6918. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} شَقَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَالُوا أَيُّنَا لَمْ يَلْبِسْ إِيمَانَهُ بِظُلْمٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّهُ لَيْسَ بِذَاكَ، أَلاَ تَسْمَعُونَ إِلَى قَوْلِ لُقْمَانَ {إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}"".
பாடம்: 1 அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் அடையும் பாவமும், இம்மையிலும் மறுமையிலும் அவனுக்குரிய தண்டனையும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக (இறைவனுக்கு) இணை கற்பித்தல் மிகப்பெரும் அநியாயமாகும். (31:13)2 அல்லாஹ் கூறுகின்றான்: நீர் (இறைவனுக்கு) இணைகற்பித்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, இழப்புக்குரியவர்களில் ஒருவராகிவிடுவீர். (39:65)
6918. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நல்வழி அடைந்தவர்கள் ஆவர்” எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் “எங்களில் யார்தான் தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லை?” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி என்பதற்குப் பொருள் அதுவன்று. (அது இணைகற்பிப்பதையே குறிக்கிறது.) நிச்சயமாக இணைகற்பிப்பதே மிகப்பெரும் அநியாயமாகும் என்று (அறிஞர்) லுக்மான் கூறியதை (குர்ஆனில் 31:13ஆவது வசனத்தில்) நீங்கள் செவியுறவில்லையா?3

அத்தியாயம் : 88
6919. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، وَحَدَّثَنِي قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَكْبَرُ الْكَبَائِرِ الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَشَهَادَةُ الزُّورِ، وَشَهَادَةُ الزُّورِ ـ ثَلاَثًا ـ أَوْ قَوْلُ الزُّورِ "". فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ.
பாடம்: 1 அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் அடையும் பாவமும், இம்மையிலும் மறுமையிலும் அவனுக்குரிய தண்டனையும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக (இறைவனுக்கு) இணை கற்பித்தல் மிகப்பெரும் அநியாயமாகும். (31:13)2 அல்லாஹ் கூறுகின்றான்: நீர் (இறைவனுக்கு) இணைகற்பித்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, இழப்புக்குரியவர்களில் ஒருவராகிவிடுவீர். (39:65)
6919. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது (மூன்று முறை), பொய் சாட்சியம் கூறுவது, அல்லது ‘பொய் பேசுவது’ ஆகியவை பெரும்பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘பொய் சாட்சி’ என்பதை நபி (ஸல்) அவர்கள் திரும்பத்திரும்பத் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.

(இதைக் கண்ட) நாங்கள் “அவர்கள் நிறுத்திக்கொள்ளலாமே!” என்று கூறி னோம்.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 88
6920. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، أَخْبَرَنَا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الْكَبَائِرُ قَالَ "" الإِشْرَاكُ بِاللَّهِ "". قَالَ ثُمَّ مَاذَا قَالَ "" ثُمَّ عُقُوقُ الْوَالِدَيْنِ "". قَالَ ثُمَّ مَاذَا قَالَ "" الْيَمِينُ الْغَمُوسُ "". قُلْتُ وَمَا الْيَمِينُ الْغَمُوسُ قَالَ "" الَّذِي يَقْتَطِعُ مَالَ امْرِئٍ مُسْلِمٍ هُوَ فِيهَا كَاذِبٌ "".
பாடம்: 1 அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் அடையும் பாவமும், இம்மையிலும் மறுமையிலும் அவனுக்குரிய தண்டனையும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக (இறைவனுக்கு) இணை கற்பித்தல் மிகப்பெரும் அநியாயமாகும். (31:13)2 அல்லாஹ் கூறுகின்றான்: நீர் (இறைவனுக்கு) இணைகற்பித்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, இழப்புக்குரியவர்களில் ஒருவராகிவிடுவீர். (39:65)
6920. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பெரும் பாவங்கள் எவை?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இறைவனுக்கு இணைகற்பிப்பது” என்றார்கள். அவர், “பிறகு எது?” என்றார். நபி (ஸல்) அவர்கள், “பிறகு தாய் தந்தையரைப் புண்படுத்துவது” என்றார்கள். அவர், “பிறகு எது?” எனக் கேட்க நபி (ஸல்) அவர்கள், “பொய்ச் சத்தியம்” என்றார்கள். நான், “பொய்ச் சத்தியம் என்றால் என்ன?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனித ரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது” என்றார்கள்.5

