7097. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى حَائِطٍ مِنْ حَوَائِطِ الْمَدِينَةِ لِحَاجَتِهِ، وَخَرَجْتُ فِي إِثْرِهِ، فَلَمَّا دَخَلَ الْحَائِطَ جَلَسْتُ عَلَى بَابِهِ وَقُلْتُ لأَكُونَنَّ الْيَوْمَ بَوَّابَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَأْمُرْنِي فَذَهَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَضَى حَاجَتَهُ، وَجَلَسَ عَلَى قُفِّ الْبِئْرِ، فَكَشَفَ عَنْ سَاقَيْهِ وَدَلاَّهُمَا فِي الْبِئْرِ، فَجَاءَ أَبُو بَكْرٍ يَسْتَأْذِنُ عَلَيْهِ لِيَدْخُلَ فَقُلْتُ كَمَا أَنْتَ حَتَّى أَسْتَأْذِنَ لَكَ، فَوَقَفَ فَجِئْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ أَبُو بَكْرٍ يَسْتَأْذِنُ عَلَيْكَ. قَالَ "" ائْذَنْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ "". فَدَخَلَ فَجَاءَ عَنْ يَمِينِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَشَفَ عَنْ سَاقَيْهِ وَدَلاَّهُمَا فِي الْبِئْرِ، فَجَاءَ عُمَرُ فَقُلْتُ كَمَا أَنْتَ حَتَّى أَسْتَأْذِنَ لَكَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ائْذَنْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ "". فَجَاءَ عَنْ يَسَارِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَشَفَ عَنْ سَاقَيْهِ فَدَلاَّهُمَا فِي الْبِئْرِ، فَامْتَلأَ الْقُفُّ فَلَمْ يَكُنْ فِيهِ مَجْلِسٌ، ثُمَّ جَاءَ عُثْمَانُ فَقُلْتُ كَمَا أَنْتَ حَتَّى أَسْتَأْذِنَ لَكَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ائْذَنْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ، مَعَهَا بَلاَءٌ يُصِيبُهُ "". فَدَخَلَ فَلَمْ يَجِدْ مَعَهُمْ مَجْلِسًا، فَتَحَوَّلَ حَتَّى جَاءَ مُقَابِلَهُمْ عَلَى شَفَةِ الْبِئْرِ، فَكَشَفَ عَنْ سَاقَيْهِ ثُمَّ دَلاَّهُمَا فِي الْبِئْرِ. فَجَعَلْتُ أَتَمَنَّى أَخًا لِي وَأَدْعُو اللَّهَ أَنْ يَأْتِيَ. قَالَ ابْنُ الْمُسَيَّبِ فَتَأَوَّلْتُ ذَلِكَ قُبُورَهُمُ اجْتَمَعَتْ هَا هُنَا وَانْفَرَدَ عُثْمَانُ.
பாடம்: 17
கடல் அலை போன்று அடுக் கடுக்காய் வரும் குழப்பங்கள்
கலஃப் பின் ஹவ்ஷப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: குழப்பங்கள் தலைதூக்கும்போது (கவிஞர்) இம்ரஉல் கைஸ்32 உடைய இப்பாடல்களை மக்கள் விருப்பமுடன் மேற்கோள்காட்டுவது வழக்கம்.
போர் மூளும்போது,அது ஓர் இளம் பெண்.தன் கவர்ச்சியால்பேதைகளை மயக்கஅவள் ஓடிவருகிறாள்.
போர்மூண்டு,அதன் பிழம்புகள்கொழுந்துவிட்டெரியும்போதுஎவரும் மணக்க முன்வராதகிழட்டுப் பெண்ணாய்அவள் ஓடிப்போகிறாள்.
கறுப்பு வெள்ளை முடி உடையவளாய்பார்க்க சகிக்காத நிறத்தவளாய்முத்தவோ முகரவோ முடியாதவளாய்உருக்குலைந்தவளாய் போய்விடுகிறாள்.
7097. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றுக்குத் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னாலேயே நான் சென்றேன். இறுதியில் (குபாவிற்கு அருகிலுள்ள ‘பிஃரு அரீஸ்’ எனும்) தோட்டத்திற்குள் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது நான் அதன் தலைவாயிலில் அமர்ந்துகொண்டேன். நபியவர்கள் எனக்குக் கட்டளையிடாமலேயே “இன்றைய தினம் நான் அவர்களின் வாயிற்காவலனாக இருப்பேன்” என்று கூறிக்கொண்டேன்.
நபி (ஸல்) அவர்கள் சென்று தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டு (அங்கிருந்த) கிணற்றின் சுற்றுச் சுவரில் தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்கவிட்டபடி அமர்ந்துகொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து நபியவர்களிடம் செல்ல அன்னாரின் அனுமதி கேட்கும்படி சொன்னார்கள். நான், “உங்களுக்காக நான் (நபியவர்களிடம்) அனுமதி கேட்கும்வரை நீங்கள் அப்படியே (இங்கே) இருங்கள்” என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் (அவ்வாசலில்) நின்றுகொள்ள, நான் நபியவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! (இதோ!) அபூபக்ர் (ரலி) அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன்.
நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறுங்கள்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் வந்து தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் அவற்றை தொங்கவிட்டபடி அமர்ந்து கொண்டார்கள்.
பிறகு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நான், “இங்கேயே இருங்கள். உங்களுக்காக நான் நபி (ஸல்) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கின்றேன்” என்று கூறினேன். (நான் அவர்களுக்காக அனுமதி கேட்டபோது) நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று (என்னிடம்) கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் (உள்ளே) வந்து, நபி (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கம் தம் கால்களைத் திறந்து அந்தக் கிணற்றுக்குள் தொங்கவிட்டபடி அமர்ந்துகொண்டார்கள். அந்தச் சுவர் நிரம்பிவிட்டது. அதில் (இனி யாரும்) அமர்வதற்கு இடம் இருக்கவில்லை.
பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் வந்தார்கள். நான், “நீங்கள் இங்கேயே இருங்கள்; உங்களுக்காக நான் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டு வருகின்றேன்” என்று சொன்னேன். (நான் உள்ளே சென்றபோது) நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி கூறுங்கள். அத்துடன் அவருக்கு நேரவிருக்கும் சோதனையையும் கூறுங்கள்” என்றார்கள்.
(அவ்வாறே நான் அனுமதி வழங்கி நற்செய்தி தெரிவித்தேன்.) உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்து, ஏற்கெனவே அமர்ந்திருந்தவர்களுடன் அமர இடம் இல்லாததால் திரும்பிச் சென்று அவர்களுக்கு எதிரிலிருந்த அக்கிணற்றின் மற்றொரு சுற்றுச் சுவரில் தம் கால்களைத் திறந்து அவற்றைக் கிணற்றில் தொங்கவிட்டபடி அமர்ந்தார்கள்.
என் சகோதரர் ஒருவரை எதிர்பார்த்த படி அவர் (அங்கு) வர வேண்டும் என்று நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க லானேன்.
அறிவிப்பாளர் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான், “(நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் அவர்களுக்கு எதிரே உஸ்மான் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த நிலையும் தற்போது) அவர்களின் கப்றுகள் (மண்ணறைகள்) இங்கு ஒரே இடத்தில் அமைந்திருக்கும் நிலையையும் உஸ்மான் (ரலி) அவர்கள் பிரிந்து (‘ஜன்னத்துல் பகீஉ’ மையவாடிக்கு) சென்றுவிட்ட நிலையையும் குறிப்பதாக விளக்கம் கண்டேன்.34
அத்தியாயம் : 92

