7208. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ بَايَعْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم تَحْتَ الشَّجَرَةِ فَقَالَ لِي "" يَا سَلَمَةُ أَلاَ تُبَايِعُ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ بَايَعْتُ فِي الأَوَّلِ. قَالَ "" وَفِي الثَّانِي "".
பாடம்: 44
(ஒரே சமயத்தில்) இரண்டு முறை விசுவாசப் பிரமாணம் செய்வது
7208. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அந்த மரத்தின்கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தோம். அப்போது அவர்கள் என்னிடம், “சலமாவே! நீங்கள் உறுதிமொழி அளிக்கவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! முதல் முறையிலேயே நான் உறுதிமொழி அளித்துவிட்டேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “இரண்டாவது முறையும் உறுதிமொழி அளியுங்கள்” என்று சொன்னார்கள்.71
அத்தியாயம் : 93

7209. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ، فَأَصَابَهُ وَعْكٌ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي. فَأَبَى، ثُمَّ جَاءَهُ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي. فَأَبَى، فَخَرَجَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْمَدِينَةُ كَالْكِيرِ، تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طِيبُهَا "".
பாடம்: 45
கிராமவாசிகளின் விசுவாசப் பிரமாணம் (பைஅத்)
7209. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அந்தக் கிராமவாசி, “என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள். பிறகு மீண்டும் வந்து, “எனது விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்” என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, அந்த மனிதர் (மதீனாவிலிருந்து) வெளியேறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதீனா, கொல்லனின் உலை போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிட்டு நல்லவர்களைத் தூய்மைப்படுத்தும்” என்று சொன்னார்கள்.72

7210. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ ـ هُوَ ابْنُ أَبِي أَيُّوبَ ـ قَالَ حَدَّثَنِي أَبُو عَقِيلٍ، زُهْرَةُ بْنُ مَعْبَدٍ عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ هِشَامٍ، وَكَانَ، قَدْ أَدْرَكَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَذَهَبَتْ بِهِ أُمُّهُ زَيْنَبُ ابْنَةُ حُمَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ بَايِعْهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هُوَ صَغِيرٌ "" فَمَسَحَ رَأْسَهُ وَدَعَا لَهُ، وَكَانَ يُضَحِّي بِالشَّاةِ الْوَاحِدَةِ عَنْ جَمِيعِ أَهْلِهِ.
பாடம்: 46
சிறுவர்களின் விசுவாசப் பிரமா ணம் (பைஅத்)
7210. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயார் ஸைனப் பின்த் ஹுமைத் (ரலி) அவர்கள் (நான் சிறுவனாயிருந்த போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னைக் கொண்டு சென்றார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! இவனிடம் உறுதிப் பிரமாணம் வாங்குங்கள்” என்று கூற, நபி (ஸல்) அவர்கள், “இவன் சிறுவனாயிற்றே” என்று சொல்லிவிட்டு, (அன்போடு) என் தலையை வருடிக்கொடுத்து எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.73
(அறிவிப்பாளர் ஸுஹ்ரா பின் மஅபத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
என் பாட்டனார் அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் ஒரேயொரு ஆட்டை அறுத்துத் தம் குடும்பத்தார் அனைவருக்காகவும் குர்பானி கொடுத்துவந்தார்கள்.

7211. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،. أَنَّ أَعْرَابِيًّا، بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ فَأَصَابَ الأَعْرَابِيَّ وَعْكٌ بِالْمَدِينَةِ، فَأَتَى الأَعْرَابِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ جَاءَهُ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي فَأَبَى، ثُمَّ جَاءَهُ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي فَأَبَى فَخَرَجَ الأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّمَا الْمَدِينَةُ كَالْكِيرِ تَنْفِي خَبَثَهَا وَيَنْصَعُ طِيبُهَا "".
பாடம்: 47
விசுவாசப் பிரமாணம் (பைஅத்) அளித்துவிட்டுப் பின்னர் அதை விலக்கிக்கொள்வது
7211. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்கு மதீனாவில் காய்ச்சல் கண்டது. உடனே அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் விசுவாசப் பிரமாணத் திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள்.
பிறகு அவர் (மீண்டும்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் பிரமாணத் திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு (மூன்றாம் முறையாக) அவர் நபியவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்” என்று சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
ஆகவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிருந்து) வெளியேறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதீனா, கொல்லனின் உலை போன்றதே யாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிட்டு நல்லவர்களைத் தூய்மைப்படுத்துகிறது” என்று சொன்னார்கள்.74

