6352. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنِ الْجَعْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ. فَمَسَحَ رَأْسِي، وَدَعَا لِي بِالْبَرَكَةِ، ثُمَّ تَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ، فَنَظَرْتُ إِلَى خَاتَمِهِ بَيْنَ كَتِفَيْهِ مِثْلَ زِرِّ الْحَجَلَةِ.
பாடம்: 31
சிறுவர்களுக்காக வளம் வேண்டிப் பிரார்த்திப்பதும் அவர்களின் தலையை (அன்புடன்) தடவிக் கொடுப்பதும்
அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்காக வளம் வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.39
6352. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது” என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக்கொடுத்து என் வளத்திற்காகப் பிரார்த்தித்தார்கள்.
பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பருகினேன். பிறகு நான் அவர்களது முதுகுக்குப் பின்னே நின்றுகொண்டு அவர்களுடைய இரு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.40
அத்தியாயம் : 80

6353. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي عَقِيلٍ، أَنَّهُ كَانَ يَخْرُجُ بِهِ جَدُّهُ عَبْدُ اللَّهِ بْنُ هِشَامٍ مِنَ السُّوقِ أَوْ إِلَى السُّوقِ فَيَشْتَرِي الطَّعَامَ، فَيَلْقَاهُ ابْنُ الزُّبَيْرِ وَابْنُ عُمَرَ فَيَقُولاَنِ أَشْرِكْنَا فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ دَعَا لَكَ بِالْبَرَكَةِ. فَرُبَّمَا أَصَابَ الرَّاحِلَةَ كَمَا هِيَ، فَيَبْعَثُ بِهَا إِلَى الْمَنْزِلِ.
பாடம்: 31
சிறுவர்களுக்காக வளம் வேண்டிப் பிரார்த்திப்பதும் அவர்களின் தலையை (அன்புடன்) தடவிக் கொடுப்பதும்
அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்காக வளம் வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.39
6353. அபூஅக்கீல் ஸுஹ்ரா பின் மஅபத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் பாட்டனார் அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் ‘சந்தையிலிருந்து’ அல்லது ‘சந்தைக்கு’ என்னை அழைத்துச் சென்று உணவுப் பொருள் வாங்குவார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் அன்னாரைச் சந்தித்து, “எங்களையும் (உணவு வியாபாரத்தில்) கூட்டுச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் உங்களுக்காக வளம் வேண்டிப் பிரார்த்தித்துள்ளார்கள்” எனக் கேட்டுக்கொள்வார்கள்.
அவ்வாறே என் பாட்டனாரும் அவர்களையும் கூட்டுச் சேர்த்துக்கொள்வார்கள். சில வேளைகளில் ஒரு முழு ஒட்டகம் (சுமக்கும் அளவுக்கு உணவுப் பொருட்கள்) அப்படியே அவர்களுக்கு (இலாபமாக)க் கிடைக்கும். அதை (தமது) வீட்டிற்கு அனுப்பிவைப்பார்கள்.41

6354. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ، وَهُوَ الَّذِي مَجَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي وَجْهِهِ وَهْوَ غُلاَمٌ مِنْ بِئْرِهِمْ.
பாடம்: 31
சிறுவர்களுக்காக வளம் வேண்டிப் பிரார்த்திப்பதும் அவர்களின் தலையை (அன்புடன்) தடவிக் கொடுப்பதும்
அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்காக வளம் வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.39
6354. மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நான்கு அல்லது ஐந்து வயது) சிறுவனாக இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தமது வாயில் வைத்து) என் முகத்தில் (வளத்திற்காக) உமிழ்ந்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.42

6355. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُؤْتَى بِالصِّبْيَانِ فَيَدْعُو لَهُمْ، فَأُتِيَ بِصَبِيٍّ فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ، وَلَمْ يَغْسِلْهُ.
பாடம்: 31
சிறுவர்களுக்காக வளம் வேண்டிப் பிரார்த்திப்பதும் அவர்களின் தலையை (அன்புடன்) தடவிக் கொடுப்பதும்
அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்காக வளம் வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.39
6355. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுவது உண்டு. அப்போது குழந்தைகளுக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் தெளித்தார்கள். (அதிகமாகத் தண்ணீர் ஊற்றி) அதைக் கழுவவில்லை.43

