6167. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً، مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَائِمَةٌ قَالَ "" وَيْلَكَ وَمَا أَعْدَدْتَ لَهَا "". قَالَ مَا أَعْدَدْتُ لَهَا إِلاَّ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ. قَالَ "" إِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ "". فَقُلْنَا وَنَحْنُ كَذَلِكَ. قَالَ "" نَعَمْ "". فَفَرِحْنَا يَوْمَئِذٍ فَرَحًا شَدِيدًا، فَمَرَّ غُلاَمٌ لِلْمُغِيرَةِ وَكَانَ مِنْ أَقْرَانِي فَقَالَ "" إِنْ أُخِّرَ هَذَا فَلَنْ يُدْرِكَهُ الْهَرَمُ حَتَّى تَقُومَ السَّاعَةُ "". وَاخْتَصَرَهُ شُعْبَةُ عَنْ قَتَادَةَ سَمِعْتُ أَنَسًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 95 ‘உனக்குக் கேடுதான்’ (‘வைலக்க’) என்று கூறுவது தொடர்பாக வந்துள்ளவை179
6167. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமவாசிகளில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது சம்பவிக்கும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முன்முயற்சி செய்துள்ளாய்?” என்று கேட்டார்கள். அவர் “நான் அதற்காக (ஏதும்) முன்முயற்சி செய்யவில்லை; ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்” என்று பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள், “(அப்படியானால்,) நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்!” என்றார்கள். உடனே நாங்கள், “நாங்களும் அவ்வாறுதானா?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “ஆம்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்டு) அன்று நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்.

-அப்போது முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் அடிமை (எங்களைக்) கடந்து சென்றார். அவர் என் வயதொத்த (சிறு)வராக இருந்தார்.-

“இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே மறுமை சம்பவிக்கும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதாவது அவ்வளவு நெருக்கத்தில் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்.)

இந்த ஹதீஸை ஷுஅபா (ரஹ்) அவர்கள் கத்தாதா (ரஹ்) அவர்கள் வழியாக அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து சுருக்கமாக அறிவித்துள்ளார்கள்.188

அத்தியாயம் : 78
6168. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ "".
பாடம்: 96 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வை நேசிப்பதன் அடையாளம்189 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நீர் கூறுக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; மேலும், உங்கள் பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)
6168. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் யார்மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப் பான்.190

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 78
6169. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ـ رضى الله عنه جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَقُولُ فِي رَجُلٍ أَحَبَّ قَوْمًا وَلَمْ يَلْحَقْ بِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ "". تَابَعَهُ جَرِيرُ بْنُ حَازِمٍ وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ وَأَبُو عَوَانَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 96 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வை நேசிப்பதன் அடையாளம்189 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நீர் கூறுக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; மேலும், உங்கள் பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)
6169. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் யார்மீது அன்புகொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 78
6170. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم الرَّجُلُ يُحِبُّ الْقَوْمَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ قَالَ "" الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ "". تَابَعَهُ أَبُو مُعَاوِيَةَ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ.
பாடம்: 96 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வை நேசிப்பதன் அடையாளம்189 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நீர் கூறுக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; மேலும், உங்கள் பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)
6170. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(அல்லாஹ்வின் தூதரே!) ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?)” என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “மனிதன் யார்மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 78
6171. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم مَتَّى السَّاعَةُ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" مَا أَعْدَدْتَ لَهَا "". قَالَ مَا أَعْدَدْتُ لَهَا مِنْ كَثِيرِ صَلاَةٍ وَلاَ صَوْمٍ وَلاَ صَدَقَةٍ، وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ. قَالَ "" أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ "".
பாடம்: 96 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வை நேசிப்பதன் அடையாளம்189 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நீர் கூறுக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; மேலும், உங்கள் பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)
6171. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “மறுமை நாள் எப்போது வரும்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதற்காக என்ன முன்முயற்சி செய்துள்ளாய்?” என்று கேட்டார்கள். அவர், “அதற்காக நான் அதிகமான தொழுகையையோ நோன் பையோ தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்துவைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், “நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்” என்று கூறினார்கள்.191

