6244. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَلَّمَ سَلَّمَ ثَلاَثًا، وَإِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا.
பாடம்: 13 மும்முறை முகமன் (சலாம்) சொல்லி அனுமதி கோருவது19
6244. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு, அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக்கொள்வதற்காக) அதை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள்.20


அத்தியாயம் : 79
6245. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ كُنْتُ فِي مَجْلِسٍ مِنْ مَجَالِسِ الأَنْصَارِ إِذْ جَاءَ أَبُو مُوسَى كَأَنَّهُ مَذْعُورٌ فَقَالَ اسْتَأْذَنْتُ عَلَى عُمَرَ ثَلاَثًا، فَلَمْ يُؤْذَنْ لِي فَرَجَعْتُ فَقَالَ مَا مَنَعَكَ قُلْتُ اسْتَأْذَنْتُ ثَلاَثًا، فَلَمْ يُؤْذَنْ لِي فَرَجَعْتُ، وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ، فَلْيَرْجِعْ "". فَقَالَ وَاللَّهِ لَتُقِيمَنَّ عَلَيْهِ بِبَيِّنَةٍ. أَمِنْكُمْ أَحَدٌ سَمِعَهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أُبَىُّ بْنُ كَعْبٍ وَاللَّهِ لاَ يَقُومُ مَعَكَ إِلاَّ أَصْغَرُ الْقَوْمِ، فَكُنْتُ أَصْغَرَ الْقَوْمِ، فَقُمْتُ مَعَهُ فَأَخْبَرْتُ عُمَرَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ذَلِكَ. وَقَالَ ابْنُ الْمُبَارَكِ أَخْبَرَنِي ابْنُ عُيَيْنَةَ حَدَّثَنِي يَزِيدُ عَنْ بُسْرٍ سَمِعْتُ أَبَا سَعِيدٍ بِهَذَا.
பாடம்: 13 மும்முறை முகமன் (சலாம்) சொல்லி அனுமதி கோருவது19
6245. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அன்சாரிகளின் அவையொன் றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, “நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை” என்று (என்னிடம்) கேட்டார்கள்.

அதற்கு நான், “(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்’ என்று கூறியுள்ளார்கள்” என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டுவர வேண்டும்’ என்று சொன்னார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்” என்று சொன்னார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூமூசா (ரலி) அவர்களுடன் சென்று, “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்” என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 79
6246. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ ذَرٍّ،. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ ذَرٍّ، أَخْبَرَنَا مُجَاهِدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدَ لَبَنًا فِي قَدَحٍ فَقَالَ "" أَبَا هِرٍّ الْحَقْ أَهْلَ الصُّفَّةِ فَادْعُهُمْ إِلَىَّ "". قَالَ فَأَتَيْتُهُمْ فَدَعَوْتُهُمْ، فَأَقْبَلُوا فَاسْتَأْذَنُوا فَأُذِنَ لَهُمْ، فَدَخَلُوا.
பாடம்: 14 (முன்பே) அழைக்கப்பட்ட ஒருவர் வந்தால் அவரும் அனுமதி கோர வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவரை அழைத்ததே அவருக்கு அனுமதிதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21
6246. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்களின் இல்லத்திற் குள்) நுழைந்தேன். அங்கு அவர்கள் ஒரு பாத்திரத்தில் பால் இருக்கக் கண் டார்கள். உடனே (என்னிடம்) “அபூஹிர்! திண்ணைவாசிகளிடம் சென்று, அவர் களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார்கள்.

ஆகவே, நான் அவர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்) இல்லத்தினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. பிறகு அவர்கள் நுழைந்தனர்.22

அத்தியாயம் : 79
6247. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَيَّارٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ.
பாடம்: 15 சிறுவர்களுக்கு சலாம் சொல்வது
6247. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்துவந்தார்கள்” என்று கூறி னார்கள்.

