7297. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَرْثٍ بِالْمَدِينَةِ، وَهْوَ يَتَوَكَّأُ عَلَى عَسِيبٍ، فَمَرَّ بِنَفَرٍ مِنَ الْيَهُودِ فَقَالَ بَعْضُهُمْ سَلُوهُ عَنِ الرُّوحِ. وَقَالَ بَعْضُهُمْ لاَ تَسْأَلُوهُ لاَ يُسْمِعْكُمْ مَا تَكْرَهُونَ. فَقَامُوا إِلَيْهِ فَقَالُوا يَا أَبَا الْقَاسِمِ حَدِّثْنَا عَنِ الرُّوحِ. فَقَامَ سَاعَةً يَنْظُرُ فَعَرَفْتُ أَنَّهُ يُوحَى إِلَيْهِ، فَتَأَخَّرْتُ عَنْهُ حَتَّى صَعِدَ الْوَحْىُ، ثُمَّ قَالَ {وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي}.
பாடம்: 3 அதிகமாகக் கேள்விகள் கேட்பதும் தனக்குத் தேவையில்லாததை வலிந்து செய்வதும் விரும்பத் தகாததாகும்.17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப் படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். (5:101)
7297. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனாவில் நபி (ஸல்) அவர் களுடன் ஒரு வேளாண் பூமியில் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் பேரீச்சமட்டை ஒன்றின் மீது (கையை) ஊன்றியபடி நின்றிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் யூதர்கள் சிலரைக் கடந்துசென்றார்கள். அவர்களில் ஒருவர், “இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்” என்று சொன்னார். மற்றொருவர், “நீங்கள் அவரிடம் கேட்காதீர்கள்; ஏனெனில் நீங்கள் விரும்பாத பதிலை அவர் உங்களுக்குத் சொல்லிவிடக் கூடாது” என்று சொன்னார். பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, “அபுல் காசிமே! உயிரைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் எழுந்து நின்று கூர்ந்து பார்த்தார்கள்.

உடனே நான், அவர்களுக்கு ‘வஹீ’ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப்படுகின்றது என்று புரிந்துகொண்டேன். ஆகவே, ‘வஹீ’ வருவதற்கு வசதியாக நான் அவர்களைவிட்டு சற்றுப் பின்தள்ளி நின்றேன். பிறகு, நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) “நபியே! உயிரைப் பற்றி உம்மிடம் அவர்கள் வினவுகின்றார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது என்று கூறுவீராக!” எனும் (17:85ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.24

அத்தியாயம் : 96
7298. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ اتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ ذَهَبٍ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ مِنْ ذَهَبٍ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي اتَّخَذْتُ خَاتَمًا مِنْ ذَهَبٍ "". فَنَبَذَهُ وَقَالَ "" إِنِّي لَنْ أَلْبَسَهُ أَبَدًا "" فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ.
பாடம்: 4 நபி (ஸல்) அவர்களின் (சொற்களை மட்டுமன்றி) செயல்களை(யும்) பின்பற்றுதல்
7298. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். மக்களும் பொன் மோதிரங்களைச் செய்து (அணிந்து)கொண்டார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள், “நான் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டேன். (அப்படித்தானே!)” என்று கூறிவிட்டு, அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள். மேலும், “நான் அதை ஒருபோதும் அணியமாட்டேன்” என்றும் சொன்னார்கள். உடனே, மக்கள் அனைவரும் தங்களின் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டார்கள்.25

அத்தியாயம் : 96
7299. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تُوَاصِلُوا "". قَالُوا إِنَّكَ تُوَاصِلُ. قَالَ "" إِنِّي لَسْتُ مِثْلَكُمْ، إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي "". فَلَمْ يَنْتَهُوا عَنِ الْوِصَالِ ـ قَالَ ـ فَوَاصَلَ بِهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَيْنِ أَوْ لَيْلَتَيْنِ، ثُمَّ رَأَوُا الْهِلاَلَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ تَأَخَّرَ الْهِلاَلُ لَزِدْتُكُمْ "". كَالْمُنَكِّلِ لَهُمْ.
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7299. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “தொடர்நோன்பு நோற்காதீர்கள்” என்று கூறினார்கள். மக்கள், “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கின்ற நிலையில் நான் உள்ளேன்” என்று பதிலளித்தார்கள். இருந்தும், மக்கள் தொடர்நோன்பைக் கைவிடவில்லை. ஆகவே, அவர்களுடன் சேர்ந்து நபி (ஸல்) அவர்கள் ‘இரண்டு நாட்கள்’ அல்லது ‘இரண்டு இரவுகள்’ தொடர்நோன்பு நோற்றார்கள்.

பிறகு மக்கள் பிறையைப் பார்த்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘பிறை இன்னும் தள்ளிப் போயிருந்தால், உங்களை இன்னும் (தொடர்நோன்பை) அதிகமாக்கச் செய்திருப்பேன்” என்று மக்களைக் கண்டிப்பதைப் போன்று சொன்னார்கள்.27


அத்தியாயம் : 96
7300. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ التَّيْمِيُّ، حَدَّثَنِي أَبِي قَالَ، خَطَبَنَا عَلِيٌّ ـ رضى الله عنه ـ عَلَى مِنْبَرٍ مِنْ آجُرٍّ، وَعَلَيْهِ سَيْفٌ فِيهِ صَحِيفَةٌ مُعَلَّقَةٌ فَقَالَ وَاللَّهِ مَا عِنْدَنَا مِنْ كِتَابٍ يُقْرَأُ إِلاَّ كِتَابُ اللَّهِ وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ. فَنَشَرَهَا فَإِذَا فِيهَا أَسْنَانُ الإِبِلِ وَإِذَا فِيهَا "" الْمَدِينَةُ حَرَمٌ مِنْ عَيْرٍ إِلَى كَذَا، فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلاً "". وَإِذَا فِيهِ "" ذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ يَسْعَى بِهَا أَدْنَاهُمْ، فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلاً "". وَإِذَا فِيهَا "" مَنْ وَالَى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلاً "".
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7300. யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் சுட்ட செங்கற்களாலான ஒரு சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று எங்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் வாள் ஒன்றை வைத்திருந்தார்கள். அதில் ஓர் ஏடு தொங்கவிடப்பட்டிருந்தது. அவர்கள் (தமது உரையில்), “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தையும் இந்த ஏட்டையும் தவிர ஓதப்படுகின்ற நூல் எதுவும் எங்களிடம் இல்லை” என்று கூறிவிட்டு, அதை விரித்துக் காட்டினார்கள். அதில் (உயிரீட்டுத் தொகையாகத் தரப்பட வேண்டிய) ஒட்டகங்களின் வயது விவரங்கள் இருந்தன.

