6878. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ إِلاَّ بِإِحْدَى ثَلاَثٍ النَّفْسُ بِالنَّفْسِ وَالثَّيِّبُ الزَّانِي، وَالْمَارِقُ مِنَ الدِّينِ التَّارِكُ الْجَمَاعَةَ "".
பாடம்: 6
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்கும் பழிவாங்கல் (அனுமதிக்கப்பட்டு) உள்ளது என அ(வர்களது வேதமான தவ்ராத்)தில் அவர்களுக்கு நாம் விதியாக்கினோம். ஆனால், யார் அவரை(ப் பழிவாங்காமல்) மன்னித்து விட்டுவிடுகிறாரோ அவரு(டைய பாவங்களு)க்கு அது பரிகாரமாகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்காதவர்களே அநீதி இழைத்தவர்கள் ஆவர். (5:45)
6878. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்’ என உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
(அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. ‘ஜமாஅத்’ எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத் திலிருந்தே வெளியேறிவிடுவது.
அத்தியாயம் : 87

6879. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ يَهُودِيًّا، قَتَلَ جَارِيَةً عَلَى أَوْضَاحٍ لَهَا، فَقَتَلَهَا بِحَجَرٍ، فَجِيءَ بِهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَبِهَا رَمَقٌ فَقَالَ "" أَقَتَلَكِ فُلاَنٌ "". فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ لاَ، ثُمَّ قَالَ الثَّانِيَةَ، فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ لاَ، ثُمَّ سَأَلَهَا الثَّالِثَةَ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ نَعَمْ، فَقَتَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِحَجَرَيْنِ.
பாடம்: 7
(கல்லால் அடித்துக் கொலை செய்தவனுக்குக்) கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுவது
6879. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு யூதன் ஒரு சிறுமியின் வெள்ளி நகைக்காக அந்தச் சிறுமியைக் கல்லால் (நசுக்கித்) தாக்கினான். அவளது உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் அச்சிறுமி கொண்டுவரப்பட்டாள். அப்போது (அவளிடம்) நபி (ஸல்) அவர்கள், “இன்னாரா உன்னைத் தாக்கினார்?” என்று கேட்டார்கள். அவள் ‘இல்லை’ என்று தலையால் சைகை செய்தாள். பிறகு இரண்டாவது முறை (வேறொரு நபர் குறித்து) நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது அப்போதும் ‘இல்லை’ என்று தலையால் சைகை செய்தாள்.
மூன்றாம் முறை நபி (ஸல்) அவர்கள் (கொலையாளியின் பெயர் கூறி) அவளிடம் கேட்டபோது அவள் ‘ஆம்’ என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே, இரு கற்களுக்குகிடையில் (அவன் தலையை வைத்து நசுக்கி) அவனைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.16