அத்தியாயம் : 79
6248. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ كُنَّا نَفْرَحُ يَوْمَ الْجُمُعَةِ. قُلْتُ وَلِمَ قَالَ كَانَتْ لَنَا عَجُوزٌ تُرْسِلُ إِلَى بُضَاعَةَ ـ قَالَ ابْنُ مَسْلَمَةَ نَخْلٍ بِالْمَدِينَةِ ـ فَتَأْخُذُ مِنْ أُصُولِ السِّلْقِ فَتَطْرَحُهُ فِي قِدْرٍ، وَتُكَرْكِرُ حَبَّاتٍ مِنْ شَعِيرٍ، فَإِذَا صَلَّيْنَا الْجُمُعَةَ انْصَرَفْنَا وَنُسَلِّمُ عَلَيْهَا فَتُقَدِّمُهُ إِلَيْنَا، فَنَفْرَحُ مِنْ أَجْلِهِ، وَمَا كُنَّا نَقِيلُ وَلاَ نَتَغَدَّى إِلاَّ بَعْدَ الْجُمُعَةِ.
பாடம்: 16 பெண்களுக்கு ஆண்களும், ஆண்களுக்குப் பெண்களும் சலாம் கூறுவது
6248. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நாங்கள் வெள்ளிக்கிழமை அன்று (மிகவும்) மகிழ்ச்சியாக இருப்போம்” என்று சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், “ஏன்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் மதீனாவிலுள்ள ‘புளாஆ’ எனும் பேரீச்சந் தோட்டத்திற்கு ஆளனுப்பி, (அங்கு பயிராகும்) தண்டுக்கீரையின் தண்டு களைக் கொண்டுவரச் செய்து, அதை ஒரு பாத்திரத்தில் இடுவார். அத்துடன் சிறிது தொலி நீக்கப்படாத கோதுமையை அரைத்து அதில் இடுவார்.

நாங்கள் ஜுமுஆ தொழுதுவிட்டுத் திரும்பிவந்து அந்த மூதாட்டிக்கு சலாம் சொல்வோம். அப்போது அவர் அந்த உணவை எங்கள்முன் வைப்பார். அதன் காரணத்தால்தான் நாங்கள் (வெள்ளிக்கிழமை) மகிழ்ச்சியோடு இருப்போம். ஜுமுஆவிற்குப் பிறகுதான் நாங்கள் மதிய ஓய்வு எடுப்போம்; காலை உணவையும் உட்கொள்வோம்.23


அத்தியாயம் : 79
6249. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا عَائِشَةُ هَذَا جِبْرِيلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ "". قَالَتْ قُلْتُ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ، تَرَى مَا لاَ نَرَى. تُرِيدُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. تَابَعَهُ شُعَيْبٌ. وَقَالَ يُونُسُ وَالنُّعْمَانُ عَنِ الزُّهْرِيِّ وَبَرَكَاتُهُ.
பாடம்: 16 பெண்களுக்கு ஆண்களும், ஆண்களுக்குப் பெண்களும் சலாம் கூறுவது
6249. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) “ஆயிஷா! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கின்றார்” என்று சொன்னார்கள். நான், “வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி” (அவர் மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் பொழியட்டும்) என்று (பதில் சலாம்) சொல்லிவிட்டு, “நாங்கள் பார்க்காதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், ‘வ பரக்காத்துஹு’ (இறைவன் வழங்கும் வளங்களும்) என்று (கூடுதலாக) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் காணப்படுகிறது.24

அத்தியாயம் : 79
6250. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي دَيْنٍ كَانَ عَلَى أَبِي فَدَقَقْتُ الْبَابَ فَقَالَ "" مَنْ ذَا "". فَقُلْتُ أَنَا. فَقَالَ "" أَنَا أَنَا "". كَأَنَّهُ كَرِهَهَا.
பாடம்: 17 (கதவைத் தட்டுபவரிடம் வீட்டுக்காரர்) “யார் அது?” என்று கேட்க, அவர் “நான்தான்” என்று கூறுவது
6250. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், “யார் அது?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “நான்தான்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நான் நான் என்றால்...?” என அதை விரும்பாத வர்களைப் போன்று கூறினார்கள்.

