6988. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ "". رَوَاهُ ثَابِتٌ وَحُمَيْدٌ وَإِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ وَشُعَيْبٌ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 4
நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
6988. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் அனஸ் (ரலி) அவர்களிட மிருந்தும் வந்துள்ளது.
அத்தியாயம் : 91

6989. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" الرُّؤْيَا الصَّالِحَةُ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ "".
பாடம்: 4
நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
6989. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

6990. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" لَمْ يَبْقَ مِنَ النُّبُوَّةِ إِلاَّ الْمُبَشِّرَاتُ "". قَالُوا وَمَا الْمُبَشِّرَاتُ قَالَ "" الرُّؤْيَا الصَّالِحَةُ "".
பாடம்: 5
நற்செய்தி (கூறும் கனவு)கள்
6990. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நற்செய்தி கூறுபவை (‘முபஷ்ஷிராத்’) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை” என்று கூற நான் கேட்டேன். அப்போது மக்கள் “நற்செய்தி கூறுபவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “நல்ல (உண்மையான) கனவு” என்று விடையளித்தார்கள்.

6991. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنه ـ أَنَّ أُنَاسًا، أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، وَأَنَّ أُنَاسًا أُرُوا أَنَّهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْتَمِسُوهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ "".
பாடம்: 6
(இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் கண்ட கனவு
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
யூசுஃப் தம் தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும் சூரியனும் சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம்பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது, “என் அருமை மகனே! உனது கனவைப் பற்றி உன் சகோதரர்களிடம் எடுத்துரைக்க வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு (எதிராக) சதி செய்வார்கள்; (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க எதிரி ஆவான்.
இவ்வாறே உம்முடைய இறைவன் உம்மைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உமக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உம்மீதும், யஅகூபின் சந்ததியர் மீதும் முழுமையாகச் சொரிவான். இதற்கு முன்னர் உம்முடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர்மீதும் தன் அருளை அவன் முழுமையாகச் சொரிந்ததைப் போன்று. நிச்சயமாக உம்முடைய இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையோனும் ஆவான். (12:4-6)
மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியணையின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லாரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர் களாகச்) சிரம்பணிந்து விழுந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இதுதான் முன்பு நான் கண்ட கனவின் விளக்கமாகும்; அதை என் இறைவன் நனவாக்கிவிட்டான். மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையே ஷைத்தான் பிரிவினையை உண்டாக்கிவிட்ட பின்னர் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டுவந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான். நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுணுக்கமாகச் செய்கின்றவன்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார்.
“என் இறைவா! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்குக் கற்றுத்தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்óமாகவே என்னை நீ இறக்கச் செய்வாயாக! இன்னும் நல்லோருடன் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.) (12:100, 101)
(அபூஅப்தில்லாஹ் புகாரீ கூறுகின் றேன்:)
(12:101ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘ஃபாத்திர்’ (படைத்தவன்) எனும் சொல்லும் அல்பதீஉ, அல்முப்திஉ, அல்பாரிஉ, அல்காலிக் ஆகிய சொற்களும் ஒரே பொருள் கொண்டவை ஆகும். (மேலும், 12:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பத்வு’ எனும் சொல்லுக்கு ‘கிராமம்’ என்பது பொருள்.
பாடம்: 7
(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ட கனவு
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
பின்னர் இஸ்மாயீல் (தம் தந்தை) இப்ராஹீமுடன் நடக்கும் பருவத்தை அடைந்தபோது, “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டேன். இதைப் பற்றி உமது கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” என்று இப்ராஹீம் கூறினார். அதற்கு இஸ்மாயீல், “என்னருமைத் தந்தையே! உங்களுக்கு இடப்பெற்ற கட்டளையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் இணங்கி, (இப்ராஹீம்) இஸ்மாயீலைப் பலியிட முகம்குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை அழைத்து, “இப்ராஹீம்! உறுதியாகவே நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே நற்பலன் அளிக்கிறோம்.” என்று கூறினோம். (37:102-105)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறி னார்கள்:
(37:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்லமா’ என்பதற்கு ‘(இப்ராஹீம் இஸ்மாயீல் ஆகிய) இருவரும் இறைவனின் கட்டளைக்கு இணங்கினர்’ என்பது பொருள். “மேலும், ‘வ தல்லஹு’ என்பதற்கு, “இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீலை (அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தினார்கள்’ என்பது பொருள்.
பாடம்: 8
பலர் காணும் கனவு ஒத்திருப்பது
6991. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்களில்) சிலருக்கு ‘லைலத்துல் கத்ர்’ (எனும் மகத்துவமிக்க) இரவு (ரமளான் மாதத்தில்) கடைசி ஏழுநாட்களில் இருப்பதாகக் கனவில் காட்டப்பட்டது. இன்னும் சிலருக்கு அது (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் இருப்பதாகக் கனவில் காட்டப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதைக் கடைசி ஏழு நாட்களில் தேடிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.6