அத்தியாயம் : 88
6921. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَالأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الْجَاهِلِيَّةِ قَالَ "" مَنْ أَحْسَنَ فِي الإِسْلاَمِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الْجَاهِلِيَّةِ، وَمَنْ أَسَاءَ فِي الإِسْلاَمِ أُخِذَ بِالأَوَّلِ وَالآخِرِ "".
பாடம்: 1 அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் அடையும் பாவமும், இம்மையிலும் மறுமையிலும் அவனுக்குரிய தண்டனையும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நிச்சயமாக (இறைவனுக்கு) இணை கற்பித்தல் மிகப்பெரும் அநியாயமாகும். (31:13)2 அல்லாஹ் கூறுகின்றான்: நீர் (இறைவனுக்கு) இணைகற்பித்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, இழப்புக்குரியவர்களில் ஒருவராகிவிடுவீர். (39:65)
6921. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த (த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப் படுவோமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “எவர் இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார். எவர் இஸ்லாத்தில் இணைந்தபிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறாரோ அவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 88
6922. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، مُحَمَّدُ بْنُ الْفَضْلِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ أُتِيَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ بِزَنَادِقَةٍ فَأَحْرَقَهُمْ فَبَلَغَ ذَلِكَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ لَوْ كُنْتُ أَنَا لَمْ أُحْرِقْهُمْ لِنَهْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَقَتَلْتُهُمْ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ "".
பாடம்: 2 இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஆண், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய பெண் இருவரது சட்டமும் (ஒன்றா? வேறா? என்பது குறித்தும்) அவர்களை மனமாற்றம் காணச்செய்வது (குறித்து)ம். இப்னு உமர் (ரலி), ஸுஹ்ரீ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் “இஸ்லாத்திலிருந்து வெளியேறிய பெண்ணுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும்” என்று கூறினர்.6 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, இந்தத் தூதர் உண்மையானவர்தான் என்று சாட்சியமும் அளித்தபிறகும், தெளிவான சான்றுகள் தம்மிடம் வந்துவிட்ட பிறகும் மறுத்துவிட்ட மக்களை அல்லாஹ் எப்படி நல்வழியில் செலுத்துவான்? அல்லாஹ் (இத்தகைய) அக்கிரமக்கார சமூகத்தாரை நேரான வழியில் செலுத்தமாட்டான். இவர்கள்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மனிதர்களின் சாபமும் உண்டு என்பதே இவர்களுக்குரிய கூலியாகும். இ(ந்தச் சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கி விடுவர். இவ்வேதனை அவர்களுக்குக் குறைக்கப்படமாட்டாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படமாட்டாது. ஆயினும், இதற்குப் பிறகு யார் பாவமன்னிப்புக் கோரி, தம்மைச் சீர்திருத்திக்கொண்டார்களோ, அத்தகையவர்களை நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், (அவர்களுக்கு) மிக்க அருள் புரிபவனாகவும் இருக்கின்றான். நிச்சயமாக யார் இறைநம்பிக்கை கொண்டபின் மறுத்துவிட்டு, அப்பால் (இறக்கும்வரை) இறைமறுப்பை அதிகமாக்கிக்கொண்டே சென்றனரோ, அவர்களின் (உதட்டளவிலான) பாவமன்னிப்புக் கோரிக்கை ஒருபோதும் ஏற்கப்படமாட்டாது. இவர்கள்தான் வழிதவறியவர்கள். (3:86-90) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் வேதம் வழங்கப்பட்டவர்களில் எந்தப் பிரிவினருக்காவது வழிபட்டு விடுவீர்களாயின், நீங்கள் நம்பிக்கை கொண்டபிறகு உங்களை அவர்கள் நிராகரிப்பவர்களாகத் திருப்பிவிடுவார்கள். (3:100) நிச்சயமாக யார் இறைநம்பிக்கை கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் இறைநம்பிக்கை கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் அந்த நிராகரிப்பை அதிகரித்துக்கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும், அவர்களை (நேர்)வழியில் செலுத்துபவனாகவும் இல்லை. (4:137) இறைநம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தமது மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை;) அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தைக் கொண்டுவருவான்; அவர்களை அவன் நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள்; அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் பணிவாக நடந்துகொள்வார்கள்; இறைமறுப்பாளர்களிடம் கடுமையாக இருப்பார்கள். (5:54) எவர் இறைநம்பிக்கை கொண்டபிறகு கட்டாயத்திற்குள்ளாகி, தமது உள்ளம் இறைநம்பிக்கையில் (சலனமின்றி) அமைதியுடன் இருக்கும் நிலையில் இறைமறுப்பை வெளியிடுகிறாரோ அவரைத் தவிர (அதாவது அவர்மீது குற்றமில்லை). ஆனால், யார் மன நிறைவுடன் இறைமறுப்பை ஏற்கிறார்களோ அவர்கள்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே அதிகமாக நேசிக்கிறார்கள்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) மறுக்கும் கூட்டத்தாரை நல்வழியில் செலுத்தமாட்டான். இத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் ஆகியவற்றின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். இவர்கள்தான் (தம் இறுதி முடிவு பற்றி) அலட்சியமாயிருப்பவர்கள். சந்தேக மின்றி, இவர்கள் மறுமையில் முற்றிலும் இழப்புக்குள்ளாவார்கள். (16:106-109) அவர்களுக்கு (மட்டும்) சக்தி இருந் தால், உங்களை உங்களது மார்க்கத்திலிருந்து திருப்பும்வரை உங்களுடன் அவர்கள் போரிட்டுக்கொண்டே இருப் பார்கள். (அப்படி) உங்களில் எவரேனும் தமது மார்க்கத்திலிருந்து திரும்பி இறை மறுப்பாளரான நிலையில் இறந்துவிட் டால், அவருடைய (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து போகும். இவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (2:217)
6922. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களிடம், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய(துடன் இஸ்லாத்திற்கும் அரசுக்கும் விரோதமாகச் செயல்பட்ட) சிலர் கொண்டுவரப்பட்டனர். அவர்களை அலீ (ரலி) அவர்கள் எரித்து (விடுமாறு உத்தர)விட்டார்கள்.7 இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அளிக்கின்ற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்’ என்று கூறினார்கள். மாறாக, நபி (ஸல்) அவர்கள், ‘எவர் தமது மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவருக்கு மரண தண்டனை அளியுங்கள்’ என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரண தண்டனை அளித்திருப்பேன்” என்று சொன்னார்கள்.8

