6207. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَكِبَ عَلَى حِمَارٍ عَلَيْهِ قَطِيفَةٌ فَدَكِيَّةٌ وَأُسَامَةُ وَرَاءَهُ، يَعُودُ سَعْدَ بْنَ عُبَادَةَ فِي بَنِي حَارِثِ بْنِ الْخَزْرَجِ قَبْلَ وَقْعَةِ بَدْرٍ، فَسَارَا حَتَّى مَرَّا بِمَجْلِسٍ فِيهِ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ، وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ، فَإِذَا فِي الْمَجْلِسِ أَخْلاَطٌ مِنَ الْمُسْلِمِينَ وَالْمُشْرِكِينَ عَبَدَةِ الأَوْثَانِ وَالْيَهُودِ، وَفِي الْمُسْلِمِينَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ، فَلَمَّا غَشِيَتِ الْمَجْلِسَ عَجَاجَةُ الدَّابَّةِ خَمَّرَ ابْنُ أُبَىٍّ أَنْفَهُ بِرِدَائِهِ وَقَالَ لاَ تُغَبِّرُوا عَلَيْنَا. فَسَلَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَيْهِمْ، ثُمَّ وَقَفَ فَنَزَلَ فَدَعَاهُمْ إِلَى اللَّهِ وَقَرَأَ عَلَيْهِمُ الْقُرْآنَ، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ أَيُّهَا الْمَرْءُ لاَ أَحْسَنَ مِمَّا تَقُولُ إِنْ كَانَ حَقًّا، فَلاَ تُؤْذِنَا بِهِ فِي مَجَالِسِنَا، فَمَنْ جَاءَكَ فَاقْصُصْ عَلَيْهِ. قَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ بَلَى يَا رَسُولَ اللَّهِ فَاغْشَنَا فِي مَجَالِسِنَا فَإِنَّا نُحِبُّ ذَلِكَ. فَاسْتَبَّ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْيَهُودُ حَتَّى كَادُوا يَتَثَاوَرُونَ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْفِضُهُمْ حَتَّى سَكَتُوا، ثُمَّ رَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دَابَّتَهُ فَسَارَ حَتَّى دَخَلَ عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَىْ سَعْدُ أَلَمْ تَسْمَعْ مَا قَالَ أَبُو حُبَابٍ ـ يُرِيدُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ ـ قَالَ كَذَا وَكَذَا "". فَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ أَىْ رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ، اعْفُ عَنْهُ وَاصْفَحْ، فَوَالَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ لَقَدْ جَاءَ اللَّهُ بِالْحَقِّ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ، وَلَقَدِ اصْطَلَحَ أَهْلُ هَذِهِ الْبَحْرَةِ عَلَى أَنْ يُتَوِّجُوهُ وَيُعَصِّبُوهُ بِالْعِصَابَةِ، فَلَمَّا رَدَّ اللَّهُ ذَلِكَ بِالْحَقِّ الَّذِي أَعْطَاكَ شَرِقَ بِذَلِكَ فَذَلِكَ فَعَلَ بِهِ مَا رَأَيْتَ. فَعَفَا عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ يَعْفُونَ عَنِ الْمُشْرِكِينَ وَأَهْلِ الْكِتَابِ كَمَا أَمَرَهُمُ اللَّهُ، وَيَصْبِرُونَ عَلَى الأَذَى، قَالَ اللَّهُ تَعَالَى {وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ} الآيَةَ، وَقَالَ {وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ} فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَأَوَّلُ فِي الْعَفْوِ عَنْهُمْ مَا أَمَرَهُ اللَّهُ بِهِ حَتَّى أَذِنَ لَهُ فِيهِمْ، فَلَمَّا غَزَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَدْرًا، فَقَتَلَ اللَّهُ بِهَا مَنْ قَتَلَ مِنْ صَنَادِيدِ الْكُفَّارِ، وَسَادَةِ قُرَيْشٍ، فَقَفَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ مَنْصُورِينَ غَانِمِينَ مَعَهُمْ أُسَارَى مِنْ صَنَادِيدِ الْكُفَّارِ وَسَادَةِ قُرَيْشٍ قَالَ ابْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ، وَمَنْ مَعَهُ مِنَ الْمُشْرِكِينَ عَبَدَةِ الأَوْثَانِ هَذَا أَمْرٌ قَدْ تَوَجَّهَ فَبَايِعُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ فَأَسْلَمُوا.
பாடம்: 115 இணைகற்பிப்பவரின் குறிப்புப் பெயர் மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “அபூதாலிப் அவர்களின் புதல்வர் (அலீ, என் மகள் ஃபாத்திமாவை மணவிலக்குச் செய்துவிட) விரும்பினால் தவிர!” என்று கூறக் கேட்டேன்.235
6207. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து, தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக்கொண்டு ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல்நலம் குன்றி) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். இது பத்ர் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. நாங்கள் இருவரும் பயணித்து ஓர் அவையைக் கடந்துசென்றோம்.

