7168. قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي مَنْ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ كُنْتُ فِيمَنْ رَجَمَهُ بِالْمُصَلَّى. رَوَاهُ يُونُسُ وَمَعْمَرٌ وَابْنُ جُرَيْجٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الرَّجْمِ.
பாடம்: 19
பள்ளிவாசலில் தீர்ப்பளிப்பவர் தண்டனை (வழங்கும் முடிவு)க்குவந்தால், பள்ளிவாசலுக்கு வெளியே தண்டனை நிறைவேற் றப்பட வேண்டுமென உத்தரவிட வேண்டும்.
உமர் (ரலி) அவர்கள் (பள்ளிவாசலில் வைத்து தண்டனை வழங்கப்பட்ட கைதி குறித்து) “அவரைப் பள்ளிவாசலிலிருந்து வெளியேற்(றி தண்டனை நிறைவேற்)றுங்கள்” என்று சொன்னார்கள்.
அலீ (ரலி) அவர்கள் குறித்தும் இவ்வாறே அறிவிக்கப்படுகிறது.
7168. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவில் பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாவேன்.30
கல்லெறி தண்டனை தொடர்பான இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 93

7169. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَىَّ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَلْحَنَ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ فَأَقْضِي نَحْوَ مَا أَسْمَعُ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ أَخِيهِ شَيْئًا فَلاَ يَأْخُذْهُ، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ "".
பாடம்: 20
(வழக்கின்போது) தலைவர் எதிரிகளுக்கு அறிவுரை கூறுவது
7169. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஒரு மனிதன்தான். நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுரியமிக்கவராக இருக்கலாம். நான் கேட்பதை வைத்து அதற்கேற்ப தீர்ப்பு வழங்கிவிடுவேன்.
எவருக்கு நான் அவரது சகோதரரின் உரிமையில் ஒன்றை (உண்மை நிலை அறியாமல் வாதங்களைவைத்து) கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பளித்து விடுகின்றேனோ அதை அவர் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், அப்போது நான் அவருக்குப் பெயர்த்துக் கொடுப்பதெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான்.
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.31