அத்தியாயம் : 78
6172. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ، سَمِعْتُ أَبَا رَجَاءٍ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاِبْنِ صَائِدٍ "" قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا فَمَا هُوَ "". قَالَ الدُّخُّ. قَالَ "" اخْسَأْ "".
பாடம்: 97 ஒருவர் மற்றொருவரிடம் ‘விலகிப்போ’ என்று கூறுவது192
6172. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தன்னை இறைத்தூதர் என வாதிட்டுவந்த) இப்னு ஸய்யாத் (எனும் யூதச் சிறுவன்) இடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்காக ஒன்றை நான் (மனத்தில்) மறைத்துவைத்துள்ளேன். அது என்ன (சொல்)?” என்றார்கள். அவன், “அத்துக்” (‘அத்துகான்’ எனும் 44ஆவது அத்தியாயம்) என்றான். நபி (ஸல்) அவர்கள், “தூர விலகிப்போ” என்றார்கள்.193


அத்தியாயம் : 78
6173. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ انْطَلَقَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَهْطٍ مِنْ أَصْحَابِهِ قِبَلَ ابْنِ صَيَّادٍ، حَتَّى وَجَدَهُ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فِي أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ ابْنُ صَيَّادٍ يَوْمَئِذٍ الْحُلُمَ، فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ظَهْرَهُ بِيَدِهِ ثُمَّ قَالَ " أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ ". فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ. ثُمَّ قَالَ ابْنُ صَيَّادٍ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ فَرَضَّهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ ". ثُمَّ قَالَ لاِبْنِ صَيَّادٍ " مَاذَا تَرَى ". قَالَ يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خُلِّطَ عَلَيْكَ الأَمْرُ ". قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي خَبَأْتُ لَكَ خَبِيئًا ". قَالَ هُوَ الدُّخُّ. قَالَ " اخْسَأْ، فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ ". قَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ أَتَأْذَنُ لِي فِيهِ أَضْرِبْ عُنُقَهُ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنْ يَكُنْ هُوَ لاَ تُسَلَّطُ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْ هُوَ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ ".
பாடம்: 97 ஒருவர் மற்றொருவரிடம் ‘விலகிப்போ’ என்று கூறுவது192
6173. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டுக்கொண்டிருந்த) இப்னு ஸய்யாத் (எனும் யூதச் சிறுவனை) நோக்கி நபித்தோழர்கள் சிலருடன் நடந்தார்கள். ‘பனூ மஃகாலா’ குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் இப்னு ஸய்யாத் விளை யாடிக்கொண்டிருக்கக் கண்டார்கள். -அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தான்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அவனது முதுகில் தட்டும்வரை அவன் (இவர்கள் வந்திருப் பதை) உணரவில்லை.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நீ உறுதிகூறுகிறாயா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களை (ஏறெடுத்து)ப் பார்த்துவிட்டு இப்னு ஸய்யாத், “நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் உறுதிகூறுகிறேன்” என்றான்.

பிறகு இப்னு ஸய்யாத் (நபி (ஸல்) அவர்களிடம்), “நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்றுக்கொண்டு) உறுதிகூறுகின்றீர்களா?” என்று கேட்டான். உடனே நபி (ஸல்) அவர்கள் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு, “நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள்மீதும் நம்பிக்கை கொண்டேன்” என்று கூறினார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதிடம், “(உன்னிடம்) நீ என்ன காண்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத் என்னிடம், “மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் (அகத் தூண்டல்களாக) வருகின்றன” என்று சென்னான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்கு இப்பிரச்சினையில் (ஷைத்தானால் மெய்யும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, “நான் (உன்னைச் சோதிப்பதற்காக) ஒன்றை மனத்தில் மறைத்துவைத்துள்ளேன். (அது என்னவென்று சொல்!)” என்று கேட்டார்கள். “அது அத்துக் (அத்துகான் எனும் 44ஆவது அத்தியாயம்) என்று பதிலளித்தான்.