6880. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ خُزَاعَةَ، قَتَلُوا رَجُلاً. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ حَدَّثَنَا حَرْبٌ عَنْ يَحْيَى حَدَّثَنَا أَبُو سَلَمَةَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ أَنَّهُ عَامَ فَتْحِ مَكَّةَ قَتَلَتْ خُزَاعَةُ رَجُلاً مِنْ بَنِي لَيْثٍ بِقَتِيلٍ لَهُمْ فِي الْجَاهِلِيَّةِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهِمْ رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ، أَلاَ وَإِنَّهَا لَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي، وَلاَ تَحِلُّ لأَحَدٍ بَعْدِي، أَلاَ وَإِنَّمَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، أَلاَ وَإِنَّهَا سَاعَتِي هَذِهِ حَرَامٌ لاَ يُخْتَلَى شَوْكُهَا، وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ يَلْتَقِطُ سَاقِطَتَهَا إِلاَّ مُنْشِدٌ، وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهْوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا يُودَى وَإِمَّا يُقَادُ "". فَقَامَ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ يُقَالُ لَهُ أَبُو شَاهٍ فَقَالَ اكْتُبْ لِي يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اكْتُبُوا لأَبِي شَاهٍ "". ثُمَّ قَامَ رَجُلٌ مِنْ قُرَيْشٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِلاَّ الإِذْخِرَ، فَإِنَّمَا نَجْعَلُهُ فِي بُيُوتِنَا وَقُبُورِنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِلاَّ الإِذْخِرَ "". وَتَابَعَهُ عُبَيْدُ اللَّهِ عَنْ شَيْبَانَ فِي الْفِيلِ، قَالَ بَعْضُهُمْ عَنْ أَبِي نُعَيْمٍ الْقَتْلَ. وَقَالَ عُبَيْدُ اللَّهِ إِمَّا أَنْ يُقَادَ أَهْلُ الْقَتِيلِ.
பாடம்: 8
கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு, (இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய) இரண்டு யோசனைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.
6880. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் தங்கள் குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பதிலாக மக்கா வெற்றி ஆண்டில் ‘பனூ லைஸ்’ குலத்தாரில் ஒருவரை குஸாஆ குலத்தார் கொலை செய்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (உரையாற்றுகையில் பின்வருமாறு) கூறினார்கள்:
இந்த(ப் புனித) மக்கா நகரைவிட்டு யானைப் படையை அல்லாஹ் தடுத்து நிறுத்தினான். மேலும், மக்காவாசிகள் மீது அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளருக்கும் ஆதிக்கம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப்போவதில்லை. நினைவில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் யுத்தம் புரியவே அனுமதிக்கப்பட்டிருந்தது.
எச்சரிக்கை! சந்தேகத்திற்கிடமின்றி (இங்கு) போர் புரிவது இந்த நிமிடத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடி பிடுங்கப்படக்கூடாது. இதன் மரம் வெட்டப்படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர் யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு யோசனைகளில் சிறந்ததை அவர்கள் தேர்வு செய்யலாம்” என்று கூறினார்கள்.
அப்போது யமன்வாசிகளில் ‘அபூஷாத்’ என்றழைக்கப்பட்ட ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவருக்கு (என் உரையை) எழுதிக்கொடுங்கள்” என்று சொன்னார்கள்.
அப்போது குறைஷியரில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (மக்காவின் செடிகொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து வாசனைத் தாவரமான) ‘இத்கிர்’ புல்லிற்கு விலக்கு அளியுங்கள். ஏனென்றால், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இத்கிர் புல்லைத் தவிர!” என்று சொன்னார்கள்.17
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூநுஐம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘யானைப் படை’ என்பதற்குப் பதிலாக, ‘கொலை செய்வதை’ என்று இடம்பெற்றுள்ளது எனச் சிலர் அறிவித்துள்ளனர்.
உபைதுல்லாஹ் பின் மூசா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘கொலையுண்ட வரின் குடும்பத்தார் (சார்பாக) பழிவாங்கல்’ என்று இடம்பெற்றுள்ளது.

6881. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَتْ فِي بَنِي إِسْرَائِيلَ قِصَاصٌ، وَلَمْ تَكُنْ فِيهِمُ الدِّيَةُ فَقَالَ اللَّهُ لِهَذِهِ الأُمَّةِ {كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى} إِلَى هَذِهِ الآيَةِ {فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَىْءٌ}. قَالَ ابْنُ عَبَّاسٍ فَالْعَفْوُ أَنْ يَقْبَلَ الدِّيَةَ فِي الْعَمْدِ، قَالَ {فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ} أَنْ يَطْلُبَ بِمَعْرُوفٍ وَيُؤَدِّيَ بِإِحْسَانٍ.
பாடம்: 8
கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு, (இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய) இரண்டு யோசனைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.
6881. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ இஸ்ராயீல்களிடையே (கொலை நடந்துவிட்டால்) பழிக்குப்பழி (கிஸாஸ்) வாங்குதல் (நடைமுறையில்) இருந்தது; ஆனால், இழப்பீடு (பெற்றுக்கொண்டு கொலையாளியை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை.
ஆகவேதான், அல்லாஹ் (தனது வேதத்தில்) இந்தச் சமுதாயத்தை நோக்கி, இறைநம்பிக்கை கொண்டோரே! கொல்லப்பட்டோருக்காகப் பழிவாங்கு(ம் போது நேர்மையோடு நடந்துகொள்)வது உங்களுக்குக் கடமையாக்கப்பட் டுள்ளது. ஆகவே, (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக ஒரு சுதந்திரமானவனும், ஓர் அடிமைக்குப் பதிலாக அடிமையும், ஒரு பெண்ணுக்குப் பதிலாக பெண்ணுமே (பழிவாங்கப்படுவர்). ஆனால், (கொலை செய்த) ஒருவருக்கு (கொலையுண்ட) அவருடைய சகோதர(ரின் உறவின)ரால் மன்னிப்பு ஏதேனும் வழங்கப்பட்டால், (கொலையுண்டவரின் உறவினர்) முறையோடு நடந்துகொள்வதும், அவருக்கு (மன்னிக்கப்பட்டவர்) சரியாக (இழப்பீட்டை)ச் செலுத்துவதும் கடமையாகும். இது உங்கள் இறைவனிடமிருந்து (கிடைத்து)ள்ள சலுகையும் அருளும் ஆகும். இதற்குப் பிறகும் ஒருவர் எல்லைமீறினால் அவருக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும். (2:178) என்று கூறுகின்றான்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘மன்னிப்பு அளித்தல்’ (‘அஃப்வ்’) என்பது, வேண்டுமென்றே செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்பதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்ல முறையில் அதைக் கொலையாளி செலுத்திட வேண்டும்.18

