6175. قَالَ سَالِمٌ قَالَ عَبْدُ اللَّهِ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ " إِنِّي أُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلاَّ وَقَدْ أَنْذَرَ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَهُ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنِّي سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلاً لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ، وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ ".
பாடம்: 97
ஒருவர் மற்றொருவரிடம் ‘விலகிப்போ’ என்று கூறுவது192
6175. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்கே உரிய பெருமைகளால் புகழ்ந்தபிறகு, (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது “அவனைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத்தாரை எச்சரிக்காமலிருந்ததில்லை. (இறைத்தூதர்) நூஹ் அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்திருக்கிறார்கள்.
அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தம் சமூகத்தாருக்குக் கூறாத ஓர் அடையாளத்தை உங்களுக்கு நான் கூறுகிறேன்: அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று சொன்னார்கள்.196
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:
(‘விலகிப்போ’ எனும் பொருள் கொண்ட ‘இக்ஸஃ’ எனும் சொல்லின் இறந்தகால வினைச் சொல்லான) ‘கஸஃத்துல் கல்ப’ எனும் சொல்லுக்கு ‘நாயை தூர விரட்டினேன்’ என்பது பொருள். ‘காஸிஈன்’ என்பதற்கு ‘விரட்டப்பட்டவர்கள்’ என்பது பொருள்.
அத்தியாயம் : 78

6176. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَرْحَبًا بِالْوَفْدِ الَّذِينَ جَاءُوا غَيْرَ خَزَايَا وَلاَ نَدَامَى "". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا حَىٌّ مِنْ رَبِيعَةَ وَبَيْنَنَا وَبَيْنَكَ مُضَرُ، وَإِنَّا لاَ نَصِلُ إِلَيْكَ إِلاَّ فِي الشَّهْرِ الْحَرَامِ، فَمُرْنَا بِأَمْرٍ فَصْلٍ نَدْخُلُ بِهِ الْجَنَّةَ، وَنَدْعُو بِهِ مَنْ وَرَاءَنَا. فَقَالَ "" أَرْبَعٌ وَأَرْبَعٌ أَقِيمُوا الصَّلاَةَ، وَآتُوا الزَّكَاةَ، وَصَوْمُ رَمَضَانَ، وَأَعْطُوا خُمُسَ مَا غَنِمْتُمْ، وَلاَ تَشْرَبُوا فِي الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالنَّقِيرِ، وَالْمُزَفَّتِ "".
பாடம்: 98
‘நல்வரவு’ (மர்ஹபா) கூறல்197
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமாவைக் கண்டதும்) “என் புதல்விக்கு நல்வரவு” என்று கூறினார்கள்.198
உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (என் ஒன்றுவிட்ட சகோதரரான) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “உம்மு ஹானீக்கு நல்வரவு!” என்று கூறி (வர வேற்கலா)னார்கள்.199
6176. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு தம்மிடம் வந்தபோது, “இழிவுக்குள்ளா காமலும் மன வருத்தத்திற்குள்ளாகாமலும் வருகை புரிந்த தூதுக் குழுவினரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் (வாழ்த்துக்) கூறினார்கள்.
அப்போது அக்குழுவினர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ரபீஆ குலத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தாராவோம். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே (இறைமறுப்பாளர்களான) ‘முளர்’ குலத்தார் (தடையாக) உள்ளனர். (போர் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களில் தவிர (வேறு மாதத்தில்) தங்களிடம் நாங்கள் வந்துசேர முடிவதில்லை. எனவே (வாய்மையையும் பொய்மையையும் பாகுபடுத்தும்) சில தீர்க்கமான விஷயங் களை எங்களுக்குக் கட்டளையிடுங்கள். அத(னைக் கடைப்பிடிப்பத)ன் மூலம் நாங்கள் சொர்க்கம் செல்வோம். எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் தங்கிவிட்ட)வர்களுக்கு அறிவிப்போம்” என்றார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான்கு (விஷயங்களைக் கட்டளையிடுகிறேன்). நான்கு (விஷயங்களைத் தடை செய்கிறேன்). தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தைச் செலுத்துங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு நோறுங்கள். உங்களுக்குக் கிடைக்கும் போர்ச் செல்வத்திலிருந்து ஐந்தில் ஒரு பங்கை (குமுஸ்) கொடுத்துவிடுங்கள்.
மேலும், (மது ஊற்றிவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய்க் குடுவை; மண்சாடி; பேரீச்சமரத்தின் பீப்பாய்; தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் நீங்கள் பருகாதீர்கள்” என்று சொன்னார்கள்.200