அத்தியாயம் : 79
6251.
பாடம்: 18 பதில் (சலாம்) சொல்பவர், ‘அலைக்கஸ் ஸலாம்’ என்று சொல்வது25 “வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.26 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களுக்கு வானவர் கள் ‘அஸ்ஸலாமு அலைக்க வ ரஹ்மத்துல்லாஹ்’ என்று பதில் (சலாம்) சொன்னார்கள்.27
6251. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் நுழைந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந் தார்கள். (பள்ளிவாசலுக்குள் நுழைந்த) அவர் தொழுதார். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து அவர்களுக்கு சலாம் சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “வ அலைக்கஸ் ஸலாம்; திரும்பச் சென்று தொழு! ஏனெனில், நீ (முறையாகத்) தொழவில்லை” என்றார்கள். ஆகவே, அவர் திரும்பிச் சென்று தொழுதார்.

பிறகு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் அவர்கள் “வ அலைக்கஸ் ஸலாம். திரும்பச் சென்று தொழு! ஏனெனில், நீ (முறையாகத்) தொழவில்லை” என்றார்கள். இரண்டாம் தடவையிலோ, அல்லது அதற்குப் பின்போ அவர் “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத்தாருங்கள்” என்றார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ தொழ நினைத்தால் (முதலில்) நிறைவாக அங்கத் தூய்மை (‘உளூ’) செய்! பிறகு கிப்லாவை முன்னோக்கி ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல். பிறகு குர்ஆனில் உனக்குத் தெரிந்ததை ஓதிக்கொள்! பிறகு (குனிந்து) ‘ருகூஉ’ செய்; அதில் (சற்று நேரம்) நிலைகொள். பின்னர் தலையை உயர்த்தி நேராக நில். பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்; அதில் (சற்று நேரம்) நிலை கொள். பின்னர் தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்ந்திரு. பிறகு (மீண்டும்) சிரவணக்கம் செய்; அதில் (சற்று நேரம்) நிலைகொள். பின்னர் எழுந்து நன்றாக அமர்ந்திரு. பிறகு இதே (நடை) முறையை உன் தொழுகை முழுவதிலும் கடைப்பிடி” என்று சொன்னார்கள்.28

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றின் இறுதியில் (‘எழுந்து நன்றாக அமர்ந்திரு’ என்பதற்குப் பதிலாக) அபூஉசாமா (ரஹ்) அவர்கள் ‘(அடுத்த ரக்அத்துக்காக) எழுந்து நேராக நில்’ என்று கூறினார்கள்.


அத்தியாயம் :
6252. حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي سَعِيدٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا "".
பாடம்: 18 பதில் (சலாம்) சொல்பவர், ‘அலைக்கஸ் ஸலாம்’ என்று சொல்வது25 “வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.26 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களுக்கு வானவர் கள் ‘அஸ்ஸலாமு அலைக்க வ ரஹ்மத்துல்லாஹ்’ என்று பதில் (சலாம்) சொன்னார்கள்.27
6252. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “பிறகு நீ தலையை உயர்த்தி (சற்று நேரம்) நிலையாக அமர்ந்திரு” என்று சொன்னார்கள்.29

அத்தியாயம் : 79
6253. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، قَالَ سَمِعْتُ عَامِرًا، يَقُولُ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا "" إِنَّ جِبْرِيلَ يُقْرِئُكِ السَّلاَمَ "". قَالَتْ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ.
பாடம்: 19 “இன்னார் உங்களுக்கு சலாம் சொல்கிறார்” என்று ஒருவர் சொன்னால்...30
6253. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருநாள்) என்னிடம், “(இதோ வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கின்றார்” என்று சொன்னார்கள். நான், “வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி” (அவர்மீதும் இறை சாந்தியும் அவனுடைய கருணையும் பொழியட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன்.31