6882. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" أَبْغَضُ النَّاسِ إِلَى اللَّهِ ثَلاَثَةٌ مُلْحِدٌ فِي الْحَرَمِ، وَمُبْتَغٍ فِي الإِسْلاَمِ سُنَّةَ الْجَاهِلِيَّةِ، وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بِغَيْرِ حَقٍّ لِيُهَرِيقَ دَمَهُ "".
பாடம்: 9
நியாயமின்றி ஒரு மனிதனைக் கொலை செய்யத் தூண்டுவது
6882. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக் குள் பெரும் பாவம் புரிகின்றவன்.2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச்செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகின்றவன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6883. حَدَّثَنَا فَرْوَةُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، هُزِمَ الْمُشْرِكُونَ يَوْمَ أُحُدٍ. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، يَحْيَى بْنُ أَبِي زَكَرِيَّاءَ عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ صَرَخَ إِبْلِيسُ يَوْمَ أُحُدٍ فِي النَّاسِ يَا عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ. فَرَجَعَتْ أُولاَهُمْ عَلَى أُخْرَاهُمْ حَتَّى قَتَلُوا الْيَمَانَ فَقَالَ حُذَيْفَةُ أَبِي أَبِي. فَقَتَلُوهُ، فَقَالَ حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ. قَالَ وَقَدْ كَانَ انْهَزَمَ مِنْهُمْ قَوْمٌ حَتَّى لَحِقُوا بِالطَّائِفِ.
பாடம்: 10
தவறுதலாக நிகழ்ந்துவிட்ட கொலைக்குப்பின் (கொல்லப் பட்டவரின் உறவினர்கள் கொலையாளியை) மன்னித்து விடுவது
6883. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின் (தொடக்கத்தின்) போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக் கப்பட்டார்கள். பின்னர் மக்களிடையே இப்லீஸ் (புகுந்து), “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கூவினான். எனவே, முஸ்லிம்களில் முன்அணியினர் பின்அணியினரை நோக்கித் திரும்பி (அவர்களைத் தாக்கத் தொடங்கி)னர். அப்போது முஸ்லிம்கள் அல்யமான் (ரலி) அவர்களைக் கொன்றுவிட்டனர்.
உடனே (அவருடைய புதல்வர்) ஹுதைஃபா (ரலி) அவர்கள், “என் தந்தை, என் தந்தை” என்று கூறினார். (ஆயினும் எதிரி என்று நினைத்து) அவருடைய தந்தையை மக்கள் கொன்றுவிட்டனர். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று (கொலை செய்தவர்களை நோக்கிக்) கூறினார்கள். தோல்வியுற்றவர்(களான இணைவைப்பாளர்)களில் சிலர் தாயிஃப் நகருக்குச் சென்றுவிட்டனர்.19
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