6177. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْغَادِرُ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، يُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ "".
பாடம்: 99
(மறுமையில்) மனிதர்கள் தம் தந்தையர் பெயருடன் (இணைத்து) அழைக்கப்படுவர்
6177. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு, “இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)” என்று கூறப்படும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6178. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الْغَادِرَ يُنْصَبُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، فَيُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ "".
பாடம்: 99
(மறுமையில்) மனிதர்கள் தம் தந்தையர் பெயருடன் (இணைத்து) அழைக்கப்படுவர்
6178. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்ச மிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது “இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)” என்று கூறப்படும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.201

6179. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي. وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي "".
பாடம்: 100
(மனக் குழப்பத்திலுள்ள) ஒருவர் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம்.
6179. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம். மாறாக, (‘என் மனம் கனத்துவிட்டது’ எனும் பொருள் கொண்ட) ‘லகிசத் நஃப்ஸீ’ எனும் சொல்லையே கூறட்டும்.202
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6180. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي، وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي "". تَابَعَهُ عُقَيْلٌ.
பாடம்: 100
(மனக் குழப்பத்திலுள்ள) ஒருவர் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம்.
6180. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லை ஆள வேண்டாம். மாறாக, (‘என் மனம் கனத்துவிட்டது’ எனும் பொருள்தரும்) ‘லகிசத் நஃப்ஸீ’ எனும் சொல்லையே ஆளட்டும்.
இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6181. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَالَ اللَّهُ يَسُبُّ بَنُو آدَمَ الدَّهْرَ، وَأَنَا الدَّهْرُ، بِيَدِي اللَّيْلُ وَالنَّهَارُ "".
பாடம்: 101
காலத்தை ஏசாதீர்கள்.
6181. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவு பகல் (இயக்கம்) உள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.203

6182. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُسَمُّوا الْعِنَبَ الْكَرْمَ، وَلاَ تَقُولُوا خَيْبَةَ الدَّهْرِ. فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ "".
பாடம்: 101
காலத்தை ஏசாதீர்கள்.
6182. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திராட்சையை (‘கண்ணியமானது’ எனும் பொருள் கொண்ட) ‘அல்கர்ம்’ என்று பெயரிட்டழைக்காதீர்கள். ‘மோசமான காலமே!’ என்று (காலத்தை ஏசிக்) கூறாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்தவன்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6183. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَيَقُولُونَ الْكَرْمُ، إِنَّمَا الْكَرْمُ قَلْبُ الْمُؤْمِنِ "".
பாடம்: 102
“கண்ணியத்திற்குரியது (‘அல்கர்ம்’) இறைநம்பிக்கையாளரின் இதயமே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது204
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மையில் திவாலானவன் யாரெனில், மறுமை நாளில் திவாலானவனே ஆவான்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கோபம் வரும்போது தன்னை ஆள்பவனே (உண்மையில்) வீரன் ஆவான்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது.
இவ்வாறு ஆட்சியதிகாரத்தின் எல்லையை நபியவர்கள் இறைவனுடன் முற்றுப்பெறச் செய்துள்ள அதே வேளையில் அரசர்கள் குறித்துப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்:
அரசர்கள் ஒரு நகரத்துக்குள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதை அவர்கள் அழித்து விடுகிறார்கள். (27:34)205
6183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் (திராட்சைப் பழத்திற்கு) ‘அல்கர்ம்’ (கண்ணியமானது) என்று சொல்கின்றனர். உண்மையில் இறை நம்பிக்கையாளரின் இதயமே ‘அல்கர்ம்’ (கண்ணியத்திற்குரியது) ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 78
6183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் (திராட்சைப் பழத்திற்கு) ‘அல்கர்ம்’ (கண்ணியமானது) என்று சொல்கின்றனர். உண்மையில் இறை நம்பிக்கையாளரின் இதயமே ‘அல்கர்ம்’ (கண்ணியத்திற்குரியது) ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 78
6184. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُفَدِّي أَحَدًا غَيْرَ سَعْدٍ، سَمِعْتُهُ يَقُولُ "" ارْمِ فَدَاكَ أَبِي وَأُمِّي "". أَظُنُّهُ يَوْمَ أُحُدٍ.
பாடம்: 103
“என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று ஒருவர் சொல்வது206
இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.207
6184. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தவிர வேறெவருக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தாய் தந்தையரை அர்ப்பணிப்பதாகக் கூறியதை நான் கேட்டதில்லை. (சஅத் அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறியதைக் கேட்டேன். இது உஹுத் போர் நாளில் நடைபெற்றதாகவே நான் எண்ணுகிறேன்.208

