641. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَاءَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَوْمَ الْخَنْدَقِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، وَذَلِكَ بَعْدَ مَا أَفْطَرَ الصَّائِمُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَاللَّهِ مَا صَلَّيْتُهَا "" فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى بُطْحَانَ وَأَنَا مَعَهُ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى ـ يَعْنِي الْعَصْرَ ـ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ.
பாடம் : 26
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் ‘நாம் தொழவில்லை’ என்று சொன்னது
641. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! சூரியன் மறையும் நேரம் நெருங்கும்வரை என்னால் (அஸ்ர் தொழுகையைத்) தொழ முடியா மற் போய்விட்டது” என்று கூறினார்கள். அ(வ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறிய)து, நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்திற்குப் பிறகேயாகும்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதைத் தொழ (முடிய)வில்லை” என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கி னார்கள். அப்போது நானும் அவர்களுடன் இருந்தேன். (அங்கு) அங்கத் தூய்மை (உளூ) செய்து சூரியன் மறைந்தபின் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதார்கள்.14
அத்தியாயம் : 10

642. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُنَاجِي رَجُلاً فِي جَانِبِ الْمَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ الْقَوْمُ.
பாடம் : 27
‘இகாமத்’ சொன்னபின் இமா முக்கு ஏதேனும் தேவை ஏற் படுவது
642. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் இஷா) தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டது. (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் ஒரு பகுதியில் ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். (எவ்வளவு நேரம் அவர்கள் தொழுகையைத் தாமதப்படுத்தினார்களெனில்) மக்கள் உறங்கிவிடும்வரை அவர்கள் தொழுகைக்கு (வந்து) நிற்கவில்லை.

643. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ سَأَلْتُ ثَابِتًا الْبُنَانِيَّ عَنِ الرَّجُلِ، يَتَكَلَّمُ بَعْدَ مَا تُقَامُ الصَّلاَةُ فَحَدَّثَنِي عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ فَعَرَضَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ فَحَبَسَهُ بَعْدَ مَا أُقِيمَتِ الصَّلاَةُ.
பாடம் : 28
தொழுகைக்கு ‘இகாமத்’ சொன்னபின் பேசுவது
643. ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களிடம், தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டபின் பேசிக்கொண்டிருப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:
தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டபின் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களை (தொழுவிக்க விடாமல்) இடைமறித்(துப் பேசிக்கொண்டிருந்)தார். தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டுவிட்ட பின்னர் (இது நடந்தது).

644. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْطَبَ، ثُمَّ آمُرَ بِالصَّلاَةِ فَيُؤَذَّنَ لَهَا، ثُمَّ آمُرَ رَجُلاً فَيَؤُمَّ النَّاسَ، ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ "".
பாடம் : 29
கூட்டுத் தொழுகை (ஜமாஅத்தாகத் தொழுவது) கடமை யாகும்.15
ஒரு தாய் (தன் மகன்மீதுள்ள) பாசத் தின் காரணமாக இஷா தொழுகையின் ஜமாஅத்திற்குச் செல்ல வேண்டாமென அவனைத் தடுத்தால், அதற்கு மகன் கட்டுப்படலாகாது என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
644. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் விறகுக் கட்டைகளைக் கொண்டுவருமாறு ஆணை பிறப்பித்துவிட்டு, பின்னர் தொழுகை அறிவிப்புச் செய்யுமாறு பணித்துவிட்டு, பின்னர் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுவிக்குமாறு சொல்லிவிட்டு, பின்னர் (கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத) சில மனிதர்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்து விட வேண்டும் என்று எண்ணியதுண்டு.
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரு கால் குளம்புகளோ கிடைக்கும் என்று தெரிந்தால்கூட அவர் இஷா தொழுகையில் கட்டாயம் கலந்துகொள்வார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

645. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" صَلاَةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً "".
பாடம் : 30
கூட்டுத் தொழுகையின் சிறப்பு
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் (தமது பள்ளிவாச-ல்) கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) தவறிவிடும்போது, வேறொரு பள்ளிவாசலுக்கு (கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ள) சென்றுவிடுவார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் ஒரு பள்ளி வாசலுக்கு வந்தார்கள். அங்கு தொழுகை (நடந்து) முடிந்துவிட்டிருந்தது. ஆகவே, பாங்கும் இகாமத்தும் சொல்- (தம்முடன் வந்த நண்பர்களின்) ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
645. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாக (ஜமாஅத்தாக)த் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

646. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" صَلاَةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الْفَذِّ بِخَمْسٍ وَعِشْرِينَ دَرَجَةً "".
பாடம் : 30
கூட்டுத் தொழுகையின் சிறப்பு
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் (தமது பள்ளிவாச-ல்) கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) தவறிவிடும்போது, வேறொரு பள்ளிவாசலுக்கு (கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ள) சென்றுவிடுவார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் ஒரு பள்ளி வாசலுக்கு வந்தார்கள். அங்கு தொழுகை (நடந்து) முடிந்துவிட்டிருந்தது. ஆகவே, பாங்கும் இகாமத்தும் சொல்- (தம்முடன் வந்த நண்பர்களின்) ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
646. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாக (ஜமாஅத்தாக)த் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

647. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" صَلاَةُ الرَّجُلِ فِي الْجَمَاعَةِ تُضَعَّفُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ وَفِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ ضِعْفًا، وَذَلِكَ أَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لاَ يُخْرِجُهُ إِلاَّ الصَّلاَةُ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، فَإِذَا صَلَّى لَمْ تَزَلِ الْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَيْهِ مَا دَامَ فِي مُصَلاَّهُ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ ارْحَمْهُ. وَلاَ يَزَالُ أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا انْتَظَرَ الصَّلاَةَ "".
பாடம் : 30
கூட்டுத் தொழுகையின் சிறப்பு
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் (தமது பள்ளிவாச-ல்) கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) தவறிவிடும்போது, வேறொரு பள்ளிவாசலுக்கு (கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ள) சென்றுவிடுவார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் ஒரு பள்ளி வாசலுக்கு வந்தார்கள். அங்கு தொழுகை (நடந்து) முடிந்துவிட்டிருந்தது. ஆகவே, பாங்கும் இகாமத்தும் சொல்- (தம்முடன் வந்த நண்பர்களின்) ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
647. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வீட்டில் அல்லது கடைத் தெருவில் தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅத்தாக)த் தொழுவது இருபத்து ஐந்து மடங்கு (சிறப்பு) கூடுதலாக்கப்படுகிறது. அதற்குக் காரணம், ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அந்த அங்கத் தூய்மையைச் செம்மையாகச் செய்து, பின்னர் தொழுவதற்காகவே புறப்பட்டு பள்ளிவாசலை நோக்கிச் செல்வாரானால், அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்காகவும் அவருக்கு ஒரு பதவி உயர்த்தப்படுகிறது; பாவம் ஒன்று அவரை விட்டு அழிக்கப்படுகிறது.
அவர் தொழுதால், வானவர்கள் அவருக்காக, அவர் தாம் தொழுத இடத் தில் இருக்கும்வரை (அருள் வேண்டி) பிரார்த்தித்துக்கொண்டேயிருக்கின்றனர்:
“இறைவா! இவருக்கு அருள் புரிவாயாக! இறைவா! இவர்மீது கருணை காட்டுவாயாக” என்று கூறுவார்கள்.
உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் வரை தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுகிறார்.

648. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" تَفْضُلُ صَلاَةُ الْجَمِيعِ صَلاَةَ أَحَدِكُمْ وَحْدَهُ بِخَمْسٍ وَعِشْرِينَ جُزْءًا، وَتَجْتَمِعُ مَلاَئِكَةُ اللَّيْلِ وَمَلاَئِكَةُ النَّهَارِ فِي صَلاَةِ الْفَجْرِ "". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا}
பாடம் : 31
ஃபஜ்ர் தொழுகையை (ஜமா அத்துடன்) கூட்டாகத் தொழு வதன் சிறப்பு
648. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தனியாகத் தொழு வதைவிட (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஃபஜ்ர் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் ஒன்றுசேர்கிறார்கள்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் ‘அதிகாலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக்கூடியதாகும்’ (17:78) எனும் இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

649. قَالَ شُعَيْبٌ وَحَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ تَفْضُلُهَا بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً.
பாடம் : 31
ஃபஜ்ர் தொழுகையை (ஜமா அத்துடன்) கூட்டாகத் தொழு வதன் சிறப்பு
649. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அ(வ்வாறு தனியாகத் தொழுவ)தை விட (கூட்டாகத் தொழுவது,) இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும் (என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்).

650. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ سَالِمًا، قَالَ سَمِعْتُ أُمَّ الدَّرْدَاءِ، تَقُولُ دَخَلَ عَلَىَّ أَبُو الدَّرْدَاءِ وَهْوَ مُغْضَبٌ فَقُلْتُ مَا أَغْضَبَكَ فَقَالَ وَاللَّهِ مَا أَعْرِفُ مِنْ أُمَّةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم شَيْئًا إِلاَّ أَنَّهُمْ يُصَلُّونَ جَمِيعًا.
பாடம் : 31
ஃபஜ்ர் தொழுகையை (ஜமா அத்துடன்) கூட்டாகத் தொழு வதன் சிறப்பு
650. உம்முத் தர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபுத்தர்தா (ரலி) அவர்கள் என்னிடம் கோபமாக வந்தார்கள். அப்போது நான், “உங்களது கோபத்திற்குக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தார் (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுகிறார்கள் என்பதைத் தவிர, வேறு எதையுமே அவர்களிடம் (முன்புபோல்) என்னால் காண முடியவில்லை” என்று கூறினார்கள்

651. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَعْظَمُ النَّاسِ أَجْرًا فِي الصَّلاَةِ أَبْعَدُهُمْ فَأَبْعَدُهُمْ مَمْشًى، وَالَّذِي يَنْتَظِرُ الصَّلاَةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الإِمَامِ أَعْظَمُ أَجْرًا مِنَ الَّذِي يُصَلِّي ثُمَّ يَنَامُ "".
பாடம் : 31
ஃபஜ்ர் தொழுகையை (ஜமா அத்துடன்) கூட்டாகத் தொழு வதன் சிறப்பு
651. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), வெகு தொலைவி-ருந்து (பள்ளிவாசலை நோக்கி) நடந்து வருபவர் ஆவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்தி-ருந்து வருபவர் ஆவார். யார் இமாமுடன் (ஜமாஅத்தாகத்) தொழுவதற்காகக் காத்திருக்கிறாரோ அவர், (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கிவிடுபவரைவிட அதிக நற்பலன் அடைபவர் ஆவார்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

652. حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ ".
பாடம் : 32
லுஹ்ர் (உள்ளிட்ட) தொழுகையை ஆரம்ப நேரத்திலேயே நிறை வேற்றுதன் சிறப்பு
652. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் முட்கிளை ஒன்றைக் கண்டு, அதை அப்புறப்படுத்தினார். (அவரது இந்த நற்செயலை) அல்லாஹ் நன்றியுடன் ஏற்று, (அவர் செய்த பாவங்களிலிருந்து) அவருக்கு மன்னிப்பு வழங்கினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

653. ثُمَّ قَالَ " الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ، وَالْمَبْطُونُ، وَالْغَرِيقُ، وَصَاحِبُ الْهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ ". وَقَالَ " لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ يَسْتَهِمُوا لاَسْتَهَمُوا عَلَيْهِ ". "
பாடம் : 32
லுஹ்ர் (உள்ளிட்ட) தொழுகையை ஆரம்ப நேரத்திலேயே நிறை வேற்றுதன் சிறப்பு
653. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிர்த் தியாகிகள் ஐவர் ஆவர்:
1. கொள்ளை நோயால் இறந்தவர்
2. வயிற்றுப்போக்கால் இறந்தவர்
3. வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்
4. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்
5. அல்லாஹ்வின் பாதையில் (அறப் போரில்) உயிர்த் தியாகம் செய்தவர்.
தொழுகை அறிவிப்புச் செய்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் அணியி(ல் நிற்பதி)லும் உள்ள (நன்மை)தனை மக்கள் அறிந்தால், அ(தை அடைந்துகொள்வ) தற்குச் சீட்டுக் குலுக்கிப்போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகுமானால், நிச்சயம் சீட்டுக்குலுக்கிப்போடுவார்கள்.

654. وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا ".
பாடம் : 32
லுஹ்ர் (உள்ளிட்ட) தொழுகையை ஆரம்ப நேரத்திலேயே நிறை வேற்றுதன் சிறப்பு
654. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகைக்கு அதன்) ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள (நன்மை) தனை மக்கள் அறிந்தால், அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷா தொழுகையிலும் சுப்ஹு தொழுகையிலும் உள்ள (நன்மை)தனை அவர்கள் அறிந்தால், அவற்றுக்காக (தரையில்) தவழ்ந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
654. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகைக்கு அதன்) ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள (நன்மை) தனை மக்கள் அறிந்தால், அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷா தொழுகையிலும் சுப்ஹு தொழுகையிலும் உள்ள (நன்மை)தனை அவர்கள் அறிந்தால், அவற்றுக்காக (தரையில்) தவழ்ந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
655. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا بَنِي سَلِمَةَ أَلاَ تَحْتَسِبُونَ آثَارَكُمْ ". وَقَالَ مُجَاهِدٌ فِي قَوْلِهِ {وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ} قَالَ خُطَاهُمْ.
பாடம் : 33
(தொழுகைக்காக எடுத்து வைக்கும்) எட்டுகளுக்கு நன் மையை எதிர்பார்த்தல்
655. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பனூ ச-மா குலத்தார் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேறத் திட்டமிட்டபோது) நபி (ஸல்) அவர்கள், “பனூ ச-மா குலத்தாரே! உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன் மையை எதிர்பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“முன்பு அவர்கள் செய்ததையும் அவர் களின் அடிச்சுவடுகளையும் (‘ஆஸா ரஹும்’) நாம் பதிவு செய்வோம்” (36:12) எனும் வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஆஸாரஹும்’ என்பதற்கு ‘அவர்களின் கால் எட்டுகள்’ என்பது பொருளாகும்.

656. وَقَالَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي حُمَيْدٌ، حَدَّثَنِي أَنَسٌ، أَنَّ بَنِي سَلِمَةَ، أَرَادُوا أَنْ يَتَحَوَّلُوا، عَنْ مَنَازِلِهِمْ، فَيَنْزِلُوا قَرِيبًا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُعْرُوا {الْمَدِينَةَ} فَقَالَ " أَلاَ تَحْتَسِبُونَ آثَارَكُمْ ". قَالَ مُجَاهِدٌ خُطَاهُمْ آثَارُهُمْ أَنْ يُمْشَى فِي الأَرْضِ بِأَرْجُلِهِمْ.
பாடம் : 33
(தொழுகைக்காக எடுத்து வைக்கும்) எட்டுகளுக்கு நன் மையை எதிர்பார்த்தல்
656. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ச-மா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குத் தொலைவி-ருந்த) தம் குடியிருப்புகளை இடம் மாற்றி, நபி (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். மதீனா(வின் இதர பகுதிகள்) கா-யாவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, “(பனூ ச-மா குலத்தாரே!) உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர்பார்க்கமாட்டீர்களா” என்று கேட்டார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(36:12 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அடிச்சுவடுகள்’ என்பது, அவர்கள் காலால் நடந்துவருவதால் ஏற்படும் காலடிச்சுவடுகளைக் குறிக்கும்.

657. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيْسَ صَلاَةٌ أَثْقَلَ عَلَى الْمُنَافِقِينَ مِنَ الْفَجْرِ وَالْعِشَاءِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا، لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ الْمُؤَذِّنَ فَيُقِيمَ، ثُمَّ آمُرَ رَجُلاً يَؤُمُّ النَّاسَ، ثُمَّ آخُذَ شُعَلاً مِنْ نَارٍ فَأُحَرِّقَ عَلَى مَنْ لاَ يَخْرُجُ إِلَى الصَّلاَةِ بَعْدُ "".
பாடம் : 34
இஷா தொழுகையைக் கூட் டாக (ஜமாஅத்துடன்) தொழு வதன் சிறப்பு
657. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகை களைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலும் உள்ள (நன்மை)தனை அவர்கள் அறிவார் களானால், (தரையில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள்.
தொழுகை அறிவிப்பாளரிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லுமாறு நான் கட்டளையிட்டுவிட்டுப் பின்னர் ஒருவரி டம் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்குமாறு பணித்துவிட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, தொழு கைக்கு இதுவரை புறப்பட்டுவராம-ருப்ப வரை (நோக்கிச் சென்று, அவரை) எரித்துவிட நான் எண்ணியதுண்டு.

658. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَأَذِّنَا وَأَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا "".
பாடம் : 35
இருவரும் அதற்கு மேற்பட்டோரும் ‘ஜமாஅத்’ ஆவர்.16
658. மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணம் புறப்படவிருந்த இருவரிடம்) நபி (ஸல்) அவர்கள், “தொழுகை நேரம் வந்துவிட்டால் தொழுகை அறிவிப்புச் செய்யுங்கள்; இகாமத் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று சொன்னார்கள்.

659. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ مَا لَمْ يُحْدِثْ اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ. لاَ يَزَالُ أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا دَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ، لاَ يَمْنَعُهُ أَنْ يَنْقَلِبَ إِلَى أَهْلِهِ إِلاَّ الصَّلاَةُ "".
பாடம் : 36
தொழுகையை எதிர்பார்த்துப் பள்ளிவாச-ல் அமர்ந்திருப்பதும் பள்ளிவாசல்களின் சிறப்பும்
659. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தாம் தொழும் இடத்தில் (கூட்டுத் தொழுகையை எதிர் பார்த்து) சிறுதுடக்கு ஏற்படாமல் காத்திருக் கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள். “இறைவா! இவருக்கு மன்னிப்பு வழங்கு வாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று (அவர்கள் கூறு கின்றனர்).
தொழுகையானது, ஒருவரைத் தம் குடும்பத்தாரிடம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால், அவ்வாறு அவரைத் தொழுகை நிறுத்தியிருக்கும் வரை அவர் தொழுகையில் இருப்ப தாகவே கருதப்படுவார்.

660. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ. وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ "".
பாடம் : 36
தொழுகையை எதிர்பார்த்துப் பள்ளிவாச-ல் அமர்ந்திருப்பதும் பள்ளிவாசல்களின் சிறப்பும்
660. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்:
1. நீதி மிக்க ஆட்சியாளர்.
2. இறை வழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞர்.
3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதய முடையவர்.
4. அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக் காகவே பிரிந்த இருவர்.
5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை (தவறு செய்ய) அழைத்த போதும், “நான் அல்லாஹ்வை அஞ்சுகி றேன்” என்று கூறியவர்.
6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்.
7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர்.