5950. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، قَالَ كُنَّا مَعَ مَسْرُوقٍ فِي دَارِ يَسَارِ بْنِ نُمَيْرٍ، فَرَأَى فِي صُفَّتِهِ تَمَاثِيلَ فَقَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ "".
பாடம்: 89 உருவங்களைப் படைப்போருக்கு மறுமை நாளில் கிடைக்கும் வேதனை
5950. முஸ்லிம் பின் ஸுபைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களுடன் யசார் பின் நுமைர் (ரஹ்) அவர்களது இல்லத்தில் இருந்தோம். அப்போது யசார் (ரஹ்) அவர்களின் வீட்டுத் திண்ணையில் சில சிலைகள் இருப்பதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கண்டார்கள்.

உடனே ‘‘அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப் போர்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் செவியுற்றதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.


அத்தியாயம் : 77
5951. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ "".
பாடம்: 89 உருவங்களைப் படைப்போருக்கு மறுமை நாளில் கிடைக்கும் வேதனை
5951. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப் படுவார்கள். அவர்களிடம், ‘‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)” என (இடித்து)க் கூறப்படும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 77
5952. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَتْرُكُ فِي بَيْتِهِ شَيْئًا فِيهِ تَصَالِيبُ إِلاَّ نَقَضَهُ.
பாடம் : 90 உருவப்படங்களைச் சிதைத்தல்
5952. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டுவைத்ததில்லை.


அத்தியாயம் : 77
5953. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عُمَارَةُ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، قَالَ دَخَلْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ دَارًا بِالْمَدِينَةِ فَرَأَى أَعْلاَهَا مُصَوِّرًا يُصَوِّرُ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ كَخَلْقِي، فَلْيَخْلُقُوا حَبَّةً، وَلْيَخْلُقُوا ذَرَّةً "". ثُمَّ دَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ فَغَسَلَ يَدَيْهِ حَتَّى بَلَغَ إِبْطَهُ فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَشَىْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مُنْتَهَى الْحِلْيَةِ.
பாடம் : 90 உருவப்படங்களைச் சிதைத்தல்
5953. அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல்தளத்தில் உருவப்படங்களை வரைபவர் ஒருவர் உருவங்களை வரைந்துகொண்டிருந்தார்.

அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” என்றார்கள். பிறகு (அங்கத் தூய்மை செய்வதற்காகத்) தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி தம் இரு கைகளையும் அக்குள்வரை கழுவினார்கள்.

நான், ‘‘அபூஹுரைரா அவர்களே! இது (அக்குள்வரை கையைக் கழுவுவது), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற விஷயமா?” எனக் கேட்க, அவர்கள், ‘‘(அங்கத் தூய்மை செய்யப்படும் உடலுறுப்புகள் மறுமையில் வெண்மையாகும்போது அக்குள்வரை) வெண்மை பரவும்” (என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்) என்றார்கள்.

அத்தியாயம் : 77
5954. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ ـ وَمَا بِالْمَدِينَةِ يَوْمَئِذٍ أَفْضَلُ مِنْهُ ـ قَالَ سَمِعْتُ أَبِي قَالَ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ سَفَرٍ وَقَدْ سَتَرْتُ بِقِرَامٍ لِي عَلَى سَهْوَةٍ لِي فِيهَا تَمَاثِيلُ، فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هَتَكَهُ وَقَالَ "" أَشَدُّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُضَاهُونَ بِخَلْقِ اللَّهِ "". قَالَتْ فَجَعَلْنَاهُ وِسَادَةً أَوْ وِسَادَتَيْنِ.
பாடம் : 91 காலால் மிதிபடும் உருவப் படங்கள்
5954. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச்சித்திரங்கள் பொறித்த எனது திரைச்சீலை ஒன்றால் நான் எனது அலமாரியை மறைத்திருந்தேன்.

அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்து விட்டு, ‘‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தான்” என்று சொன்னார்கள்.

பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை (இருக்கை)யாக, அல்லது இரு தலையணை (இருக்கை)களாக ஆக்கிக்கொண்டோம்.133


அத்தியாயம் : 77
5955. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ سَفَرٍ، وَعَلَّقْتُ دُرْنُوكًا فِيهِ تَمَاثِيلُ، فَأَمَرَنِي أَنْ أَنْزِعَهُ، فَنَزَعْتُهُ.
பாடம் : 91 காலால் மிதிபடும் உருவப் படங்கள்
5955. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். நான் குஞ்சம் வைத்த கெட்டித் திரைச் சீலையொன்றை (வீட்டில்) தொங்கவிட்டிருந்தேன். அதில் உருவச் சித்திரங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அதைக் கழற்றிவிடும்படி என்னைப் பணித்தார்கள். ஆகவே, நான் அதைக் கழற்றிவிட்டேன்.


அத்தியாயம் : 77
5956. وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ.
பாடம் : 91 காலால் மிதிபடும் உருவப் படங்கள்
5956. (மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:)

நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (அள்ளி, ஒன்றாகக்) குளித்துவந்தோம்.

அத்தியாயம் : 77
5957. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْبَابِ فَلَمْ يَدْخُلْ. فَقُلْتُ أَتُوبُ إِلَى اللَّهِ مِمَّا أَذْنَبْتُ. قَالَ "" مَا هَذِهِ النُّمْرُقَةُ "". قُلْتُ لِتَجْلِسَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا. قَالَ "" إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ، يُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ. وَإِنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ الصُّورَةُ "".
பாடம் : 92 உருவப்படங்கள்மீது அமர்வதைக் கூட வெறுத்தவர்கள்
5957. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (உயிரினங்களின்) உருவப்படங் கள் உள்ள திண்டு ஒன்றை வாங்கினேன். நபி (ஸல்) அவர்கள் (வீட்டின்) கதவருகே வந்து நின்றார்கள். ஆனால், உள்ளே வரவில்லை. (இதைக் கண்டு திடுக்குற்ற) நான், ‘‘நான் செய்த பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீள்கிறேன் (நான் என்ன குற்றம் செய்தேன்?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்தத் திண்டு என்ன?” என்று கேட்டார்கள். நான், ‘‘இதன் மீது நீங்கள் அமர்வதற்காகவும் இதைத் தலையணையாக நீங்கள் பயன்படுத்திக்கொள்வதற்காகவும் நான் வாங்கினேன்” என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)” என்று சொல்லப்படும். மேலும், (உயிரினங்களின்) உருவப்படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என்று கூறினார்கள்.134


அத்தியாயம் : 77
5958. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ بُكَيْرٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، عَنْ أَبِي طَلْحَةَ، صَاحِبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ الصُّورَةُ "". قَالَ بُسْرٌ ثُمَّ اشْتَكَى زَيْدٌ فَعُدْنَاهُ، فَإِذَا عَلَى بَابِهِ سِتْرٌ فِيهِ صُورَةٌ فَقُلْتُ لِعُبَيْدِ اللَّهِ رَبِيبِ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَلَمْ يُخْبِرْنَا زَيْدٌ عَنِ الصُّوَرِ يَوْمَ الأَوَّلِ. فَقَالَ عُبَيْدُ اللَّهِ أَلَمْ تَسْمَعْهُ حِينَ قَالَ إِلاَّ رَقْمًا فِي ثَوْبٍ. وَقَالَ ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرٌو ـ هُوَ ابْنُ الْحَارِثِ ـ حَدَّثَهُ بُكَيْرٌ، حَدَّثَهُ بُسْرٌ، حَدَّثَهُ زَيْدٌ، حَدَّثَهُ أَبُو طَلْحَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 92 உருவப்படங்கள்மீது அமர்வதைக் கூட வெறுத்தவர்கள்
5958. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உயிரினங்களின்) உருவப்படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.

இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள், பின்னர் நோய்வாய்ப்பட்டபோது நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்களின் வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக்கொண்டிருந்தது.

நான் (உடனிருந்த) நபி (ஸல்) அவர் களின் துணைவியாரான மைமூனா (ரலி) அவர்களுடைய வளர்ப்பு மகன் உபைதுல்லாஹ் பின் அஸ்வத் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம், ‘‘உருவப்படங்களைப் பற்றி முன்பு ஒருநாள் ஸைத் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா?” என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், ‘துணியில் பொறிக்கப்பட்டதைத் தவிர’ என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார்கள்.135