7212. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِالطَّرِيقِ يَمْنَعُ مِنْهُ ابْنَ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلاَّ لِدُنْيَاهُ، إِنْ أَعْطَاهُ مَا يُرِيدُ وَفَى لَهُ، وَإِلاَّ لَمْ يَفِ لَهُ، وَرَجُلٌ يُبَايِعُ رَجُلاً بِسِلْعَةٍ بَعْدَ الْعَصْرِ فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أُعْطِيَ بِهَا كَذَا وَكَذَا فَصَدَّقَهُ، فَأَخَذَهَا، وَلَمْ يُعْطَ بِهَا "".
பாடம்: 48
உலகாதாயத்திற்காக மட்டுமே ஒருவருக்கு விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தல்
7212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்றுபேரிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களுக் குத் துன்பமிகு வேதனைதான் கிடைக் கும்.
ஒருவர், (மக்களின் பயணப்) பாதை யில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை வைத்திருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்தவிடாமல் தடுத்துவிட்டவர் ஆவார்.
இன்னொருவர் (ஆட்சித்) தலைவரி டம் தமது உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவர். தாம் விரும்பியதை அவர் கொடுத்தால் அவருக்கு விசுவாசமாக நடப்பார்; இல்லையென்றால் அவருக்கு விசுவாசமாக நடக்கமாட்டார்.
மற்றொருவர் அஸ்ர் நேரத்திற்குப் பிறகு தமது வியாபாரப் பொருளை மற்றொருவரிடம் விற்பதற்காக, “இந்தப் பொருள் இன்ன (அதிக) விலை கொடுக்கப்(பட்டு வாங்கப்)பட்டது” என்று அவ்வாறு கொடுக்கப்படாமலேயே (பொய்ச்) சத்தியம் செய்து, அதை உண்மையென நம்பவைத்து (தம் வாடிக்கையாளர்) அதை எடுத்துக்கொள்ளச் செய்தவர் ஆவார்.75

7213. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، وَقَالَ اللَّيْثُ، حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ، أَنَّهُ سَمِعَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ، يَقُولُ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ فِي مَجْلِسٍ "" تُبَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزْنُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ، وَلاَ تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ وَلاَ تَعْصُوا فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهْوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَسَتَرَهُ اللَّهُ فَأَمْرُهُ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَاقَبَهُ وَإِنْ شَاءَ عَفَا عَنْهُ ""، فَبَايَعْنَاهُ عَلَى ذَلِكَ.
பாடம்: 49
பெண்களின் விசுவாசப் பிரமாணம் (பைஅத்)
இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.76
7213. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஓர் அவையில் இருந்தபோது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள்; திருடமாட்டீர்கள்; விபசாரம் செய்யமாட்டீர்கள்; உங்கள் குழந்தைகளை (வறுமைக்கு அஞ்சி)க் கொல்லமாட்டீர்கள்; நீங்கள் எவர்மீதும் அவதூறை இட்டுக்கட்டி உங்களிடையே பரப்பமாட்டீர்கள்; நன்மையான காரியத்தில் (தலைவருக்கு) மாறுசெய்யமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளியுங்கள்.
உங்களில் எவர் (இந்த உறுதி மொழிக்கேற்ப விசுவாசமாக நடந்து) அதை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு நற்பலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இந்தக் குற்றங்களில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து உலகிலேயே அதற்காக அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால், அந்தத் தண்டனையே அவரது (குற்றத் திற்குப்) பரிகாரமாக ஆகிவிடும். அதில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அதை (உலகில்) மறைத்துவிட்டால், அவரது விவகாரம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டதாகும். அவன் நாடினால் அவரை தண்டிப்பான்; நாடினால் அவரை மன்னிப்பான்.
ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அதன்படி உறுதிமொழி அளித்தோம்.77
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

