7088. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الْمُسْلِمِ غَنَمٌ، يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ "".
பாடம்: 14 குழப்பம் ஏற்பட்டுள்ளபோது கிராமத்திற்குக் குடிபெயர்தல்25
7088. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமின் செல்வங்களிலேயே ஆடு ஒன்றுதான் சிறந்த செல்வமாக மாறக்(கூடிய காலம் வரக்)கூடும். குழப்பங்களிலிருந்து தமது மார்க்க(விசு வாசத்)த்தைக் காப்பாற்றிக்கொள்ள அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு அவர் மலை உச்சிக்கும் மழைத்துளிகள் விழும் (கணவாய்கள், பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் சென்று வாழ்வார்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.27

அத்தியாயம் : 92
7089. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلُوا النَّبِيَّ صلى الله عليه وسلم حَتَّى أَحْفَوْهُ بِالْمَسْأَلَةِ، فَصَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ الْمِنْبَرَ فَقَالَ "" لاَ تَسْأَلُونِي عَنْ شَىْءٍ إِلاَّ بَيَّنْتُ لَكُمْ "". فَجَعَلْتُ أَنْظُرُ يَمِينًا وَشِمَالاً، فَإِذَا كُلُّ رَجُلٍ رَأْسُهُ فِي ثَوْبِهِ يَبْكِي، فَأَنْشَأَ رَجُلٌ كَانَ إِذَا لاَحَى يُدْعَى إِلَى غَيْرِ أَبِيهِ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ مَنْ أَبِي فَقَالَ "" أَبُوكَ حُذَافَةُ "". ثُمَّ أَنْشَأَ عُمَرُ فَقَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولاً، نَعُوذُ بِاللَّهِ مِنْ سُوءِ الْفِتَنِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا رَأَيْتُ فِي الْخَيْرِ وَالشَّرِّ كَالْيَوْمِ قَطُّ، إِنَّهُ صُوِّرَتْ لِي الْجَنَّةُ وَالنَّارُ حَتَّى رَأَيْتُهُمَا دُونَ الْحَائِطِ "". قَالَ قَتَادَةُ يُذْكَرُ هَذَا الْحَدِيثُ عِنْدَ هَذِهِ الآيَةِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ}
பாடம்: 15 குழப்பங்களிலிருந்து (இறைவனி டம்) பாதுகாப்புக் கோருவது
7089. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்கள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் சொற்பொழிவு மேடையின் மீதேறி, “(இன்று) நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப்போவதில்லை” என்று (கோபத்துடன்) கூறினார்கள். உடனே நான்வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொருவரும் தமது ஆடையால் தலையைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு மனிதர் பேசத் தொடங்கினார். அம்மனிதர் (பிறருடன்) சண்டைசச்சரவு செய்யும்போது அவருடைய தந்தையல்லாத மற்றொரு வரின் மகன் என அழைக்கப்பட்டுவந்தார். ஆகவே அவர், “அல்லாஹ்வின் நபியே! என் தந்தை யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தந்தை ஹுதாஃபா” என்று சொன்னார்கள்.

பிறகு உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டோம். குழப்பங்களின் தீங்கிலிருந்து (எங்களை) பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோருகின்றோம்” என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் ஒருபோதும் நான் கண்டதில்லை. எனக்கு (இன்று) சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்தச் சுவருக்கு அப்பால் நான் கண்டேன்” என்று சொன்னார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த நபிமொழி, “இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைக் குறித்துக் கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் (5:101ஆவது) இறை வசனத்தை ஓதும்போது நினைவுகூரப்படுவது வழக்கம்.28


அத்தியாயம் : 92
7090. وَقَالَ عَبَّاسٌ النَّرْسِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم بِهَذَا وَقَالَ كُلُّ رَجُلٍ لاَفًّا رَأْسَهُ فِي ثَوْبِهِ يَبْكِي. وَقَالَ عَائِذًا بِاللَّهِ مِنْ سُوءِ الْفِتَنِ. أَوْ قَالَ أَعُوذُ بِاللَّهِ مِنْ سُوءِ الْفِتَنِ.
பாடம்: 15 குழப்பங்களிலிருந்து (இறைவனி டம்) பாதுகாப்புக் கோருவது
7090. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் மக்களுக்கு நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸை அறிவித்துவிட்டுப் (பின்வருமாறு) கூறினார்கள்: அப்போது (அங்கிருந்த) ஒவ்வொருவரும் (நபியவர்களின் கோபத்தைக் கண்டு அஞ்சி) தமது ஆடையால் தலையைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள். மேலும், ‘குழப்பங்களின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோரிக்கொண்டிருந் தார்கள்’, அல்லது ‘குழப்பங்களின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்’.


