6808. أَخْبَرَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، أَخْبَرَنَا أَنَسٌ، قَالَ لأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لاَ يُحَدِّثُكُمُوهُ أَحَدٌ بَعْدِي، سَمِعْتُهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ تَقُومُ السَّاعَةُ ـ وَإِمَّا قَالَ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ ـ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَظْهَرَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ، حَتَّى يَكُونَ لِلْخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ "".
பாடம்: 20 விபசாரம் செய்வோருக்கு நேரும் பாவம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவனின் உண்மையான அடி யார்கள்) விபசாரம் செய்யமாட்டார்கள் (25:68). விபசாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். நிச்சயமாக! அது மானங்கெட்ட செயலாகவும் மிகத் தீய வழியாகவும் இருக்கிறது (17:32).
6808. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப்போகிறேன். நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்:

கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும் மது (அதிகமாக) அருந்தப்படுவதும் விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து பெண்கள் (எண்ணிக்கை) அதிகமாவதும் ‘மறுமை நாளின் அடையாளங்களில் உள்ளதாகும்’; அல்லது ‘இவை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது’.


அத்தியாயம் : 86
6809. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا الْفُضَيْلُ بْنُ غَزْوَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَزْنِي الْعَبْدُ حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ حِينَ يَشْرَبُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَقْتُلُ وَهْوَ مُؤْمِنٌ "". قَالَ عِكْرِمَةُ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ كَيْفَ يُنْزَعُ الإِيمَانُ مِنْهُ قَالَ هَكَذَا ـ وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ ثُمَّ أَخْرَجَهَا ـ فَإِنْ تَابَ عَادَ إِلَيْهِ هَكَذَا وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ
பாடம்: 20 விபசாரம் செய்வோருக்கு நேரும் பாவம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவனின் உண்மையான அடி யார்கள்) விபசாரம் செய்யமாட்டார்கள் (25:68). விபசாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். நிச்சயமாக! அது மானங்கெட்ட செயலாகவும் மிகத் தீய வழியாகவும் இருக்கிறது (17:32).
6809. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியான் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடும்போது இறை நம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மது அருந்தமாட்டான். மேலும், அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொலை செய்ய மாட்டான்.26

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப் பாளர்களில் ஒருவரான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“இத்தகைய அடியானிடமிருந்து எவ்வாறு இறைநம்பிக்கை கழற்றப்படும்?” என்று நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இவ்வாறுதான்’ என்று தம் விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காட்டிவிட்டு அவற்றை(ப் பிரித்து) வெளியிலெடுத்தார்கள். ‘அவன் மனம் திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டால் அந்த இறைநம்பிக்கை அவனிடம் திரும்பவும் வந்துவிடுகிறது’ என்று கூறியவாறு தம் விரல்களை மீண்டும் கோத்துக்காட்டினார்கள்.


அத்தியாயம் : 86
6810. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ حِينَ يَشْرَبُهَا وَهْوَ مُؤْمِنٌ، وَالتَّوْبَةُ مَعْرُوضَةٌ بَعْدُ "".
பாடம்: 20 விபசாரம் செய்வோருக்கு நேரும் பாவம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவனின் உண்மையான அடி யார்கள்) விபசாரம் செய்யமாட்டார்கள் (25:68). விபசாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். நிச்சயமாக! அது மானங்கெட்ட செயலாகவும் மிகத் தீய வழியாகவும் இருக்கிறது (17:32).
6810. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு விபசாரம் புரிவதில்லை. (திருடன்) திருடும்போது இறைநம்பிக்கை யாளனாக இருந்துகொண்டு திருடுவதில்லை. (மது அருந்துபவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோருதல் பின்னர்தான் ஏற்படுகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 86
6811.
பாடம்: 20 விபசாரம் செய்வோருக்கு நேரும் பாவம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவனின் உண்மையான அடி யார்கள்) விபசாரம் செய்யமாட்டார்கள் (25:68). விபசாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். நிச்சயமாக! அது மானங்கெட்ட செயலாகவும் மிகத் தீய வழியாகவும் இருக்கிறது (17:32).
6811. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், “அல்லாஹ்வின் தூதரே! மிகப் பெரிய பாவம் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கே நீ இணை கற்பிப்பதாகும்” என்று சொன்னார்கள். “பிறகு, எது (பெரிய பாவம்)?” என்று கேட்டேன். அவர்கள், “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என்பதற்காக அதை நீயே கொலை செய்வதாகும்” என்று சொன்னார்கள்.