7098. حَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ قِيلَ لأُسَامَةَ أَلاَ تُكَلِّمُ هَذَا. قَالَ قَدْ كَلَّمْتُهُ مَا دُونَ أَنْ أَفْتَحَ بَابًا، أَكُونُ أَوَّلَ مَنْ يَفْتَحُهُ، وَمَا أَنَا بِالَّذِي أَقُولُ لِرَجُلٍ بَعْدَ أَنْ يَكُونَ أَمِيرًا عَلَى رَجُلَيْنِ أَنْتَ خَيْرٌ. بَعْدَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" يُجَاءُ بِرَجُلٍ فَيُطْرَحُ فِي النَّارِ، فَيَطْحَنُ فِيهَا كَطَحْنِ الْحِمَارِ بِرَحَاهُ، فَيُطِيفُ بِهِ أَهْلُ النَّارِ فَيَقُولُونَ أَىْ فُلاَنُ أَلَسْتَ كُنْتَ تَأْمُرُ بِالْمَعْرُوفِ، وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ فَيَقُولُ إِنِّي كُنْتُ آمُرُ بِالْمَعْرُوفِ وَلاَ أَفْعَلُهُ، وَأَنْهَى عَنِ الْمُنْكَرِ وَأَفْعَلُهُ "".
பாடம்: 17
கடல் அலை போன்று அடுக் கடுக்காய் வரும் குழப்பங்கள்
கலஃப் பின் ஹவ்ஷப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: குழப்பங்கள் தலைதூக்கும்போது (கவிஞர்) இம்ரஉல் கைஸ்32 உடைய இப்பாடல்களை மக்கள் விருப்பமுடன் மேற்கோள்காட்டுவது வழக்கம்.
போர் மூளும்போது,அது ஓர் இளம் பெண்.தன் கவர்ச்சியால்பேதைகளை மயக்கஅவள் ஓடிவருகிறாள்.
போர்மூண்டு,அதன் பிழம்புகள்கொழுந்துவிட்டெரியும்போதுஎவரும் மணக்க முன்வராதகிழட்டுப் பெண்ணாய்அவள் ஓடிப்போகிறாள்.
கறுப்பு வெள்ளை முடி உடையவளாய்பார்க்க சகிக்காத நிறத்தவளாய்முத்தவோ முகரவோ முடியாதவளாய்உருக்குலைந்தவளாய் போய்விடுகிறாள்.
7098. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், “நீங்கள் இவரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம் இந்த அரசியல் குழப்பங்கள் தொடர்பாகப்) பேசக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது. அதற்கு உசாமா (ரலி) அவர்கள், “நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால், கலகத்திற்குக்) கதவைத் திறந்துவிடாமலேயே அவர்களிடம் (இரகசியமாகப்) பேசுகின்றேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறக்கும் முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை.
மேலும், ஒரு மனிதர் இரண்டு பேருக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதனால் அவரை ‘மக்களில் நீங்கள்தான் சிறந்தவர்’ என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (ஒரு விஷயத்தை) நான் செவியுற்ற பிறகு (அவ்வாறு நான் சொல்லமாட்டேன்).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டு அவர் நரகத்தில் வீசப்படுவார். கழுதை தனது செக்கைச் சுற்றிவருவதைப் போன்று அவர் நரகில் சுற்றிவருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, “இன்னாரே (உமக்கேன் இந்த நிலை?) நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாம் என (அவர்களைத்) தடுத்துக்கொண்டிருக்(கும் நற்பணி செய்துகொண்டிருக்)கவில்லையா?” என்று கேட்பார்கள்.
அதற்கு அந்த மனிதர், “நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாம் என்று (மக்களை) நான் தடுத்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்” என்று கூறுவார்.35

