6284. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ لِبْسَتَيْنِ، وَعَنْ بَيْعَتَيْنِ اشْتِمَالِ الصَّمَّاءِ، وَالاِحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ، لَيْسَ عَلَى فَرْجِ الإِنْسَانِ مِنْهُ شَىْءٌ، وَالْمُلاَمَسَةِ، وَالْمُنَابَذَةِ. تَابَعَهُ مَعْمَرٌ وَمُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ بُدَيْلٍ عَنِ الزُّهْرِيِّ.
பாடம்: 42 எப்படி வசதியோ அப்படி அமர்வது
6284. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் வணிக முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள். (முறையே) அந்த நான்குமாவன:

1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ. (ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்களில் ஒன்றில் போட்டுக்கொள்ள, அவருடைய உடலின் இரு பக்கங்களில் ஒன்று துணியின்றி வெளியே தெரிவது.)

2. இஹ்திபா. அதாவது ஒரே துணியால் (முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு பிறவி உறுப்பு வெளியே தெரிய அமர்வது.

3. முலாமசா. (அதாவது ஒரு துணியைத் தொட்டுவிட்டாலே அதை விலைக்கு வாங்கியே ஆகவேண்டும்.)

4. முனாபதா. (ஒருவர்மீது ஒருவர் துணியைத் தூக்கி எறிந்தாலே அதை விலைக்கு வாங்கியே ஆக வேண்டும்.)64

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 79
6285. حَدَّثَنَا مُوسَى، عَنْ أَبِي عَوَانَةَ، حَدَّثَنَا فِرَاسٌ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، حَدَّثَتْنِي عَائِشَةُ أُمُّ الْمُؤْمِنِينَ، قَالَتْ إِنَّا كُنَّا أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم عِنْدَهُ جَمِيعًا، لَمْ تُغَادَرْ مِنَّا وَاحِدَةٌ، فَأَقْبَلَتْ فَاطِمَةُ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ تَمْشِي، لاَ وَاللَّهِ مَا تَخْفَى مِشْيَتُهَا مِنْ مِشْيَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَآهَا رَحَّبَ قَالَ " مَرْحَبًا بِابْنَتِي ". ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ، ثُمَّ سَارَّهَا فَبَكَتْ بُكَاءً شَدِيدًا، فَلَمَّا رَأَى حُزْنَهَا سَارَّهَا الثَّانِيَةَ إِذَا هِيَ تَضْحَكُ. فَقُلْتُ لَهَا أَنَا مِنْ بَيْنِ نِسَائِهِ خَصَّكِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالسِّرِّ مِنْ بَيْنِنَا، ثُمَّ أَنْتِ تَبْكِينَ، فَلَمَّا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَأَلْتُهَا عَمَّا سَارَّكِ قَالَتْ مَا كُنْتُ لأُفْشِيَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سِرَّهُ. فَلَمَّا تُوُفِّيَ قُلْتُ لَهَا عَزَمْتُ عَلَيْكِ بِمَا لِي عَلَيْكِ مِنَ الْحَقِّ لَمَّا أَخْبَرْتِنِي. قَالَتْ أَمَّا الآنَ فَنَعَمْ. فَأَخْبَرَتْنِي قَالَتْ أَمَّا حِينَ سَارَّنِي فِي الأَمْرِ الأَوَّلِ، فَإِنَّهُ أَخْبَرَنِي أَنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُهُ بِالْقُرْآنِ كُلَّ سَنَةٍ مَرَّةً " وَإِنَّهُ قَدْ عَارَضَنِي بِهِ الْعَامَ مَرَّتَيْنِ، وَلاَ أَرَى الأَجَلَ إِلاَّ قَدِ اقْتَرَبَ، فَاتَّقِي اللَّهَ وَاصْبِرِي، فَإِنِّي نِعْمَ السَّلَفُ أَنَا لَكَ ". قَالَتْ فَبَكَيْتُ بُكَائِي الَّذِي رَأَيْتِ، فَلَمَّا رَأَى جَزَعِي سَارَّنِي الثَّانِيَةَ قَالَ " يَا فَاطِمَةُ أَلاَ تَرْضَيْنَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاءِ الْمُؤْمِنِينَ ـ أَوْ ـ سَيِّدَةَ نِسَاءِ هَذِهِ الأُمَّةِ ".
பாடம்: 43 பலர் இருக்கும்போது இரகசியம் பேசுவதும், ஒருவர் சொன்ன இரகசியத்தை (அவர் இருக்கும் வரை) வெளியிடாதிருந்துவிட்டு அவர் இறந்தபிறகு வெளியிடு வதும்65
6285. இறைநம்பிக்கையாளர் களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியர் களான எங்களில் ஒருவர்கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக்கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்துவந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள், “என் மகளே! வருக!” என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரைத் தமது ‘வலப் பக்கத்தில்’ அல்லது ‘இடப் பக்கத்தில்’ அமர்த்திக்கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.

அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்துகொண்டு ஃபாத்திமாவிடம், “எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே!” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன இரகசியத்தைப் பரப்ப நான் விரும்பவில்லை” என்று கூறிவிட்டார்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா அவர்களிடம் நான், “உங்கள்மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்” என்றேன். ஃபாத்திமா, “சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்:

முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின்வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதை ஓதிக்காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகைவிட்டு) சென்றுவிடுவேன்.

ஆகவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். எனது பதற்றத்தைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, “ஃபாத்திமா! ‘இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது ‘இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?” என்று இரகசியமாகக் கேட்டார்கள். (ஆகவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்.)66

அத்தியாயம் : 79
6287. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي عَبَّادُ بْنُ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ مُسْتَلْقِيًا، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى.
பாடம்: 44 மல்லாந்து படுப்பது
6287. அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் கால்மீது கால் வைத்து மல்லாந்து படுத்திருக்கக் கண்டேன்.67

அத்தியாயம் : 79
6288. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ،. وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا كَانُوا ثَلاَثَةٌ فَلاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ الثَّالِثِ "".
பாடம்: 45 (மூவர் இருக்கும்போது) மூன்றாம வரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசலாகாது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக்கொண்டால், பாவத்திற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், (நம்) தூதருக்கு மாறு செய்வதற்காகவும் இரகசியம் பேசாதீர்கள்; ஆனால், நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக்கொள்ளுங்கள். இறைநம்பிக்கை கொண்டவர்களைக் கவலையடையச் செய்வதற்காக ஷைத்தானால் ஏற்பட்டதே இந்த இரகசிய ஆலோசனை ஆகும். ஆனால், அவனால் அல்லாஹ்வின் ஆணை யின்றி (அவர்களுக்கு) எத்தீங்கும் அளித்திட முடியாது. ஆகவே, இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்! (58:9,10) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் தனிமையில் பேசுவதாயின், அவ்வாறு பேசுவதற்கு முன் ஏதேனும் தர்மம் செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும். ஆனால், (தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதி பெற்றிராவிடில் நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். நீங்கள் தனிமையில் உரையாடுவதற்கு முன்னால் தானதர்மங்கள் செய்ய வேண்டியிருக்குமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லை எனில் (அதற்காகப் பாவமன்னிப்புக் கோரும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை (முறைப்படி) கடைப்பிடியுங்கள்; ஸகாத்தும் கொடுத்து வாருங்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; அன்றியும் நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான். (58:12,13)
6288. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் மூவர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 79
6289. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، أَسَرَّ إِلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم سِرًّا فَمَا أَخْبَرْتُ بِهِ أَحَدًا بَعْدَهُ، وَلَقَدْ سَأَلَتْنِي أُمُّ سُلَيْمٍ فَمَا أَخْبَرْتُهَا بِهِ.
பாடம்: 46 இரகசியம் காத்தல்
6289. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களுடைய இறப்புக்குப் பிறகும்கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை.

