7286. حَدَّثَنِي إِسْمَاعِيلُ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ عُيَيْنَةُ بْنُ حِصْنِ بْنِ حُذَيْفَةَ بْنِ بَدْرٍ فَنَزَلَ عَلَى ابْنِ أَخِيهِ الْحُرِّ بْنِ قَيْسِ بْنِ حِصْنٍ، وَكَانَ مِنَ النَّفَرِ الَّذِينَ يُدْنِيهِمْ عُمَرُ، وَكَانَ الْقُرَّاءُ أَصْحَابَ مَجْلِسِ عُمَرَ وَمُشَاوَرَتِهِ كُهُولاً كَانُوا أَوْ شُبَّانًا فَقَالَ عُيَيْنَةُ لاِبْنِ أَخِيهِ يَا ابْنَ أَخِي هَلْ لَكَ وَجْهٌ عِنْدَ هَذَا الأَمِيرِ فَتَسْتَأْذِنَ لِي عَلَيْهِ قَالَ سَأَسْتَأْذِنُ لَكَ عَلَيْهِ. قَالَ ابْنُ عَبَّاسٍ فَاسْتَأْذَنَ لِعُيَيْنَةَ فَلَمَّا دَخَلَ قَالَ يَا ابْنَ الْخَطَّابِ وَاللَّهِ مَا تُعْطِينَا الْجَزْلَ، وَمَا تَحْكُمُ بَيْنَنَا بِالْعَدْلِ. فَغَضِبَ عُمَرُ حَتَّى هَمَّ بِأَنْ يَقَعَ بِهِ فَقَالَ الْحُرُّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم {خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ} وَإِنَّ هَذَا مِنَ الْجَاهِلِينَ. فَوَاللَّهِ مَا جَاوَزَهَا عُمَرُ حِينَ تَلاَهَا عَلَيْهِ، وَكَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللَّهِ.
பாடம்: 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவா!) எங்களை இறையச்ச முடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! (என்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்) (25:74) அதாவது நாங்கள் எங்களுக்குமுன் இருந்த (நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்த குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்கள் விஷயத்தில் நன்மை அல்லாததைக் கைவிட்டுவிட வேண்டும்.
7286. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா பின் பத்ர் (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் (ரலி) அவர்களிடம் தங்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் தம் அருகே (தமக்கு நெருக்கமாக) வைத்துக்கொள்பவர்களில் ஒருவராக ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்கள் இருந்தார்கள். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும் (குர் ஆனையும் ஹதீஸையும்) கற்றறிந்தவர் களே உமர் (ரலி) அவர்களின் அவை யோராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்.

ஆகவே, உயைனா (ரலி) அவர்கள் தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! இந்தத் தலைவர் (உமர்-ரலி) இடம் உனக்கு செல்வாக்கு உள்ளதா? அப்படி இருந்தால் நான் அவரிடம் செல்ல எனக்காக நீ அனுமதி பெற்றுத்தா” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல உங்களுக்காக நான் அனுமதி கோருகிறேன்” என்று சொன்னார். அவ்வாறே உயைனாவுக்காக ஹுர்ரு பின் கைஸ் அனுமதி கேட்டார்கள்.

உயைனா (ரலி) அவர்கள் உள்ளே சென்றவுடன், “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை; எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை” என்று சொன்னார். உடனே உமர் (ரலி) அவர்கள் கோபமடைந்து அவரை அடிக்க முனைந்தார்கள். அப்போது ஹுர்ரு அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக. நன்மை புரியுமாறு ஏவுவீராக. அறிவீனர்களைப் புறக்கணிப்பீராக’ (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறிவீனர்களில் ஒருவராவார்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் அதை மீறவில்லை. (பொதுவாகவே) உமர் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படுபவர்களாய் இருந்தார்கள்.15


அத்தியாயம் : 96
7287. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ ابْنَةِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَنَّهَا قَالَتْ أَتَيْتُ عَائِشَةَ حِينَ خَسَفَتِ الشَّمْسُ، وَالنَّاسُ قِيَامٌ وَهْىَ قَائِمَةٌ تُصَلِّي فَقُلْتُ مَا لِلنَّاسِ فَأَشَارَتْ بِيَدِهَا نَحْوَ السَّمَاءِ فَقَالَتْ سُبْحَانَ اللَّهِ. فَقُلْتُ آيَةٌ. قَالَتْ بِرَأْسِهَا أَنْ نَعَمْ. فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ "" مَا مِنْ شَىْءٍ لَمْ أَرَهُ إِلاَّ وَقَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي، حَتَّى الْجَنَّةَ وَالنَّارَ، وَأُوحِيَ إِلَىَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ قَرِيبًا مِنْ فِتْنَةِ الدَّجَّالِ، فَأَمَّا الْمُؤْمِنُ ـ أَوِ الْمُسْلِمُ لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ مُحَمَّدٌ جَاءَنَا بِالْبَيِّنَاتِ فَأَجَبْنَا وَآمَنَّا. فَيُقَالُ نَمْ صَالِحًا عَلِمْنَا أَنَّكَ مُوقِنٌ. وَأَمَّا الْمُنَافِقُ ـ أَوِ الْمُرْتَابُ لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ لاَ أَدْرِي سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ "".
பாடம்: 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவா!) எங்களை இறையச்ச முடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! (என்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்) (25:74) அதாவது நாங்கள் எங்களுக்குமுன் இருந்த (நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்த குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்கள் விஷயத்தில் நன்மை அல்லாததைக் கைவிட்டுவிட வேண்டும்.
7287. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று (கிரகணத் தொழுகை) தொழுதுகொண்டிருந்தார்கள். (அவர்களுடன்) ஆயிஷாவும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். நான் “மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் தமது கையால் வானத்தைக் காட்டி சைகை செய்து, “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)” என்று கூறினார்கள். நான் “ஏதேனும் அடையாளமா?” என்று கேட்டேன். “ஆம்” என்பதைப் போன்று ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தலையால் சைகை செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: நான் இதுவரை காணாத யாவற்றையும் -சொர்க்கம், நரகம் உள்பட அனைத்தையும்- இதோ இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். மேலும், நீங்கள் தஜ்ஜாலின் சோதனைக்கு நெருக்கமான அளவிற்கு மண்ணறைகளில் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு ‘வஹீ’ (இறைஅறிவிப்பு) அறிவிக்கப்பட்டது.