அத்தியாயம் : 79
6254. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَكِبَ حِمَارًا عَلَيْهِ إِكَافٌ، تَحْتَهُ قَطِيفَةٌ فَدَكِيَّةٌ، وَأَرْدَفَ وَرَاءَهُ أُسَامَةَ بْنَ زَيْدٍ وَهْوَ يَعُودُ سَعْدَ بْنَ عُبَادَةَ فِي بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ، وَذَلِكَ قَبْلَ وَقْعَةِ بَدْرٍ حَتَّى مَرَّ فِي مَجْلِسٍ فِيهِ أَخْلاَطٌ مِنَ الْمُسْلِمِينَ وَالْمُشْرِكِينَ عَبَدَةِ الأَوْثَانِ وَالْيَهُودِ، وَفِيهِمْ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ، وَفِي الْمَجْلِسِ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ، فَلَمَّا غَشِيَتِ الْمَجْلِسَ عَجَاجَةُ الدَّابَّةِ خَمَّرَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ أَنْفَهُ بِرِدَائِهِ ثُمَّ قَالَ لاَ تُغَبِّرُوا عَلَيْنَا. فَسَلَّمَ عَلَيْهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ وَقَفَ فَنَزَلَ، فَدَعَاهُمْ إِلَى اللَّهِ وَقَرَأَ عَلَيْهِمُ الْقُرْآنَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ أَيُّهَا الْمَرْءُ لاَ أَحْسَنَ مِنْ هَذَا، إِنْ كَانَ مَا تَقُولُ حَقًّا، فَلاَ تُؤْذِنَا فِي مَجَالِسِنَا، وَارْجِعْ إِلَى رَحْلِكَ، فَمَنْ جَاءَكَ مِنَّا فَاقْصُصْ عَلَيْهِ. قَالَ ابْنُ رَوَاحَةَ اغْشَنَا فِي مَجَالِسِنَا، فَإِنَّا نُحِبُّ ذَلِكَ. فَاسْتَبَّ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْيَهُودُ حَتَّى هَمُّوا أَنْ يَتَوَاثَبُوا، فَلَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُخَفِّضُهُمْ، ثُمَّ رَكِبَ دَابَّتَهُ حَتَّى دَخَلَ عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ "" أَىْ سَعْدُ أَلَمْ تَسْمَعْ مَا قَالَ أَبُو حُبَابٍ "". يُرِيدُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ قَالَ كَذَا وَكَذَا قَالَ اعْفُ عَنْهُ يَا رَسُولَ اللَّهِ وَاصْفَحْ فَوَاللَّهِ لَقَدْ أَعْطَاكَ اللَّهُ الَّذِي أَعْطَاكَ، وَلَقَدِ اصْطَلَحَ أَهْلُ هَذِهِ الْبَحْرَةِ عَلَى أَنْ يُتَوِّجُوهُ فَيُعَصِّبُونَهُ بِالْعِصَابَةِ، فَلَمَّا رَدَّ اللَّهُ ذَلِكَ بِالْحَقِّ الَّذِي أَعْطَاكَ شَرِقَ بِذَلِكَ، فَذَلِكَ فَعَلَ بِهِ مَا رَأَيْتَ، فَعَفَا عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம்: 20 முஸ்லிம்களும் இணைவைப் போரும் கலந்திருக்கும் அவையில் சலாம் சொல்வது
6254. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதில் ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து, அதில் அமர்ந்தவாறு பயணமானார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டார்கள். ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ர் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது.- அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வழிபாட்டாளர்களான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள். அவர்களிடையே (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் இருந்தார். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

(எங்கள்) வாகனப் பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது அப்துல்லாஹ் பின் உபை தமது மேல்துண்டால் தமது மூக்கைப் பொத்திக்கொண்டு, “எங்கள் மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள் அந்த அவை யோருக்கு சலாம் சொன்னார்கள். பிறகு, தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆன் (வசனங்களை) ஓதியும் காட்டினார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல், “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனாலும்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர். உமது இருப்பிடத்திற்குச் செல்லும். எங்களில் யார் உம்மிடம் வருகிறார்களோ அவர்களுக்கு (இதை) எடுத்துச் சொல்லும்” என்றார்.

(இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “(இல்லை! அல்லாஹ்வின் தூதரே! இதை) (இந்த) அவையிலேயே எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்” என்று சொன்னார்கள். இதையடுத்து முஸ்லிம்களும் இணைவைப்போரும் யூதர்களும் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டே ஒருவர்மீது ஒருவர் பாய்ந்து (தாக்கிக்)கொள்ள முனைந்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள். (அமைதி ஏற்பட்ட) பிறகு தமது வாகனத்தில் ஏறி (உடல் நலமில்லாமல் இருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, “சஅதே! அபூஹுபாப் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கூறி, “அப்துல்லாஹ் பின் உபை இப்படி இப்படிக் கூறினார்” என்று தெரிவித்தார்கள்.

