6888. وَبِإِسْنَادِهِ " لَوِ اطَّلَعَ فِي بَيْتِكَ أَحَدٌ وَلَمْ تَأْذَنْ لَهُ، خَذَفْتَهُ بِحَصَاةٍ فَفَقَأْتَ عَيْنَهُ، مَا كَانَ عَلَيْكَ مِنْ جُنَاحٍ ".
பாடம்: 15 ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு)செல்லாமல் தமது உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தம் உறவினருக்காகத்) தாமே பழிவாங்குவதும்24
6888. மேற்சொன்ன அதே அறிவிப் பாளர்தொடரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்களது வீட்டுக்குள் எட்டிப்பார்த்த போது அவர்மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை.


அத்தியாயம் : 87
6889. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ حُمَيْدٍ،، أَنَّ رَجُلاً، اطَّلَعَ فِي بَيْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَدَّدَ إِلَيْهِ مِشْقَصًا. فَقُلْتُ مَنْ حَدَّثَكَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ.
பாடம்: 15 ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு)செல்லாமல் தமது உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தம் உறவினருக்காகத்) தாமே பழிவாங்குவதும்24
6889. யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்குள் (ஒரு துவாரம் வழியாக) எட்டிப் பார்த்தார். அப்போது அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்மையான பகுதியை நேராகக் கொண்டுசென்றார்கள்” என்று ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நான், “இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஹுமைத் (ரஹ்) அவர்கள், “அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்தான் (அறிவித்தார்கள்)” என்று பதிலளித்தார்கள்.26

அத்தியாயம் : 87
6890. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، قَالَ هِشَامٌ أَخْبَرَنَا عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَاحَ إِبْلِيسُ أَىْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ. فَرَجَعَتْ أُولاَهُمْ، فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ، فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ أَىْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي. قَالَتْ فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ. قَالَ حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ. قَالَ عُرْوَةُ فَمَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهُ بَقِيَّةٌ حَتَّى لَحِقَ بِاللَّهِ.
பாடம்: 16 ஒருவர் நெரிசலில் சிக்கி இறந்து விட்டால் அல்லது கொல்லப் பட்டுவிட்டால்..?27
6890. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போர் நாளில் (ஆரம்பத் தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக் கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!” என்று கத்தினான். உடனே முஸ்லிம்களில் முன்அணிப் படையினர் திரும்பிச் சென்று (எதிரிகள்தான் பின்னால் இருக்கின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு) பின்அணிப் படையினருடன் மோதினார்கள்.

அப்போது அங்கு (தமக்கு அருகேயிருந்த) தம் தந்தை அல்யமான் (ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக்கொண்டதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, “அல்லாஹ்வின் அடியார்களே! (அவர்) என் தந்தை! என் தந்தை” என்று (உரத்த குரலில்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்றபின்பே (அவரைவிட்டு) அவர்கள் விலகினார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் மன்னித்ததால் அவர்கள் இறைவனை அடையும்வரை (அவர் களது வாழ்க்கையில்) நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.28

அத்தியாயம் : 87
6891. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى خَيْبَرَ فَقَالَ رَجُلٌ مِنْهُمْ أَسْمِعْنَا يَا عَامِرُ مِنْ هُنَيْهَاتِكَ. فَحَدَا بِهِمْ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنِ السَّائِقُ "" قَالُوا عَامِرٌ. فَقَالَ "" رَحِمَهُ اللَّهُ "". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلاَّ أَمْتَعْتَنَا بِهِ. فَأُصِيبَ صَبِيحَةَ لَيْلَتِهِ فَقَالَ الْقَوْمُ حَبِطَ عَمَلُهُ، قَتَلَ نَفْسَهُ. فَلَمَّا رَجَعْتُ وَهُمْ يَتَحَدَّثُونَ أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ، فَجِئْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ فَدَاكَ أَبِي وَأُمِّي، زَعَمُوا أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ. فَقَالَ "" كَذَبَ مَنْ قَالَهَا، إِنَّ لَهُ لأَجْرَيْنِ اثْنَيْنِ، إِنَّهُ لَجَاهِدٌ مُجَاهِدٌ، وَأَىُّ قَتْلٍ يَزِيدُهُ عَلَيْهِ "".
பாடம்: 17 ஒருவர் தவறுதலாகத் தம்மைத் தாமே கொலை செய்துகொண் டால் அவருக்காக இழப்பீடு கிடையாது.29
6891. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காக)ப் புறப்பட்டோம். அப்போது மக்களில் ஒருவர் (என் தந்தையின் சகோதரரிடம்) “ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை(ப் பாடி) எங்களைச் செவியுறச் செய்யமாட்டீர்களா?” என்று கூறினார். ஆகவே, ஆமிர் (ரலி) அவர்கள் (சில கவிதைகளைப் பாடி) மக்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த ஒட்டகவோட்டி யார்?” என்று கேட்டார்கள். “ஆமிர் பின் அல்அக்வஉ” என்று மக்கள் பதிலளித்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக” என்று கூறினார்கள். (அந்தப் பிரார்த்தனையின் பொருளைப் புரிந்துகொண்ட) மக்கள், “அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா (அல்லாஹ்வின் தூதரே!)?” என்று கேட்டார்கள். அவர் அன்றைய இரவின் (அடுத்த நாள்) காலையில் (தமது முழங்காலில் தமது வாளாலேயே) தாக்கப்பட்டு இறந்தார். அப்போது மக்கள், “ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன; அவர் (தமது வாளால் தம்மைத்தாமே குத்திக்கொண்டு) தற்கொலை செய்துகொண்டார்” என்று பேசினர். (கைபரிலிருந்து) நான் திரும்பியபோது “ஆமிரின் நற்செயல்கள் அழிந்துபோயின” என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் (ரலி) அவர்களின் நற்செயல்கள் அழிந்துவிட்டன என்று மக்கள் கருதுகின்றனர்” என்று சொன்னேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதைக் கூறியவர் உண்மைக்குப் புறம்பாகக் கூறிவிட்டார். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல்கள் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு. அவர் துன்பங்களைத் தாங்கினார்; (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். அவர் பெற்ற நற்பலனைவிட அதிகமான நற்பலனைப் பெற்றுத்தரும் (வீர) மரணம் எது?” என்று கேட்டார்கள்.30