(மண்ணறையில் தம்மிடம் கேள்வி கேட்கும் வானவரிடம்), ஒரு ‘முஃமின்’ (இறைநம்பிக்கையாளர்) அல்லது ‘முஸ்லிம்’ ‘(இவர்கள்) முஹம்மத் (ஸல்) ஆவார்கள். அன்னார் தெளிவான சான்றுகளை எங்களிடம் கொண்டுவந்தார்கள். நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்று நம்பிக்கை கொண்டோம்’ என்று பதிலளிப்பார். அப்போது, ‘(தம் நற்செயல்களால் பயனடைந்த) நல்லவராக நீர் உறங்குவீராக! நீர் உறுதி(யான நம்பிக்கை) கொண்டிருந்தவர் என்று நாம் அறிவோம்’ என (அவரிடம்) சொல்லப்படும். ‘நயவஞ்சகர்’ அல்லது ‘சந்தேகம் கொண்டவர்’ (மண்ணறைக்கு வரும் வானவரின் கேள்விகளுக்கு), ‘மக்கள் எதையோ சொன்னார்கள்; அதையே நானும் சொன்னேன். (மற்றபடி வேறொன்றும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவார்.16


அத்தியாயம் : 96
7288. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" دَعُونِي مَا تَرَكْتُكُمْ، إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَىْءٍ فَاجْتَنِبُوهُ، وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ "".
பாடம்: 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவா!) எங்களை இறையச்ச முடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! (என்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்) (25:74) அதாவது நாங்கள் எங்களுக்குமுன் இருந்த (நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்த குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்கள் விஷயத்தில் நன்மை அல்லாததைக் கைவிட்டுவிட வேண்டும்.
7288. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான்.

ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிóருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 96
7289. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا سَعِيدٌ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ أَعْظَمَ الْمُسْلِمِينَ جُرْمًا مَنْ سَأَلَ عَنْ شَىْءٍ لَمْ يُحَرَّمْ، فَحُرِّمَ مِنْ أَجْلِ مَسْأَلَتِهِ "".
பாடம்: 3 அதிகமாகக் கேள்விகள் கேட்பதும் தனக்குத் தேவையில்லாததை வலிந்து செய்வதும் விரும்பத் தகாததாகும்.17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப் படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். (5:101)
7289. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டுவிடுமானால் அவர்தான் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவர் ஆவார்.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 96
7290. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَفَّانُ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، سَمِعْتُ أَبَا النَّضْرِ، يُحَدِّثُ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اتَّخَذَ حُجْرَةً فِي الْمَسْجِدِ مِنْ حَصِيرٍ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِيهَا لَيَالِيَ، حَتَّى اجْتَمَعَ إِلَيْهِ نَاسٌ، ثُمَّ فَقَدُوا صَوْتَهُ لَيْلَةً فَظَنُّوا أَنَّهُ قَدْ نَامَ، فَجَعَلَ بَعْضُهُمْ يَتَنَحْنَحُ لِيَخْرُجَ إِلَيْهِمْ فَقَالَ "" مَا زَالَ بِكُمُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، حَتَّى خَشِيتُ أَنْ يُكْتَبَ عَلَيْكُمْ، وَلَوْ كُتِبَ عَلَيْكُمْ مَا قُمْتُمْ بِهِ فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ أَفْضَلَ صَلاَةِ الْمَرْءِ فِي بَيْتِهِ، إِلاَّ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ "".
பாடம்: 3 அதிகமாகக் கேள்விகள் கேட்பதும் தனக்குத் தேவையில்லாததை வலிந்து செய்வதும் விரும்பத் தகாததாகும்.17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப் படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். (5:101)
7290. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பள்ளிவாசல் பாயினால் அறை அமைத்துக்கொண்டு அதில் சில இரவுகள் (இரவுத் தொழுகை) தொழுதார்கள். அதனால் மக்கள் அவர்கள் பின்னே திரண்டு (தொழத் தொடங்கி)விட்டார்கள். ஒருநாள் நபி (ஸல்) அவர்களது குரலை மக்களால் கேட்க முடியவில்லை. ஆகவே, நபி அவர்கள் (வீட்டினுள்) உறங்கிவிட்டார்கள் போலும் என்று மக்கள் நினைத்துக்கொண்டனர். எனவே, அவர்களில் சிலர் நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் வருவதற்காக கனைக்கலானார்கள்.

ஆகவே (மறுநாள்) நபி (ஸல்) அவர்கள், “(ஒவ்வொரு நாளும் என்னைப் பின்தொடர்ந்து இரவுத் தொழுகையைத் தொழுகின்ற) உங்கள் செயலை நான் கண்டுவந்தேன். உங்கள்மீது (ரமளானின் இரவுத் தொழுகையான) அது கடமை யாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு உங்களது அச்செயல் தொடர்ந்துகொண்டே இருந்தது. நீங்கள் தொழுத (இரவுத்) தொழுகை உங்கள்மீது கடமையாக ஆக்கப்பட்டுவிட்டால் உங்களால் அதை நிறைவேற்ற முடியாது. ஆகவே, மக்களே! நீங்கள் (இரவுத் தொழுகையை) உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில், ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தனது வீட்டில் தொழுவதுதான்; கடமையான தொழுகையைத் தவிர” என்று சொன்னார்கள்.18


அத்தியாயம் : 96
7291. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَشْيَاءَ كَرِهَهَا، فَلَمَّا أَكْثَرُوا عَلَيْهِ الْمَسْأَلَةَ غَضِبَ وَقَالَ "" سَلُونِي "". فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَبِي قَالَ "" أَبُوكَ حُذَافَةُ "". ثُمَّ قَامَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَبِي فَقَالَ "" أَبُوكَ سَالِمٌ مَوْلَى شَيْبَةَ "". فَلَمَّا رَأَى عُمَرُ مَا بِوَجْهِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْغَضَبِ قَالَ إِنَّا نَتُوبُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ.
பாடம்: 3 அதிகமாகக் கேள்விகள் கேட்பதும் தனக்குத் தேவையில்லாததை வலிந்து செய்வதும் விரும்பத் தகாததாகும்.17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப் படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். (5:101)
7291. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. இவ்வாறு மக்கள் அவர்களிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்டபோது நபி அவர்கள் கோபமடைந்து, “(நீங்கள் விரும்பிய எதைப் பற்றி வேண்டுமானாலும்) என்னிடம் கேளுங்கள்” என்று சொன்னார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஹுதாஃபாதான் உன் தந்தை” என்று சொன்னார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் “ஷைபாவால் விடுதலை செய்யப்பட்ட சாலிம்தான் உன் தந்தை” என்று சொன்னார்கள்.