அத்தியாயம் : 92
7091. وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، وَمُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا وَقَالَ عَائِذًا بِاللَّهِ مِنْ شَرِّ الْفِتَنِ.
பாடம்: 15 குழப்பங்களிலிருந்து (இறைவனி டம்) பாதுகாப்புக் கோருவது
7091. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (கேட்டு) மக்களுக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள். மேலும், “குழப்பங்களின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரியவர்களாக” என்றும் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 92
7092. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَامَ إِلَى جَنْبِ الْمِنْبَرِ فَقَالَ "" الْفِتْنَةُ هَا هُنَا الْفِتْنَةُ هَا هُنَا مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ "". أَوْ قَالَ "" قَرْنُ الشَّمْسِ "".
பாடம்: 16 “குழப்பம் கிழக்கிலிருந்து தோன்றும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7092. அப்துல்லாஹ் பின் உமர் ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் அருகில் நின்றுகொண்டு, (கிழக்குத் திசையைச் சுட்டிக்காட்டி) “குழப்பம் இங்குதான் தோன்றும்; குழப்பம் இங்குதான் தோன்றும். ‘ஷைத்தானின் கொம்பு’ அல்லது ‘சூரியனின் கொம்பு’ உதயமாகும் இடத்திலிருந்து” என்று சொன்னார்கள்.29


அத்தியாயம் : 92
7093. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ مُسْتَقْبِلٌ الْمَشْرِقَ يَقُولُ "" أَلاَ إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ "".
பாடம்: 16 “குழப்பம் கிழக்கிலிருந்து தோன்றும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7093. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிழக்கை நோக்கியவாறு, “அறிந்து கொள்ளுங்கள்! குழப்பம், ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இந்த இடத்திலிருந்து தோன்றும்” என்று சொல்ல நான் கேட்டேன்.


அத்தியாயம் : 92
7094. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَزْهَرُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ ذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَأْمِنَا، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا "". قَالُوا وَفِي نَجْدِنَا. قَالَ "" اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَأْمِنَا، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَفِي نَجْدِنَا فَأَظُنُّهُ قَالَ فِي الثَّالِثَةَ "" هُنَاكَ الزَّلاَزِلُ وَالْفِتَنُ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ "".
பாடம்: 16 “குழப்பம் கிழக்கிலிருந்து தோன்றும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7094. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் ஷாம் (சிரியா) நாட்டில் எங்களுக்கு வளம் வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு வளம் வழங்குவாயாக!” என்று சொன்னார்கள். மக்கள், “(இராக் திசையில் அமைந்த) எங்கள் ‘நஜ்த்’ பகுதியிலும் (வளம் வழங்குமாறு பிரார்த்தியுங்கள்)” என்று கேட்க, (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் வளம் வழங்குவாயாக! எங்கள் யமன் நாட்டில் வளம் வழங்குவாயாக!” என்றே பிரார்த்தித்தார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் ‘நஜ்த்’ பகுதியிலும் (வளம் வழங்குமாறு பிரார்த்தியுங்களேன்)” என்று (மீண்டும்) கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், -மூன்றாவது முறையில் என்று நினைக்கிறேன்- “அங்குதான் நில நடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்” என்று கூறினார்கள்.30


அத்தியாயம் : 92
7095. حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ بَيَانٍ، عَنْ وَبَرَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ خَرَجَ عَلَيْنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَرَجَوْنَا أَنْ يُحَدِّثَنَا، حَدِيثًا حَسَنًا ـ قَالَ ـ فَبَادَرَنَا إِلَيْهِ رَجُلٌ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ حَدِّثْنَا عَنِ الْقِتَالِ فِي الْفِتْنَةِ وَاللَّهُ يَقُولُ {وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ} فَقَالَ هَلْ تَدْرِي مَا الْفِتْنَةُ ثَكِلَتْكَ أُمُّكَ، إِنَّمَا كَانَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم يُقَاتِلُ الْمُشْرِكِينَ، وَكَانَ الدُّخُولُ فِي دِينِهِمْ فِتْنَةً، وَلَيْسَ كَقِتَالِكُمْ عَلَى الْمُلْكِ.
பாடம்: 16 “குழப்பம் கிழக்கிலிருந்து தோன்றும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7095. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மக்காவில் அரசியல் குழப்பம் நடந்து கொண்டிருந்தபோது) எங்களிடம் (ஒருநாள்) வந்தார்கள். அன்னார் எங்க ளுக்கு ஒரு நல்ல ஹதீஸை எடுத்துரைக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்த்தோம். இதற்கிடையில் ஒருவர் அவர்களை நோக்கி விரைந்துசென்று, “அபூஅப்திர் ரஹ்மானே! குழப்பத்தின்போது போர் புரிவது பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். அல்லாஹ்வோ, “குழப்பம் நீங்கும்வரை போரிடுங்கள்” என்று (8:39ஆவது வசனத்தில்) கூறுகின்றானே!” எனக் கேட்டார்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “தாயற்றுப்போவாய்! (இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள) ‘குழப்பம்’ என்னவென்று உனக்குத் தெரியுமா? முஹம்மத் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களுடன்தான் போரிட்டார்கள். இணைவைப்பாளர்களின் மார்க்கத்தில் இருப்பதுதான் குழப்பமே. ஆனால், (இன்று) ஆட்சியதிகாரத்திற்காக நீங்கள் போரிட்டுக்கொள்வதைப் போன்று அது இருக்கவில்லை” என்று பதிலளித்தார்கள்.31