அத்தியாயம் : 87
6892. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ زُرَارَةَ بْنَ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً، عَضَّ يَدَ رَجُلٍ، فَنَزَعَ يَدَهُ مِنْ فَمِهِ، فَوَقَعَتْ ثَنِيَّتَاهُ، فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" يَعَضُّ أَحَدُكُمْ أَخَاهُ كَمَا يَعَضُّ الْفَحْلُ، لاَ دِيَةَ لَكَ "".
பாடம்: 18 ஒருவர் மற்றவர் (கரம்)தனைக் கடிக்க, கடித்தவரின் முன்பற்கள் விழுந்துவிட்டால்...?31
6892. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தமது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன் பற்கள் இரண்டு விழுந்துவிட்டன. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும்வரை அவன் தனது கையை அப்படியே வைத்துக்கொண்டி ருப்பானா? பல்லிழந்த) உமக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 87
6893. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، قَالَ خَرَجْتُ فِي غَزْوَةٍ، فَعَضَّ رَجُلٌ فَانْتَزَعَ ثَنِيَّتَهُ، فَأَبْطَلَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம்: 18 ஒருவர் மற்றவர் (கரம்)தனைக் கடிக்க, கடித்தவரின் முன்பற்கள் விழுந்துவிட்டால்...?31
6893. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (தபூக்) போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அப்போது ஒரு மனிதர் (இன்னொருவரைக்) கடித்தார். கடிபட்ட மனிதர் (தமது கையை விடுவிக்கும்போது) கடித்தவரின் முன்பல்லைக் கழற்றிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.

அத்தியாயம் : 87
6894. حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ ابْنَةَ النَّضْرِ، لَطَمَتْ جَارِيَةً، فَكَسَرَتْ ثَنِيَّتَهَا، فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَ بِالْقِصَاصِ.
பாடம்: 19 பல்லுக்குப் பல்32
6894. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் பாட்டனார்) நள்ர் அவர்களின் புதல்வி (ருபய்யிஉ பின்த் நள்ர்) ஓர் இளம் பெண்ணின் கன்னத்தில் அறைந்து அவளது முன்பல்லை உடைத்துவிட்டார். ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு)வந்தார்கள். அப்போது நபியவர்கள் பழிவாங்கிடுமாறு உத்தரவிட்டார்கள்.

அத்தியாயம் : 87
6895. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" هَذِهِ وَهَذِهِ سَوَاءٌ ""، يَعْنِي الْخِنْصَرَ وَالإِبْهَامَ. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
பாடம்: 20 விரல்களுக்கான இழப்பீடுகள் (சமமானவையா? மாறுபட்ட வையா?)33
6895. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இதோ இந்த சுண்டு விரலும் கட்டை விரலும் (இழப்பீட்டில்) சமமானவையே.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதைப் போன்றே நபி (ஸல்) அவர்களிடம் தாம் செவியுற்றதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.

அத்தியாயம் : 87
6896. وَقَالَ لِي ابْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ غُلاَمًا، قُتِلَ غِيلَةً فَقَالَ عُمَرُ لَوِ اشْتَرَكَ فِيهَا أَهْلُ صَنْعَاءَ لَقَتَلْتُهُمْ. وَقَالَ مُغِيرَةُ بْنُ حَكِيمٍ عَنْ أَبِيهِ إِنَّ أَرْبَعَةً قَتَلُوا صَبِيًّا فَقَالَ عُمَرُ مِثْلَهُ. وَأَقَادَ أَبُو بَكْرٍ وَابْنُ الزُّبَيْرِ وَعَلِيٌّ وَسُوَيْدُ بْنُ مُقَرِّنٍ مِنْ لَطْمَةٍ. وَأَقَادَ عُمَرُ مِنْ ضَرْبَةٍ بِالدِّرَّةِ. وَأَقَادَ عَلِيٌّ مِنْ ثَلاَثَةِ أَسْوَاطٍ. وَاقْتَصَّ شُرَيْحٌ مِنْ سَوْطٍ وَخُمُوشٍ.
பாடம்: 21 ஒரு மனிதரை ஒரு கூட்டமே சேர்ந்து கொலை செய்துவிட்டாலோ காயப்படுத்திவிட்டாலோ அவர்கள் அனைவருமே தண்டிக்கப் படுவார்களா? பழிவாங்கப்படு வார்களா?34 முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் திருடிவிட்டார் என இரண்டுபேர் சாட்சியம் அளித்தனர். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் (குற்றம் சாட்டப்பட்ட) அவரது கையை வெட்டும் படி உத்தரவிட்டார்கள். பிறகு வேறொரு மனிதரை (சாட்சியம் அளித்த) அவ்விரு வரும் அழைத்துவந்து “(இவர்தான் திருடியவர்; முதலில்) நாங்கள் கூறியது தவறு” என்றனர். அப்போது அலீ (ரலி) அவர்கள் (முதல் மனிதருக்கெதிராக) அவர்கள் கூறிய சாட்சியத்தைச் செல்லாததாக்கினார்கள். மேலும், அந்த முதல் நபருக்காக அவர்கள் இருவரிடமும் இழப்பீடும் பெறப்பட்டது. அத்துடன், “நீங்கள் இருவரும் திட்டமிட்டே (இவ்வாறு பொய்ச் சாட்சியம்) கூறினீர்கள் என்று நான் அறிந்திருந்தால் உங்கள் இருவரின் கைகளையும் வெட்டியிருப்பேன்” என்றும் கூறினார்கள்.
6896. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு சிறுவன் வஞ்சித்துக் கொல்லப்பட்டான். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இந்தக் கொலையில் (யமனிலுள்ள) ஸன்ஆவாசிகள் அனைவரும் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரை யும் நான் (பதிலுக்குக்) கொல்வேன்” என்று சொன்னார்கள்.

ஹகீம் அஸ்ஸன்ஆனீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான்கு பேர் (சேர்ந்து) ஒரு சிறுவனைக் கொன்று விட்டனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்” என்று வந்துள்ளது.

கன்னத்தில் ஓர் அறைவிட்ட குற்றத்திற்காக அபூபக்ர் (ரலி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), அலீ (ரலி), சுவைத் பின் முகர்ரின் (ரலி) ஆகியோர் பழிவாங்கும்படி தீர்ப்பளித்தனர்.

சாட்டையால் ஓர் அடி அடித்த குற்றத்திற்காக உமர் (ரலி) அவர்கள் பழிவாங்கிடச் செய்தார்கள். மூன்று சாட்டையடிகளுக்காக அலீ (ரலி) அவர்கள் பழிவாங்கிடச் செய்தார்கள்.

(நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், சாட்டையால் அடித்ததற்கும் பிறாண்டி காயப்படுத்தியதற்கும் பழிக்குப்பழி தண்டனை வழங்குமாறு தீர்ப்பளித் தார்கள்.


அத்தியாயம் : 87
6897. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَتْ عَائِشَةُ لَدَدْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ، وَجَعَلَ يُشِيرُ إِلَيْنَا "" لاَ تَلُدُّونِي "". قَالَ فَقُلْنَا كَرَاهِيَةُ الْمَرِيضِ بِالدَّوَاءِ، فَلَمَّا أَفَاقَ قَالَ "" أَلَمْ أَنْهَكُمْ أَنْ تَلُدُّونِي "". قَالَ قُلْنَا كَرَاهِيَةٌ لِلدَّوَاءِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَبْقَى مِنْكُمْ أَحَدٌ إِلاَّ لُدَّ ـ وَأَنَا أَنْظُرُ ـ إِلاَّ الْعَبَّاسَ فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ "".
பாடம்: 21 ஒரு மனிதரை ஒரு கூட்டமே சேர்ந்து கொலை செய்துவிட்டாலோ காயப்படுத்திவிட்டாலோ அவர்கள் அனைவருமே தண்டிக்கப் படுவார்களா? பழிவாங்கப்படு வார்களா?34 முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் திருடிவிட்டார் என இரண்டுபேர் சாட்சியம் அளித்தனர். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் (குற்றம் சாட்டப்பட்ட) அவரது கையை வெட்டும் படி உத்தரவிட்டார்கள். பிறகு வேறொரு மனிதரை (சாட்சியம் அளித்த) அவ்விரு வரும் அழைத்துவந்து “(இவர்தான் திருடியவர்; முதலில்) நாங்கள் கூறியது தவறு” என்றனர். அப்போது அலீ (ரலி) அவர்கள் (முதல் மனிதருக்கெதிராக) அவர்கள் கூறிய சாட்சியத்தைச் செல்லாததாக்கினார்கள். மேலும், அந்த முதல் நபருக்காக அவர்கள் இருவரிடமும் இழப்பீடும் பெறப்பட்டது. அத்துடன், “நீங்கள் இருவரும் திட்டமிட்டே (இவ்வாறு பொய்ச் சாட்சியம்) கூறினீர்கள் என்று நான் அறிந்திருந்தால் உங்கள் இருவரின் கைகளையும் வெட்டியிருப்பேன்” என்றும் கூறினார்கள்.
6897. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கடைசிக் காலத்தில்) நோய் வாய்ப்பட்டிருந்தபோது (அரை மயக்கத்தில் இருந்தார்கள். அப்போது) நாங்கள் அவர்களின் வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். என் வாயில் மருந்தூற்றாதீர்கள் என்று அவர்கள் சைகை செய்யலானார்கள். ‘நோயாளி மருந்தை வெறுப்பதைப் போன்றுதான் (நபியவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாம் என்று தடை செய்யவில்லை)’ என்று நாங்கள் கூறிக்கொண்டோம்.

அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது, “என் வாயில் மருந்தூற்ற வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள். நாங்கள் “மருந்து உட்கொள்ளப் பிடிக்காமல்தான் (அவ்வாறு சைகை செய்தீர்கள்)” என்று சொன்னோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நான் தடுத்தும் கேட்காததற்குப் பதிலாக) உங்களில் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவர் வாயிலும் நான் பார்த்துக்கொண்டிருக்க மருந்தூற்றப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, “ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில் (மருந்தூற்றும்போது) அவர் உங்களுடன் கலந்துகொள்ளவில்லை” என்று கூறினார்கள்.35

அத்தியாயம் : 87
6898. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، زَعَمَ أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ أَخْبَرَهُ أَنَّ نَفَرًا مِنْ قَوْمِهِ انْطَلَقُوا إِلَى خَيْبَرَ فَتَفَرَّقُوا فِيهَا، وَوَجَدُوا أَحَدَهُمْ قَتِيلاً، وَقَالُوا لِلَّذِي وُجِدَ فِيهِمْ قَتَلْتُمْ صَاحِبَنَا. قَالُوا مَا قَتَلْنَا وَلاَ عَلِمْنَا قَاتِلاً. فَانْطَلَقُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ انْطَلَقْنَا إِلَى خَيْبَرَ فَوَجَدْنَا أَحَدَنَا قَتِيلاً. فَقَالَ "" الْكُبْرَ الْكُبْرَ "". فَقَالَ لَهُمْ "" تَأْتُونَ بِالْبَيِّنَةِ عَلَى مَنْ قَتَلَهُ "". قَالُوا مَا لَنَا بَيِّنَةٌ. قَالَ "" فَيَحْلِفُونَ "". قَالُوا لاَ نَرْضَى بِأَيْمَانِ الْيَهُودِ. فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُبْطِلَ دَمَهُ، فَوَدَاهُ مِائَةً مِنْ إِبِلِ الصَّدَقَةِ.
பாடம்: 22 ‘அல்கசாமா’ எனும் சத்தியம்36 அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “(வாதியான) உம்முடைய இரண்டு சாட்சிகள் தேவை. அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் தேவை” என்று சொன்னார்கள்.37 இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முஆவியா (ரலி) அவர்கள் ‘அல்கசாமா’ சத்தியத்தை ஏற்றுப் பழிவாங்கும்படி உத்தரவிடவில்லை. உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், தாம் பஸ்ரா நகருக்கு ஆளுநராக நியமித்திருந்த அதீ பின் அர்தாத் அவர்களுக்கு, நெய் வியாபாரிகளின் வீடுகளில் ஒன்றுக்கு அருகில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஒருவர் தொடர்பாக(ப் பின்வருமாறு) கடிதம் எழுதினார்கள்: கொல்லப்பட்டவரின் நண்பர்கள் சாட்சியத்தைக் கொண்டுவந்தால் சரி. அவ்வாறில்லையாயின், (சாட்சியில்லாமல் நீங்கள் தீர்ப்பளித்து) மக்களுக்கு அநீதி யிழைத்துவிடாதீர்கள். இதைப் போன்ற வழக்குகளில் மறுமை நாள்வரை (சரியான) தீர்ப்பு வழங்க முடியாது.
6898. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் குலத்தாரில் சிலர் கைபர் நோக்கிச் சென்றார்கள். அங்கே அவர்கள் தனித்தனியாகப் பிரிந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கக் கண்டனர். அவர் கிடந்த இடத்தில் இருந்த (யூத) மக்களிடம் அவர்கள், “எங்கள் நண்பரை நீங்கள் (அநியாயமாகக்) கொன்றுவிட்டீர்கள்” என்று கூறினர். (அந்த யூத) மக்கள் “நாங்கள் (அவரைக்) கொல்லவுமில்லை. (அவரைக்) கொலை செய்தவர் யார் என எங்களுக்குத் தெரியவுமில்லை” என்று கூறினர். ஆகவே, (கைபர் சென்ற) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கைபருக்குச் சென்றோம். அங்கு எங்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கக் கண்டோம்” என்று கூறினர்.