(இக்கேள்விகளால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட கோபக் குறியை உமர் (ரலி) அவர்கள் கண்டபோது, “நாங்கள் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்” என்று கூறினார்கள்.19


அத்தியாயம் : 96
7292. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ وَرَّادٍ، كَاتِبِ الْمُغِيرَةِ قَالَ كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ اكْتُبْ إِلَىَّ مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَكَتَبَ إِلَيْهِ إِنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ "". وَكَتَبَ إِلَيْهِ إِنَّهُ كَانَ يَنْهَى عَنْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةِ السُّؤَالِ، وَإِضَاعَةِ الْمَالِ، وَكَانَ يَنْهَى عَنْ عُقُوقِ الأُمَّهَاتِ وَوَأْدِ الْبَنَاتِ وَمَنْعٍ وَهَاتِ.
பாடம்: 3 அதிகமாகக் கேள்விகள் கேட்பதும் தனக்குத் தேவையில்லாததை வலிந்து செய்வதும் விரும்பத் தகாததாகும்.17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப் படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். (5:101)
7292. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள், முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதை எனக்கு எழுதி அனுப்புங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் பின்வருமாறு முஆவியா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும், அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் எவருமில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; புகழனைத்தும் அவனுக்கே உரியன; அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை; நீ தடுப்பதைக் கொடுப்பவர் யாருமில்லை. எந்தச் செல்வரின் செல்வமும் உன்னிடம் பயன் (ஏதும்) அளிக்காது” என்று பிரார்த்தனை செய்துவந்தார்கள்.

மேலும், முஆவியா (ரலி) அவர்களுக்கு முஃகீரா (ரலி) அவர்கள் எழுதினார்கள்: நபி (ஸல்) அவர்கள், (இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றைப்) பேசுவது, அதிகமாகக் கேள்வி கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்குரியதைத் தனக்குத்) தருமாறு கோருவது ஆகியவற்றுக்குத் தடை விதித்துவந்தார்கள்.20


அத்தியாயம் : 96
7293. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ كُنَّا عِنْدَ عُمَرَ فَقَالَ نُهِينَا عَنِ التَّكَلُّفِ.
பாடம்: 3 அதிகமாகக் கேள்விகள் கேட்பதும் தனக்குத் தேவையில்லாததை வலிந்து செய்வதும் விரும்பத் தகாததாகும்.17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப் படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். (5:101)
7293. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது அவர்கள், “வீண் சிரமம் எடுத்துக்கொள்ளக் கூடாது என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது” என்று சொன்னார்கள்.21


அத்தியாயம் : 96
7294. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ،. وَحَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه. أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ حِينَ زَاغَتِ الشَّمْسُ فَصَلَّى الظُّهْرَ فَلَمَّا سَلَّمَ قَامَ عَلَى الْمِنْبَرِ فَذَكَرَ السَّاعَةَ، وَذَكَرَ أَنَّ بَيْنَ يَدَيْهَا أُمُورًا عِظَامًا ثُمَّ قَالَ "" مَنْ أَحَبَّ أَنْ يَسْأَلَ عَنْ شَىْءٍ فَلْيَسْأَلْ عَنْهُ، فَوَاللَّهِ لاَ تَسْأَلُونِي عَنْ شَىْءٍ إِلاَّ أَخْبَرْتُكُمْ بِهِ، مَا دُمْتُ فِي مَقَامِي هَذَا "". قَالَ أَنَسٌ فَأَكْثَرَ النَّاسُ الْبُكَاءَ، وَأَكْثَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَقُولَ "" سَلُونِي "". فَقَالَ أَنَسٌ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ أَيْنَ مَدْخَلِي يَا رَسُولَ اللَّهِ قَالَ "" النَّارُ "". فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ فَقَالَ مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ قَالَ "" أَبُوكَ حُذَافَةُ "". قَالَ ثُمَّ أَكْثَرَ أَنْ يَقُولَ "" سَلُونِي سَلُونِي "". فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم رَسُولاً. قَالَ فَسَكَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ قَالَ عُمَرُ ذَلِكَ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ عُرِضَتْ عَلَىَّ الْجَنَّةُ وَالنَّارُ آنِفًا فِي عُرْضِ هَذَا الْحَائِطِ وَأَنَا أُصَلِّي، فَلَمْ أَرَ كَالْيَوْمِ فِي الْخَيْرِ وَالشَّرِّ "".
பாடம்: 3 அதிகமாகக் கேள்விகள் கேட்பதும் தனக்குத் தேவையில்லாததை வலிந்து செய்வதும் விரும்பத் தகாததாகும்.17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப் படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். (5:101)
7294. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) சூரியன் (நடுவானிலிருந்து) சாய்ந்தபோது நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) வெளியே வந்து லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள், (தொழுகை முடிந்து) சலாம் கொடுத்தபிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதேறி உலக முடிவுநாள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அந்த நாளில் பயங்கரமான சம்பவங்கள் பல நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள்.