7214. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُبَايِعُ النِّسَاءَ بِالْكَلاَمِ بِهَذِهِ الآيَةِ {لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا} قَالَتْ وَمَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَدَ امْرَأَةٍ، إِلاَّ امْرَأَةً يَمْلِكُهَا.
பாடம்: 49
பெண்களின் விசுவாசப் பிரமாணம் (பைஅத்)
இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.76
7214. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம், “நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கமாட்டார்கள்; திருடமாட்டார்கள்; விபசாரம் செய்ய மாட்டார்கள்; தங்கள் குழந்தைகளைக் கொலை செய்யமாட்டார்கள்; தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்பமாட்டார் கள்; நற்செயலில் உங்களுக்கு மாறு செய்யமாட்டார்கள் என்று உறுதிமொழி அளித்தால் அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்” எனும் (60:12ஆவது) இறை வசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்கமாட்டார்கள்.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது கை, அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.78

7215. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ بَايَعْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَرَأَ عَلَىَّ {أَنْ لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا} وَنَهَانَا عَنِ النِّيَاحَةِ، فَقَبَضَتِ امْرَأَةٌ مِنَّا يَدَهَا فَقَالَتْ فُلاَنَةُ أَسْعَدَتْنِي وَأَنَا أُرِيدُ أَنْ أَجْزِيَهَا، فَلَمْ يَقُلْ شَيْئًا، ثُمَّ رَجَعَتْ، فَمَا وَفَتِ امْرَأَةٌ إِلاَّ أُمُّ سُلَيْمٍ وَأُمُّ الْعَلاَءِ، وَابْنَةُ أَبِي سَبْرَةَ امْرَأَةُ مُعَاذٍ أَوِ ابْنَةُ أَبِي سَبْرَةَ وَامْرَأَةُ مُعَاذٍ.
பாடம்: 49
பெண்களின் விசுவாசப் பிரமாணம் (பைஅத்)
இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.76
7215. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் (பெண்கள்) உறுதிமொழி (பைஅத்) அளித்தோம். அப்போது அவர்கள் எங்களுக்கு இந்த (60:12ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்; ஒப்பாரிவைக்கக் கூடாதென்று எங்களுக்குத் தடை விதித்தார்கள். அப்போது எங்களில் ஒரு பெண் (விசுவாசப் பிரமாணம் செய்யும் வகையில் சைகை செய்வதற்காக நீட்டிய) தனது கையைப் பின்வாங்கிக்கொண்டு, “இன்ன பெண் எனக்கு (என் துக்கத்தில் உடனிருந்து ஒப்பாரிவைத்து) உதவி செய்தாள். ஆகவே, நான் அவளுக்குப் பிரதியுபகாரம் செய்ய (அவளுடன் சேர்ந்து ஒப்பாரிவைக்க) விரும்புகின்றேன்” என்று சொன்னாள்.
நபி (ஸல்) அவர்கள் ஏதும் கூறவில்லை. அவள் சென்றுவிட்டுப் பிறகு திரும்பி வந்(து உறுதிமொழி அளித்)தாள்.
(ஒப்பாரி வைக்கமாட்டோம் என்று உறுதி மொழியளித்தவர்களில்) உம்மு சுலைம், உம்முல் அலா ஆகியோரும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் துணைவியாரான ‘பின்த் அபீசப்ராவும்’ அல்லது ‘பின்த் அபீசப்ராவும் முஆத் (ரலி) அவர்களின் துணைவியாரும்’ தவிர வேறெவரும் தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.79