அத்தியாயம் : 92
7096. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، سَمِعْتُ حُذَيْفَةَ، يَقُولُ بَيْنَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ عُمَرَ قَالَ أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْفِتْنَةِ. قَالَ "" فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَوَلَدِهِ وَجَارِهِ، تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصَّدَقَةُ وَالأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْىُ عَنِ الْمُنْكَرِ "". قَالَ لَيْسَ عَنْ هَذَا أَسْأَلُكَ، وَلَكِنِ الَّتِي تَمُوجُ كَمَوْجِ الْبَحْرِ. قَالَ لَيْسَ عَلَيْكَ مِنْهَا بَأْسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنَّ بَيْنَكَ وَبَيْنَهَا بَابًا مُغْلَقًا. قَالَ عُمَرُ أَيُكْسَرُ الْبَابُ أَمْ يُفْتَحُ قَالَ بَلْ يُكْسَرُ. قَالَ عُمَرُ إِذًا لاَ يُغْلَقَ أَبَدًا. قُلْتُ أَجَلْ. قُلْنَا لِحُذَيْفَةَ أَكَانَ عُمَرُ يَعْلَمُ الْبَابَ قَالَ نَعَمْ كَمَا أَعْلَمُ أَنَّ دُونَ غَدٍ لَيْلَةً، وَذَلِكَ أَنِّي حَدَّثْتُهُ حَدِيثًا لَيْسَ بِالأَغَالِيطِ. فَهِبْنَا أَنْ نَسْأَلَهُ مَنِ الْبَابُ فَأَمَرْنَا مَسْرُوقًا فَسَأَلَهُ فَقَالَ مَنِ الْبَابُ قَالَ عُمَرُ.
பாடம்: 17 கடல் அலை போன்று அடுக் கடுக்காய் வரும் குழப்பங்கள் கலஃப் பின் ஹவ்ஷப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: குழப்பங்கள் தலைதூக்கும்போது (கவிஞர்) இம்ரஉல் கைஸ்32 உடைய இப்பாடல்களை மக்கள் விருப்பமுடன் மேற்கோள்காட்டுவது வழக்கம். போர் மூளும்போது,அது ஓர் இளம் பெண்.தன் கவர்ச்சியால்பேதைகளை மயக்கஅவள் ஓடிவருகிறாள். போர்மூண்டு,அதன் பிழம்புகள்கொழுந்துவிட்டெரியும்போதுஎவரும் மணக்க முன்வராதகிழட்டுப் பெண்ணாய்அவள் ஓடிப்போகிறாள். கறுப்பு வெள்ளை முடி உடையவளாய்பார்க்க சகிக்காத நிறத்தவளாய்முத்தவோ முகரவோ முடியாதவளாய்உருக்குலைந்தவளாய் போய்விடுகிறாள்.
7096. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருமுறை கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தபோது அவர்கள், “உங்களில் யார் இனி தலை தூக்கவிருக்கும் (ஃபித்னா) குழப்பத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கின்றார்?” என்று கேட்டார்கள். நான், “ஒரு மனிதன் தன் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்கள்மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பதன் மூலமும்), தனது செல்வம் விஷயத்தில் (அது இறைவனைப் பணிந்து வாழும் வாழ்க்கையிலிருந்து திசைதிருப்புவதன் மூலமும்), தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது தொழுகை, தர்மம், நன்மை புரியும்படி கட்டளையிட்டு, தீமையிலிருந்து தடுத்தல் ஆகியன அதற்கான பரிகாரமாக அமையும்” என்று (நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் எனக்) கூறினேன்.

உமர் (ரலி) அவர்கள், “நான் (சோதனை எனும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதைப் பற்றிக் கேட்கவில்லை. கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (நபியவர்களால் முன்னறிவிக்கப்பட்ட குழப்பம் எனும் பொருள் கொண்ட ஃபித்னா)வைப் பற்றியே கேட்கிறேன்” என்று சொன்னார்கள்.