பிறகு, “எதைப் பற்றியேனும் எவரேனும் கேட்க விரும்பினால் (என்னிடம்) அவர் கேட்கலாம். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இடத்தில் நான் இருக்கும்வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்காமóருக்கமாட்டேன்” என்றும் சொன்னார்கள். அப்போது மக்களின் அழுகை அதிகமாயிற்று. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கேளுங்கள் என்னிடம்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் எங்கு செல்வேன் (சொர்க்கத்திற்கா? அல்லது நரகத்திற்கா)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘நரகத்திற்கு’ என்று பதிலளித்தார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, “என் தந்தை யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் தந்தை ஹுதாஃபா” என்று கூறிவிட்டு, “கேளுங்கள் என்னிடம்! கேளுங்கள் என்னிடம்” எனத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். (நபியவர்களின் இந்நிலையைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதர் எனவும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றோம்” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியபோது மௌனமாக இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக! சற்றுமுன் நான் தொழுதுகொண்டிருக்கையில் இந்தச் சுவரில் எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று (வேறெந்த நாளிலும்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை” என்று சொன்னார்கள்.22

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 96
7295. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي مُوسَى بْنُ أَنَسٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ قَالَ رَجُلٌ يَا نَبِيَّ اللَّهِ مَنْ أَبِي قَالَ "" أَبُوكَ فُلاَنٌ "". وَنَزَلَتْ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ} الآيَةَ.
பாடம்: 3 அதிகமாகக் கேள்விகள் கேட்பதும் தனக்குத் தேவையில்லாததை வலிந்து செய்வதும் விரும்பத் தகாததாகும்.17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப் படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். (5:101)
7295. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இன்னார்தான் உன் தந்தை” என்று சொன்னார்கள். அப்போது, “இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவி) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் (5:101ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.23


அத்தியாயம் : 96
7296. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَنْ يَبْرَحَ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يَقُولُوا هَذَا اللَّهُ خَالِقُ كُلِّ شَىْءٍ فَمَنْ خَلَقَ اللَّهَ "".
பாடம்: 3 அதிகமாகக் கேள்விகள் கேட்பதும் தனக்குத் தேவையில்லாததை வலிந்து செய்வதும் விரும்பத் தகாததாகும்.17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப் படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். (5:101)
7296. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக்கொண்டேயிருப்பார்கள். இறுதி யில், “அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ்; இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?” என்றுகூடக் கேட்பார்கள்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்


அத்தியாயம் : 96
7297. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَرْثٍ بِالْمَدِينَةِ، وَهْوَ يَتَوَكَّأُ عَلَى عَسِيبٍ، فَمَرَّ بِنَفَرٍ مِنَ الْيَهُودِ فَقَالَ بَعْضُهُمْ سَلُوهُ عَنِ الرُّوحِ. وَقَالَ بَعْضُهُمْ لاَ تَسْأَلُوهُ لاَ يُسْمِعْكُمْ مَا تَكْرَهُونَ. فَقَامُوا إِلَيْهِ فَقَالُوا يَا أَبَا الْقَاسِمِ حَدِّثْنَا عَنِ الرُّوحِ. فَقَامَ سَاعَةً يَنْظُرُ فَعَرَفْتُ أَنَّهُ يُوحَى إِلَيْهِ، فَتَأَخَّرْتُ عَنْهُ حَتَّى صَعِدَ الْوَحْىُ، ثُمَّ قَالَ {وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي}.
பாடம்: 3 அதிகமாகக் கேள்விகள் கேட்பதும் தனக்குத் தேவையில்லாததை வலிந்து செய்வதும் விரும்பத் தகாததாகும்.17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப் படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். (5:101)
7297. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனாவில் நபி (ஸல்) அவர் களுடன் ஒரு வேளாண் பூமியில் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் பேரீச்சமட்டை ஒன்றின் மீது (கையை) ஊன்றியபடி நின்றிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் யூதர்கள் சிலரைக் கடந்துசென்றார்கள். அவர்களில் ஒருவர், “இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்” என்று சொன்னார். மற்றொருவர், “நீங்கள் அவரிடம் கேட்காதீர்கள்; ஏனெனில் நீங்கள் விரும்பாத பதிலை அவர் உங்களுக்குத் சொல்லிவிடக் கூடாது” என்று சொன்னார். பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, “அபுல் காசிமே! உயிரைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் எழுந்து நின்று கூர்ந்து பார்த்தார்கள்.

உடனே நான், அவர்களுக்கு ‘வஹீ’ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப்படுகின்றது என்று புரிந்துகொண்டேன். ஆகவே, ‘வஹீ’ வருவதற்கு வசதியாக நான் அவர்களைவிட்டு சற்றுப் பின்தள்ளி நின்றேன். பிறகு, நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) “நபியே! உயிரைப் பற்றி உம்மிடம் அவர்கள் வினவுகின்றார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது என்று கூறுவீராக!” எனும் (17:85ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.24

அத்தியாயம் : 96
7298. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ اتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ ذَهَبٍ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ مِنْ ذَهَبٍ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي اتَّخَذْتُ خَاتَمًا مِنْ ذَهَبٍ "". فَنَبَذَهُ وَقَالَ "" إِنِّي لَنْ أَلْبَسَهُ أَبَدًا "" فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ.
பாடம்: 4 நபி (ஸல்) அவர்களின் (சொற்களை மட்டுமன்றி) செயல்களை(யும்) பின்பற்றுதல்
7298. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். மக்களும் பொன் மோதிரங்களைச் செய்து (அணிந்து)கொண்டார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள், “நான் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டேன். (அப்படித்தானே!)” என்று கூறிவிட்டு, அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள். மேலும், “நான் அதை ஒருபோதும் அணியமாட்டேன்” என்றும் சொன்னார்கள். உடனே, மக்கள் அனைவரும் தங்களின் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டார்கள்.25

அத்தியாயம் : 96
7299. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تُوَاصِلُوا "". قَالُوا إِنَّكَ تُوَاصِلُ. قَالَ "" إِنِّي لَسْتُ مِثْلَكُمْ، إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي "". فَلَمْ يَنْتَهُوا عَنِ الْوِصَالِ ـ قَالَ ـ فَوَاصَلَ بِهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَيْنِ أَوْ لَيْلَتَيْنِ، ثُمَّ رَأَوُا الْهِلاَلَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ تَأَخَّرَ الْهِلاَلُ لَزِدْتُكُمْ "". كَالْمُنَكِّلِ لَهُمْ.
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7299. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “தொடர்நோன்பு நோற்காதீர்கள்” என்று கூறினார்கள். மக்கள், “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கின்ற நிலையில் நான் உள்ளேன்” என்று பதிலளித்தார்கள். இருந்தும், மக்கள் தொடர்நோன்பைக் கைவிடவில்லை. ஆகவே, அவர்களுடன் சேர்ந்து நபி (ஸல்) அவர்கள் ‘இரண்டு நாட்கள்’ அல்லது ‘இரண்டு இரவுகள்’ தொடர்நோன்பு நோற்றார்கள்.

