6190. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَاهُ، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا اسْمُكَ "". قَالَ حَزْنٌ. قَالَ "" أَنْتَ سَهْلٌ "". قَالَ لاَ أُغَيِّرُ اسْمًا سَمَّانِيهِ أَبِي. قَالَ ابْنُ الْمُسَيَّبِ فَمَا زَالَتِ الْحُزُونَةُ فِينَا بَعْدُ. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، وَمَحْمُودٌ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، بِهَذَا.
பாடம்: 107 ‘அல்ஹஸ்ன்’ (முரடு) எனும் பெயர்
6190. முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (ஹஸ்ன் பின் அபீவஹ்ப்-ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார்கள். அவர்கள், “ஹஸ்ன்” (முரடு) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(இல்லை) நீங்கள் (இனிமேல்) ‘சஹ்ல்’ (மென்மை)” என்று சொன்னார்கள்.

அவர், “என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக்கொள்ளமாட்டேன்” என்றார். அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குணநலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது.

இதை சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஹஸ்ன் பின் அபீவஹ்ப் (ரலி) அவர்களிடமிருந்தும் இரு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 78
6191. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ أُتِيَ بِالْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ وُلِدَ، فَوَضَعَهُ عَلَى فَخِذِهِ وَأَبُو أُسَيْدٍ جَالِسٌ، فَلَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِشَىْءٍ بَيْنَ يَدَيْهِ، فَأَمَرَ أَبُو أُسَيْدٍ بِابْنِهِ فَاحْتُمِلَ مِنْ فَخِذِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَاسْتَفَاقَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَيْنَ الصَّبِيُّ "". فَقَالَ أَبُو أُسَيْدٍ قَلَبْنَاهُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" مَا اسْمُهُ "". قَالَ فُلاَنٌ. قَالَ "" وَلَكِنْ أَسْمِهِ الْمُنْذِرَ "". فَسَمَّاهُ يَوْمَئِذٍ الْمُنْذِرَ.
பாடம்: 108 ஒரு பெயரை, அதைவிடச் சிறந்த பெயராக மாற்றியமைப்பது216
6191. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ (ரலி) அவர்களின் புதல்வர் ‘முன்திர்’ என்பவர் பிறந்தவுடன் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அக்குழந்தையைத் தமது மடியில் வைத்துக்கொண்டார்கள். அப்போது (குழந்தையின் தந்தை) அபூஉசைத் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (திடீரென) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் நடந்த (சம்பவம்) ஒன்றினால் அவர்களின் கவனம் (வேறு பக்கம்) திரும்பியது. உடனே அபூஉசைத் (ரலி) அவர்கள் தம் புதல்வரை நபியவர்களின் மடியிலிருந்து எடுத்துவிடுமாறு கூற, அவ்வாறே (குழந்தை) தூக்கப்பட்டது.

(சிறிது நேரத்தில்) தன்னிலைக்குத் திரும்பிய நபி (ஸல்) அவர்கள் “அந்தக் குழந்தை எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஉசைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! குழந்தையை (வீட்டுக்கு) அனுப்பிவிட்டோம்” என்று கூறினார். “அக்குழந்தையின் பெயரென்ன?” என நபி (ஸல்) அவர்கள் கேட்க, ‘இன்னது’ என (தம் மகனுக்கு வைக்கப்பட்ட பெயரை) அபூஉசைத் கூறினார்கள்.

(அப்பெயர் பிடிக்காததால்) நபி (ஸல்) அவர்கள் “அல்ல; (இனிமேல்) அவர் பெயர் ‘முன்திர்’ (எச்சரிப்பவர்) ஆகும்” என்று கூறினார்கள். ஆகவே, அன்று அவருக்கு நபி (ஸல்) அவர்கள்தான் ‘முன்திர்’ எனப் பெயர் சூட்டினார்கள்.