7216. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، سَمِعْتُ جَابِرًا، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ بَايِعْنِي عَلَى الإِسْلاَمِ. فَبَايَعَهُ عَلَى الإِسْلاَمِ، ثُمَّ جَاءَ الْغَدَ مَحْمُومًا فَقَالَ أَقِلْنِي. فَأَبَى، فَلَمَّا وَلَّى قَالَ "" الْمَدِينَةُ كَالْكِيرِ، تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طِيبُهَا "".
பாடம்: 50
அளித்த உறுதிமொழியை முறிப் பது
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) உம்மிடம் உறுதிப் பிரமாணம் செய்தவர்கள் (உண்மையில்) அல்லாஹ்விடமே உறுதிப் பிரமாணம் செய்கின்றார்கள். அல்லாஹ்வின் கரம் அவர்களுடைய கரத்தின் மீது உள்ளது. உறுதிப் பிரமாணத்தை முறிப்பவர் தமக்கெதிராகவே அதை முறித்துக்கொள் கிறார். அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுபவருக்கு அல்லாஹ் மகத்தான பிரதிபலனை விரைவில் வழங்குவான். (48:10)
7216. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்தை என்னிடமிருந்து பெறுங்கள்” என்று கோரினார். நபி (ஸல்) அவர்களும் அவரிடம் இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்தைப் பெற்றார்கள். பிறகு அவர் அடுத்த நாள் காய்ச்சலுடன் வந்து, “(என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து) என்னை விடுவித்துவிடுங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (விடுவிக்க) மறுத்துவிட்டார்கள்.
அவர் திரும்பிச் சென்றபோது, “மதீனா நகரம் கொல்லனின் உலை போன்றதாகும்; அது தன்னிலுள்ள தீயவர்களை (சோதனைகள் மூலம்) வெளியேற்றி நல்ல வர்களைத் தூய்மைப்படுத்துகின்றது” என்று சொன்னார்கள்.80

7218. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قِيلَ لِعُمَرَ أَلاَ تَسْتَخْلِفُ قَالَ إِنْ أَسْتَخْلِفْ فَقَدِ اسْتَخْلَفَ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي أَبُو بَكْرٍ، وَإِنْ أَتْرُكْ فَقَدْ تَرَكَ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَثْنَوْا عَلَيْهِ فَقَالَ رَاغِبٌ رَاهِبٌ، وَدِدْتُ أَنِّي نَجَوْتُ مِنْهَا كَفَافًا لاَ لِي وَلاَ عَلَىَّ لاَ أَتَحَمَّلُهَا حَيًّا وَمَيِّتًا.
பாடம்: 51
ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அல்லது அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது
7217காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி நாட்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! என் தலை(வலி)யே!” என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக நான் எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு), “இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பி னேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்).
ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)” என்று சொன்னார்கள்.81
7218. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது), “நீங்கள் உங்களுக்குப்பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விதம்தான் (யாரையும் நியமிக்காமல்) விட்டுச்சென்றிருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.
உடனே நபித்தோழர்கள் உமர் (ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிóருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது(தான் பதவியைச் சுமந் தேன் என்றால், எனக்குப்பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்தபிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை” என்று கூறினார்கள்.