7170. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى، عَنْ عُمَرَ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ أَنَّ أَبَا قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ "" مَنْ لَهُ بَيِّنَةٌ عَلَى قَتِيلٍ قَتَلَهُ، فَلَهُ سَلَبُهُ "". فَقُمْتُ لأَلْتَمِسَ بَيِّنَةً عَلَى قَتِيلٍ، فَلَمْ أَرَ أَحَدًا يَشْهَدُ لِي، فَجَلَسْتُ، ثُمَّ بَدَا لِي فَذَكَرْتُ أَمْرَهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَجُلٌ مِنْ جُلَسَائِهِ سِلاَحُ هَذَا الْقَتِيلِ الَّذِي يَذْكُرُ عِنْدِي. قَالَ فَأَرْضِهِ مِنْهُ. فَقَالَ أَبُو بَكْرٍ كَلاَّ لاَ يُعْطِهِ أُصَيْبِغَ مِنْ قُرَيْشٍ وَيَدَعَ أَسَدًا مِنْ أُسْدِ اللَّهِ يُقَاتِلُ عَنِ اللَّهِ وَرَسُولِهِ. قَالَ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَدَّاهُ إِلَىَّ فَاشْتَرَيْتُ مِنْهُ خِرَافًا فَكَانَ أَوَّلَ مَالٍ تَأَثَّلْتُهُ. قَالَ لِي عَبْدُ اللَّهِ عَنِ اللَّيْثِ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَدَّاهُ إِلَىَّ. وَقَالَ أَهْلُ الْحِجَازِ الْحَاكِمُ لاَ يَقْضِي بِعِلْمِهِ، شَهِدَ بِذَلِكَ فِي وِلاَيَتِهِ أَوْ قَبْلَهَا. وَلَوْ أَقَرَّ خَصْمٌ عِنْدَهُ لآخَرَ بِحَقٍّ فِي مَجْلِسِ الْقَضَاءِ، فَإِنَّهُ لاَ يَقْضِي عَلَيْهِ فِي قَوْلِ بَعْضِهِمْ، حَتَّى يَدْعُوَ بِشَاهِدَيْنِ فَيُحْضِرَهُمَا إِقْرَارَهُ. وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِرَاقِ مَا سَمِعَ أَوْ رَآهُ فِي مَجْلِسِ الْقَضَاءِ قَضَى بِهِ، وَمَا كَانَ فِي غَيْرِهِ لَمْ يَقْضِ إِلاَّ بِشَاهِدَيْنِ. وَقَالَ آخَرُونَ مِنْهُمْ بَلْ يَقْضِي بِهِ، لأَنَّهُ مُؤْتَمَنٌ، وَإِنَّمَا يُرَادُ مِنَ الشَّهَادَةِ مَعْرِفَةُ الْحَقِّ، فَعِلْمُهُ أَكْثَرُ مِنَ الشَّهَادَةِ. وَقَالَ بَعْضُهُمْ يَقْضِي بِعِلْمِهِ فِي الأَمْوَالِ، وَلاَ يَقْضِي فِي غَيْرِهَا. وَقَالَ الْقَاسِمُ لاَ يَنْبَغِي لِلْحَاكِمِ أَنْ يُمْضِيَ قَضَاءً بِعِلْمِهِ دُونَ عِلْمِ غَيْرِهِ، مَعَ أَنَّ عِلْمَهُ أَكْثَرُ مِنْ شَهَادَةِ غَيْرِهِ، وَلَكِنَّ فِيهِ تَعَرُّضًا لِتُهَمَةِ نَفْسِهِ عِنْدَ الْمُسْلِمِينَ، وَإِيقَاعًا لَهُمْ فِي الظُّنُونِ، وَقَدْ كَرِهَ النَّبِيُّ صلى الله عليه وسلم الظَّنَّ فَقَالَ "" إِنَّمَا هَذِهِ صَفِيَّةُ "".
பாடம்: 21
ஒருவர் நீதிபதி பதவி வகிக்கும் போது, அல்லது அதற்கு முன்பு தமக்குக் கிடைத்த சாட்சியத்தை வைத்து (வாதி, பிரதிவாதி இரு வரில்) ஒருவருக்குச் சாதகமாகத் தாமே தீர்ப்பளிக்கலாமா? (அல்லது மற்றொரு நீதிபதியிடம் அந்தச் சாட்சியத்தை அளிக்க வேண்டுமா?)
(கூஃபா நகர) நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் (தமக்காக) சாட்சியம் அளிக்குமாறு வேண்டினார். அதற்கு அன்னார், “நீ ஆட்சியரிடம் (வழக்கைக் கொண்டு)செல். நான் (அங்கு வந்து) உனக்காகச் சாட்சியம் அளிக்கிறேன்” என்றார்கள்.
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உமர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின்அவ்ஃப் (ரலி) அவர்களிடம், “ஒருவன் விபசாரம் புரிவதையோ திருடுவதையோ நீங்கள் ஆட்சியராயிருக்கும் நிலையில் கண்டால் என்ன செய்வீர்கள்? (உங்கள் சாட்சியத்தை வைத்தே தண்டனை வழங்கிடுவீர்களா?)” என்று கேட்டார்கள். (அதற்கு, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “இல்லை; என்னுடன் மற்றொருவரும் சாட்சியமளிக்காத வரை தண்டனை வழங்கமாட்டேன்” என்று சொன்னார்கள்.)
உமர் (ரலி) அவர்கள், “அப்படியானால் (ஆட்சியாளராக இருக்கும்) உங்கள் சாட்சியமும் முஸ்லிம்களில் ஒருவரின் சாட்சியமாக மதிக்கப்படும் (அப்படித்தானே!)” என்று கேட்க அவர்கள், “உண்மைதான்” என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள் “உமர் இறைவேதத்தில் (இல்லாத ஒன்றைச்) சேர்த்துவிட்டார் என்று மக்கள் பேசுவார்கள் எனும் அச்சம் இல்லாவிட்டால் ‘ரஜ்ம்’ (கல்லெறி தண்டனை) தொடர்பான வசனத்தை நான் என் கையாலேயே (குர்ஆன் பிரதியில்) எழுதியிருப்பேன்” என்று கூறினார்கள்.32
மாஇஸ் பின் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) தாம் விபசாரம் புரிந்ததாக நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மாஇஸ் திருமணமானவராக இருந்த தால்) அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்போது தம்மிடமிருந் தவர்கள் எவரையும் (மாஇஸ் விபசாரம் செய்ததற்கு) சாட்சியாக ஆக்கியதாகச் சொல்லப்படவில்லை.
ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள், “ஒருவன் தான் விபசாரம் புரிந்ததாக நீதிபதியிடம் ஒரேயொரு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலும் அவனுக்குக் கல்லெறி தண்டனை வழங்கப்படும்” என்று கூறுகிறார்கள்.
ஆனால், ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள், “நான்கு முறை வாக்குமூலம் அளித்தால்தான் கல்லெறி தண்டனை வழங்கப்படும்” என்கிறார்கள்.
7170. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுனைன் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(போரில் எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கின்றதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். உடனே நான் (என்னால்) கொல்லப்பட்டவரை நான் தான் கொன்றேன் என்பதற்கு ஆதாரம் தேடுவதற்காக எழுந்தேன். எனக்காக சாட்சியம் சொல்பவர் எவரையும் நான் காணவில்லை. ஆகவே, நான் உட்கார்ந்துகொண்டேன்.
பிறகு ஏதோ தோன்ற, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (போரில் எதிரி ஒருவனைக்) கொன்றதைச் சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், “(இவரால் கொல்லப்பட்டதாக) இவர் சொல்கின்ற அந்த மனிதரின் ஆயுதம் என்னிடம் இருக்கின்றது. நானே இதை எடுத்துக்கொள்ள அவரிடம் இருந்து (எனக்கு) இசைவு பெற்றுத்தாருங்கள்” என்று சொன்னார்.
அப்போது (அங்கிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அப்படி முடியாது. (கொல்லப்பட்டவரின்) அந்த உடைமைகளை, அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காவும் போரிடுகின்ற, அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கத்தை விட்டுவிட்டு, குறைஷியரின் (பலவீனமான) ஒரு குஞ்சுப் பறவைக்கு அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுக்கமாட்டார்கள்” என்று சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து எனக்கு அந்தப் பொருளைக் கொடுத்தார்கள். நான் அதை விற்று பேரீச்சந் தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதுதான் நான் இஸ்லாத்திற்கு வந்தபின் தேடிக்கொண்ட முதல் சொத்தாக அமைந்தது.33
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.34
ஹிஜாஸ் அறிஞர்கள் கூறுகிறார்கள்: நீதிபதி தாம் அறிந்ததை (மட்டும்) வைத்துத் தீர்ப்பளிக்கலாகாது. அவர் தமது பதவிக் காலத்தில் அதற்குச் சாட்சியாக இருந்தாலும் சரி! அதற்கு முன்பே சாட்சியாக இருந்தாலும் சரி! (அவர்மீது களங்கம் கற்பிக்க இடமுண்டு என்பதே இதற்குக் காரணம்.) நீதிமன்றத்தில் பிரதிவாதி ஆஜராகி மற்றவரின் உரிமை குறித்து நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தாலும், இரு சாட்சிகளை அழைத்து அவரது வாக்குமூலத்தின் போது ஆஜர்படுத்தாத வரை அவருக் கெதிராகத் தீர்ப்பளிக்கலாகாது என அந்த அறிஞர்களில் சிலர் கூறியுள்ளனர்.
இராக்வாசிகளில் சிலர் கூறுகின்றனர்: நீதிமன்றத்தில் நீதிபதி கேட்ட, அல்லது பார்த்த ஒன்றை (ஆதாரமாக) வைத்து அவர் தீர்ப்பளிக்கலாம். நீதிமன்றமல்லா மற்ற இடங்களில் (தாம் கேட்ட அல்லது பார்த்த) ஒன்றை வைத்து அவர் தீர்ப்பளிக்கலாகாது; பிரதிவாதி வாக்குமூலம் அளிக்கும்போது இரு சாட்சிகளை ஆஜர்படுத்தினால் தவிர.
இராக்வாசிகளில் இன்னும் சிலர், “அல்ல! (வாதியின் வாக்குமூலத்தை வைத்தே) நீதிபதி தீர்ப்பளிக்கலாம். ஏனெனில், அவர் (நீதிபதி) நம்புதற்குரிய ஒருவராவார்; சாட்சியத்தால் நோக்கமே உண்மையை அறிவதுதான். நீதிபதி அறிந்துவைத்திருப்பது சாட்சியத்தைவிடப் பலமானதாகும்” என்று கூறுகின்றனர். இராக்வாசிகளில் வேறுசிலர், “பொருளாதாரப் பிரச்சினைகளில் தாம் அறிந்ததை வைத்து (சாட்சிகள் இல்லாமலேயே) நீதிபதி தீர்ப்பளிப்பார்; மற்றப் பிரச்சினைகளில் (அவ்வாறு தாம் அறிந்ததை வைத்து, சாட்சிகள் இல்லாமல்) தீர்ப்பளிக்கமாட்டார்” என்று கூறுகின்றனர்.
காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வேறு யாரும் அறியாத, தாம் (மட்டும்) அறிந்திருக்கும் ஒன்றை வைத்துத் தீர்ப்பளிப்பது நீதிபதிக்கு முறையாகாது. பிறரது சாட்சியத்தைவிட அவர் அறிந்திருப்பது பலமானதாக இருக்கலாம். ஆனாலும், இதன்மூலம் முஸ்óம் களிடையே தம்மை அவர் தவறான எண்ணத்திற்கு உட்படுத்திக்கொள்வதும், முஸ்லிம்களைச் சந்தேகத்தில் ஆட்படுத்துவதும் நேரலாம். நபி (ஸல்) அவர்கள், பிறர் சந்தேகப்படும் வகையில் நடப்பதை வெறுத்துள்ளார்கள்.
அதனால்தான், (தம்மைப் பள்ளி வாசலில் சந்தித்துவிட்டுச் சென்ற தம் துணைவியாரை இருவர் பார்த்தபோது) “இவர் ஸஃபிய்யாதான் (வேறு யாருமல்லர்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.35

