பாகப் பிரிவினைச் சட்டங்கள்
6723. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ مَرِضْتُ فَعَادَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَهُمَا مَاشِيَانِ، فَأَتَانِي وَقَدْ أُغْمِيَ عَلَىَّ فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَبَّ عَلَىَّ وَضُوءَهُ فَأَفَقْتُ. فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَصْنَعُ فِي مَالِي، كَيْفَ أَقْضِي فِي مَالِي فَلَمْ يُجِبْنِي بِشَىْءٍ حَتَّى نَزَلَتْ آيَةُ الْمَوَارِيثِ.
பாடம்: 1
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
ஓர் ஆணுக்கு இரண்டு பெண் களின் பாகத்திற்குச் சமமானது கிடைக்கும் என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகின்றான். (இரண்டு, அல்லது) இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால் (பெற்றோர்) விட்டுச்சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டு பாகங்கள் அவர்களுக்குக் கிடைக்கும். ஒரே ஒரு பெண் (மட்டும்) இருந்தால் (சொத்தில்) பாதி அவளுக்குக் கிடைக்கும். (இறந்த) அவருக்கு மக்கள் இருந்தால் அவர் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து அவருடைய பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் கிடைக்கும். அவருக்கு மக்களே இல்லாமலிருந்து அவருடைய பெற்றோர் (மட்டுமே) அவருக்கு வாரிசுகளாக இருந்தால், அவருடைய தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் கிடைக்கும். (ஆனால்,) அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒரு பாகமே கிடைக்கும். (இவ்வாறு பங்கீடு செய்வதெல்லாம்) அவர் தெரிவித்த இறுதி விருப்பத்தையும் (அவரது) கடனையும் நிறைவேற்றிய பிறகுதான். உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் பிள்ளைகளில் உங்களுக்குப் பலன் அளிப்பதில் யார் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (இந்தப் பங்கீட்டு முறை) அல்லாஹ்வால் விதிக்கப்பட்டதாகும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.2
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் பாதி உங்களுக்குக் கிடைக்கும். அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் நான்கில் ஒரு பாகமே உங்களுக்குக் கிடைக்கும். (இந்தப் பங்கீடெல்லாம்) அவர்கள் தெரிவித்த இறுதி விருப்பம் மற்றும் (அவர்களின்) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான். மேலும், உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் (மனைவியரான) அவர்களுக்கு நான்கில் ஒரு பாகம் கிடைக்கும்.
உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் எட்டில் ஒரு பாகமே அவர்களுக்குக் கிடைக்கும். (இதுவும்) நீங்கள் தெரிவித்த இறுதி விருப்பம் மற்றும் (உங்களின்) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான். (இறந்துவிட்ட) ஓர் ஆண் அல்லது பெண் (தந்தை, பாட்டன் ஆகிய) மூல வாரிசுகளும் (மகன், பேரன் ஆகிய) கிளை வாரிசுகளும் இல்லாதவராக இருந்து, அவருக்குச் சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால், அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் கிடைக்கும்.
அதைவிட அதிகமானவர்களாக அவர்கள் இருந்தால், மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் பங்குதாரர்களாக ஆவர். (இந்தப் பங்கீடெல்லாம்) அவர் தெரிவித்திருந்த இறுதி விருப்பம் மற்றும் (அவரது) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான். (இது யாருக்கும்) பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் (அமைய வேண்டும். இது) அல்லாஹ்வின் சாசனமாகும். அல்லாஹ் நன்கறிந்தவனும் சகிப்புத் தன்மை மிகுந்தவனும் ஆவான்.(4:11,12)3
6723. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒருமுறை) நோய்வாய்ப்பட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் என்னை உடல் நலம் விசாரிக்க நடந்தே வந்தனர். என்னிடம் அவர்கள் வந்தபோது நான் மயக்கமுற்றிருந்தேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு அந்தத் தண்ணீரை என்மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண்விழித்)தேன்.
அப்போது நான்,”அல்லாஹ்வின் தூதரே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தின் விஷயத்தில் நான் என்ன முடிவு செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அப்போது அவர்கள் எனக்குப் பதிலேதும் கூறவில்லை. முடிவில் வாரிசுரிமை தொடர்பான (மேற்கண்ட வசனம்) இறங்கிற்று.4
அத்தியாயம் : 85