7219. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ خُطْبَةَ، عُمَرَ الآخِرَةَ حِينَ جَلَسَ عَلَى الْمِنْبَرِ، وَذَلِكَ الْغَدُ مِنْ يَوْمٍ تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَشَهَّدَ وَأَبُو بَكْرٍ صَامِتٌ لاَ يَتَكَلَّمُ قَالَ كُنْتُ أَرْجُو أَنْ يَعِيشَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى يَدْبُرَنَا ـ يُرِيدُ بِذَلِكَ أَنْ يَكُونَ آخِرَهُمْ ـ فَإِنْ يَكُ مُحَمَّدٌ صلى الله عليه وسلم قَدْ مَاتَ، فَإِنَّ اللَّهَ تَعَالَى قَدْ جَعَلَ بَيْنَ أَظْهُرِكُمْ نُورًا تَهْتَدُونَ بِهِ بِمَا هَدَى اللَّهُ مُحَمَّدًا صلى الله عليه وسلم وَإِنَّ أَبَا بَكْرٍ صَاحِبُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَانِي اثْنَيْنِ، فَإِنَّهُ أَوْلَى الْمُسْلِمِينَ بِأُمُورِكُمْ، فَقُومُوا فَبَايِعُوهُ. وَكَانَتْ طَائِفَةٌ مِنْهُمْ قَدْ بَايَعُوهُ قَبْلَ ذَلِكَ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، وَكَانَتْ بَيْعَةُ الْعَامَّةِ عَلَى الْمِنْبَرِ. قَالَ الزُّهْرِيُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ سَمِعْتُ عُمَرَ يَقُولُ لأَبِي بَكْرٍ يَوْمَئِذٍ اصْعَدِ الْمِنْبَرَ. فَلَمْ يَزَلْ بِهِ حَتَّى صَعِدَ الْمِنْبَرَ، فَبَايَعَهُ النَّاسُ عَامَّةً.
பாடம்: 51
ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அல்லது அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது
7217காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி நாட்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! என் தலை(வலி)யே!” என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக நான் எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு), “இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பி னேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்).
ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)” என்று சொன்னார்கள்.81
7219. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறந்த நாளுக்கு மறுநாள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு பனூ சாஇதா மண்டபத்தில் பிரமுகர்கள் வாக்களித்து ‘பைஅத்’ செய்தபிறகு பள்ளிவாசல் வந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்தபடி உமர் (ரலி) அவர்கள் ஆற்றிய இரண்டாம் உரையை நான் செவியுற்றேன். உமர் (ரலி) அவர்கள் ஓரிறை உறுதிமொழி கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் ஏதும் பேசாமல் மௌனமாயிருந்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நமக்கெல்லாம் இறுதியாகத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பார்கள்; அதுவரை உயிர் வாழ்வார் கள் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்; என்றாலும், உயர்ந்தோன் அல்லாஹ் நீங்கள் நல்வழியில் செல்ல உங்களிடையே (குர்ஆன் எனும்) ஓர் ஒளியை அமைத்துள்ளான்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அதன் மூலமே அல்லாஹ் நல்வழி காட்டினான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழரும் (ஸவ்ர் மலைக் குகையில் இருந்த) இரண்டு பேரில் இரண்டாமவருமான அபூபக்ர் (ரலி) அவர்களே உங்களின் (ஆட்சியதிகார) விவகாரங்களுக்கு மக்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தவர் ஆவார்கள். எனவே, அன்னாரிடம் (ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து) விசுவாசப் பிரமாணம் செய்துகொடுங்கள்.
நபித்தோழர்களில் ஒரு சாரார் அதற்கு முன்பே பனூ சாஇதா மண்டபத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டிருந் தார்கள். ஆனால், பொதுமக்களின் விசுவாசப் பிரமாணம் (இரண்டாம் நாள்) சொற்பொழிவு மேடையில் வைத்தே நடந்தது.
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில், “அன்றைய தினம் உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், சொற்பொழிவு மேடையில் ஏறுங்கள் என்று வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள்; இறுதியில், அபூபக்ர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை யில் ஏற, அவர்களுக்குப் பொதுமக்கள் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