உடனே நபி (ஸல்) அவர்கள் “தூர விலகிப்போ; நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது” என்று சொன்னார்கள். (அங்கிருந்த) உமர் (ரலி) அவர்கள், “இவனைக் கொல்ல எனக்கு அனுமதியளிப்பீர்களா? இவனது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை” என்று சொன்னார்கள்.194


அத்தியாயம் : 78
6174. قَالَ سَالِمٌ فَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ انْطَلَقَ بَعْدَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأُبَىُّ بْنُ كَعْبٍ الأَنْصَارِيُّ يَؤُمَّانِ النَّخْلَ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍ، حَتَّى إِذَا دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَفِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَهْوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ، وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ أَوْ زَمْزَمَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لاِبْنِ صَيَّادٍ أَىْ صَافِ ـ وَهْوَ اسْمُهُ ـ هَذَا مُحَمَّدٌ. فَتَنَاهَى ابْنُ صَيَّادٍ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ تَرَكَتْهُ بَيَّنَ ".
பாடம்: 97 ஒருவர் மற்றொருவரிடம் ‘விலகிப்போ’ என்று கூறுவது192
6174. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அதற்குப்பின் (இன்னொரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நோக்கி நடந்தனர். (தோட்டத்திற்குள்) நுழைந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடுவதற்கு முன்னால் அவனிடமிருந்து அவனது பேச்சு எதையாவது கேட்டுவிட வேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்சமரங்களின் அடிப் பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்துக்கொண்டு நடக்கலானார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தனது படுக்கையில் குஞ்சம் வைத்த போர்வைக்குள் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான்.

நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக்கிடையே தம்மை மறைத்துக்கொண்டு வருவதைக் கண்ட இப்னு ஸய்யாதின் தாய் இப்னு ஸய்யாதிடம், ‘ஸாஃபியே!’ -இது இப்னு ஸய்யாதின் பெயராகும்-என்றழைத்து, “இதோ! முஹம்மத் (வருகிறார்)” என்று கூறினாள். உடனே இப்னு ஸய்யாத் (சுதாரித்துக்கொண்டு தானிருந்த நிலையிóருந்து) விலகிக்கொண்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவள் அவனை அப்படியே விட்டிருந்தால் அவன் (தனது உண்மை நிலையை) வெளியிட்டிருப்பான்” என்று சொன்னார்கள்.195


அத்தியாயம் : 78
6175. قَالَ سَالِمٌ قَالَ عَبْدُ اللَّهِ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ " إِنِّي أُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلاَّ وَقَدْ أَنْذَرَ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَهُ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنِّي سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلاً لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ، وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ ".
பாடம்: 97 ஒருவர் மற்றொருவரிடம் ‘விலகிப்போ’ என்று கூறுவது192
6175. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்கே உரிய பெருமைகளால் புகழ்ந்தபிறகு, (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது “அவனைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத்தாரை எச்சரிக்காமலிருந்ததில்லை. (இறைத்தூதர்) நூஹ் அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்திருக்கிறார்கள்.

அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தம் சமூகத்தாருக்குக் கூறாத ஓர் அடையாளத்தை உங்களுக்கு நான் கூறுகிறேன்: அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று சொன்னார்கள்.196

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:

(‘விலகிப்போ’ எனும் பொருள் கொண்ட ‘இக்ஸஃ’ எனும் சொல்லின் இறந்தகால வினைச் சொல்லான) ‘கஸஃத்துல் கல்ப’ எனும் சொல்லுக்கு ‘நாயை தூர விரட்டினேன்’ என்பது பொருள். ‘காஸிஈன்’ என்பதற்கு ‘விரட்டப்பட்டவர்கள்’ என்பது பொருள்.