அத்தியாயம் : 78
6192. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ زَيْنَبَ، كَانَ اسْمُهَا بَرَّةَ، فَقِيلَ تُزَكِّي نَفْسَهَا. فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْنَبَ.
பாடம்: 108 ஒரு பெயரை, அதைவிடச் சிறந்த பெயராக மாற்றியமைப்பது216
6192. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) ‘பர்ரா’ (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது “அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக்கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஸைனப்’ என்று பெயர் சூட்டினார்கள்.217


அத்தியாயம் : 78
6193. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، قَالَ جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ فَحَدَّثَنِي أَنَّ جَدَّهُ حَزْنًا قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم. فَقَالَ "" مَا اسْمُكَ "". قَالَ اسْمِي حَزْنٌ. قَالَ "" بَلْ أَنْتَ سَهْلٌ "". قَالَ مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمَّانِيهِ أَبِي. قَالَ ابْنُ الْمُسَيَّبِ فَمَا زَالَتْ فِينَا الْحُزُونَةُ بَعْدُ.
பாடம்: 108 ஒரு பெயரை, அதைவிடச் சிறந்த பெயராக மாற்றியமைப்பது216
6193. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் பாட்டனார் (ஹஸ்ன்-ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார்கள். அவர் ‘ஹஸ்ன்’ (முரடு) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் “இல்லை; நீங்கள் (இனிமேல்) ‘சஹ்ல்’ (மென்மை)” என்று சொன்னார்கள். அவர், “என் தந்தை எனக்குச் சூட்டிய பெயரை நான் மாற்றமாட்டேன்” என்றார்.

அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குணநலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது.218

அத்தியாயம் : 78
6194. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قُلْتُ لاِبْنِ أَبِي أَوْفَى رَأَيْتَ إِبْرَاهِيمَ ابْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَاتَ صَغِيرًا، وَلَوْ قُضِيَ أَنْ يَكُونَ بَعْدَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيٌّ عَاشَ ابْنُهُ، وَلَكِنْ لاَ نَبِيَّ بَعْدَهُ.
பாடம்: 109 இறைத்தூதர்களின் பெயர்களைச் சூட்டுவது “நபி (ஸல்) அவர்கள் தம் புதல்வர் இப்ராஹீமை முத்தமிட்டார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.219
6194. இஸ்மாயீல் பின் காலித் அல்பஜலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “தாங்கள் நபி (ஸல்) அவர்களின் புதல்வர் இப்ராஹீம் (ரலி) அவர்களைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(ஆம். பார்த்திருக்கிறேன். எனினும்,) அவர் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இறைத்தூதர் ஒருவர் இருப்பார் என (இறைவனால்) தீர்மானிக்கப்பட்டிருந்தால், நபி (ஸல்) அவர்களின் புதல்வர் (இப்ராஹீம் -ரலி) உயிர் வாழ்ந்திருப்பார். ஆனால், முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் எந்த இறைத்தூதரும் இல்லை (என்பதே இறைவனின் முடிவாகும்).


அத்தியாயம் : 78
6195. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، قَالَ لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ "".
பாடம்: 109 இறைத்தூதர்களின் பெயர்களைச் சூட்டுவது “நபி (ஸல்) அவர்கள் தம் புதல்வர் இப்ராஹீமை முத்தமிட்டார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.219
6195. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தம் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவருக்குப் பாலூட்டக்கூடிய செவிலித்தாய் சொர்க்கத்தில் இருக்கிறார்” என்று சொன்னார்கள்.220


அத்தியாயம் : 78
6196. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، فَإِنَّمَا أَنَا قَاسِمٌ أَقْسِمُ بَيْنَكُمْ "". وَرَوَاهُ أَنَسٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 109 இறைத்தூதர்களின் பெயர்களைச் சூட்டுவது “நபி (ஸல்) அவர்கள் தம் புதல்வர் இப்ராஹீமை முத்தமிட்டார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.219
6196. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்; ஆனால், (‘அபுல்காசிம்’ எனும்) என் குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்பவன் (காசிம்) ஆவேன்” என்று கூறினார்கள்.221

இதை அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.222


அத்தியாயம் : 78
6197. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "".
பாடம்: 109 இறைத்தூதர்களின் பெயர்களைச் சூட்டுவது “நபி (ஸல்) அவர்கள் தம் புதல்வர் இப்ராஹீமை முத்தமிட்டார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.219
6197. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், எனது (‘அபுல்காசிம்’ எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள். யார் என்னைக் கனவில் கண்டாரோ உண்மையில் அவர் என்னைத்தான் கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க முடியாது. என்மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.223