மேலும், அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: மதீனா நகரம் ‘அய்ர்’ எனும் மலையிலிருந்து இன்ன (ஸவ்ர்) இடம்வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துகின்றானோ அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான வழிபாட்டையும் கூடுதலான வழிபாட்டையும் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான்.

முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும் (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்). அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் அளித்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன்மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவருடைய சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதையுமே அல்லாஹ் ஏற்க மாட்டான்.

தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக்கொள்ளும் அடிமையின் மீது அல்லாஹ்வின் சாபமும் மற்றும் மக்கள் அனைவருடைய சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்.28


அத்தியாயம் : 96
7301. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَ قَالَتْ عَائِشَةُ ـ رَضِيَ الله عنها ـ صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَيْئًا تَرَخَّصَ وَتَنَزَّهَ عَنْهُ قَوْمٌ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَحَمِدَ اللَّهَ ثُمَّ قَالَ "" مَا بَالُ أَقْوَامٍ يَتَنَزَّهُونَ عَنِ الشَّىْءِ أَصْنَعُهُ، فَوَاللَّهِ إِنِّي أَعْلَمُهُمْ بِاللَّهِ، وَأَشَدُّهُمْ لَهُ خَشْيَةً "".
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7301. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதியளித்தார்கள். அப்போது சிலர் அதைச் செய்வதிóருந்து விலகிக்கொண்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் (உரையாற்ற எழுந்து) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “சிலருக்கு என்னாயிற்று? நான் செய்கின்ற ஒன்றைச் செய்வதிóருந்து விலகிக்கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களைவிட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்” என்று கூறினார்கள்.29


அத்தியாயம் : 96
7302. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ نَافِعِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ كَادَ الْخَيِّرَانِ أَنْ يَهْلِكَا أَبُو بَكْرٍ، وَعُمَرُ، لَمَّا قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَفْدُ بَنِي تَمِيمٍ، أَشَارَ أَحَدُهُمَا بِالأَقْرَعِ بْنِ حَابِسٍ الْحَنْظَلِيِّ أَخِي بَنِي مُجَاشِعٍ، وَأَشَارَ الآخَرُ بِغَيْرِهِ، فَقَالَ أَبُو بَكْرٍ لِعُمَرَ إِنَّمَا أَرَدْتَ خِلاَفِي. فَقَالَ عُمَرُ مَا أَرَدْتُ خِلاَفَكَ. فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَزَلَتْ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَرْفَعُوا أَصْوَاتَكُمْ} إِلَى قَوْلِهِ {عَظِيمٌ}. قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ قَالَ ابْنُ الزُّبَيْرِ فَكَانَ عُمَرُ بَعْدُ ـ وَلَمْ يَذْكُرْ ذَلِكَ عَنْ أَبِيهِ يَعْنِي أَبَا بَكْرٍ ـ إِذَا حَدَّثَ النَّبِيَّ صلى الله عليه وسلم بِحَدِيثٍ حَدَّثَهُ كَأَخِي السِّرَارِ، لَمْ يُسْمِعْهُ حَتَّى يَسْتَفْهِمَهُ.
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7302. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். (ஹிஜ்ரீ ஒன்பதாம் ஆண்டு) பனூ தமீம் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்குமாறு கோரியவர்களாக) வந்தனர். அப்போது (அபூபக்ர், உமர் ஆகிய) அந்த இருவரில் ஒருவர், பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ அல்ஹன்ழலீ (ரலி) அவர்களை (தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்; மற்றொருவர், இன்னொருவரை (தலைவராக்கும்படி) சைகை செய்தார்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எனக்கு மாறு செய்வதையே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று சொல்ல, அதற்கு உமர் (ரலி) அவர்கள், “தங்களுக்கு மாறு செய்வது என் நோக்கமன்று” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போதுதான், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்குமேல் உயர்த்தாதீர்கள்” எனும் (49:2ஆவது) வசனம் முழுமையாக அருளப்பெற்றது.

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் எதைப் பேசினாலும் இரகசியம் பேசுபவரைப் போன்று (மெதுவாகத்)தான் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்துகொள்வார்கள்.

இந்த ஹதீஸை தம் பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து கேட்டு அறிவிப்பதாக இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் குறிப்பிடவில்லை.30


அத்தியாயம் : 96
7303. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي مَرَضِهِ "" مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ "". قَالَتْ عَائِشَةُ قُلْتُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ. فَقَالَ "" مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ "". فَقَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ بِالنَّاسِ، فَفَعَلَتْ حَفْصَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ "". قَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ مَا كُنْتُ لأُصِيبَ مِنْكِ خَيْرًا.
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7303. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) நோய்வாய்ப் பட்டிருந்தபோது, “மக்களுக்குத் தொழு விக்குமாறு அபூபக்ரிடம் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான், “நீங்கள் (தொழுகைக்காக) நிற்கும் இடத்தில் (என் தந்தை) அபூபக்ர் நிற்பார்களானால், (மனம் நெகிழ்ந்து) அழுது, அவர்கள் ஓதுவது மக்களுக்குக் கேட்காமல் போய்விடும்; ஆகவே, உமர் (ரலி) அவர்களிடம் கூறுங்கள்; அவர் தொழுவிக்கட்டும்” என்று சொன்னேன்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ரிடம் சொல்லுங்கள்; மக்களுக்கு அவர் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் “உங்களது இடத்தில் அபூபக்ர் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுது, அவர்கள் ஓதுவது மக்களுக்குக் கேட்காமல் போய்விடும். ஆகவே, மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று சொல்” என்றேன். ஹஃப்ஸாவும் அவ்வாறே செய்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள்தான் யூசுஃப் (அலை) அவர்களுடைய தோழிகள் (போன்றவர்கள்). ஆகவே, மக்களுக்குத் தொழுவிக்குமாறு அபூபக்ரிடமே சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம், “உன்னால் நான் நன்மை எதையும் கண்டதில்லை” என்று கூறினார்.31