7171. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَتَتْهُ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ فَلَمَّا رَجَعَتِ انْطَلَقَ مَعَهَا، فَمَرَّ بِهِ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ فَدَعَاهُمَا فَقَالَ "" إِنَّمَا هِيَ صَفِيَّةُ "". قَالاَ سُبْحَانَ اللَّهِ. قَالَ "" إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنِ ابْنِ آدَمَ مَجْرَى الدَّمِ "". رَوَاهُ شُعَيْبٌ وَابْنُ مُسَافِرٍ وَابْنُ أَبِي عَتِيقٍ وَإِسْحَاقُ بْنُ يَحْيَى عَنِ الزُّهْرِيِّ عَنْ عَلِيٍّ ـ يَعْنِي ابْنَ حُسَيْنٍ ـ عَنْ صَفِيَّةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 21
ஒருவர் நீதிபதி பதவி வகிக்கும் போது, அல்லது அதற்கு முன்பு தமக்குக் கிடைத்த சாட்சியத்தை வைத்து (வாதி, பிரதிவாதி இரு வரில்) ஒருவருக்குச் சாதகமாகத் தாமே தீர்ப்பளிக்கலாமா? (அல்லது மற்றொரு நீதிபதியிடம் அந்தச் சாட்சியத்தை அளிக்க வேண்டுமா?)
(கூஃபா நகர) நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் (தமக்காக) சாட்சியம் அளிக்குமாறு வேண்டினார். அதற்கு அன்னார், “நீ ஆட்சியரிடம் (வழக்கைக் கொண்டு)செல். நான் (அங்கு வந்து) உனக்காகச் சாட்சியம் அளிக்கிறேன்” என்றார்கள்.
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உமர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின்அவ்ஃப் (ரலி) அவர்களிடம், “ஒருவன் விபசாரம் புரிவதையோ திருடுவதையோ நீங்கள் ஆட்சியராயிருக்கும் நிலையில் கண்டால் என்ன செய்வீர்கள்? (உங்கள் சாட்சியத்தை வைத்தே தண்டனை வழங்கிடுவீர்களா?)” என்று கேட்டார்கள். (அதற்கு, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “இல்லை; என்னுடன் மற்றொருவரும் சாட்சியமளிக்காத வரை தண்டனை வழங்கமாட்டேன்” என்று சொன்னார்கள்.)
உமர் (ரலி) அவர்கள், “அப்படியானால் (ஆட்சியாளராக இருக்கும்) உங்கள் சாட்சியமும் முஸ்லிம்களில் ஒருவரின் சாட்சியமாக மதிக்கப்படும் (அப்படித்தானே!)” என்று கேட்க அவர்கள், “உண்மைதான்” என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள் “உமர் இறைவேதத்தில் (இல்லாத ஒன்றைச்) சேர்த்துவிட்டார் என்று மக்கள் பேசுவார்கள் எனும் அச்சம் இல்லாவிட்டால் ‘ரஜ்ம்’ (கல்லெறி தண்டனை) தொடர்பான வசனத்தை நான் என் கையாலேயே (குர்ஆன் பிரதியில்) எழுதியிருப்பேன்” என்று கூறினார்கள்.32
மாஇஸ் பின் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) தாம் விபசாரம் புரிந்ததாக நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மாஇஸ் திருமணமானவராக இருந்த தால்) அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்போது தம்மிடமிருந் தவர்கள் எவரையும் (மாஇஸ் விபசாரம் செய்ததற்கு) சாட்சியாக ஆக்கியதாகச் சொல்லப்படவில்லை.
ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள், “ஒருவன் தான் விபசாரம் புரிந்ததாக நீதிபதியிடம் ஒரேயொரு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலும் அவனுக்குக் கல்லெறி தண்டனை வழங்கப்படும்” என்று கூறுகிறார்கள்.
ஆனால், ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள், “நான்கு முறை வாக்குமூலம் அளித்தால்தான் கல்லெறி தண்டனை வழங்கப்படும்” என்கிறார்கள்.
7171. அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்தபோது அவர்களுடைய துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்களும் ஸஃபிய்யாவுடன் (சிறிது தூரம் நடந்து) சென்றார்கள். அப்போது அன்சாரிகளில் இருவர் அவர்களைக் கடந்துசென்றனர்.
உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் அழைத்து, “இவர் (வேறு யாருமல்லர். என் துணைவி) ஸஃபிய்யாதான்” என்று சொன்னார்கள். உடனே அவ்விருவரும், “அல்லாஹ் தூயவன் (உங்கள்மீதா சந்தேகப்படுவோம்)” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான்” என்று சொன்னார்கள்.
இதே ஹதீஹ் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடமிருந்து நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.36