அத்தியாயம் : 88
6923. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ قُرَّةَ بْنِ خَالِدٍ، حَدَّثَنِي حُمَيْدُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعِي رَجُلاَنِ مِنَ الأَشْعَرِيِّينَ، أَحَدُهُمَا عَنْ يَمِينِي، وَالآخَرُ عَنْ يَسَارِي وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَاكُ فَكِلاَهُمَا سَأَلَ. فَقَالَ "" يَا أَبَا مُوسَى "". أَوْ "" يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ "". قَالَ قُلْتُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا، وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ. فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتِ شَفَتِهِ قَلَصَتْ فَقَالَ "" لَنْ ـ أَوْ ـ لاَ نَسْتَعْمِلُ عَلَى عَمَلِنَا مَنْ أَرَادَهُ، وَلَكِنِ اذْهَبْ أَنْتَ يَا أَبَا مُوسَى ـ أَوْ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ ـ إِلَى الْيَمَنِ "". ثُمَّ أَتْبَعَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ، فَلَمَّا قَدِمَ عَلَيْهِ أَلْقَى لَهُ وِسَادَةً قَالَ انْزِلْ، وَإِذَا رَجُلٌ عِنْدَهُ مُوثَقٌ. قَالَ مَا هَذَا قَالَ كَانَ يَهُودِيًّا فَأَسْلَمَ ثُمَّ تَهَوَّدَ. قَالَ اجْلِسْ. قَالَ لاَ أَجْلِسُ حَتَّى يُقْتَلَ. قَضَاءُ اللَّهِ وَرَسُولِهِ. ثَلاَثَ مَرَّاتٍ، فَأَمَرَ بِهِ فَقُتِلَ، ثُمَّ تَذَاكَرْنَا قِيَامَ اللَّيْلِ، فَقَالَ أَحَدُهُمَا أَمَّا أَنَا فَأَقُومُ وَأَنَامُ، وَأَرْجُو فِي نَوْمَتِي مَا أَرْجُو فِي قَوْمَتِي.
பாடம்: 2 இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஆண், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய பெண் இருவரது சட்டமும் (ஒன்றா? வேறா? என்பது குறித்தும்) அவர்களை மனமாற்றம் காணச்செய்வது (குறித்து)ம். இப்னு உமர் (ரலி), ஸுஹ்ரீ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் “இஸ்லாத்திலிருந்து வெளியேறிய பெண்ணுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும்” என்று கூறினர்.6 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, இந்தத் தூதர் உண்மையானவர்தான் என்று சாட்சியமும் அளித்தபிறகும், தெளிவான சான்றுகள் தம்மிடம் வந்துவிட்ட பிறகும் மறுத்துவிட்ட மக்களை அல்லாஹ் எப்படி நல்வழியில் செலுத்துவான்? அல்லாஹ் (இத்தகைய) அக்கிரமக்கார சமூகத்தாரை நேரான வழியில் செலுத்தமாட்டான். இவர்கள்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மனிதர்களின் சாபமும் உண்டு என்பதே இவர்களுக்குரிய கூலியாகும். இ(ந்தச் சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கி விடுவர். இவ்வேதனை அவர்களுக்குக் குறைக்கப்படமாட்டாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படமாட்டாது. ஆயினும், இதற்குப் பிறகு யார் பாவமன்னிப்புக் கோரி, தம்மைச் சீர்திருத்திக்கொண்டார்களோ, அத்தகையவர்களை நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், (அவர்களுக்கு) மிக்க அருள் புரிபவனாகவும் இருக்கின்றான். நிச்சயமாக யார் இறைநம்பிக்கை கொண்டபின் மறுத்துவிட்டு, அப்பால் (இறக்கும்வரை) இறைமறுப்பை அதிகமாக்கிக்கொண்டே சென்றனரோ, அவர்களின் (உதட்டளவிலான) பாவமன்னிப்புக் கோரிக்கை ஒருபோதும் ஏற்கப்படமாட்டாது. இவர்கள்தான் வழிதவறியவர்கள். (3:86-90) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் வேதம் வழங்கப்பட்டவர்களில் எந்தப் பிரிவினருக்காவது வழிபட்டு விடுவீர்களாயின், நீங்கள் நம்பிக்கை கொண்டபிறகு உங்களை அவர்கள் நிராகரிப்பவர்களாகத் திருப்பிவிடுவார்கள். (3:100) நிச்சயமாக யார் இறைநம்பிக்கை கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் இறைநம்பிக்கை கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் அந்த நிராகரிப்பை அதிகரித்துக்கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும், அவர்களை (நேர்)வழியில் செலுத்துபவனாகவும் இல்லை. (4:137) இறைநம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தமது மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை;) அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தைக் கொண்டுவருவான்; அவர்களை அவன் நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள்; அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் பணிவாக நடந்துகொள்வார்கள்; இறைமறுப்பாளர்களிடம் கடுமையாக இருப்பார்கள். (5:54) எவர் இறைநம்பிக்கை கொண்டபிறகு கட்டாயத்திற்குள்ளாகி, தமது உள்ளம் இறைநம்பிக்கையில் (சலனமின்றி) அமைதியுடன் இருக்கும் நிலையில் இறைமறுப்பை வெளியிடுகிறாரோ அவரைத் தவிர (அதாவது அவர்மீது குற்றமில்லை). ஆனால், யார் மன நிறைவுடன் இறைமறுப்பை ஏற்கிறார்களோ அவர்கள்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே அதிகமாக நேசிக்கிறார்கள்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) மறுக்கும் கூட்டத்தாரை நல்வழியில் செலுத்தமாட்டான். இத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் ஆகியவற்றின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். இவர்கள்தான் (தம் இறுதி முடிவு பற்றி) அலட்சியமாயிருப்பவர்கள். சந்தேக மின்றி, இவர்கள் மறுமையில் முற்றிலும் இழப்புக்குள்ளாவார்கள். (16:106-109) அவர்களுக்கு (மட்டும்) சக்தி இருந் தால், உங்களை உங்களது மார்க்கத்திலிருந்து திருப்பும்வரை உங்களுடன் அவர்கள் போரிட்டுக்கொண்டே இருப் பார்கள். (அப்படி) உங்களில் எவரேனும் தமது மார்க்கத்திலிருந்து திரும்பி இறை மறுப்பாளரான நிலையில் இறந்துவிட் டால், அவருடைய (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து போகும். இவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (2:217)
6923. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப் பக்கத்திலும் இன்னொருவர் என் இடப் பக்கத்திலும் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக்கொண்டிருந்தார்கள். (என்னுடன் வந்த) அவ்விருவரும் (நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் அரசாங்கப் பதவி அளிக்குமாறு கோரினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அபூமூசாவே’ அல்லது ‘அப்துல்லாஹ் பின் கைஸே!’ என்றார்கள். நான், “சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தமது மனத்தில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை; இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியவும் செய்யாது” என்று சொன்னேன்.