பிறகு மக்கள் பிறையைப் பார்த்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘பிறை இன்னும் தள்ளிப் போயிருந்தால், உங்களை இன்னும் (தொடர்நோன்பை) அதிகமாக்கச் செய்திருப்பேன்” என்று மக்களைக் கண்டிப்பதைப் போன்று சொன்னார்கள்.27


அத்தியாயம் : 96
7300. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ التَّيْمِيُّ، حَدَّثَنِي أَبِي قَالَ، خَطَبَنَا عَلِيٌّ ـ رضى الله عنه ـ عَلَى مِنْبَرٍ مِنْ آجُرٍّ، وَعَلَيْهِ سَيْفٌ فِيهِ صَحِيفَةٌ مُعَلَّقَةٌ فَقَالَ وَاللَّهِ مَا عِنْدَنَا مِنْ كِتَابٍ يُقْرَأُ إِلاَّ كِتَابُ اللَّهِ وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ. فَنَشَرَهَا فَإِذَا فِيهَا أَسْنَانُ الإِبِلِ وَإِذَا فِيهَا "" الْمَدِينَةُ حَرَمٌ مِنْ عَيْرٍ إِلَى كَذَا، فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلاً "". وَإِذَا فِيهِ "" ذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ يَسْعَى بِهَا أَدْنَاهُمْ، فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلاً "". وَإِذَا فِيهَا "" مَنْ وَالَى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلاً "".
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7300. யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் சுட்ட செங்கற்களாலான ஒரு சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று எங்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் வாள் ஒன்றை வைத்திருந்தார்கள். அதில் ஓர் ஏடு தொங்கவிடப்பட்டிருந்தது. அவர்கள் (தமது உரையில்), “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தையும் இந்த ஏட்டையும் தவிர ஓதப்படுகின்ற நூல் எதுவும் எங்களிடம் இல்லை” என்று கூறிவிட்டு, அதை விரித்துக் காட்டினார்கள். அதில் (உயிரீட்டுத் தொகையாகத் தரப்பட வேண்டிய) ஒட்டகங்களின் வயது விவரங்கள் இருந்தன.

மேலும், அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: மதீனா நகரம் ‘அய்ர்’ எனும் மலையிலிருந்து இன்ன (ஸவ்ர்) இடம்வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துகின்றானோ அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான வழிபாட்டையும் கூடுதலான வழிபாட்டையும் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான்.

முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும் (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்). அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் அளித்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன்மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவருடைய சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதையுமே அல்லாஹ் ஏற்க மாட்டான்.

தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக்கொள்ளும் அடிமையின் மீது அல்லாஹ்வின் சாபமும் மற்றும் மக்கள் அனைவருடைய சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்.28


அத்தியாயம் : 96
7301. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَ قَالَتْ عَائِشَةُ ـ رَضِيَ الله عنها ـ صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَيْئًا تَرَخَّصَ وَتَنَزَّهَ عَنْهُ قَوْمٌ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَحَمِدَ اللَّهَ ثُمَّ قَالَ "" مَا بَالُ أَقْوَامٍ يَتَنَزَّهُونَ عَنِ الشَّىْءِ أَصْنَعُهُ، فَوَاللَّهِ إِنِّي أَعْلَمُهُمْ بِاللَّهِ، وَأَشَدُّهُمْ لَهُ خَشْيَةً "".
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7301. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதியளித்தார்கள். அப்போது சிலர் அதைச் செய்வதிóருந்து விலகிக்கொண்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் (உரையாற்ற எழுந்து) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “சிலருக்கு என்னாயிற்று? நான் செய்கின்ற ஒன்றைச் செய்வதிóருந்து விலகிக்கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களைவிட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்” என்று கூறினார்கள்.29


அத்தியாயம் : 96
7302. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ نَافِعِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ كَادَ الْخَيِّرَانِ أَنْ يَهْلِكَا أَبُو بَكْرٍ، وَعُمَرُ، لَمَّا قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَفْدُ بَنِي تَمِيمٍ، أَشَارَ أَحَدُهُمَا بِالأَقْرَعِ بْنِ حَابِسٍ الْحَنْظَلِيِّ أَخِي بَنِي مُجَاشِعٍ، وَأَشَارَ الآخَرُ بِغَيْرِهِ، فَقَالَ أَبُو بَكْرٍ لِعُمَرَ إِنَّمَا أَرَدْتَ خِلاَفِي. فَقَالَ عُمَرُ مَا أَرَدْتُ خِلاَفَكَ. فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَزَلَتْ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَرْفَعُوا أَصْوَاتَكُمْ} إِلَى قَوْلِهِ {عَظِيمٌ}. قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ قَالَ ابْنُ الزُّبَيْرِ فَكَانَ عُمَرُ بَعْدُ ـ وَلَمْ يَذْكُرْ ذَلِكَ عَنْ أَبِيهِ يَعْنِي أَبَا بَكْرٍ ـ إِذَا حَدَّثَ النَّبِيَّ صلى الله عليه وسلم بِحَدِيثٍ حَدَّثَهُ كَأَخِي السِّرَارِ، لَمْ يُسْمِعْهُ حَتَّى يَسْتَفْهِمَهُ.
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7302. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். (ஹிஜ்ரீ ஒன்பதாம் ஆண்டு) பனூ தமீம் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்குமாறு கோரியவர்களாக) வந்தனர். அப்போது (அபூபக்ர், உமர் ஆகிய) அந்த இருவரில் ஒருவர், பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ அல்ஹன்ழலீ (ரலி) அவர்களை (தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்; மற்றொருவர், இன்னொருவரை (தலைவராக்கும்படி) சைகை செய்தார்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எனக்கு மாறு செய்வதையே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று சொல்ல, அதற்கு உமர் (ரலி) அவர்கள், “தங்களுக்கு மாறு செய்வது என் நோக்கமன்று” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போதுதான், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்குமேல் உயர்த்தாதீர்கள்” எனும் (49:2ஆவது) வசனம் முழுமையாக அருளப்பெற்றது.