7172. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الْعَقَدِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَبِي وَمُعَاذَ بْنَ جَبَلٍ عَلَى الْيَمَنِ فَقَالَ "" يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا "". فَقَالَ لَهُ أَبُو مُوسَى إِنَّهُ يُصْنَعُ بِأَرْضِنَا الْبِتْعُ. فَقَالَ "" كُلُّ مُسْكِرٍ حَرَامٌ "". وَقَالَ النَّضْرُ وَأَبُو دَاوُدَ وَيَزِيدُ بْنُ هَارُونَ وَوَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 22
ஆட்சித் தலைவர் இரு ஆட்சியர் களை ஒரே இடத்திற்கு அனுப்பும் போது அவ்விருவரும் இணக்கத் தோடு நடந்துகொள்ளுமாறும் பிணங்கிக்கொள்ளாமல் இருக்கு மாறும் கட்டளையிடுவது
7172. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது, “(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள் ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தி விடாதீர்கள்; நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள்; (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றிவிடாதீர்கள். (தீர்ப்பளிக்கும்போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.
அப்போது நான், “எங்கள் (யமன்) நாட்டில் ‘பித்உ’ எனும் (மது)பானம் (தேனில்) தயாரிக்கப்படுகின்றதே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்” என்று சொன்னார்கள்.37
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