6724. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ، وَلاَ تَحَسَّسُوا، وَلاَ تَجَسَّسُوا، وَلاَ تَبَاغَضُوا، وَلاَ تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا "".
பாடம்: 2
பாகப்பிரிவினை (கல்வி)யைக் கற்பித்தல்
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
யூகத்தின் அடிப்படையில் பேசக்கூடியவர்கள் தோன்றுவதற்குமுன் (அடிப்படையுள்ள பாகப்பிரிவினை போன்ற) கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள்.
6724. அல்லாஹ்வின் தூதலிர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அடிப்படையில்லாமல் பிறர்மீது) சந்தேகம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், இவ்வாறு சந்தேகம் கொள்வது மாபெரும் பொய்யாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித்துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவர்மீது ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5
அத்தியாயம் : 86

6725. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ، وَالْعَبَّاسَ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ أَتَيَا أَبَا بَكْرٍ يَلْتَمِسَانِ مِيرَاثَهُمَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُمَا حِينَئِذٍ يَطْلُبَانِ أَرْضَيْهِمَا مِنْ فَدَكَ، وَسَهْمَهُمَا مِنْ خَيْبَرَ.
பாடம்: 3
“(இறைத்தூதர்களாகிய) எங்க ளுக்கு எவரும் (சொத்தில்) வாரி சாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது6
6725. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்) ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தைக் கேட்டனர். அப்போது அவ்விருவரும் ‘ஃபதக்’ பகுதியிலிருந்த தமது நிலத்தையும் கைபரில் தமக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு கோரினர்.7

6726. فَقَالَ لَهُمَا أَبُو بَكْرٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ مِنْ هَذَا الْمَالِ ". قَالَ أَبُو بَكْرٍ وَاللَّهِ لاَ أَدَعُ أَمْرًا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُهُ فِيهِ إِلاَّ صَنَعْتُهُ. قَالَ فَهَجَرَتْهُ فَاطِمَةُ، فَلَمْ تُكَلِّمْهُ حَتَّى مَاتَتْ.
பாடம்: 3
“(இறைத்தூதர்களாகிய) எங்க ளுக்கு எவரும் (சொத்தில்) வாரி சாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது6
6726. அவர்கள் இருவரிடமும் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவையாகும். இந்தச் செல்வத்திலிருந்துதான் முஹம்மதின் குடும்பத்தார் உண்பார்கள் என்று சொல்லக் கேட்டுள்ளேன்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செல்வத்தின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்படக் கண்டேனோ அதில் எதையும் கைவிடாமல் நானும் அவ்வாறே செயல்படுவேன்” என்று பதிலளித்தார்கள்.
இதனால் கோபித்துக்கொண்டு ஃபாத்திமா (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தாம் இறக்கும்வரை பேசவில்லை.8

