7057. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اسْتَعْمَلْتَ فُلاَنًا وَلَمْ تَسْتَعْمِلْنِي. قَالَ "" إِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي "".
பாடம்: 2
“எனக்குப் பிறகு நீங்கள் வெறுக் கின்ற பல விஷயங்களைக் காண்பீர்கள்” என்று (அன்சாரி களிடம்) நபி (ஸல்) அவர்கள் கூறியது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அன்சாரிகளே!) என்னை (மறுமை யில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகே சந்திக்கும்வரை (நிலைகுலையாது) பொறுமையுடன் இருங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6
7057. உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அன்சாரிகளில்) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “இன்னாரை நீங்கள் அதிகாரியாக நியமித்தீர்கள்; என்னை நீங்கள் அதிகாரியாக நியமிக்கவில்லையே?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “எனக்குப் பிறகு (உங்களைவிட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை அளிக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில்) என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுத்திருங்கள்” என்று சொன்னார்கள்.8
அத்தியாயம் : 92

7058. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي جَدِّي، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ أَبِي هُرَيْرَةَ فِي مَسْجِدِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ وَمَعَنَا مَرْوَانُ قَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ الصَّادِقَ الْمَصْدُوقَ يَقُولُ "" هَلَكَةُ أُمَّتِي عَلَى يَدَىْ غِلْمَةٍ مِنْ قُرَيْشٍ "". فَقَالَ مَرْوَانُ لَعْنَةُ اللَّهِ عَلَيْهِمْ غِلْمَةً. فَقَالَ أَبُو هُرَيْرَةَ لَوْ شِئْتُ أَنْ أَقُولَ بَنِي فُلاَنٍ وَبَنِي فُلاَنٍ لَفَعَلْتُ. فَكُنْتُ أَخْرُجُ مَعَ جَدِّي إِلَى بَنِي مَرْوَانَ حِينَ مَلَكُوا بِالشَّأْمِ، فَإِذَا رَآهُمْ غِلْمَانًا أَحْدَاثًا قَالَ لَنَا عَسَى هَؤُلاَءِ أَنْ يَكُونُوا مِنْهُمْ قُلْنَا أَنْتَ أَعْلَمُ.
பாடம்: 3
“என் சமுதாயத்தாரின் அழிவு விவரமில்லாத இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
7058. சயீத் பின் அம்ர் பின் சயீத் அல்உமவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவில் நபி (ஸல்) அவர் களின் பள்ளிவாசலில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது எங்களுடன் மர்வான் பின் அல்ஹகமும் இருந்தார். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “உண்மையாளரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தாரின் அழிவு குறைஷி இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது’ என்று சொல்ல நான் கேட்டேன்” என்றார்கள்.
அப்போது மர்வான், “இந்த இளைஞர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று சொன்னார். உடனே அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நான் நினைத்தால் (அந்த இளைஞர்கள்) இன்னாரின் மக்கள், இன்னாரின் மக்கள் என்று (குறிப்பிட்டுச்) சொல்ல முடியும்” என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:)
நான் என் பாட்டனார் சயீத் பின் அம்ர் பின் சயீத் அல்உமவீ (ரஹ்) அவர்களுடன் ‘பனூ மர்வான்’ குலத்தாரிடம் அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்கு அதிபர்களான வேளையில் சென்றிருந்தேன். அவர்கள் இளம் வாலிபர்களாக இருப்பதைப் பார்த்துவிட்டு எங்களிடம், “இவர்கள் (அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்ட) அந்த இளைஞர்களாக இருக்கலாம்” என்று என் பாட்டனார் கூறினார்கள். நாங்கள், “நீங்கள்தான் (இது பற்றி எங்களைவிட) அதிகமாக அறிந்தவர்கள்” என்று கூறினோம்.9