7173. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" فُكُّوا الْعَانِيَ وَأَجِيبُوا الدَّاعِيَ "".
பாடம்: 23
ஆட்சியாளர் (வலீமா) விருந் தழைப்பை ஏற்பது
(கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுடைய அடிமையின் விருந்தழைப்பை ஏற்றுச் சென்றார்கள்.
7173. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; (விருந்துக்கு) அழைப்ப வருக்கு (அவரது அழைப்பை ஏற்று) பதிலளியுங்கள்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.38

7174. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ، أَخْبَرَنَا أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ، قَالَ اسْتَعْمَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهُ ابْنُ الأُتَبِيَّةِ عَلَى صَدَقَةٍ فَلَمَّا قَدِمَ قَالَ هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي. فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ ـ قَالَ سُفْيَانُ أَيْضًا فَصَعِدَ الْمِنْبَرَ ـ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ "" مَا بَالُ الْعَامِلِ نَبْعَثُهُ، فَيَأْتِي يَقُولُ هَذَا لَكَ وَهَذَا لِي. فَهَلاَّ جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ وَأُمِّهِ فَيَنْظُرُ أَيُهْدَى لَهُ أَمْ لاَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يَأْتِي بِشَىْءٍ إِلاَّ جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ، إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ، أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ، أَوْ شَاةً تَيْعَرُ "". ثُمَّ رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْنَا عُفْرَتَىْ إِبْطَيْهِ "" أَلاَ هَلْ بَلَّغْتُ "" ثَلاَثًا. قَالَ سُفْيَانُ قَصَّهُ عَلَيْنَا الزُّهْرِيُّ. وَزَادَ هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ أَبِي حُمَيْدٍ قَالَ سَمِعَ أُذُنَاىَ وَأَبْصَرَتْهُ عَيْنِي، وَسَلُوا زَيْدَ بْنَ ثَابِتٍ فَإِنَّهُ سَمِعَهُ مَعِي. وَلَمْ يَقُلِ الزُّهْرِيُّ سَمِعَ أُذُنِي. {خُوَارٌ} صَوْتٌ، وَالْجُؤَارُ مِنْ تَجْأَرُونَ كَصَوْتِ الْبَقَرَةِ.
பாடம்: 24
அதிகாரிகள் பெறும் அன்பளிப்பு கள்
7174. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பனூஅசத் குலத் தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உத்தபிய்யா (அல்லது இப்னுல் லுத்தபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்தபோது, “இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர், “நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பி)வந்து, ‘இது உமக்குரியது; இது எனக்குரியது’ என்று கூறுகிறாரே! அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே! அவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று தெரியும்.
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர் கொண்டு வரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தமது கழுத்தில் சுமந்தபடிதான் மறுமை நாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக்கொண்டிருக்கும்; அது மாடாயிருந்தால் அல்லது ஆடாயிருந்தால் கத்திக்கொண்டிருக்கும்” என்று சொன்னார் கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, “நான் எடுத்துரைத்துவிட்டேனா?” என்று மும்முறை கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது:
இதை நான் என் கண்ணால் கண்டேன்; காதால் கேட்டேன். (சந்தேகமிருப்பின்) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவரும் என்னுடன் இதைக் கேட்டார்.39
‘மாட்டுக் கத்தல்’ என்பதை ‘குவார்’ என்றும், ‘ஜுஆர்’ என்றும் கூறுவர்.

7175. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، أَنَّ نَافِعًا، أَخْبَرَهُ أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ قَالَ كَانَ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ يَؤُمُّ الْمُهَاجِرِينَ الأَوَّلِينَ وَأَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي مَسْجِدِ قُبَاءٍ، فِيهِمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَأَبُو سَلَمَةَ وَزَيْدٌ وَعَامِرُ بْنُ رَبِيعَةَ.
பாடம்: 25
அடிமையாயிருந்து விடுதலையடைந்தவர்களை நீதிபதிகளாக்குவதும் அதிகாரிகளாக்குவதும்
7175. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஹுதைஃபாவின் அடிமை யாயிருந்த சாலிம் (ரலி) அவர்கள் முதலாவதாக ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் ‘குபா’ பள்ளிவாசலில் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள்.
அந்த நபித்தோழர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), அபூசலமா (ரலி), ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஆமிர் பின் ரபீஆ (ரலி) ஆகியோரும் அடங்குவர்.40