6727. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ "".
பாடம்: 3
“(இறைத்தூதர்களாகிய) எங்க ளுக்கு எவரும் (சொத்தில்) வாரி சாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது6
6727. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மமே.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6728. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَوْسِ بْنِ الْحَدَثَانِ،، وَكَانَ، مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ذَكَرَ لِي مِنْ حَدِيثِهِ ذَلِكَ، فَانْطَلَقْتُ حَتَّى دَخَلْتُ عَلَيْهِ فَسَأَلْتُهُ فَقَالَ انْطَلَقْتُ حَتَّى أَدْخُلَ عَلَى عُمَرَ فَأَتَاهُ حَاجِبُهُ يَرْفَأُ فَقَالَ هَلْ لَكَ فِي عُثْمَانَ وَعَبْدِ الرَّحْمَنِ وَالزُّبَيْرِ وَسَعْدٍ قَالَ نَعَمْ. فَأَذِنَ لَهُمْ، ثُمَّ قَالَ هَلْ لَكَ فِي عَلِيٍّ وَعَبَّاسٍ قَالَ نَعَمْ. قَالَ عَبَّاسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اقْضِ بَيْنِي وَبَيْنَ هَذَا. قَالَ أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ "". يُرِيدُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَفْسَهُ. فَقَالَ الرَّهْطُ قَدْ قَالَ ذَلِكَ. فَأَقْبَلَ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ فَقَالَ هَلْ تَعْلَمَانِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ذَلِكَ قَالاَ قَدْ قَالَ ذَلِكَ. قَالَ عُمَرُ فَإِنِّي أُحَدِّثُكُمْ عَنْ هَذَا الأَمْرِ، إِنَّ اللَّهَ قَدْ كَانَ خَصَّ رَسُولَهُ صلى الله عليه وسلم فِي هَذَا الْفَىْءِ بِشَىْءٍ لَمْ يُعْطِهِ أَحَدًا غَيْرَهُ، فَقَالَ عَزَّ وَجَلَّ {مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ} إِلَى قَوْلِهِ {قَدِيرٌ} فَكَانَتْ خَالِصَةً لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاللَّهِ مَا احْتَازَهَا دُونَكُمْ، وَلاَ اسْتَأْثَرَ بِهَا عَلَيْكُمْ، لَقَدْ أَعْطَاكُمُوهُ وَبَثَّهَا فِيكُمْ، حَتَّى بَقِيَ مِنْهَا هَذَا الْمَالُ، فَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنْفِقُ عَلَى أَهْلِهِ مِنْ هَذَا الْمَالِ نَفَقَةَ سَنَتِهِ، ثُمَّ يَأْخُذُ مَا بَقِيَ فَيَجْعَلُهُ مَجْعَلَ مَالِ اللَّهِ، فَعَمِلَ بِذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَيَاتَهُ، أَنْشُدُكُمْ بِاللَّهِ هَلْ تَعْلَمُونَ ذَلِكَ قَالُوا نَعَمْ. ثُمَّ قَالَ لِعَلِيٍّ وَعَبَّاسٍ أَنْشُدُكُمَا بِاللَّهِ هَلْ تَعْلَمَانِ ذَلِكَ قَالاَ نَعَمْ. فَتَوَفَّى اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو بَكْرٍ أَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَبَضَهَا فَعَمِلَ بِمَا عَمِلَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ تَوَفَّى اللَّهُ أَبَا بَكْرٍ فَقُلْتُ أَنَا وَلِيُّ وَلِيِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَبَضْتُهَا سَنَتَيْنِ أَعْمَلُ فِيهَا مَا عَمِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ، ثُمَّ جِئْتُمَانِي وَكَلِمَتُكُمَا وَاحِدَةٌ، وَأَمْرُكُمَا جَمِيعٌ، جِئْتَنِي تَسْأَلُنِي نَصِيبَكَ مِنِ ابْنِ أَخِيكَ، وَأَتَانِي هَذَا يَسْأَلُنِي نَصِيبَ امْرَأَتِهِ مِنْ أَبِيهَا فَقُلْتُ إِنْ شِئْتُمَا دَفَعْتُهَا إِلَيْكُمَا بِذَلِكَ، فَتَلْتَمِسَانِ مِنِّي قَضَاءً غَيْرَ ذَلِكَ، فَوَاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ، لاَ أَقْضِي فِيهَا قَضَاءً غَيْرَ ذَلِكَ حَتَّى تَقُومَ السَّاعَةُ، فَإِنْ عَجَزْتُمَا فَادْفَعَاهَا إِلَىَّ، فَأَنَا أَكْفِيكُمَاهَا.
பாடம்: 3
“(இறைத்தூதர்களாகிய) எங்க ளுக்கு எவரும் (சொத்தில்) வாரி சாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது6
6728. முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மாலிக் பின் அவ்ஸ் பின் அல் ஹதஸான் (ரஹ்) அவர்களிடம் சென்று (ஃபதக் தொடர்பான நிகழ்ச்சி குறித்துக்) கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:
நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்களின் மெய்க்காவலர் ‘யர்ஃபஉ’ என்பவர் அவர்களிடம் வந்து, “உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்கத் தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள், ‘ஆம்’ என்று கூறி, அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். (சற்று நேரத்திற்குப்) பிறகு யர்ஃபஉ (வந்து), “அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் சந்திப்பதில் தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். ‘ஆம்’ என்றார்கள். (அனுமதிக்குப்பின் அவர்கள் இருவரும் உள்ளே வந்தனர்).
அப்பாஸ் (ரலி) அவர்கள், “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக் கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே (இந்தச் சொத்து தொடர்பாகத்) தீர்ப்ப ளியுங்கள்” என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள், “வானமும் பூமியும் எந்த அல்லாஹ்வின் கட்டளை யால் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே” என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்த) அந்தக் குழுவினர், “நபியவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்” என்று பதிலளித்தனர்.
உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவ்விருவரும், “(ஆம்) அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்” என்று பதிலளித்தனர்.
உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயம் குறித்துப் பேசுகிறேன்: (போரிடாமல் கிடைத்த) இந்த (ஃபய்உ)ச் செல்வத்திலிருந்து சிறிதளவைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கினான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை வழங்கவில்லை” என்று கூறிவிட்டு, “அல்லாஹ் எந்தச் செல்வத்தை (எதிரிகளான) அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச்சென்றதால் கிடைத்ததன்று. மாறாக அல்லாஹ், தான் நாடுகின்றவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்” எனும் (59:6ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.
தொடர்ந்து, “எனவே, இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை; அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே எஞ்சியது. நபி (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை அவர்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு எஞ்சியதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள்.”
(இவ்வளவும் சொல்லிவிட்டு, அக்குழுவினரை நோக்கி) “அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கின்றேன்: இதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘ஆம்’ (அறிவோம்) என்று பதிலளித்தனர். பிறகு, அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும், “உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நீங்கள் இதை அறிவீர்களா?” என்று வினவினார்கள். அவர்கள் இருவரும், ‘ஆம்’ (அறிவோம்) என்று பதிலளித்தனர்.
(தொடர்ந்து), பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக்கொண்டான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்” என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தைத் தமது கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான்.
அப்போது நான், “நான் அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதியின் பிரதிநிதியாவேன்” என்று கூறி, அதை (என் ஆட்சிக் காலத்தில்) இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்துகொண்ட முறைப்படி செயல் பட்டுவந்தேன். பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் வந்தீர்கள்; (பேசினீர்கள்.) உங்கள் இருவரின் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது; உங்கள் இருவரின் விஷயமும் ஒன்றாகவே இருந்தது.
(அப்பாஸ் (ரலி) அவர்களே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரரின் புதல்வர் (நபி) இடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டு வந்தீர்கள். அவரும் (அலீயும்) தம் துணைவியாருக்கு அவருடைய தந்தை யிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டு என்னிடம் வந்தார். அப்போது நான் (உங்கள் இருவரிடமும்,) “(நபிகளார் செயல்பட்டவாறு செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில்) நீங்கள் இருவரும் விரும்பினால் உங்கள் இருவரிடமும் அதைக் கொடுத்துவிடுகின்றேன்” என்று சொன்னேன்.
(இப்போது) அதன்றி வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகின்றீர்களா? எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் அந்தச் செல்வம் தொடர்பாக இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் இறுதிநாள்வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். அதை உங்களுக்குப் பதிலாக நானே பராமரித்துக்கொள்வேன்” என்று சொன்னார்கள்.9
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