அந்த அவையில் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இருந்தார். அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்குமுன் இது நடந்தது. அந்த அவையில் முஸ்óம்கள், சிலை வழிபாட்டாளர்களான இணை வைப்பாளர்கள், யூதர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். முஸ்லிம்களில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

(எங்கள்) ஊர்திப் பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்து கொண்ட போது (நயவஞ்சகர்) அப்துல்லாஹ் பின் உபை தமது மேல்துண்டால் தமது மூக்கைப் பொத்திக்கொண்டு, “எங்கள்மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்” என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ந்த அவையில் இருந்த)வர்களுக்கு சலாம் சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அழைத்தார்கள். மேலும், அவர்களுக்கு குர்ஆனை ஓதிக் காட்டினார்கள்.

இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி,) “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்று மில்லை. (ஆனாலும்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை தராதீர். உம்மிடம் வருவோரிடம் (இதை) எடுத் துரையுங்கள்” என்றார். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் தூதரே! (இந்த) அவையிலேயே (இதை) எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்” என்றார்கள்.

இதையொட்டி முஸ்லிம்களும் இணை வைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரை யொருவர்) ஏசத் தொடங்கி தாக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் மௌனமாகும்வரை அமைதிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்து சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, “சஅதே! அபூஹுபாப் (அப்துல்லாஹ் பின் உபை) சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? அவர் இப்படி இப்படிச் சொன்னார்” என்று அப்துல்லாஹ் பின் உபை சொன்னதைக் கூறினார்கள்.

(இதைக் கேட்ட) சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட் டும். அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன்மீது சத்தியமாக! இந்த (மதீனா) நகரவாசிகள் (அப்துல்லாஹ் பின் உபை எனும்) அவருக்குக் கிரீடம் அணிவித்து அவருக்கு முடிசூட்டிட முடிவு செய்துவிட்டிருந்த நேரத்தில் அல்லாஹ் தங்களுக்கு அருளிய சத்திய (மார்க்க)த்தைக் கொண்டுவந்தான். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய இந்த சத்திய(மார்க்க)த்தின் மூலம் அல்லாஹ்வே (இந்த நகரத்தாரின்) அந்த முடிவை நிராகரித்துவிட்டதைக் கண்ட அவர் ஆத்திரப்பட்டார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப இணைவைப்பாளர்களையும் வேதக்காரர்களையும் மன்னித்துவிடுபவர்களாகவும், (அவர்களின்) தொல்லைகளைச் சகித்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) உங்களுடைய செல்வங்களிலும் உங்களுடைய உயிர்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மேலும், உங்களுக்குமுன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைப்போரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் நீங்கள் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனை) அஞ்சினால் அதுதான் தீரச்செயலாகும்.(3:186)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறைநம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை இறைமறுப்பாளர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக்காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களின் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேயாம். ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும்வரை (அவர்களை) நீங்கள் மன்னித்து விட்டுவிடுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவன். (2:109)

‘அவர்களை மன்னித்து விட்டுவிட வேண்டும்’ என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அவர்கள் விஷயத்தில் (திட்டவட்டமான நடவடிக்கையெடுக்கும்படி) இறைவனிட மிருந்து தமக்கு ஆணை வரும்வரை அவர்களை மன்னித்து விட்டுவிட வேண்டும்’ என்பதையே விளக்கமாகக் கண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போர் புரிந்தபோது (அவர்களுடன் போரிட்ட) குறைஷித் தலைவர்களையும் இறைமறுப்பாளர்களின் தலைவர்களையும் பத்ரில் அல்லாஹ் அழித்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் வெற்றிவாகை சூடியவர்களாக, போர்ச் செல்வங்களைப் பெற்றவர்களாக (பத்ரிலிருந்து) திரும்பினார்கள். அவர்களுடன் குறைஷித் தலைவர்கள் மற்றும் இறைமறுப்பாளர்களின் தலைவர்கள் ஆகியோர் சிறைக்கைதிகளாக வந்தனர்.