6356. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهُ بْنُ ثَعْلَبَةَ بْنِ صُعَيْرٍ ـ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ مَسَحَ عَنْهُ ـ أَنَّهُ رَأَى سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يُوتِرُ بِرَكْعَةٍ.
பாடம்: 31
சிறுவர்களுக்காக வளம் வேண்டிப் பிரார்த்திப்பதும் அவர்களின் தலையை (அன்புடன்) தடவிக் கொடுப்பதும்
அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்காக வளம் வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.39
6356. முஹம்மத் பின் முஸ்லிம் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் ஸஅலபா பின் ஸுஐர் (ரலி) அவர்கள் (சிறுவராக இருந்த போது மக்கா வெற்றி ஆண்டில் அவர்கள்) உடைய கண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்போடு) தடவிக்கொடுத்தார்கள். அன்னார், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஒரு ரக்அத் ‘வித்ர்’ தொழுததைத் தாம் பார்த்ததாகக் கூறினார்கள்.44

6357. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الْحَكَمُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، قَالَ لَقِيَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ فَقَالَ أَلاَ أُهْدِي لَكَ هَدِيَّةً، إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ عَلَيْنَا فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ قَدْ عَلِمْنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ قَالَ "" فَقُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ "".
பாடம்: 32
நபி (ஸல்) அவர்களுக்காக (‘ஸலவாத்’ ஓதி)ப் பிரார்த்திப்பது
6357. அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, “உங்களுக்கு ஓர் அன்பளிப்பை வழங்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு (பின்வருமாறு) கூறி னார்கள்:
(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே வந்தபோது நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு எவ்வாறு நாங்கள் ‘சலாம்’ (முகமன்) உரைக்க வேண்டும் என்பதை அறிந்துள்ளோம். ஆனால், தங்கள்மீது நாங்கள் எவ்வாறு ‘ஸலவாத்’ கூறவேண்டும்?” என்று கேட்டோம்.
நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்” என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள்தம் குடும்பத்தாருக்கும் கருணை புரிந்திடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியமிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ வளத்தை வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள்தம் குடும்பத்தாருக்கும் வளம் வழங்கிடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியமிக்கவனும் ஆவாய்.)45

6358. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَذَا السَّلاَمُ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي قَالَ "" قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ "".
பாடம்: 32
நபி (ஸல்) அவர்களுக்காக (‘ஸலவாத்’ ஓதி)ப் பிரார்த்திப்பது
6358. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது தங்களின் மீது சலாம் கூறும் முறையாகும். (தொழுகையில் ஓதப்படும் ‘அத்தஹிய்யாத்’ மூலம் இதை நாங்கள் அறிவோம்.) ஆனால், நாங்கள் (தங்களுக்கு) ‘ஸலவாத்’ சொல்வது எப்படி?” என்று கேட்டோம்.
நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக்க வ ரசூலிக்க கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ ஆலி இப்ராஹீம” என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள்மீது அருள் புரிந்ததைப் போன்று உன் அடியாரும் உன் தூதருமான முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் அருள் புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ வளம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ வளம் வழங்கிடுவாயாக!)46

6359. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ كَانَ إِذَا أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم بِصَدَقَتِهِ قَالَ "" اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ"" فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ فَقَالَ "" اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى""
பாடம்: 33
நபி (ஸல்) அவர்கள் அல்லாத மற்றவர்களுக்காக ‘ஸலவாத்’ கூறலாமா?
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) அவர்களுக்காக ‘ஸலவாத்’ கூறுவீராக! (பிரார்த்தனை செய்வீராக!) நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி அளிக்கும். (9:103)
6359. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யாரேனும் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஸகாத் பொருளைக் கொண்டுவந்தால் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலைஹி (இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக)” என்று பிரார்த்திப்பது வழக்கம். (அவ்வாறு) என் தந்தை அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தமது ஸகாத் பொருளைக் கொண்டுவந்த போது, “அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலி அபீஅவ்ஃபா (இறைவா! அபூஅவ்ஃபாவின் குடும்பத் தாருக்குக் கருணை புரிவாயாக)” என்று பிரார்த்தித்தார்கள்.47

6360. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ، أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ قَالَ "" قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ "".
பாடம்: 33
நபி (ஸல்) அவர்கள் அல்லாத மற்றவர்களுக்காக ‘ஸலவாத்’ கூறலாமா?
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) அவர்களுக்காக ‘ஸலவாத்’ கூறுவீராக! (பிரார்த்தனை செய்வீராக!) நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி அளிக்கும். (9:103)
6360. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள்மீது நாங்கள் எப்படி ‘ஸலவாத்’ சொல்ல வேண்டும்?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “ அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரிய்யத்திஹி கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரிய்யத்திஹி கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்” என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் குடும்பத்தாருக்கு நீ அருள் புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய துணைவியருக்கும் அவர்களுடைய சந்ததியினருக்கும் அருள் புரிந்திடுவாயாக! மேலும், இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ வளம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் அவர்களுடைய சந்ததியினருக்கும் நீ வளம் வழங்கிடுவாயாக! நிச்சயமாக நீயே புகழ் மிக்கோனும் கண்ணியமிக்கோனும் ஆவாய்.)48