அத்தியாயம் : 78
6198. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ وُلِدَ لِي غُلاَمٌ، فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَمَّاهُ إِبْرَاهِيمَ، فَحَنَّكَهُ بِتَمْرَةٍ، وَدَعَا لَهُ بِالْبَرَكَةِ، وَدَفَعَهُ إِلَىَّ، وَكَانَ أَكْبَرَ وَلَدِ أَبِي مُوسَى.
பாடம்: 109 இறைத்தூதர்களின் பெயர்களைச் சூட்டுவது “நபி (ஸல்) அவர்கள் தம் புதல்வர் இப்ராஹீமை முத்தமிட்டார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.219
6198. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந் தது. அக்குழந்தையை நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். அப்போது அக்குழந்தைக்கு நபி (ஸல்) அவர்கள் ‘இப்ராஹீம்’ என்று பெயர் சூட்டி பேரீச்சம்பழத்தை மென்று குழந்தையின் வாயிலிட்டார்கள். அவனுக்காக வளம் வேண்டிப் பிரார்த்தனையும் புரிந்துவிட்டு என்னிடம் அவனைத் தந்தார்கள்.

அக்குழந்தையே அபூமூசா (ரலி) அவர்களின் மூத்த குழந்தையாகும்.224


அத்தியாயம் : 78
6199. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عِلاَقَةَ، سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، قَالَ انْكَسَفَتِ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ. رَوَاهُ أَبُو بَكْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 109 இறைத்தூதர்களின் பெயர்களைச் சூட்டுவது “நபி (ஸல்) அவர்கள் தம் புதல்வர் இப்ராஹீமை முத்தமிட்டார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.219
6199. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது.225

இதே ஹதீஸை அபூபக்ரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.226

அத்தியாயம் : 78
6200. أَخْبَرَنَا أَبُو نُعَيْمٍ الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَمَّا رَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ "" اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، وَسَلَمَةَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، وَالْمُسْتَضْعَفِينَ بِمَكَّةَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ "".
பாடம்: 110 ‘வலீத்’ எனப் பெயர் சூட்டுவது
6200. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி (‘குனூத்’ எனும் சிறப்புப் பிரார்த்தனையில் பின்வருமாறு) கூறினார்கள்:

இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரையும் மக்காவிóலுள்ள ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கை யாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா! (கடும்பகை) கொண்ட முளர் குலத்தார்மீது உனது பிடியை இறுக்கு வாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப்போல் இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!227

அத்தியாயம் : 78
6201. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا عَائِشَ هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلاَمَ "". قُلْتُ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ. قَالَتْ وَهْوَ يَرَى مَا لاَ نَرَى.
பாடம்: 111 நண்பரின் பெயரில் சில எழுத்துகளைக் குறைத்து (சுருக்கமாக) அழைப்பது228 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னை ‘அபூஹிர்!’ என அழைத்தார் கள்.229
6201. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷ்! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்” என்று சொன்னார்கள். நான், (சலாமுக்குப் பதில் கூறும் முகமாக) ‘வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்’ (அவர்மீதும் சாந்தி பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் பொழியட்டும்) என்று கூறினேன். மேலும், “நாங்கள் பார்க்க முடியாதவற்றை (நபி) அவர்கள் பார்க்கி றார்கள்” என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.230


அத்தியாயம் : 78
6202. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ أُمُّ سُلَيْمٍ فِي الثَّقَلِ وَأَنْجَشَةُ غُلاَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَسُوقُ بِهِنَّ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا أَنْجَشَ، رُوَيْدَكَ، سَوْقَكَ بِالْقَوَارِيرِ "".
பாடம்: 111 நண்பரின் பெயரில் சில எழுத்துகளைக் குறைத்து (சுருக்கமாக) அழைப்பது228 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னை ‘அபூஹிர்!’ என அழைத்தார் கள்.229
6202. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு பயணத்தில் என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பயணப் பொருட்களுடன் (அவற்றின் காவலராக) இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் அடிமையான ‘அன்ஜஷா’ (நபியவர்களுடைய) துணைவியரின் ஒட்டகங்களைப் பாட்டுப் பாடி ஓடச் செய்துகொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அன்ஜஷ்! நிதானமாக ஓட்டிச்செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!” என்றார்கள்.231