6992. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَأَبَا، عُبَيْدٍ أَخْبَرَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ يُوسُفُ، ثُمَّ أَتَانِي الدَّاعِي لأَجَبْتُهُ "".
பாடம்: 9
சிறைக் கைதிகள், குழப்பவாதிகள் மற்றும் இணைவைப்போர் காணும் கனவு
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நம் தூதர்) யூசுஃபுடன் இரு இளை ஞர்களும் சிறைக்குள் நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவர், “நான் திராட்சை மது பிழிவதாகக் கனவு கண்டேன்” என்று கூறினார். மற்றவர், “நான் என் தலைமீது ரொட்டியைச் சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்றுகொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினார். (பின் இருவரும் “யூசுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை நன்மை செய்வோரில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
அதற்கு அவர் கூறினார்: (இங்கு) உங்களிருவருக்கும் வழங்கப்படும் உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்பே உங்களது கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவித்துவிடுவேன். என் இறைவன் எனக்குக் கற்றுக்கொடுத்துள்ள அறிவுகளில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும் மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டுவிட்டேன். நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைகற்பிப்பது எங்களுக்குத் தகாது. இது எங்கள்மீதும் (இதர) மக்கள்மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
என்னுடைய சிறைத் தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் சிறந்தவையா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ் சிறந்தவனா? அவனையன்றி நீங்கள் வழிபட்டுக்கொண்டிருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக்கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை. அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை.
(ஆட்சி செலுத்தும்) அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வழிபடக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும். ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறிந்துகொள்வதில்லை.
என்னுடைய சிறைத் தோழர்களே! (உங்கள் கனவுகளுக்கான விளக்கம் இதுதான்:) உங்களில் ஒருவர் தம் எசமானுக்கு (எகிப்து அரசனுக்கு மறுபடியும்) திராட்சை மதுவைப் புகட்டிக்கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும். நீங்கள் எந்த விஷயம் குறித்து விளக்கம் கேட்டீர்களோ அந்த விஷயம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று யூசுஃப் கருதினாரோ அவரிடம், “என்னைப் பற்றி உம் எசமானிடம் (எகிப்து அரசனிடம்) கூறுவீராக!” என்று சொன்னார்.
ஆனால், (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எசமானிடம் (யூசுஃபைப் பற்றிக்) கூற விடாமல் ஷைத்தான் அவரை மறதியில் ஆழ்த்திவிட்டான். ஆகவே, யூசுஃப் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார்.
(இந்நிலையில் ஒருநாள் எகிப்து) அரசன், “நான் (கனவில்) ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்றுகொண்டிருப்பதையும், ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் கண்டேன். பிரதானிகளே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறக்கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினார்.
“(இவை) குழப்பமான கனவுகளாகும். இத்தகைய கனவுகளுக்கான விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்கள் அல்லர்” என்று அவர்கள் கூறினார்கள்.
அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூசுஃபை) நினைவு கூர்ந்து, “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன்; என்னை (யூசுஃபிடம்) அனுப்பிவையுங்கள்” என்று சொன்னார். (சிறையில் யூசுஃபைக் கண்ட) அவர், “யூசுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்றுகொண்டிருப்பதையும் பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்த கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எங்களுக்கு அறிவிப்பீராக. மக்கள் அறிந்துகொள்வதற்காக அவர்களிடம் நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்).
அதற்கு யூசுஃப் கூறினார்: நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (அமோகமாக) விவசாயம் செய்வீர்கள். பிறகு நீங்கள் அறுவடை செய்வதில் நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத் தவிர, மீதியை அதற்குரிய கதிர்களிலேயே விட்டுவையுங்கள். பின்னர் அதற்கப்பால் கடினமான ஏழு (பஞ்ச) ஆண்டுகள் வரும். அந்தப் பஞ்சமிக்க ஆண்டுகளுக்காக நீங்கள் முன்பே பத்திரப்படுத்தி வைத்துள்ளதில் சொற்பமானதைத் தவிர மற்றதை அந்தப் பஞ்ச ஆண்டுகள் தின்றுவிடும்.
பின்னர் அதற்கப்பால் ஓராண்டு வரும். அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழி(ந்து உட்கொண்டு சுகமாக வாழ்)வார்கள்.
(இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார். (அவருடைய) தூதர் யூசுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம்முடைய எசமானிடம் திரும்பிச் சென்று, தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன? என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார். (12:36-50)
(12:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இத்தகர’ எனும் சொல் ‘ஃதகர்த்து (நினைவுகூர்ந்தேன்) எனும் சொல்லின் ‘இஃப்தஅல்’ வாய்ப்பாட்டில் அமைந்த தாகும். ‘உம்மத்’ எனும் சொல்லுக்கு ‘பல்லாண்டு’ என்பது பொருள். இதே சொல் மற்றோர் ஓதும் முறையில் ‘அமஹ்’ என்றும் ஓதப்பட்டுள்ளது. (இதன்படி) இதற்கு ‘மறதி’ என்று பொருள் வரும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (12:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஉஸிரூன்’ என்பதற்கு “ஒலிவம், திராட்சை முதலியவற்றின் ரசத்தை அவர்கள் பிழிந்துகொண்டு (சுகவாழ்வில்) இருப்பார்கள்” என்றுபொருள். (12:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஹ்ஸினூன்’ எனும் சொல்லுக்கு ‘பத்திரப்படுத்தி பாதுகாத்துவைப்பார்கள்’ என்பது பொருள்.
6992. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் (சிறையில்) கழித்த காலம் அளவுக்கு நான் சிறையில் காலம் கழித்திருந்து, பிறகு (அவரிடம் வந்ததைப் போன்றே) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

