6568. (وَقَالَ :غَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ أَوْ مَوْضِعُ قَدَمٍ مِنَ الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَتْ إِلَى الأَرْضِ، لأَضَاءَتْ مَا بَيْنَهُمَا، وَلَمَلأَتْ مَا بَيْنَهُمَا رِيحًا، وَلَنَصِيفُهَا ـ يَعْنِي الْخِمَارَ ـ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا).
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6568. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும்விடச் சிறந்தது ஆகும்.142

உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒருவில் அளவுக்கு, அல்லது ஒரு பாதம் வைக்கும் அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங் களையும்விடச் சிறந்தது ஆகும்.143

சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல் லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங் களையும்விட மேலானதாகும்.

அத்தியாயம் : 81
6569. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَدْخُلُ أَحَدٌ الْجَنَّةَ إِلاَّ أُرِيَ مَقْعَدَهُ مِنَ النَّارِ، لَوْ أَسَاءَ، لِيَزْدَادَ شُكْرًا، وَلاَ يَدْخُلُ النَّارَ أَحَدٌ إِلاَّ أُرِيَ مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ، لَوْ أَحْسَنَ، لِيَكُونَ عَلَيْهِ حَسْرَةً "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6569. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(சொர்க்கவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் பாவம் புரிந்திருந்தால் நரகத்தில் தமது இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் சொர்க்கத்தில் நுழையமாட்டார். அவர் அதிகமாக (மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவே (இவ்வாறு காட்டப்படும்). (நரகவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் நன்மை புரிந்திருந்தால் சொர்க்கத்தில் தமது இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் நரகத்தில் நுழையமாட்டார். இது அவருக்கு (பெரும்) துயரமாக அமைய வேண்டும் என்பதற்காவே (காட்டப்படுகிறது).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6570. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِكَ يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ "" لَقَدْ ظَنَنْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَنْ لاَ يَسْأَلَنِي عَنْ هَذَا الْحَدِيثِ أَحَدٌ أَوَّلُ مِنْكَ، لِمَا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الْحَدِيثِ، أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. خَالِصًا مِنْ قِبَلِ نَفْسِهِ "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6570. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் மக்களிலேயே தங்களின் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யார்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள். “அபூஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகள்மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் வேறு யாரும் நிச்சயமாகக் கேட்கமாட்டார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யாரெனில், உளப்பூர்வமாக தூய்மையான எண்ணத்துடன் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொன்னாரே அவர்தான்” என்று கூறினார்கள்.144

அத்தியாயம் : 81
6571. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي لأَعْلَمُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا، وَآخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولاً رَجُلٌ يَخْرُجُ مِنَ النَّارِ كَبْوًا، فَيَقُولُ اللَّهُ اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ. فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلأَى، فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلأَى، فَيَقُولُ اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ. فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلأَى. فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلأَى، فَيَقُولُ اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ، فَإِنَّ لَكَ مِثْلَ الدُّنْيَا وَعَشَرَةَ أَمْثَالِهَا. أَوْ إِنَّ لَكَ مِثْلَ عَشَرَةِ أَمْثَالِ الدُّنْيَا. فَيَقُولُ تَسْخَرُ مِنِّي، أَوْ تَضْحَكُ مِنِّي وَأَنْتَ الْمَلِكُ "". فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ، وَكَانَ يُقَالُ ذَلِكَ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً.
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6571. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ், “நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள்” என்பான்.

அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பிவந்து “என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்” என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் “நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள்” என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். ஆகவே, அவர் திரும்பிவந்து “என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்” என்று கூறுவார்.

அதற்கு அவன், “நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள். ஏனெனில், ‘உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு’ அல்லது ‘உலகத்தைப் போன்று பத்து மடங்கு’ (இடம் சொர்க்கத்தில்)உனக்கு உண்டு” என்று சொல்வான். அதற்கு அவர் ‘அரசனாகிய நீ என்னை ‘பரிகாசம் செய்கிறாயா?’ அல்லது ‘என்னைக் கண்டு நகைக்கின்றாயா?’ என்று கேட்பார்.

(இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடை வாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இவரே சொர்க்கவாசிகளில் குறைந்த தகுதி உடையவர் ஆவார் என்று கூறப்பட்டுவந்தது.