நான், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. (உங்கள் ஆட்சியில் அவற்றில் ஏதும் தலைதூக்கப் போவதில்லை.) உங்களுக்கும் அதற்குமிடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது” என்று கூறினேன். உமர் (ரலி) அவர்கள், “அந்தக் கதவு உடைக்கப்படுமா? அல்லது திறக்கப்படுமா?” என்று கேட்டார்கள்.

நான், “இல்லை; அது உடைக்கப்படும்” என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அப்படியானால் அது ஒருபோதும் மூடப்படாது” என்று சொன்னார்கள். நான், “ஆம் (சரிதான்)” என்று சொன்னேன்.

அறிவிப்பாளர் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், “உமர் (ரலி) அவர்கள் அந்தக் கதவு எதுவென்று அறிந்திருந்தார்களா?” என்று கேட்டோம். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “ஆம். பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று உமர் (ரலி) அவர்கள் அதை அறிந்திருந் தார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித் திருந்தேன்” என்று பதிலளித்தார்கள். அந்தக் கதவு எதுவென்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம்.

எனவே, அவர்களிடம் மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களைக் கேட்கச் சொன்னோம். அவர் அந்தக் கதவு எது என்று கேட்டதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், “உமர் (ரலி) அவர்கள்தான் அந்தக் கதவு” என்று பதிலளித்தார்கள்.33


அத்தியாயம் : 92
7097. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى حَائِطٍ مِنْ حَوَائِطِ الْمَدِينَةِ لِحَاجَتِهِ، وَخَرَجْتُ فِي إِثْرِهِ، فَلَمَّا دَخَلَ الْحَائِطَ جَلَسْتُ عَلَى بَابِهِ وَقُلْتُ لأَكُونَنَّ الْيَوْمَ بَوَّابَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَأْمُرْنِي فَذَهَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَضَى حَاجَتَهُ، وَجَلَسَ عَلَى قُفِّ الْبِئْرِ، فَكَشَفَ عَنْ سَاقَيْهِ وَدَلاَّهُمَا فِي الْبِئْرِ، فَجَاءَ أَبُو بَكْرٍ يَسْتَأْذِنُ عَلَيْهِ لِيَدْخُلَ فَقُلْتُ كَمَا أَنْتَ حَتَّى أَسْتَأْذِنَ لَكَ، فَوَقَفَ فَجِئْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ أَبُو بَكْرٍ يَسْتَأْذِنُ عَلَيْكَ. قَالَ "" ائْذَنْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ "". فَدَخَلَ فَجَاءَ عَنْ يَمِينِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَشَفَ عَنْ سَاقَيْهِ وَدَلاَّهُمَا فِي الْبِئْرِ، فَجَاءَ عُمَرُ فَقُلْتُ كَمَا أَنْتَ حَتَّى أَسْتَأْذِنَ لَكَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ائْذَنْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ "". فَجَاءَ عَنْ يَسَارِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَشَفَ عَنْ سَاقَيْهِ فَدَلاَّهُمَا فِي الْبِئْرِ، فَامْتَلأَ الْقُفُّ فَلَمْ يَكُنْ فِيهِ مَجْلِسٌ، ثُمَّ جَاءَ عُثْمَانُ فَقُلْتُ كَمَا أَنْتَ حَتَّى أَسْتَأْذِنَ لَكَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ائْذَنْ لَهُ، وَبَشِّرْهُ بِالْجَنَّةِ، مَعَهَا بَلاَءٌ يُصِيبُهُ "". فَدَخَلَ فَلَمْ يَجِدْ مَعَهُمْ مَجْلِسًا، فَتَحَوَّلَ حَتَّى جَاءَ مُقَابِلَهُمْ عَلَى شَفَةِ الْبِئْرِ، فَكَشَفَ عَنْ سَاقَيْهِ ثُمَّ دَلاَّهُمَا فِي الْبِئْرِ. فَجَعَلْتُ أَتَمَنَّى أَخًا لِي وَأَدْعُو اللَّهَ أَنْ يَأْتِيَ. قَالَ ابْنُ الْمُسَيَّبِ فَتَأَوَّلْتُ ذَلِكَ قُبُورَهُمُ اجْتَمَعَتْ هَا هُنَا وَانْفَرَدَ عُثْمَانُ.
பாடம்: 17 கடல் அலை போன்று அடுக் கடுக்காய் வரும் குழப்பங்கள் கலஃப் பின் ஹவ்ஷப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: குழப்பங்கள் தலைதூக்கும்போது (கவிஞர்) இம்ரஉல் கைஸ்32 உடைய இப்பாடல்களை மக்கள் விருப்பமுடன் மேற்கோள்காட்டுவது வழக்கம். போர் மூளும்போது,அது ஓர் இளம் பெண்.தன் கவர்ச்சியால்பேதைகளை மயக்கஅவள் ஓடிவருகிறாள். போர்மூண்டு,அதன் பிழம்புகள்கொழுந்துவிட்டெரியும்போதுஎவரும் மணக்க முன்வராதகிழட்டுப் பெண்ணாய்அவள் ஓடிப்போகிறாள். கறுப்பு வெள்ளை முடி உடையவளாய்பார்க்க சகிக்காத நிறத்தவளாய்முத்தவோ முகரவோ முடியாதவளாய்உருக்குலைந்தவளாய் போய்விடுகிறாள்.
7097. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றுக்குத் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னாலேயே நான் சென்றேன். இறுதியில் (குபாவிற்கு அருகிலுள்ள ‘பிஃரு அரீஸ்’ எனும்) தோட்டத்திற்குள் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது நான் அதன் தலைவாயிலில் அமர்ந்துகொண்டேன். நபியவர்கள் எனக்குக் கட்டளையிடாமலேயே “இன்றைய தினம் நான் அவர்களின் வாயிற்காவலனாக இருப்பேன்” என்று கூறிக்கொண்டேன்.