6185. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ أَقْبَلَ هُوَ وَأَبُو طَلْحَةَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم صَفِيَّةُ، مُرْدِفَهَا عَلَى رَاحِلَتِهِ، فَلَمَّا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ عَثَرَتِ النَّاقَةُ، فَصُرِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَالْمَرْأَةُ، وَأَنَّ أَبَا طَلْحَةَ ـ قَالَ أَحْسِبُ ـ اقْتَحَمَ عَنْ بَعِيرِهِ، فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاكَ، هَلْ أَصَابَكَ مِنْ شَىْءٍ. قَالَ "" لاَ وَلَكِنْ عَلَيْكَ بِالْمَرْأَةِ "". فَأَلْقَى أَبُو طَلْحَةَ ثَوْبَهُ عَلَى وَجْهِهِ فَقَصَدَ قَصْدَهَا، فَأَلْقَى ثَوْبَهُ عَلَيْهَا فَقَامَتِ الْمَرْأَةُ، فَشَدَّ لَهُمَا عَلَى رَاحِلَتِهِمَا فَرَكِبَا، فَسَارُوا حَتَّى إِذَا كَانُوا بِظَهْرِ الْمَدِينَةِ ـ أَوْ قَالَ أَشْرَفُوا عَلَى الْمَدِينَةِ ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" آيِبُونَ تَائِبُونَ، عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ "". فَلَمْ يَزَلْ يَقُولُهَا حَتَّى دَخَلَ الْمَدِينَةَ.
பாடம்: 104
“அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்” என்று ஒருவர் கூறுவது
அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “எங்கள் தந்தையரும் எங்கள் அன்னையரும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று சொன் னார்கள்.209
6185. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் அபூதல்ஹா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் (கைபரிலிருந்து மதீனாவை) முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர்கள் தம்முடனிருந்த (தம் துணைவியாரான) ஸஃபிய்யா (ரலி) அவர்களைத் தமது வாகனத்தில் பின்னால் அமர்த்தியிருந்தார்கள். (சிறிது தூரம் கடந்து) பாதையில் ஓரிடத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது (நபியவர்களின்) அந்த ஒட்டகம் இடறி விழுந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே தள்ளப்பட்டனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து தாவிக் குதித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் நபியே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்கு (காயம்) ஏதும் ஏற்பட்டதா?” என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “இல்லை; ஆயினும், நீ இந்தப் பெண்ணைக் கவனி!” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது துணியைத் தமது முகத்தில் போட்டு (மூடி)க்கொண்டு (அன்னை) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்கள்மீது அத்துணியைப் போட்டார்கள். உடனே அப்பெண்மணி (ஸஃபிய்யா -ரலி) எழுந்துகொண்டார்கள். பிறகு அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) மற்றும் அன்னை ஸஃபிய்யா (ரலி) ஆகிய) அவர்கள் இருவருக்காகவும் அவர்களின் சிவிகையைக் கட்டி (சீராக்கி)னார்கள். அவர்கள் இருவரும் அதில் ஏறிக்கொண்டனர்.
பிறகு நாங்கள் அனைவரும் பயணமாகி ‘மதீனாவின் புறநகர் பகுதிக்கு வந்தபோது’ அல்லது ‘மதீனாவை நெருங்கியபோது’ நபி (ஸல்) அவர்கள், “பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாக, எங்கள் இறைவனுக்குப் பணிந்தவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக (நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கின்றோம்)” என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும்வரை இவ்வாறு கூறிக்கொண்டே யிருந்தார்கள்.210

6186. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقُلْنَا لاَ نَكْنِيكَ أَبَا الْقَاسِمِ وَلاَ كَرَامَةَ. فَأَخْبَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" سَمِّ ابْنَكَ عَبْدَ الرَّحْمَنِ "".
பாடம்: 105
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்ப மான பெயர்211
6186. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினார். நாங்கள் (அவரிடம்), “உம்மை நாங்கள் அபுல்காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைத்து, மேன்மைப்படுத்திடமாட்டோம். (நபியவர்களுக்கு ‘அபுல்காசிம்’ எனும் பெயர் இருப்பதே காரணம்)” என்று சொன்னோம்.
ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று, இதைத்) தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்முடைய மகனுக்கு அப்துர் ரஹ்மான் எனப் பெயர் சூட்டுக!” என்று கூறினார்கள்.212