7099. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ لَقَدْ نَفَعَنِي اللَّهُ بِكَلِمَةٍ أَيَّامَ الْجَمَلِ لَمَّا بَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَّ فَارِسًا مَلَّكُوا ابْنَةَ كِسْرَى قَالَ "" لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمُ امْرَأَةً "".
பாடம்: 1836
7099. அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘ஜமல்’ போர் சமயத்தில் (ஆயிஷா (ரலி) அவர்களின் ஆதரவாளர்களுடன் சேர்ந்துகொண்டு நான் போரிட முற்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற் றிருந்த) ஒரு சொல் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளித்தான்.
பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “தமது விவகாரத்தை ஒரு பெண்ணிடம் (முழுமையாக) ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் வெல்லாது” என்று சொன்னார்கள். (இதுதான் எனக்குப் பயனளித்த நபி (ஸல்) அவர்களின் சொல்.)37

7100. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، حَدَّثَنَا أَبُو مَرْيَمَ عَبْدُ اللَّهِ بْنُ زِيَادٍ الأَسَدِيُّ، قَالَ لَمَّا سَارَ طَلْحَةُ وَالزُّبَيْرُ وَعَائِشَةُ إِلَى الْبَصْرَةِ بَعَثَ عَلِيٌّ عَمَّارَ بْنَ يَاسِرٍ وَحَسَنَ بْنَ عَلِيٍّ، فَقَدِمَا عَلَيْنَا الْكُوفَةَ فَصَعِدَا الْمِنْبَرَ، فَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ فَوْقَ الْمِنْبَرِ فِي أَعْلاَهُ، وَقَامَ عَمَّارٌ أَسْفَلَ مِنَ الْحَسَنِ، فَاجْتَمَعْنَا إِلَيْهِ فَسَمِعْتُ عَمَّارًا يَقُولُ إِنَّ عَائِشَةَ قَدْ سَارَتْ إِلَى الْبَصْرَةِ، وَوَاللَّهِ إِنَّهَا لَزَوْجَةُ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم فِي الدُّنْيَا وَالآخِرَةِ، وَلَكِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى ابْتَلاَكُمْ، لِيَعْلَمَ إِيَّاهُ تُطِيعُونَ أَمْ هِيَ.
பாடம்: 1836
7100. அபூமர்யம் அப்துல்லாஹ் பின் ஸியாத் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஜமல் பேரின்போது) தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் (இராக்கிலுள்ள) ‘பஸ்ரா’வுக்குச் சென்றபோது அலீ (ரலி) அவர்கள், அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களையும் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களையும் (மக்களைத் திரட்டுமாறு கூஃபாவுக்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்கள் இருவரும் எங்களிடம் கூஃபாவுக்கு வந்து சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) ஏறினர். ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையில் அதன்மேல் தளத்தில் இருந்தார்கள். அம்மார் (ரலி) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்குக் கீழே நின்றிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம் ஒன்றுதிரண்டோம்.
அப்போது அம்மார் (ரலி) அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள் பஸ்ராவுக்குச் சென்றுவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் உங்கள் நபியின் துணைவியார் ஆவார்கள். (அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.) ஆனால், வளமும் உயர்வும் உடைய அல்லாஹ், நீங்கள் அவனுக்குக் கீழ்ப்படிகிறீர்களா? அல்லது ஆயிஷாவுக்குக் கீழ்ப்படி கிறீர்களா? என்று (வெளிப்படையாக) அறிந்துகொள்வதற்காக உங்களைச் சோதிக்கின்றான்” என்று சொல்லக் கேட்டேன்.