6729. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَقْتَسِمُ وَرَثَتِي دِينَارًا، مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمُؤْنَةِ عَامِلِي فَهْوَ صَدَقَةٌ "".
பாடம்: 3
“(இறைத்தூதர்களாகிய) எங்க ளுக்கு எவரும் (சொத்தில்) வாரி சாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது6
6729. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் வாரிசுகள் ஒரு பொற்காசைக்கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும்போக நான் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10

6730. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ أَزْوَاجَ، النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَرَدْنَ أَنْ يَبْعَثْنَ عُثْمَانَ إِلَى أَبِي بَكْرٍ يَسْأَلْنَهُ مِيرَاثَهُنَّ. فَقَالَتْ عَائِشَةُ أَلَيْسَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ "".
பாடம்: 3
“(இறைத்தூதர்களாகிய) எங்க ளுக்கு எவரும் (சொத்தில்) வாரி சாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது6
6730. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர்.
அப்போது நான் (அவர்களைப் பார்த்து), ‘(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மமே’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லவில்லையா?” என்று கேட்டேன்.

6731. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَنَا أَوْلَى، بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ مَاتَ وَعَلَيْهِ دَيْنٌ، وَلَمْ يَتْرُكْ وَفَاءً، فَعَلَيْنَا قَضَاؤُهُ، وَمَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ "".
பாடம்: 4
“ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால் அது அவருடைய குடும்பத்தாருக்குரியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
6731. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நானே நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். ஆகவே, எவர் தம்மீது கடன் இருக்கும் நிலையில் அதை அடைப்பதற்கான ஒன்றையும் விட்டுச்செல்லாமல் இறந்துவிடுகின்றாரோ அந்தக் கடனை அடைப்பது எனது பொறுப்பாகும். எவர் (இறக்கும்போது) ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய வாரிசுகளுக்குரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11