6187. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقَالُوا لاَ نَكْنِيهِ حَتَّى نَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي "".
பாடம்: 106
“என் பெயரைச் சூட்டிக்கொள் ளுங்கள்; என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
இதை அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள் ளார்கள்.213
6187. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினார். அப்போது மக்கள் “நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்துத் தீர்ப்பு) கேட்காத வரை (குழந்தையின் தந்தையான) அவரை, ‘அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைக்கமாட்டோம்” என்று கூறினர். (அவ்வாறே நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம்.)
அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்; ஆனால், எனது (‘அபுல்காசிம்’ எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.

6188. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي "".
பாடம்: 106
“என் பெயரைச் சூட்டிக்கொள் ளுங்கள்; என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
இதை அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள் ளார்கள்.213
6188. அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.214

6189. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ ابْنَ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقَالُوا لاَ نَكْنِيكَ بِأَبِي الْقَاسِمِ، وَلاَ نُنْعِمُكَ عَيْنًا. فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ "" أَسْمِ ابْنَكَ عَبْدَ الرَّحْمَنِ "".
பாடம்: 106
“என் பெயரைச் சூட்டிக்கொள் ளுங்கள்; என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
இதை அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள் ளார்கள்.213
6189. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினார். அப்போது மக்கள், “உம்மை நாங்கள் ‘அபுல் காசிம்’ (காசிமின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்து உமக்கு மகிழ்ச்சி ஊட்டமாட்டோம்” என்று கூறினர்.
ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மகனுக்கு அப்துர் ரஹ்மான் என்று பெயர் சூட்டுங்கள்” என்று சொன்னார்கள்.215

6190. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَاهُ، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا اسْمُكَ "". قَالَ حَزْنٌ. قَالَ "" أَنْتَ سَهْلٌ "". قَالَ لاَ أُغَيِّرُ اسْمًا سَمَّانِيهِ أَبِي. قَالَ ابْنُ الْمُسَيَّبِ فَمَا زَالَتِ الْحُزُونَةُ فِينَا بَعْدُ. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، وَمَحْمُودٌ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، بِهَذَا.
பாடம்: 107
‘அல்ஹஸ்ன்’ (முரடு) எனும் பெயர்
6190. முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (ஹஸ்ன் பின் அபீவஹ்ப்-ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார்கள். அவர்கள், “ஹஸ்ன்” (முரடு) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(இல்லை) நீங்கள் (இனிமேல்) ‘சஹ்ல்’ (மென்மை)” என்று சொன்னார்கள்.
அவர், “என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக்கொள்ளமாட்டேன்” என்றார். அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குணநலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது.
இதை சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஹஸ்ன் பின் அபீவஹ்ப் (ரலி) அவர்களிடமிருந்தும் இரு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது.