6993. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَسَيَرَانِي فِي الْيَقَظَةِ، وَلاَ يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ ابْنُ سِيرِينَ إِذَا رَآهُ فِي صُورَتِهِ.
பாடம்: 10
கனவில் நபி (ஸல்) அவர்களைக் காண்பது
6993. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.8
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:
“நபி (ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க அடை யாளங்களுடன்) அவர்களைக் கண்டால் தான் (நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கருதப்படும்)” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.9

6994. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَخَيَّلُ بِي، وَرُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ "".
பாடம்: 10
கனவில் நபி (ஸல்) அவர்களைக் காண்பது
6994. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.10
மேலும், இறை நம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.

6995. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الرُّؤْيَا الصَّالِحَةُ مِنَ اللَّهِ، وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ، فَمَنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلْيَنْفِثْ عَنْ شِمَالِهِ ثَلاَثًا، وَلْيَتَعَوَّذْ مِنَ الشَّيْطَانِ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ، وَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَرَاءَى بِي "".
பாடம்: 10
கனவில் நபி (ஸல்) அவர்களைக் காண்பது
6995. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ் விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, எவரேனும் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது. மேலும், ஷைத்தான் என் உருவத்தில் காட்சி தரமாட்டான்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11

6996. حَدَّثَنَا خَالِدُ بْنُ خَلِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَبُو سَلَمَةَ قَالَ أَبُو قَتَادَةَ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ رَآنِي فَقَدْ رَأَى الْحَقَّ "". تَابَعَهُ يُونُسُ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ
பாடம்: 10
கனவில் நபி (ஸல்) அவர்களைக் காண்பது
6996. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் உண்மையையே கண்டார்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