அப்போது நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக்கொண்டிருந்த பல்துலக்கும் குச்சியினை இப்போதும் கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள், “எவர் பதவியை விரும்புகிறாரோ அவருக்கு நாம் பதவி ‘கொடுப்பதில்லை’ அல்லது ‘ஒருபோதும் கொடுக்கமாட்டோம்’. ஆகவே, ‘அபூமூசாவே’ அல்லது ‘அப்துல்லாஹ் பின் கைஸே’ நீங்கள் யமன் நாட்டிற்கு (ஆளுனராக)ச் செல்லுங்கள்” என்று சொன்னார்கள்.

(அவ்வாறே அபூமூசா (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றார்கள்.) பிறகு அபூமூசா அவர்களைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை (யமன் நாட்டுக்கு) நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களிடம் சென்றபோது (அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்கு தலையணை ஒன்றை அபூமூசா (ரலி) அவர்கள் எடுத்துவைத்து, “வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)” என்று சொன்னார்கள். அப்போது அபூமூசா (ரலி) அவர்களின் அருகில் ஒரு மனிதர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, “இவர் யார்?” என்று முஆத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், “இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டுவெளியேறி) யூதராகிவிட்டார்” என்றார்கள். (மீண்டும் அபூமூசா (ரலி) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம்) “அமருங்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு முஆத் (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்)” என்று மூன்று முறை சொன்னார்கள். எனவே, அவருக்கு மரணதண்டனையளிக்குமாறு (அபூமூசா -ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார்.

பிறகு அவர்கள் இருவரும் இரவில் நின்று வழிபடுவது குறித்துப் பேசிக் கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர் (முஆத் (ரலி) அவர்கள்), “நான் (இரவில் சிறிது நேரம்) நின்று வழிபடுகிறேன். (சிறிது நேரம்) உறங்கு கிறேன். நின்று வழிபடுவதற்கு நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.9

அத்தியாயம் : 88
6924. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ لَمَّا تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ يَا أَبَا بَكْرٍ، كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَمَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ، إِلاَّ بِحَقِّهِ، وَحِسَابُهُ عَلَى اللَّهِ ".
பாடம்: 3 மார்க்கத்தின் கட்டாயக் கடமைகளை ஏற்க மறுப்போருக்கு மரண தண்டனை வழங்குவதும், அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்கள் என்று தீர்மானிப்பதும்10
6924. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து, அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபியரில் சிலர் இறைமறுப்பாளர் களாய் மாறினர்.11 (அவர்கள்மீது போர் தொடுக்கப்போவதாக அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.) அப்போது உமர் (ரலி) அவர்கள், “அபூபக்ர் அவர்களே! மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று மக்கள் கூறும்வரை அவர்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எவர் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை எனக் கூறுகின்றாரோ அவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தன் உயிருக்கும் செல்வத்திற்கும் பாதுகாப்புப் பெறுவார். அவருடைய (அந்தரங்க எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்குரிய) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று கூறியுள்ளார்களே?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 88
6925. قَالَ أَبُو بَكْرٍ وَاللَّهِ لأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا. قَالَ عُمَرُ فَوَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ رَأَيْتُ أَنْ قَدْ شَرَحَ اللَّهُ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ.
பாடம்: 3 மார்க்கத்தின் கட்டாயக் கடமைகளை ஏற்க மறுப்போருக்கு மரண தண்டனை வழங்குவதும், அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்கள் என்று தீர்மானிப்பதும்10
6925. அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகைக்கும் ஸகாத்திற்கும் இடையே பாகுபாடு காட்டுபவர்களுடன் நான் நிச்சயம் போரிடுவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (ஸகாத்தாக) வழங்கிவந்த ஓர் ஆட்டுக் குட்டியை மக்கள் என்னிடம் தர மறுத்தாலும் அதற்காக அவர்களுடன் நான் போர் புரிவேன்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீதாணையாக! (ஸகாத் கொடுக்க மறுத்தவர்கள் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்)படி அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அதுதான் சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்துகொண்டேன்” என்று கூறினார்கள்12