அத்தியாயம் : 96
7304. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ جَاءَ عُوَيْمِرٌ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ فَقَالَ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً فَيَقْتُلُهُ، أَتَقْتُلُونَهُ بِهِ سَلْ لِي يَا عَاصِمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَكَرِهَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَسَائِلَ وَعَابَ، فَرَجَعَ عَاصِمٌ فَأَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَرِهَ الْمَسَائِلَ فَقَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لآتِيَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَجَاءَ وَقَدْ أَنْزَلَ اللَّهُ تَعَالَى الْقُرْآنَ خَلْفَ عَاصِمٍ فَقَالَ لَهُ "" قَدْ أَنْزَلَ اللَّهُ فِيكُمْ قُرْآنًا "". فَدَعَا بِهِمَا فَتَقَدَّمَا فَتَلاَعَنَا، ثُمَّ قَالَ عُوَيْمِرٌ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ، إِنْ أَمْسَكْتُهَا. فَفَارَقَهَا وَلَمْ يَأْمُرْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِفِرَاقِهَا، فَجَرَتِ السُّنَّةُ فِي الْمُتَلاَعِنَيْنِ. وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" انْظُرُوهَا فَإِنْ جَاءَتْ بِهِ أَحْمَرَ قَصِيرًا مِثْلَ وَحَرَةٍ فَلاَ أُرَاهُ إِلاَّ قَدْ كَذَبَ، وَإِنْ جَاءَتْ بِهِ أَسْحَمَ أَعْيَنَ ذَا أَلْيَتَيْنِ فَلاَ أَحْسِبُ إِلاَّ قَدْ صَدَقَ عَلَيْهَا "". فَجَاءَتْ بِهِ عَلَى الأَمْرِ الْمَكْرُوهِ.
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7304. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அஜ்லான்’ குலத்தைச் சேர்ந்த உவைமிர் (ரலி) அவர்கள், ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்களிடம் வந்து, “ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் அவனை இவன் கொன்றுவிடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? எனக்காக (இதைப் பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேளுங்கள், ஆஸிமே!” என்றார். அவ்வாறே ஆஸிம் (ரலி) அவர்களும் நபியவர்களிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அநாகரிகமாகக் கருதினார்கள்.

ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் திரும்பிவந்து உவைமிர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை” என்று தெரிவித்தார்கள். அதற்கு உவைமிர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபி (ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றி நேரடியாகக் கேட்பதற்காகச்) செல்வேன்” என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ஆஸிம் (ரலி) அவர்கள் வந்துவிட்டுச் சென்றபின் உயர்ந்தோன் அல்லாஹ் குர்ஆன் வசனத்தை அருளியிருந்தான்.

ஆகவே, (தம்மிடம் வந்த) உவைமிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “உங்கள் விஷயத்தில் அல்லாஹ் குர்ஆன் (வசனத்தை) அருளிவிட்டான்” என்று கூறி, தம்பதியர் இருவரையும் அழைத்தார்கள். அவர்கள் இருவரும் வந்து பரஸ்பரம் சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார்கள். பிறகு உவைமிர் (ரலி) அவர்கள், “(இதற்குப் பிறகும்) அவளை நான் என்னுடனேயே வைத்துக்கொண்டிருந்தால் நான் பொய் சொன்னதாக ஆகிவிடும், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு (மணவிலக்குச் செய்து) மனைவியிடமிருந்து (தாமாகவே) பிரிந்துகொண்டார்கள்.

அவ்வாறு அவளைப் பிரிந்துவிடுமாறு அவருக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. (அவராகவே அந்த முடிவுக்கு வந்தார்.) பிறகு (இந்தத் தம்பதியரின் சம்பவமே) சாபஅழைப்புப் பிரமாணம் செய்வோருக்கான வழிமுறையாகத் தொடர்ந்தது.

மேலும், நபி (ஸல்) அவர்கள், “இவளைக் கண்காணித்துவாருங்கள்; இவள் அரணையைப் போன்று குட்டையான சிவப்புநிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால் கணவன் சொன்னது பொய் என்றே நான் கருதுவேன். இவள் கறுப்பு நிறத்தில் விசாலமான கண்கள் கொண்ட, பெரிய பிட்டங்களை உடைய குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள்மீது உவைமிர் சொன்னது உண்மை என்றே நான் கருதுவேன்” என்று சொன்னார்கள். பிறகு விரும்பத் தகாத அந்தத் தோற்றத்திலேயே அவள் குழந்தை பெற்றெடுத்தாள்.32