அப்போது (பேச்சைத் துவங்கிய அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களை நோக்கி) நபி (ஸல்) அவர்கள், “பெரியவர்களைப் பேசவிடு! பெரியவர்களைப் பேசவிடு!” என்று கூறினார்கள். பிறகு (கொல்லப்பட்டவர்களின் நண்பர்களைப் பார்த்து) நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கொலை செய்தவர் யார் என்பதற்குச் சாட்சி கொண்டுவாருங்கள்!” என்று கூறினார்கள். அவர்கள், “எங்களிடம் சாட்சியில்லை” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் (யூதர்களான) அவர்கள் சத்தியம் செய்யட்டும்” என்றார்கள். அதற்கு (கொல்லப்பட்டவரின் நண்பர்களான) அவர்கள், “யூதர்களின் சத்தியத்தை (நம்பி) ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொலையுண்டவரின் உயிரிழப்பை வீணாக்க விரும்பாமல் தாமே நூறு தர்ம ஒட்டகங்களை இழப்பீட்டுத் தொகையாக வழங்கினார்கள்.38


அத்தியாயம் : 87
6899. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الأَسَدِيُّ حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ أَبِي عُثْمَانَ، حَدَّثَنِي أَبُو رَجَاءٍ، مِنْ آلِ أَبِي قِلاَبَةَ حَدَّثَنِي أَبُو قِلاَبَةَ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَبْرَزَ سَرِيرَهُ يَوْمًا لِلنَّاسِ، ثُمَّ أَذِنَ لَهُمْ فَدَخَلُوا فَقَالَ مَا تَقُولُونَ فِي الْقَسَامَةِ قَالَ نَقُولُ الْقَسَامَةُ الْقَوَدُ بِهَا حَقٌّ، وَقَدْ أَقَادَتْ بِهَا الْخُلَفَاءُ. قَالَ لِي مَا تَقُولُ يَا أَبَا قِلاَبَةَ وَنَصَبَنِي لِلنَّاسِ. فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ عِنْدَكَ رُءُوسُ الأَجْنَادِ وَأَشْرَافُ الْعَرَبِ، أَرَأَيْتَ لَوْ أَنَّ خَمْسِينَ مِنْهُمْ شَهِدُوا عَلَى رَجُلٍ مُحْصَنٍ بِدِمَشْقَ أَنَّهُ قَدْ زَنَى، لَمْ يَرَوْهُ أَكُنْتَ تَرْجُمُهُ قَالَ لاَ. قُلْتُ أَرَأَيْتَ لَوْ أَنَّ خَمْسِينَ مِنْهُمْ شَهِدُوا عَلَى رَجُلٍ بِحِمْصَ أَنَّهُ سَرَقَ أَكُنْتَ تَقْطَعُهُ وَلَمْ يَرَوْهُ قَالَ لاَ. قُلْتُ فَوَاللَّهِ مَا قَتَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَطُّ، إِلاَّ فِي إِحْدَى ثَلاَثِ خِصَالٍ رَجُلٌ قَتَلَ بِجَرِيرَةِ نَفْسِهِ فَقُتِلَ، أَوْ رَجُلٌ زَنَى بَعْدَ إِحْصَانٍ، أَوْ رَجُلٌ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ وَارْتَدَّ عَنِ الإِسْلاَمِ. فَقَالَ الْقَوْمُ أَوَلَيْسَ قَدْ حَدَّثَ أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَطَعَ فِي السَّرَقِ وَسَمَرَ الأَعْيُنَ، ثُمَّ نَبَذَهُمْ فِي الشَّمْسِ. فَقُلْتُ أَنَا أُحَدِّثُكُمْ حَدِيثَ أَنَسٍ، حَدَّثَنِي أَنَسٌ أَنَّ نَفَرًا مِنْ عُكْلٍ ثَمَانِيَةً قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَبَايَعُوهُ عَلَى الإِسْلاَمِ، فَاسْتَوْخَمُوا الأَرْضَ فَسَقِمَتْ أَجْسَامُهُمْ، فَشَكَوْا ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَفَلاَ تَخْرُجُونَ مَعَ رَاعِينَا فِي إِبِلِهِ، فَتُصِيبُونَ مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا "". قَالُوا بَلَى، فَخَرَجُوا فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا فَصَحُّوا، فَقَتَلُوا رَاعِيَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَطْرَدُوا النَّعَمَ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَرْسَلَ فِي آثَارِهِمْ، فَأُدْرِكُوا فَجِيءَ بِهِمْ، فَأَمَرَ بِهِمْ فَقُطِّعَتْ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ، وَسَمَرَ أَعْيُنَهُمْ، ثُمَّ نَبَذَهُمْ فِي الشَّمْسِ حَتَّى مَاتُوا. قُلْتُ وَأَىُّ شَىْءٍ أَشَدُّ مِمَّا صَنَعَ هَؤُلاَءِ ارْتَدُّوا عَنِ الإِسْلاَمِ وَقَتَلُوا وَسَرَقُوا. فَقَالَ عَنْبَسَةُ بْنُ سَعِيدٍ وَاللَّهِ إِنْ سَمِعْتُ كَالْيَوْمِ قَطُّ. فَقُلْتُ أَتَرُدُّ عَلَىَّ حَدِيثِي يَا عَنْبَسَةُ قَالَ لاَ، وَلَكِنْ جِئْتَ بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ، وَاللَّهِ لاَ يَزَالُ هَذَا الْجُنْدُ بِخَيْرٍ مَا عَاشَ هَذَا الشَّيْخُ بَيْنَ أَظْهُرِهِمْ. قُلْتُ وَقَدْ كَانَ فِي هَذَا سُنَّةٌ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهِ نَفَرٌ مِنَ الأَنْصَارِ فَتَحَدَّثُوا عِنْدَهُ، فَخَرَجَ رَجُلٌ مِنْهُمْ بَيْنَ أَيْدِيهِمْ فَقُتِلَ، فَخَرَجُوا بَعْدَهُ، فَإِذَا هُمْ بِصَاحِبِهِمْ يَتَشَحَّطُ فِي الدَّمِ، فَرَجَعُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ صَاحِبُنَا كَانَ تَحَدَّثَ مَعَنَا، فَخَرَجَ بَيْنَ أَيْدِينَا، فَإِذَا نَحْنُ بِهِ يَتَشَحَّطُ فِي الدَّمِ. فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" بِمَنْ تَظُنُّونَ أَوْ تَرَوْنَ قَتَلَهُ "". قَالُوا نَرَى أَنَّ الْيَهُودَ قَتَلَتْهُ. فَأَرْسَلَ إِلَى الْيَهُودِ فَدَعَاهُمْ. فَقَالَ "" آنْتُمْ قَتَلْتُمْ هَذَا "". قَالُوا لاَ. قَالَ "" أَتَرْضَوْنَ نَفَلَ خَمْسِينَ مِنَ الْيَهُودِ مَا قَتَلُوهُ "". فَقَالُوا مَا يُبَالُونَ أَنْ يَقْتُلُونَا أَجْمَعِينَ ثُمَّ يَنْتَفِلُونَ. قَالَ "" أَفَتَسْتَحِقُّونَ الدِّيَةَ بِأَيْمَانِ خَمْسِينَ مِنْكُمْ "". قَالُوا مَا كُنَّا لِنَحْلِفَ، فَوَدَاهُ مِنْ عِنْدِهِ. قُلْتُ وَقَدْ كَانَتْ هُذَيْلٌ خَلَعُوا خَلِيعًا لَهُمْ فِي الْجَاهِلِيَّةِ فَطَرَقَ أَهْلَ بَيْتٍ مِنَ الْيَمَنِ بِالْبَطْحَاءِ فَانْتَبَهَ لَهُ رَجُلٌ مِنْهُمْ فَحَذَفَهُ بِالسَّيْفِ فَقَتَلَهُ، فَجَاءَتْ هُذَيْلٌ فَأَخَذُوا الْيَمَانِيَ فَرَفَعُوهُ إِلَى عُمَرَ بِالْمَوْسِمِ وَقَالُوا قَتَلَ صَاحِبَنَا. فَقَالَ إِنَّهُمْ قَدْ خَلَعُوهُ. فَقَالَ يُقْسِمُ خَمْسُونَ مِنْ هُذَيْلٍ مَا خَلَعُوهُ. قَالَ فَأَقْسَمَ مِنْهُمْ تِسْعَةٌ وَأَرْبَعُونَ رَجُلاً، وَقَدِمَ رَجُلٌ مِنْهُمْ مِنَ الشَّأْمِ فَسَأَلُوهُ أَنْ يُقْسِمَ فَافْتَدَى يَمِينَهُ مِنْهُمْ بِأَلْفِ دِرْهَمٍ، فَأَدْخَلُوا مَكَانَهُ رَجُلاً آخَرَ، فَدَفَعَهُ إِلَى أَخِي الْمَقْتُولِ فَقُرِنَتْ يَدُهُ بِيَدِهِ، قَالُوا فَانْطَلَقَا وَالْخَمْسُونَ الَّذِينَ أَقْسَمُوا حَتَّى إِذَا كَانُوا بِنَخْلَةَ، أَخَذَتْهُمُ السَّمَاءُ فَدَخَلُوا فِي غَارٍ فِي الْجَبَلِ، فَانْهَجَمَ الْغَارُ عَلَى الْخَمْسِينَ الَّذِينَ أَقْسَمُوا فَمَاتُوا جَمِيعًا، وَأَفْلَتَ الْقَرِينَانِ وَاتَّبَعَهُمَا حَجَرٌ فَكَسَرَ رِجْلَ أَخِي الْمَقْتُولِ، فَعَاشَ حَوْلاً ثُمَّ مَاتَ. قُلْتُ وَقَدْ كَانَ عَبْدُ الْمَلِكِ بْنُ مَرْوَانَ أَقَادَ رَجُلاً بِالْقَسَامَةِ ثُمَّ نَدِمَ بَعْدَ مَا صَنَعَ، فَأَمَرَ بِالْخَمْسِينَ الَّذِينَ أَقْسَمُوا فَمُحُوا مِنَ الدِّيوَانِ وَسَيَّرَهُمْ إِلَى الشَّأْمِ.
பாடம்: 22 ‘அல்கசாமா’ எனும் சத்தியம்36 அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “(வாதியான) உம்முடைய இரண்டு சாட்சிகள் தேவை. அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் தேவை” என்று சொன்னார்கள்.37 இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முஆவியா (ரலி) அவர்கள் ‘அல்கசாமா’ சத்தியத்தை ஏற்றுப் பழிவாங்கும்படி உத்தரவிடவில்லை. உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், தாம் பஸ்ரா நகருக்கு ஆளுநராக நியமித்திருந்த அதீ பின் அர்தாத் அவர்களுக்கு, நெய் வியாபாரிகளின் வீடுகளில் ஒன்றுக்கு அருகில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஒருவர் தொடர்பாக(ப் பின்வருமாறு) கடிதம் எழுதினார்கள்: கொல்லப்பட்டவரின் நண்பர்கள் சாட்சியத்தைக் கொண்டுவந்தால் சரி. அவ்வாறில்லையாயின், (சாட்சியில்லாமல் நீங்கள் தீர்ப்பளித்து) மக்களுக்கு அநீதி யிழைத்துவிடாதீர்கள். இதைப் போன்ற வழக்குகளில் மறுமை நாள்வரை (சரியான) தீர்ப்பு வழங்க முடியாது.
6899. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒருநாள் மக்களிடம் பேசுவதற்காகத் தமது ஆசனத்தை எடுத்து வெளியே வைத்தார்கள். பிறகு மக்களுக்கு அனுமதி அளித்திட மக்கள் உள்ளே வந்தனர். பின்னர் (அவர்களிடம்) “அல்கசாமா சத்தியம் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்கசாமா மூலம் பழிவாங்கிடல் உண்டு என்றே கருதுகிறோம். கலீஃபாக்கள் அதைக் கொண்டு பழிவாங்கியுள்ளனர்” என்று கூறினர்.