அத்தியாயம் : 88
6926. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ مَرَّ يَهُودِيٌّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ السَّامُ عَلَيْكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَعَلَيْكَ "". فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَتَدْرُونَ مَا يَقُولُ قَالَ السَّامُ عَلَيْكَ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَقْتُلُهُ قَالَ "" لاَ، إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ "".
பாடம்: 4 இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் பிற மதத்தாரோ மற்றவர்களோ நபி (ஸல்) அவர்களை ஏசும் வகையில் ‘அஸ்ஸாமு அலைக் கும்’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்பதைப் போன்ற வார்த்தை களைச் சாடைமாடையாகக் கூறினால்...?13
6926. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூதன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் நேரட்டும்) எனக் கூறினான். அதற்கு (பதிலாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்றார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), “அவன் என்ன சொல்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, “அவன் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று சொன்னான்” என்றார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவனை நாங்கள் கொல்ல வேண்டாமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம். வேதக்காரர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) சொன்னால் (அதற்குப் பதிலாக) நீங்கள் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிடுங்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 88
6927. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ. فَقُلْتُ بَلْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. فَقَالَ "" يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ "". قُلْتُ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ "" قُلْتُ وَعَلَيْكُمْ "".
பாடம்: 4 இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் பிற மதத்தாரோ மற்றவர்களோ நபி (ஸல்) அவர்களை ஏசும் வகையில் ‘அஸ்ஸாமு அலைக் கும்’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்பதைப் போன்ற வார்த்தை களைச் சாடைமாடையாகக் கூறினால்...?13
6927. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒரு குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டு ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சாபமிட்டு முகமன்) கூறினர். உடனே நான் “இல்லை; வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா” (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் ஏற்படட்டும்) என்று பதில் (முகமன்) சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகின்றான்” என்று கூறினார்கள்.

நான், “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “நான்தான் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா?)” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.14

அத்தியாயம் : 88
6928. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، وَمَالِكِ بْنِ أَنَسٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمُوا عَلَى أَحَدِكُمْ إِنَّمَا يَقُولُونَ سَامٌ عَلَيْكَ. فَقُلْ عَلَيْكَ "".
பாடம்: 4 இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் பிற மதத்தாரோ மற்றவர்களோ நபி (ஸல்) அவர்களை ஏசும் வகையில் ‘அஸ்ஸாமு அலைக் கும்’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்பதைப் போன்ற வார்த்தை களைச் சாடைமாடையாகக் கூறினால்...?13
6928. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு யூதர்கள் சலாம் (முகமன்) சொன்னால் “ஸாமுன் அலைக்க” (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்குப் பதில் சலாமாக) “அலைக்க” (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று நீங்கள் சொல்லிவிடுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 88
6929. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَحْكِي نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ ضَرَبَهُ قَوْمُهُ فَأَدْمَوْهُ، فَهْوَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ وَيَقُولُ رَبِّ اغْفِرْ لِقَوْمِي، فَإِنَّهُمْ لاَ يَعْلَمُونَ.
பாடம்: 5
6929. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முற்கால) இறைத்தூதர்களில் ஒரு வரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக்கொண்டிருப்பதை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. அந்த இறைத்தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்துவிட்டார்கள்.

அப்போது அவர் தமது முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, “இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.15

அத்தியாயம் : 88
6930. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا خَيْثَمَةُ، حَدَّثَنَا سُوَيْدُ بْنُ غَفَلَةَ، قَالَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ إِذَا حَدَّثْتُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثًا فَوَاللَّهِ، لأَنْ أَخِرَّ مِنَ السَّمَاءِ أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أَكْذِبَ عَلَيْهِ، وَإِذَا حَدَّثْتُكُمْ فِيمَا بَيْنِي وَبَيْنَكُمْ فَإِنَّ الْحَرْبَ خَدْعَةٌ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" سَيَخْرُجُ قَوْمٌ فِي آخِرِ الزَّمَانِ، حُدَّاثُ الأَسْنَانِ، سُفَهَاءُ الأَحْلاَمِ، يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ الْبَرِيَّةِ، لاَ يُجَاوِزُ إِيمَانُهُمْ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، فَأَيْنَمَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ، فَإِنَّ فِي قَتْلِهِمْ أَجْرًا لِمَنْ قَتَلَهُمْ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம்: 6 காரிஜிய்யா மற்றும் முல்ஹிதீன் ஆகியோருக்கெதிரான ஆதாரங் களை நிறுவியபின் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது16 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: எந்தவொரு சமுதாயத்தாருக்கும் அல்லாஹ் நல்வழி காட்டியபின் அவர்கள் தவிர்ந்துகொள்ள வேண்டியவற்றை அவர்களுக்குத் தெளிவுபடுத்தாத வரை அவர்களை அவன் வழிதவறச் செய்வதில்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிந்தவன். (9:115) இப்னு உமர் (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்களை அல்லாஹ்வின் படைப்புகளிலேயே மிகவும் தீயவர்கள் என்று கருதிவந்தார்கள். மேலும், “இறைமறுப்பாளர்கள் தொடர்பாக அருளப்பெற்ற இறைவசனங்களை இறைநம்பிக்கையாளர்கள்மீது திணிக்கும் அளவுக்கு இவர்கள் சென்றுவிட்டார்கள்” என்றும் சொன்னார்கள்.
6930. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது, நபி (ஸல்) அவர்கள்மீது புனைந்து சொல்வதைவிட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள (போர் போன்ற) ஒரு விவகாரம் தொடர்பாக நான் உங்களிடம் பேசினால், போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளுங்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் குறைந்த வயதுடைய இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எய்த) அம்பு (அதன் மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களது தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் உயிரோடு விடாதீர்கள். ஏனெனில், அவர்களை அழிப்பது, அதைச் செய்தவர்களுக்கு மறுமை நாளில் நற்பலனாக அமையும்.17