அத்தியாயம் : 79
6290. حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم {إِذَا كُنْتُمْ ثَلاَثَةً فَلاَ يَتَنَاجَى رَجُلاَنِ دُونَ الآخَرِ، حَتَّى تَخْتَلِطُوا بِالنَّاسِ، أَجْلَ أَنْ يُحْزِنَهُ}.
பாடம்: 47 மூன்று பேரைவிட அதிகமா னோர் இருக்கும்போது (இருவர்) இரகசியம் பேசுவதும் உரை யாடுவதும் தவறாகாது.
6290. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் மூன்றுபேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும்வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்றுபேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும்.68

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 79
6291. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا قِسْمَةً فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ. قُلْتُ أَمَا وَاللَّهِ لآتِيَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَتَيْتُهُ وَهْوَ فِي مَلأٍ، فَسَارَرْتُهُ فَغَضِبَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ، ثُمَّ قَالَ "" رَحْمَةُ اللَّهِ عَلَى مُوسَى، أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ "".
பாடம்: 47 மூன்று பேரைவிட அதிகமா னோர் இருக்கும்போது (இருவர்) இரகசியம் பேசுவதும் உரை யாடுவதும் தவறாகாது.
6291. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங் களைப்) பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் (இது குறித்துத் தெரிவிக்க) நிச்சயம் நான் செல்வேன்” என்று கூறிவிட்டு (அவ்வாறே) அவர்களிடம் சென்றேன்.

அப்போது அவர்கள் மக்கள் மன்றத்தில் இருந்தார்கள். அவர்களிடம் நான் (இது பற்றி) இரகசியமாகச் சொன்னேன். (அதைக் கேட்டபோது) தம்முடைய முகம் சிவக்கும் அளவுக்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, “(இறைத் தூதர்) மூசாவின் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும். இதைவிட அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார். இருப்பினும், பொறுமை(யுடன் சகித்துக்)கொண்டார்” என்று சொன்னார்கள்.69

அத்தியாயம் : 79
6292. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَس ٍ ـ رضى الله عنه ـ قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ وَرَجُلٌ يُنَاجِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَمَا زَالَ يُنَاجِيهِ حَتَّى نَامَ أَصْحَابُهُ، ثُمَّ قَامَ فَصَلَّى.
பாடம்: 48 (நண்பருடன்) நீண்ட நேரம் தனியாக உரையாடுவது (17:47ஆவது இறைவசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஜ்வா’ (இரகசிய ஆலோசனை) எனும் வேர்ச்சொல்லுக்கு, ‘யத்தனாஜவ்ன’ (இரகசிய ஆலோசனை செய்கிறார்கள்) எனும் வினைச் சொல்லின் பொருளாகும்.
6292. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டுவிட்டது. அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏதோ தனியாக உரையாடிக் கொண்டிருந்தார். அவர் உரையாடிக் கொண்டிருந்ததில் நபித்தோழர்கள் உறங்கிவிட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் (பேசி முடித்து) எழுந்து வந்து தொழுவித்தார்கள்.70

அத்தியாயம் : 79
6293. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ {لاَ تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ}.
பாடம்: 49 உறங்கச் செல்லும்போது வீட்டி லுள்ள (அடுப்பு மற்றும் விளக் கின்) நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடலாகாது.
6293. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 79
6294. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ احْتَرَقَ بَيْتٌ بِالْمَدِينَةِ عَلَى أَهْلِهِ مِنَ اللَّيْلِ، فَحُدِّثَ بِشَأْنِهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ هَذِهِ النَّارَ إِنَّمَا هِيَ عَدُوٌّ لَكُمْ، فَإِذَا نِمْتُمْ فَأَطْفِئُوهَا عَنْكُمْ "".
பாடம்: 49 உறங்கச் செல்லும்போது வீட்டி லுள்ள (அடுப்பு மற்றும் விளக் கின்) நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடலாகாது.
6294. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர்.