7101. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي غَنِيَّةَ، عَنِ الْحَكَمِ، عَنْ أَبِي وَائِلٍ، قَامَ عَمَّارٌ عَلَى مِنْبَرِ الْكُوفَةِ، فَذَكَرَ عَائِشَةَ وَذَكَرَ مَسِيرَهَا وَقَالَ إِنَّهَا زَوْجَةُ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم فِي الدُّنْيَا وَالآخِرَةِ، وَلَكِنَّهَا مِمَّا ابْتُلِيتُمْ.
பாடம்: 1836
7101. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூஃபாவின் (பள்ளிவாசல்) மிம்பரில் நின்று ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றியும் (தம் ஆதரவாளர்களுடன் பஸ்ராவுக்கு) அவர்கள் மேற்கொண்ட பயணம் பற்றியும் குறிப்பிட்டுவிட்டு, “ஆயிஷா (ரலி) அவர்கள், இந்த உலகிலும் மறுமையிலும் உங்கள் நபியின் துணைவியார் ஆவார்கள். ஆனால், அவர் மூலம் நீங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளீர்கள்” என்று கூறினார்கள்.

7102. حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي عَمْرٌو، سَمِعْتُ أَبَا وَائِلٍ، يَقُولُ دَخَلَ أَبُو مُوسَى وَأَبُو مَسْعُودٍ عَلَى عَمَّارٍ حَيْثُ بَعَثَهُ عَلِيٌّ إِلَى أَهْلِ الْكُوفَةِ يَسْتَنْفِرُهُمْ فَقَالاَ مَا رَأَيْنَاكَ أَتَيْتَ أَمْرًا أَكْرَهَ عِنْدَنَا مِنْ إِسْرَاعِكَ فِي هَذَا الأَمْرِ مُنْذُ أَسْلَمْتَ. فَقَالَ عَمَّارٌ مَا رَأَيْتُ مِنْكُمَا مُنْذُ أَسْلَمْتُمَا أَمْرًا أَكْرَهَ عِنْدِي مِنْ إِبْطَائِكُمَا عَنْ هَذَا الأَمْرِ. وَكَسَاهُمَا حُلَّةً حُلَّةً، ثُمَّ رَاحُوا إِلَى الْمَسْجِدِ.
பாடம்: 1836
7102. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஜமல் போரின்போது பஸ்ராவுக்குச் செல்லுமாறு) மக்களைத் தூண்டும்படி கூஃபாவாசிகளிடம் அம்மார் (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்கள் அனுப்பியிருந்தார்கள். அப்போது அம்மாரைச் சந்திக்க அபூமூசா (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் வந்தார்கள். அவர்களிருவரும் (அம்மாரிடம்), “(ஆயிஷாவை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தீவிரத்தைத்தான் இஸ்லாத்தை ஏற்றதிóருந்து நீங்கள் செய்தவற்றிலேயே எங்களுக்கு அறவே பிடிக்காத செயலாக நாங்கள் கருதுகின்றோம்” என்று சொன்னார்கள்.
அப்போது அம்மார் (ரலி) அவர்கள், “(அலி (ரலி) அவர்களுடன் சேர்ந்து ஆயிஷா (ரலி) அவர்களை எதிர்க்காமல்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தாமதத்தைத்தான் இஸ்லாத்தை ஏற்றதிóருந்து நீங்கள் இருவரும் செய்தவற்றிலேயே எனக்கு அறவே பிடிக்காத செயலாக நான் கருதுகிறேன்” என்று சொன்னார்கள். பின்னர் அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் மற்ற இருவருக்கும் ஆளுக்கொரு அங்கியை அணிவித்தார்கள். பிறகு அவர்கள் (அனைவரும்) பள்ளிவாசலுக்குச் சென்றுவிட்டார்கள்.