அத்தியாயம் : 96
7305. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَوْسٍ النَّصْرِيُّ، وَكَانَ، مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ذَكَرَ لِي ذِكْرًا مِنْ ذَلِكَ فَدَخَلْتُ عَلَى مَالِكٍ فَسَأَلْتُهُ فَقَالَ انْطَلَقْتُ حَتَّى أَدْخُلَ عَلَى عُمَرَ أَتَاهُ حَاجِبُهُ يَرْفَا فَقَالَ هَلْ لَكَ فِي عُثْمَانَ وَعَبْدِ الرَّحْمَنِ وَالزُّبَيْرِ وَسَعْدٍ يَسْتَأْذِنُونَ. قَالَ نَعَمْ. فَدَخَلُوا فَسَلَّمُوا وَجَلَسُوا. فَقَالَ هَلْ لَكَ فِي عَلِيٍّ وَعَبَّاسٍ. فَأَذِنَ لَهُمَا. قَالَ الْعَبَّاسُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اقْضِ بَيْنِي وَبَيْنَ الظَّالِمِ. اسْتَبَّا. فَقَالَ الرَّهْطُ عُثْمَانُ وَأَصْحَابُهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اقْضِ بَيْنَهُمَا وَأَرِحْ أَحَدَهُمَا مِنَ الآخَرِ. فَقَالَ اتَّئِدُوا أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ، هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ "". يُرِيدُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَفْسَهُ. قَالَ الرَّهْطُ قَدْ قَالَ ذَلِكَ. فَأَقْبَلَ عُمَرُ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ فَقَالَ أَنْشُدُكُمَا بِاللَّهِ هَلْ تَعْلَمَانِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ذَلِكَ. قَالاَ نَعَمْ. قَالَ عُمَرُ فَإِنِّي مُحَدِّثُكُمْ عَنْ هَذَا الأَمْرِ، إِنَّ اللَّهَ كَانَ خَصَّ رَسُولَهُ صلى الله عليه وسلم فِي هَذَا الْمَالِ بِشَىْءٍ لَمْ يُعْطِهِ أَحَدًا غَيْرَهُ، فَإِنَّ اللَّهَ يَقُولُ {مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْهُمْ فَمَا أَوْجَفْتُمْ} الآيَةَ، فَكَانَتْ هَذِهِ خَالِصَةً لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ وَاللَّهِ مَا احْتَازَهَا دُونَكُمْ وَلاَ اسْتَأْثَرَ بِهَا عَلَيْكُمْ، وَقَدْ أَعْطَاكُمُوهَا وَبَثَّهَا فِيكُمْ، حَتَّى بَقِيَ مِنْهَا هَذَا الْمَالُ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِمْ مِنْ هَذَا الْمَالِ، ثُمَّ يَأْخُذُ مَا بَقِيَ فَيَجْعَلُهُ مَجْعَلَ مَالِ اللَّهِ، فَعَمِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِذَلِكَ حَيَاتَهُ، أَنْشُدُكُمْ بِاللَّهِ هَلْ تَعْلَمُونَ ذَلِكَ فَقَالُوا نَعَمْ. ثُمَّ قَالَ لِعَلِيٍّ وَعَبَّاسٍ أَنْشُدُكُمَا اللَّهَ هَلْ تَعْلَمَانِ ذَلِكَ قَالاَ نَعَمْ. ثُمَّ تَوَفَّى اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو بَكْرٍ أَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَقَبَضَهَا أَبُو بَكْرٍ فَعَمِلَ فِيهَا بِمَا عَمِلَ فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَأَنْتُمَا حِينَئِذٍ ـ وَأَقْبَلَ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ ـ تَزْعُمَانِ أَنَّ أَبَا بَكْرٍ فِيهَا كَذَا، وَاللَّهُ يَعْلَمُ أَنَّهُ فِيهَا صَادِقٌ بَارٌّ رَاشِدٌ تَابِعٌ لِلْحَقِّ، ثُمَّ تَوَفَّى اللَّهُ أَبَا بَكْرٍ فَقُلْتُ أَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ. فَقَبَضْتُهَا سَنَتَيْنِ أَعْمَلُ فِيهَا بِمَا عَمِلَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ، ثُمَّ جِئْتُمَانِي وَكَلِمَتُكُمَا عَلَى كَلِمَةٍ وَاحِدَةٍ وَأَمْرُكُمَا جَمِيعٌ، جِئْتَنِي تَسْأَلُنِي نَصِيبَكَ مِنِ ابْنِ أَخِيكَ، وَأَتَانِي هَذَا يَسْأَلُنِي نَصِيبَ امْرَأَتِهِ مِنْ أَبِيهَا فَقُلْتُ إِنْ شِئْتُمَا دَفَعْتُهَا إِلَيْكُمَا، عَلَى أَنَّ عَلَيْكُمَا عَهْدَ اللَّهِ وَمِيثَاقَهُ تَعْمَلاَنِ فِيهَا بِمَا عَمِلَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَبِمَا عَمِلَ فِيهَا أَبُو بَكْرٍ وَبِمَا عَمِلْتُ فِيهَا مُنْذُ وَلِيتُهَا، وَإِلاَّ فَلاَ تُكَلِّمَانِي فِيهَا. فَقُلْتُمَا ادْفَعْهَا إِلَيْنَا بِذَلِكَ. فَدَفَعْتُهَا إِلَيْكُمَا بِذَلِكَ، أَنْشُدُكُمْ بِاللَّهِ هَلْ دَفَعْتُهَا إِلَيْهِمَا بِذَلِكَ قَالَ الرَّهْطُ نَعَمْ. فَأَقْبَلَ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ فَقَالَ أَنْشُدُكُمَا بِاللَّهِ هَلْ دَفَعْتُهَا إِلَيْكُمَا بِذَلِكَ. قَالاَ نَعَمْ. قَالَ أَفَتَلْتَمِسَانِ مِنِّي قَضَاءً غَيْرَ ذَلِكَ فَوَالَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ لاَ أَقْضِي فِيهَا قَضَاءً غَيْرَ ذَلِكَ حَتَّى تَقُومَ السَّاعَةُ، فَإِنْ عَجَزْتُمَا عَنْهَا فَادْفَعَاهَا إِلَىَّ، فَأَنَا أَكْفِيكُمَاهَا.
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7305. முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மாலிக் பின் அவ்ஸ் அந்நளி (ரஹ்) அவர்களிடம் சென்று (ஃபதக் சம்பவம் பற்றிக்) கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்களின் மெய்க் காவலர் ‘யர்ஃபஉ’ என்பவர் அவர்களிடம் வந்து, “உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல் அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க) அனுமதி கோருகின்றனர்; தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள், “ஆம் (வரச் சொல்லுங்கள்)” என்று கூறினார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து முகமன் (சலாம்) கூறி அமர்ந்தனர்.

அப்போது (மீண்டும்) யர்ஃபஉ (வந்து), “அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் சந்திப்பதில் தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். அவர்கள் இருவருக்கும் அனுமதி அளித்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் (என்னுடைய) இந்த அக்கிரமக்கார(ப் பங்காள)ருக்கும் இடையே (இந்தச் சொத்து தொடர்பாக) தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அவர்கள் இருவரும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்திக்கொண்டனர்.