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் மக்களின் பார்வையில் நான் படும்வகையில் என்னை நிறுத்தி வைத்து என்னிடம், “அபூகிலாபா அவர்களே! (இது குறித்து) நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அப்போது நான், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களிடம் படைத் தளபதி(களான ஆளுநர்)களும் அரபுத் தலைவர்களும் உள்ளனர். இவர்களில் ஐம்பது பேர் திமஷ்க் (டமாஸ்கஸ்) நகரிலுள்ள திருமணமான ஒரு மனிதர் குறித்து, அவரைப் பார்க்காமலேயே அவர் விபசாரம் புரிந்துவிட்டதாகச் சாட்சியம் அளித்தால் அவருக்கு நீங்கள் கல்லெறி தண்டனை வழங்கிவிடுவீர்களா, சொல்லுங்கள்?” என்று கேட்டேன். உமர் (ரஹ்) அவர்கள் “இல்லை” என்று சொன்னார்கள்.

நான், “இவர்களில் ஐம்பது பேர் ஹிம்ஸ் (சிரியா) நாட்டிலுள்ள ஒரு மனிதர் திருடிவிட்டார் என்று அவரைப் பார்க்காமலேயே அவருக்கெதிராகச் சாட்சியம் அளித்தால் அவரது கையை நீங்கள் துண்டித்துவிடுவீர்களா, சொல்லுங்கள்!” என்று கேட்டேன். உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், “இல்லை” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று காரணங்களில் ஒன்றுக்காக தவிர (வேறு எதற்காகவும்) எவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டதில்லை” என்று கூறினேன். (அந்த மூன்று காரணங்கள் வருமாறு:)

1. மன இச்சையின் பேரில் (அநியாயமாகப் படு)கொலை செய்தவர். (அதற்குத் தண்டனையாக) அவர் கொல்லப்படுவார். 2. திருமணமான பின்னர் விபசாரம் புரிந்த மனிதர். 3. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போர்புரியத் துணிந்து இஸ்லாத்திலிருந்து (வெளியேறி இறைமறுப்பிற்குத்) திரும்பிச் சென்றுவிட்ட மனிதர்.

அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில திருடர்க(ளின் கை கால்க)ளைத் துண்டித்துக் கண்களில் சூடிட்டுப் பிறகு அவர்களை வெயிலில் தூக்கி எறிந்தார்கள் என அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கவில்லையா?” என்று கேட்டார்கள். உடனே நான், “உங்களுக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் அறிவிப்பைக் கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு அனஸ் (ரலி) அவர்கள் கூறியதை(ப் பின்வருமாறு) தெரிவித்தேன்:39

‘உக்ல்’ எனும் குலத்தைச் சேர்ந்த எட்டுப்பேர் கொண்ட குழு ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்று உறுதிமொழி வழங்கினர். அப்போது (மதீனா) பூமியின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆதலால் அவர்களின் உடல்நலம் பாதித்தது. எனவே, இது குறித்து அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் நம் மேய்ப்பருடன் சென்று அவரிடமுள்ள (முஸ்லிம்களுக்குச் சொந்தமான) ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தலாமே!” என்று (யோசனை) கூறினார்கள்.

உக்ல் குலத்தார், ‘சரி’ என்று சொல்லிவிட்டு அங்கு சென்றனர். அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தி உடல் நலம் தேறினர். பிறகு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மேய்ப்பாளரைக் கொலை செய்துவிட்டு அந்த ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்தச் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களைப் பின்தொடர்ந்து ஆட்களை அனுப்பிவைத்தார்கள்.

ஆகவே, அவர்கள் பிடிக்கப்பட்டு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டனர். அப்போது அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுமாறும் அவர்களின் கண்களில் சூடிடுமாறும் உத்தரவிட்டார்கள். பிறகு அவர்கள் இறக்கும்வரை அவர்களை வெயிலில் தூக்கி எறிந்தார்கள்.40

நான், “இந்த உக்ல் குலத்தார் செய்ததை விடக்கொடிய செயல் வேறேது? அவர்கள் இஸ்லாத்திலிருந்து (இறைமறுப்பிற்கு) திரும்பிச்சென்றுவிட்டார்கள்; கொலை செய்தார்கள்; கொள்ளையடித்தார்கள்” என்று சொன்னேன். அப்போது அன்பஸா பின் சயீத் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று (உம்மிடம் இதைச் செவியுற்றது)போல் ஒருபோதும் நான் செவியுற்றதில்லை” என்று கூறினார்கள். உடனே நான், “அன்பஸா! என் செய்தியை நீங்கள் மறுக்கின்றீர்களா?” என்று கேட்டேன்.

அவர், “இல்லை (நான் மறுக்கவில்லை). மாறாக, இச்செய்தியை நீங்கள் உள்ளபடி கூறினீர்கள்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணயாக! இந்த (ஷாம்) மாகாணத்தாரிடையே இந்த மூதறிஞர் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை மக்கள் நன்மையில் நீடிப்பர்” என்று (என்னைக் குறித்துக்) கூறினார்கள்.

நான், “இந்த (கசாமா) விஷயம் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து முன்மாதிரி கிடைத்துள்ளது” என்றேன். (அதாவது) அன்சாரிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் (மட்டும் முன்பே கைபர் செல்வதற்காக) வெளியேறினார். (அங்கு) அவர் கொல்லப்பட்டார். பிறகு அவருக்குப் பின்னால் மற்றவர்களும் புறப்பட்டுச் சென்றனர். அங்கு அவர்கள் தம் தோழர் இரத்த (வெள்ள)த்தில் மிதப்பதைக் கண்டனர்.