அப்போது (அப்துல்லாஹ்) இப்னு உபை பின் சலூலும், அவருடன் இருந்த சிலை வழிபாட்டாளர்களான இணைவைப்பாளர்களும், “(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி அளித்துவிடுங்கள்” என்று கூறி, (வெளித்தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர்.236


அத்தியாயம் : 78
6208. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ، عَنْ عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ نَفَعْتَ أَبَا طَالِبٍ بِشَىْءٍ، فَإِنَّهُ كَانَ يَحُوطُكَ وَيَغْضَبُ لَكَ قَالَ "" نَعَمْ هُوَ فِي ضَحْضَاحٍ مِنْ نَارٍ، لَوْلاَ أَنَا لَكَانَ فِي الدَّرَكِ الأَسْفَلِ مِنَ النَّارِ "".
பாடம்: 115 இணைகற்பிப்பவரின் குறிப்புப் பெயர் மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “அபூதாலிப் அவர்களின் புதல்வர் (அலீ, என் மகள் ஃபாத்திமாவை மணவிலக்குச் செய்துவிட) விரும்பினால் தவிர!” என்று கூறக் கேட்டேன்.235
6208. அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், “அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் (அப்து மனாஃப்) அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (தங்கள் எதிரிகள்மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே!” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “ஆம்; அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையானால் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார்” என்று கூறினார்கள்.237

அத்தியாயம் : 78
6209. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي مَسِيرٍ لَهُ فَحَدَا الْحَادِي، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ارْفُقْ يَا أَنْجَشَةُ، وَيْحَكَ، بِالْقَوَارِيرِ "".
பாடம்: 116 சிலேடையாகப் பேசுவது பொய் ஆகாது.238 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் (நோயுற்றிருந்து) இறந்துவிட்டார். (இது தெரியாமல்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவியாரிடம்), “பையன் எவ்வாறிருக்கிறான்?” என்று கேட்டார்கள். அதற்கு (அவர்களுடைய துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “அவனது மூச்சு அமைதியாக உள்ளது. அவன் (நன்கு) ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டான் என்றே நம்புகிறேன்” எனப் பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் துணைவியார் கூறியது உண்மைதான் என்று எண்ணிக்கொண்டார்கள்.239
6209. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர் ஒருவர் (அன்ஜஷா என்பவர்) பாடினார். அப்போது (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், “அன்ஜஷா! உனக்குக் கேடுதான்! மெல்லப்போ. கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!” என்றார்கள்.240


அத்தியாயம் : 78
6210. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، وَأَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي سَفَرٍ، وَكَانَ غُلاَمٌ يَحْدُو بِهِنَّ يُقَالُ لَهُ أَنْجَشَةُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" رُوَيْدَكَ يَا أَنْجَشَةُ، سَوْقَكَ بِالْقَوَارِيرِ "". قَالَ أَبُو قِلاَبَةَ يَعْنِي النِّسَاءَ.
பாடம்: 116 சிலேடையாகப் பேசுவது பொய் ஆகாது.238 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் (நோயுற்றிருந்து) இறந்துவிட்டார். (இது தெரியாமல்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவியாரிடம்), “பையன் எவ்வாறிருக்கிறான்?” என்று கேட்டார்கள். அதற்கு (அவர்களுடைய துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “அவனது மூச்சு அமைதியாக உள்ளது. அவன் (நன்கு) ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டான் என்றே நம்புகிறேன்” எனப் பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் துணைவியார் கூறியது உண்மைதான் என்று எண்ணிக்கொண்டார்கள்.239
6210. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது ‘அன்ஜஷா’ எனப்படும் ஓர் அடிமை பாட்டுப்பாடி (ஒட்டகத்திலிருந்த) பெண்களை அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச்செல். கண்ணாடிக் குடுவைகளை -அதாவது பெண்களை -உடைத்துவிடாதே” என்றார்கள்.