அவர்களின் நிலை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது “நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். ஆகவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்துவிடுங்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 79
6295. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ كَثِيرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" خَمِّرُوا الآنِيَةَ وَأَجِيفُوا الأَبْوَابَ، وَأَطْفِئُوا الْمَصَابِيحَ، فَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا جَرَّتِ الْفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ الْبَيْتِ "".
பாடம்: 49 உறங்கச் செல்லும்போது வீட்டி லுள்ள (அடுப்பு மற்றும் விளக் கின்) நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடலாகாது.
6295. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவு களைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்கு களை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக்கூடிய (எலியான)து (விளக் கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிருப்பவர்களை எரித்து விடக்கூடும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.71

அத்தியாயம் : 79
6296. حَدَّثَنَا حَسَّانُ بْنُ أَبِي عَبَّادٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَطْفِئُوا الْمَصَابِيحَ بِاللَّيْلِ إِذَا رَقَدْتُمْ، وَغَلِّقُوا الأَبْوَابَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ "". ـ قَالَ هَمَّامٌ وَأَحْسِبُهُ قَالَ ـ ""وَلَوْ بِعُودٍ يَعْرُضُهُ""
பாடம்: 50 இரவில் கதவுகளைத் தாழிடுதல்
6296. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் நீங்கள் தூங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். தண்ணீர்ப் பைகளை சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“குச்சியை (குறுக்காக) வைத்தேனும் உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன்.72

அத்தியாயம் : 79
6297. حَدَّثَنَا يَحْيَى بْنُ قُزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْفِطْرَةُ خَمْسٌ الْخِتَانُ، وَالاِسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَقَصُّ الشَّارِبِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ "".
பாடம்: 51 அக்குள் முடியை அகற்றுவதும், வயதானபின் விருத்தசேதனம் (கத்னா) செய்துகொள்வதும்
6297. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1. விருத்த சேதனம் செய்வது. 2. மர்ம உறுப்பின் முடிகளைக் களைய சவரக்கத்தியை உபயோகிப்பது. 3. அக்குள் முடிகளை அகற்றுவது. 4. மீசையைக் கத்தரிப்பது5. நகங்களை வெட்டுவது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.73


அத்தியாயம் : 79
6298. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" اخْتَتَنَ إِبْرَاهِيمُ بَعْدَ ثَمَانِينَ سَنَةً، وَاخْتَتَنَ بِالْقَدُومِ "". مُخَفَّفَةً. حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا الْمُغِيرَةُ عَنْ أَبِي الزِّنَادِ وَقَالَ ""بِالْقَدُّومِ"" وَهُوَ مَوْضِعٌ مُشَدَّدٌ
பாடம்: 51 அக்குள் முடியை அகற்றுவதும், வயதானபின் விருத்தசேதனம் (கத்னா) செய்துகொள்வதும்
6298. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் ‘கதூம்’ (எனும் வாய்ச்சியின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண் டார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் காணப்படுவதாவது: ‘கத்தூம்’ என்பது (சிரியாவிலுள்ள) ஓர் இடத்தின் பெயராகும் என (அறிவிப்பாளர்) அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (இதன்படி ‘கத்தூம்’ எனுமிடத்தில் விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்) எனப் பொருள் வரும்.)74


அத்தியாயம் : 79
6299. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ مُوسَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ سُئِلَ ابْنُ عَبَّاسٍ مِثْلُ مَنْ أَنْتَ حِينَ قُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ أَنَا يَوْمَئِذٍ مَخْتُونٌ. قَالَ وَكَانُوا لاَ يَخْتِنُونَ الرَّجُلَ حَتَّى يُدْرِكَ.
பாடம்: 51 அக்குள் முடியை அகற்றுவதும், வயதானபின் விருத்தசேதனம் (கத்னா) செய்துகொள்வதும்
6299. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப் பட்டபோது தாங்கள் எவ்வாறிருந்தீர்கள்?” என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “நான் அப்போது விருத்த சேதனம் செய்தவனாயிருந்தேன்” என்று பதிலளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

பருவ வயதை நெருங்கிய பிறகே (அன்றைய) மக்கள் விருத்தசேதனம் செய்வது வழக்கம்.