6884. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ يَهُودِيًّا، رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ، فَقِيلَ لَهَا مَنْ فَعَلَ بِكِ هَذَا أَفُلاَنٌ أَفُلاَنٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ فَأَوْمَأَتْ بِرَأْسِهَا، فَجِيءَ بِالْيَهُودِيِّ فَاعْتَرَفَ، فَأَمَرَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرُضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ. وَقَدْ قَالَ هَمَّامٌ بِحَجَرَيْنِ.
பாடம்: 11
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
ஓர் இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்வது மற்றோர் இறை நம்பிக்கையாளருக்குத் தகாது; தவறுதலாக நடந்துவிட்டதைத் தவிர. யார் ஓர் இறைநம்பிக்கையாளரைத் தவறு தலாகக் கொலை செய்துவிடுகிறாரோ அவர் இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். மேலும், அ(வ்வாறு கொல்லப்பட்ட)வருடைய குடும்பத்தாரிடம் இழப்பீட்டை ஒப்படைக்கவும் வேண்டும்; அவர்கள் தானமாக விட்டுக்கொடுத்தால் தவிர.
(கொல்லப்பட்ட) அவர் உங்களுடைய பகைவர் கூட்டத்தைச் சேர்ந்தவராகவும் இறைநம்பிக்கையாளர்களாகவும் இருந்தால், இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். உங்களுக்கும் எந்தச் சமூகத்தாருக்குமிடையே (சமாதான) உடன்பாடு உள்ளதோ அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக அவர் இருந்தால், அவருடைய குடும்பத்தாரிடம் இழப்பீட்டை ஒப்படைப்பதுடன், இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்.
(இதை) அடைந்துகொள்ளாதவர், தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப்பாகும். அல்லாஹ் மிக அறிந்தவனும் ஞானமிக்கவனும் ஆவான். (4:92)
பாடம்: 12
ஒருவர் தாம் கொலை செய்ததாக ஒரே தடவை வாக்குமூலம் அளித் தாலும் அதைக் கொண்டே அவர் (பதிலுக்குக்) கொல்லப்படுவார்.
6884. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு யூதன் ஒரு சிறுமியின் தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அச்சிறுமி யிடம், “உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்னாரா? இன்னாரா?” என்று (ஒவ்வொரு பெயராகச் சொல்லிக்) கேட்கப்பட்டது. இறுதியில் அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டவுடன் அச்சிறுமி (‘ஆம் ; அவன்தான்’ என்று) தலையால் சைகைசெய்தாள்.
ஆகவே, அந்த யூதன் (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டான். (அவனிடம் விசாரிக்கப்பட்டபோது) அவன் (குற்றத்தை) ஒப்புக்கொண்டான். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவனது தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட அவ்வாறே அவனது தலை கல்லால் நசுக்கப்பட்டது.20
ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் “இரு கற்களால் (நசுக்கப்பட்டது)” என இடம்பெற்றுள்ளது.

6885. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَتَلَ يَهُودِيًّا بِجَارِيَةٍ قَتَلَهَا عَلَى أَوْضَاحٍ لَهَا.
பாடம்: 13
பெண்ணைக் கொன்றதற்குத் தண்டனையாக ஆண் கொல்லப்படல்
6885. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு சிறுமியை, அவளது வெள்ளி நகைக்காகக் கொலை செய்த (ஆண்) யூதன் ஒருவனைக் கொலை செய்திடு மாறு நபி (ஸல்) அவர்கள் ஆணையிட் டார்கள்.21

6886. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَدَدْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ فَقَالَ "" لاَ تَلُدُّونِي "". فَقُلْنَا كَرَاهِيَةُ الْمَرِيضِ لِلدَّوَاءِ. فَلَمَّا أَفَاقَ قَالَ "" لاَ يَبْقَى أَحَدٌ مِنْكُمْ إِلاَّ لُدَّ، غَيْرَ الْعَبَّاسِ فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ "".
பாடம்: 14
ஆண்களாயினும் பெண்களாயி னும் காயங்களுக்கும் தண்டனை உண்டு.22
பெண்ணைக் கொன்றதற்குத் தண்டனையாக ஆண் கொல்லப்படுவான் என்றே அறிஞர்கள் கூறுகிறார்கள்.
“ஆணைக் கொன்றதற்குத் தண்டனை யாகப் பெண் பழிவாங்கப்படுவாள். இது வேண்டுமென்றே நடந்த எல்லாக் கொலைகளுக்கும், கொலையைவிடக் குறைவான காயங்களுக்கும் பொருந்தும்” என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கூறியுள்ளனர். அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் தம் தோழர்களிடமிருந்து இதையே அறிவித்துள்ளார்கள்.
ருபய்யிஉ பின்த் நள்ர் (ரலி) அவர்களுடைய சகோதரி ஓர் ஆணைக் காயப்படுத்திவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “(இதற்கும்) பழிவாங்கல் உண்டு” என்று சொன்னார்கள்.
6886. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட் டிருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். உடனே அவர்கள், “எனது வாயில் மருந்தூற்றாதீர் கள்” என்று (சைகையால்) கூறினார்கள். அப்போது நாங்கள், “நோயாளி மருந்தை வெறுப்பதைப் போன்றுதான் (நபியவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாமெனத் தடை செய்யவில்லை)” என்று சொல்லிக்கொண்டோம்.
அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது, “(என் வாயில் மருந்தூற்ற வேண்டாம் என்று நான் தடுத்தும் நீங்கள் கேட்காததற்குப் பகரமாக) உங்களில் ஒருவர் பாக்கியில்லாமல் (இந்த வீட்டிலுள்ள) அனைவர் வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, “ஆனால் அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், மருந்தூற்றும்போது உங்களுடன் அவர் கலந்துகொள்ளவில்லை” என்று கூறினார்கள்.23