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 77
5959. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ قِرَاَمٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا، فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَمِيطِي عَنِّي، فَإِنَّهُ لاَ تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ لِي فِي صَلاَتِي "".
பாடம்: 93 உருவப்படங்கள் உள்ள இடத்தில் தொழுவது வெறுக்கப்பட்ட தாகும்.
5959. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச்சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக்கொண்டேயிருக் கின்றன” என்று சொன்னார்கள்.136

அத்தியாயம் : 77
5960. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ ـ هُوَ ابْنُ مُحَمَّدٍ ـ عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ وَعَدَ النَّبِيَّ صلى الله عليه وسلم جِبْرِيلُ فَرَاثَ عَلَيْهِ حَتَّى اشْتَدَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَقِيَهُ، فَشَكَا إِلَيْهِ مَا وَجَدَ، فَقَالَ لَهُ "" إِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلاَ كَلْبٌ "".
பாடம்: 94 உருவப்படம் உள்ள வீட்டில் வான வர்கள் நுழையமாட்டார்கள்.
5960. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக) வாக்களித்திருந்தார்கள். ஆனால், அவரது வருகை தாமதப்பட்டது. இதையடுத்து நபி (ஸல்) அவர்களுக்குக் கவலை உண்டானது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் தாம் அடைந்த கவலையை ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் (தெரிவித்து) முறையிட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘(வானவர்களாகிய) நாங்கள் உருவப்படமும் நாயும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்” என்று சொன்னார்கள்.137

அத்தியாயம் : 77
5961. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْبَابِ فَلَمْ يَدْخُلْ، فَعَرَفَتْ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَتُوبُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، مَاذَا أَذْنَبْتُ قَالَ "" مَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ "". فَقَالَتِ اشْتَرَيْتُهَا لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ ـ وَقَالَ ـ إِنَّ الْبَيْتَ الَّذِي فِيهِ الصُّوَرُ لاَ تَدْخُلُهُ الْمَلاَئِكَةُ "".
பாடம்: 95 உருவப்படமுள்ள வீட்டுக்குள் செல்லாமலிருப்பது
5961. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது வீட்டுக்குள் நுழையாமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். அவர் களின் முகத்தில் வெறுப்பு தெரிந்தது.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விடமும் அல்லாஹ்வின் தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன்?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘என்ன திண்டு இது?” என்று கேட்டார்கள். நான், ‘‘நீங்கள் அமர்ந்துகொள்வதற்காகவும் தலையணையாகப் பயன்படுத்திக்கொள்வ தற்காகவும்தான் இதை வாங்கினேன்” என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர்கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும்” எனச் சொன்னார்கள்.

மேலும், உருவப்படங்கள் இருக்கும் வீட்டினுள் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என்றும் சொன்னார்கள்.138

அத்தியாயம் : 77
5962. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ اشْتَرَى غُلاَمًا حَجَّامًا فَقَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الْكَلْبِ، وَكَسْبِ الْبَغِيِّ، وَلَعَنَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ وَالْمُصَوِّرَ.
பாடம் : 96 உருவப்படம் வரைவோரைச் சபித்தல்
5962. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் குருதி உறிஞ்சியெடுக்கும் அடிமை ஒருவரை (விலைக்கு) வாங்கி னேன். (அவருடைய குருதிஉறிஞ்சு கருவிகளை உடைத்துவிட்டேன். ஏனெ னில்,) நபி (ஸல்) அவர்கள், இரத்தத்தின் விலையையும் நாய்விற்ற காசையும் விபசாரியின் சம்பாத்தியத்தையும் (ஏற்கக் கூடாதென்று) தடை செய்தார்கள்.

மேலும், வட்டி (வாங்கி) உண்பவனை யும் வட்டி உண்ணக்கொடுப்பவனையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் உருவப் படங்களை வரைகின்றவனையும் சபித் தார்கள்.139

அத்தியாயம் : 77
5963. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ سَمِعْتُ النَّضْرَ بْنَ أَنَسِ بْنِ مَالِكٍ، يُحَدِّثُ قَتَادَةَ قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ وَهُمْ يَسْأَلُونَهُ وَلاَ يَذْكُرُ النَّبِيَّ صلى الله عليه وسلم حَتَّى سُئِلَ فَقَالَ سَمِعْتُ مُحَمَّدًا صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ صَوَّرَ صُورَةً فِي الدُّنْيَا كُلِّفَ يَوْمَ الْقِيَامَةِ أَنْ يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ "".
பாடம் : 97 உருவப்படம் வரைகின்றவன் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி கட்டளையிடப்படுவான். ஆனால், அவனால் அது முடியாது.
5963. நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களி டம் இருந்தேன். அவர்களிடம் மக்கள் விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். (பொதுவாக) தம்மிடம் (விளக்கம்) கேட்கப் படாத வரை நபி (ஸல்) அவர்கள் சொன்ன தாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (எதையும்) கூறமாட்டார்கள்.