6732. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا بَقِيَ فَهْوَ لأَوْلَى رَجُلٍ ذَكَرٍ "".
பாடம்: 5
தாய், தந்தையிடமிருந்து ஒருவருக் குக் கிடைக்கும் சொத்துரிமை
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஆண் அல்லது பெண், ஒரு புதல்வியை விட்டுச்சென்றால் (அவர்களுடைய சொத்திலிருந்து) அவளுக்குச் சரிபாதி (பங்கு) கிடைக்கும். மகள் இருவராகவோ அல்லது அதைவிடக் கூடுதலாகவோ இருந்தால் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பாகங்கள் கிடைக்கும்.
மகள்களுடன் ஆணும் இருந்தால் அவர்களுடன் சொத்தில் பங்காளியாகும் நபருக்குச் சேர வேண்டிய பாகத்தை முதலில் கொடுத்துவிட்டுப் பிறகு எஞ்சியுள்ளவற்றை ‘ஓர் ஆணின் பங்கு இரு பெண்ணின் பங்கிற்குச் சமமானது’ என்ற விகிதத்தில் அவர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.12
6732. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.13
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6733. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ مَرِضْتُ بِمَكَّةَ مَرَضًا، فَأَشْفَيْتُ مِنْهُ عَلَى الْمَوْتِ، فَأَتَانِي النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي مَالاً كَثِيرًا، وَلَيْسَ يَرِثُنِي إِلاَّ ابْنَتِي، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَىْ مَالِي قَالَ "" لاَ "". قَالَ قُلْتُ فَالشَّطْرُ قَالَ "" لاَ "". قُلْتُ الثُّلُثُ قَالَ "" الثُّلُثُ كَبِيرٌ إِنَّكَ إِنْ تَرَكْتَ وَلَدَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَتْرُكَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ، وَإِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً إِلاَّ أُجِرْتَ عَلَيْهَا، حَتَّى اللُّقْمَةَ تَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِكَ "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَأُخَلَّفُ عَنْ هِجْرَتِي فَقَالَ "" لَنْ تُخَلَّفَ بَعْدِي فَتَعْمَلَ عَمَلاً تُرِيدُ بِهِ وَجْهَ اللَّهِ، إِلاَّ ازْدَدْتَ بِهِ رِفْعَةً وَدَرَجَةً، وَلَعَلَّ أَنْ تُخَلَّفَ بَعْدِي حَتَّى يَنْتَفِعَ بِكَ أَقْوَامٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ، لَكِنِ الْبَائِسُ سَعْدُ ابْنُ خَوْلَةَ يَرْثِي لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ مَاتَ بِمَكَّةَ "". قَالَ سُفْيَانُ وَسَعْدُ بْنُ خَوْلَةَ رَجُلٌ مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَىٍّ.
பாடம்: 6
புதல்வியருக்கு(ப் பெற்றோரிட மிருந்து) கிடைக்கும் சொத்துரிமை
6733. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) மக்காவில் நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் எனக்கில்லை. எனவே, எனது செல்வத்தில் மூன்றில் இரு பங்கை நான் தர்மம் செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்றார்கள். “அவ்வாறாயின் பாதியை தர்மம் செய்யட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்று சொன்னார்கள். “மூன்றில் ஒரு பங்கை (தர்மம் செய்யட்டுமா?)” என்று கேட்டேன். நபியவர்கள், “மூன்றில் ஒரு பங்குகூட அதிகம்தான். நீங்கள் உங்கள் பிள்ளைகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிடத் தன்னிறைவு உடையவர்களாக விட்டுச்செல்வதே சாலச்சிறந்ததாகும். (நல்ல நோக்கத்தில்) நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செலவுக்கும் உங்களுக்கு நிச்சயம் நற்பலன் வழங்கப்படும்; நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகின்ற ஒரு கவளம் உணவாயினும் சரி! (அதற்கும் நற்பலன் உண்டு)” என்று சொன்னார்கள்.
அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! (ஹஜ் முடிந்து என் தோழர்கள் அனைவரும் மதீனா சென்றுவிடுவார்கள்.) நான் மட்டும் என் ஹிஜ்ரத் பூமி(யான மதீனாவு)க்குச் செல்லாமல் (மக்காவிலேயே) தங்கிவிடுவேனா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (மதீனா) சென்றபிறகு நீங்கள் இங்கேயே தங்கியிருந்து, அல்லாஹ்வின் அன்பை நாடி எந்த நல்லறம் புரிந்தாலும் அதன் மூலம் உங்கள் உயர்வும் தகுதியும் அதிகமாகவே செய்யும்.
நான் (மதீனா) சென்றபிறகு, உங்கள் மூலம் சிலர் நன்மையடைவதற்காவும் மற்றச் சிலர் துன்பம் அடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்கவைக்கப்படலாம். ஆனால், பாவம், சஅத் பின் கவ்லா! (அவருடைய ஆசை நிறைவேறவில்லை)” என்று மக்காவிலேயே இறந்துவிட்ட சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்தவராவார்.14

6734. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، شَيْبَانُ عَنْ أَشْعَثَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، قَالَ أَتَانَا مُعَاذُ بْنُ جَبَلٍ بِالْيَمَنِ مُعَلِّمًا وَأَمِيرًا، فَسَأَلْنَاهُ عَنْ رَجُلٍ، تُوُفِّيَ وَتَرَكَ ابْنَتَهُ وَأُخْتَهُ، فَأَعْطَى الاِبْنَةَ النِّصْفَ وَالأُخْتَ النِّصْفَ.
பாடம்: 6
புதல்வியருக்கு(ப் பெற்றோரிட மிருந்து) கிடைக்கும் சொத்துரிமை
6734. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் யமன் நாட்டுக்கு எங்களின் போதக ராகவும் ஆட்சியாளராகவும் வந்தார்கள். அன்னாரிடம் நாங்கள், தம் மகளையும் சகோதரியையும் விட்டுவிட்டு இறந்துபோன ஒருவரைக் குறித்து (பாகப்பிரிவினை தொடர்பாக)க் கேட்டோம். அப்போது அவர்கள் (மொத்தச் சொத்தில்) மகளுக்குப் பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் அளிக்கும்படி கூறினார்கள்.