7105. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، كُنْتُ جَالِسًا مَعَ أَبِي مَسْعُودٍ وَأَبِي مُوسَى وَعَمَّارٍ فَقَالَ أَبُو مَسْعُودٍ مَا مِنْ أَصْحَابِكَ أَحَدٌ إِلاَّ لَوْ شِئْتُ لَقُلْتُ فِيهِ غَيْرَكَ، وَمَا رَأَيْتُ مِنْكَ شَيْئًا مُنْذُ صَحِبْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْيَبَ عِنْدِي مِنِ اسْتِسْرَاعِكَ فِي هَذَا الأَمْرِ. قَالَ عَمَّارٌ يَا أَبَا مَسْعُودٍ وَمَا رَأَيْتُ مِنْكَ وَلاَ مِنْ صَاحِبِكَ هَذَا شَيْئًا مُنْذُ صَحِبْتُمَا النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْيَبَ عِنْدِي مِنْ إِبْطَائِكُمَا فِي هَذَا الأَمْرِ. فَقَالَ أَبُو مَسْعُودٍ وَكَانَ مُوسِرًا يَا غُلاَمُ هَاتِ حُلَّتَيْنِ. فَأَعْطَى إِحْدَاهُمَا أَبَا مُوسَى وَالأُخْرَى عَمَّارًا وَقَالَ رُوحَا فِيهِ إِلَى الْجُمُعَةِ.
பாடம்: 1836
7105. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூமஸ்ஊத் (ரலி), அபூமூசா (ரலி), அம்மார் (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் (அம்மார் (ரலி) அவர்களிடம்,) “(இப்போரில்) உங்கள் (அணியிலுள்ள) தோழர்களில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் நான் நினைத்தால் குறைகூற முடியும்; உங்களைத் தவிர. நீங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டதிóருந்து (ஆயிஷா-ரலி) அவர்களை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தீவிரத்தைப் போன்று வேறு எந்தப் பெருங்குறையையும் உங்களிடம் நான் காணவில்லை” என்று சொன்னார்கள்.
அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், “அபூமஸ்ஊத் அவர்களே! நீங்களும் உங்களுடைய இந்தத் தோழரும் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டதிலிருந்து (ஆயிஷா (ரலி) அவர்களை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்களிருவரும் காட்டும் தாமதத்தைப் போன்று வேறு எந்தப் பெருங்குறையையும் உங்களிடம் நான் காணவில்லை” என்று சொன்னார்கள்.
வசதியானவராய் இருந்த அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அப்போது, “பணியாளரே! இரண்டு அங்கிகளைக் கொண்டுவா!” என்று உத்தரவிட்டு, (அவை கொண்டு வரப்பட்டவுடன்) அவ்விரண்டில் ஒன்றை அபூமூசா (ரலி) அவர்களுக்கும் மற்றொன்றை அம்மார் (ரலி) அவர்களுக் கும் கொடுத்தார்கள். பிறகு, “இதை அணிந்துகொண்டு இருவரும் ஜுமுஆ தொழுகைக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார்கள்.

7108. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أَنْزَلَ اللَّهُ بِقَوْمٍ عَذَابًا، أَصَابَ الْعَذَابُ مَنْ كَانَ فِيهِمْ، ثُمَّ بُعِثُوا عَلَى أَعْمَالِهِمْ "".
பாடம்: 19
அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்கு வேதனை வழங்கும்போது...
7108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்.38
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

7109. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا إِسْرَائِيلُ أَبُو مُوسَى، وَلَقِيتُهُ، بِالْكُوفَةِ جَاءَ إِلَى ابْنِ شُبْرُمَةَ فَقَالَ أَدْخِلْنِي عَلَى عِيسَى فَأَعِظَهُ. فَكَأَنَّ ابْنَ شُبْرُمَةَ خَافَ عَلَيْهِ فَلَمْ يَفْعَلْ. قَالَ حَدَّثَنَا الْحَسَنُ قَالَ لَمَّا سَارَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ ـ رضى الله عنهما ـ إِلَى مُعَاوِيَةَ بِالْكَتَائِبِ. قَالَ عَمْرُو بْنُ الْعَاصِ لِمُعَاوِيَةَ أَرَى كَتِيبَةً لاَ تُوَلِّي حَتَّى تُدْبِرَ أُخْرَاهَا. قَالَ مُعَاوِيَةُ مَنْ لِذَرَارِيِّ الْمُسْلِمِينَ. فَقَالَ أَنَا. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَامِرٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَمُرَةَ نَلْقَاهُ فَنَقُولُ لَهُ الصُّلْحَ. قَالَ الْحَسَنُ وَلَقَدْ سَمِعْتُ أَبَا بَكْرَةَ قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ جَاءَ الْحَسَنُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ابْنِي هَذَا سَيِّدٌ وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنَ الْمُسْلِمِينَ "".
பாடம்: 20
(தம் பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியது
என்னுடைய இந்த (புதல்வியின்) புதல்வர் தலைவர் ஆவார். இவர் மூலம் இரு முஸ்லிம் குழுவினருக்கிடையே அல்லாஹ் சமாதானம் செய்துவைக்கக் கூடும்.
7109. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அபூஜஅஃபர் மன்சூர் ஆட்சிக் காலத்தில் இராக்கிலுள்ள) கூஃபாவில் அபூமூசா இஸ்ராயீல் அவர்களை நான் சந்தித்தேன். அன்னார் (கூஃபாவின் நீதிபதியான) அப்துல்லாஹ் பின் ஷுப்ருமா (ரஹ்) அவர்களிடம் வந்திருந்தார்கள். அபூமூசா (ரஹ்) அவர்கள், “என்னை (கூஃபாவின் ஆளுநர்) ஈசா பின் மூசாவிடம் அழைத்துச் செல்லுங்கள்; அவருக்கு நான் உபதேசம் செய்ய வேண்டும்” என்று இப்னு ஷுப்ருமாவிடம் கூறினார்கள்.
(ஆளுநர் ஈசா) அபூமூசா விஷயத்தில் (ஏதும் செய்துவிடுவார் என்று) இப்னு ஷுப்ருமா பயந்துவிட்டார்போலும். அதனால் (அபூமூசாவின் கோரிக்கையை ஏற்று) அவர் செயல்படவில்லை. பின்னர் ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாக அபூமூசா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் பெரும் படையணிகளுடன் முஆவியா (ரலி) அவர்களை நோக்கிப் பயணமானார்கள். (இதை அறிந்த முஆவியா (ரலி) அவர்களுடைய ஆலோசகர்) அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களிடம், “தன் எதிரணியைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யாத வரையில் பின்வாங்காத பெரும் படையணியை நான் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார்கள்.
முஆவியா (ரலி) அவர்கள், “(இவர்கள் கொல்லப்பட்டுவிட்டால்) முஸ்லிம்களின் (வருங்காலச்) சந்ததிகளுக்கு (பொறுப்பேற்க) யார் இருக்கிறார்கள்?” என்று கேட்க, அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், “நான் (இருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களும், “நாங்கள் ஹசன் (ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் சமாதானம் செய்துகொள்ளும்படி கூறுகிறோம்” என்று சொன்னார்கள்.
தொடர்ந்து ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடைமீது நின்று) உரையாற்றிக்கொண்டி ருந்தபோது ஹசன் (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய இந்த (புதல்வியின்) புதல்வர் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானம் செய்துவைப்பான்” என்று கூறினார்கள் என அபூபக்ரா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.39