நான், “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் அண்டை வீட்டாரின் மனைவி யுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஒன்றில் அறிவிப்பாளர் அம்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களிடம் குறிப்பிட்டேன். அன்னார் (அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கும் அபூவாயில் (ரஹ்) அவர்களுக்கும் இடையே அபூமைசரா (ரஹ்) அவர்கள் இடம்பெறாத) அறிவிப்பாளர்தொடரை விட்டுவிடுக! விட்டுவிடுக! என்று கூறினார்கள்.

அத்தியாயம் :
6812. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، يُحَدِّثُ عَنْ عَلِيٍّ، رضى الله عنه حِينَ رَجَمَ الْمَرْأَةَ يَوْمَ الْجُمُعَةِ وَقَالَ قَدْ رَجَمْتُهَا بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 21 திருமணமானவ(ர் விபசாரம் புரிந்தால் அவ)ருக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்குதல்27 ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவன் தன் சகோதரியுடன் தவறான உறவு கொண்டுவிட்டால் அவனுக்கு (அந்நிய பெண்களுடன்) விபசாரம் புரிந்தவனுக்குரிய தண்டனையே வழங் கப்படும்.28
6812. ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(விபசாரம் புரிந்துவிட்ட ஒரு பெண்ணுக்கு மக்கள் கூடும்) வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) அன்று கல்லெறி தண்டனையை நிறைவேற்றியபோது அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படியே நான் இவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினேன்” என்று சொன்னார்கள்.29


அத்தியாயம் : 86
6813. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الشَّيْبَانِيِّ، سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى هَلْ رَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ. قُلْتُ قَبْلَ سُورَةِ النُّورِ أَمْ بَعْدُ قَالَ لاَ أَدْرِي.
பாடம்: 21 திருமணமானவ(ர் விபசாரம் புரிந்தால் அவ)ருக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்குதல்27 ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவன் தன் சகோதரியுடன் தவறான உறவு கொண்டுவிட்டால் அவனுக்கு (அந்நிய பெண்களுடன்) விபசாரம் புரிந்தவனுக்குரிய தண்டனையே வழங் கப்படும்.28
6813. அபூஇஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம்’ (வழங்கினார்கள்) என்று பதிலளித்தார்கள். நான், “(குர்ஆனின் 24ஆவது அத்தியாயமான) ‘அந்நூர்’ அத்தியாயம் அருளப்படுவதற்கு முன்பா; அல்லது அதற்குப் பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?” என்று கேட்டேன். அவர்கள், “எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.30


அத்தியாயம் : 86
6814. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَحَدَّثَهُ أَنَّهُ قَدْ زَنَى، فَشَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَ، وَكَانَ قَدْ أُحْصِنَ.
பாடம்: 21 திருமணமானவ(ர் விபசாரம் புரிந்தால் அவ)ருக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்குதல்27 ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவன் தன் சகோதரியுடன் தவறான உறவு கொண்டுவிட்டால் அவனுக்கு (அந்நிய பெண்களுடன்) விபசாரம் புரிந்தவனுக்குரிய தண்டனையே வழங் கப்படும்.28
6814. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘பனூ அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த (மாஇஸ் பின் மாலிக் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் விபசாரம் புரிந்துவிட்டேன்” என்று சொன்னார். மேலும், நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம் (ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார். ஆகவே, அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள். அவர் திருமணமானவராக இருந்தார்.

அத்தியாயம் : 86
6815. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ. فَأَعْرَضَ عَنْهُ، حَتَّى رَدَّدَ عَلَيْهِ أَرْبَعَ مَرَّاتٍ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، دَعَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " أَبِكَ جُنُونٌ ". قَالَ لاَ. قَالَ " فَهَلْ أَحْصَنْتَ ". قَالَ نَعَمْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ ".
பாடம்: 22 (விபசாரம் புரிந்துவிட்ட) பைத்தியக்காரன் மற்றும் பைத்தியக்காரிக்கு (அவர்கள் திருமணமானவர்களாக இருந்தாலும்) கல்லெறி தண்டனை வழங்கப்படாது. உமர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், “பைத்தியக்காரன் தெளிவடை யும்வரையிலும் சிறுவன் பருவ வயதை அடையும்வரையிலும் தூங்குபவன் விழிக்கும்வரையிலும் அவர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது (தண்டனை யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது) என்று தங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.31
6815. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒரு மனிதர் வந்து அவர்களை அழைத்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.