7059. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، أَنَّهُ سَمِعَ الزُّهْرِيَّ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ ـ رضى الله عنهن ـ أَنَّهَا قَالَتِ اسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ النَّوْمِ مُحْمَرًّا وَجْهُهُ يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَاجُوجَ وَمَاجُوجَ مِثْلُ هَذِهِ "". وَعَقَدَ سُفْيَانُ تِسْعِينَ أَوْ مِائَةً. قِيلَ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ "" نَعَمْ، إِذَا كَثُرَ الْخَبَثُ "".
பாடம்: 4
“நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7059. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து முகம் சிவந்த நிலையில் (பின்வருமாறு) கூறியபடியே எழுந்தார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
-அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (‘இந்த அளவுக்கு’ என்று கூறியபோது, தமது கை விரல்களால் அரபி எண் வடிவில்) 90 அல்லது 100 என்று மடித்துக் காட்டினார்கள்.-
அப்போது “நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம். தீமை பெருத்துவிட்டால்” என்று பதிலளித்தார்கள்.10

7060. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ،. وَحَدَّثَنِي مَحْمُودٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْد ٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَشْرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى أُطُمٍ مِنْ آطَامِ الْمَدِينَةِ فَقَالَ "" هَلْ تَرَوْنَ مَا أَرَى "". قَالُوا لاَ. قَالَ "" فَإِنِّي لأَرَى الْفِتَنَ تَقَعُ خِلاَلَ بُيُوتِكُمْ كَوَقْعِ الْقَطْرِ "".
பாடம்: 4
“நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7060. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக் கொண்டு (நோட்டமிட்டவாறு), “நான் பார்க் கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா?” என்று கேட்க மக்கள், “இல்லை” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் விளையப்போவதைப் பார்க்கின்றேன்” என்று சொன்னார்கள்.11
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

7061. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَتَقَارَبُ الزَّمَانُ، وَيَنْقُصُ الْعَمَلُ، وَيُلْقَى الشُّحُّ، وَتَظْهَرُ الْفِتَنُ، وَيَكْثُرُ الْهَرْجُ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّمَ هُوَ. قَالَ "" الْقَتْلُ الْقَتْلُ "".
وَقَالَ شُعَيْبٌ وَيُونُسُ وَاللَّيْثُ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 5
குழப்பங்கள் தோன்றுதல்
7061. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய் விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கருமித்தனம் உருவாக்கப்பட்டுவிடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று கூறினார்கள்.
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது என்ன (ஹர்ஜ்)?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “கொலை, கொலை” என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

7062. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى فَقَالاَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ بَيْنَ يَدَىِ السَّاعَةِ لأَيَّامًا يَنْزِلُ فِيهَا الْجَهْلُ، وَيُرْفَعُ فِيهَا الْعِلْمُ، وَيَكْثُرُ فِيهَا الْهَرْجُ، وَالْهَرْجُ الْقَتْلُ ".
பாடம்: 5
குழப்பங்கள் தோன்றுதல்
7062. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளுக்குமுன் ஒரு கால கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டுவிடும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அபூமூசா அல்அஷ் அரீ (ரலி) அவர்களும் அறிவிக்கிறார் கள்.

7064. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، قَالَ جَلَسَ عَبْدُ اللَّهِ وَأَبُو مُوسَى فَتَحَدَّثَا فَقَالَ أَبُو مُوسَى قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ بَيْنَ يَدَىِ السَّاعَةِ أَيَّامًا يُرْفَعُ فِيهَا الْعِلْمُ، وَيَنْزِلُ فِيهَا الْجَهْلُ، وَيَكْثُرُ فِيهَا الْهَرْجُ، وَالْهَرْجُ الْقَتْلُ "".
பாடம்: 5
குழப்பங்கள் தோன்றுதல்
7064. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், “மறுமை நாளுக்கு முன்பு ஒரு காலகட்டம் வரும். அப்போது கல்வி அகற்றப்பட்டுவிடும்; அறியாமை நிலவும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள்.

7065. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ إِنِّي لَجَالِسٌ مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى ـ رضى الله عنهما ـ فَقَالَ أَبُو مُوسَى سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم مِثْلَهُ، وَالْهَرْجُ بِلِسَانِ الْحَبَشَةِ الْقَتْلُ.
பாடம்: 5
குழப்பங்கள் தோன்றுதல்
7065. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லக் கேட்டேன். மேலும், ‘ஹர்ஜ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் ‘கொலை’ என்பது பொருள்” எனக் கூறினார்கள்.