7220. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم امْرَأَةٌ فَكَلَّمَتْهُ فِي شَىْءٍ فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ جِئْتُ وَلَمْ أَجِدْكَ، كَأَنَّهَا تُرِيدُ الْمَوْتَ، قَالَ "" إِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ "".
பாடம்: 51
ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அல்லது அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது
7217காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி நாட்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! என் தலை(வலி)யே!” என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக நான் எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு), “இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பி னேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்).
ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)” என்று சொன்னார்கள்.81
7220. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒருபெண் வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசினார். நபி (ஸல்) அவர்கள் மறுபடியும் தம்மிடம் வருமாறு அவளுக்குக் கட்டளையிட்டார்கள். அவள், “அல்லாஹ்வின் தூதரே! சொல்லுங்கள். நான் வந்து உங்களைக் காணவில்லையென்றால்..?” என்று -தான் வருவதற்குள் நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற கருத்தில்- கேட்டாள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ என்னைக் காணவில்லை என்றால் அபூபக்ரிடம் செல்” என்று பதிலளித்தார்கள்.82

7221. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي قَيْسُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ قَالَ لِوَفْدِ بُزَاخَةَ تَتْبَعُونَ أَذْنَابَ الإِبِلِ حَتَّى يُرِيَ اللَّهُ خَلِيفَةَ نَبِيِّهِ صلى الله عليه وسلم وَالْمُهَاجِرِينَ أَمْرًا يَعْذِرُونَكُمْ بِهِ.
பாடம்: 51
ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அல்லது அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது
7217காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி நாட்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! என் தலை(வலி)யே!” என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக நான் எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு), “இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பி னேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்).
ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)” என்று சொன்னார்கள்.81
7221. தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘புஸாகா’ எனும் குலத்தாரின் தூதுக் குழுவிடம் “உங்களை மன்னிப்பதற்கான காரணம் ஒன்றை இறைத்தூதரின் பிரதிநிதி(யான என)க்கும் முஹாஜிர்களுக்கும் அல்லாஹ் காட்டும்வரை நீங்கள் ஒட்ட கங்களின் வால்களைப் பின்தொடர்ந்து (நாடோடிகளாகச்) சென்றுகொண்டிருங்கள்” என்று கூறினார்கள்.83

7222. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " يَكُونُ اثْنَا عَشَرَ أَمِيرًا ـ فَقَالَ كَلِمَةً لَمْ أَسْمَعْهَا فَقَالَ أَبِي إِنَّهُ قَالَ ـ كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ ".
பாடம்: 51
ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அல்லது அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது
7217காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி நாட்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! என் தலை(வலி)யே!” என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக நான் எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு), “இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பி னேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்).
ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)” என்று சொன்னார்கள்.81
7222. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், “பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்” என்று சொல்ல நான் கேட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்தபோது) என் தந்தை (சமுரா-ரலி) அவர்கள், “அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்” என்று (நபி (ஸல்) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.84

7224. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ يُحْتَطَبُ، ثُمَّ آمُرَ بِالصَّلاَةِ فَيُؤَذَّنَ لَهَا، ثُمَّ آمُرَ رَجُلاً فَيَؤُمَّ النَّاسَ، ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُكُمْ أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا أَوْ مَرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ "". قَالَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ يُونُسُ قَالَ مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ مِرْمَاةٌ مَا بَيْنَ ظِلْفِ الشَّاةِ مِنَ اللَّحْمِ مِثْلُ مِنْسَاةٍ وَمِيضَاةٍ. الْمِيمُ مَخْفُوضَةٌ.
பாடம்: 52
(வெளிப்படையாகத்) தெரிந்து கொண்டபிறகு சச்சரவு செய் வோரையும் சந்தேகத்திற்குரி யோரையும் வீட்டிலிருந்து வெளியேற்றுவது
அபூபக்ர் (ரலி) அவர்களின் சகோதரி (அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்துவிட்ட தற்காக) ஒப்பாரிவைத்தபோது, அவரை உமர் (ரலி) அவர்கள் (வீட்டைவிட்டு) வெளியேற்றினார்கள்.
7224. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டுவந்து சுள்ளிகளாக உடைக்கும் படி நான் உத்தரவு பிறப்பித்துவிட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்புச் செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டுவிட்டு, (கூட்டுத் தொழுகைக்கு வராமல் இருக் கும்) மனிதர்களைத் தேடிச்சென்று, அவர்களின் வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்துவிட வேண்டுமென நான் எண்ணியதுண்டு.85
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளுக்கிடையேயுள்ள இறைச்சித் துண்டுகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் ‘இஷா’ தொழுகையில் கலந்துகொள்வார்.
முஹம்மத் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘மிர்மாத்’ என்பது ஆட்டின் குளம்புகளுக்கிடையே உள்ள இறைச்சியைக் குறிக்கும். இது (வாய்ப்பாட்டில்) ‘மின்ஸாத்’ மற்றும் ‘மீளாத்’ போன்றதாகும். இதிலுள்ள ‘மீம்’ எனும் எழுத்துக்கு ‘இகர’ அடையாளம் (‘கஸர்’) உண்டு.