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் எதைப் பேசினாலும் இரகசியம் பேசுபவரைப் போன்று (மெதுவாகத்)தான் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்துகொள்வார்கள்.

இந்த ஹதீஸை தம் பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து கேட்டு அறிவிப்பதாக இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் குறிப்பிடவில்லை.30


அத்தியாயம் : 96
7303. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي مَرَضِهِ "" مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ "". قَالَتْ عَائِشَةُ قُلْتُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ. فَقَالَ "" مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ "". فَقَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ بِالنَّاسِ، فَفَعَلَتْ حَفْصَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ "". قَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ مَا كُنْتُ لأُصِيبَ مِنْكِ خَيْرًا.
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7303. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) நோய்வாய்ப் பட்டிருந்தபோது, “மக்களுக்குத் தொழு விக்குமாறு அபூபக்ரிடம் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான், “நீங்கள் (தொழுகைக்காக) நிற்கும் இடத்தில் (என் தந்தை) அபூபக்ர் நிற்பார்களானால், (மனம் நெகிழ்ந்து) அழுது, அவர்கள் ஓதுவது மக்களுக்குக் கேட்காமல் போய்விடும்; ஆகவே, உமர் (ரலி) அவர்களிடம் கூறுங்கள்; அவர் தொழுவிக்கட்டும்” என்று சொன்னேன்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ரிடம் சொல்லுங்கள்; மக்களுக்கு அவர் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் “உங்களது இடத்தில் அபூபக்ர் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுது, அவர்கள் ஓதுவது மக்களுக்குக் கேட்காமல் போய்விடும். ஆகவே, மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று சொல்” என்றேன். ஹஃப்ஸாவும் அவ்வாறே செய்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள்தான் யூசுஃப் (அலை) அவர்களுடைய தோழிகள் (போன்றவர்கள்). ஆகவே, மக்களுக்குத் தொழுவிக்குமாறு அபூபக்ரிடமே சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம், “உன்னால் நான் நன்மை எதையும் கண்டதில்லை” என்று கூறினார்.31


அத்தியாயம் : 96
7304. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ جَاءَ عُوَيْمِرٌ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ فَقَالَ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً فَيَقْتُلُهُ، أَتَقْتُلُونَهُ بِهِ سَلْ لِي يَا عَاصِمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَكَرِهَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَسَائِلَ وَعَابَ، فَرَجَعَ عَاصِمٌ فَأَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَرِهَ الْمَسَائِلَ فَقَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لآتِيَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَجَاءَ وَقَدْ أَنْزَلَ اللَّهُ تَعَالَى الْقُرْآنَ خَلْفَ عَاصِمٍ فَقَالَ لَهُ "" قَدْ أَنْزَلَ اللَّهُ فِيكُمْ قُرْآنًا "". فَدَعَا بِهِمَا فَتَقَدَّمَا فَتَلاَعَنَا، ثُمَّ قَالَ عُوَيْمِرٌ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ، إِنْ أَمْسَكْتُهَا. فَفَارَقَهَا وَلَمْ يَأْمُرْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِفِرَاقِهَا، فَجَرَتِ السُّنَّةُ فِي الْمُتَلاَعِنَيْنِ. وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" انْظُرُوهَا فَإِنْ جَاءَتْ بِهِ أَحْمَرَ قَصِيرًا مِثْلَ وَحَرَةٍ فَلاَ أُرَاهُ إِلاَّ قَدْ كَذَبَ، وَإِنْ جَاءَتْ بِهِ أَسْحَمَ أَعْيَنَ ذَا أَلْيَتَيْنِ فَلاَ أَحْسِبُ إِلاَّ قَدْ صَدَقَ عَلَيْهَا "". فَجَاءَتْ بِهِ عَلَى الأَمْرِ الْمَكْرُوهِ.
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7304. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அஜ்லான்’ குலத்தைச் சேர்ந்த உவைமிர் (ரலி) அவர்கள், ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்களிடம் வந்து, “ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் அவனை இவன் கொன்றுவிடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? எனக்காக (இதைப் பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேளுங்கள், ஆஸிமே!” என்றார். அவ்வாறே ஆஸிம் (ரலி) அவர்களும் நபியவர்களிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அநாகரிகமாகக் கருதினார்கள்.

ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் திரும்பிவந்து உவைமிர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை” என்று தெரிவித்தார்கள். அதற்கு உவைமிர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபி (ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றி நேரடியாகக் கேட்பதற்காகச்) செல்வேன்” என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ஆஸிம் (ரலி) அவர்கள் வந்துவிட்டுச் சென்றபின் உயர்ந்தோன் அல்லாஹ் குர்ஆன் வசனத்தை அருளியிருந்தான்.

ஆகவே, (தம்மிடம் வந்த) உவைமிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “உங்கள் விஷயத்தில் அல்லாஹ் குர்ஆன் (வசனத்தை) அருளிவிட்டான்” என்று கூறி, தம்பதியர் இருவரையும் அழைத்தார்கள். அவர்கள் இருவரும் வந்து பரஸ்பரம் சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார்கள். பிறகு உவைமிர் (ரலி) அவர்கள், “(இதற்குப் பிறகும்) அவளை நான் என்னுடனேயே வைத்துக்கொண்டிருந்தால் நான் பொய் சொன்னதாக ஆகிவிடும், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு (மணவிலக்குச் செய்து) மனைவியிடமிருந்து (தாமாகவே) பிரிந்துகொண்டார்கள்.

அவ்வாறு அவளைப் பிரிந்துவிடுமாறு அவருக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. (அவராகவே அந்த முடிவுக்கு வந்தார்.) பிறகு (இந்தத் தம்பதியரின் சம்பவமே) சாபஅழைப்புப் பிரமாணம் செய்வோருக்கான வழிமுறையாகத் தொடர்ந்தது.