6997. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ""مَنْ رَآنِي فَقَدْ رَأَى الْحَقَّ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَكَوَّنُنِي"".
பாடம்: 10
கனவில் நபி (ஸல்) அவர்களைக் காண்பது
6997. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் உண்மையையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 91
6997. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் உண்மையையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 91
6998. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أُعْطِيتُ مَفَاتِيحَ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَبَيْنَمَا أَنَا نَائِمٌ الْبَارِحَةَ إِذْ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ حَتَّى وُضِعَتْ فِي يَدِي "". قَالَ أَبُو هُرَيْرَةَ فَذَهَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنْتُمْ تَنْتَقِلُونَهَا.
பாடம்: 11
இரவில் காணும் கனவு12
இது குறித்து சமுரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.13
6998. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு (ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட) சொற்களின் திறவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளன. (எதிரிகளுக்கு என்னைப் பற்றி மதிப்பும்) அச்ச(மு)ம்ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நான் உறங்கிக்கொண்டிருக்கையில் (கனவில்) பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை ஓரிடத்திóருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசென்று (அனுபவித்துக்)கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள்.14

6999. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أُرَانِي اللَّيْلَةَ عِنْدَ الْكَعْبَةِ فَرَأَيْتُ رَجُلاً آدَمَ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنْ أُدْمِ الرِّجَالِ، لَهُ لِمَّةٌ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنَ اللِّمَمِ، قَدْ رَجَّلَهَا تَقْطُرُ مَاءً، مُتَّكِئًا عَلَى رَجُلَيْنِ ـ أَوْ عَلَى عَوَاتِقِ رَجُلَيْنِ ـ يَطُوفُ بِالْبَيْتِ، فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ. ثُمَّ إِذَا أَنَا بِرَجُلٍ جَعْدٍ قَطَطٍ أَعْوَرِ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّهَا عِنَبَةٌ طَافِيَةٌ، فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ الْمَسِيحُ الدَّجَّالُ "".
பாடம்: 11
இரவில் காணும் கனவு12
இது குறித்து சமுரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.13
6999. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இன்றிரவு (இறையில்லம்) கஅபா வின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்களில் மாநிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மாநிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள்வரை நீண்டுள்ள முடிகளில் நீ பார்த்த வற்றிலேயே மிக அழகான தலைமுடி அவருக்கு இருந்தது; அந்த முடியை அவர் (படிய) வாரிவிட்டிருந்தார்; அதிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. ‘இரு மனிதர்கள்மீது’ அல்லது ‘இரு மனிதர்களின் தோள்கள்மீது’ சாய்ந்தபடி அவர் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தார்.
அப்போது நான், “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, “(இவர்தான்) மர்யமின் குமாரர் மஸீஹ் (ஈசா)” என்று பதிலளிக்கப்பட்டது.
பிறகு நான் நிறைய சுருள்முடி கொண்ட வலக்கண் குருடான ஒரு மனிதனையும் பார்த்தேன். அவனது கண் ஒரே குலையில் துருத்திக்கொண்டிருக்கும் திராட்சை யைப் போன்றிருந்தது. அப்போது நான், “யார் இவர்?” என்று கேட்டேன். அதற்கு “இவன்தான் தஜ்ஜால் எனும் மஸீஹ்” என்று பதிலளிக்கப்பட்டது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15

7000. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، كَانَ يُحَدِّثُ أَنَّ رَجُلاً، أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي أُرِيتُ اللَّيْلَةَ فِي الْمَنَامِ، وَسَاقَ الْحَدِيثَ. وَتَابَعَهُ سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ وَسُفْيَانُ بْنُ حُسَيْنٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ الزُّبَيْدِيُّ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَوْ أَبَا هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ شُعَيْبٌ وَإِسْحَاقُ بْنُ يَحْيَى عَنِ الزُّهْرِيِّ كَانَ أَبُو هُرَيْرَةَ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ مَعْمَرٌ لاَ يُسْنِدُهُ حَتَّى كَانَ بَعْدُ.
பாடம்: 11
இரவில் காணும் கனவு12
இது குறித்து சமுரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.13
7000. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்றிரவு எனக்குக் கனவு ஒன்று காட்டப்பட்டது...” என்று கூறினார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர் முழு ஹதீஸையும் அறிவிக்கிறார்.16
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஓர் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக வந்துள்ளது.
இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் முதலில் இந்த ஹதீஸை (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) அறிவிக்காமல் இருந்தார்கள்; பின்புதான் அறிவிக்கலானார்கள்.