அத்தியாயம் : 78
6203. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ خُلُقًا، وَكَانَ لِي أَخٌ يُقَالُ لَهُ أَبُو عُمَيْرٍ ـ قَالَ أَحْسِبُهُ فَطِيمٌ ـ وَكَانَ إِذَا جَاءَ قَالَ "" يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ "". نُغَرٌ كَانَ يَلْعَبُ بِهِ، فَرُبَّمَا حَضَرَ الصَّلاَةَ وَهُوَ فِي بَيْتِنَا، فَيَأْمُرُ بِالْبِسَاطِ الَّذِي تَحْتَهُ فَيُكْنَسُ وَيُنْضَحُ، ثُمَّ يَقُومُ وَنَقُومُ خَلْفَهُ فَيُصَلِّي بِنَا.
பாடம்: 112 சிறுவனுக்குக் குறிப்புப் பெயர் சூட்டுவதும், குழந்தை பிறப்ப தற்கு முன்பே ஒருவருக்குக் குறிப்புப் பெயர் சூட்டுவதும் (செல்லும்).232
6203. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கி னார்கள். எனக்கு ‘அபூஉமைர்’ என்ற ழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார். அப்போது அவர் பால்குடி மறக்கவைக் கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகிறேன். நபி (ஸல்) அவர்கள் (எம் வீட்டிற்கு வந்தால்), “அபூஉமைரே! பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கிறது?” என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக்கொண்டிருப்பான்.

சில வேளை நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது தொழுகைக்குத் தயாராகிவிடுவார்கள். தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டிச் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அப்போது அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள்.233

அத்தியாயம் : 78
6204. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ إِنْ كَانَتْ أَحَبَّ أَسْمَاءِ عَلِيٍّ ـ رضى الله عنه ـ إِلَيْهِ لأَبُو تُرَابٍ، وَإِنْ كَانَ لَيَفْرَحُ أَنْ يُدْعَى بِهَا، وَمَا سَمَّاهُ أَبُو تُرَابٍ إِلاَّ النَّبِيُّ صلى الله عليه وسلم غَاضَبَ يَوْمًا فَاطِمَةَ فَخَرَجَ فَاضْطَجَعَ إِلَى الْجِدَارِ إِلَى الْمَسْجِدِ، فَجَاءَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتْبَعُهُ، فَقَالَ هُوَ ذَا مُضْطَجِعٌ فِي الْجِدَارِ فَجَاءَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم وَامْتَلأَ ظَهْرُهُ تُرَابًا، فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَمْسَحُ التُّرَابَ عَنْ ظَهْرِهِ يَقُولُ "" اجْلِسْ يَا أَبَا تُرَابٍ "".
பாடம்: 113 ஒருவருக்கு வேறு குறிப்புப் பெயர் இருக்கவே ‘அபூதுராப்’ (மண்ணின் தந்தை) எனும் குறிப்புப் பெயர் சூட்டுவது
6204. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களுக்கு ‘அபூதுராப்’ (மண்ணின் தந்தை) எனும் குறிப்புப் பெயரே மிகவும் பிரியமானதாக இருந் தது. மேலும், அப்பெயர் சொல்லி தாம் அழைக்கப்படுவதையே அவர்கள் விரும்பினார்கள். அவர்களுக்கு ‘அபூதுராப்’ என நபி (ஸல்) அவர்களே பெயர் சூட்டினார்கள். (அப்பெயர் அவர்களுக்குச் சூட்டப்பட்டதற்கான காரணம்:)

ஒருநாள் அலீ (ரலி) அவர்கள் (தம் துணைவியாரான) ஃபாத்திமா (ரலி) அவர்கள் மீது (ஏதோ காரணத்திற்காகக்) கோபப்பட்டு வெளியேறிச் சென்று பள்ளிவாசலில் ஒரு சுவரில் சாய்ந்து படுத்துக்கொண்டார்கள். அவர்களை (தேடியவாறு) பின்தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ஒருவர், “அவர் இதோ பள்ளிவாசலில் சுவரில் சாய்ந்து படுத்திருக்கிறார்” என்று கூறினார்.