அத்தியாயம் : 78
6176. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَرْحَبًا بِالْوَفْدِ الَّذِينَ جَاءُوا غَيْرَ خَزَايَا وَلاَ نَدَامَى "". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا حَىٌّ مِنْ رَبِيعَةَ وَبَيْنَنَا وَبَيْنَكَ مُضَرُ، وَإِنَّا لاَ نَصِلُ إِلَيْكَ إِلاَّ فِي الشَّهْرِ الْحَرَامِ، فَمُرْنَا بِأَمْرٍ فَصْلٍ نَدْخُلُ بِهِ الْجَنَّةَ، وَنَدْعُو بِهِ مَنْ وَرَاءَنَا. فَقَالَ "" أَرْبَعٌ وَأَرْبَعٌ أَقِيمُوا الصَّلاَةَ، وَآتُوا الزَّكَاةَ، وَصَوْمُ رَمَضَانَ، وَأَعْطُوا خُمُسَ مَا غَنِمْتُمْ، وَلاَ تَشْرَبُوا فِي الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالنَّقِيرِ، وَالْمُزَفَّتِ "".
பாடம்: 98 ‘நல்வரவு’ (மர்ஹபா) கூறல்197 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமாவைக் கண்டதும்) “என் புதல்விக்கு நல்வரவு” என்று கூறினார்கள்.198 உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (என் ஒன்றுவிட்ட சகோதரரான) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “உம்மு ஹானீக்கு நல்வரவு!” என்று கூறி (வர வேற்கலா)னார்கள்.199
6176. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு தம்மிடம் வந்தபோது, “இழிவுக்குள்ளா காமலும் மன வருத்தத்திற்குள்ளாகாமலும் வருகை புரிந்த தூதுக் குழுவினரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் (வாழ்த்துக்) கூறினார்கள்.

அப்போது அக்குழுவினர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ரபீஆ குலத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தாராவோம். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே (இறைமறுப்பாளர்களான) ‘முளர்’ குலத்தார் (தடையாக) உள்ளனர். (போர் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களில் தவிர (வேறு மாதத்தில்) தங்களிடம் நாங்கள் வந்துசேர முடிவதில்லை. எனவே (வாய்மையையும் பொய்மையையும் பாகுபடுத்தும்) சில தீர்க்கமான விஷயங் களை எங்களுக்குக் கட்டளையிடுங்கள். அத(னைக் கடைப்பிடிப்பத)ன் மூலம் நாங்கள் சொர்க்கம் செல்வோம். எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் தங்கிவிட்ட)வர்களுக்கு அறிவிப்போம்” என்றார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான்கு (விஷயங்களைக் கட்டளையிடுகிறேன்). நான்கு (விஷயங்களைத் தடை செய்கிறேன்). தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தைச் செலுத்துங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு நோறுங்கள். உங்களுக்குக் கிடைக்கும் போர்ச் செல்வத்திலிருந்து ஐந்தில் ஒரு பங்கை (குமுஸ்) கொடுத்துவிடுங்கள்.

மேலும், (மது ஊற்றிவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய்க் குடுவை; மண்சாடி; பேரீச்சமரத்தின் பீப்பாய்; தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் நீங்கள் பருகாதீர்கள்” என்று சொன்னார்கள்.200

அத்தியாயம் : 78
6177. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْغَادِرُ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، يُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ "".
பாடம்: 99 (மறுமையில்) மனிதர்கள் தம் தந்தையர் பெயருடன் (இணைத்து) அழைக்கப்படுவர்
6177. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு, “இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)” என்று கூறப்படும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 78
6178. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الْغَادِرَ يُنْصَبُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، فَيُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ "".
பாடம்: 99 (மறுமையில்) மனிதர்கள் தம் தந்தையர் பெயருடன் (இணைத்து) அழைக்கப்படுவர்
6178. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்ச மிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது “இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)” என்று கூறப்படும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.201

அத்தியாயம் : 78
6179. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي. وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي "".
பாடம்: 100 (மனக் குழப்பத்திலுள்ள) ஒருவர் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம்.
6179. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம். மாறாக, (‘என் மனம் கனத்துவிட்டது’ எனும் பொருள் கொண்ட) ‘லகிசத் நஃப்ஸீ’ எனும் சொல்லையே கூறட்டும்.202

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 78
6180. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي، وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي "". تَابَعَهُ عُقَيْلٌ.
பாடம்: 100 (மனக் குழப்பத்திலுள்ள) ஒருவர் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம்.
6180. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லை ஆள வேண்டாம். மாறாக, (‘என் மனம் கனத்துவிட்டது’ எனும் பொருள்தரும்) ‘லகிசத் நஃப்ஸீ’ எனும் சொல்லையே ஆளட்டும்.

இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 78
6181. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَالَ اللَّهُ يَسُبُّ بَنُو آدَمَ الدَّهْرَ، وَأَنَا الدَّهْرُ، بِيَدِي اللَّيْلُ وَالنَّهَارُ "".
பாடம்: 101 காலத்தை ஏசாதீர்கள்.
6181. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவு பகல் (இயக்கம்) உள்ளது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.203


அத்தியாயம் : 78
6182. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُسَمُّوا الْعِنَبَ الْكَرْمَ، وَلاَ تَقُولُوا خَيْبَةَ الدَّهْرِ. فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ "".
பாடம்: 101 காலத்தை ஏசாதீர்கள்.
6182. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திராட்சையை (‘கண்ணியமானது’ எனும் பொருள் கொண்ட) ‘அல்கர்ம்’ என்று பெயரிட்டழைக்காதீர்கள். ‘மோசமான காலமே!’ என்று (காலத்தை ஏசிக்) கூறாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்தவன்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 78
6183. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَيَقُولُونَ الْكَرْمُ، إِنَّمَا الْكَرْمُ قَلْبُ الْمُؤْمِنِ "".
பாடம்: 102 “கண்ணியத்திற்குரியது (‘அல்கர்ம்’) இறைநம்பிக்கையாளரின் இதயமே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது204 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மையில் திவாலானவன் யாரெனில், மறுமை நாளில் திவாலானவனே ஆவான். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கோபம் வரும்போது தன்னை ஆள்பவனே (உண்மையில்) வீரன் ஆவான். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. இவ்வாறு ஆட்சியதிகாரத்தின் எல்லையை நபியவர்கள் இறைவனுடன் முற்றுப்பெறச் செய்துள்ள அதே வேளையில் அரசர்கள் குறித்துப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்: அரசர்கள் ஒரு நகரத்துக்குள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதை அவர்கள் அழித்து விடுகிறார்கள். (27:34)205
6183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் (திராட்சைப் பழத்திற்கு) ‘அல்கர்ம்’ (கண்ணியமானது) என்று சொல்கின்றனர். உண்மையில் இறை நம்பிக்கையாளரின் இதயமே ‘அல்கர்ம்’ (கண்ணியத்திற்குரியது) ஆகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 78
6184. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُفَدِّي أَحَدًا غَيْرَ سَعْدٍ، سَمِعْتُهُ يَقُولُ "" ارْمِ فَدَاكَ أَبِي وَأُمِّي "". أَظُنُّهُ يَوْمَ أُحُدٍ.
பாடம்: 103 “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று ஒருவர் சொல்வது206 இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.207
6184. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தவிர வேறெவருக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தாய் தந்தையரை அர்ப்பணிப்பதாகக் கூறியதை நான் கேட்டதில்லை. (சஅத் அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறியதைக் கேட்டேன். இது உஹுத் போர் நாளில் நடைபெற்றதாகவே நான் எண்ணுகிறேன்.208