7176. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَمِّهِ، مُوسَى بْنِ عُقْبَةَ قَالَ ابْنُ شِهَابٍ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ حِينَ أَذِنَ لَهُمُ الْمُسْلِمُونَ فِي عِتْقِ سَبْىِ هَوَازِنَ " إِنِّي لاَ أَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ ". فَرَجَعَ النَّاسُ فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، فَرَجَعُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ أَنَّ النَّاسَ قَدْ طَيَّبُوا وَأَذِنُوا.
பாடம்: 26
சமூகத் தலைவர்கள் (அல்உரஃபா)41
7176. மர்வான் பின் அல்ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
ஹாவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடனிருந்தவர் களுக்கும் முஸ்லிம்கள் அனுமதியளித்த போது, “உங்களில் யார் (போர்க் கைதிகளை விடுவிக்க) சம்மதம் தெரிவிக்கிறார்; யார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் சமூகத் தலைவர்கள் உங்களது முடிவை எங்களிடம் வந்து தெரிவிக்கட்டும்” என்று கூறினார்கள்.
உடனே மக்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களிடம் அவர்களுடைய சமூகத் தலைவர்கள் பேசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்கள்.42

7178. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ أُنَاسٌ لاِبْنِ عُمَرَ إِنَّا نَدْخُلُ عَلَى سُلْطَانِنَا فَنَقُولُ لَهُمْ خِلاَفَ مَا نَتَكَلَّمُ إِذَا خَرَجْنَا مِنْ عِنْدِهِمْ قَالَ كُنَّا نَعُدُّهَا نِفَاقًا.
பாடம்: 27
மன்னரை முன்னால் புகழ்வதும் பின்னால் இகழ்வதும் வெறுக்கப் பட்ட செயலாகும்.
7178. முஹம்மத் பின் ஸைத் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் சிலர் (எங்கள் பாட்டனார்) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “நாங்கள் எங்கள் மன்னர்களிடம் செல்கிறோம். அவர்களிடமிருந்து வெளியேறியதும் (அவர்களைப் பற்றி) நாங்கள் என்ன பேசிக்கொள்வோமோ அதற்கு நேர்மாறானதையே அவர்களுக்கு (முன்னிலையில்) நாங்கள் கூறுவோம்” என்று சொன்னார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இப்படி (முன்னால் ஒன்று பின்னால் ஒன்று) பேசுவதை (நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) நாங்கள் நயவஞ்சகமாகக் கருதிவந்தோம்” என்று பதிலளித்தார்கள்.

7179. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِرَاكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنْ شَرَّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ وَهَؤُلاَءِ بِوَجْهٍ "".
பாடம்: 27
மன்னரை முன்னால் புகழ்வதும் பின்னால் இகழ்வதும் வெறுக்கப் பட்ட செயலாகும்.
7179. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களிலேயே மிகவும் மோசமான வன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்.43

7180. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ هِنْدَ، قَالَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، فَأَحْتَاجُ أَنْ آخُذَ مِنْ مَالِهِ. قَالَ "" خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ "".
பாடம்: 28
(நீதிபதிமுன்) ஆஜராகாதவருக்கு எதிராகத் தீர்ப்பளிப்பது44
7180. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “(என் கணவர்) அபூசுஃப்யான் கருமித்தனம் உள்ள ஒரு மனிதர். நான் (செலவுக்காக) அவருடைய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. (அப்படிச் செய்ய எனக்கு அனுமதியுண்டா?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உனக்கும் உன் குழந்தைக்கும் போது மான அளவிற்கு நியாயமான முறையில் எடுத்துக்கொள்” என்று சொன்னார்கள்.45

7181. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ سَمِعَ خُصُومَةً بِبَابِ حُجْرَتِهِ فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ "" إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنَّهُ يَأْتِينِي الْخَصْمُ، فَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَبْلَغَ مِنْ بَعْضٍ، فَأَحْسِبُ أَنَّهُ صَادِقٌ فَأَقْضِي لَهُ بِذَلِكَ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ مُسْلِمٍ، فَإِنَّمَا هِيَ قِطْعَةٌ مِنَ النَّارِ، فَلْيَأْخُذْهَا أَوْ لِيَتْرُكْهَا "".
பாடம்: 29
அடுத்தவருக்குரிய உரிமை (தொடர்பான வழக்கில், அது) தமக்குரியதென (வெளிப்படை ஆதாரங்களை வைத்து)த் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டாலும் அதை எவரும் பெற வேண்டாம். ஏனெனில், நீதிபதியின் தீர்ப்பு தடை செய்யப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவோ, அனுமதிக்கப்பட்டதைத் தடை செய்யப்பட்டதாகவோ மாற்றிவிடாது.
7181. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் அறைவாசலில் (நின்று) சிலர் சப்தமிட்டுத் தகராறு செய்துகொள்வதைக் கேட்டார்கள். ஆகவே, வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். என்னிடம் வழக்காடுபவர் வருகிறார். (அவரது அந்தரங்க நிலை எனக்குத் தெரியாது.) உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுரியம் மிக்கவராக இருக்கலாம். அவர் உண்மையே பேசுகிறார் என்றெண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன்.
ஆகவே, அடுத்த முஸ்லிமுக்குரிய உரிமையை (உண்மை தெரியாமல்) யாருக் குரியதென நான் தீர்ப்பளித்துவிடுகிறேனோ (அவர் அதைப் பெற வேண்டாம். ஏனெனில்,) அதுவெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டுதான். (இதை நினைவில் கொண்டு விரும்பினால்) அதை அவர் எடுத்துக்கொள்ளட்டும்; அல்லது விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.46