6191. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ أُتِيَ بِالْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ وُلِدَ، فَوَضَعَهُ عَلَى فَخِذِهِ وَأَبُو أُسَيْدٍ جَالِسٌ، فَلَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِشَىْءٍ بَيْنَ يَدَيْهِ، فَأَمَرَ أَبُو أُسَيْدٍ بِابْنِهِ فَاحْتُمِلَ مِنْ فَخِذِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَاسْتَفَاقَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَيْنَ الصَّبِيُّ "". فَقَالَ أَبُو أُسَيْدٍ قَلَبْنَاهُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" مَا اسْمُهُ "". قَالَ فُلاَنٌ. قَالَ "" وَلَكِنْ أَسْمِهِ الْمُنْذِرَ "". فَسَمَّاهُ يَوْمَئِذٍ الْمُنْذِرَ.
பாடம்: 108
ஒரு பெயரை, அதைவிடச் சிறந்த பெயராக மாற்றியமைப்பது216
6191. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ (ரலி) அவர்களின் புதல்வர் ‘முன்திர்’ என்பவர் பிறந்தவுடன் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அக்குழந்தையைத் தமது மடியில் வைத்துக்கொண்டார்கள். அப்போது (குழந்தையின் தந்தை) அபூஉசைத் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (திடீரென) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் நடந்த (சம்பவம்) ஒன்றினால் அவர்களின் கவனம் (வேறு பக்கம்) திரும்பியது. உடனே அபூஉசைத் (ரலி) அவர்கள் தம் புதல்வரை நபியவர்களின் மடியிலிருந்து எடுத்துவிடுமாறு கூற, அவ்வாறே (குழந்தை) தூக்கப்பட்டது.
(சிறிது நேரத்தில்) தன்னிலைக்குத் திரும்பிய நபி (ஸல்) அவர்கள் “அந்தக் குழந்தை எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஉசைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! குழந்தையை (வீட்டுக்கு) அனுப்பிவிட்டோம்” என்று கூறினார். “அக்குழந்தையின் பெயரென்ன?” என நபி (ஸல்) அவர்கள் கேட்க, ‘இன்னது’ என (தம் மகனுக்கு வைக்கப்பட்ட பெயரை) அபூஉசைத் கூறினார்கள்.
(அப்பெயர் பிடிக்காததால்) நபி (ஸல்) அவர்கள் “அல்ல; (இனிமேல்) அவர் பெயர் ‘முன்திர்’ (எச்சரிப்பவர்) ஆகும்” என்று கூறினார்கள். ஆகவே, அன்று அவருக்கு நபி (ஸல்) அவர்கள்தான் ‘முன்திர்’ எனப் பெயர் சூட்டினார்கள்.

6192. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ زَيْنَبَ، كَانَ اسْمُهَا بَرَّةَ، فَقِيلَ تُزَكِّي نَفْسَهَا. فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْنَبَ.
பாடம்: 108
ஒரு பெயரை, அதைவிடச் சிறந்த பெயராக மாற்றியமைப்பது216
6192. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) ‘பர்ரா’ (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது “அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக்கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஸைனப்’ என்று பெயர் சூட்டினார்கள்.217

6193. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، قَالَ جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ فَحَدَّثَنِي أَنَّ جَدَّهُ حَزْنًا قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم. فَقَالَ "" مَا اسْمُكَ "". قَالَ اسْمِي حَزْنٌ. قَالَ "" بَلْ أَنْتَ سَهْلٌ "". قَالَ مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمَّانِيهِ أَبِي. قَالَ ابْنُ الْمُسَيَّبِ فَمَا زَالَتْ فِينَا الْحُزُونَةُ بَعْدُ.
பாடம்: 108
ஒரு பெயரை, அதைவிடச் சிறந்த பெயராக மாற்றியமைப்பது216
6193. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் பாட்டனார் (ஹஸ்ன்-ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார்கள். அவர் ‘ஹஸ்ன்’ (முரடு) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் “இல்லை; நீங்கள் (இனிமேல்) ‘சஹ்ல்’ (மென்மை)” என்று சொன்னார்கள். அவர், “என் தந்தை எனக்குச் சூட்டிய பெயரை நான் மாற்றமாட்டேன்” என்றார்.
அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குணநலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது.218

6194. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قُلْتُ لاِبْنِ أَبِي أَوْفَى رَأَيْتَ إِبْرَاهِيمَ ابْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَاتَ صَغِيرًا، وَلَوْ قُضِيَ أَنْ يَكُونَ بَعْدَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيٌّ عَاشَ ابْنُهُ، وَلَكِنْ لاَ نَبِيَّ بَعْدَهُ.
பாடம்: 109
இறைத்தூதர்களின் பெயர்களைச் சூட்டுவது
“நபி (ஸல்) அவர்கள் தம் புதல்வர் இப்ராஹீமை முத்தமிட்டார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.219
6194. இஸ்மாயீல் பின் காலித் அல்பஜலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “தாங்கள் நபி (ஸல்) அவர்களின் புதல்வர் இப்ராஹீம் (ரலி) அவர்களைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(ஆம். பார்த்திருக்கிறேன். எனினும்,) அவர் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இறைத்தூதர் ஒருவர் இருப்பார் என (இறைவனால்) தீர்மானிக்கப்பட்டிருந்தால், நபி (ஸல்) அவர்களின் புதல்வர் (இப்ராஹீம் -ரலி) உயிர் வாழ்ந்திருப்பார். ஆனால், முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் எந்த இறைத்தூதரும் இல்லை (என்பதே இறைவனின் முடிவாகும்).