6887. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ إِنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ ".
பாடம்: 15
ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு)செல்லாமல் தமது உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தம் உறவினருக்காகத்) தாமே பழிவாங்குவதும்24
6887. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை நாளில் (தகுதியால்) முந்திய வர்களும் ஆவோம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.25

6888. وَبِإِسْنَادِهِ " لَوِ اطَّلَعَ فِي بَيْتِكَ أَحَدٌ وَلَمْ تَأْذَنْ لَهُ، خَذَفْتَهُ بِحَصَاةٍ فَفَقَأْتَ عَيْنَهُ، مَا كَانَ عَلَيْكَ مِنْ جُنَاحٍ ".
பாடம்: 15
ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு)செல்லாமல் தமது உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தம் உறவினருக்காகத்) தாமே பழிவாங்குவதும்24
6888. மேற்சொன்ன அதே அறிவிப் பாளர்தொடரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்களது வீட்டுக்குள் எட்டிப்பார்த்த போது அவர்மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை.

6889. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ حُمَيْدٍ،، أَنَّ رَجُلاً، اطَّلَعَ فِي بَيْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَدَّدَ إِلَيْهِ مِشْقَصًا. فَقُلْتُ مَنْ حَدَّثَكَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ.
பாடம்: 15
ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு)செல்லாமல் தமது உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தம் உறவினருக்காகத்) தாமே பழிவாங்குவதும்24
6889. யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்குள் (ஒரு துவாரம் வழியாக) எட்டிப் பார்த்தார். அப்போது அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்மையான பகுதியை நேராகக் கொண்டுசென்றார்கள்” என்று ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது நான், “இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஹுமைத் (ரஹ்) அவர்கள், “அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்தான் (அறிவித்தார்கள்)” என்று பதிலளித்தார்கள்.26

6890. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، قَالَ هِشَامٌ أَخْبَرَنَا عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَاحَ إِبْلِيسُ أَىْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ. فَرَجَعَتْ أُولاَهُمْ، فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ، فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ أَىْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي. قَالَتْ فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ. قَالَ حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ. قَالَ عُرْوَةُ فَمَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهُ بَقِيَّةٌ حَتَّى لَحِقَ بِاللَّهِ.
பாடம்: 16
ஒருவர் நெரிசலில் சிக்கி இறந்து விட்டால் அல்லது கொல்லப் பட்டுவிட்டால்..?27
6890. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போர் நாளில் (ஆரம்பத் தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக் கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!” என்று கத்தினான். உடனே முஸ்லிம்களில் முன்அணிப் படையினர் திரும்பிச் சென்று (எதிரிகள்தான் பின்னால் இருக்கின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு) பின்அணிப் படையினருடன் மோதினார்கள்.
அப்போது அங்கு (தமக்கு அருகேயிருந்த) தம் தந்தை அல்யமான் (ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக்கொண்டதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, “அல்லாஹ்வின் அடியார்களே! (அவர்) என் தந்தை! என் தந்தை” என்று (உரத்த குரலில்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்றபின்பே (அவரைவிட்டு) அவர்கள் விலகினார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் மன்னித்ததால் அவர்கள் இறைவனை அடையும்வரை (அவர் களது வாழ்க்கையில்) நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.28