உடனே அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுடன் பேசிக்கொண்டிருந்த எங்கள் நண்பர் எங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றார். நாங்கள் சென்று பார்த்தபோது அவர் இரத்த (வெள்ள)த்தில் மிதக்கிறார்” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியேறிச்சென்று, “இவரை யார் கொலை செய்திருப்பார் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், “யூதர்கள்தான் இவரைக் கொலை செய்திருப்பார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (யூதர்கள் வந்ததும் அவர்களை நோக்கி) “நீங்களா இவரைக் கொலை செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (வாதிகளான அன்சாரிகளை நோக்கி) “யூதர்களில் ஐம்பதுபேர் ‘நாங்கள் அவரைக் கொலை செய்யவில்லை’ என்று சத்தியம் செய்வதை நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “எங்கள் அனைவரையும் கொலை செய்துவிட்டு (தாங்கள் கொலை செய்யவில்லையென) சத்தியம் செய்யக்கூட யூதர்கள் தயங்கமாட்டார்கள்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களைப் பார்த்து), “உங்களில் ஐம்பதுபேர் (யூதர்களே கொலையாளிகள் என்று) சத்தியம் செய்வதன் மூலம் இழப்பீட்டுத் தொகைக்கு உரிமை பெறுகிறீர்களா?” என்று கேட்டார்கள்.

மக்கள், “நாங்கள் சத்தியம் செய்வதற்கு (தயாராக) இல்லை” என்று பதிலளித்தனர். ஆகவே, கொல்லப்பட்டவருக்காக நபி (ஸல்) அவர்களே தமது தரப்பிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கினார்கள்.41

அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்: மேலும், நான் (பின்வருமாறும்) கூறினேன்: ஹுதைல் குலத்தார் அறியாமைக் காலத்தில் தாம் நட்புறவு ஒப்பந்தம் செய்திருந்த ஒருவனிடம் ஒப்பந்த முறிவுப் பிரகடனத்தை வெளியிட்டனர். ஆகவே, அந்த ஒப்பந்த முறிவுக்குள்ளானவன் (மக்காவிலுள்ள) ‘பத்ஹா’ எனுமிடத்திலிருந்த யமன் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை இரவு நேரத்தில் தாக்கிக் கொள்ளையடிக்க முற்பட்டான். அப்போது அவர்களில் ஒருவர் அவனைக் கண்டு விழித்துக்கொண்டு அவனை நோக்கி வாளை வீசி அவனைக் கொன்றுவிட்டார். உடனே ஹுதைல் குலத்தார் வந்து அந்த யமன்வாசியைப் பிடித்துக்கொண்டனர்.

பின்னர் ஹஜ் காலத்தில் அவரை (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவந்து நிறுத்தி, “இவர் எங்கள் (ஒப்பந்த) நண்பரைக் கொன்றுவிட்டார்” என்று கூறினர். அதற்கு அந்த யமன்வாசி, “(நான் திருடனைத்தான் கொலை செய்தேன்.) ஹுதைல் குலத்தார் அவனுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டுவிட்டனர்” என்று கூறினார். உடனே உமர் (ரலி) அவர்கள், “ஹுதைல் குலத்தாரில் ஐம்பதுபேர் ‘(நாங்கள்) அவருடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளவில்லை’ எனச் சத்தியம் செய்யட்டும்” என்றார்கள். ஆகவே, அவர்களில் நாற்பத்தொன்பது பேர், (நாங்கள் அந்த மனிதருடனான ஒப்பந்தத்தை முறிக்கவில்லை என்று பொய்ச்) சத்தியம் செய்தனர்.

அப்போது ஹுதைல் குலத்தாரில் ஒருவர் ஷாம் நாட்டிலிருந்து வந்தார். (ஐம்பதாவது நபராக) அவரையும் சத்தியம் செய்திடுமாறு ஹுதைல் குலத்தார் கோரினர். ஆனால், அவர் தமது சத்தியத்திற்குப் பதிலாக ஆயிரம் திர்ஹங்களை அவர்களிடம் வழங்கினார். (சத்தியம் செய்வதிலிருந்து விலகிக் கொண்டார்.) இதையடுத்து அவரது இடத்தில் மற்றொருவரை அவர்கள் சேர்த்துக் கொண்டதுடன், அந்த (ஐம்பதாவது) நபரைக் கொலையுண்டவரின் சகோதரரிடம் ஒப்படைத்தும்விட்டனர். அவரது கை இவரது கையுடன் பிணைக்கப்பட்டது.

பின்னர் அவர்களிருவரும் சத்தியம் செய்த ஐம்பது (49) பேரும் புறப்பட்டார்கள். அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘நக்லா’ எனுமிடத்தை அடைந்தபோது மழை பிடித்துக்கொண்டது. எனவே, அவர்கள் அங்கிருந்த ஒரு மலையின் குகைக்குள் நுழைந்துகொண்டார்கள். அப்போது அந்தக் குகை (பொய்ச் சத்தியம் செய்த) அந்த ஐம்பது பேர்மீது இடிந்து விழுந்து அவர்கள் அனைவரும் மாண்டுபோயினர். (கை கோத்துவிடப்பட்ட) அந்த இரு நண்பர்களும் தப்பித்துக்கொண்டனர். அப்போது அவர்களை ஒரு கல் தொடர்ந்து வந்து கொலையுண்டவருடைய சகோதரரின் காலை முறித்துவிட்டது. பிறகு அவர் ஓராண்டு காலம் வாழ்ந்து பிறகு மரணித்தார்.42

(தொடர்ந்து அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

அப்துல் மலிக் பின் மர்வான் ‘அல்கசாமா’வைக் கொண்டு ஒருவரை பழிவாங்கிடுமாறு ஆணையிட்டார். பிறகு தமது செயல் குறித்து அவர் வருந்தினார். ஆகவே, சத்தியம் செய்த ஐம்பதுபேரின் பெயர்களை (படை வீரர்களின்) பெயர் பதிவேட்டிலிருந்து நீக்கியதுடன் அவர்களை ஷாம் நாட்டிற்கு நாடு கடத்தவும் செய்தார்.