நபி (ஸல்) அவர்கள் சென்று தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டு (அங்கிருந்த) கிணற்றின் சுற்றுச் சுவரில் தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்கவிட்டபடி அமர்ந்துகொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து நபியவர்களிடம் செல்ல அன்னாரின் அனுமதி கேட்கும்படி சொன்னார்கள். நான், “உங்களுக்காக நான் (நபியவர்களிடம்) அனுமதி கேட்கும்வரை நீங்கள் அப்படியே (இங்கே) இருங்கள்” என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் (அவ்வாசலில்) நின்றுகொள்ள, நான் நபியவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! (இதோ!) அபூபக்ர் (ரலி) அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறுங்கள்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் வந்து தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் அவற்றை தொங்கவிட்டபடி அமர்ந்து கொண்டார்கள்.

பிறகு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நான், “இங்கேயே இருங்கள். உங்களுக்காக நான் நபி (ஸல்) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கின்றேன்” என்று கூறினேன். (நான் அவர்களுக்காக அனுமதி கேட்டபோது) நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று (என்னிடம்) கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் (உள்ளே) வந்து, நபி (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கம் தம் கால்களைத் திறந்து அந்தக் கிணற்றுக்குள் தொங்கவிட்டபடி அமர்ந்துகொண்டார்கள். அந்தச் சுவர் நிரம்பிவிட்டது. அதில் (இனி யாரும்) அமர்வதற்கு இடம் இருக்கவில்லை.

பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் வந்தார்கள். நான், “நீங்கள் இங்கேயே இருங்கள்; உங்களுக்காக நான் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டு வருகின்றேன்” என்று சொன்னேன். (நான் உள்ளே சென்றபோது) நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி கூறுங்கள். அத்துடன் அவருக்கு நேரவிருக்கும் சோதனையையும் கூறுங்கள்” என்றார்கள்.

(அவ்வாறே நான் அனுமதி வழங்கி நற்செய்தி தெரிவித்தேன்.) உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்து, ஏற்கெனவே அமர்ந்திருந்தவர்களுடன் அமர இடம் இல்லாததால் திரும்பிச் சென்று அவர்களுக்கு எதிரிலிருந்த அக்கிணற்றின் மற்றொரு சுற்றுச் சுவரில் தம் கால்களைத் திறந்து அவற்றைக் கிணற்றில் தொங்கவிட்டபடி அமர்ந்தார்கள்.

என் சகோதரர் ஒருவரை எதிர்பார்த்த படி அவர் (அங்கு) வர வேண்டும் என்று நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க லானேன்.

அறிவிப்பாளர் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான், “(நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் அவர்களுக்கு எதிரே உஸ்மான் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த நிலையும் தற்போது) அவர்களின் கப்றுகள் (மண்ணறைகள்) இங்கு ஒரே இடத்தில் அமைந்திருக்கும் நிலையையும் உஸ்மான் (ரலி) அவர்கள் பிரிந்து (‘ஜன்னத்துல் பகீஉ’ மையவாடிக்கு) சென்றுவிட்ட நிலையையும் குறிப்பதாக விளக்கம் கண்டேன்.34