அவர் திரும்பத்திரும்ப அதையே நான்கு தடவை சொல்லித் தமக்கெதிராகத் தாமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அவரை அழைத்து நபி (ஸல்) அவர்கள், “உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர், “(எனக்குப் பைத்தியம்) இல்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “உமக்குத் திருமணமாகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (திருமணமாகிவிட்டது)” என்று சொன்னார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்” என்று சொன்னார்கள்.32

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 86
6816. قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي مَنْ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ فَكُنْتُ فِيمَنْ رَجَمَهُ فَرَجَمْنَاهُ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ هَرَبَ، فَأَدْرَكْنَاهُ بِالْحَرَّةِ فَرَجَمْنَاهُ.
பாடம்: 22 (விபசாரம் புரிந்துவிட்ட) பைத்தியக்காரன் மற்றும் பைத்தியக்காரிக்கு (அவர்கள் திருமணமானவர்களாக இருந்தாலும்) கல்லெறி தண்டனை வழங்கப்படாது. உமர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், “பைத்தியக்காரன் தெளிவடை யும்வரையிலும் சிறுவன் பருவ வயதை அடையும்வரையிலும் தூங்குபவன் விழிக்கும்வரையிலும் அவர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது (தண்டனை யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது) என்று தங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.31
6816. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந் தேன். அப்போது அவர்மீது (மதீனாவில் பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். கற்கள் அவர்மீது விழுந்தபோது (வலி தாங்க முடியாமல்) அவர் வெருண்டோட ஆரம்பித்தார். அவரை நாங்கள் (விரட்டிச்சென்று பாறைகள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ பகுதியில் பிடித்து அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினோம்.33

அத்தியாயம் : 86
6817. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اخْتَصَمَ سَعْدٌ وَابْنُ زَمْعَةَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الْوَلَدُ لِلْفِرَاشِ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ "". زَادَ لَنَا قُتَيْبَةُ عَنِ اللَّيْثِ "" وَلِلْعَاهِرِ الْحَجَرُ "".
பாடம்: 23 விபசாரம் செய்தவனுக்கு இழப்பு தான்.
6817. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் புதல்வரும் (ஓர் அடிமைப் பெண்ணின் மகன் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாகச்) சர்ச்சை செய்துகொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்த் பின் ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன். தாய் யாருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை சொந்தமாகும்” என்று கூறிவிட்டு, (தம் துணைவியாரான சவ்தா அவர்களிடம்) “சவ்தா! ஸம்ஆவின் அடிமைப் பெண்ணின் மகனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்!” என்று சொன்னார்கள்.

(அபூஅப்தில்லாஹ் புகாரீ கூறுகிறேன்:) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா (ரஹ்) அவர்கள், “விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்” என்பதையும் கூடுதல் தகவலாக எமக்கு அறிவித்தார்கள்.34


அத்தியாயம் : 86
6818. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ "".
பாடம்: 23 விபசாரம் செய்தவனுக்கு இழப்பு தான்.
6818. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு தாய் எவருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத் தாளோ அவருக்கே குழந்தை உரியது. விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35

அத்தியாயம் : 86
6819. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَهُودِيٍّ وَيَهُودِيَّةٍ قَدْ أَحْدَثَا جَمِيعًا فَقَالَ لَهُمْ "" مَا تَجِدُونَ فِي كِتَابِكُمْ "". قَالُوا إِنَّ أَحْبَارَنَا أَحْدَثُوا تَحْمِيمَ الْوَجْهِ وَالتَّجْبِيَةَ. قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ ادْعُهُمْ يَا رَسُولَ اللَّهِ بِالتَّوْرَاةِ. فَأُتِيَ بِهَا فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، وَجَعَلَ يَقْرَأُ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا فَقَالَ لَهُ ابْنُ سَلاَمٍ ارْفَعْ يَدَكَ. فَإِذَا آيَةُ الرَّجْمِ تَحْتَ يَدِهِ، فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَا. قَالَ ابْنُ عُمَرَ فَرُجِمَا عِنْدَ الْبَلاَطِ، فَرَأَيْتُ الْيَهُودِيَّ أَجْنَأَ عَلَيْهَا.
பாடம்: 24 (மஸ்ஜிதுந் நபவீ அருகிலிருந்த) ‘பலாத்’ எனுமிடத்தில் கல்லெறி தண்டனை நிறைவேற்றுதல்36
6819. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்துவிட்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய வேதத்தில் (இவர்களுக்கு) என்ன (தண்டனை) காணப்படுகிறது?” என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், “எங்கள் (மத) அறிஞர்கள், (விபசாரம் புரிந்தவர்களை) முகத்தில் கரி பூசி, முழங்கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்ய வேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்” என்று சொன்னார்கள்.