அத்தியாயம் : 87
6900. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، اطَّلَعَ فِي بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ بِمِشْقَصٍ أَوْ بِمَشَاقِصَ وَجَعَلَ يَخْتِلُهُ لِيَطْعُنَهُ.
பாடம்: 23 ஒருவர் மற்றவர்களின் வீட்டுக்குள் (அவர்களுடைய அனுமதி யில்லாமல்) எட்டிப் பார்க்க, அவர்கள் அவரது கண்ணைப் பழுதாக்கிவிட்டால் அவருக்காக இழப்பீடு கிடையாது.
6900. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப்பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் ‘கூர்முனையால்’ அல்லது ‘கூர்முனைகளால்’ அவருக்குத் தெரியாமல் அவரைக் குத்துவதற்காகச் சென்றார்கள்.43


அத்தியாயம் : 87
6901. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، أَخْبَرَهُ أَنَّ رَجُلاً اطَّلَعَ فِي جُحْرٍ فِي باب رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِدْرًى يَحُكُّ بِهِ رَأْسَهُ، فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ أَعْلَمُ أَنْ تَنْتَظِرَنِي لَطَعَنْتُ بِهِ فِي عَيْنَيْكَ "". قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ قِبَلِ الْبَصَرِ "".
பாடம்: 23 ஒருவர் மற்றவர்களின் வீட்டுக்குள் (அவர்களுடைய அனுமதி யில்லாமல்) எட்டிப் பார்க்க, அவர்கள் அவரது கண்ணைப் பழுதாக்கிவிட்டால் அவருக்காக இழப்பீடு கிடையாது.
6901. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப்பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது; அதனால் தமது தலையை அவர்கள் கோதிக்கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது, “என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது” என்று கூறினார்கள்.44


அத்தியாயம் : 87
6902. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" لَوْ أَنَّ امْرَأً اطَّلَعَ عَلَيْكَ بِغَيْرِ إِذْنٍ، فَخَذَفْتَهُ بِعَصَاةٍ، فَفَقَأْتَ عَيْنَهُ، لَمْ يَكُنْ عَلَيْكَ جُنَاحٌ "".
பாடம்: 23 ஒருவர் மற்றவர்களின் வீட்டுக்குள் (அவர்களுடைய அனுமதி யில்லாமல்) எட்டிப் பார்க்க, அவர்கள் அவரது கண்ணைப் பழுதாக்கிவிட்டால் அவருக்காக இழப்பீடு கிடையாது.
6902. அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்தபோது அவர்மீது நீ சிறுகல்லைச் சுண்டிஎறிய, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உன்மீது எந்தக் குற்றமுமில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.45

அத்தியாயம் : 87
6903. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا مُطَرِّفٌ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، قَالَ سَأَلْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ هَلْ عِنْدَكُمْ شَىْءٌ مَا لَيْسَ فِي الْقُرْآنِ وَقَالَ مَرَّةً مَا لَيْسَ عِنْدَ النَّاسِ فَقَالَ وَالَّذِي فَلَقَ الْحَبَّ وَبَرَأَ النَّسَمَةَ مَا عِنْدَنَا إِلاَّ مَا فِي الْقُرْآنِ، إِلاَّ فَهْمًا يُعْطَى رَجُلٌ فِي كِتَابِهِ، وَمَا فِي الصَّحِيفَةِ. قُلْتُ وَمَا فِي الصَّحِيفَةِ قَالَ الْعَقْلُ، وَفِكَاكُ الأَسِيرِ، وَأَنْ لاَ يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ.
பாடம்: 24 இழப்பீடு வழங்கவேண்டியோர்46
6903. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அலீ (ரலி) அவர்களிடம் (நபி (ஸல் அவர்களின் குடும்பத்தாராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?” என்று கேட்டேன்.

-அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் சில வேளைகளில் “மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?” என்று அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்துள்ளார்கள்.-

அதற்கு அலீ (ரலி) அவர்கள், “வித்துக்களைப் பிளந்தவனும் உயிரி னங்களை உருவாக்கியவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குர்ஆனில் இருப்பதைத் தவிர வேறெதுவும் (நபியின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை; இறைவேதத்தில் ஒரு மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர” என்று கூறினார்கள்.

நான், “இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல், இறைமறுப்பாளனுக்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது ஆகிய விஷயங்கள் இதில் உள்ளன” என்றார்கள்.47

அத்தியாயம் : 87
6904. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ امْرَأَتَيْنِ، مِنْ هُذَيْلٍ رَمَتْ إِحْدَاهُمَا الأُخْرَى، فَطَرَحَتْ جَنِينَهَا، فَقَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِيهَا بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ.
பாடம்: 25 பெண்ணின் வயிற்றிலுள்ள சிசு
6904. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது (வயிற்றில்) கல்லை எறிய, (வயிற்றிலிருந்த) சிசு இறந்து பிறந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தச் சிசுவுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்கிடுமாறு தீர்ப்பளித்தார்கள்.48

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 87
6905. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ أَنَّهُ اسْتَشَارَهُمْ فِي إِمْلاَصِ الْمَرْأَةِ فَقَالَ الْمُغِيرَةُ قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْغُرَّةِ عَبْدٍ أَوْ أَمَةٍ.
பாடம்: 25 பெண்ணின் வயிற்றிலுள்ள சிசு
6905. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித் துக்) குறைப்பிரசவம் ஏற்படவைத்தால் (அதற்குப் பரிகாரம்) என்ன என்பது குறித்து உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது நான், “நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை அந்த சிசுவுக்காக (இழப்பீடாக) வழங்கிடுமாறு தீர்ப்பளித்தார்கள்” என்றேன்.


அத்தியாயம் : 87
6906. فَقَالَ ائْتِ مَنْ يَشْهَدُ مَعَكَ، فَشَهِدَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى بِهِ.
பாடம்: 25 பெண்ணின் வயிற்றிலுள்ள சிசு
6906. உமர் (ரலி) அவர்கள், “(நீங்கள் கூறிய) இதற்கு உம்முடன் சாட்சியம் அளிப்பவரை அழைத்து வாருங்கள்” என்றார்கள். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தபோது தாம் அங்கு இருந்ததாகச் சாட்சியம் அளித்தார்கள்.


அத்தியாயம் : 87
6907. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنْ عُمَرَ، نَشَدَ النَّاسَ مَنْ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى فِي السِّقْطِ وَقَالَ الْمُغِيرَةُ أَنَا سَمِعْتُهُ قَضَى فِيهِ بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ. قَالَ ائْتِ مَنْ يَشْهَدُ مَعَكَ عَلَى هَذَا فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَنَا أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ هَذَا.
பாடம்: 25 பெண்ணின் வயிற்றிலுள்ள சிசு
6907. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள், (வயிற்றிலேயே கொல்லப்பட்டு) விழுந்த கருச்சிதைவு தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பைச் செவியுற்ற மக்களைச் சாட்சியம் அளிக்குமாறு கூறினார்கள். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள், “இத்தகைய சிசுவிற்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்க நான் கேட்டுள்ளேன்” என்று சொன்னார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “இதற்கு உங்களுடன் சாட்சியம் அளிப்பவரை அழைத்து வாருங்கள்” என்றார்கள். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்பளித்ததற்கு நான் சாட்சி” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 87