அப்போது (அங்கிருந்த) உஸ்மான் (ரலி) அவர்களும் அவர்தம் தோழர்களும் கொண்ட அந்தக் குழுவினர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இவர்களுக்கிடையே தீர்ப்பளித்து ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங்கள்” என்று கூறினர்.

உமர் (ரலி) அவர்கள், “சற்று பொறுங்கள். வானமும் பூமியும் எந்த அல்லாஹ்வின் கட்டளையால் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கின்றேன்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே’ என்று தம்மைக் குறித்துச் சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், “(ஆம்) நபியவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்” என்று பதிலளித்தனர்.

உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவ்விருவரும், “ஆம் (அவ்வாறு சொல்óயிருக்கிறார்கள்)” என்று பதிலளித்தனர்.

உமர் ரலி அவர்கள், “அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன்: “(போரிடாமல் கிடைத்த) இந்த (‘ஃபய்உ’)ச் செல்வத்திலிருந்து சிறிதளவைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கினான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை வழங்கவில்லை” என்று கூறிவிட்டு, “அல்லாஹ் எந்தச் செல்வத்தை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததன்று” எனும் (59:6ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

தொடர்ந்து “எனவே, இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை; அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. அதை உங்களுக்கே கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே எஞ்சியது. நபி (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை அவர்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு எஞ்சியதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள்.

இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள். (இவ்வளவும் சொல்லிவிட்டு,) “அல்லாஹ்வின் பொருட்டால் உங்களைக் கேட்கின் றேன்: நீங்கள் இதை அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்”ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தார்கள். பிறகு, அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும், “உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நீங்கள் இதை அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும், “ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தனர்.

(தொடர்ந்து,) “பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக்கொண்டான். அப்போது (‘கலீஃபா’ பொறுப்பேற்ற) அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்” என்று கூறி அ(ந்தச் செல்வத்)தைத் தமது கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் -அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கிச் சொல்கிறார்கள்- “அபூபக்ர் அந்தச் செல்வத்தில் இன்னின்னவாறு செயல்படுகிறார்” என்று கூறினீர்கள்.

அல்லாஹ் அறிவான்: அபூபக்ர் (ரலி) அவர்கள் அது விஷயத்தில் உண்மையே சொன்னார்கள்; நல்லதே செய்தார்கள்; நேரான முறையில் நடந்து சத்தியத்தையே பின்பற்றினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது (கலீஃபா பொறுப்பேற்ற) நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்” என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தை இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டேன். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்துகொண்ட முறைப்படி நானும் செயல்பட்டுவந்தேன்.

பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் வந்தீர்கள்; உங்கள் இருவரின் பேச்சும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. நீங்கள் இருவரும் ஒன்றுபட்டே இருந்தீர் கள். (அப்பாஸே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரரின் புதல்வர் (அதாவது நபி (ஸல்) அவர்கள்) இடமிருந்து உங்களுக் குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள். இவரும் (அலீயும்) தம் துணைவியாருக்கு அவருடைய தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கோரியபடி என்னிடம் வந்தார்.

அதற்கு நான் (உங்கள் இருவரிடமும்,) ‘நீங்கள் இருவரும் விரும்பினால், அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்ர் (ரலி) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் அதைக் கொடுத்துவிடுகிறேன்; அவ்வாறில்லையாயின், இது விஷயத்தில் நீங்கள் இருவரும் என்னிடம் பேசவேண்டாம்’ என்று நான் சொன்னேன்.

அதற்கு நீங்கள் இருவரும், ‘எங்களிடம் அதைக் கொடுத்துவிடுங்கள்; அந்த நிபந்தனைகள்படியே (நாங்கள் செயல்படுகிறோம்)’ என்று சொன்னீர்கள். அதனடிப்படையிலேயே உங்கள் இருவரிடமும் நான் அதைக் கொடுத்தேன்” என்று சொன்னார்கள்.

பிறகு (குழுவினரை நோக்கி) “நான் உங்களிடம் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நான் இவ்விருவரிடமும் அந்த நிபந்தனையின்படி அந்தச் சொத்தை கொடுத்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். அந்தக் குழுவினர், “ஆம்; (அவ்வாறு கொடுக்கவே செய்தீர்கள்)” என்று கூறினர். பிறகு அலீ (ரலி) மற்றும் அப்பாஸ் (ரலி) ஆகியோரை நோக்கி, “நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நான் உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின் படியே கொடுத்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். இருவரும் ‘ஆம்’ என்றார் கள்.

உமர் (ரலி) அவர்கள், “இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிட மிருந்து கோருகின்றீர்களா? எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன்மீது சத்தியமாக! நான் மறுமை வரும்வரை இந்த விஷயத் தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் அளிக்கமாட்டேன்! உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். உங்களுக்குப் பதிலாக நானே அதைப் பராமரித்துக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள்.33

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 96
7306. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ قُلْتُ لأَنَسٍ أَحَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ. قَالَ نَعَمْ مَا بَيْنَ كَذَا إِلَى كَذَا، لاَ يُقْطَعُ شَجَرُهَا، مَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ. قَالَ عَاصِمٌ فَأَخْبَرَنِي مُوسَى بْنُ أَنَسٍ أَنَّهُ قَالَ أَوْ آوَى مُحْدِثًا.
பாடம்: 6 மார்க்கத்தில் புதியவற்றை (பித்அத்தை)ப் புகுத்துபவனுக்குப் புகலிடம் தருவது பாவமாகும். இது தொடர்பான ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அலீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.34
7306. ஆஸிம் பின் சுலைமான் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் புனித நகரமாக அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; இன்ன இடத்திலிருந்து இன்ன இடம்வரை (மதீனா புனிதமானது என்று நபியவர்கள் அறிவித்தார்கள். மேலும், சொன்னார்கள்:) அதன் மரம் (எதுவும்) வெட்டப்படக் கூடாது. அதில் யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகின்றானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும்” என்று கூறினார்கள் எனப் பதிலளித்தார்கள்.35

அனஸ் (ரலி) அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில், “அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கின்றவன்மீது” என்று வந்துள்ளது.