7182. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي فَاقْبِضْهُ إِلَيْكَ. فَلَمَّا كَانَ عَامُ الْفَتْحِ أَخَذَهُ سَعْدٌ فَقَالَ ابْنُ أَخِي، قَدْ كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ، فَقَامَ إِلَيْهِ عَبْدُ بْنُ زَمْعَةَ فَقَالَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَتَسَاوَقَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ ابْنُ أَخِي، كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ. وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ "". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ "". ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ "" احْتَجِبِي مِنْهُ ""، لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ، فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ تَعَالَى.
பாடம்: 29
அடுத்தவருக்குரிய உரிமை (தொடர்பான வழக்கில், அது) தமக்குரியதென (வெளிப்படை ஆதாரங்களை வைத்து)த் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டாலும் அதை எவரும் பெற வேண்டாம். ஏனெனில், நீதிபதியின் தீர்ப்பு தடை செய்யப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவோ, அனுமதிக்கப்பட்டதைத் தடை செய்யப்பட்டதாகவோ மாற்றிவிடாது.
7182. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உத்பா பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், “ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனைப் பிடித்து உன்னிடம் வைத்துக்கொள்” என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டில் சஅத் (ரலி) அவர்கள் அவனைப் பிடித்துவைத்துக்கொண்டு “(இவன்) என் சகோதரர் மகன். இவன் விஷயத்தில் என் சகோதரர் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்” என்று சொன்னார்கள். அப்போது அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் சஅதை நோக்கி எழுந்து, “(இவன்) என் சகோதரன். என் தந்தை யின் அடிமைப் பெண்ணுடைய மகன். இவன் (உடைய தாய்) என் தந்தையின் அதிகாரத்திலிருந்தபோது பிறந்தவன்” என்று கூறினார்.
ஆகவே, இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர்பின் ஒருவராக (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். சஅத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இவன்) என் சகோதரர் மகன். அவர் இவன் விஷயத்தில் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்” என்று கூற, அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், “(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்; அவரது ஆதிக்கத்தில் (இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்த் பின் ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்” என்று (தீர்ப்புக்) கூறிவிட்டுப் பிறகு “தாய் யாருடைய ஆதிக்கத்தில் இருக்கின்றாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்புதான் உரியது” என்று சொன்னார் கள்.
பிறகு (தம் துணைவியும்) ஸம்ஆவின் புதல்வியுமான சவ்தா (ரலி) அவர்களிடம், “இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு (மறைத்து)க்கொள்” என்று கூறினார்கள். சாயலில் அவன் உத்பாவைப் போன்றே இருக்கக் கண்டதால்தான் நபியவர்கள் இப்படிக் கூறினார்கள். அந்த மனிதர், தாம் இறக்கும்வரை சவ்தா (ரலி) அவர்களைப் பார்க்கவில்லை.47

7183. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَالأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَحْلِفُ عَلَى يَمِينِ صَبْرٍ، يَقْتَطِعُ مَالاً وَهْوَ فِيهَا فَاجِرٌ، إِلاَّ لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "". فَأَنْزَلَ اللَّهُ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ} الآيَةَ.
பாடம்: 30
கிணறு முதலானவை தொடர்பான தீர்ப்பு
7183. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “ஒரு சொத்தை அபகரிப்பதற்காக யார் திட்டமிட்டு பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தவிர வேறு விதமாக அவனை அவர் சந்திக்க மாட்டார்” என்று சொன்னார்கள். அப்போது “அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத் தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை” எனும் (3:77ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.48

7184. فَجَاءَ الأَشْعَثُ وَعَبْدُ اللَّهِ يُحَدِّثُهُمْ فَقَالَ فِيَّ نَزَلَتْ وَفِي رَجُلٍ خَاصَمْتُهُ فِي بِئْرٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَلَكَ بَيِّنَةٌ ". قُلْتُ لاَ. قَالَ " فَلْيَحْلِفْ ". قُلْتُ إِذًا يَحْلِفُ. فَنَزَلَتْ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ} الآيَةَ.
பாடம்: 30
கிணறு முதலானவை தொடர்பான தீர்ப்பு
7184. மேற்கண்ட ஹதீஸின் அறிவிப் பாளர் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் (அங்கு) வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: இந்த இறைவசனம் என் தொடர்பாகவும் ஒரு கிணறு தொடர்பாக நான் வழக்கு தொடுத்திருந்த ஒருவர் தொடர்பாகவும்தான் இறங்கிற்று. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘உன்னிடம் ஆதாரம் எதுவும் இருக்கிறதா?’ என்று (என்னிடம்) கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்று சொன்னேன்.
நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியென்றால் (பிரதிவாதியான) அவர் சத்தியம் செய்ய வேண்டியதுதான்’ என்று சொல்ல, நான் ‘அவர் (தயங்காமல்) சத்தியம் செய்துவிடுவார்’ என்று சொன்னேன். அப்போதுதான் இந்த (3:77 ஆவது) வசனம் அருளப்பெற்றது.49