அதற்கு சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அவரை மன்னித்து விட்டு விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (மதீனா) நகரவாசிகள் அவருக்குக் கிரீடம் அணிவித்து அவருக்கு முடிசூட்டிட முடிவு செய்திருந்த நிலையில்தான் அல்லாஹ் தங்களுக்கு இ(ந்த மார்க்கத்)தை வழங்கினான். அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்தியத்தின் மூலம் அவர்களின் முடிவை அவன் நிராகரித்தபோது அதனால் அவர் பொருமினார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள்.32

அத்தியாயம் : 79
6255. حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، يُحَدِّثُ حِينَ تَخَلَّفَ عَنْ تَبُوكَ، وَنَهَى، رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ كَلاَمِنَا، وَآتِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأُسَلِّمُ عَلَيْهِ، فَأَقُولُ فِي نَفْسِي هَلْ حَرَّكَ شَفَتَيْهِ بِرَدِّ السَّلاَمِ أَمْ لاَ حَتَّى كَمَلَتْ خَمْسُونَ لَيْلَةً، وَآذَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِتَوْبَةِ اللَّهِ عَلَيْنَا حِينَ صَلَّى الْفَجْرَ.
பாடம்: 21 பாவம் செய்த ஒருவர், பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டார் என்பது தெளிவாகாதவரை அவருக்கு சலாம் சொல்லாமலும், அவரது சலாமுக்குப் பதில் சொல்லாமலும் இருப்பது (சரியா?); ஒரு பாவி பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டான் என்பது எப்போது தெளிவாகும்?33 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “மது அருந்துவோருக்கு சலாம் சொல்லாதீர்கள்” என்று கூறினார்கள்.34
6255. அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள், தாம் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் பின்வாங்கியது குறித்துக் கூறுகையில் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:

எங்களிடம் (யாரும்) பேசக் கூடா தென நபி (ஸல்) அவர்கள் (முஸ்லிம் களுக்குத்) தடை விதித்துவிட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வேன். அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு எனக்குப் பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள் தம் உதடுகளை அசைக்கிறார்களா, இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.

இறுதியாக ஐம்பது நாட்கள் நிறைவடைந்தன. நபி (ஸல்) அவர்கள் (அன்றைய) ஃபஜ்ர் தொழுகையை முடித்தபோது எங்களது பாவமன்னிப்பு வேண்டுதலை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுவிட்டதாக அறிவித்தார்கள்.35

அத்தியாயம் : 79
6256. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ. فَفَهِمْتُهَا فَقُلْتُ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَهْلاً يَا عَائِشَةُ، فَإِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَقَدْ قُلْتُ وَعَلَيْكُمْ "".
பாடம்: 22 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தார் சொல்லும் சலாமிற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?
6256. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங் களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர். அவர்கள் கூறுவதைப் புரிந்துகொண்ட நான், “வ அலைக்குமுஸ்ஸாமு வல்லஅனா” (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகின்றான்” என்று சொன்னார்கள்.

உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் (‘அஸ்ஸாமு’ எனும் சொல்லைத் தவிர்த்து) ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) எனப் பதிலளித்துவிட்டேன்” என்று கூறினார்கள்.36