அத்தியாயம் : 96
7307. حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ، وَغَيْرُهُ، عَنْ أَبِي الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، قَالَ حَجَّ عَلَيْنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو فَسَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ اللَّهَ لاَ يَنْزِعُ الْعِلْمَ بَعْدَ أَنْ أَعْطَاهُمُوهُ انْتِزَاعًا، وَلَكِنْ يَنْتَزِعُهُ مِنْهُمْ مَعَ قَبْضِ الْعُلَمَاءِ بِعِلْمِهِمْ، فَيَبْقَى نَاسٌ جُهَّالٌ يُسْتَفْتَوْنَ فَيُفْتُونَ بِرَأْيِهِمْ، فَيُضِلُّونَ وَيَضِلُّونَ "". فَحَدَّثْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو حَجَّ بَعْدُ فَقَالَتْ يَا ابْنَ أُخْتِي انْطَلِقْ إِلَى عَبْدِ اللَّهِ فَاسْتَثْبِتْ لِي مِنْهُ الَّذِي حَدَّثْتَنِي عَنْهُ. فَجِئْتُهُ فَسَأَلْتُهُ فَحَدَّثَنِي بِهِ كَنَحْوِ مَا حَدَّثَنِي، فَأَتَيْتُ عَائِشَةَ فَأَخْبَرْتُهَا فَعَجِبَتْ فَقَالَتْ وَاللَّهِ لَقَدْ حَفِظَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو.
பாடம்: 7 (அடிப்படை ஆதாரங்களுக்கு மாறான) சொந்தக் கருத்தும் வலிந்து திணிக்கப்படும் கணிப்பும் இழிவானவை ஆகும்.36 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) எதைப் பற்றி உமக்கு(த் தீர்க்கமான) அறிவு இல்லையோ அதைப் பின்பற்ற வேண்டாம். (17:36). (நூஹே!) நீர் அறியாதவற்றைப் பற்றி என்னிடம் (துருவிக்) கேட்காதீர். (11:46).
7307. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் (நாங்கள் இருந்த இடம் வழியாக) எங்களைக் கடந்து ஹஜ் செய்யச் சென்றார்கள். அப்போது அவர்கள் சொல்லக் கேட்டேன்: நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்குக் கல்வியை வழங்கியபின் அதை ஒரேயடி யாகப் பறித்துக்கொள்ளமாட்டான். மாறாக, கல்விமான்களை அவர்களது கல்வியுடன் கைப்பற்றிக்கொள்வதன் மூலம் அவர்களி டமிருந்து அதை (சன்னஞ்சன்னமாக)ப் பறித்துக்கொள்வான். பின்னர், அறிவீனர் களே எஞ்சியிருப்பார்கள். அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரப்படும். அவர்களும் தமது சொந்தக் கருத்துப்படி தீர்ப்பளித்து (மக்களை) வழிகெடுப்பார் கள்; தாமும் வழிகெட்டுப்போவார்கள்” என்று கூறக் கேட்டேன்.

பிறகு நான் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அறிவித்தேன். அதன் பிறகு (ஓர் ஆண்டிலும்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். (அப்போது) ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், “என் சகோதரியின் புதல்வரே! அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களிடம் சென்று, (முன்பு) அவரிடமிருந்து (கேட்டு) நீ அறிவித்த ஹதீஸை எனக்காக அவரிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்” என்று சொன்னார்கள்.

அவ்வாறே நான் அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் முன்பு எனக்கு அறிவித்ததைப் போன்றே இப்போதும் எனக்கு அறிவித்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அவர்கள் வியப்படைந்து “அல்லாஹ்வின் மீதாணையாக! அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார்” என்று சொன்னார்கள்.37


அத்தியாயம் : 96
7308. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، سَمِعْتُ الأَعْمَشَ، قَالَ سَأَلْتُ أَبَا وَائِلٍ هَلْ شَهِدْتَ صِفِّينَ قَالَ نَعَمْ. فَسَمِعْتُ سَهْلَ بْنَ حُنَيْفٍ، يَقُولُ ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ سَهْلُ بْنُ حُنَيْفٍ يَا أَيُّهَا النَّاسُ اتَّهِمُوا رَأْيَكُمْ عَلَى دِينِكُمْ، لَقَدْ رَأَيْتُنِي يَوْمَ أَبِي جَنْدَلٍ وَلَوْ أَسْتَطِيعُ أَنَّ أَرُدَّ أَمْرَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَرَدَدْتُهُ، وَمَا وَضَعْنَا سُيُوفَنَا عَلَى عَوَاتِقِنَا إِلَى أَمْرٍ يُفْظِعُنَا إِلاَّ أَسْهَلْنَ بِنَا إِلَى أَمْرٍ نَعْرِفُهُ غَيْرَ هَذَا الأَمْرِ. قَالَ وَقَالَ أَبُو وَائِلٍ شَهِدْتُ صِفِّينَ وَبِئْسَتْ صِفُّونَ.
பாடம்: 7 (அடிப்படை ஆதாரங்களுக்கு மாறான) சொந்தக் கருத்தும் வலிந்து திணிக்கப்படும் கணிப்பும் இழிவானவை ஆகும்.36 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) எதைப் பற்றி உமக்கு(த் தீர்க்கமான) அறிவு இல்லையோ அதைப் பின்பற்ற வேண்டாம். (17:36). (நூஹே!) நீர் அறியாதவற்றைப் பற்றி என்னிடம் (துருவிக்) கேட்காதீர். (11:46).
7308. அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூவாயில் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் ஸிஃப்பீன் போரில் கலந்து கொண்டீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம் (கலந்துகொண்டேன்)” என்று கூறிவிட்டு, “நான் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன் என (பின்வருமாறு) அறிவித்தார்கள்:

சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்களே! (இந்தப் போரில் கலந்துகொள்ளாததற்காக என் மீது குற்றம்சாட்டாதீர்கள். மாறாக, கலந்து கொள்ள வேண்டும் என்று) உங்கள் மார்க்க விஷயத்தில் நீங்கள் எடுத்துள்ள முடிவையே குறைகாணுங்கள். அபூஜந்தல் (அபயம் தேடிவந்த) நாளில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன்.

(அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக் கொண்டது எங்களுக்குச் சிரமம் தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை அடைய, (முடக்கப்பட்ட) அந்த வாட்களே வழி வகுத்தன. ஆனால், இது (ஸிஃப்பீன் சண்டை) வேறு விஷயம். (முஸ்லிம்களுக்கிடையே மூண்டுவிட்ட இந்தப் போரில் ஈடுபடுவது அழிவைத்தான் தரும்).38

அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஸிஃப்பீன் போரில் நான் கலந்துகொண்டேன். ஸிஃப்பீன் போர் ஒரு கெட்ட நிகழ்ச்சி.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 96
7309. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ ابْنَ الْمُنْكَدِرِ، يَقُولُ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ مَرِضْتُ فَجَاءَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُنِي وَأَبُو بَكْرٍ وَهُمَا مَاشِيَانِ، فَأَتَانِي وَقَدْ أُغْمِيَ عَلَىَّ فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ صَبَّ وَضُوءَهُ عَلَىَّ فَأَفَقْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ فَقُلْتُ أَىْ رَسُولَ اللَّهِ ـ كَيْفَ أَقْضِي فِي مَالِي كَيْفَ أَصْنَعُ فِي مَالِي قَالَ فَمَا أَجَابَنِي بِشَىْءٍ حَتَّى نَزَلَتْ آيَةُ الْمِيرَاثِ.
பாடம்: 8 வேதஅறிவிப்பு (வஹீ) அருளப் பெறாத ஒரு விஷயம் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டால் “எனக்குத் தெரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்; அல்லது வேதஅறிவிப்பு அருளப் பெறும்வரை எந்தப் பதிலும் அளிக்கமாட்டார்கள். அவர்கள் (ஒருபோதும்) தமது சொந்தக் கருத்தையோ கணிப்பையோ கூறியதில்லை. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர் களுக்கிடையே நீர் தீர்ப்பளிப்பதற்காகவே உண்மையான இந்த வேதத்தை உமக்கு நாம் அருளினோம் (4:105). நபி (ஸல்) அவர்களிடம் உயிர் (ரூஹ்) குறித்து கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அது பற்றிய வசனம் அருளப்பெறும்வரை (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்தார்கள்.39
7309. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நோயுற்றிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நான் மூர்ச்சையடைந்துவிட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்து, பின்னர் தாம் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரை என்மீது ஊற்றினார்கள். உடனே நான் மூர்ச்சை தெளிந்தேன்.

பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வம் தொடர்பாக எப்படி முடிவெடுப்பது? என் செல்வத்தை நான் என்ன செய்வது?” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், வாரிசுரிமை வசனம் (4:11) அருளப்பெறும்வரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.40

அத்தியாயம் : 96
7310. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، عَنْ أَبِي صَالِحٍ، ذَكْوَانَ عَنْ أَبِي سَعِيدٍ، جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ الرِّجَالُ بِحَدِيثِكَ، فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ، يَوْمًا نَأْتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللَّهُ. فَقَالَ "" اجْتَمِعْنَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي مَكَانِ كَذَا وَكَذَا "". فَاجْتَمَعْنَ فَأَتَاهُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَّمَهُنَّ مِمَّا عَلَّمَهُ اللَّهُ ثُمَّ قَالَ "" مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ بَيْنَ يَدَيْهَا مِنْ وَلَدِهَا ثَلاَثَةً، إِلاَّ كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ "". فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ يَا رَسُولَ اللَّهِ اثْنَيْنِ قَالَ فَأَعَادَتْهَا مَرَّتَيْنِ ثُمَّ قَالَ "" وَاثْنَيْنِ وَاثْنَيْنِ وَاثْنَيْنِ "".
பாடம்: 9 நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அல்லாஹ் தமக்குக் கற்பித்ததையே போதித்தார்களே தவிர, சொந்தக் கருத்தையோ கணிப் பையோ போதிக்கவில்லை.
7310. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் ஒரு பெண்மணி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரை களை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச்சென்றுவிடுகின்றனர். ஆகவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்றுகூடுங்கள்” என்று சொன்னார்கள்.

அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்றுதிரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு, “உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் குழந்தைகளில் மூன்றுபேரை இழந்துவிடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்” என்று சொன்னார்கள்.

அப்போது அப்பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலுமா?” என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, “ஆம்; இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள்.41

அத்தியாயம் : 96
7311. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ "".
பாடம்: 10 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதர வாகப் போராடிக்கொண்டே இருப் பார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது (புகாரீயாகிய நான் கூறுகிறேன்:) அவர்கள்தான் அறிஞர் (பெருமக்)கள்.
7311. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் (உண்மைக்கு) ஆதரவாளர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். இறுதியாக, அவர்கள் மேலோங்கியவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக்கட்டளை(யான மறுமை நாள்) வரும்.

இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.42


அத்தியாயம் : 96
7312. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي حُمَيْدٌ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، يَخْطُبُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَيُعْطِي اللَّهُ، وَلَنْ يَزَالَ أَمْرُ هَذِهِ الأُمَّةِ مُسْتَقِيمًا حَتَّى تَقُومَ السَّاعَةُ، أَوْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ "".
பாடம்: 10 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதர வாகப் போராடிக்கொண்டே இருப் பார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது (புகாரீயாகிய நான் கூறுகிறேன்:) அவர்கள்தான் அறிஞர் (பெருமக்)கள்.
7312. முஆவியா (ரலி) அவர்கள் தமது உரையில் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எவருக்கு நன்மை நாடுகின்றானோ அவரை மார்க்கத்தில் (விளக்கமுடைய) அறிஞராக்குகின்றான். நான் பங்கிடுபவன் மட்டுமே. அல்லாஹ்தான் கொடுக்கிறான். இந்தச் சமுதாயத்தின் நிலை (சத்திய மார்க்கத்தின்படி) செம்மையானதாகவே இருக்கும். ‘மறுமை நாள் வரும்வரை’ அல்லது ‘அல்லாஹ்வின் கட்டளை (உலக முடிவு நாள்) வரும்வரை’ ‘‘ என்று சொல்ல நான் கேட்டேன்.