ஆகவே, அலீ (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். (படுத்திருந்த தால்) அலீ (ரலி) அவர்களுடைய முதுகில் நிறைய மண் படிந்திருந்தது. நபி (ஸல்) அவர்கள் அலீயின் முதுகிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே “அபூதுராபே! (மண்ணின் தந்தையே! எழுந்து) அமருங்கள்” என்று கூறினார்கள்.234

அத்தியாயம் : 78
6205. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَخْنَى الأَسْمَاءِ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ اللَّهِ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ "".
பாடம்: 114 அல்லாஹ்வின் கோபத்திற்குரிய பெயர்
6205. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒரு மனிதர் தமக்கு ‘மன்னாதி மன்னன்’ (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 78
6206. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رِوَايَةً قَالَ "" أَخْنَعُ اسْمٍ عِنْدَ اللَّهِ ـ وَقَالَ سُفْيَانُ غَيْرَ مَرَّةٍ أَخْنَعُ الأَسْمَاءِ عِنْدَ اللَّهِ ـ رَجُلٌ تَسَمَّى بِمَلِكِ الأَمْلاَكِ "". قَالَ سُفْيَانُ يَقُولُ غَيْرُهُ تَفْسِيرُهُ شَاهَانْ شَاهْ.
பாடம்: 114 அல்லாஹ்வின் கோபத்திற்குரிய பெயர்
6206. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன் தனக்கு ‘மன்னாதி மன்னன்’ (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “பெயர்களில் மிகவும் கேவலமானது...” என்றும், வேறுசிலர் (‘மலிக்குல் அம்லாக்’ என்பதற்கு பாரசீக மொழியில்) ஷாஹான் ஷாஹ் (அரசர்களுக்கு அரசன்) என்று விளக்கம் கூறினர்” என்றும் வந்துள்ளது.

அத்தியாயம் : 78
6207. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَكِبَ عَلَى حِمَارٍ عَلَيْهِ قَطِيفَةٌ فَدَكِيَّةٌ وَأُسَامَةُ وَرَاءَهُ، يَعُودُ سَعْدَ بْنَ عُبَادَةَ فِي بَنِي حَارِثِ بْنِ الْخَزْرَجِ قَبْلَ وَقْعَةِ بَدْرٍ، فَسَارَا حَتَّى مَرَّا بِمَجْلِسٍ فِيهِ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ، وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ، فَإِذَا فِي الْمَجْلِسِ أَخْلاَطٌ مِنَ الْمُسْلِمِينَ وَالْمُشْرِكِينَ عَبَدَةِ الأَوْثَانِ وَالْيَهُودِ، وَفِي الْمُسْلِمِينَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ، فَلَمَّا غَشِيَتِ الْمَجْلِسَ عَجَاجَةُ الدَّابَّةِ خَمَّرَ ابْنُ أُبَىٍّ أَنْفَهُ بِرِدَائِهِ وَقَالَ لاَ تُغَبِّرُوا عَلَيْنَا. فَسَلَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَيْهِمْ، ثُمَّ وَقَفَ فَنَزَلَ فَدَعَاهُمْ إِلَى اللَّهِ وَقَرَأَ عَلَيْهِمُ الْقُرْآنَ، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ أَيُّهَا الْمَرْءُ لاَ أَحْسَنَ مِمَّا تَقُولُ إِنْ كَانَ حَقًّا، فَلاَ تُؤْذِنَا بِهِ فِي مَجَالِسِنَا، فَمَنْ جَاءَكَ فَاقْصُصْ عَلَيْهِ. قَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ بَلَى يَا رَسُولَ اللَّهِ فَاغْشَنَا فِي مَجَالِسِنَا فَإِنَّا نُحِبُّ ذَلِكَ. فَاسْتَبَّ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْيَهُودُ حَتَّى كَادُوا يَتَثَاوَرُونَ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْفِضُهُمْ حَتَّى سَكَتُوا، ثُمَّ رَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دَابَّتَهُ فَسَارَ حَتَّى دَخَلَ عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَىْ سَعْدُ أَلَمْ تَسْمَعْ مَا قَالَ أَبُو حُبَابٍ ـ يُرِيدُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ ـ قَالَ كَذَا وَكَذَا "". فَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ أَىْ رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ، اعْفُ عَنْهُ وَاصْفَحْ، فَوَالَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ لَقَدْ جَاءَ اللَّهُ بِالْحَقِّ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ، وَلَقَدِ اصْطَلَحَ أَهْلُ هَذِهِ الْبَحْرَةِ عَلَى أَنْ يُتَوِّجُوهُ وَيُعَصِّبُوهُ بِالْعِصَابَةِ، فَلَمَّا رَدَّ اللَّهُ ذَلِكَ بِالْحَقِّ الَّذِي أَعْطَاكَ شَرِقَ بِذَلِكَ فَذَلِكَ فَعَلَ بِهِ مَا رَأَيْتَ. فَعَفَا عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ يَعْفُونَ عَنِ الْمُشْرِكِينَ وَأَهْلِ الْكِتَابِ كَمَا أَمَرَهُمُ اللَّهُ، وَيَصْبِرُونَ عَلَى الأَذَى، قَالَ اللَّهُ تَعَالَى {وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ} الآيَةَ، وَقَالَ {وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ} فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَأَوَّلُ فِي الْعَفْوِ عَنْهُمْ مَا أَمَرَهُ اللَّهُ بِهِ حَتَّى أَذِنَ لَهُ فِيهِمْ، فَلَمَّا غَزَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَدْرًا، فَقَتَلَ اللَّهُ بِهَا مَنْ قَتَلَ مِنْ صَنَادِيدِ الْكُفَّارِ، وَسَادَةِ قُرَيْشٍ، فَقَفَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ مَنْصُورِينَ غَانِمِينَ مَعَهُمْ أُسَارَى مِنْ صَنَادِيدِ الْكُفَّارِ وَسَادَةِ قُرَيْشٍ قَالَ ابْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ، وَمَنْ مَعَهُ مِنَ الْمُشْرِكِينَ عَبَدَةِ الأَوْثَانِ هَذَا أَمْرٌ قَدْ تَوَجَّهَ فَبَايِعُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ فَأَسْلَمُوا.
பாடம்: 115 இணைகற்பிப்பவரின் குறிப்புப் பெயர் மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “அபூதாலிப் அவர்களின் புதல்வர் (அலீ, என் மகள் ஃபாத்திமாவை மணவிலக்குச் செய்துவிட) விரும்பினால் தவிர!” என்று கூறக் கேட்டேன்.235
6207. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து, தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக்கொண்டு ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல்நலம் குன்றி) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். இது பத்ர் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. நாங்கள் இருவரும் பயணித்து ஓர் அவையைக் கடந்துசென்றோம்.