6891. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى خَيْبَرَ فَقَالَ رَجُلٌ مِنْهُمْ أَسْمِعْنَا يَا عَامِرُ مِنْ هُنَيْهَاتِكَ. فَحَدَا بِهِمْ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنِ السَّائِقُ "" قَالُوا عَامِرٌ. فَقَالَ "" رَحِمَهُ اللَّهُ "". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلاَّ أَمْتَعْتَنَا بِهِ. فَأُصِيبَ صَبِيحَةَ لَيْلَتِهِ فَقَالَ الْقَوْمُ حَبِطَ عَمَلُهُ، قَتَلَ نَفْسَهُ. فَلَمَّا رَجَعْتُ وَهُمْ يَتَحَدَّثُونَ أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ، فَجِئْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ فَدَاكَ أَبِي وَأُمِّي، زَعَمُوا أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ. فَقَالَ "" كَذَبَ مَنْ قَالَهَا، إِنَّ لَهُ لأَجْرَيْنِ اثْنَيْنِ، إِنَّهُ لَجَاهِدٌ مُجَاهِدٌ، وَأَىُّ قَتْلٍ يَزِيدُهُ عَلَيْهِ "".
பாடம்: 17
ஒருவர் தவறுதலாகத் தம்மைத் தாமே கொலை செய்துகொண் டால் அவருக்காக இழப்பீடு கிடையாது.29
6891. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காக)ப் புறப்பட்டோம். அப்போது மக்களில் ஒருவர் (என் தந்தையின் சகோதரரிடம்) “ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை(ப் பாடி) எங்களைச் செவியுறச் செய்யமாட்டீர்களா?” என்று கூறினார். ஆகவே, ஆமிர் (ரலி) அவர்கள் (சில கவிதைகளைப் பாடி) மக்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த ஒட்டகவோட்டி யார்?” என்று கேட்டார்கள். “ஆமிர் பின் அல்அக்வஉ” என்று மக்கள் பதிலளித்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக” என்று கூறினார்கள். (அந்தப் பிரார்த்தனையின் பொருளைப் புரிந்துகொண்ட) மக்கள், “அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா (அல்லாஹ்வின் தூதரே!)?” என்று கேட்டார்கள். அவர் அன்றைய இரவின் (அடுத்த நாள்) காலையில் (தமது முழங்காலில் தமது வாளாலேயே) தாக்கப்பட்டு இறந்தார். அப்போது மக்கள், “ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன; அவர் (தமது வாளால் தம்மைத்தாமே குத்திக்கொண்டு) தற்கொலை செய்துகொண்டார்” என்று பேசினர். (கைபரிலிருந்து) நான் திரும்பியபோது “ஆமிரின் நற்செயல்கள் அழிந்துபோயின” என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் (ரலி) அவர்களின் நற்செயல்கள் அழிந்துவிட்டன என்று மக்கள் கருதுகின்றனர்” என்று சொன்னேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதைக் கூறியவர் உண்மைக்குப் புறம்பாகக் கூறிவிட்டார். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல்கள் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு. அவர் துன்பங்களைத் தாங்கினார்; (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். அவர் பெற்ற நற்பலனைவிட அதிகமான நற்பலனைப் பெற்றுத்தரும் (வீர) மரணம் எது?” என்று கேட்டார்கள்.30

6892. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ زُرَارَةَ بْنَ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً، عَضَّ يَدَ رَجُلٍ، فَنَزَعَ يَدَهُ مِنْ فَمِهِ، فَوَقَعَتْ ثَنِيَّتَاهُ، فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" يَعَضُّ أَحَدُكُمْ أَخَاهُ كَمَا يَعَضُّ الْفَحْلُ، لاَ دِيَةَ لَكَ "".
பாடம்: 18
ஒருவர் மற்றவர் (கரம்)தனைக் கடிக்க, கடித்தவரின் முன்பற்கள் விழுந்துவிட்டால்...?31
6892. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தமது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன் பற்கள் இரண்டு விழுந்துவிட்டன. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும்வரை அவன் தனது கையை அப்படியே வைத்துக்கொண்டி ருப்பானா? பல்லிழந்த) உமக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது” என்று சொன்னார்கள்.

6893. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، قَالَ خَرَجْتُ فِي غَزْوَةٍ، فَعَضَّ رَجُلٌ فَانْتَزَعَ ثَنِيَّتَهُ، فَأَبْطَلَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம்: 18
ஒருவர் மற்றவர் (கரம்)தனைக் கடிக்க, கடித்தவரின் முன்பற்கள் விழுந்துவிட்டால்...?31
6893. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (தபூக்) போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அப்போது ஒரு மனிதர் (இன்னொருவரைக்) கடித்தார். கடிபட்ட மனிதர் (தமது கையை விடுவிக்கும்போது) கடித்தவரின் முன்பல்லைக் கழற்றிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.