இதை ஹுமைத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.43

அத்தியாயம் : 96
7313. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ لَمَّا نَزَلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم {قُلْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ} قَالَ "" أَعُوذُ بِوَجْهِكَ "". {أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ} قَالَ "" أَعُوذُ بِوَجْهِكَ "". فَلَمَّا نَزَلَتْ {أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ} قَالَ "" هَاتَانِ أَهْوَنُ أَوْ أَيْسَرُ "".
பாடம்: 11 “...அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் அளிக்கும் துன்பத்தை வேறு சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65ஆவது) இறைவசனம்
7313. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

“(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65 ஆவது) இறைவசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றபோது, “உங்களுக்கு மேலிருந்தோ” என்பதைக் கேட்டவுடன், “(இறைவா!) உன் சன்னிதானத்தில் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

‘உங்கள் கால்களின் கீழிருந்தோ’ என்பதைக் கேட்டவுடன் “உன் சன்னி தானத்தில் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னார்கள். “அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து, உங்களில் சிலர் வேறுசிலர் தரும் துன்பத்தைச் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” என்பதைக் கேட்டவுடன், “(பிரிப்பதும் துன்பத்தைச் சுவைக்கச் செய்வதுமான) இந்த இருவித வேதனைகளும் (முந்தைய வேதனைகளைவிட) ‘மிக எளிதானவை’ அல்லது ‘சுலபமானவை’ என்று சொன்னார் கள்.44

அத்தியாயம் : 96
7314. حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ أَعْرَابِيًّا، أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلاَمًا أَسْوَدَ، وَإِنِّي أَنْكَرْتُهُ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَلْ لَكَ مِنْ إِبِلٍ "". قَالَ نَعَمْ. قَالَ "" فَمَا أَلْوَانُهَا "". قَالَ حُمْرٌ. قَالَ "" هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ "". قَالَ إِنَّ فِيهَا لَوُرْقًا. قَالَ "" فَأَنَّى تُرَى ذَلِكَ جَاءَهَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ عِرْقٌ نَزَعَهَا. قَالَ "" وَلَعَلَّ هَذَا عِرْقٌ نَزَعَهُ "". وَلَمْ يُرَخِّصْ لَهُ فِي الاِنْتِفَاءِ مِنْهُ.
பாடம்: 12 விளங்க வேண்டிய ஒன்றை விளங் கிய ஒன்றோடு ஒப்பிடுவது கேள்வி கேட்டவர் விளங்கிக்கொள்வ தற்காக அந்த இரண்டின் நிலையையும் நபி (ஸல்) அவர்கள் விவரித்துள்ளார்கள்.45
7314. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, “(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்தாள்; அவனை நான் (என் மனத்தில்) ஏற்க மறுத்துவிட்டேன்” என்று சொன்னார். அதற்கு அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?” என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, “ஆம்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் “அவற்றின் நிறம் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “சிவப்பு” என்று சொன்னார். “அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர், “(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன” என்று பதிலளித்தார்.

“(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எவ்வாறு வந்ததென நீ கருதுகிறாய்?” என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, “ஆண் ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(உன்னுடைய) இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்” என்று கூறி, மகன் தன்னுடையவன் அல்லன் என்று மறுக்க அந்தக் கிராமவாசியை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.46


அத்தியாயம் : 96
7315. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةً، جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَمَاتَتْ قَبْلَ أَنْ تَحُجَّ أَفَأَحُجَّ عَنْهَا قَالَ "" نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَتَهُ "". قَالَتْ نَعَمْ. فَقَالَ "" فَاقْضُوا الَّذِي لَهُ، فَإِنَّ اللَّهَ أَحَقُّ بِالْوَفَاءِ "".
பாடம்: 12 விளங்க வேண்டிய ஒன்றை விளங் கிய ஒன்றோடு ஒப்பிடுவது கேள்வி கேட்டவர் விளங்கிக்கொள்வ தற்காக அந்த இரண்டின் நிலையையும் நபி (ஸல்) அவர்கள் விவரித்துள்ளார்கள்.45
7315. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “என் தாய் ஹஜ் செய்வதற்காக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குள் அவர் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம்; அவர் சார்பாக ஹஜ் செய்” (எனக் கூறிவிட்டு) “உன் தாய்மீது கடன் இருந்தால் நீ அதை (அவர் சார்பாக) நிறைவேற்றுவாய் அல்லவா?” என்று கேட்டார்கள்.

அந்தப் பெண், “ஆம் (நிறைவேற்றுவேன்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் (நேர்ச்சையின் மூலம்) அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டியதை நிறைவேற்றுங்கள். ஏனெனில், வாக்கு நிறைவேற்றப்பட அல்லாஹ்வே மிகவும் அருகதையுடையவன்” என்று சொன்னார்கள்.47

அத்தியாயம் : 96
7316. حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ، وَآخَرُ آتَاهُ اللَّهُ حِكْمَةً فَهْوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا "".
பாடம்: 13 அல்லாஹ் அருளியுள்ள சட்டங் களுக்கேற்ப நீதிபதிகள் முடி வெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கலீஃபாக்கள் ஆலோசனை செய்தது மற்றும் அறிஞர்களிடம் கேள்வி கேட்டது தொடர்பாகவும் வந்துள்ளவை அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் அருளியுள்ள (வேதத்தின்)படி தீர்ப்பளிக்காதவர்கள்தான் அநீதியாளர் கள். (5:45). கல்வி ஞானம் உடைய ஒருவர் தமது ஞானத்திற்கேற்ப தீர்ப்பளித்து, அதை (மக்களுக்கு)க் கற்பித்து, சுயமான கருத்தை வலிந்து திணிக்காதபோது நபி (ஸல்) அவர்களின் பாராட்டுக்குரியவராகிறார்.
7316. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளலாகாது. ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித் தல்; மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால் (மக்கள் பிரச்சினைகளுக்கு) தீர்ப்பு வழங்கிக் கொண்டும், (பிறருக்கு) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.48


அத்தியாயம் : 96