(அப்போது அருகில் இருந்த முன்னாள் யூத அறிஞரான) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “தவ்ராத்தைக் கொண்டுவருமாறு அவர்களிடம் கூறுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அவ்வாறே ‘தவ்ராத்’ கொண்டுவரப்பட்டபோது, யூதர்களில் ஒருவர் (அதில் பதிவாயிருந்த) கல்லெறி தண்டனை (‘ரஜ்ம்’) பற்றிய வசனத்தின் மீது தமது கையை வைத்(து அந்த வசனத்தை யாருக்கும் தெரியாதபடி மறைத்)தார். மேலும், அதற்கு முன்பின் இருந்த வசனங்களை வாசித்துக்காட்டலானார்.

அப்போது அவரிடம் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடு!” என்று சொன்னார்கள். அவர் தமது கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரது கைக்குக் கீழே இருந்தது. ஆகவே, (அவர்கள் இருவருக்கும் தவ்ராத் வேதத்தில் உள்ளபடி) கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அப்போது அவர்கள் இருவருக்கும் ‘பலாத்’ எனும் இடத்தில் வைத்து கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. (அவர்கள்மீது கல் விழுந்தபோது) அந்த யூதர் அவள்மீது (கல் விழாமல் தடுப்பதற்காகக்) கவிழ்ந்து படுத்துக்கொண்டதை நான் பார்த்தேன்.

அத்தியாயம் : 86
6820. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ جَاءَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَاعْتَرَفَ بِالزِّنَا فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ مَرَّاتٍ. قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَبِكَ جُنُونٌ "". قَالَ لاَ. قَالَ "" آحْصَنْتَ "". قَالَ نَعَمْ. فَأَمَرَ بِهِ فَرُجِمَ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ فَرَّ، فَأُدْرِكَ فَرُجِمَ حَتَّى مَاتَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْرًا وَصَلَّى عَلَيْهِ. لَمْ يَقُلْ يُونُسُ وَابْنُ جُرَيْجٍ عَنِ الزُّهْرِيِّ فَصَلَّى عَلَيْهِ.
பாடம்: 25 (பெருநாள்) தொழுகைத் திடலில் கல்லெறி தண்டனை நிறை வேற்றுதல்
6820. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் (மாஇஸ் பின் மாலிக்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர், “(எனக்குப் பைத்தியம்) இல்லை. (நான் தெளிவுடன்தான் பேசுகிறேன்)” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “உமக்குத் திருமண மாகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். எனவே, நபி (ஸல்) அவர்கள், அவருக்குத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்மீது கற்கள் விழத் தொடங்கியதும் அவர் (வலி தாங்க முடியாமல்) தப்பியோட ஆரம்பித்தார். பிறகு, அவர் பிடிக்கப்பட்டு, இறக்கும்வரை அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்ல விதமாகப் பேசியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தாôர்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அறிவிப்பாளர்களான யூனுஸ் பின் யஸீத் (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோர் தம் அறிவிப்புகளில் “அவருக்கு (ஜனாஸா) தொழவைத்தார்கள்” என்பதைக் கூறவில்லை.

அபூஅப்தில்லாஹ் (புகாரியான என்) இடம், “நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழவைத்தார்கள் என்ற தகவல் சரியானதா?” என வினவப்பட்டது. “(ஆம்) அறிவிப்பாளர் மஅமர் (ரஹ்) அவர்கள் அவ்வாறே அறிவித்தார்கள்” என்று பதிலளித்தேன். “மஅமர் அல்லாதோர் அவ்வாறு அறிவித்துள்ளனரா?” என்று கேட்கப்பட்டது. ‘இல்லை’ என்று கூறினேன்.