7066. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، وَأَحْسِبُهُ، رَفَعَهُ قَالَ "" بَيْنَ يَدَىِ السَّاعَةِ أَيَّامُ الْهَرْجِ، يَزُولُ الْعِلْمُ، وَيَظْهَرُ فِيهَا الْجَهْلُ "". قَالَ أَبُو مُوسَى وَالْهَرْجُ الْقَتْلُ بِلِسَانِ الْحَبَشَةِ.
பாடம்: 5
குழப்பங்கள் தோன்றுதல்
7066. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலகட்டம் வரும். அப்போது கல்வி மறைந்துபோய் அறியாமை வெளிப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூமூசா (ரலி) அவர்கள், “ ‘ஹர்ஜ்’ என்பது அபீசீனிய மொழியில் கொலை யைக் குறிக்கும்” என்று கூறுகிறார்கள்.

7067. وَقَالَ أَبُو عَوَانَةَ عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ الأَشْعَرِيِّ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ تَعْلَمُ الأَيَّامَ الَّتِي ذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَيَّامَ الْهَرْجِ. نَحْوَهُ. قَالَ ابْنُ مَسْعُودٍ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مِنْ شِرَارِ النَّاسِ مَنْ تُدْرِكُهُمُ السَّاعَةُ وَهُمْ أَحْيَاءٌ "".
பாடம்: 5
குழப்பங்கள் தோன்றுதல்
7067. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “கொலைகள் மலிந்த காலம் வரும் என்று மேற்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய காலத்தை நீங்கள் அறிவீர்கள்” என்றேன். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (கூடுதலாகப் பின்வருமாறு) சொன்னார்கள்:
யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமை நாள் வந்தடைகிறதோ அவர்கள்தான் மக்களிலேயே தீயோர் ஆவர் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

7068. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، قَالَ أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنَ الْحَجَّاجِ فَقَالَ "" اصْبِرُوا، فَإِنَّهُ لاَ يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلاَّ الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ "". سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم.
பாடம்: 6
பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மோசமாகவே இருக்கும்.12
7068. ஸுபைர் பின் அதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து முறையிட் டோம். அதற்கு அவர்கள், “நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும்வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்” என்று கூறிவிட்டு, “இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற் றேன்” என்று சொன்னார்கள்.

7069. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ هِنْدٍ بِنْتِ الْحَارِثِ الْفِرَاسِيَّةِ، أَنَّ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتِ اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةً فَزِعًا يَقُولُ "" سُبْحَانَ اللَّهِ مَاذَا أَنْزَلَ اللَّهُ مِنَ الْخَزَائِنِ وَمَاذَا أُنْزِلَ مِنَ الْفِتَنِ، مَنْ يُوقِظُ صَوَاحِبَ الْحُجُرَاتِ ـ يُرِيدُ أَزْوَاجَهُ ـ لِكَىْ يُصَلِّينَ، رُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا، عَارِيَةٍ فِي الآخِرَةِ "".
பாடம்: 6
பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மோசமாகவே இருக்கும்.12
7069. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு(நாள்) இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திடீரென) பதற்றத் துடன் விழித்தெழுந்து, “அல்லாஹ் தூயவன்! (இன்றிரவு) அல்லாஹ் இறக்கிவைத்த கருவூலங்கள்தான் என்ன! (இன்றிரவு) இறக்கிவைக்கப்பட்ட குழப்பங்கள்தான் என்ன! -தம் துணைவியரை மனத்தில் கொண்டு- இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பிவிடுகின்றவர் யார்? அவர்கள் (அல்லாஹ்வைத்) தொழட்டும்! ஏனெனில், இவ்வுலகில் உடையணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள்.13
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 92
7069. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு(நாள்) இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திடீரென) பதற்றத் துடன் விழித்தெழுந்து, “அல்லாஹ் தூயவன்! (இன்றிரவு) அல்லாஹ் இறக்கிவைத்த கருவூலங்கள்தான் என்ன! (இன்றிரவு) இறக்கிவைக்கப்பட்ட குழப்பங்கள்தான் என்ன! -தம் துணைவியரை மனத்தில் கொண்டு- இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பிவிடுகின்றவர் யார்? அவர்கள் (அல்லாஹ்வைத்) தொழட்டும்! ஏனெனில், இவ்வுலகில் உடையணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள்.13
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 92
7070. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا "".
பாடம்: 7
“நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது14
7070. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