அத்தியாயம் : 78
6211. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم حَادٍ يُقَالُ لَهُ أَنْجَشَةُ، وَكَانَ حَسَنَ الصَّوْتِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" رُوَيْدَكَ يَا أَنْجَشَةُ، لاَ تَكْسِرِ الْقَوَارِيرَ "". قَالَ قَتَادَةُ يَعْنِي ضَعَفَةَ النِّسَاءِ.
பாடம்: 116 சிலேடையாகப் பேசுவது பொய் ஆகாது.238 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் (நோயுற்றிருந்து) இறந்துவிட்டார். (இது தெரியாமல்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவியாரிடம்), “பையன் எவ்வாறிருக்கிறான்?” என்று கேட்டார்கள். அதற்கு (அவர்களுடைய துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “அவனது மூச்சு அமைதியாக உள்ளது. அவன் (நன்கு) ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டான் என்றே நம்புகிறேன்” எனப் பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் துணைவியார் கூறியது உண்மைதான் என்று எண்ணிக்கொண்டார்கள்.239
6211. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு ‘அன்ஜஷா’ எனப்படும் ‘பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர்’ ஒருவர் இருந்தார். அவர் அழகிய குரல் வளம் கொண்டவராக இருந்தார். (அவர் ஒருமுறை ஒட்டகத்தில் பெண்கள் இருக்க பாடிக்கொண்டிருந்தபோது) அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அன்ஜஷா! நிதானம்! கண்ணாடிக் குடுவைகளை உடைத்துவிடாதே!” என்று சொன்னார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மென்மையான பெண்களைக் கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் (கண்ணாடிக் குடுவைகள் என்று சிலேடையாகக்) கூறினார்கள்.


அத்தியாயம் : 78
6212. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ بِالْمَدِينَةِ فَزَعٌ فَرَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرَسًا لأَبِي طَلْحَةَ فَقَالَ "" مَا رَأَيْنَا مِنْ شَىْءٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا "".
பாடம்: 116 சிலேடையாகப் பேசுவது பொய் ஆகாது.238 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் (நோயுற்றிருந்து) இறந்துவிட்டார். (இது தெரியாமல்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவியாரிடம்), “பையன் எவ்வாறிருக்கிறான்?” என்று கேட்டார்கள். அதற்கு (அவர்களுடைய துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “அவனது மூச்சு அமைதியாக உள்ளது. அவன் (நன்கு) ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டான் என்றே நம்புகிறேன்” எனப் பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் துணைவியார் கூறியது உண்மைதான் என்று எண்ணிக்கொண்டார்கள்.239
6212. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனாவில் பீதி நிலவியது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களின் குதிரை ஒன்றில் ஏறி (விவரமறிந்து வரத் துணிவுடன்) புறப்பட்டார்கள். (திரும்பி வந்து) “(பீதி ஏற்படுத்தும்) எதையும் நாம் காணவில்லை. (தங்கு தடையின்றி) ஓடும் கடலாகவே நாம் இந்தக் குதிரையைக் கண்டோம்” என்று சொன்னார்கள்.241

அத்தியாயம் : 78
6213. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي يَحْيَى بْنُ عُرْوَةَ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ، يَقُولُ قَالَتْ عَائِشَةُ سَأَلَ أُنَاسٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْكُهَّانِ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَيْسُوا بِشَىْءٍ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ فَإِنَّهُمْ يُحَدِّثُونَ أَحْيَانًا بِالشَّىْءِ يَكُونُ حَقًّا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" تِلْكَ الْكَلِمَةُ مِنَ الْحَقِّ يَخْطَفُهَا الْجِنِّيُّ، فَيَقُرُّهَا فِي أُذُنِ وَلِيِّهِ قَرَّ الدَّجَاجَةِ، فَيَخْلِطُونَ فِيهَا أَكْثَرَ مِنْ مِائَةِ كَذْبَةٍ "".
பாடம்: 117 இருக்கும் ஒன்றை இல்லை என்று கூறுவது; அது சரியில்லை என்பதைக் குறிக்க242 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரு மண்ணறை களைக் காட்டி “(இவற்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ள) இவர்கள் இருவரும் பெரிய பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை; (இருப்பினும்,) அதுவும் பெரிய பாவம்தான்” என்று சொன்னார்கள்.243
6213. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சோதிடர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருளே அல்ல” என்று பதிலளித்தார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறா யின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மை யாகிவிடுகிறதே (அது எப்படி?)” என்று வினவினர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த உண்மையான வார்த்தைகளை (வானவரிடமிருந்து) ஜின் ஒட்டுக்கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பதுபோல் போட்டுவிடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்துவிடுகின்றனர்” என்று கூறினார்கள்.244