7110. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قَالَ عَمْرٌو أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَلِيٍّ، أَنَّ حَرْمَلَةَ، مَوْلَى أُسَامَةَ أَخْبَرَهُ قَالَ عَمْرٌو وَقَدْ رَأَيْتُ حَرْمَلَةَ قَالَ أَرْسَلَنِي أُسَامَةُ إِلَى عَلِيٍّ وَقَالَ إِنَّهُ سَيَسْأَلُكَ الآنَ فَيَقُولُ مَا خَلَّفَ صَاحِبَكَ فَقُلْ لَهُ يَقُولُ لَكَ لَوْ كُنْتَ فِي شِدْقِ الأَسَدِ لأَحْبَبْتُ أَنْ أَكُونَ مَعَكَ فِيهِ، وَلَكِنَّ هَذَا أَمْرٌ لَمْ أَرَهُ، فَلَمْ يُعْطِنِي شَيْئًا، فَذَهَبْتُ إِلَى حَسَنٍ وَحُسَيْنٍ وَابْنِ جَعْفَرٍ فَأَوْقَرُوا لِي رَاحِلَتِي.
பாடம்: 20
(தம் பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியது
என்னுடைய இந்த (புதல்வியின்) புதல்வர் தலைவர் ஆவார். இவர் மூலம் இரு முஸ்லிம் குழுவினருக்கிடையே அல்லாஹ் சமாதானம் செய்துவைக்கக் கூடும்.
7110. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உசாமா (ரலி) அவர்கள் என்னை அலீ (ரலி) அவர்களிடம் அனுப்பி, “இப்போது அவர் (அலீ-ரலி) உன்னிடம் உம் தோழர் (உசாமா, ஜமல் மற்றும் ஸிஃப்பீன் போர்களில் எனக்கு ஆதரவளிக்காமல்) பின் வாங்கியதற்குக் காரணம் என்ன? என்று கேட்பார். நீங்கள் சிங்கத்தின் தாடைக்குள் இருந்தாலும் உங்களுடன் இருப்பதையே நான் விரும்புவேன்; ஆனால், (முஸ்லிம்களிடையே நடக்கும்) இந்தச் சண்டையில் எனக்கு உடன்பாடில்லை என்று நான் கூறுவதாக அவரிடம் சொல்” என்று சொன்னார்கள். (நானும் அவ்வாறே அலீ (ரலி) அவர்களிடம் சென்று சொன்னேன்.)
அலீ (ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்தி லிருந்து) எனக்கு எதுவும் கொடுக்க வில்லை. ஆகவே, நான் ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி), அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) ஆகியோரிடம் சென்றேன். அவர்கள் எனது வாகனத்தில் அது (சுமக்க முடிந்த அளவுக்கு) எனக்காக (அன்பளிப்புப் பொருள்களை) ஏற்றியனுப்பினார்கள்.