7071. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا "".
பாடம்: 7
“நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது14
7071. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

7072. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يُشِيرُ أَحَدُكُمْ عَلَى أَخِيهِ بِالسِّلاَحِ، فَإِنَّهُ لاَ يَدْرِي لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ، فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ "".
பாடம்: 7
“நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது14
7072. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி)விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்து விடக்கூடும்.15
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

7073. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قُلْتُ لِعَمْرٍو يَا أَبَا مُحَمَّدٍ سَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ مَرَّ رَجُلٌ بِسِهَامٍ فِي الْمَسْجِدِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمْسِكْ بِنِصَالِهَا "". قَالَ نَعَمْ.
பாடம்: 7
“நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது14
7073. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், “அபூமுஹம்மதே! (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஒருவர் அம்பு களுடன் நடந்துசென்றார்; அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அம்புகளின் முனைகளைப் பிடித்து (மறைத்து)க்கொள்’ என்று அவரிடம் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?” என்று வினவினேன். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.16

7074. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، مَرَّ فِي الْمَسْجِدِ بِأَسْهُمٍ قَدْ أَبْدَى نُصُولَهَا، فَأُمِرَ أَنْ يَأْخُذَ بِنُصُولِهَا، لاَ يَخْدِشُ مُسْلِمًا.
பாடம்: 7
“நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது14
7074. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் பள்ளிவாசலில் அம்புகள் சிலவற்றை அவற்றின் முனைகள் வெளியே தெரியுமாறு எடுத்துச் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவற்றின் முனைகளைப் பிடித்து (மறைத்து)க்கொண்டு எந்த முஸ்லிமையும் கீறிவிடாதபடி செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

7075. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا مَرَّ أَحَدُكُمْ فِي مَسْجِدِنَا أَوْ فِي سُوقِنَا وَمَعَهُ نَبْلٌ فَلْيُمْسِكْ عَلَى نِصَالِهَا ـ أَوْ قَالَ فَلْيَقْبِضْ بِكَفِّهِ ـ أَنْ يُصِيبَ أَحَدًا مِنَ الْمُسْلِمِينَ مِنْهَا شَىْءٌ "".
பாடம்: 7
“நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது14
7075. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம்முடன் அம்பை எடுத்துக்கொண்டு நமது பள்ளிவாசலில், அல்லது நமது கடைவீதியில் நடந்து சென்றால், அவர் ‘அவற்றின் முனைகளை (மறைத்து)ப் பிடித்துக்கொள்ளட்டும்’. அல்லது ‘தமது கைக்குள் (அதன் முனையை) மூடிவைத்துக்கொள்ளட்டும்’. அவற்றில் எதுவும் முஸ்லிம்களில் யாரையும் கீறிவிடக் கூடாது.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 92
7075. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம்முடன் அம்பை எடுத்துக்கொண்டு நமது பள்ளிவாசலில், அல்லது நமது கடைவீதியில் நடந்து சென்றால், அவர் ‘அவற்றின் முனைகளை (மறைத்து)ப் பிடித்துக்கொள்ளட்டும்’. அல்லது ‘தமது கைக்குள் (அதன் முனையை) மூடிவைத்துக்கொள்ளட்டும்’. அவற்றில் எதுவும் முஸ்லிம்களில் யாரையும் கீறிவிடக் கூடாது.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 92
7076. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ "".
பாடம்: 8
“எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்கின்ற இறைமறுப் பாளர்களாய் மாறிவிட வேண் டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7076. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவச் செயலாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பு (போன்ற குற்றச்செயல்) ஆகும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.17