அத்தியாயம் : 86
6821. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، وَقَعَ بِامْرَأَتِهِ فِي رَمَضَانَ، فَاسْتَفْتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" هَلْ تَجِدُ رَقَبَةً "". قَالَ لاَ. قَالَ "" هَلْ تَسْتَطِيعُ صِيَامَ شَهْرَيْنِ "". قَالَ لاَ. قَالَ "" فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا "".
பாடம்: 26 குற்றவியல் தண்டனைக்கு உரியதல்லாத பாவம் ஒன்றை ஒருவர் செய்துவிட்டு அது குறித்து (ஆட்சித்) தலைவரிடம் தெரி வித்தால்..? அவர் பாவமன்னிப்புக் கோரி மனம் திருந்திய பின்னால் அவர் ஆட்சித் தலைவரிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வந்தால் அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “இத்தகைய மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் தண்டனை வழங்க வில்லை” என்று சொன்னார்கள் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ரமளான் மாதத்தில் (பகல் நேரத்தில்) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்ட ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. மேலும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) மான் வேட்டையாடிய (கபீஸா என்ப)வரை உமர் (ரலி) அவர்கள் தண்டிக்கவில்லை. மேலும், இந்தத் தலைப்பை ஒட்டி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அறிவித்துள் ளார்கள்.37
6821. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக்கொண்டு) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டு (இது குறித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இதற்குப் பரிகாரமாக விடுதலை செய்ய) உன்னிடம் ஓர் அடிமை உண்டா?” என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை’ என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “இரண்டு மாதங்கள் உம்மால் நோன்பு நோற்க முடியுமா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை (இயலாது)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக!” என்றார்கள்.38


அத்தியாயம் : 86
6822. وَقَالَ اللَّيْثُ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ قَالَ احْتَرَقْتُ. قَالَ "" مِمَّ ذَاكَ "". قَالَ وَقَعْتُ بِامْرَأَتِي فِي رَمَضَانَ. قَالَ لَهُ "" تَصَدَّقْ "". قَالَ مَا عِنْدِي شَىْءٌ. فَجَلَسَ وَأَتَاهُ إِنْسَانٌ يَسُوقُ حِمَارًا وَمَعَهُ طَعَامٌ ـ قَالَ عَبْدُ الرَّحْمَنِ مَا أَدْرِي مَا هُوَ ـ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَيْنَ الْمُحْتَرِقُ "". فَقَالَ هَا أَنَا ذَا. قَالَ "" خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ "". قَالَ عَلَى أَحْوَجَ مِنِّي مَا لأَهْلِي طَعَامٌ قَالَ "" فَكُلُوهُ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ الْحَدِيثُ الأَوَّلُ أَبْيَنُ قَوْلُهُ "" أَطْعِمْ أَهْلَكَ "".
பாடம்: 26 குற்றவியல் தண்டனைக்கு உரியதல்லாத பாவம் ஒன்றை ஒருவர் செய்துவிட்டு அது குறித்து (ஆட்சித்) தலைவரிடம் தெரி வித்தால்..? அவர் பாவமன்னிப்புக் கோரி மனம் திருந்திய பின்னால் அவர் ஆட்சித் தலைவரிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வந்தால் அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “இத்தகைய மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் தண்டனை வழங்க வில்லை” என்று சொன்னார்கள் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ரமளான் மாதத்தில் (பகல் நேரத்தில்) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்ட ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. மேலும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) மான் வேட்டையாடிய (கபீஸா என்ப)வரை உமர் (ரலி) அவர்கள் தண்டிக்கவில்லை. மேலும், இந்தத் தலைப்பை ஒட்டி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அறிவித்துள் ளார்கள்.37
6822. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ரமளான் மாதத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் கரிந்துபோனேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “எதனால் அப்படி?” என்று கேட்டார்கள். அவர், “நான் ரமளான் மாதத்தில் (நோன்பு வைத்துக்கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்றார். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், “தர்மம் செய்!” என்று சொன்னார்கள். அவர், “(தர்மம் செய்ய) என்னிடம் ஏதுமில்லை” என்று கூறிவிட்டு, (அப்படியே) அமர்ந்து கொண்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் தமது கழுதையை ஓட்டிக்கொண்டு வந்தார். அவரிடம் உணவு இருந்தது.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் பின் காசிம் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டுவந்த உணவு என்ன என்பது எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.-