அந்த அவையில் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இருந்தார். அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்குமுன் இது நடந்தது. அந்த அவையில் முஸ்óம்கள், சிலை வழிபாட்டாளர்களான இணை வைப்பாளர்கள், யூதர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். முஸ்லிம்களில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

(எங்கள்) ஊர்திப் பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்து கொண்ட போது (நயவஞ்சகர்) அப்துல்லாஹ் பின் உபை தமது மேல்துண்டால் தமது மூக்கைப் பொத்திக்கொண்டு, “எங்கள்மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்” என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ந்த அவையில் இருந்த)வர்களுக்கு சலாம் சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அழைத்தார்கள். மேலும், அவர்களுக்கு குர்ஆனை ஓதிக் காட்டினார்கள்.

இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி,) “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்று மில்லை. (ஆனாலும்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை தராதீர். உம்மிடம் வருவோரிடம் (இதை) எடுத் துரையுங்கள்” என்றார். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் தூதரே! (இந்த) அவையிலேயே (இதை) எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்” என்றார்கள்.

இதையொட்டி முஸ்லிம்களும் இணை வைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரை யொருவர்) ஏசத் தொடங்கி தாக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் மௌனமாகும்வரை அமைதிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்து சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, “சஅதே! அபூஹுபாப் (அப்துல்லாஹ் பின் உபை) சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? அவர் இப்படி இப்படிச் சொன்னார்” என்று அப்துல்லாஹ் பின் உபை சொன்னதைக் கூறினார்கள்.