மேலும், நபி (ஸல்) அவர்கள், “இவளைக் கண்காணித்துவாருங்கள்; இவள் அரணையைப் போன்று குட்டையான சிவப்புநிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால் கணவன் சொன்னது பொய் என்றே நான் கருதுவேன். இவள் கறுப்பு நிறத்தில் விசாலமான கண்கள் கொண்ட, பெரிய பிட்டங்களை உடைய குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள்மீது உவைமிர் சொன்னது உண்மை என்றே நான் கருதுவேன்” என்று சொன்னார்கள். பிறகு விரும்பத் தகாத அந்தத் தோற்றத்திலேயே அவள் குழந்தை பெற்றெடுத்தாள்.32


அத்தியாயம் : 96
7305. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَوْسٍ النَّصْرِيُّ، وَكَانَ، مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ذَكَرَ لِي ذِكْرًا مِنْ ذَلِكَ فَدَخَلْتُ عَلَى مَالِكٍ فَسَأَلْتُهُ فَقَالَ انْطَلَقْتُ حَتَّى أَدْخُلَ عَلَى عُمَرَ أَتَاهُ حَاجِبُهُ يَرْفَا فَقَالَ هَلْ لَكَ فِي عُثْمَانَ وَعَبْدِ الرَّحْمَنِ وَالزُّبَيْرِ وَسَعْدٍ يَسْتَأْذِنُونَ. قَالَ نَعَمْ. فَدَخَلُوا فَسَلَّمُوا وَجَلَسُوا. فَقَالَ هَلْ لَكَ فِي عَلِيٍّ وَعَبَّاسٍ. فَأَذِنَ لَهُمَا. قَالَ الْعَبَّاسُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اقْضِ بَيْنِي وَبَيْنَ الظَّالِمِ. اسْتَبَّا. فَقَالَ الرَّهْطُ عُثْمَانُ وَأَصْحَابُهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اقْضِ بَيْنَهُمَا وَأَرِحْ أَحَدَهُمَا مِنَ الآخَرِ. فَقَالَ اتَّئِدُوا أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ، هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ "". يُرِيدُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَفْسَهُ. قَالَ الرَّهْطُ قَدْ قَالَ ذَلِكَ. فَأَقْبَلَ عُمَرُ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ فَقَالَ أَنْشُدُكُمَا بِاللَّهِ هَلْ تَعْلَمَانِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ذَلِكَ. قَالاَ نَعَمْ. قَالَ عُمَرُ فَإِنِّي مُحَدِّثُكُمْ عَنْ هَذَا الأَمْرِ، إِنَّ اللَّهَ كَانَ خَصَّ رَسُولَهُ صلى الله عليه وسلم فِي هَذَا الْمَالِ بِشَىْءٍ لَمْ يُعْطِهِ أَحَدًا غَيْرَهُ، فَإِنَّ اللَّهَ يَقُولُ {مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْهُمْ فَمَا أَوْجَفْتُمْ} الآيَةَ، فَكَانَتْ هَذِهِ خَالِصَةً لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ وَاللَّهِ مَا احْتَازَهَا دُونَكُمْ وَلاَ اسْتَأْثَرَ بِهَا عَلَيْكُمْ، وَقَدْ أَعْطَاكُمُوهَا وَبَثَّهَا فِيكُمْ، حَتَّى بَقِيَ مِنْهَا هَذَا الْمَالُ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِمْ مِنْ هَذَا الْمَالِ، ثُمَّ يَأْخُذُ مَا بَقِيَ فَيَجْعَلُهُ مَجْعَلَ مَالِ اللَّهِ، فَعَمِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِذَلِكَ حَيَاتَهُ، أَنْشُدُكُمْ بِاللَّهِ هَلْ تَعْلَمُونَ ذَلِكَ فَقَالُوا نَعَمْ. ثُمَّ قَالَ لِعَلِيٍّ وَعَبَّاسٍ أَنْشُدُكُمَا اللَّهَ هَلْ تَعْلَمَانِ ذَلِكَ قَالاَ نَعَمْ. ثُمَّ تَوَفَّى اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو بَكْرٍ أَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَقَبَضَهَا أَبُو بَكْرٍ فَعَمِلَ فِيهَا بِمَا عَمِلَ فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَأَنْتُمَا حِينَئِذٍ ـ وَأَقْبَلَ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ ـ تَزْعُمَانِ أَنَّ أَبَا بَكْرٍ فِيهَا كَذَا، وَاللَّهُ يَعْلَمُ أَنَّهُ فِيهَا صَادِقٌ بَارٌّ رَاشِدٌ تَابِعٌ لِلْحَقِّ، ثُمَّ تَوَفَّى اللَّهُ أَبَا بَكْرٍ فَقُلْتُ أَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ. فَقَبَضْتُهَا سَنَتَيْنِ أَعْمَلُ فِيهَا بِمَا عَمِلَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ، ثُمَّ جِئْتُمَانِي وَكَلِمَتُكُمَا عَلَى كَلِمَةٍ وَاحِدَةٍ وَأَمْرُكُمَا جَمِيعٌ، جِئْتَنِي تَسْأَلُنِي نَصِيبَكَ مِنِ ابْنِ أَخِيكَ، وَأَتَانِي هَذَا يَسْأَلُنِي نَصِيبَ امْرَأَتِهِ مِنْ أَبِيهَا فَقُلْتُ إِنْ شِئْتُمَا دَفَعْتُهَا إِلَيْكُمَا، عَلَى أَنَّ عَلَيْكُمَا عَهْدَ اللَّهِ وَمِيثَاقَهُ تَعْمَلاَنِ فِيهَا بِمَا عَمِلَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَبِمَا عَمِلَ فِيهَا أَبُو بَكْرٍ وَبِمَا عَمِلْتُ فِيهَا مُنْذُ وَلِيتُهَا، وَإِلاَّ فَلاَ تُكَلِّمَانِي فِيهَا. فَقُلْتُمَا ادْفَعْهَا إِلَيْنَا بِذَلِكَ. فَدَفَعْتُهَا إِلَيْكُمَا بِذَلِكَ، أَنْشُدُكُمْ بِاللَّهِ هَلْ دَفَعْتُهَا إِلَيْهِمَا بِذَلِكَ قَالَ الرَّهْطُ نَعَمْ. فَأَقْبَلَ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ فَقَالَ أَنْشُدُكُمَا بِاللَّهِ هَلْ دَفَعْتُهَا إِلَيْكُمَا بِذَلِكَ. قَالاَ نَعَمْ. قَالَ أَفَتَلْتَمِسَانِ مِنِّي قَضَاءً غَيْرَ ذَلِكَ فَوَالَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ لاَ أَقْضِي فِيهَا قَضَاءً غَيْرَ ذَلِكَ حَتَّى تَقُومَ السَّاعَةُ، فَإِنْ عَجَزْتُمَا عَنْهَا فَادْفَعَاهَا إِلَىَّ، فَأَنَا أَكْفِيكُمَاهَا.
பாடம்: 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறுபாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக் கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவ னைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7305. முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மாலிக் பின் அவ்ஸ் அந்நளி (ரஹ்) அவர்களிடம் சென்று (ஃபதக் சம்பவம் பற்றிக்) கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்களின் மெய்க் காவலர் ‘யர்ஃபஉ’ என்பவர் அவர்களிடம் வந்து, “உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல் அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க) அனுமதி கோருகின்றனர்; தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள், “ஆம் (வரச் சொல்லுங்கள்)” என்று கூறினார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து முகமன் (சலாம்) கூறி அமர்ந்தனர்.