அப்போது நபி (ஸல்) அவர்கள், “கரிந்துபோனவர் எங்கே?” என்று கேட்டார்கள். அவர், “இதோ நான் இங்குதான் இருக்கிறேன்”. என்றார். நபி (ஸல்) அவர்கள், “இதை வாங்கிக்கொண்டுபோய் தர்மம் செய்!” என்றார்கள். அவர், “என்னைவிடத் தேவையானவருக்கா? என் குடும்பத்தாருக்கு உணவே இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால், அவர்களுக்கே உண்ணக்கொடு” என்றார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: முந்தைய ஹதீஸ் இதைவிடத் தெளிவாக உள்ளது. (அதில்) “உம் வீட்டாருக்கே உண்ணக்கொடு” என்றே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.39

அத்தியாயம் : 86
6823. حَدَّثَنِي عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ عَاصِمٍ الْكِلاَبِيُّ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَىَّ. قَالَ وَلَمْ يَسْأَلْهُ عَنْهُ. قَالَ وَحَضَرَتِ الصَّلاَةُ فَصَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم الصَّلاَةَ قَامَ إِلَيْهِ الرَّجُلُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْ فِيَّ كِتَابَ اللَّهِ. قَالَ "" أَلَيْسَ قَدْ صَلَّيْتَ مَعَنَا "". قَالَ نَعَمْ. قَالَ "" فَإِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ ذَنْبَكَ "". أَوْ قَالَ "" حَدَّكَ "".
பாடம்: 27 ஒருவர் (தாம் செய்த குற்றத் தைத்) தெளிவாகக் குறிப்பிடா மல் தண்டனையை நிறைவேற் றுமாறு முன்மொழிந்தால், (ஆட்சித்) தலைவர் அவரது குற்றத்தை (துருவிக் கேட்காமல்) மறைத்திடலாமா?
6823. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்ற மொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, என்மீது தண்டனையை நிறைவேற்றுங் கள்” என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்தபோது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (தொழுதேன்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் அல்லாஹ் ‘உமது பாவத்தை’ அல்லது ‘உமக்குரிய தண்டனையை’ மன்னித்துவிட்டான்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 86
6824. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ يَعْلَى بْنَ حَكِيمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا أَتَى مَاعِزُ بْنُ مَالِكٍ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ "" لَعَلَّكَ قَبَّلْتَ أَوْ غَمَزْتَ أَوْ نَظَرْتَ "". قَالَ لاَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" أَنِكْتَهَا "". لاَ يَكْنِي. قَالَ فَعِنْدَ ذَلِكَ أَمَرَ بِرَجْمِهِ.
பாடம்: 28 (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) ஒப்புதல் வாக்குமூலம் அளிப்ப வரிடம், “(அவளை) நீ தொட்டிருக் கக்கூடும்” என்றோ, “அவளை நோக்கி (கண்ணால் அல்லது கையால்) சைகை செய்திருக்கக் கூடும்” என்றோ (ஆட்சித்) தலைவர் சொல்லலாமா?
6824. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாஇஸ் பின் மாலிக் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திருக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!” என்று சொன்னார்கள். அவர், “(அவ்வாறெல்லாம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல், “அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?” என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அத்தியாயம் : 86
6825. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ مِنَ النَّاسِ وَهْوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ. يُرِيدُ نَفْسَهُ، فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَنَحَّى لِشِقِّ وَجْهِهِ الَّذِي أَعْرَضَ قِبَلَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ. فَأَعْرَضَ عَنْهُ، فَجَاءَ لِشِقِّ وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّذِي أَعْرَضَ عَنْهُ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ دَعَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَبِكَ جُنُونٌ "". قَالَ لاَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ "" أَحْصَنْتَ "". قَالَ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" اذْهَبُوا فَارْجُمُوهُ "".
பாடம்: 29 (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பவரிடம், “உனக்குத் திருமணமாகிவிட்டதா?” என்று (ஆட்சித்) தலைவர் கேட்பது
6825. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒரு மனிதர் வந்து அவர்களை அழைத்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்” என்று தம்மைக் குறித்தே கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்த பகுதிக்கு வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்” என்று சொன்னார். (மீண்டும்) அவரைவிட்டு நபி (ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அவர் (திரும்ப வும்) நபி (ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்ட பக்கம் வந்தார். (இவ்வாறு) அவர் (தாம் விபசாரம் புரிந்து விட்டதாக) தமக்கெதிராகத் தாமே நான்கு தடவை சாட்சியம் அளித்தபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள்.