அத்தியாயம் : 88
6931. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، وَعَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّهُمَا أَتَيَا أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فَسَأَلاَهُ عَنِ الْحَرُورِيَّةِ، أَسَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم. قَالَ لاَ أَدْرِي مَا الْحَرُورِيَّةُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" يَخْرُجُ فِي هَذِهِ الأُمَّةِ ـ وَلَمْ يَقُلْ مِنْهَا ـ قَوْمٌ تَحْقِرُونَ صَلاَتَكُمْ مَعَ صَلاَتِهِمْ، يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ حُلُوقَهُمْ ـ أَوْ حَنَاجِرَهُمْ ـ يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، فَيَنْظُرُ الرَّامِي إِلَى سَهْمِهِ إِلَى نَصْلِهِ إِلَى رِصَافِهِ، فَيَتَمَارَى فِي الْفُوقَةِ، هَلْ عَلِقَ بِهَا مِنَ الدَّمِ شَىْءٌ "".
பாடம்: 6 காரிஜிய்யா மற்றும் முல்ஹிதீன் ஆகியோருக்கெதிரான ஆதாரங் களை நிறுவியபின் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது16 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: எந்தவொரு சமுதாயத்தாருக்கும் அல்லாஹ் நல்வழி காட்டியபின் அவர்கள் தவிர்ந்துகொள்ள வேண்டியவற்றை அவர்களுக்குத் தெளிவுபடுத்தாத வரை அவர்களை அவன் வழிதவறச் செய்வதில்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிந்தவன். (9:115) இப்னு உமர் (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்களை அல்லாஹ்வின் படைப்புகளிலேயே மிகவும் தீயவர்கள் என்று கருதிவந்தார்கள். மேலும், “இறைமறுப்பாளர்கள் தொடர்பாக அருளப்பெற்ற இறைவசனங்களை இறைநம்பிக்கையாளர்கள்மீது திணிக்கும் அளவுக்கு இவர்கள் சென்றுவிட்டார்கள்” என்றும் சொன்னார்கள்.
6931. அபூசலமா (ரஹ்) மற்றும் அதாஉ பின் யசார் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

நாங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று “ஹரூரிய்யா கூட்டத்தார் (காரிஜிய்யாக்கள்) பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஏதேனும் செவியுற்றுள்ளீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் ஹரூரிய்யாக்கள் என்றால் யாரென்று எனக்குத் தெரியாது. (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறக் கேட்டுள்ளேன் என்றார் கள்:

இந்தச் சமுதாயத்தாருக்கிடையே ஒரு கூட்டத்தார் கிளம்புவர். -(சமுதாயத்தாருக் கிடையே என்று கூறினார்களே தவிர,) இந்தச் சமுதாயத்திலிருந்து என்று கூறவில்லை- அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை நீங்கள் ஒப்பிட்டுப்பார்த்து உங்களுடைய தொழுகையை அற்பமான தாகக் கருதுவீர்கள். (அந்த அளவுக்கு அவர்களது வழிபாடு களைகட்டியிருக்கும்.) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது ‘தொண்டையை’ அல்லது ‘தொண்டைக் குழியை’த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் தைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம் வெளிப்பட்டு) சென்றுவிடுவதைப் போன்று இந்த மார்க்கத்தைவிட்டு அவர்கள் வெளியேறிவிடுவார்கள்.

அம்பெய்தவர் அந்த அம்பை; அதன் முனையை; அதன் (முனையைப் பொருத்தப் பயன்படும்) நாணைப் பார்ப்பார். அவர் (இவ்வாறு) சந்தேகப்பட்டு நாண் பொருத்தப்படும் இடம்வரை, அவற்றில் இரத்தம் ஏதேனும் பட்டுள்ளதா? என்று பார்ப்பார். (ஆனால், எந்த அடையாளமும் இராது.)18