அத்தியாயம் : 78
6214. حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يَقُولُ أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" ثُمَّ فَتَرَ عَنِّي الْوَحْىُ، فَبَيْنَا أَنَا أَمْشِي سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ، فَرَفَعْتُ بَصَرِي إِلَى السَّمَاءِ فَإِذَا الْمَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ قَاعِدٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ "".
பாடம்: 118 வானத்தை அண்ணாந்து பார்த்தல்245 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று. மேலும், வானத்தை (அவர்கள் பார்க்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று. (88:17, 18) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள்.246
6214. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறகு (சுமார் மூன்று வருடம்) எனக்கு வேதஅறிவிப்பு வருவது நின்றுபோய் விட்டது. இதற்கிடையில் (ஒருநாள்) நான் நடந்து போய்க்கொண்டிருந்தேன். அப்போது வானிலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். உடனே வானத்தை அண்ணாந்து பார்த்தேன். அங்கு ‘ஹிரா’ (குகையில்) என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானத்துக்கும் பூமிக்கு மிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.247


அத்தியாயம் : 78
6215. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي شَرِيكٌ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بِتُّ فِي بَيْتِ مَيْمُونَةَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا، فَلَمَّا كَانَ ثُلُثُ اللَّيْلِ الآخِرُ أَوْ بَعْضُهُ قَعَدَ فَنَظَرَ إِلَى السَّمَاءِ فَقَرَأَ {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لأُولِي الأَلْبَابِ}.
பாடம்: 118 வானத்தை அண்ணாந்து பார்த்தல்245 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று. மேலும், வானத்தை (அவர்கள் பார்க்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று. (88:17, 18) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள்.246
6215. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நான் (என் சிறிய தாயார்) மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கினேன். அவர்களிடம் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். ‘இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி’ அல்லது ‘அதில் சிறிது நேரம்’ ஆனபோது நபி (ஸல்) அவர்கள் (படுக்கையிலிருந்து எழுந்து) அமர்ந்து வானத்தைப் பார்த்தவாறு “நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்கு சான்றுகள் பல உள்ளன” எனும் (3:190ஆவது) இறை வசனத்தை ஓதினார்கள்.248

அத்தியாயம் : 78
6216. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُثْمَانَ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى، أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ، وَفِي يَدِ النَّبِيِّ صلى الله عليه وسلم عُودٌ يَضْرِبُ بِهِ بَيْنَ الْمَاءِ وَالطِّينِ، فَجَاءَ رَجُلٌ يَسْتَفْتِحُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ "". فَذَهَبْتُ فَإِذَا أَبُو بَكْرٍ، فَفَتَحْتُ لَهُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ، ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ فَقَالَ "" افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ "". فَإِذَا عُمَرُ، فَفَتَحْتُ لَهُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ، ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ، وَكَانَ مُتَّكِئًا فَجَلَسَ فَقَالَ "" افْتَحْ {لَهُ} وَبَشِّرْهُ بِالْجَنَّةِ، عَلَى بَلْوَى تُصِيبُهُ أَوْ تَكُونُ "". فَذَهَبْتُ فَإِذَا عُثْمَانُ، فَفَتَحْتُ لَهُ، وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ، فَأَخْبَرْتُهُ بِالَّذِي قَالَ. قَالَ اللَّهُ الْمُسْتَعَانُ.
பாடம்: 119 (ஆழ்ந்த யோசனையில் உள்ள) ஒருவர் நீரிலும் களிமண்ணிலும் குச்சியால் தட்டுவது
6216. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். நபி (ஸல்) அவர்களின் கையில் தடி ஒன்று இருந்தது. (ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த) அவர்கள் அந்தத் தடியால் நீருக்கும் களிமண்ணுக்கும் இடையே (தரையில்) அடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் வந்து (வாயிற்கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அவருக்காகத் திறந்துவிடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் சென்றேன். அங்கே அபூபக்ர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்காக (வாயிற்கதவைத்) திறந்தேன். அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக (நபி (ஸல்) அவர்கள் கூறிய) நற்செய்தியைத் தெரிவித்தேன்.