அப்போது (மீண்டும்) யர்ஃபஉ (வந்து), “அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் சந்திப்பதில் தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். அவர்கள் இருவருக்கும் அனுமதி அளித்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் (என்னுடைய) இந்த அக்கிரமக்கார(ப் பங்காள)ருக்கும் இடையே (இந்தச் சொத்து தொடர்பாக) தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அவர்கள் இருவரும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்திக்கொண்டனர்.

அப்போது (அங்கிருந்த) உஸ்மான் (ரலி) அவர்களும் அவர்தம் தோழர்களும் கொண்ட அந்தக் குழுவினர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இவர்களுக்கிடையே தீர்ப்பளித்து ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங்கள்” என்று கூறினர்.

உமர் (ரலி) அவர்கள், “சற்று பொறுங்கள். வானமும் பூமியும் எந்த அல்லாஹ்வின் கட்டளையால் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கின்றேன்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே’ என்று தம்மைக் குறித்துச் சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், “(ஆம்) நபியவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்” என்று பதிலளித்தனர்.

உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவ்விருவரும், “ஆம் (அவ்வாறு சொல்óயிருக்கிறார்கள்)” என்று பதிலளித்தனர்.

உமர் ரலி அவர்கள், “அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன்: “(போரிடாமல் கிடைத்த) இந்த (‘ஃபய்உ’)ச் செல்வத்திலிருந்து சிறிதளவைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கினான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை வழங்கவில்லை” என்று கூறிவிட்டு, “அல்லாஹ் எந்தச் செல்வத்தை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததன்று” எனும் (59:6ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

தொடர்ந்து “எனவே, இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை; அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. அதை உங்களுக்கே கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே எஞ்சியது. நபி (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை அவர்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு எஞ்சியதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள்.

இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள். (இவ்வளவும் சொல்லிவிட்டு,) “அல்லாஹ்வின் பொருட்டால் உங்களைக் கேட்கின் றேன்: நீங்கள் இதை அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்”ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தார்கள். பிறகு, அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும், “உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நீங்கள் இதை அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும், “ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தனர்.

(தொடர்ந்து,) “பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக்கொண்டான். அப்போது (‘கலீஃபா’ பொறுப்பேற்ற) அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்” என்று கூறி அ(ந்தச் செல்வத்)தைத் தமது கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் -அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கிச் சொல்கிறார்கள்- “அபூபக்ர் அந்தச் செல்வத்தில் இன்னின்னவாறு செயல்படுகிறார்” என்று கூறினீர்கள்.

அல்லாஹ் அறிவான்: அபூபக்ர் (ரலி) அவர்கள் அது விஷயத்தில் உண்மையே சொன்னார்கள்; நல்லதே செய்தார்கள்; நேரான முறையில் நடந்து சத்தியத்தையே பின்பற்றினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது (கலீஃபா பொறுப்பேற்ற) நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்” என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தை இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டேன். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்துகொண்ட முறைப்படி நானும் செயல்பட்டுவந்தேன்.

பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் வந்தீர்கள்; உங்கள் இருவரின் பேச்சும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. நீங்கள் இருவரும் ஒன்றுபட்டே இருந்தீர் கள். (அப்பாஸே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரரின் புதல்வர் (அதாவது நபி (ஸல்) அவர்கள்) இடமிருந்து உங்களுக் குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள். இவரும் (அலீயும்) தம் துணைவியாருக்கு அவருடைய தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கோரியபடி என்னிடம் வந்தார்.

அதற்கு நான் (உங்கள் இருவரிடமும்,) ‘நீங்கள் இருவரும் விரும்பினால், அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்ர் (ரலி) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் அதைக் கொடுத்துவிடுகிறேன்; அவ்வாறில்லையாயின், இது விஷயத்தில் நீங்கள் இருவரும் என்னிடம் பேசவேண்டாம்’ என்று நான் சொன்னேன்.

அதற்கு நீங்கள் இருவரும், ‘எங்களிடம் அதைக் கொடுத்துவிடுங்கள்; அந்த நிபந்தனைகள்படியே (நாங்கள் செயல்படுகிறோம்)’ என்று சொன்னீர்கள். அதனடிப்படையிலேயே உங்கள் இருவரிடமும் நான் அதைக் கொடுத்தேன்” என்று சொன்னார்கள்.

பிறகு (குழுவினரை நோக்கி) “நான் உங்களிடம் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நான் இவ்விருவரிடமும் அந்த நிபந்தனையின்படி அந்தச் சொத்தை கொடுத்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். அந்தக் குழுவினர், “ஆம்; (அவ்வாறு கொடுக்கவே செய்தீர்கள்)” என்று கூறினர். பிறகு அலீ (ரலி) மற்றும் அப்பாஸ் (ரலி) ஆகியோரை நோக்கி, “நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நான் உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின் படியே கொடுத்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். இருவரும் ‘ஆம்’ என்றார் கள்.

உமர் (ரலி) அவர்கள், “இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிட மிருந்து கோருகின்றீர்களா? எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன்மீது சத்தியமாக! நான் மறுமை வரும்வரை இந்த விஷயத் தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் அளிக்கமாட்டேன்! உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். உங்களுக்குப் பதிலாக நானே அதைப் பராமரித்துக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள்.33

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 96