அத்தியாயம் : 81
6572. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ، عَنِ الْعَبَّاسِ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم هَلْ نَفَعْتَ أَبَا طَالِبٍ بِشَىْءٍ.
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6572. அப்பாஸ் (பின் அப்தில் முத்தலிப் - ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், “அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் நீங்கள் (பிரதி) உபகாரம் செய்தீர்களா?” என்று கேட்டேன்.145

அத்தியாயம் : 81
6573. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَعِيدٌ، وَعَطَاءُ بْنُ يَزِيدَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُمَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ أُنَاسٌ يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ "" هَلْ تُضَارُّونَ فِي الشَّمْسِ، لَيْسَ دُونَهَا سَحَابٌ "". قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" هَلْ تُضَارُّونَ فِي الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، لَيْسَ دُونَهُ سَحَابٌ "". قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَإِنَّكُمْ تَرَوْنَهُ يَوْمَ الْقِيَامَةِ كَذَلِكَ، يَجْمَعُ اللَّهُ النَّاسَ فَيَقُولُ مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْهُ، فَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الشَّمْسَ، وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الْقَمَرَ، وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الطَّوَاغِيتَ، وَتَبْقَى هَذِهِ الأُمَّةُ فِيهَا مُنَافِقُوهَا، فَيَأْتِيهِمُ اللَّهُ فِي غَيْرِ الصُّورَةِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ. فَيَقُولُونَ نَعُوذُ بِاللَّهِ مِنْكَ، هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا، فَإِذَا أَتَانَا رَبُّنَا عَرَفْنَاهُ فَيَأْتِيهِمُ اللَّهُ فِي الصُّورَةِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ. فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا، فَيَتْبَعُونَهُ وَيُضْرَبُ جِسْرُ جَهَنَّمَ "". قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَأَكُونُ أَوَّلَ مَنْ يُجِيزُ، وَدُعَاءُ الرُّسُلِ يَوْمَئِذٍ اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ، وَبِهِ كَلاَلِيبُ مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، أَمَا رَأَيْتُمْ شَوْكَ السَّعْدَانِ "". قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَإِنَّهَا مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، غَيْرَ أَنَّهَا لاَ يَعْلَمُ قَدْرَ عِظَمِهَا إِلاَّ اللَّهُ، فَتَخْطَفُ النَّاسَ بِأَعْمَالِهِمْ، مِنْهُمُ الْمُوبَقُ، بِعَمَلِهِ وَمِنْهُمُ الْمُخَرْدَلُ، ثُمَّ يَنْجُو، حَتَّى إِذَا فَرَغَ اللَّهُ مِنَ الْقَضَاءِ بَيْنَ عِبَادِهِ، وَأَرَادَ أَنْ يُخْرِجَ مِنَ النَّارِ مَنْ أَرَادَ أَنْ يُخْرِجَ، مِمَّنْ كَانَ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، أَمَرَ الْمَلاَئِكَةَ أَنْ يُخْرِجُوهُمْ، فَيَعْرِفُونَهُمْ بِعَلاَمَةِ آثَارِ السُّجُودِ، وَحَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ مِنِ ابْنِ آدَمَ أَثَرَ السُّجُودِ، فَيُخْرِجُونَهُمْ قَدِ امْتُحِشُوا، فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءٌ يُقَالُ لَهُ مَاءُ الْحَيَاةِ، فَيَنْبُتُونَ نَبَاتَ الْحِبَّةِ فِي حَمِيلِ السَّيْلِ، وَيَبْقَى رَجُلٌ مُقْبِلٌ بِوَجْهِهِ عَلَى النَّارِ فَيَقُولُ يَا رَبِّ قَدْ قَشَبَنِي رِيحُهَا وَأَحْرَقَنِي ذَكَاؤُهَا، فَاصْرِفْ وَجْهِي عَنِ النَّارِ فَلاَ يَزَالُ يَدْعُو اللَّهَ. فَيَقُولُ لَعَلَّكَ إِنْ أَعْطَيْتُكَ أَنْ تَسْأَلَنِي غَيْرَهُ. فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ. فَيَصْرِفُ وَجْهَهُ عَنِ النَّارِ، ثُمَّ يَقُولُ بَعْدَ ذَلِكَ يَا رَبِّ قَرِّبْنِي إِلَى باب الْجَنَّةِ. فَيَقُولُ أَلَيْسَ قَدْ زَعَمْتَ أَنْ لاَ تَسْأَلْنِي غَيْرَهُ، وَيْلَكَ ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ. فَلاَ يَزَالُ يَدْعُو. فَيَقُولُ لَعَلِّي إِنْ أَعْطَيْتُكَ ذَلِكَ تَسْأَلَنِي غَيْرَهُ. فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ. فَيُعْطِي اللَّهَ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ أَنْ لاَ يَسْأَلَهُ غَيْرَهُ، فَيُقَرِّبُهُ إِلَى باب الْجَنَّةِ، فَإِذَا رَأَى مَا فِيهَا سَكَتَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ، ثُمَّ يَقُولُ رَبِّ أَدْخِلْنِي الْجَنَّةَ. ثُمَّ يَقُولُ أَوَلَيْسَ قَدْ زَعَمْتَ أَنْ لاَ تَسْأَلَنِي غَيْرَهُ، وَيْلَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ فَيَقُولُ يَا رَبِّ لاَ تَجْعَلْنِي أَشْقَى خَلْقِكَ. فَلاَ يَزَالُ يَدْعُو حَتَّى يَضْحَكَ، فَإِذَا ضَحِكَ مِنْهُ أَذِنَ لَهُ بِالدُّخُولِ فِيهَا، فَإِذَا دَخَلَ فِيهَا قِيلَ تَمَنَّ مِنْ كَذَا. فَيَتَمَنَّى، ثُمَّ يُقَالُ لَهُ تَمَنَّ مِنْ كَذَا. فَيَتَمَنَّى حَتَّى تَنْقَطِعَ بِهِ الأَمَانِيُّ فَيَقُولُ لَهُ هَذَا لَكَ وَمِثْلُهُ مَعَهُ "". قَالَ أَبُو هُرَيْرَةَ وَذَلِكَ الرَّجُلُ آخِرُ أَهْلِ الْجَنَّةِ دُخُولاً.
பாடம்: 52 ‘அஸ்ஸிராத்’ என்பது நரகத்தின் பாலமாகும்.146
6573. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் சிலர் “அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அப்போது நபி அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழுநிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள் “(சிரமம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வாறுதான் மறுமை நாளில் உங்கள் இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மனிதர்களை (மறுமை மன்றத்தில்) ஒன்றுகூட்டி, “(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக் கொண்டிருந்தார்களோ அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்பான். ஆகவே, சூரியனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் (சூரியனைப்) பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் (அதைப்) பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்களை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் (அவற்றைப்) பின்பற்றிச் செல்வார்கள்.

இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களி டையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள். அப்போது இறைவன், அவர்கள் அறியாத தோற்றத்தில் அவர்களிடம் வந்து “நான்தான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள் “உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்” என்பர்.

அப்போது இறைவன் அவர்கள் அறிந்த தோற்றத்தில் அவர்களிடம் வந்து, “நானே உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள் “நீயே எங்கள் இறைவன்” என்று கூறிவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நானே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அப்போதைய நிலையில் இறைத்தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும் ‘அல்லாஹ்வே! காப்பாற்று காப்பாற்று’ என்பதாகவே இருக்கும். அந்தப் பாலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் முட்களைப் போன்றிருக்கும். “கருவேலமர முள்ளை நீங்கள் பார்த்ததில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள் “ஆம் (பார்த்திருக்கிறோம்) அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள்.

(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்று இருக்கும். ஆயினும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் (இறைமறுப்பு உள்ளிட்ட) தம் (தீய) செயல்களால் அழிந்துபோனவரும் இருப்பார்.

(இறைநம்பிக்கை இருந்தாலும் பாவம் செய்த காரணத்தால்) மூர்ச்சையாகிப் பிறகு பிழைத்துக்கொள்பவரும் இருப்பார். இறுதியாக இறைவன், தன் அடியார் களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதிகூறியவர்களில் தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான்.

அப்போது அவர்களை வெளியேற்று மாறு வானவர்களுக்கு ஆணையிடுவான். வானவர்கள் அவர்களை சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளங்களை வைத்து இனங்கண்டுகொள்வார்கள். (ஏனெனில்,) அல்லாஹ் நரகத்திற்கு, மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான். ஆகவே, வானவர்கள் அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள்.