பிறகு ஒரு மனிதர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், “அவருக்குத் திறந்துவிடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அங்கு உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்காக(க் கதவை)த் திறந்து அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக (நபி (ஸல்) அவர்கள் கூறிய) நற்செய்தியைத் தெரிவித்தேன்.

பிறகு ஒரு மனிதர் (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) சாய்ந்துகொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் (நேராக நிமிர்ந்து) அமர்ந்து, “(அவருக்கும்) திறந்துவிடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கவிருக்கிறது என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நானும் சென்றேன். (கதவைத் திறந்தேன்.) அங்கு உஸ்மான் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கும் நற்செய்தியைத் தெரிவித்து, நபி (ஸல்) அவர்கள் கூறியதையும் தெரிவித்தேன்.

அவர்கள் “(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின்போது) அல்லாஹ்வே (பொறுமையைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்” என்று சொன்னார்கள்.249

அத்தியாயம் : 78
6217. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، وَمَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي جَنَازَةٍ فَجَعَلَ يَنْكُتُ الأَرْضَ بِعُودٍ، فَقَالَ "" لَيْسَ مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ فُرِغَ مِنْ مَقْعَدِهِ مِنَ الْجَنَّةِ وَالنَّارِ "". فَقَالُوا أَفَلاَ نَتَّكِلُ قَالَ "" اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ "". {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى} الآيَةَ.
பாடம்: 120 (ஆழ்ந்த சிந்தனையில் உள்ள) ஒருவர் தமது கையிலுள்ள பொருளால் நிலத்தைக் கீறுவது
6217. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (‘பகீஉல் ஃகர்கத்’ எனும் பொது மைய வாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அவர்கள் ஒரு தடியால் தரையைக் கீறிய வண்ணம் (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், “தமது இருப்பிடம் சொர்க்கமா, அல்லது நரகமா எனத் தீர்மானிக்கப்படாத எவரும் உங்களில் இல்லை” என்று கூறினார்கள்.

அப்போது மக்கள் (சிலர்), “நாங்கள் (இதையே) நம்பி (நல்லறங்கள் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு “யார் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவர் (சொர்க்கத்தின்) நல்ல வழியில் செல்வதை நாம் எளிதாக்குவோம்” எனும் (92:5-7ஆகிய) வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.250

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 78
6218.
பாடம்: 121 ஆச்சரியம் மேலிடும்போது இறைவனைப் பெருமைப்படுத்துவதும் துதிப்பதும்251
6218. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள் இரவில்) நபி (ஸல்) அவர்கள் (திடீரென) விழித்தெழுந்து (பிரமிப்புடன்), “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன். இன்றிரவு) இறக்கிவைக்கப்பட்ட கருவூலங்கள்தான் என்ன? (இன்றிரவு) இறக்கிவைக்கப்பட்ட குழப்பங்கள்தான் என்ன? இந்த அறைகளில் உள்ள பெண்களை எழுப்பிவிடுகின்றவர் யார்? -தம் துணைவியர் குறித்தே இவ்வாறு கூறினார்கள்- அவர்கள் (அல்லாஹ்வைத்) தொழட்டும்! ஏனெனில், இவ்வுலகில் உடையணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுமையில் நிர்வாணமானவர்களாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள்.252

உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களிடம், “தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று (ஒரு சந்தர்ப் பத்தில்) கேட்டேன். அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்கள். நான் (ஆச்சரியப் பட்டவாறு) ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னேன்.253