அவர், “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், “உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “இவரைக் கொண்டுசென்று, இவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்” என்று கூறினார்கள்.40

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 86
6826. قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي مَنْ، سَمِعَ جَابِرًا، قَالَ فَكُنْتُ فِيمَنْ رَجَمَهُ، فَرَجَمْنَاهُ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ جَمَزَ حَتَّى أَدْرَكْنَاهُ بِالْحَرَّةِ فَرَجَمْنَاهُ.
பாடம்: 29 (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பவரிடம், “உனக்குத் திருமணமாகிவிட்டதா?” என்று (ஆட்சித்) தலைவர் கேட்பது
6826. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒருவர் (ஜாபிர் கூறியதாகத்) தெரிவித்தார்: அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அப்போது அவர்மீது (பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம்.

அவர்மீது கல் விழத்தொடங்கியதும் (வலி தாங்காமல்) அவர் வேகமாக குதித்தோடினார். அவரை நாங்கள் (பாறைகள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ பகுதியில் பிடித்து கல்லெறி தண்டனை நிறை வேற்றினோம்.41

அத்தியாயம் : 86
6827. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْنَاهُ مِنْ فِي الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ وَزَيْدَ بْنَ خَالِدٍ قَالاَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ رَجُلٌ فَقَالَ أَنْشُدُكَ اللَّهَ إِلاَّ قَضَيْتَ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ. فَقَامَ خَصْمُهُ ـ وَكَانَ أَفْقَهَ مِنْهُ ـ فَقَالَ اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ وَأْذَنْ لِي. قَالَ " قُلْ ". قَالَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، فَزَنَى بِامْرَأَتِهِ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَخَادِمٍ، ثُمَّ سَأَلْتُ رِجَالاً مِنْ أَهْلِ الْعِلْمِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ، وَعَلَى امْرَأَتِهِ الرَّجْمَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ جَلَّ ذِكْرُهُ، الْمِائَةُ شَاةٍ وَالْخَادِمُ رَدٌّ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَاغْدُ يَا أُنَيْسُ عَلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا ". فَغَدَا عَلَيْهَا فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا. قُلْتُ لِسُفْيَانَ لَمْ يَقُلْ فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ. فَقَالَ أَشُكُّ فِيهَا مِنَ الزُّهْرِيِّ، فَرُبَّمَا قُلْتُهَا وَرُبَّمَا سَكَتُّ.
பாடம்: 30 விபசார(க் குற்ற)த்தை ஒப்புக் கொள்ளல்
6827. அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மஸ்ஜிந் நபவீ பள்ளிவாசலில்) இருந் தோம். அப்போது (கிராமவாசி) ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன்: தாங்கள் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே எங்களிடையே தீர்ப்பளிக்க வேண்டும்” என்று சொன்னார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவருடைய எதிரி எழுந்து, “(ஆம்) எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்!” என்று கூறினார். (பின்னர் அந்தக் கிராமவாசி) “என்னைப் பேச அனுமதியுங்கள்” என்று கேட்டுக்கொள்ள நபி (ஸல்) அவர்கள், “பேசு!” என்றார்கள்.

அவர், “என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.) ஆகவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்குப் பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமையையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் சில அறிஞர்களிடம் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும்தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள்” என்று கூறினார்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: நூறு ஆடுகளும் அடிமையும் உன்னிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி, “உனைஸ்! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்!” என்று சொன்னார்கள்.

அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் அவளிடம் செல்ல, அவளும் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாள். ஆகவே, அவளுக்கு உனைஸ் (ரலி) கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.42

அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள் என்று அவர் கூறவில்லையா?” எனக் கேட்டேன். அவர்கள், “இது தொடர்பாக எனக்குச் சந்தேகம் உள்ளது. ஆகவே, சில வேளைகளில் அதை அறிவிக்கிறேன். சில வேளைகளில் மௌனமாகிவிடுகிறேன்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 86