6894. حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ ابْنَةَ النَّضْرِ، لَطَمَتْ جَارِيَةً، فَكَسَرَتْ ثَنِيَّتَهَا، فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَ بِالْقِصَاصِ.
பாடம்: 19
பல்லுக்குப் பல்32
6894. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் பாட்டனார்) நள்ர் அவர்களின் புதல்வி (ருபய்யிஉ பின்த் நள்ர்) ஓர் இளம் பெண்ணின் கன்னத்தில் அறைந்து அவளது முன்பல்லை உடைத்துவிட்டார். ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு)வந்தார்கள். அப்போது நபியவர்கள் பழிவாங்கிடுமாறு உத்தரவிட்டார்கள்.

6895. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" هَذِهِ وَهَذِهِ سَوَاءٌ ""، يَعْنِي الْخِنْصَرَ وَالإِبْهَامَ. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
பாடம்: 20
விரல்களுக்கான இழப்பீடுகள் (சமமானவையா? மாறுபட்ட வையா?)33
6895. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இதோ இந்த சுண்டு விரலும் கட்டை விரலும் (இழப்பீட்டில்) சமமானவையே.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதைப் போன்றே நபி (ஸல்) அவர்களிடம் தாம் செவியுற்றதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.

6896. وَقَالَ لِي ابْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ غُلاَمًا، قُتِلَ غِيلَةً فَقَالَ عُمَرُ لَوِ اشْتَرَكَ فِيهَا أَهْلُ صَنْعَاءَ لَقَتَلْتُهُمْ. وَقَالَ مُغِيرَةُ بْنُ حَكِيمٍ عَنْ أَبِيهِ إِنَّ أَرْبَعَةً قَتَلُوا صَبِيًّا فَقَالَ عُمَرُ مِثْلَهُ. وَأَقَادَ أَبُو بَكْرٍ وَابْنُ الزُّبَيْرِ وَعَلِيٌّ وَسُوَيْدُ بْنُ مُقَرِّنٍ مِنْ لَطْمَةٍ. وَأَقَادَ عُمَرُ مِنْ ضَرْبَةٍ بِالدِّرَّةِ. وَأَقَادَ عَلِيٌّ مِنْ ثَلاَثَةِ أَسْوَاطٍ. وَاقْتَصَّ شُرَيْحٌ مِنْ سَوْطٍ وَخُمُوشٍ.
பாடம்: 21
ஒரு மனிதரை ஒரு கூட்டமே சேர்ந்து கொலை செய்துவிட்டாலோ காயப்படுத்திவிட்டாலோ அவர்கள் அனைவருமே தண்டிக்கப் படுவார்களா? பழிவாங்கப்படு வார்களா?34
முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் திருடிவிட்டார் என இரண்டுபேர் சாட்சியம் அளித்தனர். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் (குற்றம் சாட்டப்பட்ட) அவரது கையை வெட்டும் படி உத்தரவிட்டார்கள். பிறகு வேறொரு மனிதரை (சாட்சியம் அளித்த) அவ்விரு வரும் அழைத்துவந்து “(இவர்தான் திருடியவர்; முதலில்) நாங்கள் கூறியது தவறு” என்றனர். அப்போது அலீ (ரலி) அவர்கள் (முதல் மனிதருக்கெதிராக) அவர்கள் கூறிய சாட்சியத்தைச் செல்லாததாக்கினார்கள்.
மேலும், அந்த முதல் நபருக்காக அவர்கள் இருவரிடமும் இழப்பீடும் பெறப்பட்டது. அத்துடன், “நீங்கள் இருவரும் திட்டமிட்டே (இவ்வாறு பொய்ச் சாட்சியம்) கூறினீர்கள் என்று நான் அறிந்திருந்தால் உங்கள் இருவரின் கைகளையும் வெட்டியிருப்பேன்” என்றும் கூறினார்கள்.
6896. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு சிறுவன் வஞ்சித்துக் கொல்லப்பட்டான். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இந்தக் கொலையில் (யமனிலுள்ள) ஸன்ஆவாசிகள் அனைவரும் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரை யும் நான் (பதிலுக்குக்) கொல்வேன்” என்று சொன்னார்கள்.
ஹகீம் அஸ்ஸன்ஆனீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான்கு பேர் (சேர்ந்து) ஒரு சிறுவனைக் கொன்று விட்டனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்” என்று வந்துள்ளது.
கன்னத்தில் ஓர் அறைவிட்ட குற்றத்திற்காக அபூபக்ர் (ரலி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), அலீ (ரலி), சுவைத் பின் முகர்ரின் (ரலி) ஆகியோர் பழிவாங்கும்படி தீர்ப்பளித்தனர்.
சாட்டையால் ஓர் அடி அடித்த குற்றத்திற்காக உமர் (ரலி) அவர்கள் பழிவாங்கிடச் செய்தார்கள். மூன்று சாட்டையடிகளுக்காக அலீ (ரலி) அவர்கள் பழிவாங்கிடச் செய்தார்கள்.
(நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், சாட்டையால் அடித்ததற்கும் பிறாண்டி காயப்படுத்தியதற்கும் பழிக்குப்பழி தண்டனை வழங்குமாறு தீர்ப்பளித் தார்கள்.