6735. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا فَمَا بَقِيَ فَهْوَ لأَوْلَى رَجُلٍ ذَكَرٍ "".
பாடம்: 7
(இறந்தவருக்கு) மகன் (உயிருடன்) இல்லாதபோது மகனின் மகனுக்கு (பேரனுக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இறந்தவருக்கு) ஆண் மக்கள் (உயிருடன்) இல்லாதபோது, அவர் களுடைய குழந்தைகள் (பேரன்கள், சொந்தக்) குழந்தைகளின் தகுதியைப் பெறுவர். பேரக்குழந்தைகளில் (மகனுடைய மக்களில்) ஆண்கள் சொந்த ஆண் மக்களைப் போன்றும், அவர்களில் பெண்கள் சொந்த பெண் மக்களைப் போன்றும் ஆவர். அவர்கள் வாரிசுரிமை பெறுவதைப் போன்றே இவர்களும் வாரிசுரிமை பெறுவார்கள். அவர்கள் (இருக்கும்போது மற்ற வாரிசுகளில் யார் யாரை வாரிசுரிமை பெறாமல்) தடுப்பார்களோ (அவர்களையெல்லாம்) இவர்களும் தடுப்பார்கள். மகன் (உயிருடன்) இருக்கும்போது மகனுடைய மக்கள் வாரிசுரிமை பெறமாட்டார்கள்.
6735. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பாகப்பிரிவினை தொடர்பாக குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15

6736. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو قَيْسٍ، سَمِعْتُ هُزَيْلَ بْنَ شُرَحْبِيلَ، قَالَ سُئِلَ أَبُو مُوسَى عَنِ ابْنَةٍ وَابْنَةِ ابْنٍ وَأُخْتٍ، فَقَالَ لِلاِبْنَةِ النِّصْفُ وَلِلأُخْتِ النِّصْفُ، وَأْتِ ابْنَ مَسْعُودٍ فَسَيُتَابِعُنِي. فَسُئِلَ ابْنُ مَسْعُودٍ وَأُخْبِرَ بِقَوْلِ أَبِي مُوسَى، فَقَالَ لَقَدْ ضَلَلْتُ إِذًا وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ،، أَقْضِي فِيهَا بِمَا قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم "" لِلاِبْنَةِ النِّصْفُ، وَلاِبْنَةِ ابْنٍ السُّدُسُ تَكْمِلَةَ الثُّلُثَيْنِ، وَمَا بَقِيَ فَلِلأُخْتِ "". فَأَتَيْنَا أَبَا مُوسَى فَأَخْبَرْنَاهُ بِقَوْلِ ابْنِ مَسْعُودٍ، فَقَالَ لاَ تَسْأَلُونِي مَا دَامَ هَذَا الْحَبْرُ فِيكُمْ.
பாடம்: 8
(இறந்தவருக்கு) மகள் இருக்கும்போது மகனுடைய மகளுக்கு (பேத்திக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை
6736. ஹுஸைல் பின் ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா (ரலி) அவர்களிடம், (இறந்துபோன ஒருவருக்கு) மகள், மகனுடைய மகள், சகோதரி ஆகியோர் (இருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “மகளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதியும் சகோதரிக்கு (மீதி)ப்பாதியும் கிடைக்கும் (மகனுடைய மகளுக்கு ஒன்றும் கிடையாது)” என்று கூறிவிட்டு, “(வேண்டுமானால்,) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்று (கேட்டுப்)பாருங்கள். அன்னாரும் என் (கருத்தி)னையே பிரதிபலிப்பார்கள்” என்று சொன்னார்கள்.
ஆகவே, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (சென்று) அபூமூசா (ரலி) அவர்களின் கூற்றைத் தெரிவித்து (இது குறித்து விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இவ்வாறு (மகனின் மகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று) நானும் சொன்னால் நிச்சயம் நான் வழிதவறியவனாகிவிடுவேன்; நான் நல்வழியடைந்தவர்களில் ஒருவனாக இருக்கமாட்டேன். இந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்:
மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் மூன்றில் இரு பாகங்கள் நிறைவாகும். எஞ்சியிருப்பது சகோதரிக்கு உரியதாகும்” என்றார்கள். பின்னர் அபூமூசா (ரலி) அவர்களிடம் சென்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அப்போது, “இந்தப் பேரறிஞர் (இப்னு மஸ்ஊத்-ரலி) உங்களிடையே இருக்கும்வரை என்னிடம் (விளக்கம்) கேட்காதீர்கள்” என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.16