7111. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ لَمَّا خَلَعَ أَهْلُ الْمَدِينَةِ يَزِيدَ بْنَ مُعَاوِيَةَ جَمَعَ ابْنُ عُمَرَ حَشَمَهُ وَوَلَدَهُ فَقَالَ إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" يُنْصَبُ لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ "". وَإِنَّا قَدْ بَايَعْنَا هَذَا الرَّجُلَ عَلَى بَيْعِ اللَّهِ وَرَسُولِهِ، وَإِنِّي لاَ أَعْلَمُ غَدْرًا أَعْظَمَ مِنْ أَنْ يُبَايَعَ رَجُلٌ عَلَى بَيْعِ اللَّهِ وَرَسُولِهِ، ثُمَّ يُنْصَبُ لَهُ الْقِتَالُ، وَإِنِّي لاَ أَعْلَمُ أَحَدًا مِنْكُمْ خَلَعَهُ، وَلاَ بَايَعَ فِي هَذَا الأَمْرِ، إِلاَّ كَانَتِ الْفَيْصَلَ بَيْنِي وَبَيْنَهُ.
பாடம்: 21
ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்...?40
7111. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மதீனாவாசிகள் யஸீத் பின் முஆவியாவுக்கு அளித்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக்கொண்டபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் அபிமானிகளையும் தம் மக்களையும் ஒன்றுதிரட்டி, “மோசடி (நம்பிக்கைத் துரோகம்) செய்பவன் ஒவ்வொருவனுக்கும் (உலகில்) அவன் செய்த மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக மறுமை நாளில் கொடியொன்று நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் வழிமுறைப்படி நாம் இந்த மனிதருக்கு (யஸீதுக்கு) விசுவாசப் பிராமணம் செய்துகொடுத்துள்ளோம்.
அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப் பிரமாணம் செய்துகொடுத்து விட்டுப் பிறகு அவருக்கே எதிராகப் போர் நடத்துவதைவிடப் பெரிய மோசடி எதையும் நான் அறியவில்லை. (என் சகாக்களான) உங்களில் எவரும் யஸீதுக்கு செய்துகொடுத்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக்கொண்டதாகவோ, இந்த ஆட்சியதிகாரத்தில் வேறெவருக்காவது விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்ததாகவோ நான் அறிந்தால், அதுவே அவருக்கும் எனக்கும் இடையே உள்ள உறவை துண்டிக்கக்கூடியதாக இருக்கும்” என்று சொன்னார்கள்.41