7001. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، وَكَانَتْ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، فَدَخَلَ عَلَيْهَا يَوْمًا فَأَطْعَمَتْهُ، وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ اسْتَيْقَظَ وَهْوَ يَضْحَكُ.
பாடம்: 12
பகலில் காணும் கனவு
இப்னு சீரின் (ரஹ்) அவர்கள், “பகலில் காணும் கனவும் இரவில் காணும் கனவைப் போன்றதுதான்” என்று கூறினார்கள்.17
இதை இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
7001. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள ‘குபா’வுக் குச் சென்றால் தம் பால்குடி சிற்றன்னை யான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒருநாள் (பகலில்) நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்தபின் அவர்களுக்கு பேன் பார்த்து விடலானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

7002. قَالَتْ فَقُلْتُ مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ، يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ، مُلُوكًا عَلَى الأَسِرَّةِ أَوْ مِثْلَ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ ". شَكَّ إِسْحَاقُ. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، فَدَعَا لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ وَضَعَ رَأْسَهُ ثُمَّ اسْتَيْقَظَ وَهْوَ يَضْحَكُ. فَقُلْتُ مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ ". كَمَا قَالَ فِي الأُولَى. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ " أَنْتِ مِنَ الأَوَّلِينَ ". فَرَكِبَتِ الْبَحْرَ فِي زَمَانِ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ الْبَحْرِ، فَهَلَكَتْ.
பாடம்: 12
பகலில் காணும் கனவு
இப்னு சீரின் (ரஹ்) அவர்கள், “பகலில் காணும் கனவும் இரவில் காணும் கனவைப் போன்றதுதான்” என்று கூறினார்கள்.17
இதை இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
7002. தொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் அறப்போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் ‘மன்னர்களாக’ அல்லது ‘மன்னர்களைப் போன்று’ இருந்தார்கள்” என்று கூறினார்கள்.
உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தமது தலையைக் கீழே வைத்து (உறங்கி)விட்டுப் பிறகு சிரித்தவாறு விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், “ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்” என்று முன்பு போலவே பதிலளித்தார்கள்.
அதைக் கேட்டு நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.
(நபி (ஸல்) அவர்கள் கூறியபடியே) உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்டபோது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார்கள்.18

7003. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ أُمَّ الْعَلاَءِ ـ امْرَأَةً مِنَ الأَنْصَارِ بَايَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ـ أَخْبَرَتْهُ أَنَّهُمُ اقْتَسَمُوا الْمُهَاجِرِينَ قُرْعَةً. قَالَتْ فَطَارَ لَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، وَأَنْزَلْنَاهُ فِي أَبْيَاتِنَا، فَوَجِعَ وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ، فَلَمَّا تُوُفِّيَ غُسِّلَ وَكُفِّنَ فِي أَثْوَابِهِ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ أَكْرَمَهُ "". فَقُلْتُ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ فَمَنْ يُكْرِمُهُ اللَّهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَّا هُوَ فَوَاللَّهِ لَقَدْ جَاءَهُ الْيَقِينُ، وَاللَّهِ إِنِّي لأَرْجُو لَهُ الْخَيْرَ، وَوَاللَّهِ مَا أَدْرِي وَأَنَا رَسُولُ اللَّهِ مَاذَا يُفْعَلُ بِي "". فَقَالَتْ وَاللَّهِ لاَ أُزَكِّي بَعْدَهُ أَحَدًا أَبَدًا.
பாடம்: 13
பெண்கள் காணும் கனவு19
7003. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(புலம்பெயர்ந்து மதீனா வந்தடைந்த) முஹாஜிர்களுக்காக (அவர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதை முடிவு செய்ய) அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அப்போது உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் எங்கள் பொறுப்பில் வந்தார்கள். (அதன் படி) அவரை நாங்கள் எங்கள் வீட்டில் தங்கவைத்தோம். பிறகு அவர் நோயுற்று அந்த நோயிலேயே இறந்தும்போனார். அவரது உடல் குளிப்பாட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிடப் பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள்.
அப்போது நான் (உஸ்மான் அவர்களை நோக்கி), “சாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் பொழியட்டும். அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்” என்று கூறினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறாயின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?” என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் இறந்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! இவருக்கு நான் நன்மையையே எதிர்பார்க்கிறேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று ஒருபோதும் கூறுவதேயில்லை.20