அத்தியாயம் : 79
6257. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا سَلَّمَ عَلَيْكُمُ الْيَهُودُ فَإِنَّمَا يَقُولُ أَحَدُهُمُ السَّامُ عَلَيْكَ. فَقُلْ وَعَلَيْكَ "".
பாடம்: 22 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தார் சொல்லும் சலாமிற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?
6257. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்கள் உங்களுக்கு சலாம் சொன் னால் அவர்களில் சிலர் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டா கட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்று சொல்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 79
6258. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ "".
பாடம்: 22 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தார் சொல்லும் சலாமிற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?
6258. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 79
6259. حَدَّثَنَا يُوسُفُ بْنُ بُهْلُولٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ حَدَّثَنِي حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ وَأَبَا مَرْثَدٍ الْغَنَوِيَّ وَكُلُّنَا فَارِسٌ فَقَالَ "" انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ، فَإِنَّ بِهَا امْرَأَةً مِنَ الْمُشْرِكِينَ مَعَهَا صَحِيفَةٌ مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى الْمُشْرِكِينَ "". قَالَ فَأَدْرَكْنَاهَا تَسِيرُ عَلَى جَمَلٍ لَهَا حَيْثُ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ قُلْنَا أَيْنَ الْكِتَابُ الَّذِي مَعَكِ قَالَتْ مَا مَعِي كِتَابٌ. فَأَنَخْنَا بِهَا، فَابْتَغَيْنَا فِي رَحْلِهَا فَمَا وَجَدْنَا شَيْئًا، قَالَ صَاحِبَاىَ مَا نَرَى كِتَابًا. قَالَ قُلْتُ لَقَدْ عَلِمْتُ مَا كَذَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالَّذِي يُحْلَفُ بِهِ لَتُخْرِجِنَّ الْكِتَابَ أَوْ لأُجَرِّدَنَّكِ. قَالَ فَلَمَّا رَأَتِ الْجِدَّ مِنِّي أَهْوَتْ بِيَدِهَا إِلَى حُجْزَتِهَا وَهْىَ مُحْتَجِزَةٌ بِكِسَاءٍ فَأَخْرَجَتِ الْكِتَابَ ـ قَالَ ـ فَانْطَلَقْنَا بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا حَمَلَكَ يَا حَاطِبُ عَلَى مَا صَنَعْتَ "". قَالَ مَا بِي إِلاَّ أَنْ أَكُونَ مُؤْمِنًا بِاللَّهِ وَرَسُولِهِ، وَمَا غَيَّرْتُ وَلاَ بَدَّلْتُ، أَرَدْتُ أَنْ تَكُونَ لِي عِنْدَ الْقَوْمِ يَدٌ يَدْفَعُ اللَّهُ بِهَا عَنْ أَهْلِي وَمَالِي، وَلَيْسَ مِنْ أَصْحَابِكَ هُنَاكَ إِلاَّ وَلَهُ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ. قَالَ "" صَدَقَ فَلاَ تَقُولُوا لَهُ إِلاَّ خَيْرًا "". قَالَ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِنَّهُ قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالْمُؤْمِنِينَ، فَدَعْنِي فَأَضْرِبَ عُنُقَهُ. قَالَ فَقَالَ "" يَا عُمَرُ وَمَا يُدْرِيكَ لَعَلَّ اللَّهَ قَدِ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ وَجَبَتْ لَكُمُ الْجَنَّةُ "". قَالَ فَدَمَعَتْ عَيْنَا عُمَرَ وَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ.
பாடம்: 23 முஸ்லிம்க(ளின் இரகசியங்க) ளைக் காட்டிக்கொடுப்பதற்காக எழுதப்பட்ட கடிதத்தை, விவரம் தெரிந்துகொள்வதற்காக (இடை மறித்துப்) பார்வையிடுதல்
6259. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரைவீரர்களான என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும் அபூமர்ஸத் கன்னாஸ் பின் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி) அவர்களையும், “நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடம்வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகப் பல்லக்கில்) இணைவைப்பாளர்களில் ஒருத்தி இருப்பாள். இணைவைப்பாளர்க(ளின் தலைவர்க)ளுக்கு ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ அனுப்பியுள்ள (நமது இரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். (அவளிடமிருந்து அக்கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)” என்று கூறி அனுப்பினார்கள்.

(நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தனது ஒட்டகத்தில் சென்றுகொண்டிருக்க அவளை நாங்கள் சென்றடைந்தோம். “உன்னிடம் உள்ள கடிதம் எங்கே? (அதை எடு)” என்று கேட்டோம். அவள், “என்னிடம் கடிதம் ஏதுமில்லை” என்று பதிலளித்தாள். அவளிருந்த ஒட்டகத்தை நாங்கள் படுக்கவைத்து அதன் பல்லக்கினுள் (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். (கடிதம்) ஏதும் கிடைக்கவில்லை. என் நண்பர்கள் இருவரும், “கடிதம் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லையே!” என்று சொன்னார்கள்.

