றேன். அவர்கள் எனக்கு (அரைத்த) மாவு பானத்தை அருந்தக் கொடுத்தார்கள்; பேரீச்சம் பழத்தை உண்ணக் கொடுத்தார்கள். அவர்களது பள்ளிவாசலில் தொழுதேன்.70

அத்தியாயம் : 96
7343. حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ "" أَتَانِي اللَّيْلَةَ آتٍ مِنْ رَبِّي وَهْوَ بِالْعَقِيقِ أَنْ صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ وَقُلْ عُمْرَةٌ وَحَجَّةٌ "". وَقَالَ هَارُونُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَلِيٌّ عُمْرَةٌ فِي حَجَّةٍ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7343. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“என் இறைவனிடமிருந்து வரக்கூடிய (வான)வர் இன்றிரவு என்னிடம் வந்து, இந்த வளமிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக; ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்து விட்டதாக (ஹஜ்ஜுல் கிரான் செய்வதாக)ச்சொல்வீராக என்று கூறினார்” என நபி (ஸல்) அவர்கள் அகீக் பள்ளத்தாக்கில் இருந்தபோது என்னிடம் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், “ஹஜ்ஜில் உம்ராவைச் சேர்ப்பதாக...” என்று இடம் பெற்றுள்ளது.71

அத்தியாயம் : 96
7344. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَقَّتَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَرْنًا لأَهْلِ نَجْدٍ، وَالْجُحْفَةَ لأَهْلِ الشَّأْمِ، وَذَا الْحُلَيْفَةِ لأَهْلِ الْمَدِينَةِ. قَالَ سَمِعْتُ هَذَا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَبَلَغَنِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمُ "". وَذُكِرَ الْعِرَاقُ فَقَالَ لَمْ يَكُنْ عِرَاقٌ يَوْمَئِذٍ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7344. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்ன்’ எனுமிடத்தையும், ஷாம்வாசி களுக்கு ‘—ýஹ்ஃபா’வையும், மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் இஹ்ராம் கட்டும் எல்லையாக நிர்ணயித் தார்கள்.

இதை நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். மேலும், “நபி (ஸல்) அவர்கள், ‘யலம்லம்’ எனுமிடம் யமன்வாசிகளுக்கு (இஹ்ராம் கட்டுவதற் குரிய) இடமாகும்” என்று கூறியதாக எனக்குத் தகவல் கிடைத்தது. (இந்த ஹதீஸை அறிவிக்கையில்) இராக் நாட்டைப் பற்றியும் பேசப்பட்டது. அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், அந்நாளில் இராக்(வாசிகளிடையே முஸ்óம்கள்) இருக்கவில்லை” என்று கூறினார்கள்.72

அத்தியாயம் : 96
7345. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا الْفُضَيْلُ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ أُرِيَ وَهْوَ فِي مُعَرَّسِهِ بِذِي الْحُلَيْفَةِ فَقِيلَ لَهُ إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7345. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பத்னுல்வாதி யிலுள்ள) துல்ஹுலைஃபாவில் (இரவின் கடைசி நேரத்தில்) ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக்கொண்டு) இருந்த போது அவர்களுக்குக் கனவு காட்டப் பட்டது. அப்போது (கனவில்) “வளமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கின்றீர்கள்” என்று நபியவர்களிடம் கூறப்பட்டது.73

அத்தியாயம் : 96
7346. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ فِي صَلاَةِ الْفَجْرِ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ "" اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ فِي الأَخِيرَةِ "". ثُمَّ قَالَ "" اللَّهُمَّ الْعَنْ فُلاَنًا وَفُلاَنًا "". فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ}.
பாடம்: 17 “(அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உமக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3:128ஆவது) இறைவசனம்
7346. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் கடைசி ரக்அத்தில் தமது தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, “அல்லாஹும்ம ரப்பனா வ லக்கல் ஹம்து” (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, “இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், “அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அநீதியாளர்களாக இருப்பதால் அவனே அவர்களை வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உமக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3: 128ஆவது) வசனத்தை அருளினான்.74

அத்தியாயம் : 96
7347. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَتَّابُ بْنُ بَشِيرٍ، عَنْ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَرَقَهُ وَفَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُمْ "" أَلاَ تُصَلُّونَ "". فَقَالَ عَلِيٌّ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ قَالَ لَهُ ذَلِكَ وَلَمْ يَرْجِعْ إِلَيْهِ شَيْئًا، ثُمَّ سَمِعَهُ وَهْوَ مُدْبِرٌ يَضْرِبُ فَخِذَهُ وَهْوَ يَقُولُ {وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَىْءٍ جَدَلاً}. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ يُقَالُ مَا أَتَاكَ لَيْلاً فَهْوَ طَارِقٌ. وَيُقَالُ الطَّارِقُ النَّجْمُ، وَالثَّاقِبُ الْمُضِيءُ، يُقَالُ أَثْقِبْ نَارَكَ لِلْمُوقِدِ.
பாடம்: 18 “மனிதன் அதிகம் தர்க்கம் செய்ப வனாக இருக்கின்றான்” எனும் (18:54ஆவது) இறைவசனம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களிடம் மிக அழகான முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். (29:46)75
7347. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் ஒரு(நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம், “நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில்தானே இருக்கின் றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பி விடுவான்” என்று சொன்னேன்.

நான் இப்படிச் சொன்னபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபடி தமது தொடையில் தட்டிக்கொண்டே “மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான்” என்று சொல்óக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்.76

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகின் றேன்:

(இங்கு ‘இரவில் வந்தார்கள்’ என்பதைக் குறிக்க ‘தர(க்)க’ எனும் வினைச்சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.) இரவில் வரும் எதுவாயினும் அதற்கு ‘தாரிக்’ என்று சொல்லப்படும். நட்சத்திரத்திற்கும் ‘தாரிக்’ என்று சொல்வதுண்டு. ‘ஸாகிப்’ என்பது ‘பிரகாசிக்கக்கூடியது’ என்று பொருள்படும். ‘உஸ்குப்லி’ (உன் நெருப்பைப் பிரகாசிக்கச் செய்) என்று தீ மூட்டுபவனிடம் சொல்லப்படும்.

அத்தியாயம் : 96