7004. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا وَقَالَ "" مَا أَدْرِي مَا يُفْعَلُ بِهِ "". قَالَتْ وَأَحْزَنَنِي فَنِمْتُ، فَرَأَيْتُ لِعُثْمَانَ عَيْنًا تَجْرِي، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" ذَلِكَ عَمَلُهُ "".
பாடம்: 13
பெண்கள் காணும் கனவு19
7004. மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ள மேற்கண்ட ஹதீஸில் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்:
“மேலும் இவரிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பதும் எனக்குத் தெரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:
(இதைக் கேட்ட) நான் மிகவும் கவலைப்பட்டவாறே உறங்கிவிட்டேன். அப்போது (கனவில்) உஸ்மான் அவர் களுக்காக ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கக் கண்டேன். ஆகவே இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, “அது அவரது நற்செயல்” என்று (விளக்கம்) கூறினார்கள்.21

7005. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا قَتَادَةَ الأَنْصَارِيّ َ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَفُرْسَانِهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" الرُّؤْيَا مِنَ اللَّهِ، وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا حَلَمَ أَحَدُكُمُ الْحُلُمَ يَكْرَهُهُ فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ وَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْهُ، فَلَنْ يَضُرَّهُ "".
பாடம்: 14
கெட்ட (பொய்க்) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்.
ஆகவே, ஒருவர் அத்தகைய கனவைக் கண்டால் தமது இடப் பக்கத்தில் துப்பிவிட்டு, (அதன் தீய விளைவிலிருந்து) வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்விடம் அவர் பாதுகாப்புக் கோரட்டும்.
7005. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவு ஷைத்தானிட மிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் எவரேனும் தாம் விரும்பாத தீய கனவு கண்டால் உடனே அவர் தமது இடப் பக்கத்தில் துப்பட்டும். ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பும் கோரட்டும். அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட இயலாது.
இதை நபித்தோழர்களில் ஒருவரும் நபி (ஸல்) அவர்களின் குதிரைப் படை வீரர்களில் ஒருவருமான அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22

7006. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ، فَشَرِبْتُ مِنْهُ، حَتَّى إِنِّي لأَرَى الرِّيَّ يَخْرُجُ مِنْ أَظْفَارِي، ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي "". يَعْنِي عُمَرَ. قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" الْعِلْمَ "".
பாடம்: 15
கனவில் பாலைக் கண்டால்...?23
7006. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை (தாகம் தீருமளவுக்கு) அருந்தினேன். இறுதியில் அது எனது நகக்கண்கள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் பின் அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்” என்று கூறினார்கள்.
அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்.24

7007. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ، فَشَرِبْتُ مِنْهُ، حَتَّى إِنِّي لأَرَى الرِّيَّ يَخْرُجُ مِنْ أَطْرَافِي، فَأَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ "". فَقَالَ مَنْ حَوْلَهُ فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" الْعِلْمَ "".
பாடம்: 16
உறுப்புகள், அல்லது நகக்கண்கள் வழியாகப் பால் வழிந்தோடுவதைப் போன்று கனவு கண்டால்...?
7007. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால் கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை (தாகம் தீருமளவுக்கு) அருந்தி னேன். இறுதியில், அது என் உறுப்புகள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் பின் அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்” என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களைச் சுற்றிக் குழுமியிருந்த மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்