அத்தியாயம் :
6219. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ،. وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزُورُهُ وَهْوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْغَوَابِرِ مِنْ رَمَضَانَ، فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً مِنَ الْعِشَاءِ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ، فَقَامَ مَعَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْلِبُهَا حَتَّى إِذَا بَلَغَتْ باب الْمَسْجِدِ الَّذِي عِنْدَ مَسْكَنِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَرَّ بِهِمَا رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ نَفَذَا، فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" عَلَى رِسْلِكُمَا، إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ "". قَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ. وَكَبُرَ عَلَيْهِمَا. قَالَ "" إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنِ ابْنِ آدَمَ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا "".
பாடம்: 121 ஆச்சரியம் மேலிடும்போது இறைவனைப் பெருமைப்படுத்துவதும் துதிப்பதும்251
6219. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ‘இஃதிகாஃப்’ இருந்துகொண்டிருந்தபோது அவர்களைச் சந்திப்பதற்காக நான் (பள்ளிவாசலுக்குச்) சென்றேன். (அந்த) இரவில் சிறிது நேரம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்ல எழுந்தபோது, என்னை அனுப்பிவைப்பதற்காக என்னுடன் நபி (ஸல்) அவர்களும் எழுந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களின் (மற்றொரு) துணைவியாரான உம்மு சலமா (ரலி) அவர்களின் இல்லத்தை ஒட்டியிருந்த பள்ளிவாசலின் வாயில் அருகில் வந்தபோது அன்சாரிகளில் இருவர் எங்களைக் கடந்து சென்றனர். அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முகமன் கூறிவிட்டுப் போய்க் கொண்டேயிருந்தனர்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருவரையும் பார்த்து, “சற்று பொறுங்கள்! (என்னுடன் இருக்கும்) இந்தப் பெண் ஸஃபிய்யா பின்த் ஹுயைதான்” என்றார்கள். அந்த இருவரும் (வியப்புடன்) ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்), அல்லாஹ்வின் தூதரே!” என்றனர். நபி (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தை அவர்கள் இருவருக்கும் பளுவாக இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் “ஷைத்தான் ஆதமின் மகனின் (மனிதனின்) இரத்த நாளங்களில்(கூட) ஓடுகின்றான். உங்கள் உள்ளங்களில் (சந்தேகம் அல்லது தீய எண்ணம் எதையாவது) அவன் போட்டுவிடுவானோ என நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள்.254

அத்தியாயம் : 78
6220. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ صُهْبَانَ الأَزْدِيَّ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْخَذْفِ وَقَالَ "" إِنَّهُ لاَ يَقْتُلُ الصَّيْدَ، وَلاَ يَنْكَأُ الْعَدُوَّ، وَإِنَّهُ يَفْقَأُ الْعَيْنَ، وَيَكْسِرُ السِّنَّ "".
பாடம்: 122 கல்சுண்டு விளையாட்டுக்கு (‘கத்ஃப்’) தடை
6220. அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கல்சுண்டு விளையாட்டிற்கு (‘கத்ஃப்’) நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள், “அது வேட்டைப் பிராணியையும் கொல்லாது; எதிரியையும் வீழ்த்தாது. மாறாக, அது கண்ணைப் பறித்துவிடும்; பல்லை உடைத்துவிடும்” என்று சொன்னார்கள்.255

அத்தியாயம் : 78
6221. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ عَطَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الآخَرَ، فَقِيلَ لَهُ فَقَالَ "" هَذَا حَمِدَ اللَّهَ، وَهَذَا لَمْ يَحْمَدِ اللَّهَ "".
பாடம்: 123 தும்மியவர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்வது
6221. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கருகில் இரு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் (‘யர்ஹமுகல்லாஹ்-அல்லாஹ் உமக்குக் கருணைபுரிவானாக’ என்று) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இவர் (தும்மியவுடன்) ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர், ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு மறுமொழி பகரவில்லை)” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 78
6222. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ، أَمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ، وَاتِّبَاعِ الْجِنَازَةِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَرَدِّ السَّلاَمِ، وَنَصْرِ الْمَظْلُومِ، وَإِبْرَارِ الْمُقْسِمِ، وَنَهَانَا عَنْ سَبْعٍ، عَنْ خَاتَمِ الذَّهَبِ ـ أَوْ قَالَ حَلْقَةِ الذَّهَبِ ـ وَعَنْ لُبْسِ الْحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالسُّنْدُسِ، وَالْمَيَاثِرِ.
பாடம்: 124 தும்மியவர் (‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று) அல்லாஹ்வைப் புகழ்ந்தால், அவருக்கு (‘யர்ஹமுகல்லாஹ்-அல்லாஹ் உமக்குக் கருணைபுரிவானாக’ என்று) மறுமொழி கூறுவது இது குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸ் அறிவிக் கப்பட்டுள்ளது.256
6222. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஏழு விஷயங் களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