6737. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا فَمَا بَقِيَ فَلأَوْلَى رَجُلٍ ذَكَرٍ "".
பாடம்: 9
(இறந்தவருக்குத்) தந்தையும் சகோதரர்களும் இருக்கும்போது பாட்டனாருக்குரிய சொத்து ரிமை17
அபூபக்ர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) ஆகியோர் “பாட்டனார் தந்தை(யைப் போன்றவர்) ஆவார்” என்று கூறினர். (அதற்கு ஆதாரமாக) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஆதமின் மக்களே!” எனும் (7:26ஆவது) வசனத் தொடரையும் “நான் என் தந்தையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரின் மார்க்கத்தையே பின்பற்றுகிறேன் (என்று யூசுஃப் கூறினார்)” எனும் (12:38ஆவது) வசனத் தொடரையும் ஓதினார்கள்.18
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்கள் நிறைந் திருந்தும் அவர்களில் யாரும் அபூபக்ர் (ரலி) அவர்களு(டைய இக்கருத்துக்)க்கு மாறுபடவில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு (மகன் இல்லாத போது) என் மகனுடைய மகன் (பேரன்)தான் வாரிசாவானே தவிர சகோதரர்கள் அல்லர். (அப்படியிருக்கும்போது) என் பேரனுக்கு (அவனுடைய தந்தை இல்லாதபோது பாட்டனாகிய) நான் ஏன் வாரிசாக முடியாது?19
(இது தொடர்பாக) உமர் (ரலி), அலீ (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரிடமிருந்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.20
6737. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21

6738. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَمَّا الَّذِي قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ هَذِهِ الأُمَّةِ خَلِيلاً لاَتَّخَذْتُهُ، وَلَكِنْ خُلَّةُ الإِسْلاَمِ أَفْضَلُ "". أَوْ قَالَ "" خَيْرٌ "". فَإِنَّهُ أَنْزَلَهُ أَبًا. أَوْ قَالَ قَضَاهُ أَبًا.
பாடம்: 9
(இறந்தவருக்குத்) தந்தையும் சகோதரர்களும் இருக்கும்போது பாட்டனாருக்குரிய சொத்து ரிமை17
அபூபக்ர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) ஆகியோர் “பாட்டனார் தந்தை(யைப் போன்றவர்) ஆவார்” என்று கூறினர். (அதற்கு ஆதாரமாக) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஆதமின் மக்களே!” எனும் (7:26ஆவது) வசனத் தொடரையும் “நான் என் தந்தையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரின் மார்க்கத்தையே பின்பற்றுகிறேன் (என்று யூசுஃப் கூறினார்)” எனும் (12:38ஆவது) வசனத் தொடரையும் ஓதினார்கள்.18
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்கள் நிறைந் திருந்தும் அவர்களில் யாரும் அபூபக்ர் (ரலி) அவர்களு(டைய இக்கருத்துக்)க்கு மாறுபடவில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு (மகன் இல்லாத போது) என் மகனுடைய மகன் (பேரன்)தான் வாரிசாவானே தவிர சகோதரர்கள் அல்லர். (அப்படியிருக்கும்போது) என் பேரனுக்கு (அவனுடைய தந்தை இல்லாதபோது பாட்டனாகிய) நான் ஏன் வாரிசாக முடியாது?19
(இது தொடர்பாக) உமர் (ரலி), அலீ (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரிடமிருந்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.20
6738. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தச் சமுதாயத்தில் யாரையேனும் நான் உற்றநண்பராக ஆக்கிக்கொள் வதாயிருந்தால் அவரையே ஆக்கிக் கொண்டிருப்பேன். என்றாலும், இஸ்லாமிய சகோதரத்துவமே (எல்லா உறவுகளையும் விடச்) ‘சிறந்தது’ அல்லது ‘நல்லது” என்று யார் விஷயத்தில் கூறினார்களோ (அந்த அபூபக்ர்-ரலி) அவர்கள்தான், (சொத்துரிமை பெறுவதில்) பாட்டனாரை ‘தந்தையின் இடத்தில் வைத்தார்கள்’ அல்லது ‘தந்தை’ எனத் தீர்ப்பளித்தார்கள்.22