நான் (அவளிடம்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நான் உறுதியாக அறிந்துள்ளேன். எவன்மீது சத்தியம் செய்யப்படுமோ அ(ந்த இறை)வன்மீதாணையாக! ஒன்று நீயாகக் கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை (சோதனையிடுவதற்காக உனது ஆடையை) நான் கழற்ற வேண்டியிருக்கும்” என்று சொன்னேன். நான் விடாப்பிடியாக இருப்பதைக் கண்ட அவள், (கூந்தல் நீண்டு தொங்கும்) தனது இடுப்புப் பகுதிக்குத் தனது கையைக் கொண்டுசென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள்.

அந்தக் கடிதத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். (கடிதம் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்களை நோக்கி,) “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமுள்ளவனாக நடந்துகொள்வதைத் தவிர வேறெதுவும் எனக்கு நோக்கமில்லை. நான் (எனது மார்க்கத்தை) மாற்றிக்கொள்ளவுமில்லை; வேறு மதத்தைத் தேடவுமில்லை. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி, மக்களையும் எனது செல்வத் தையும் பாதுகாக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர் களுடைய மனைவி, மக்களையும் அவர் களது செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் மக்காவில் உள்ளனர்” என்று கூறினார்.

(இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி நல்லதையே கூறுங்கள்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள்.

அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கை யாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “உமரே! உமக்கென்ன தெரியும்? பத்ர் போரில் கலந்துகொண்டவர்களிடம் அல்லாஹ், ‘நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது’ என்று கூறிவிட்டிருக்கலாம் அல்லவா?” என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்களுடைய கண்கள் கண்ணீர் உகுத்தன. மேலும், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.37

அத்தியாயம் : 79
6260. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَخْبَرَهُ أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي نَفَرٍ مِنْ قُرَيْشٍ وَكَانُوا تِجَارًا بِالشَّأْمِ، فَأَتَوْهُ فَذَكَرَ الْحَدِيثَ قَالَ ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُرِئَ فَإِذَا فِيهِ "" بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ، السَّلاَمُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى، أَمَّا بَعْدُ "".
பாடம்: 24 வேதக்காரர்களுக்கு எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்?
6260. அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஷாம் (சிரியா) நாட்டில் வியாபாரம் செய்வதற்காகச் சென்றிருந்த குறைஷியர் சிலருடன் இருந்தபோது (அந்நாட்டு மன்னர்) ஹிரக்ளீயஸ் என்னை அழைத்துவரும்படி ஆளனுப்பினார். ஆகவே, அவரிடம் நாங்கள் சென்றோம்... பிறகு, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவரச் சொன்னார். அப்போது அது வாசிக்கப்பட்டது. அதில் (பின்வரு மாறு) எழுதப்பட்டிருந்தது:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் (கிழக்கு) ரோமானிய மன்னர் ஹிரக்ளீயஸிற்கு எழுதிக்கொண்டது. அஸ்ஸலாமு அலா மனித் தபஅல் ஹுதா. (நல்வழியைப் பின்தொடர்ந்தோருக்குச் சாந்தி உண்டாகட்டும்). பின்னர்...38