6361. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" اللَّهُمَّ فَأَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهُ فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம்: 34
“(இறைவா) என்னால் எவரேனும் மனவேதனை அடைந்திருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிடுவாயாக” என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது
6361. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்துகொண்டு) ஏசியிருந்தால், அதையே மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றிடுவாயாக!” என்று கூறியதை நான் செவியுற்றேன்.
இதை சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6362. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَحْفَوْهُ الْمَسْأَلَةَ فَغَضِبَ فَصَعِدَ الْمِنْبَرَ فَقَالَ "" لاَ تَسْأَلُونِي الْيَوْمَ عَنْ شَىْءٍ إِلاَّ بَيَّنْتُهُ لَكُمْ "". فَجَعَلْتُ أَنْظُرُ يَمِينًا وَشِمَالاً، فَإِذَا كُلُّ رَجُلٍ لاَفٌّ رَأْسَهُ فِي ثَوْبِهِ يَبْكِي، فَإِذَا رَجُلٌ كَانَ إِذَا لاَحَى الرِّجَالَ يُدْعَى لِغَيْرِ أَبِيهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَبِي قَالَ "" حُذَافَةُ ""، ثُمَّ أَنْشَأَ عُمَرُ فَقَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم رَسُولاً، نَعُوذُ بِاللَّهِ مِنَ الْفِتَنِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا رَأَيْتُ فِي الْخَيْرِ وَالشَّرِّ كَالْيَوْمِ قَطُّ، إِنَّهُ صُوِّرَتْ لِي الْجَنَّةُ وَالنَّارُ حَتَّى رَأَيْتُهُمَا وَرَاءَ الْحَائِطِ "". وَكَانَ قَتَادَةُ يَذْكُرُ عِنْدَ الْحَدِيثِ هَذِهِ الآيَةَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ}.
பாடம்: 35
சோதனைகளிலிருந்து (இறை வனிடம்) பாதுகாப்புக் கோருதல்
6362. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்கள் (சிலர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக்கொண்டி ருந்தனர். இதனால் கோபமடைந்த நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, “(நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.) இன்று நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப்போவதில்லை” என்று சொன்னார்கள்.
அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொருவரும் தத்தமது ஆடையால் தம் தலைகளைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் அங்கு ஒரு மனிதர் இருந்தார். அவர் மற்றவர்களுடன் சண்டை சச்சரவு செய்யும்போது, அவருடைய தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என அழைக்கப்பட்டுவந்தார். ஆகவே அவர், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹுதாஃபா(தான் உன் தந்தை)” என்று பதிலளித்தார்கள். (நபி (ஸல்) அவர்களின் சாந்த முகத்தில் கோபத்தின் ரேகை படர்வதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டோம். சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறலானார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் நான் ஒருபோதும் கண்டதில்லை. எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்தச் சுவருக்கு அப்பால் கண்டேன்” என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:)
இந்த நபிமொழியை அறிவிக்கும்போது கத்தாதா (ரஹ்) அவர்கள், “இறை நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக்கொண்டிராதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்படு மானால் உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் (5:101ஆவது) இறைவசனத்தைக் குறிப்பிடுவார்கள்.49