அத்தியாயம் : 78
6185. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ أَقْبَلَ هُوَ وَأَبُو طَلْحَةَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم صَفِيَّةُ، مُرْدِفَهَا عَلَى رَاحِلَتِهِ، فَلَمَّا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ عَثَرَتِ النَّاقَةُ، فَصُرِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَالْمَرْأَةُ، وَأَنَّ أَبَا طَلْحَةَ ـ قَالَ أَحْسِبُ ـ اقْتَحَمَ عَنْ بَعِيرِهِ، فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاكَ، هَلْ أَصَابَكَ مِنْ شَىْءٍ. قَالَ "" لاَ وَلَكِنْ عَلَيْكَ بِالْمَرْأَةِ "". فَأَلْقَى أَبُو طَلْحَةَ ثَوْبَهُ عَلَى وَجْهِهِ فَقَصَدَ قَصْدَهَا، فَأَلْقَى ثَوْبَهُ عَلَيْهَا فَقَامَتِ الْمَرْأَةُ، فَشَدَّ لَهُمَا عَلَى رَاحِلَتِهِمَا فَرَكِبَا، فَسَارُوا حَتَّى إِذَا كَانُوا بِظَهْرِ الْمَدِينَةِ ـ أَوْ قَالَ أَشْرَفُوا عَلَى الْمَدِينَةِ ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" آيِبُونَ تَائِبُونَ، عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ "". فَلَمْ يَزَلْ يَقُولُهَا حَتَّى دَخَلَ الْمَدِينَةَ.
பாடம்: 104 “அல்லாஹ் என்னைத்  தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்” என்று ஒருவர் கூறுவது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “எங்கள் தந்தையரும் எங்கள் அன்னையரும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று சொன் னார்கள்.209
6185. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் அபூதல்ஹா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் (கைபரிலிருந்து மதீனாவை) முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர்கள் தம்முடனிருந்த (தம் துணைவியாரான) ஸஃபிய்யா (ரலி) அவர்களைத் தமது வாகனத்தில் பின்னால் அமர்த்தியிருந்தார்கள். (சிறிது தூரம் கடந்து) பாதையில் ஓரிடத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது (நபியவர்களின்) அந்த ஒட்டகம் இடறி விழுந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே தள்ளப்பட்டனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து தாவிக் குதித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் நபியே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்கு (காயம்) ஏதும் ஏற்பட்டதா?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இல்லை; ஆயினும், நீ இந்தப் பெண்ணைக் கவனி!” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது துணியைத் தமது முகத்தில் போட்டு (மூடி)க்கொண்டு (அன்னை) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்கள்மீது அத்துணியைப் போட்டார்கள். உடனே அப்பெண்மணி (ஸஃபிய்யா -ரலி) எழுந்துகொண்டார்கள். பிறகு அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) மற்றும் அன்னை ஸஃபிய்யா (ரலி) ஆகிய) அவர்கள் இருவருக்காகவும் அவர்களின் சிவிகையைக் கட்டி (சீராக்கி)னார்கள். அவர்கள் இருவரும் அதில் ஏறிக்கொண்டனர்.

பிறகு நாங்கள் அனைவரும் பயணமாகி ‘மதீனாவின் புறநகர் பகுதிக்கு வந்தபோது’ அல்லது ‘மதீனாவை நெருங்கியபோது’ நபி (ஸல்) அவர்கள், “பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாக, எங்கள் இறைவனுக்குப் பணிந்தவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக (நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கின்றோம்)” என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும்வரை இவ்வாறு கூறிக்கொண்டே யிருந்தார்கள்.210

அத்தியாயம் : 78
6186. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقُلْنَا لاَ نَكْنِيكَ أَبَا الْقَاسِمِ وَلاَ كَرَامَةَ. فَأَخْبَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" سَمِّ ابْنَكَ عَبْدَ الرَّحْمَنِ "".
பாடம்: 105 அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்ப மான பெயர்211
6186. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினார். நாங்கள் (அவரிடம்), “உம்மை நாங்கள் அபுல்காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைத்து, மேன்மைப்படுத்திடமாட்டோம். (நபியவர்களுக்கு ‘அபுல்காசிம்’ எனும் பெயர் இருப்பதே காரணம்)” என்று சொன்னோம்.

ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று, இதைத்) தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்முடைய மகனுக்கு அப்துர் ரஹ்மான் எனப் பெயர் சூட்டுக!” என்று கூறினார்கள்.212

அத்தியாயம் : 78