6897. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَتْ عَائِشَةُ لَدَدْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ، وَجَعَلَ يُشِيرُ إِلَيْنَا "" لاَ تَلُدُّونِي "". قَالَ فَقُلْنَا كَرَاهِيَةُ الْمَرِيضِ بِالدَّوَاءِ، فَلَمَّا أَفَاقَ قَالَ "" أَلَمْ أَنْهَكُمْ أَنْ تَلُدُّونِي "". قَالَ قُلْنَا كَرَاهِيَةٌ لِلدَّوَاءِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَبْقَى مِنْكُمْ أَحَدٌ إِلاَّ لُدَّ ـ وَأَنَا أَنْظُرُ ـ إِلاَّ الْعَبَّاسَ فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ "".
பாடம்: 21
ஒரு மனிதரை ஒரு கூட்டமே சேர்ந்து கொலை செய்துவிட்டாலோ காயப்படுத்திவிட்டாலோ அவர்கள் அனைவருமே தண்டிக்கப் படுவார்களா? பழிவாங்கப்படு வார்களா?34
முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் திருடிவிட்டார் என இரண்டுபேர் சாட்சியம் அளித்தனர். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் (குற்றம் சாட்டப்பட்ட) அவரது கையை வெட்டும் படி உத்தரவிட்டார்கள். பிறகு வேறொரு மனிதரை (சாட்சியம் அளித்த) அவ்விரு வரும் அழைத்துவந்து “(இவர்தான் திருடியவர்; முதலில்) நாங்கள் கூறியது தவறு” என்றனர். அப்போது அலீ (ரலி) அவர்கள் (முதல் மனிதருக்கெதிராக) அவர்கள் கூறிய சாட்சியத்தைச் செல்லாததாக்கினார்கள்.
மேலும், அந்த முதல் நபருக்காக அவர்கள் இருவரிடமும் இழப்பீடும் பெறப்பட்டது. அத்துடன், “நீங்கள் இருவரும் திட்டமிட்டே (இவ்வாறு பொய்ச் சாட்சியம்) கூறினீர்கள் என்று நான் அறிந்திருந்தால் உங்கள் இருவரின் கைகளையும் வெட்டியிருப்பேன்” என்றும் கூறினார்கள்.
6897. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கடைசிக் காலத்தில்) நோய் வாய்ப்பட்டிருந்தபோது (அரை மயக்கத்தில் இருந்தார்கள். அப்போது) நாங்கள் அவர்களின் வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். என் வாயில் மருந்தூற்றாதீர்கள் என்று அவர்கள் சைகை செய்யலானார்கள். ‘நோயாளி மருந்தை வெறுப்பதைப் போன்றுதான் (நபியவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாம் என்று தடை செய்யவில்லை)’ என்று நாங்கள் கூறிக்கொண்டோம்.
அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது, “என் வாயில் மருந்தூற்ற வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள். நாங்கள் “மருந்து உட்கொள்ளப் பிடிக்காமல்தான் (அவ்வாறு சைகை செய்தீர்கள்)” என்று சொன்னோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நான் தடுத்தும் கேட்காததற்குப் பதிலாக) உங்களில் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவர் வாயிலும் நான் பார்த்துக்கொண்டிருக்க மருந்தூற்றப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, “ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில் (மருந்தூற்றும்போது) அவர் உங்களுடன் கலந்துகொள்ளவில்லை” என்று கூறினார்கள்.35