6363. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَبِي طَلْحَةَ "" الْتَمِسْ لَنَا غُلاَمًا مِنْ غِلْمَانِكُمْ يَخْدُمُنِي "". فَخَرَجَ بِي أَبُو طَلْحَةَ يُرْدِفُنِي وَرَاءَهُ، فَكُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُلَّمَا نَزَلَ، فَكُنْتُ أَسْمَعُهُ يُكْثِرُ أَنْ يَقُولَ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ "". فَلَمْ أَزَلْ أَخْدُمُهُ حَتَّى أَقْبَلْنَا مِنْ خَيْبَرَ، وَأَقْبَلَ بِصَفِيَّةَ بِنْتِ حُيَىٍّ قَدْ حَازَهَا، فَكُنْتُ أَرَاهُ يُحَوِّي وَرَاءَهُ بِعَبَاءَةٍ أَوْ كِسَاءٍ ثُمَّ يُرْدِفُهَا وَرَاءَهُ حَتَّى إِذَا كُنَّا بِالصَّهْبَاءِ صَنَعَ حَيْسًا فِي نِطَعٍ، ثُمَّ أَرْسَلَنِي فَدَعَوْتُ رِجَالاً فَأَكَلُوا، وَكَانَ ذَلِكَ بِنَاءَهُ بِهَا، ثُمَّ أَقْبَلَ حَتَّى بَدَا لَهُ أُحُدٌ قَالَ "" هَذَا جُبَيْلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ "". فَلَمَّا أَشْرَفَ عَلَى الْمَدِينَةِ قَالَ "" اللَّهُمَّ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ جَبَلَيْهَا مِثْلَ مَا حَرَّمَ بِهِ إِبْرَاهِيمُ مَكَّةَ، اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مُدِّهِمْ وَصَاعِهِمْ "".
பாடம்: 36
மனிதர்களின் அடக்குமுறையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்
6363. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், “உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை புரிவதற்காகத் தேடி (அழைத்து) வாருங்கள். (நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்)” என்று கூறினார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னை வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு (கைபரை நோக்கிப்) புறப்பட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழியில்) தங்கும்போதெல்லாம் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்துவந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல்அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்” என்று அதிகமாகப் பிரார்த்திப்பதைச் செவியுற்றுவந்தேன்.
(பொருள்: இறைவா! (வருங்காலத்தைப் பற்றிய) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
கைபரிலிருந்து (மதீனாவுக்குத்) திரும்பும்வரை அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்துகொண்டிருந்தேன். (அப்போரில் கிடைத்த போர்ச் செல்வங்களில் தமக்குரிய பங்கிற்காக) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களைப் பெற்று (மணந்து)கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஸஃபிய்யாவுக்காகத்) தமக்குப் பின்னால் (வாகனத்தில்) போர்வையால் திரை அமைத்ததை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு அதில் தமக்குப் பின்னால் ஸஃபிய்யா (ரலி) அவர்களை அமர்த்திக்கொண்டார்கள். (அந்தப் பயணத்தில்) நாங்கள் ‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தை அடைந்தபோது ஒரு தோல் விரிப்பில் (பேரீச்சம்பழம், பாலாடை, நெய் ஆகியவற்றைக் கலந்து) ‘ஹைஸ்’ எனும் பலகாரத்தைத் தயாரித்தார்கள். பிறகு (மணவிருந்துக்கு மக்களை அழைப்பதற்காக) என்னை அனுப்பிவைத்தார்கள்.
ஆகவே, நான் மக்களை அழைத்தேன். அவர்களும் (வந்து வலீமா விருந்து) உண்டனர். அதுதான் ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கிய நிகழ்ச்சியாக அமைந்தது.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் (மதீனா நோக்கி) வந்துகொண்டிருந்தபோது ‘உஹுத்’ மலை அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “இந்தச் சிறிய மலை நம்மை நேசிக்கின்றது. நாமும் அதை நேசிக்கின்றோம்” என்று சொன்னார்கள்.
பிறகு மதீனாவைப் பார்த்தபோது, “இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித (நகர)மாக அறிவித்ததைப் போன்று இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியைப் புனித (நகர)மாக நான் அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் (அளவைகளான) ‘முத்(து)’ மற்றும் ‘ஸாஉ’ ஆகியவற்றில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.50

6364. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ سَمِعْتُ أُمَّ خَالِدٍ بِنْتَ خَالِدٍ ـ قَالَ وَلَمْ أَسْمَعْ أَحَدًا سَمِعَ مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم غَيْرَهَا ـ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ.
பாடம்: 37
மண்ணறையின் (கப்றின்) வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்
6364. உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற் றேன்.51
(இதன் அறிவிப்பாளர்களின் ஒருவ ரான) மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிட மிருந்து உம்மு காலித் (ரலி) அவர் களைத் தவிர வேறெவரும் இந்த நபி மொழியைக் கூற நான் கேட்டதில்லை.

6365. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ مُصْعَبٍ، كَانَ سَعْدٌ يَأْمُرُ بِخَمْسٍ وَيَذْكُرُهُنَّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَأْمُرُ بِهِنَّ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا يَعْنِي فِتْنَةَ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ "".
பாடம்: 37
மண்ணறையின் (கப்றின்) வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்
6365. முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஐந்து விஷயங்களிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு (எங்களுக்குக்) கூறி, அந்த ஐந்து விஷயங்களையும் குறிப்பிட்டு அவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுவந்தார்கள் என்றும் கூறுவார்கள்.
(அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க அன் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற்.
(இறைவா! உன்னிடம் நான் கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்)” இம்மையின் சோதனையென்பது தஜ்ஜாலின் சோதனையைக் குறிக்கிறது.52