7185. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ عَنْ أُمِّهَا أُمِّ سَلَمَةَ، قَالَتْ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَلَبَةَ خِصَامٍ عِنْدَ بَابِهِ فَخَرَجَ عَلَيْهِمْ فَقَالَ "" إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنَّهُ يَأْتِينِي الْخَصْمُ، فَلَعَلَّ بَعْضًا أَنْ يَكُونَ أَبْلَغَ مِنْ بَعْضٍ، أَقْضِي لَهُ بِذَلِكَ وَأَحْسِبُ أَنَّهُ صَادِقٌ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ مُسْلِمٍ فَإِنَّمَا هِيَ قِطْعَةٌ مِنَ النَّارِ، فَلْيَأْخُذْهَا أَوْ لِيَدَعْهَا "".
பாடம்: 31
அதிகமான செல்வம் தொடர்பாகவும் குறைவான செல்வம் தொடர்பாகவும் தீர்ப்பளிக்கலாம்.50
(கூஃபாவின் நீதிபதி) அப்துல்லாஹ் பின் ஷுப்ருமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
தீர்ப்பு என்பது குறைவான செல்வம், அதிகமான செல்வம் இரண்டிலும் ஒன்றுதான்.
7185. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது (அறை யின்) வாயிலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்துகொள்வதைக் கேட்டார்கள். உடனே வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். இப்படி வருபவர்களில் சிலர் சிலரைவிட வாக்கு சாதுரியமிக்கவர்களாக இருக்கக்கூடும். அதன் காரணத்தால் அவர் உண்மையே சொல்வதாக எண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன்.
(உண்மை தெரியாமல் வாதப் பிரதிவாதத்தை வைத்து) ஒரு முஸ்லிமின் உரிமை வேறொருவருக்கு உரியதென்று நான் தீர்ப்பளித்தால், அது நரக நெருப்பின் துண்டேயாகும். (இதை நினைவில் கொண்டு விரும்பினால்) அதை அவர் எடுத்துக்கொள்ளட்டும்; (இல்லையேல்) அதை விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.51

7186. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ بَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَّ رَجُلاً مِنْ أَصْحَابِهِ أَعْتَقَ غُلاَمًا عَنْ دُبُرٍ، لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرَهُ، فَبَاعَهُ بِثَمَانِمِائَةِ دِرْهَمٍ، ثُمَّ أَرْسَلَ بِثَمَنِهِ إِلَيْهِ.
பாடம்: 32
ஆட்சித் தலைவரே மக்களுக்கு அவர்களுடைய செல்வங்களை யும் அசையாச் சொத்துக்களையும் விற்றுக்கொடுப்பது
நபி (ஸல்) அவர்கள் (குறைஷியரான) நுஐம் பின் நஹ்ஹாம் (ரலி) அவர்களால் பின்தேதியிட்டு விடுதலை அளிக்கப்பட்ட ஓர் அடிமையை (முதப்பரை அவருக்காக) விற்றுக்கொடுத்தார்கள்.52
7186. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தம் தோழர்களில் ஒருவர், ‘என் ஆயுட்காலத்திற்குப் பிறகு நீ விடுதலை யாவாய்’ என்று தம் அடிமையிடம் சொல்லிவிட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அத்தோழருக்கு அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை எண்ணூறு திர்ஹங்களுக்கு விற்று, அந்தத் தொகையை அத்தோழருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.53

7187. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْثًا وَأَمَّرَ عَلَيْهِمْ أُسَامَةَ بْنَ زَيْدٍ، فَطُعِنَ فِي إِمَارَتِهِ، وَقَالَ "" إِنْ تَطْعَنُوا فِي إِمَارَتِهِ فَقَدْ كُنْتُمْ تَطْعَنُونَ فِي إِمَارَةِ أَبِيهِ مِنْ قَبْلِهِ، وَايْمُ اللَّهِ إِنْ كَانَ لَخَلِيقًا لِلإِمْرَةِ، وَإِنْ كَانَ لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ، وَإِنَّ هَذَا لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ بَعْدَهُ "".
பாடம்: 33
ஆட்சியாளர்கள் தொடர்பாக அறியாத ஒருவர் கூறும் குறைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.
7187. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இறுதிக் காலத்தில்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பி வைத்தார் கள். அப்போது உசாமாவின் தலைமை குறித்து (அவர் வயதில் சிறியவர் என்று) குறைகூறப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவரது தலைமை குறித்து இப்போது நீங்கள் குறைகூறுகின்றீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதல்ல.) இதற்கு முன்பு (மூத்தா போரின்போது) இவருடைய தந்தையின் தலைமையையும்தான் நீங்கள் குறைகூறிக்கொண்டிருந்தீர்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் தலைமைக்குத் தகுதியானவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராகவும் இருந்தார். அவருக்குப்பின் (அவருடைய புதல்வரான) இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று சொன்னார்கள்.54