அத்தியாயம் : 88
6932. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانُ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ وَذَكَرَ الْحَرُورِيَّةَ ـ فَقَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ "".
பாடம்: 6 காரிஜிய்யா மற்றும் முல்ஹிதீன் ஆகியோருக்கெதிரான ஆதாரங் களை நிறுவியபின் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது16 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: எந்தவொரு சமுதாயத்தாருக்கும் அல்லாஹ் நல்வழி காட்டியபின் அவர்கள் தவிர்ந்துகொள்ள வேண்டியவற்றை அவர்களுக்குத் தெளிவுபடுத்தாத வரை அவர்களை அவன் வழிதவறச் செய்வதில்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிந்தவன். (9:115) இப்னு உமர் (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்களை அல்லாஹ்வின் படைப்புகளிலேயே மிகவும் தீயவர்கள் என்று கருதிவந்தார்கள். மேலும், “இறைமறுப்பாளர்கள் தொடர்பாக அருளப்பெற்ற இறைவசனங்களை இறைநம்பிக்கையாளர்கள்மீது திணிக்கும் அளவுக்கு இவர்கள் சென்றுவிட்டார்கள்” என்றும் சொன்னார்கள்.
6932. முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் பாட்டனார்) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஹரூரிய்யாக்கள் (‘காரிஜிய்யாக்கள்’) குறித்துக் கூறியபோது, “(வில்லில் இருந்து புறப்பட்ட) அம்பு வேட்டைப் பிராணியின் உடலில் இருந்து வெளியேறுவதைப் போன்று இவர்கள் இஸ்லாத்தைவிட்டு (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 88
6933. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْسِمُ جَاءَ عَبْدُ اللَّهِ بْنُ ذِي الْخُوَيْصِرَةِ التَّمِيمِيُّ فَقَالَ اعْدِلْ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ "" وَيْلَكَ مَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَعْدِلْ "". قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ دَعْنِي أَضْرِبْ عُنُقَهُ. قَالَ "" دَعْهُ فَإِنَّ لَهُ أَصْحَابًا يَحْقِرُ أَحَدُكُمْ صَلاَتَهُ مَعَ صَلاَتِهِ، وَصِيَامَهُ مَعَ صِيَامِهِ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، يُنْظَرُ فِي قُذَذِهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَىْءٌ، يُنْظَرُ فِي نَصْلِهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَىْءٌ، ثُمَّ يُنْظَرُ فِي رِصَافِهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَىْءٌ، ثُمَّ يُنْظَرُ فِي نَضِيِّهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَىْءٌ، قَدْ سَبَقَ الْفَرْثَ وَالدَّمَ، آيَتُهُمْ رَجُلٌ إِحْدَى يَدَيْهِ ـ أَوْ قَالَ ثَدْيَيْهِ ـ مِثْلُ ثَدْىِ الْمَرْأَةِ ـ أَوْ قَالَ مِثْلُ الْبَضْعَةِ ـ تَدَرْدَرُ، يَخْرُجُونَ عَلَى حِينِ فُرْقَةٍ مِنَ النَّاسِ "". قَالَ أَبُو سَعِيدٍ أَشْهَدُ سَمِعْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَشْهَدُ أَنَّ عَلِيًّا قَتَلَهُمْ وَأَنَا مَعَهُ، جِيءَ بِالرَّجُلِ عَلَى النَّعْتِ الَّذِي نَعَتَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم. قَالَ فَنَزَلَتْ فِيهِ {وَمِنْهُمْ مَنْ يَلْمِزُكَ فِي الصَّدَقَاتِ}.
பாடம்: 7 (இதயங்களுக்கிடையே) நெருக் கத்தை ஏற்படுத்தவும் தம்மை விட்டு மக்கள் விலகிச் சென்று விடக் கூடாது என்பதற்காகவும் காரிஜிய்யாக்களைக்கூட ஒருவர் கொல்லாமல் விட்டுவிடுவது
6933. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து அனுப்பியிருந்த தங்கக் கட்டியை) நபி (ஸல்) அவர்கள் (மக்களில் சிலருக்குப்) பங்கிட்டுக்கொண்டிருந்தபோது பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ‘அப்துல்லாஹ் பின் தில் குவைஸிரா’ என்பவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான். (இறைத்தூதராகிய) நானே நீதியுடன் நடந்துகொள்ளா விட்டால் வேறு யார்தான் நீதியுடன் நடந்துகொள்ளப் போகிறார்கள்?” என்று கேட்டார்கள். (அப்போது அங்கிருந்த) உமர் (ரலி) அவர்கள், “என்னை விடுங்கள்; இவர் கழுத்தை நான் வெட்டிவிடுகிறேன்” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இவரை விட்டுவிடுங்கள். இவருக்குத் தோழர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடைய தொழுகை யுடன் உங்களுடைய தொழுகையையும் அவர்களுடைய நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப்பார்த்து உங்களது தொழுகையையும் உங்களது நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்தி óருந்து அவர்கள் வெளியேறிச் சென்று விடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கின்றதா? என்று) அம்பின் இறகு கூர்ந்து பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது.

பிறகு அம்பின் முனை பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் நாண் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. அம்பானது, சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன்மீது படாதவாறு) முந்திக்கொண்டிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு (கறுப்பு நிற) மனிதராவார். அவருடைய ‘இரு கரங்களில்’ அல்லது ‘இரு மார்பகங்களில்’ ஒன்று ‘பெண்ணின் கொங்கை போன்று’ அல்லது ‘துடிக்கும் இறைச்சித் துண்டு போன்று’ இருக்கும். அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்” என்று சொன்னார்கள்.

நான் இந்த நபிமொழியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாரை (நஹ்ரவான் எனுமிடத்தில்) அலீ (ரலி) அவர்கள் கொன்றார்கள். அப்போது நானும் அலீ (ரலி) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதன் (அலீ (ரலி) அவர்கள் முன்னிலையில்) கொண்டுவரப்பட்டான். நபி (ஸல்) அவர்கள் அறிவித்த வர்ணனையின்படியே அவன் இருந்தான்.

அவன் தொடர்பாகவே, “(நபியே!) தானப் பொருட்கள் (விநியோகம்) தொடர்பாக உம்மைக் குறைகூறுவோரும் அவர்களில் உள்ளனர்” என்று தொடங்கும் வசனம் (9:58) அருளப்பெற்றது என்றும் உறுதி கூறுகிறேன்.19

அத்தியாயம் : 88
6934. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، حَدَّثَنَا يُسَيْرُ بْنُ عَمْرٍو، قَالَ قُلْتُ لِسَهْلِ بْنِ حُنَيْفٍ هَلْ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ فِي الْخَوَارِجِ شَيْئًا قَالَ سَمِعْتُهُ يَقُولُ ـ وَأَهْوَى بِيَدِهِ قِبَلَ الْعِرَاقِ ـ "" يَخْرُجُ مِنْهُ قَوْمٌ يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ "".
பாடம்: 7 (இதயங்களுக்கிடையே) நெருக் கத்தை ஏற்படுத்தவும் தம்மை விட்டு மக்கள் விலகிச் சென்று விடக் கூடாது என்பதற்காகவும் காரிஜிய்யாக்களைக்கூட ஒருவர் கொல்லாமல் விட்டுவிடுவது
6934. யுசைர் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களிடம், “காரிஜிய்யா கூட்டத்தார் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அன்னார், நபி (ஸல்) அவர்கள் இராக் நாட்டின் திசையில் தமது கையை நீட்டியவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்:

இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர் களின் கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உடலின் மறுபுறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.