(இதைக் கேட்ட) சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட் டும். அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன்மீது சத்தியமாக! இந்த (மதீனா) நகரவாசிகள் (அப்துல்லாஹ் பின் உபை எனும்) அவருக்குக் கிரீடம் அணிவித்து அவருக்கு முடிசூட்டிட முடிவு செய்துவிட்டிருந்த நேரத்தில் அல்லாஹ் தங்களுக்கு அருளிய சத்திய (மார்க்க)த்தைக் கொண்டுவந்தான். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய இந்த சத்திய(மார்க்க)த்தின் மூலம் அல்லாஹ்வே (இந்த நகரத்தாரின்) அந்த முடிவை நிராகரித்துவிட்டதைக் கண்ட அவர் ஆத்திரப்பட்டார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப இணைவைப்பாளர்களையும் வேதக்காரர்களையும் மன்னித்துவிடுபவர்களாகவும், (அவர்களின்) தொல்லைகளைச் சகித்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) உங்களுடைய செல்வங்களிலும் உங்களுடைய உயிர்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மேலும், உங்களுக்குமுன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைப்போரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் நீங்கள் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனை) அஞ்சினால் அதுதான் தீரச்செயலாகும்.(3:186)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறைநம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை இறைமறுப்பாளர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக்காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களின் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேயாம். ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும்வரை (அவர்களை) நீங்கள் மன்னித்து விட்டுவிடுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவன். (2:109)

‘அவர்களை மன்னித்து விட்டுவிட வேண்டும்’ என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அவர்கள் விஷயத்தில் (திட்டவட்டமான நடவடிக்கையெடுக்கும்படி) இறைவனிட மிருந்து தமக்கு ஆணை வரும்வரை அவர்களை மன்னித்து விட்டுவிட வேண்டும்’ என்பதையே விளக்கமாகக் கண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போர் புரிந்தபோது (அவர்களுடன் போரிட்ட) குறைஷித் தலைவர்களையும் இறைமறுப்பாளர்களின் தலைவர்களையும் பத்ரில் அல்லாஹ் அழித்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் வெற்றிவாகை சூடியவர்களாக, போர்ச் செல்வங்களைப் பெற்றவர்களாக (பத்ரிலிருந்து) திரும்பினார்கள். அவர்களுடன் குறைஷித் தலைவர்கள் மற்றும் இறைமறுப்பாளர்களின் தலைவர்கள் ஆகியோர் சிறைக்கைதிகளாக வந்தனர்.

அப்போது (அப்துல்லாஹ்) இப்னு உபை பின் சலூலும், அவருடன் இருந்த சிலை வழிபாட்டாளர்களான இணைவைப்பாளர்களும், “(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி அளித்துவிடுங்கள்” என்று கூறி, (வெளித்தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர்.236


அத்தியாயம் : 78
6208. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ، عَنْ عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ نَفَعْتَ أَبَا طَالِبٍ بِشَىْءٍ، فَإِنَّهُ كَانَ يَحُوطُكَ وَيَغْضَبُ لَكَ قَالَ "" نَعَمْ هُوَ فِي ضَحْضَاحٍ مِنْ نَارٍ، لَوْلاَ أَنَا لَكَانَ فِي الدَّرَكِ الأَسْفَلِ مِنَ النَّارِ "".
பாடம்: 115 இணைகற்பிப்பவரின் குறிப்புப் பெயர் மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “அபூதாலிப் அவர்களின் புதல்வர் (அலீ, என் மகள் ஃபாத்திமாவை மணவிலக்குச் செய்துவிட) விரும்பினால் தவிர!” என்று கூறக் கேட்டேன்.235
6208. அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், “அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் (அப்து மனாஃப்) அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (தங்கள் எதிரிகள்மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே!” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “ஆம்; அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையானால் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார்” என்று கூறினார்கள்.237

அத்தியாயம் : 78
6209. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي مَسِيرٍ لَهُ فَحَدَا الْحَادِي، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ارْفُقْ يَا أَنْجَشَةُ، وَيْحَكَ، بِالْقَوَارِيرِ "".
பாடம்: 116 சிலேடையாகப் பேசுவது பொய் ஆகாது.238 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் (நோயுற்றிருந்து) இறந்துவிட்டார். (இது தெரியாமல்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவியாரிடம்), “பையன் எவ்வாறிருக்கிறான்?” என்று கேட்டார்கள். அதற்கு (அவர்களுடைய துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “அவனது மூச்சு அமைதியாக உள்ளது. அவன் (நன்கு) ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டான் என்றே நம்புகிறேன்” எனப் பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் துணைவியார் கூறியது உண்மைதான் என்று எண்ணிக்கொண்டார்கள்.239
6209. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர் ஒருவர் (அன்ஜஷா என்பவர்) பாடினார். அப்போது (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், “அன்ஜஷா! உனக்குக் கேடுதான்! மெல்லப்போ. கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!” என்றார்கள்.240


அத்தியாயம் : 78