7112. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ عَوْفٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، قَالَ لَمَّا كَانَ ابْنُ زِيَادٍ وَمَرْوَانُ بِالشَّأْمِ، وَوَثَبَ ابْنُ الزُّبَيْرِ بِمَكَّةَ، وَوَثَبَ الْقُرَّاءُ بِالْبَصْرَةِ، فَانْطَلَقْتُ مَعَ أَبِي إِلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ حَتَّى دَخَلْنَا عَلَيْهِ فِي دَارِهِ وَهْوَ جَالِسٌ فِي ظِلِّ عُلِّيَّةٍ لَهُ مِنْ قَصَبٍ، فَجَلَسْنَا إِلَيْهِ فَأَنْشَأَ أَبِي يَسْتَطْعِمُهُ الْحَدِيثَ فَقَالَ يَا أَبَا بَرْزَةَ أَلاَ تَرَى مَا وَقَعَ فِيهِ النَّاسُ فَأَوَّلُ شَىْءٍ سَمِعْتُهُ تَكَلَّمَ بِهِ إِنِّي احْتَسَبْتُ عِنْدَ اللَّهِ أَنِّي أَصْبَحْتُ سَاخِطًا عَلَى أَحْيَاءِ قُرَيْشٍ، إِنَّكُمْ يَا مَعْشَرَ الْعَرَبِ كُنْتُمْ عَلَى الْحَالِ الَّذِي عَلِمْتُمْ مِنَ الذِّلَّةِ وَالْقِلَّةِ وَالضَّلاَلَةِ، وَإِنَّ اللَّهَ أَنْقَذَكُمْ بِالإِسْلاَمِ وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم حَتَّى بَلَغَ بِكُمْ مَا تَرَوْنَ، وَهَذِهِ الدُّنْيَا الَّتِي أَفْسَدَتْ بَيْنَكُمْ، إِنَّ ذَاكَ الَّذِي بِالشَّأْمِ وَاللَّهِ إِنْ يُقَاتِلُ إِلاَّ عَلَى الدُّنْيَا.
பாடம்: 21
ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்...?40
7112. அபுல் மின்ஹால் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு ஸியாத் (பஸ்ராவிலிருந்து வெளியேறி ஷாம் நாட்டுக்கு வர, அங்கு) மர்வான் பின் அல்ஹகம் ஷாம் நாட்டில் (கிளர்ச்சியை ஆரம்பித்து) இருந்தபோது, மேலும் (அதே நேரத்தில்) மக்காவில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் பஸ்ராவில் காரிஜிய்யாக்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது நான் என் தந்தையுடன் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் சென்றேன்.
அன்னார் பேரீச்சங்கழியாலான உப்பரிகை ஒன்றில் அமர்ந்திருக்க அவர்களது இல்லத்தினுள் நுழைந்து அவர்களிடம் நாங்கள் அமர்ந்து கொண்டோம்.42 அப்போது என் தந்தை (சலாமா) அபூபர்ஸா (ரலி) அவர்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ளும் எண்ணத்தில் பேசத் தொடங்கினார்கள். “அபூபர்ஸா! மக்கள் எந்த விஷயத்தில் சிக்கிக்கொண்டுவிட்டார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று என் தந்தை கேட்டார்கள்.
அப்போது அபூபர்ஸா (ரலி) அவர்கள் பேசி நான் கேட்ட முதல் விஷயம் இதுதான். (அன்னார் கூறினார்கள்:) குறைஷிக் குடும்பங்கள் சிலவற்றின் மீது நான் கோபம் கொண்டவனாய் மாறியதற்கு அல்லாஹ்விடம் நற்பலனை எதிர்பார்க்கிறேன். (குறைஷியரிடம் நான் கூறினேன்:) அரபுகளே! நீங்கள் இழிவு, பொருளாதாரக் குறைவு மற்றும் வழிகேடு ஆகிய (மோசமான) நிலைகளில் இருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அல்லாஹ், இஸ்லாத்தின் மூலமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாகவும் உங்களைக் காப்பாற்றினான். அதன் விளைவாக நீங்கள் காண்கின்ற இந்த (கண்ணியம், வளமிக்க வாழ்வு, நல்வழி ஆகிய நல்ல) நிலைகளை அடைந்தீர்கள்.
இந்த உலக (மோக)ம் எத்தகைய தென்றால், உங்களுக்கிடையே அது சீர்கேட்டை(யும் குழப்பத்தையும்) விளைவித்துவிட்டது. ஷாம் நாட்டி óருக்கின்றாரே அவர் (மர்வான் பின் அல்ஹகம்), அல்லாஹ்வின் மீதாணையாக! உலக (ஆதாய)த்திற்காகவே போரிடுகின்றார். (இங்கு பஸ்ராவில்) உங்கள் முன்னே இருக்கின்றார்களே அவர்களும் (காரிஜிய்யாக்கள்), அல்லாஹ்வின் மீதாணையாக! உலக (ஆதாய)த்திற்காகவே போரிடுகின்றார்கள். மக்காவில் இருக்கின்றாரே அவரும் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்) உலக (ஆதாய)த்திற்காகவே போரிடுகின்றார்.

7113. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، قَالَ إِنَّ الْمُنَافِقِينَ الْيَوْمَ شَرٌّ مِنْهُمْ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانُوا يَوْمَئِذٍ يُسِرُّونَ وَالْيَوْمَ يَجْهَرُونَ.
பாடம்: 21
ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்...?40
7113. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இன்றிருக்கும் நயவஞ்சகர்கள் நபி (ஸல்) அவர்களது காலத்திலிருந்த நயவஞ்சகர்களைவிட மோசமானவர்கள் ஆவர். (ஏனெனில்) அன்று அவர்கள் இரகசியமாகச் செயல்பட்டுவந்தார்கள். இன்றோ இவர்கள் பகிரங்கமாகச் செயல்படுகின்றார்கள்.43

7114. حَدَّثَنَا خَلاَّدٌ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، عَنْ حُذَيْفَةَ، قَالَ إِنَّمَا كَانَ النِّفَاقُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَمَّا الْيَوْمَ فَإِنَّمَا هُوَ الْكُفْرُ بَعْدَ الإِيمَانِ.
பாடம்: 21
ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்...?40
7114. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நயவஞ்சகம் என்பதெல்லாம் (மக்கள் சிலரிடம்) நபி (ஸல்) அவர்களது காலத்தில்தான் இருந்தது. இன்றோ, இறைநம்பிக்கைக்குப்பின் இறைமறுப்பு மட்டுமே உள்ளது.44

7115. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ يَا لَيْتَنِي مَكَانَهُ "".
பாடம்: 22
மண்ணறை (கப்று)வாசிகளைக் கண்டு (உயிர்வாழ்வோர்) பொறாமைப்படும் நிலை உருவாகாத வரை மறுமை நாள் வராது.
7115. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்றை)க் கடந்து செல்லும் போது, “அந்தோ! நான் இவரது இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?” என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது.45
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

7116. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ "". وَذُو الْخَلَصَةَ طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الْجَاهِلِيَّةِ.
பாடம்: 23
சிலைகள் வணங்கப்படும் அளவுக் குக் காலம் மாறிவிடும்
7116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தவ்ஸ்’ குலப் பெண்களின் புட்டங்கள் ‘துல்கலஸா’ கடவுள் சிலையைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது. ‘துல்கலஸா’ என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.46