அப்போது (ஒருவர் கேட்ட கேள்விக் குப் பதிலளிக்கும் வகையில்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘உலகில் ஓர் உருவப்படத்தை வரைகின்றவர் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால், அவரால் ஊத முடியாது என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 77
5964. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَكِبَ عَلَى حِمَارٍ، عَلَى إِكَافٍ عَلَيْهِ قَطِيفَةٌ فَدَكِيَّةٌ، وَأَرْدَفَ أُسَامَةَ وَرَاءَهُ.
பாடம் : 98 ஊர்திப் பிராணியில் ஒருவர் தமக் குப் பின்னால் மற்றொருவரை அமர்த்திக்கொள்வது
5964. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கழுதை வாகனத்தில் சேணம் விரித்து, அதன் மீது ‘ஃபதக்’ நகர முரட்டுத் துணி விரித்து அதன் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக்கொண்டார்கள்.140

அத்தியாயம் : 77
5965. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ اسْتَقْبَلَهُ أُغَيْلِمَةُ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، فَحَمَلَ وَاحِدًا بَيْنَ يَدَيْهِ وَالآخَرَ خَلْفَهُ.
பாடம் : 99 ஒரே ஊர்திப் பிராணியின் மீது மூன்று பேர் பயணம் செய்வது
5965. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றியின்போது) நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த சமயம், அவர்களை அப்துல் முத்தலிபின் குடும்பத்துச் சிறுவர்கள் வரவேற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்தச் சிறுவர்களில்) ஒருவரைத் தமக்கு முன்னாலும் மற்றொருவரைத் தமக்குப் பின்னாலும் (தமது ஒட்டகத்தில்) அமர்த்திக் கொண்டார்கள்.

அத்தியாயம் : 77
5966. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، ذُكِرَ الأَشَرُّ الثَّلاَثَةُ عِنْدَ عِكْرِمَةَ فَقَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ حَمَلَ قُثَمَ بَيْنَ يَدَيْهِ، وَالْفَضْلَ خَلْفَهُ، أَوْ قُثَمَ خَلْفَهُ، وَالْفَضْلَ بَيْنَ يَدَيْهِ، فَأَيُّهُمْ شَرٌّ أَوْ أَيُّهُمْ خَيْرٌ.
பாடம் : 100 ஊர்திப் பிராணியின் உரிமை யாளர் பிறரைத் தமக்கு முன்னால் (வாகனத்தில்) ஏற்றிக்கொள்வது (அறிஞர்களில்) சிலர் கூறினர்: ஊர்தி யின் உரிமையாளரே அதன் முற்பகுதி யில் அமர அதிக உரிமையுடையவர் ஆவார்; அவர் தம்முடன் அமர்பவருக்கு முற்பகுதியில் உட்கார அனுமதியளித்தால் அவர் உட்காரலாம்.
5966. அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இக்ரிமா (ரஹ்) அவர்கள் முன்னிலையில், ‘‘(ஊர்திப் பிராணியின் மீது மூவர் அமர்ந்து செல்லக் கூடாது; அவ்வாறு அமர்ந்து செல்லும்) அந்த மூவரில் தீயவர் யார்?” என்பது குறித்துப் பேசப்பட்டது.