அத்தியாயம் : 92
7098. حَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ قِيلَ لأُسَامَةَ أَلاَ تُكَلِّمُ هَذَا. قَالَ قَدْ كَلَّمْتُهُ مَا دُونَ أَنْ أَفْتَحَ بَابًا، أَكُونُ أَوَّلَ مَنْ يَفْتَحُهُ، وَمَا أَنَا بِالَّذِي أَقُولُ لِرَجُلٍ بَعْدَ أَنْ يَكُونَ أَمِيرًا عَلَى رَجُلَيْنِ أَنْتَ خَيْرٌ. بَعْدَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" يُجَاءُ بِرَجُلٍ فَيُطْرَحُ فِي النَّارِ، فَيَطْحَنُ فِيهَا كَطَحْنِ الْحِمَارِ بِرَحَاهُ، فَيُطِيفُ بِهِ أَهْلُ النَّارِ فَيَقُولُونَ أَىْ فُلاَنُ أَلَسْتَ كُنْتَ تَأْمُرُ بِالْمَعْرُوفِ، وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ فَيَقُولُ إِنِّي كُنْتُ آمُرُ بِالْمَعْرُوفِ وَلاَ أَفْعَلُهُ، وَأَنْهَى عَنِ الْمُنْكَرِ وَأَفْعَلُهُ "".
பாடம்: 17 கடல் அலை போன்று அடுக் கடுக்காய் வரும் குழப்பங்கள் கலஃப் பின் ஹவ்ஷப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: குழப்பங்கள் தலைதூக்கும்போது (கவிஞர்) இம்ரஉல் கைஸ்32 உடைய இப்பாடல்களை மக்கள் விருப்பமுடன் மேற்கோள்காட்டுவது வழக்கம். போர் மூளும்போது,அது ஓர் இளம் பெண்.தன் கவர்ச்சியால்பேதைகளை மயக்கஅவள் ஓடிவருகிறாள். போர்மூண்டு,அதன் பிழம்புகள்கொழுந்துவிட்டெரியும்போதுஎவரும் மணக்க முன்வராதகிழட்டுப் பெண்ணாய்அவள் ஓடிப்போகிறாள். கறுப்பு வெள்ளை முடி உடையவளாய்பார்க்க சகிக்காத நிறத்தவளாய்முத்தவோ முகரவோ முடியாதவளாய்உருக்குலைந்தவளாய் போய்விடுகிறாள்.
7098. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், “நீங்கள் இவரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம் இந்த அரசியல் குழப்பங்கள் தொடர்பாகப்) பேசக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது. அதற்கு உசாமா (ரலி) அவர்கள், “நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால், கலகத்திற்குக்) கதவைத் திறந்துவிடாமலேயே அவர்களிடம் (இரகசியமாகப்) பேசுகின்றேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறக்கும் முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை.

மேலும், ஒரு மனிதர் இரண்டு பேருக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதனால் அவரை ‘மக்களில் நீங்கள்தான் சிறந்தவர்’ என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (ஒரு விஷயத்தை) நான் செவியுற்ற பிறகு (அவ்வாறு நான் சொல்லமாட்டேன்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டு அவர் நரகத்தில் வீசப்படுவார். கழுதை தனது செக்கைச் சுற்றிவருவதைப் போன்று அவர் நரகில் சுற்றிவருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, “இன்னாரே (உமக்கேன் இந்த நிலை?) நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாம் என (அவர்களைத்) தடுத்துக்கொண்டிருக்(கும் நற்பணி செய்துகொண்டிருக்)கவில்லையா?” என்று கேட்பார்கள்.

அதற்கு அந்த மனிதர், “நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாம் என்று (மக்களை) நான் தடுத்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்” என்று கூறுவார்.35

அத்தியாயம் : 92
7099. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ لَقَدْ نَفَعَنِي اللَّهُ بِكَلِمَةٍ أَيَّامَ الْجَمَلِ لَمَّا بَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَّ فَارِسًا مَلَّكُوا ابْنَةَ كِسْرَى قَالَ "" لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمُ امْرَأَةً "".
பாடம்: 1836
7099. அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘ஜமல்’ போர் சமயத்தில் (ஆயிஷா (ரலி) அவர்களின் ஆதரவாளர்களுடன் சேர்ந்துகொண்டு நான் போரிட முற்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற் றிருந்த) ஒரு சொல் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளித்தான்.

பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “தமது விவகாரத்தை ஒரு பெண்ணிடம் (முழுமையாக) ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் வெல்லாது” என்று சொன்னார்கள். (இதுதான் எனக்குப் பயனளித்த நபி (ஸல்) அவர்களின் சொல்.)37


அத்தியாயம் : 92
7100. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، حَدَّثَنَا أَبُو مَرْيَمَ عَبْدُ اللَّهِ بْنُ زِيَادٍ الأَسَدِيُّ، قَالَ لَمَّا سَارَ طَلْحَةُ وَالزُّبَيْرُ وَعَائِشَةُ إِلَى الْبَصْرَةِ بَعَثَ عَلِيٌّ عَمَّارَ بْنَ يَاسِرٍ وَحَسَنَ بْنَ عَلِيٍّ، فَقَدِمَا عَلَيْنَا الْكُوفَةَ فَصَعِدَا الْمِنْبَرَ، فَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ فَوْقَ الْمِنْبَرِ فِي أَعْلاَهُ، وَقَامَ عَمَّارٌ أَسْفَلَ مِنَ الْحَسَنِ، فَاجْتَمَعْنَا إِلَيْهِ فَسَمِعْتُ عَمَّارًا يَقُولُ إِنَّ عَائِشَةَ قَدْ سَارَتْ إِلَى الْبَصْرَةِ، وَوَاللَّهِ إِنَّهَا لَزَوْجَةُ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم فِي الدُّنْيَا وَالآخِرَةِ، وَلَكِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى ابْتَلاَكُمْ، لِيَعْلَمَ إِيَّاهُ تُطِيعُونَ أَمْ هِيَ.
பாடம்: 1836
7100. அபூமர்யம் அப்துல்லாஹ் பின் ஸியாத் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஜமல் பேரின்போது) தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் (இராக்கிலுள்ள) ‘பஸ்ரா’வுக்குச் சென்றபோது அலீ (ரலி) அவர்கள், அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களையும் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களையும் (மக்களைத் திரட்டுமாறு கூஃபாவுக்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்கள் இருவரும் எங்களிடம் கூஃபாவுக்கு வந்து சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) ஏறினர். ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையில் அதன்மேல் தளத்தில் இருந்தார்கள். அம்மார் (ரலி) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்குக் கீழே நின்றிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம் ஒன்றுதிரண்டோம்.

அப்போது அம்மார் (ரலி) அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள் பஸ்ராவுக்குச் சென்றுவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் உங்கள் நபியின் துணைவியார் ஆவார்கள். (அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.) ஆனால், வளமும் உயர்வும் உடைய அல்லாஹ், நீங்கள் அவனுக்குக் கீழ்ப்படிகிறீர்களா? அல்லது ஆயிஷாவுக்குக் கீழ்ப்படி கிறீர்களா? என்று (வெளிப்படையாக) அறிந்துகொள்வதற்காக உங்களைச் சோதிக்கின்றான்” என்று சொல்லக் கேட்டேன்.


அத்தியாயம் : 92
7101. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي غَنِيَّةَ، عَنِ الْحَكَمِ، عَنْ أَبِي وَائِلٍ، قَامَ عَمَّارٌ عَلَى مِنْبَرِ الْكُوفَةِ، فَذَكَرَ عَائِشَةَ وَذَكَرَ مَسِيرَهَا وَقَالَ إِنَّهَا زَوْجَةُ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم فِي الدُّنْيَا وَالآخِرَةِ، وَلَكِنَّهَا مِمَّا ابْتُلِيتُمْ.
பாடம்: 1836
7101. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூஃபாவின் (பள்ளிவாசல்) மிம்பரில் நின்று ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றியும் (தம் ஆதரவாளர்களுடன் பஸ்ராவுக்கு) அவர்கள் மேற்கொண்ட பயணம் பற்றியும் குறிப்பிட்டுவிட்டு, “ஆயிஷா (ரலி) அவர்கள், இந்த உலகிலும் மறுமையிலும் உங்கள் நபியின் துணைவியார் ஆவார்கள். ஆனால், அவர் மூலம் நீங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளீர்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 92
7102. حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي عَمْرٌو، سَمِعْتُ أَبَا وَائِلٍ، يَقُولُ دَخَلَ أَبُو مُوسَى وَأَبُو مَسْعُودٍ عَلَى عَمَّارٍ حَيْثُ بَعَثَهُ عَلِيٌّ إِلَى أَهْلِ الْكُوفَةِ يَسْتَنْفِرُهُمْ فَقَالاَ مَا رَأَيْنَاكَ أَتَيْتَ أَمْرًا أَكْرَهَ عِنْدَنَا مِنْ إِسْرَاعِكَ فِي هَذَا الأَمْرِ مُنْذُ أَسْلَمْتَ. فَقَالَ عَمَّارٌ مَا رَأَيْتُ مِنْكُمَا مُنْذُ أَسْلَمْتُمَا أَمْرًا أَكْرَهَ عِنْدِي مِنْ إِبْطَائِكُمَا عَنْ هَذَا الأَمْرِ. وَكَسَاهُمَا حُلَّةً حُلَّةً، ثُمَّ رَاحُوا إِلَى الْمَسْجِدِ.
பாடம்: 1836
7102. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஜமல் போரின்போது பஸ்ராவுக்குச் செல்லுமாறு) மக்களைத் தூண்டும்படி கூஃபாவாசிகளிடம் அம்மார் (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்கள் அனுப்பியிருந்தார்கள். அப்போது அம்மாரைச் சந்திக்க அபூமூசா (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் வந்தார்கள். அவர்களிருவரும் (அம்மாரிடம்), “(ஆயிஷாவை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தீவிரத்தைத்தான் இஸ்லாத்தை ஏற்றதிóருந்து நீங்கள் செய்தவற்றிலேயே எங்களுக்கு அறவே பிடிக்காத செயலாக நாங்கள் கருதுகின்றோம்” என்று சொன்னார்கள்.