எங்களுக்குக் கட்டளையிட்ட ஏழு விஷயங்கள் இவைதான்:

1.நோயாளிகளை நலம் விசாரிப்பது.2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மிய(வர் ‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று கூறினால் அ)வருக்கு (‘அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக’ என்று) மறுமொழி கூறுவது. 4. விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்வது. 5. சலாமுக்கு (முகமனுக்கு) பதில் உரைப்பது. 6. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது. 7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

(ஆண்களாகிய) எங்களுக்கு அவர்கள் தடை செய்த ஏழு விஷயங்கள் இவைதான்:

1. ‘பொன் மோதிரம் அணிவது’ அல்லது ‘பொன் வளையம் அணிவது’.2. சாதாரணப் பட்டு அணிவது. 3. அலங்காரப் பட்டு அணிவது. 4. மென்பட்டு அணிவது. 5. மென்பட்டுத் திண்டு பயன்படுத்துவது.257

அத்தியாயம் : 78
6223. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ، فَحَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ، وَأَمَّا التَّثَاوُبُ فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِذَا قَالَ هَا. ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ "".
பாடம்: 125 தும்மல் விரும்பத் தக்கது; கொட்டாவி விரும்பத் தகாதது.258
6223. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். ஆகவே, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்து லில் லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (‘யர்ஹமுக்கல்லாஹ்-அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்’ என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும்.

ஆனால், கொட்டாவி ஷைத்தானிட மிருந்து வருவதாகும். உங்களில் யாராவது கொட்டாவி விட்டால் முடிந்த வரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) ‘ஹா’ என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.259

அத்தியாயம் : 78
6224. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ. وَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ يَرْحَمُكَ اللَّهُ. فَإِذَا قَالَ لَهُ يَرْحَمُكَ اللَّهُ. فَلْيَقُلْ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ "".
பாடம்: 126 தும்மிய(வர் அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அவ)ருக்கு எவ்வாறு மறுமொழி கூற வேண்டும்?
6224. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

உங்களில் ஒருவர் தும்மினால், ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லட்டும்! (இதைக் கேட்கும்) ‘அவர் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹு பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 78
6225. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ عَطَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الآخَرَ. فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ شَمَّتَّ هَذَا وَلَمْ تُشَمِّتْنِي. قَالَ "" إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ، وَلَمْ تَحْمَدِ اللَّهَ "".
பாடம்: 127 தும்மியவர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று சொல்லவில்லையானால், அவருக்கு மறுமொழி சொல்லத் தேவையில்லை.
6225. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கருகில் இருவர் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் (‘அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக’ என) மறுமொழி கூறினார்கள். இன்னொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு மறுமொழி கூறினீர்கள். எனக்கு மறுமொழி கூறவில்லையே!” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவர் (தும்மியவுடன்) (‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று) இறைவனைப் புகழ்ந்தார். நீர் (‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறி) இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். உமக்கு மறுமொழி பகரவில்லை)” என்று பதிலளித்தார்கள்.260

அத்தியாயம் : 78
6226. حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ وَحَمِدَ اللَّهَ كَانَ حَقًّا عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يَقُولَ لَهُ يَرْحَمُكَ اللَّهُ. وَأَمَّا التَّثَاؤُبُ فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاوَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَثَاءَبَ ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ "".
பாடம்: 128 கொட்டாவி வரும்போது வாயில் கையை வைத்துக் (கட்டுப்படுத்திக்) கொள்ள வேண்டும்.
6226. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (‘அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக’ என) மறுமொழி கூறுவது அவசியமாகும்.

ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் யாராவது கொட்டாவி விட்டால் முடிந்த வரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் (கட்டுப்படுத்தாமல் ‘ஹா’ என்று சப்தமிட்டுக்) கொட்டாவி விட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.261

அத்தியாயம் : 78