அப்போது இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது மக்காவுக்கு) வந்தார்கள். (அவர்களை வரவேற்ற சிறுவர்களில் அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வர்களான) ‘குஸம் (ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்’ அல்லது ‘ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், குஸம் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்’ நபி (ஸல்) அவர்கள் (வாகனத்தில்) ஏற்றிக்கொண்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த மூவரில் (நபி, குஸம், ஃபள்ல்) ‘யார் தீயவர்?’ அல்லது ‘யார் நல்லவர்?’ என்று கூறமுடியுமா?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 77
5967. حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا أَنَا رَدِيفُ النَّبِيِّ، صلى الله عليه وسلم لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ إِلاَّ أَخِرَةُ الرَّحْلِ فَقَالَ "" يَا مُعَاذُ "". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ "" يَا مُعَاذُ "". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ "" يَا مُعَاذُ "". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. قَالَ "" هَلْ تَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ "". قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا "". ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ "" يَا مُعَاذُ بْنَ جَبَلٍ "". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. فَقَالَ "" هَلْ تَدْرِي مَا حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ إِذَا فَعَلُوهُ "". قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَهُمْ "".
பாடம் : 101 (ஊர்தியில்) ஒருவருக்குப் பின்னால் ஒருவர் அமர்வது
5967. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஊர்தியில்) இருந்து கொண்டிருந்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்து டன் இணைந்த சாய்வுக் கட்டைதான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்தில் வந்து கொண்டிருந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘முஆதே!’ என்று அழைத்தார் கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்றேன். பிறகு சிறிது தூரம் சென்றபின், ‘முஆதே’ என்று (மீண்டும்) அழைத்தார் கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்றேன். சிறிது தூரம் சென்றபின் (மீண்டும்) ‘முஆதே!’ என்றார்கள். (அப்போதும்) நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கி றேன். (கூறுங்கள்)” என்றேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும். அவனுக்கு எதையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும்” என்றார்கள்.

இன்னும் சிறிது தூரம் சென்றபின் ‘முஆத் பின் ஜபலே’ என்று அழைத்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (சொல்லுங்கள்)” என்று பதில் கூறினேன். அவர்கள், ‘‘அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி அவனுக்கு இணைவைக்காமல்) செயல்பட்டுவரும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(இத்தகைய) மக்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமையாகும்” என்று சென்னார்கள்.141

அத்தியாயம் : 77
5968. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ صَبَّاحٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ خَيْبَرَ، وَإِنِّي لَرَدِيفُ أَبِي طَلْحَةَ وَهْوَ يَسِيرُ وَبَعْضُ نِسَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَدِيفُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ عَثَرَتِ النَّاقَةُ فَقُلْتُ الْمَرْأَةَ. فَنَزَلْتُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّهَا أُمُّكُمْ "". فَشَدَدْتُ الرَّحْلَ وَرَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا دَنَا أَوْ رَأَى الْمَدِينَةَ قَالَ "" آيِبُونَ تَائِبُونَ، عَابِدُونَ لِرَبِّنَا، حَامِدُونَ "".
பாடம் : 102 (ஊர்தியில்) நெருங்கிய உறவுக் கார ஆணுக்குப் பின்னால் பெண் அமர்ந்துகொள்வது
5968. அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட்டோம். அபூதல்ஹா (ரலி) அவர்கள் சென்றுகொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நான் (ஊர்தியில்) அமர்ந்துகொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களுடைய ஊர்தியில்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா) அமர்ந்துகொண்டிருந்தார். அப்போது (நபியவர்களின்) ஒட்டகம் இடறிவிழுந்தது. நான், ‘‘(அந்த ஒட்டகத்தில்) பெண் இருக்கிறாரே!” என்று சொன்னேன். பிறகு நான் (என் ஊர்தியிலிருந்து) இறங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் உங்கள் அன்னை” என்று சொன்னார்கள். பிறகு, நான் சேணத்தைக் கட்டினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏறிக்கொண்டு) பயணம் செய்யலானார்கள்.

மதீனாவை ‘நெருங்கியபோது’ அல்லது ‘பார்த்தபோது’ நபி (ஸல்) அவர்கள் ‘‘பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாக, எங்கள் இறைவனை வழிபட்டவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக (நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கிறோம்)” என்று கூறினார்கள்.142

அத்தியாயம் : 77
5969. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ أَبْصَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَضْطَجِعُ فِي الْمَسْجِدِ، رَافِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى.
பாடம் : 103 மல்லாந்து படுப்பதும், ஒரு காலை மற்றொரு கால்மீது வைத்துக் கொள்வதும்
5969. அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கால்களில் ஒன்றை மற்றொன்றின்மீது தூக்கிவைத்தவர்களாகப் பள்ளிவாசலில் (மல்லாந்து) படுத்திருப்பதை நான் பார்த்தேன்.143

அத்தியாயம் : 77