6366. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَتْ عَلَىَّ عَجُوزَانِ مِنْ عُجُزِ يَهُودِ الْمَدِينَةِ فَقَالَتَا لِي إِنَّ أَهْلَ الْقُبُورِ يُعَذَّبُونَ فِي قُبُورِهِمْ، فَكَذَّبْتُهُمَا، وَلَمْ أُنْعِمْ أَنْ أُصَدِّقَهُمَا، فَخَرَجَتَا وَدَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عَجُوزَيْنِ وَذَكَرْتُ لَهُ، فَقَالَ "" صَدَقَتَا، إِنَّهُمْ يُعَذَّبُونَ عَذَابًا تَسْمَعُهُ الْبَهَائِمُ كُلُّهَا "". فَمَا رَأَيْتُهُ بَعْدُ فِي صَلاَةٍ إِلاَّ تَعَوَّذَ مِنْ عَذَابِ الْقَبْرِ.
பாடம்: 37
மண்ணறையின் (கப்றின்) வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்
6366. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக்கொண்டிருந்த போது) “மண்ணறைவாசிகள் மண்ணறை களில் வேதனை செய்யப்படுகின்றனர்” என்று கூறினர். அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்ப மறுத்தேன். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப்படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள், அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! இரு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்”) என்று அவர்களிடம் தெரிவித்தேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இருவரும் உண்மையே சொன்னார் கள். (மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகிறார் கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)தனை எல்லா மிருகங்களும் செவியுறுகின்றன” என்று சொன்னார்கள். அதற்குப்பின் நபி (ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.53

6367. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ "".
பாடம்: 38
வாழ்வு மற்றும் சாவின் சோதனைகளிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்
6367. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்ஹரம். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்” என்று பிரார்த்தித்துவந்தார்கள்.
(பொருள்: இறைவா! இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோரு கிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப் பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)54

6368. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ، وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ، وَمِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ عَنِّي خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا، كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ "".
பாடம்: 39
பாவத்திலிருந்தும் கடனிலிருந் தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்
6368. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் கஸலி வல்ஹரமி வல்மஃஸமி வல்மஃக்ரமி, வ மின் ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்திந் நாரி வஅதாபிந் நாரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா. வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் ஃபக்ர். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.
அல்லாஹும்மஃக்ஸில் அன்னீ கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி, வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்” என்று பிரார்த்தித்துவந்தார்கள்.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந் தும், பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும் அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனை யிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலி ருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை யிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங் கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக.)55

6369. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، قَالَ سَمِعْتُ أَنَسًا، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ "".
பாடம்: 40
கோழைத்தனத்திலிருந்தும் சோம்பலிலிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவது
(சோம்பல் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘கசல்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கசில், கஸ்லான் என்றால் ‘சோம்பேறி’ என்பது பொருள். இதன் பன்மை) ‘குசாலா’ என்றும் ‘கசாலா’ என்றும் வரும். (சோம்பேறிகள் என்ற) ஒரே பொருள்தான் இரண்டுக்கும்.
6369. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல்அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்புக்லி, வளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்” எனப் பிரார்த்தித்துவந்தார்கள்.
(பொருள்: இறைவா! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)

6370. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ـ رضى الله عنه ـ كَانَ يَأْمُرُ بِهَؤُلاَءِ الْخَمْسِ، وَيُحَدِّثُهُنَّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ "".
பாடம்: 41
கருமித்தனத்திலிருந்து (இறைவனி டம்) பாதுகாப்புக் கோருதல்
(கருமித்தனம் என்பதை) ‘புக்ல்’ மற்றும் ‘பகல்’ என (இரு முறைகளிலும்) கூறலாம். இது (சொல் வடிவத்தில்) ‘ஹுஸ்ன்’ மற்றும் ‘ஹஸன்’ (கவலை) போன்றுள்ளது.
6370. முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இந்த ஐந்து விஷயங்களிலிருந்தும் பாதுகாப்புக் கோருமாறு கூறி, அவற்றை நபி (ஸல்) அவர்கள் தெரிவித்ததாகக் கூறுவார்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க அன் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற்.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)56

6371. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَعَوَّذُ يَقُولُ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ "".
பாடம்: 42
தள்ளாத வயதிலிருந்து (இறைவ னிடம்) பாதுகாப்புக் கோருதல்
‘தள்ளாமை’ என்பதை ‘அர்தல்’ என்பர். இதற்கு ‘தாழ்ந்தோர்’ என்பது பொருள்.
6371. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருவனவற்றிலிருந்து அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மினல் ஹரமி, வ அஊது பிக்க மினல் புக்ல்.
(பொருள்: இறைவா! சோம்பலிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாமையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகி றேன். கருமித்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)