அத்தியாயம் : 79
6300. وَقَالَ ابْنُ إِدْرِيسَ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا خَتِينٌ.
பாடம்: 51 அக்குள் முடியை அகற்றுவதும், வயதானபின் விருத்தசேதனம் (கத்னா) செய்துகொள்வதும்
6300. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் விருத்தசேதனம் செய்தவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டது.

அத்தியாயம் : 79
6301. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ حَلَفَ مِنْكُمْ فَقَالَ فِي حَلِفِهِ بِاللاَّتِ وَالْعُزَّى. فَلْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ. فَلْيَتَصَدَّقْ "".
பாடம்: 52 ‘அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படி வதிலிருந்து திசைதிருப்பக்கூடிய ஒவ்வொரு விஷயமும் வீணானதே’ என்பது குறித்தும், ஒருவர் தம் நண்பரிடம் ‘வா. சூதாடுவோம்’ என அழைப்பது குறித்தும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுகளை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதை யிலிருந்து மாற்றிவிடவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக்கொள்ளவும் முயல்கிறார்கள். இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனைதான் உண்டு. (31:6)
6301. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக்கால தெய்வச் சிலைகளான) ‘லாத்’தின் மீதும் ‘உஸ்ஸா’ வின் மீதும் சத்தியமாக என்று கூறிவிட் டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லட்டும். யார் தம் நண்பரிடம், “வா சூதாடுவோம்” என்று கூறுகிறாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75

அத்தியாயம் : 79
6302. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا إِسْحَاقُ ـ هُوَ ابْنُ سَعِيدٍ ـ عَنْ سَعِيدٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَيْتُنِي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بَنَيْتُ بِيَدِي بَيْتًا، يُكِنُّنِي مِنَ الْمَطَرِ، وَيُظِلُّنِي مِنَ الشَّمْسِ، مَا أَعَانَنِي عَلَيْهِ أَحَدٌ مِنْ خَلْقِ اللَّهِ.
பாடம்: 53 கட்டடங்கள் தொடர்பாக வந்துள் ளவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஆடுகளை (அல்லது கறுப்பு நிற ஒட்டகங்களை) மேய்க்கும் இடையர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டி பெருமையடித்துக்கொள்வது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.76
6302. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மழையிலிருந்து என்னைக் காக்கின்ற, வெயிலிருந்து எனக்கு நிழல் தருகின்ற ஒரு வீட்டை நானே என் கரத்தால் கட்டியதை (இப்போதும்) நினைத்துப்பார்க்கிறேன். அந்த வீட்டைக் கட்ட அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் எனக்கு உதவவில்லை.77


அத்தியாயம் : 79
6303. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو قَالَ ابْنُ عُمَرَ وَاللَّهِ مَا وَضَعْتُ لَبِنَةً عَلَى لَبِنَةٍ، وَلاَ غَرَسْتُ نَخْلَةً، مُنْذُ قُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم. قَالَ سُفْيَانُ فَذَكَرْتُهُ لِبَعْضِ أَهْلِهِ قَالَ وَاللَّهِ لَقَدْ بَنَى بَيْتًا. قَالَ سُفْيَانُ قُلْتُ فَلَعَلَّهُ قَالَ قَبْلَ أَنْ يَبْنِيَ.
பாடம்: 53 கட்டடங்கள் தொடர்பாக வந்துள் ளவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஆடுகளை (அல்லது கறுப்பு நிற ஒட்டகங்களை) மேய்க்கும் இடையர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டி பெருமையடித்துக்கொள்வது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.76
6303. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட் டது முதல் ஒரு செங்கல்லின் மீது இன்னொரு செங்கல்லை நான் வைத்தது மில்லை; எந்த பேரீச்சமரத்தையும் நான் நட்டதுமில்லை.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒரு வரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தார் சிலரிடம் கூறினேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் வீடு கட்டினார்” என்று கூறினார்கள்.

நான், “தாம் வீடு கட்டுவதற்கு முன்னர் இவ்வாறு அவர்கள் சொல்óயிருக்கக் கூடும்” என்றேன்.

அத்தியாயம் : 79