7225. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ ـ وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ ـ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، قَالَ لَمَّا تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ ـ فَذَكَرَ حَدِيثَهُ ـ وَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُسْلِمِينَ عَنْ كَلاَمِنَا، فَلَبِثْنَا عَلَى ذَلِكَ خَمْسِينَ لَيْلَةً، وَآذَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِتَوْبَةِ اللَّهِ عَلَيْنَا.
பாடம்: 53
தலைவர் குற்றவாளிகளையும் பாவிகளையும் தம்முடன் பேசுவது, தம்மைச் சந்திப்பது போன்றவற்றிலிருந்து தடை செய்யலாமா?
7225. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குச் செல் லாமல் பின்வாங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுடன் பேச வேண்டாம் என்று முஸ்லிம்களுக்குத் தடை விதித்தார்கள். இந்த நிலையிலேயே நாங்கள் ஐம்பது நாட்கள் இருந்தோம். பிறகு அல்லாஹ் எங்களை மன்னித்த செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிட மிருந்து அவர்களின் புதல்வர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள். அன்னார்தான் தம் தந்தை கஅப் (ரலி) அவர்கள் (முதுமையடைந்து) கண்பார்வை இழந்துவிட்டபோது அவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் செல்பவர்களாக இருந்தார்கள்.86

எதிர்பார்ப்பு
7226. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ أَنَّ رِجَالاً يَكْرَهُونَ أَنْ يَتَخَلَّفُوا بَعْدِي وَلاَ أَجِدُ مَا أَحْمِلُهُمْ مَا تَخَلَّفْتُ، لَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ "".
பாடம்: 1
எதிர்பார்ப்பு குறித்து வந்துள்ள வையும், (இறைவழியில்) உயிர்த்தியாகம் செய்வதை எதிர்பார்ப்பதும்
7226. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! என்னுடன் (அறப்போரில்) கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிடுவதைப் பலரும் விரும்ப மாட்டார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வ தற்கு என்னிடம் வாகன வசதி கிடையாது. இந்நிலை மட்டும் இல்லாதிருப்பின், நான் (எந்தப் போரிலும்) கலந்துகொள்ளாமல் பின்தங்கியிருக்கமாட்டேன். (ஒன்றுவிடாமல் அனைத்திலும் கலந்து கொண்டிருப்பேன்.)
நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப் பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப் படுவதையே நான் விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 94

7227. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ وَدِدْتُ أَنِّي لأُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ فَأُقْتَلُ ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا "". فَكَانَ أَبُو هُرَيْرَةَ يَقُولُهُنَّ ثَلاَثًا أَشْهَدُ بِاللَّهِ.
பாடம்: 1
எதிர்பார்ப்பு குறித்து வந்துள்ள வையும், (இறைவழியில்) உயிர்த்தியாகம் செய்வதை எதிர்பார்ப்பதும்
7227. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப் பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டு, பிறகு கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்தச் சொற்களை மும்முறை கூறினார்கள் என்பதற்கு நான் அல்லாஹ்வை முன்வைத்து சாட்சியம் கூறுகிறேன்.