அப்போது அவர்கள் (நரக நெருப்பில்) கரிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, அவர்கள்மீது ‘மாஉல் ஹயாத்’ எனப்படும் (ஜீவ) நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அவர்களில் தமது முகத்தால் நரகத்தை முன்னோக்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டும் எஞ்சுவார். அவர், “என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது. ஆகவே, நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவாயாக!” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார்.

அப்போது அல்லாஹ் “(உன் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?” என்று கேட்பான். அதற்கு அவர் “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்பார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான்.

அதற்குப் பிறகு “என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக!” என்பார் அவர். அதற்கு இறைவன், “வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!” என்பான். ஆனால், அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார். அப்போது இறைவன், “நீ கேட்டதை உனக்கு நான் கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடும்” என்பான்.

அதற்கு அவர், “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதுவல் லாத வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் இறைவனிடம் வழங்குவார்.

இதையடுத்து இறைவன் அவரை சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான். சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை மௌனமாக இருப்பார். பிறகு “இறைவா! என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!” என்று கூறுவார். பின்னர் இறைவன், “வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ சொல்லவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலைதான் என்ன!” என்று கேட்பான். அதற்கு “என் இறைவா! என்னை உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆக்கிவிடாதே!” என்று இறைவன் சிரிக்கும்வரை பிரார்த்தித்துக்கொண்டே இருப்பார். அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவருக்கு இறைவன் அனுமதி வழங்கிவிடுவான்.

சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்தபின், “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்” என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைப்படுவார். பிறகு (மீண்டும்) “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்” என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப்பெறும்வரை ஆசைப்பட்டு (தம் விருப்பங்களைத் தெரிவித்து)க்கொண்டே இருப்பார். அப்போது இறைவன், “இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்பான்.

அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இந்த மனிதர்தான் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார்.147

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 81
6574. قَالَ عَطَاءٌ وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ جَالِسٌ مَعَ أَبِي هُرَيْرَةَ، لاَ يُغَيِّرُ عَلَيْهِ شَيْئًا مِنْ حَدِيثِهِ حَتَّى انْتَهَى إِلَى قَوْلِهِ "" هَذَا لَكَ وَمِثْلُهُ مَعَهُ "". قَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" هَذَا لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ "". قَالَ أَبُو هُرَيْرَةَ حَفِظْتُ "" مِثْلُهُ مَعَهُ "".
பாடம்: 52 ‘அஸ்ஸிராத்’ என்பது நரகத்தின் பாலமாகும்.146
6574. அதாஉ பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மேற்கண்ட ஹதீஸை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அறிவித்தபோது, அவர்கள்) உடன் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அன்னார் இந்த ஹதீஸ் தொடர்பாக எந்த மாற்றத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், “இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று கூறியபோதுதான், அபூசயீத் (ரலி) அவர்கள் “இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் “இதைப் போன்று இன்னொரு மடங்கு” என்றே நான் மனனமிட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 81
6575. حَدَّثَنِي يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنَا فَرَطُكُمْ، عَلَى الْحَوْضِ "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6575. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 81
6576. وَحَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُغِيرَةِ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ""أَنَا فَرَطُكُمْ، عَلَى الْحَوْضِ، وَلَيُرْفَعَنَّ رِجَالٌ مِنْكُمْ ثُمَّ لَيُخْتَلَجُنَّ دُونِي فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِي. فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ"". تَابَعَهُ عَاصِمٌ عَنْ أَبِي وَائِلٍ. وَقَالَ حُصَيْنٌ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6576. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அப்போது “இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது” எனக் கூறப்படும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களும் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 81
6577. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَمَامَكُمْ حَوْضٌ كَمَا بَيْنَ جَرْبَاءَ وَأَذْرُحَ "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6577. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில் என்னுடைய ‘அல்கவ்ஸர்’ எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) ‘ஜர்பா’ மற்றும் ‘அத்ருஹ்’ ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும்.151

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6578. حَدَّثَنِي عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، وَعَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ قَالَ الْكَوْثَرُ الْخَيْرُ الْكَثِيرُ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ. قَالَ أَبُو بِشْرٍ قُلْتُ لِسَعِيدٍ إِنَّ أُنَاسًا يَزْعُمُونَ أَنَّهُ نَهَرٌ فِي الْجَنَّةِ. فَقَالَ سَعِيدٌ النَّهَرُ الَّذِي فِي الْجَنَّةِ مِنَ الْخَيْرِ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ.
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6578. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(108:1ஆவது வசனத்திலுள்ள) ‘அல்கவ்ஸர்’ தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், “அது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அனைத்து நன்மைகளையும் குறிக்கும்” என்று தெரிவித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (அவற்றில் ஒன்றின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூபிஷ்ர் ஜஅஃபர் பின் அபீவஹ்ஷிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், “சிலர் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள ஒரு நதியாகும் என்று கூறுகின்றனரே!” என்று கேட்டேன். அதற்கு சயீத் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத் திலுள்ள அந்த நதியும் அடங்கும்” என்று சொன்னார்கள்.152

அத்தியாயம் : 81
6579. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ، مَاؤُهُ أَبْيَضُ مِنَ اللَّبَنِ، وَرِيحُهُ أَطْيَبُ مِنَ الْمِسْكِ، وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ، مَنْ شَرِبَ مِنْهَا فَلاَ يَظْمَأُ أَبَدًا "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6579. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒருமாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்.153

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6580. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ (إِنَّ قَدْرَ حَوْضِي كَمَا بَيْنَ أَيْلَةَ وَصَنْعَاءَ مِنَ الْيَمَنِ، وَإِنَّ فِيهِ مِنَ الأَبَارِيقِ كَعَدَدِ نُجُومِ السَّمَاءِ).
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6580. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள ‘ஸன்ஆ’ நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) ‘அய்லா’ நகரத்திற்கும் இடையேயான (தொலைதூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிலடங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6581. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَمَا أَنَا أَسِيرُ فِي الْجَنَّةِ إِذَا أَنَا بِنَهَرٍ حَافَتَاهُ قِبَابُ الدُّرِّ الْمُجَوَّفِ قُلْتُ مَا هَذَا يَا جِبْرِيلُ قَالَ هَذَا الْكَوْثَرُ الَّذِي أَعْطَاكَ رَبُّكَ. فَإِذَا طِينُهُ ـ أَوْ طِيبُهُ ـ مِسْكٌ أَذْفَرُ "". شَكَّ هُدْبَةُ.
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6581. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், “(வானவர்) ஜிப்ரீலே! இது என்ன?” என்று கேட்டேன். அவர் “இதுதான் உங்கள் இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸர்” என்றார். ‘அதன் மண்’ அல்லது ‘அதன் வாசனை’ நறுமணமிக்க கஸ்தூரியாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.154

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘வாசனை’யா (தீப்)? ‘மண்ணா’ (தீன்)? என்பதில் அறிவிப்பாளர் ஹுத்பா பின் காலித் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6582. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيَرِدَنَّ عَلَىَّ نَاسٌ مِنْ أَصْحَابِي الْحَوْضَ، حَتَّى عَرَفْتُهُمُ اخْتُلِجُوا دُونِي، فَأَقُولُ أَصْحَابِي. فَيَقُولُ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6582. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளும்போது என்னைவிட்டு அவர்கள் விலக்கிவைக்கப் படுவார்கள். அப்போது நான், “(இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அதற்கு இறைவன், “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீர் அறியமாட்டீர்” என்பான்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6583. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ، مَنْ مَرَّ عَلَىَّ شَرِبَ، وَمَنْ شَرِبَ لَمْ يَظْمَأْ أَبَدًا، لَيَرِدَنَّ عَلَىَّ أَقْوَامٌ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونِي، ثُمَّ يُحَالُ بَيْنِي وَبَيْنَهُمْ "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6583. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு முன்பே ‘அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வரமுடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள் வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6584. قَالَ أَبُو حَازِمٍ فَسَمِعَنِي النُّعْمَانُ بْنُ أَبِي عَيَّاشٍ، فَقَالَ هَكَذَا سَمِعْتَ مِنْ، سَهْلٍ فَقُلْتُ نَعَمْ. فَقَالَ أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ لَسَمِعْتُهُ وَهْوَ يَزِيدُ فِيهَا "" فَأَقُولُ إِنَّهُمْ مِنِّي. فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ. فَأَقُولُ سُحْقًا سُحْقًا لِمَنْ غَيَّرَ بَعْدِي "". وَقَالَ ابْنُ عَبَّاسٍ سُحْقًا بُعْدًا، يُقَالُ سَحِيقٌ بَعِيدٌ، وَأَسْحَقَهُ أَبْعَدَهُ.
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6584. (அறிவிப்பாளர்) அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியுற்றுக் கொண்டிருந்த நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் “இவ்வாறுதான் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் இதைவிட அதிகமாக அறிவிப்பதை உறுதியாக நான் கேட்டுள்ளேன்:

“(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்” என்று நான் கூறுவேன். அதற்கு “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று சொல்லப்படும். உடனே நான் “எனக்குப் பின்னால் (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!” என்று (இரண்டு முறை) கூறுவேன்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘சுஹ்கன்’ (அப்புறப்படுத்துவது) என்பதற்கு தொலைவு, தூரம் என்று பொருள்.

அத்தியாயம் : 81
6585. وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ الْحَبَطِيُّ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَرِدُ عَلَىَّ يَوْمَ الْقِيَامَةِ رَهْطٌ مِنْ أَصْحَابِي فَيُحَلَّئُونَ عَنِ الْحَوْضِ فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِي. فَيَقُولُ إِنَّكَ لاَ عِلْمَ لَكَ بِمَا أَحْدَثُوا بَعْدَكَ، إِنَّهُمُ ارْتَدُّوا عَلَى أَدْبَارِهِمُ الْقَهْقَرَى "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6585. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான், “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உமக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று சொல்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6586. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ عَنْ أَصْحَابِ النَّبِيِّ، صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" يَرِدُ عَلَى الْحَوْضِ رِجَالٌ مِنْ أَصْحَابِي فَيُحَلَّئُونَ عَنْهُ فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِي. فَيَقُولُ إِنَّكَ لاَ عِلْمَ لَكَ بِمَا أَحْدَثُوا بَعْدَكَ، إِنَّهُمُ ارْتَدُّوا عَلَى أَدْبَارِهِمُ الْقَهْقَرَى "". وَقَالَ شُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ كَانَ أَبُو هُرَيْرَةَ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيُجْلَوْنَ. وَقَالَ عُقَيْلٌ فَيُحَلَّئُونَ. وَقَالَ الزُّبَيْدِيُّ عَنِ الزُّهْرِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6586. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் (‘அல்கவ்ஸர்’) தடாகத் திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உமக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று சொல்வான்.

இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் ஷுஐப் பின் அபீ ஹம்ஸா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர்கள் (அல்கவ்ஸர் தடாகத்திலிருந்து) ஒதுக்கப்படுவார்கள்” என்றும், அறிவிப்பாளர் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘விரட்டப்படுவார்கள்’ என்றும் இடம் பெற்றுள்ளது.

இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 81
6587. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنِي هِلاَلٌ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَا أَنَا قَائِمٌ إِذَا زُمْرَةٌ، حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ فَقَالَ هَلُمَّ. فَقُلْتُ أَيْنَ قَالَ إِلَى النَّارِ وَاللَّهِ. قُلْتُ وَمَا شَأْنُهُمْ قَالَ إِنَّهُمُ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمُ الْقَهْقَرَى. ثُمَّ إِذَا زُمْرَةٌ حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ فَقَالَ هَلُمَّ. قُلْتُ أَيْنَ قَالَ إِلَى النَّارِ وَاللَّهِ. قُلْتُ مَا شَأْنُهُمْ قَالَ إِنَّهُمُ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمُ الْقَهْقَرَى. فَلاَ أُرَاهُ يَخْلُصُ مِنْهُمْ إِلاَّ مِثْلُ هَمَلِ النَّعَمِ "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6587. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தின் அருகில்) நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி) ‘வாருங்கள்’ என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம்) “எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?” என்றேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு” என்றார். நான் “இவர்கள் என்ன செய்தார்கள்?” என்றேன். அவர் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்றார்.

பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி, ‘வாருங்கள்’ என (அவர்களிடம்) கூறுகிறார். நான் “(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?” என்றேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்” என்றார். நான் “இவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டேன்.

அவர், “இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல்போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக்கொள்வார்கள் என நான் கருதவில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81