அப்போது அம்மார் (ரலி) அவர்கள், “(அலி (ரலி) அவர்களுடன் சேர்ந்து ஆயிஷா (ரலி) அவர்களை எதிர்க்காமல்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தாமதத்தைத்தான் இஸ்லாத்தை ஏற்றதிóருந்து நீங்கள் இருவரும் செய்தவற்றிலேயே எனக்கு அறவே பிடிக்காத செயலாக நான் கருதுகிறேன்” என்று சொன்னார்கள். பின்னர் அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் மற்ற இருவருக்கும் ஆளுக்கொரு அங்கியை அணிவித்தார்கள். பிறகு அவர்கள் (அனைவரும்) பள்ளிவாசலுக்குச் சென்றுவிட்டார்கள்.


அத்தியாயம் : 92
7105. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، كُنْتُ جَالِسًا مَعَ أَبِي مَسْعُودٍ وَأَبِي مُوسَى وَعَمَّارٍ فَقَالَ أَبُو مَسْعُودٍ مَا مِنْ أَصْحَابِكَ أَحَدٌ إِلاَّ لَوْ شِئْتُ لَقُلْتُ فِيهِ غَيْرَكَ، وَمَا رَأَيْتُ مِنْكَ شَيْئًا مُنْذُ صَحِبْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْيَبَ عِنْدِي مِنِ اسْتِسْرَاعِكَ فِي هَذَا الأَمْرِ. قَالَ عَمَّارٌ يَا أَبَا مَسْعُودٍ وَمَا رَأَيْتُ مِنْكَ وَلاَ مِنْ صَاحِبِكَ هَذَا شَيْئًا مُنْذُ صَحِبْتُمَا النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْيَبَ عِنْدِي مِنْ إِبْطَائِكُمَا فِي هَذَا الأَمْرِ. فَقَالَ أَبُو مَسْعُودٍ وَكَانَ مُوسِرًا يَا غُلاَمُ هَاتِ حُلَّتَيْنِ. فَأَعْطَى إِحْدَاهُمَا أَبَا مُوسَى وَالأُخْرَى عَمَّارًا وَقَالَ رُوحَا فِيهِ إِلَى الْجُمُعَةِ.
பாடம்: 1836
7105. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூமஸ்ஊத் (ரலி), அபூமூசா (ரலி), அம்மார் (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் (அம்மார் (ரலி) அவர்களிடம்,) “(இப்போரில்) உங்கள் (அணியிலுள்ள) தோழர்களில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் நான் நினைத்தால் குறைகூற முடியும்; உங்களைத் தவிர. நீங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டதிóருந்து (ஆயிஷா-ரலி) அவர்களை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தீவிரத்தைப் போன்று வேறு எந்தப் பெருங்குறையையும் உங்களிடம் நான் காணவில்லை” என்று சொன்னார்கள்.

அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், “அபூமஸ்ஊத் அவர்களே! நீங்களும் உங்களுடைய இந்தத் தோழரும் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டதிலிருந்து (ஆயிஷா (ரலி) அவர்களை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்களிருவரும் காட்டும் தாமதத்தைப் போன்று வேறு எந்தப் பெருங்குறையையும் உங்களிடம் நான் காணவில்லை” என்று சொன்னார்கள்.

வசதியானவராய் இருந்த அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அப்போது, “பணியாளரே! இரண்டு அங்கிகளைக் கொண்டுவா!” என்று உத்தரவிட்டு, (அவை கொண்டு வரப்பட்டவுடன்) அவ்விரண்டில் ஒன்றை அபூமூசா (ரலி) அவர்களுக்கும் மற்றொன்றை அம்மார் (ரலி) அவர்களுக் கும் கொடுத்தார்கள். பிறகு, “இதை அணிந்துகொண்டு இருவரும் ஜுமுஆ தொழுகைக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 92