அத்தியாயம் : 88
6935. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَقْتَتِلَ فِئَتَانِ دَعْوَاهُمَا وَاحِدَةٌ "".
பாடம்: 8 “ஒரே வாதத்தை முன்வைத்து இரு குழுவினர் தம்மிடையே போரிட்டுக்கொள்ளாத வரை (உலக) முடிவுநாள் வராது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
6935. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரே வாதத்தை முன்வைக்கும் இரு குழுவினர் தம்மிடையே போரிட்டுக் கொள்ளாத வரை யுக முடிவுநாள் வராது.20

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21

அத்தியாயம் : 88
6936. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدٍ الْقَارِيَّ، أَخْبَرَاهُ أَنَّهُمَا، سَمِعَا عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمٍ، يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَمَعْتُ لِقِرَاءَتِهِ، فَإِذَا هُوَ يَقْرَؤُهَا عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَذَلِكَ، فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاَةِ فَانْتَظَرْتُهُ حَتَّى سَلَّمَ، ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ أَوْ بِرِدَائِي فَقُلْتُ مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ قَالَ أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ لَهُ كَذَبْتَ فَوَاللَّهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَقْرَأَنِي هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَؤُهَا. فَانْطَلَقْتُ أَقُودُهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ بِسُورَةِ الْفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا، وَأَنْتَ أَقْرَأْتَنِي سُورَةَ الْفُرْقَانِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَرْسِلْهُ يَا عُمَرُ، اقْرَأْ يَا هِشَامُ "". فَقَرَأَ عَلَيْهِ الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَؤُهَا. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَكَذَا أُنْزِلَتْ "". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اقْرَأْ يَا عُمَرُ "". فَقَرَأْتُ فَقَالَ "" هَكَذَا أُنْزِلَتْ "". ثُمَّ قَالَ "" إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ "".
பாடம்: 9 (தமது செயலுக்குத்) தகுந்த விளக்கம் அளிப்போர் குறித்து வந்துள்ளவை22
6936. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது வாழ்நாளில் ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள் ‘அல்ஃபுர்கான்’ எனும் (குர்ஆன்) அத்தியாயத்தை (தொழுகை யில்) ஓதுவதை நான் செவியுற்றேன். அவரது ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காண்பிக்காத பல (வட்டார) மொழிவழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். உடனே தொழுகையில் வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை காத்திருந்தேன். (அவர் தொழுது முடித்த) பிறகு ‘அவரது மேல்துண்டை’ அல்லது ‘எனது மேல்துண்டைக்’ கழுத்தில் போட்டுப் பிடித்து, “இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக்காண்பித்தது யார்?” என்று கேட்டேன்.

அவர் “இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான் எனக்கு ஓதிக் காண்பித்தார்கள்” என்று பதிலளித்தார். “நீர் பொய் சொல்லிவிட்டீர். அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் ஓதிய இந்த அத்தி யாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வேறு விதமாக) எனக்கு ஓதிக்காட்டினார்கள்” என்றேன்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இழுத்துக்கொண்டு சென்று, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனக்கு ஓதிக்காட்டாத பல (வட்டார) மொழிவழக்குகளில் ‘அல்ஃபுர்கான்’ அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன். தாங்கள் எனக்கு ‘அல்ஃபுர்கான்’ அத்தி யாயத்தை (வேறு விதமாக)ச் சொல்லிக் கொடுத்தீர்கள்” என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமரே! இவரை விடுங்கள்” என்று கூறிவிட்டு, “ஹிஷாமே! நீங்கள் ஓதுங்கள்!” என்றார்கள். அவர் என்னிடம் ஓதியதைப் போன்றே நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக்காட்டினார். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.

பிறகு (என்னை நோக்கி) “உமரே! நீங்கள் ஓதுங்கள்” என்று சொன்னார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் “இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. நிச்சயமாக இந்த குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. ஆகவே, உங்களுக்கு அவற்றில் எது எளிதானதோ அதை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.23

அத்தியாயம் : 88
6937. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا وَكِيعٌ، ح حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، رضى الله عنه قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} شَقَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَالُوا أَيُّنَا لَمْ يَظْلِمْ نَفْسَهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَيْسَ كَمَا تَظُنُّونَ. إِنَّمَا هُوَ كَمَا قَالَ لُقْمَانُ لاِبْنِهِ {يَا بُنَىَّ لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}"".
பாடம்: 9 (தமது செயலுக்குத்) தகுந்த விளக்கம் அளிப்போர் குறித்து வந்துள்ளவை22
6937. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு” எனும் (6:82 ஆவது) இறைவசனம் அருளப்பெற்ற போது நபித்தோழர்களுக்கு அது சிரம மாக இருந்தது. மேலும், அவர்கள் “எங்களில் யார்தான் தமக்குத்தாமே அநீதி யிழைக்காதவர்?” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அநீதி என்பதற்கு நீங்கள் நினைக்கின்ற அர்த்தமில்லை. லுக்மான் அவர்கள் தம் புதல்வருக்குக் கூறியதைப் போன்றே இங்கு பொருள் கொள்ள வேண்டும். “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! நிச்சயமாக! இணைகற்பிப்பதுதான் மிகப்பெரும் அநீதியாகும்” என்று அவர் கூறினார். (31:13)24

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 88