அத்தியாயம் : 79
6261. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ ذَكَرَ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ أَخَذَ خَشَبَةً فَنَقَرَهَا، فَأَدْخَلَ فِيهَا أَلْفَ دِينَارٍ وَصَحِيفَةً مِنْهُ إِلَى صَاحِبِهِ. وَقَالَ عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ عَنْ أَبِيهِ سَمِعَ أَبَا هُرَيْرَةَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" نَجَرَ خَشَبَةً، فَجَعَلَ الْمَالَ فِي جَوْفِهَا، وَكَتَبَ إِلَيْهِ صَحِيفَةً مِنْ فُلاَنٍ إِلَى فُلاَنٍ "".
பாடம்: 25 கடிதத்தில் யாருடைய பெயரை முதலில் குறிப்பிட வேண்டும்?
6261. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) இஸ்ரவேலர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். “அவர் ஒரு மரக்கட்டையை எடுத்து அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும் (தமக்குக் கடன் கொடுத்த) தம் நண்பருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்(துக் கடலில் அனுப்பிவைத்)தார்” என்று சொன்னார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள், “(இஸ்ரவேலரான) அவர் ஒரு மரக்கட்டையைத் துளையிட்டு அதன் நடுவே அந்தப் பணத்தை வைத்தார். மேலும், தம் நண்பருக்கு ‘இன்னாரிடமிருந்து இன்னாருக்கு’ என ஒரு கடிதம் எழுதி (அதையும் உள்ளே வைத்துக் கடலில் அனுப்பி)னார்” என்று குறிப்பிட்டதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.39

அத்தியாயம் : 79
6262. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ أَهْلَ، قُرَيْظَةَ نَزَلُوا عَلَى حُكْمِ سَعْدٍ فَأَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهِ فَجَاءَ فَقَالَ "" قُومُوا إِلَى سَيِّدِكُمْ "". أَوْ قَالَ "" خَيْرِكُمْ "". فَقَعَدَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ "". قَالَ فَإِنِّي أَحْكُمُ أَنْ تُقْتَلَ مُقَاتِلَتُهُمْ، وَتُسْبَى ذَرَارِيُّهُمْ. فَقَالَ "" لَقَدْ حَكَمْتَ بِمَا حَكَمَ بِهِ الْمَلِكُ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ أَفْهَمَنِي بَعْضُ أَصْحَابِي عَنْ أَبِي الْوَلِيدِ مِنْ قَوْلِ أَبِي سَعِيدٍ إِلَى حُكْمِكَ.
பாடம்: 26 “உங்கள் தலைவரை நோக்கி எழு(ந்து செல்லு)ங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது40
6262. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (யூதர்களான) ‘பனூ குறைழா குலத்தார்’ (கைபர் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பிட சஅத் அவர்கள் (வாகனத் தில் அமர்ந்தபடி) வந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “ ‘உங்கள் தலைவரை’ அல்லது ‘உங்களில் சிறந்தவரை’ நோக்கி எழுந்திரு(த்து சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கிவிடு)ங்கள்” என்று (அன்சாரிகளை நோக்கிச்) சொன்னார்கள்.

சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் (வந்து) நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்தபோது, “(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பளிக்கப்போகிறீர்கள்?)” என்றார்கள்.

சஅத் (ரலி) அவர்கள், “இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும்; இவர்களு டைய பெண்களும் குழந்தைகளும் கைது செய்யப்பட வேண்டும் என நான் தீர்ப்பளிக்கிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அரசன் எவ்வாறு தீர்ப்பளிப்பானோ அவ்வாறு நீங்கள் தீர்ப்பளித்துவிட்டீர்கள்” என்று சொன்னார்கள்.41

மற்றோர் அறிவிப்பில், “உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்துள்ளார்கள்” என்பதுவரை இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 79
6263. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ قُلْتُ لأَنَسٍ أَكَانَتِ الْمُصَافَحَةُ فِي أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ.
பாடம்: 27 கரம் பற்றுதல் (முஸாஃபஹா)42 இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் எனக்கு (தொழுகையின் அமர்வில் ஓதப்படும்) தஷஹ்ஹு(த் எனும் அத்தஹிய்யாத்)தைக் கற்றுக்கொடுத்தார்கள். அப்போது என் உள்ளங்கை அவர்களின் உள்ளங் கைகளுக்கு இடையே இருந்தது.43 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (நான் தபூக் போரில் பங்கேற்காமல் இருந்த விவகாரத்தில் எனக்கு மன்னிப் பளித்து இறைவசனம் அருளப்பெற்றபின்) நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் விரைந்தோடி வந்து என் கரத்தைப் பற்றி எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.44
6263. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் “முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபித்தோழர் களிடையே இருந்ததா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம் (இருந்தது)” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 79