6739. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ وَرْقَاءَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ الْمَالُ لِلْوَلَدِ، وَكَانَتِ الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ، فَنَسَخَ اللَّهُ مِنْ ذَلِكَ مَا أَحَبَّ، فَجَعَلَ لِلذَّكَرِ مِثْلَ حَظِّ الأُنْثَيَيْنِ، وَجَعَلَ لِلأَبَوَيْنِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ، وَجَعَلَ لِلْمَرْأَةِ الثُّمُنَ وَالرُّبُعَ، وَلِلزَّوْجِ الشَّطْرَ وَالرُّبُعَ.
பாடம்: 10
(இறந்துபோன பெண்ணுக்குக்) குழந்தை உள்ளிட்ட வாரிசுகள் இருக்கும்போது கணவனுக்குக் கிடைக்கும் சொத்துரிமை
6739. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இறந்துபோனவர் விட்டுச்சென்ற) செல்வம் (அவருடைய) குழந்தைகளுக்கு (மட்டுமே) உரியதாக இருந்தது. பெற்றோருக்கு(ப் பங்கு கிடைக்க வேண்டுமெனில் இறந்தவர்) இறுதி விருப்பம் தெரிவித்திருக்க வேண்டும் என்றிருந்தது. இதில் அல்லாஹ், தான் நாடியதை மாற்றியமைத்து, ‘ஓர் ஆணுக்கு இரு பெண்களின் பங்கு’ என்ற விகிதத்தை ஏற்படுத்தினான். பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் என்று நிர்ணயித்தான்.
(குழந்தை இருக்கும்போது) மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் (குழந்தை இல்லாதபோது) நான்கில் ஒரு பாகமும் நிர்ணயித்தான். (குழந்தை இல்லாதபோது) கணவனுக்குச் சரிபாதியும் (குழந்தை இருக்கும்போது) நான்கில் ஒரு பாகமும் நிர்ணயித்தான்.23

6740. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي جَنِينِ امْرَأَةٍ مِنْ بَنِي لَحْيَانَ سَقَطَ مَيِّتًا بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ. ثُمَّ إِنَّ الْمَرْأَةَ الَّتِي قَضَى عَلَيْهَا بِالْغُرَّةِ تُوُفِّيَتْ، فَقَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بِأَنَّ مِيرَاثَهَا لِبَنِيهَا وَزَوْجِهَا، وَأَنَّ الْعَقْلَ عَلَى عَصَبَتِهَا "".
பாடம்: 11
(இறந்தவருக்குக்) குழந்தை உள்ளிட்ட வாரிசுகள் இருக்கும்போது மனைவி, (அல்லது) கணவனுக்குக் கிடைக்கும் சொத்துரிமை
6740. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘பனூ லிஹ்யான்’ குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் (வயிற்றிóருந்த) சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அதற்கு இழப்பீடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டுமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். பின்னர், இழப்பீடு வழங்கும்படி நபியவர்கள் தீர்ப்பளித்த அந்த(க் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டார்.
ஆகவே, (அவர் சார்பாக) அவருடைய தந்தைவழி உறவினர்கள் (அஸபாக்கள்) இழப்பீடு வழங்கிட வேண்டுமென்றும், அவரது சொத்து அவருடைய ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரியதென்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.24

6741. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ قَضَى فِينَا مُعَاذُ بْنُ جَبَلٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم النِّصْفُ لِلاِبْنَةِ وَالنِّصْفُ لِلأُخْتِ. ثُمَّ قَالَ سُلَيْمَانُ قَضَى فِينَا. وَلَمْ يَذْكُرْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 12
(இறந்தவருக்குப்) புதல்வியர் இருக்கும்போது மீதியைப் பெறும் சகோதரிகளின் சொத்துரிமை25
6741. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் (யமன் நாட்டுக்கு வந்த) முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், “(சொத்தில்) பாதி (இறந்தவரின்) மகளுக் கும் (மீதிப்) பாதி சகோதரிக்கும் உரியது” என்று தீர்ப்பளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் “முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் எங்களிடையே (மேற்கண்டவாறு) தீர்ப்பளித்தார்கள்” என்று காணப்படுகிறது. ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில்’ என்ற குறிப்பு இடம்பெறவில்லை.26

6742. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي قَيْسٍ، عَنْ هُزَيْلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ لأَقْضِيَنَّ فِيهَا بِقَضَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم لِلاِبْنَةِ النِّصْفُ، وَلاِبْنَةِ الاِبْنِ السُّدُسُ، وَمَا بَقِيَ فَلِلأُخْتِ.
பாடம்: 12
(இறந்தவருக்குப்) புதல்வியர் இருக்கும்போது மீதியைப் பெறும் சகோதரிகளின் சொத்துரிமை25
6742. ஹுஸைல் பின் ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “(மகனின் மகளுக்குக் கிடைக்க வேண்டிய) இந்தச் சொத்து விஷயத்தில் ‘நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே அளிக்கிறேன்’ அல்லது ‘நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘‘ என்று சொல்லிவிட்டு, “(இறந்தவரின் சொத்தில்) மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் கிடைக்கும்; எஞ்சியது சகோதரிக்கு உரியதாகும்” என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.27